"சந்தோஷம்"- என் பார்வையில்! -- (கிறுக்கல்கள்-5)
➦➠ by:
யுவராணி தமிழரசன்
வாழும் வாழ்க்கையின் அர்த்தங்கள் யாவையும் அறிந்தவர்கள் யாரும் இல்லை இங்கு. அவரவர் வாழ்க்கையின் அர்த்தங்களை அறியவே அவரவர்களுக்கு இந்த ஆயுள் போதவில்லை. "கற்றது கையளவு கல்லாதது கடலளவு" என்ற போதிலும் எதை அடைந்துவிட்டதாய் கர்வம் ஏந்தி சில மனித இதயங்கள் துடிக்கின்றனவோ?
அன்பான வார்த்தைகள், அரவணைப்பான ஆறுதல்கள், உரிமையான தேற்றல்கள், இறுக்கமான உறவுகள், ஈரம் காயாத சந்தோஷங்கள், இப்படி அனைத்தையும் அடையத்துடிப்பதை விட கொடுத்து ரசிப்பதின் சந்தோஷம் அலாதியானது.இருப்பவனுக்கு மத்தியில் இல்லாதவனாய் வாழத்தெரிந்தவர்களுக்கும், இருப்பவனாய் இருந்தும் இல்லாதவனாய் வாழத்தெரிந்தவர்களுக்கும் மத்தியில் அடிமையாய் மண்டியிட்டு அகப்பட்டுக்கிடக்கும் "சந்தோஷம்" கொண்டாடும் எளிமை ஏழ்மையென சித்தரிக்கப்பட்டு சிதைக்கப்படுவது இல்லாதவனுக்கு மத்தியில் இருப்பவனாய் கர்வம் கொண்டு வாழத்துடிப்பவர்களிடம்!
மனித உறவுகளின் பந்தமும் சில சமயம் சூழ்ச்சிகளாலும் வன்மங்களாலும் சூழப்பட்டபோதும் இன்னும் இழப்பதையும் இறுக்கிப்பிடித்து பந்தப்படுத்துவது நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் மட்டுமே. வாழ்க்கையின் அரிய அர்த்தங்களை கையில் அகப்படுத்தி வசதிக்காரருக்குமே வசப்படுத்தாது, காண்பவர்களுக்கும் கேட்டவர்களுக்கும் கொடுத்துவிடாது, உணர்வுகளுக்கு உரிமை கொடுத்து உள்ளத்தில் ஈரம் கொண்டு உதிரும் உதிரத்திலும் உயிர் கண்டு நேசிக்கத்தெரிந்தவனது உதிரத்தில் தானாய் அகப்பட்டுக்கொண்டு சில்லிடுமே "சந்தோஷமாய்"!
நாம் நாமாக இருப்போம்!
~~~~****~~~~
வாழ்க்கையை சுவாரஸ்யமாக்க!!!--4
எதை சாதித்துவிட்டாலும் பணிந்திருப்பது மட்டுமே நிலையான வெற்றியைக் குறிக்கும். "நான்" என்பது " நான் தான்" என்றாகிவிட்டால் பின் "நாம்" என்பதும் "நான்" என்றாகிவிடும். "என்னால் மட்டுமே முடியும், முடிந்தது!" என்று சொன்னால் கேட்க யாரும் இருக்க மாட்டார்கள்!
எதை சாதித்துவிட்டாலும் பணிந்திருப்பது மட்டுமே நிலையான வெற்றியைக் குறிக்கும். "நான்" என்பது " நான் தான்" என்றாகிவிட்டால் பின் "நாம்" என்பதும் "நான்" என்றாகிவிடும். "என்னால் மட்டுமே முடியும், முடிந்தது!" என்று சொன்னால் கேட்க யாரும் இருக்க மாட்டார்கள்!
~~~~****~~~~
இன்றைய அறிமுகங்கள்!
16. வெங்கட் நாகராஜ் அவர்களுடைய ஃப்ரூட் சாலட்-ஐ கொஞ்சம் ருசித்துப்பாருங்கள் ருசி(இது நாவிற்கான ருசி அல்ல) மனதில் ஒட்டிக்கொள்ளும் "கரை நல்லது" என்று அவரது பயண அனுபவத்தை ரசிக்கும்படியாக சொல்லி இருப்பது அழகு!
17. முனைவர் நா.இளங்கோ அவர்களது மலையருவியில் தான் எப்படி புத்தககாட்டிற்குள் தன்னை தொலைத்தார் என்பதை பற்றியும், மேலும் சில சமயம் பேசும் வார்த்தைகள் உள்ளிறங்கும் விஷமாய் போவதை பற்றியும் மிக அழகாக கவிதை நடையில் சொல்லி இருக்கிறார்.
18. கோவை கவி அவர்களின் தளத்தில் அழகான கவிதைகளை "கவிதை-பாருங்கள்" என்று பதிந்திருப்பதோடு, இந்த அவசர உலகத்தில் நாம் தொலைத்த பரம்பரியத்தையும் அதை சார்ந்த சந்தோஷங்களை பற்றியும் "தொலைத்தவை எத்தனையோ" என்று பல பகுதிகளாக பதிந்திருக்கிறார்!
