தமிழ் நம் அடையாளம்.
➦➠ by:
முனைவர்.இரா.குணசீலன்.
கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்,
பனிமலர் ஏறிய தேனும், - காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்;
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும், - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!
பொழிலிடை வண்டின் ஒலியும் - ஓடைப்
புனலிடை வாய்க்கும் கலியும்,
குழலிடை வாய்க்கும் இசையும், - வீணை
கொட்டிடும் அமுதப் பண்ணும்,
குழவிகள் மழலைப் பேச்சும் - பெண்கள்
கொஞ்சிடும் இதழின் வாய்ப்பும்,
விழைகுவ னேனும், தமிழும் - நானும்
மெய்யாய் உடலுயிர் கண்டீர்!
பயிலுறும் அண்ணன் தம்பி, - அக்கம்
பக்கத் துறவின் முறையார்,
தயைமிக உடையாள் அன்னை - என்னைச்
சந்ததம் மறவாத் தந்தை,
குயில்போற் பேசிடும் மனையாள், - அன்பைக்
கொட்டி வளர்க்கும் பிள்ளை,
அயலவ ராகும் வண்ணம் - தமிழ் என்
அறிவினில் உறைதல் கண்டீர் !
நீலச் சுடர்மணி வானம் - ஆங்கே
நிறையக் குளிர்வெண் ணிலவாம்.
காலைப் பரிதியின் உதயம் - ஆங்கே
கடல்மேல் எல்லாம் ஒளியாம்,
மாலைச் சுடரினில் மூழ்கும் - நல்ல
மலைகளின் இன்பக் காட்சி
மேலென எழுதும் கவிஞர் - தமிழின்
விந்தையை எழுதத் தரமோ?
செந்நெல் மாற்றிய சோறும் - பசுநெய்
தேக்கிய கறியின் வகையும்,
தன்னிகர் தானியம் முதிரை, - கட்டித்
தயிரோடு மிளகின் சாறும்,
நன்மதுரஞ்செய் கிழங்கு - கானில்
நாவிலினித்திடும் அப்பம்,
உன்னை வளர்ப்பன தமிழா! -உயிரை
உணர்வை வளர்ப்பது தமிழே !
என்ற கவிஞர் பாரதிதாசனின் கவிதையோடு எனது பணியை இனிதே தொடங்குகிறேன்..
வேர்களைத்தேடி (முனைவர் இரா.குணசீலன்)என்னும் வலைப்பதிவில் கடந்த ஐந்து வருடங்களுக்குமேலாக தமிழ் மொழிகுறித்தும்,தமிழ் இலக்கி்யங்கள் குறித்தும், சமூகம் குறித்தும் எழுதிவருகிறேன்..
காலத்தைப் பின்னோக்கிப்பார்க்கிறேன்...
வலைச்சரத்தை முதன்முதலில் பார்த்தபோது எனக்கு ஏற்பட்ட வியப்பு இன்னும் குறையவில்லை. வலைப்பதிவின் பல்வேறு நுட்பங்களையும், பல புதியவலைப்பதிவர்களையும் நான் வலைச்சரம் வாயிலாகவே அறிந்துகொண்டேன். இதற்குப்பிறகுதான் தமிழ்மணம் போன்ற திரட்டிகளை நான் அறிந்துகொண்டேன்.
என இந்த வலையுலகம் எனக்களித்த மதிப்புகள் யாவும் தமிழால் எனக்குக் கிடைத்தது.
அதனால் தமிழே என் அடையாளம்.
சிவப்பு என்பது அழகல்ல நிறம்
ஆங்கிலம் என்பது அறிவல்ல மொழி
மொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை
என்னும் பொன்மொழிகளை நன்கு உணர்ந்து என்னால் இயன்றவரை இனியதமிழில் வலையுலகில் எழுதிவருகிறேன்.
சீனா ஐயா அவர்கள் தமிழ்மீதுகொண்ட பற்றாலும் என்மீதுகொண்ட அன்பாலும் இரண்டாவதுமுறையாக வலைச்சரத்தில் பணியாற்றும் வாய்ப்பை எனக்கு வழங்கியிருக்கிறார்கள் அவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
என் பார்வையில் தமிழ்வலையுலகத்தில் என்னைக் கவர்ந்த வலைப்பதிவர்களை நாளைமுதல் தங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
இன்று என் எழுத்தில் தமிழின் அடையாளங்கள் சிலவற்றை தங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
எனது வலையில் அதிகம் பார்வையிடப்பட்ட இடுகைகள் சில...