19. கவியாழி கண்ணதாசன் அவர்களது கவிதை மழையில் நனைவது அருமை அதில் முதுமையின் ஏக்கம் பற்றியும் கோவிலிக்குள்ள இருப்பது யார்? என்பதை பற்றியும் நிதர்சனத்தை நிழலாடக்காட்டி இருக்கிறார்!
20. சீனி அவர்களது கவிதைகளுள் நமது இதய சிற்பிக்குள்ளும் முத்தெடுக்கதூண்டும் "தெரியாது?"-ம், பிறப்புக்கும் இறப்புக்கும் இடையேயான வாழ்வின் அர்த்தங்களை கருவாக்கிய "கலங்காதிரு.." -ம் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும்.
~~~~****~~~~
தவறுகள் பிழைகள் ஏதேனும் இருந்தால் மன்னித்துவிடுங்கள் தோழமைகளே! மீண்டும் நாளை சந்திப்போம்!
|
|
"சந்தோஷம்" கொண்டாடும் சுவாரஸ்யமான பதிவுகளின் அறிமுகங்கள்.. பாராட்டுக்கள்..
ReplyDeleteஇன்று தங்களால் அடையாளம் காணப்பட்டுள்ள ஐந்து பதிவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்க்ளும் வாழ்த்துகளும்.
ReplyDeleteஅன்புடன்
VGK
>>>>>>>>>>>
தொடரும்
>>>>>>>>>>>
// "கற்றது கையளவு கல்லாதது கடலளவு" என்ற போதிலும் எதை அடைந்துவிட்டதாய் கர்வம் ஏந்தி சில மனித இதயங்கள் துடிக்கின்றனவோ? //
ReplyDeleteஅ தா னே !
ஆச்சர்யமாக உள்ளது.
யாருக்குமே எப்போதுமே கர்வம் கூடாது என்பதை சற்றும் கர்வம் இல்லாமல் கூறியுள்ளது அழகோ அழகு!
>>>>>>>>>
//அன்பான வார்த்தைகள், அரவணைப்பான ஆறுதல்கள், உரிமையான தேற்றல்கள்,
ReplyDeleteஇறுக்கமான உறவுகள்,
ஈரம் காயாத சந்தோஷங்கள்,
இப்படி அனைத்தையும் அடையத்துடிப்பதை விட
கொடுத்து ரசிப்பதின்
சந்தோஷம் அலாதியானது.//
கொடுத்து ரசிப்பவர்களால் மட்டுமே
இதனை உணரமுடியும். ;)))))
>>>>>>>>>
//உயிர் கண்டு நேசிக்கத்தெரிந்தவனது உதிரத்தில் தானாய் அகப்பட்டுக்கொண்டு சில்லிடுமே
ReplyDelete"சந்தோஷமாய்"!
நாம் நாமாக இருப்போம்!//
அதே ! அதே !!
த தா ஸ் து !!!
[த்தாஸ்து = அப்படியே ஆகட்டும்]
>>>>>>>>>>
வாழ்க்கையை
ReplyDeleteசுவாரஸ்யமாக்க!!!--4
=======================
//எதை சாதித்துவிட்டாலும் பணிந்திருப்பது மட்டுமே நிலையான வெற்றியைக் குறிக்கும்.
"நான்" என்பது "நான் தான்" என்றாகிவிட்டால் பின் "நாம்" என்பதும் "நான்" என்றாகிவிடும்.
"என்னால் மட்டுமே முடியும், முடிந்தது!" என்று சொன்னால்
கேட்க யாரும் இருக்க மாட்டார்கள்!//
நாம் ஒவ்வொருவரும் இதனை
அறிந்து கொள்ள வேண்டும் +
புரிந்து கொள்ள வேண்டும்.
பிறகு நம் வாழ்க்கை நிச்சயமாக சுவாரஸ்யமாகிவிடும்.
அழகான பதிவு கொடுத்துள்ள தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள், யுவராணி.
அன்புடன்
VGK
// நாம் நாமாக இருப்போம்!//
ReplyDeleteநெசமாவுமே சொல்றேனுங்க..
இன்னிக்கு காலைலே தானே நானும்
இந்தக் கருத்தை மையமா வச்சு
எனக்குத் தெரிஞ்ச வகையிலே புரிஞ்ச வகையிலே
ஒரு பதிவு போட்டேன். என் வலையிலே ...இன்னும் சிக்கினவர் யாருமில்லே !! அது வேற !!
அது என்னங்க....அப்படி...
அல்லோபதி, ஹோமியோபதி அப்படின்னு சொல்வாக...
டெலிபதியா இங்கன ஒர்க ஆவுது?
மேடம் !! நீங்கள் யுவ ராணி இல்ல...
யுக ராணி.
இந்த யுகத்துக்கே
இனிமையாய் வாழ கத்துக்கொடுக்கும்
பவ ராணி. ( பவ = உலகம் ) ( இறைவி என்பது பொருளாம்)
சுப்பு தாத்தா.
www.vazhvuneri.blogspot.in
www.subbuthatha.blogspot.in
/// நாம் நாமாக இருப்போம் ///
ReplyDeleteஇதை விட என்ன வேண்டும்...?
நல்ல கருத்துக்களும், நல்ல தளங்களின் அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்...
நன்றி...
tm1
தங்கள் முகப்பு வார்த்தைகள் மிக நன்று. இனிய வாழ்த்து. அறிமுகப் பதிவர்களுக்கும் வாழ்த்துகள். இன்றைய அறிமுகம் 4 தெரிந்தவை. இதில் என்னையும் அறிமுகப் படுத்தியது ஆச்சரிய அதிர்ச்சி சகோதரி.காலை வேலக்குப் பயணமாகும் நெருக்கடியிலும் வலைச்சரம் எட்டிப் பார்த்தேன் கண்டு கொண்டேன் மிக்க நன்றி யுவராணி. இதை முகநூலில் பகிர்ந்துள்ளேன் இணைப்பு:- https://www.facebook.com/vetha.elangathilakam?ref=tn_tnmn#!/photo.php?fbid=4505603715367&set=a.1336357726198.2046607.1148741300&type=1&theater
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
அழகான அறிமுகங்கள்..
ReplyDeleteவாழ்த்துக்கள்.
@இராஜராஜேஸ்வரி
ReplyDeleteதங்களது வருகைக்கும் வாழ்த்துக்கும் எனது நன்றிகள்!
@ வை.கோபாலகிருஷ்ணன்
ReplyDeleteமிக்க நன்றிகள் ஐயா! தங்களது வருகைக்கும், வரிகளை குறிப்பிட்டு ஊக்குவிக்கும் வகையில் கருத்துரை இடுவதற்கும் எனது மனமார்ந்த நன்றிகள் ஐயா!
@sury Siva
ReplyDeleteதங்களது வருகைக்கும்,ஊக்குவிக்கும் கருத்துரைகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் ஐயா!
@திண்டுக்கல் தனபாலன்
ReplyDeleteதங்களது வருகைக்கும்,ஊக்குவிக்கும் கருத்துரைகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் அண்ணா!
This comment has been removed by the author.
ReplyDelete@ மகேந்திரன்
ReplyDeleteதங்களது வருகைக்கும்,கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் ஐயா!
sakothariye!
ReplyDeletearimukangalikkum-
ennaiyum inaiththamaikkum-
mikka nantri!
♣♣♣♣♣ வணக்கம ♣♣♣♣♣
ReplyDeleteயுவராணி தமிழரசன்.
இன்றைய அறிமுகங்கள் அருமை..
அறிமுகத்திற்கு நன்றி..
வணக்கம்
ReplyDeleteயுவராணி தமிழரசன்
(உணர்வுகளுக்கு உரிமை கொடுத்து உள்ளத்தில் ஈரம் கொண்டு உதிரும் உதிரத்திலும் உயிர் கண்டு நேசிக்கத்தெரிந்தவனது உதிரத்தில் தானாய் அகப்பட்டுக்கொண்டு சில்லிடுமே "சந்தோஷமாய்")
"நல்ல உயிர்ஓட்டம் உள்ள வரிகள்"
இன்று நல்ல முகவுரையுடன் அறிமுகமாகியுள்ள தளங்கள் அனைத்தும் மிகவும் அருமை வாழ்த்துக்கள் தொடருகிறேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ReplyDeleteநாம் நாமாக இருப்போம்!//
இன்றைய அறிமுகங்கள் அருமை.
நல்ல நல்ல தளங்களை நாள்தோறும் அறிமுகப்படுத்தும் தங்களுக்கு நன்றி!
ReplyDeleteஅடியேனுடைய தளத்தினையும் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி சகோ. தொடரட்டும் அறிமுகங்கள்.
ReplyDeleteபகிர்தலின் மகிழ்ச்சியை கொண்டாடுவோம் . உங்களின் பதிவில் அறிமுகமாகியுள்ளோருக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஇன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteயுவராணி!..திருமதி .வேதா. இலங்காதிலகம். (பெண்மணி)
ReplyDeleteVetha.Elangathilakam.
@kovaikkavi
ReplyDeleteஇல்லை இல்லை மன்னியுங்கள்!!! தங்களை தங்களது வலைப்பூவிலேயே அறிந்திருந்தேன்! கருத்துரையிடுகையில் தவறிழைத்துவிட்டேன்! முகநூலிலும் பகிர்ந்திருப்பதால் எனது கருத்துரை தங்களுக்கு அசௌகரியம் ஏதேனும் ஏற்படுத்தியிருந்தால் மன்னியுங்கள் என்னை! முழுக்க முழுக்க எனது கவனக்குறைவே காரணம்!
@Lakshmi
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகளம்மா
@ezhil
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!
@Seeni
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!
@99likes
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!
@2008rupan
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!
@Sasi Kala
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!
@s suresh
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!
@ வெங்கட் நாகராஜ்
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!