வலையில் எழுதும் ஆர்வம் இன்னும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு தான் இருக்கிறது. அதற்குக்காரணம் இதுபோன்ற சின்னச்சின்ன பாராட்டுதல்களே..
என் எழுத்துக்களைப் பாராட்டிய நண்பர்களே
நான் தொடர்ந்து எழுதக் காரணமாக இருந்திருக்கிறார்கள்.
அதனால் மனம் திறந்து பலபதிவர்களைப் பாராட்டியிருக்கிறேன். இருந்தாலும்,
அதனால் மனம் திறந்து பலபதிவர்களைப் பாராட்டியிருக்கிறேன். இருந்தாலும்,
பல பதிவர்களைக் கண்டு இவர்கள் எழுத்து ஆழமானதாக இருக்கிறதே..
இன்னும் இவர்களை உலகம் கண்டுகொள்ளவில்லையே என்றெல்லாம் வருந்தியிருக்கிறேன். அதற்கெல்லாம் சிறந்த வாய்ப்பாக இந்தப் பணியை எண்ணிக்கொள்கிறேன்.
இன்னும் இவர்களை உலகம் கண்டுகொள்ளவில்லையே என்றெல்லாம் வருந்தியிருக்கிறேன். அதற்கெல்லாம் சிறந்த வாய்ப்பாக இந்தப் பணியை எண்ணிக்கொள்கிறேன்.
கடந்தமுறை வலைச்சரத்தில் 100 வலைப்பதிவர்களை அறிமுகம் செய்தேன்.
இந்த முறையும் என்னால் முடிந்த வரை பல புதிய பதிவர்களை அறிமுகம் செய்யத்திட்டமிட்டுருக்கிறேன்.
தமிழ் உறவுகளே...
தமிழ் நம் அடையாளம் என்பதை உணர்வோம்..
நம் துறைசார்ந்த செய்திகளை,நுட்பங்களை தமிழிலேயே பதிவுசெய்வோம்..
இளம்பதிவர்களை வரவேற்போம்..
தொடர்ந்து எழுதுபவர்களைப் பாராட்டுவோம்..
..../\.....நாளை சந்திப்போம்..../\.....
|
|
ஓ! இரண்டாவது தடவை ஆசிரியமா!
ReplyDeleteஇறையாசி நிறையட்டும்.
பணி தொடர நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
வாழ்த்துக்கள் அய்யா!!
ReplyDeleteஅன்பின் குணா - நான் இன்னும் வரவேற்புப் பதிவு - சென்ற வார ஆசிரியருக்கு நன்றி கூறும் பதிவு - இட வில்லையே - பரவாய் இல்லை - நான் இன்று மாலை தான் பதிவினை எதிர் பார்த்தேன் - இவ்வளவு விரைவினில் நேற்றிரவே பதிவு வெளியிட்டாயிற்றா ? ம்ம்ம்ம்ம் - நன்று - விதிமுறைகள் திங்கள் காலை ஆறு மணீ முதல் தான் புதிய ஆசிரியரின் பணி துவங்க வேண்டுமெனக் கூறுகிறது. பரவாய் இல்லை - பல்வேறு காரணங்கள் - வாழ்க வளமுடன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஅன்பின் குணா - அருமையான சுய அறிமுகம் - இப்பதிவுகளீல் ஏற்கனவே பார்க்காத பதிவுகளைச் சென்று பார்க்கிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஎம் ஜி.ஆர் அவர்கள் தமிழக மக்களிடம்
ReplyDeleteதன்னை அறிமுகம் செய்து கொள்வது போல
இருக்கிறது நீங்கள் பதிவுலகில் உங்களை
அறிமுகம் செய்து கொள்வது...
இந்த வாரம் மிக்க சிறப்பான வாரமாக அமைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
நல்ல கருத்துக்களுடன் சிறப்பான அறிமுகம்...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
tm6
ReplyDeleteநல்ல அறிமுகம்
வாழ்த்துக்கள் முனைவரே
பணிதொடர வாழ்த்துகள்.
ReplyDeleteஇனித்திடும் வாரம்.
சிவப்பு என்பது அழகல்ல நிறம்
ReplyDeleteஆங்கிலம் என்பது அறிவல்ல மொழி
உங்களது தளத்தில்தான் படித்தேன். நல்ல அறிமுகம். இரண்டாவது தடவையாக ஆசிரியப்பொறுப்பினை ஏற்றுக்கொண்டு அறிமுகங்களைத் தரப்போகும் தங்களுக்கு நன்றி.
சென்ற முறை தாங்கள் ஆசிரியராகப் பணி செய்தபோது நான் வலையுலகில் இல்லை முனைவரையா. இப்போது இந்த வாரம் முழுவதும் உங்களுடனும் தமிழுடனும் பயணிக்க இருப்பதில் மிகமிக மகிழ்கிறேன். என் இதயம் நிறை நல்வாழ்த்துக்கள் உங்களுக்கு.
ReplyDeleteமிக சிறப்பான அறிமுகம் குணசீலா....
ReplyDeleteதமிழை உயிராய்.... மெய்யுடலாய்.... மிக அருமையாய் சொல்லி இருக்கீங்கப்பா....
ஆங்கிலம் என்பது அறிவல்ல மொழி.. நச்....
சிந்தனை முத்துகள் தொடரட்டும்பா...
இந்த வாரம் வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்றமைக்கு மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்பா....
நன்றி இலங்கா திலகம்
ReplyDeleteநன்றி சீனி
ReplyDeleteநம்ம ஊரு மின்சாரத்தை நம்பமுடியாதே.. அதனால்தான் கல்லூரி செல்லும் முன்பே பதிவிட்டுவிட்டேன்..
ReplyDeleteதங்கள் புரிதலுக்கு நன்றி ஐயா..
மகிழ்ச்சி இரமணி ஐயா.
ReplyDeleteநன்றி தனபாலன்.
ReplyDeleteநன்றி செய்தாலி
ReplyDeleteநன்றி சக்திதாசன்.
ReplyDeleteநன்றி மாதேவி.
ReplyDeleteநன்றி விச்சு
ReplyDeleteநன்றி கணேஷ் ஐயா.
ReplyDeleteநன்றி மஞ்சு.
ReplyDeleteவணக்கம்.
ReplyDeleteமுனைவர் இரா.குணசீலன் (சார்)
நீங்கள் வலைப்பூ வலைச்சரத்தை ஒருவாரகாலம் பொறுப்பேற்று நடாத்துவதை இட்டு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.தொடருங்கள் பயணத்தை வாழ்த்துக்கள்……
உங்களைப்பற்றிய அறிமுகம் நன்றாக உள்ளது ஒரு உண்மையை சொல்லி விட்டிர்கள்.
தமிழ் அவமானம் அல்ல அது அடையாளம் என்ற சின்ன வரிதான் அதில் புதைந்து கிடக்கும் அர்த்தம்
ஆயிரம் .ஆயிரம்….. உங்களின் கவிதைகள் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் 1ம் நாளைப் போல 2ம் நாளும் சிறப்பாக வலைப்பூ மலர எனது வாழ்த்துக்கள் (சார்)
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மகிழ்ச்சி ரூபன்.
ReplyDeleteவலைச்சரத்தை முதன்முதலில் பார்த்தபோது எனக்கு ஏற்பட்ட வியப்பு இன்னும் குறையவில்லை./
ReplyDeleteபகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..
வாழ்த்துக்கள் குணசீலன் சார். தாமதம் ஆக வந்துள்ளேன் மன்னிக்கவும்.
ReplyDelete//சிவப்பு என்பது அழகல்ல நிறம்
ReplyDeleteஆங்கிலம் என்பது அறிவல்ல மொழி
மொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை
என்னும் பொன்மொழிகளை நன்கு உணர்ந்து என்னால் இயன்றவரை இனியதமிழில் வலையுலகில் எழுதிவருகிறேன். //
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
நன்றி இராஜராஜேஸ்வரி
ReplyDeleteவருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி இராம்வி.
ReplyDeleteநன்றி வை.கோபாலகிருஷ்ணன் ஐயா.
ReplyDelete