ப்ளேட்பீடியா - 1 - வணக்கம் வலைச்சரம்!
வணக்கம்,
எனது பெயர் கார்த்திக்! பிறந்தது மதுரையில், வளர்ந்தது தமிழ்நாட்டின்
பல்வேறு பகுதிகளில், தற்போது தகவல்
தொழில்நுட்ப நிறுவனமொன்றில் பணிபுரிந்தவாறு காலம் தள்ளுவது பெங்களூரில்!
வலைப்பூ துவக்குவதற்கு முன்னர் கடைசியாக தமிழில் எழுதியது +2 பொதுத்தேர்வில்தான்! அதற்குப் பிறகு தமிழில் எழுதுவது என்றால் விண்ணப்பப் படிவங்களில் பெயரும் முகவரியும் எழுதுவது என்பதோடு நின்று விட்டது. கிட்டத்தட்ட 16 வருடங்களாக தமிழ்நாட்டுக்கு வெளியில் வசித்து வருவதால் இப்போது அந்த வாய்ப்பும் இருப்பதில்லை. இவ்வாறு முழுவதுமாய் விட்டுப் போன எழுத்துப் பழக்கம் கடந்த ஆண்டு வலைப்பூ துவக்கியதில் இருந்து வெகுவாய் முன்னேற்றம் கண்டுள்ளது.
அதாவது, முன்பு இரண்டே இரண்டு விரல்களின் துணையுடன் பேனா பிடித்து முகவரி மட்டும் எழுதிக் கொண்டிருந்த நான், தற்போது பத்து விரல்கள் கைகோர்க்க(!) பக்கம் பக்கமாய் டைப்பிக் கொண்டிருக்கிறேன்! :)
வலைப்பூ துவக்குவதற்கு முன்னர் கடைசியாக தமிழில் எழுதியது +2 பொதுத்தேர்வில்தான்! அதற்குப் பிறகு தமிழில் எழுதுவது என்றால் விண்ணப்பப் படிவங்களில் பெயரும் முகவரியும் எழுதுவது என்பதோடு நின்று விட்டது. கிட்டத்தட்ட 16 வருடங்களாக தமிழ்நாட்டுக்கு வெளியில் வசித்து வருவதால் இப்போது அந்த வாய்ப்பும் இருப்பதில்லை. இவ்வாறு முழுவதுமாய் விட்டுப் போன எழுத்துப் பழக்கம் கடந்த ஆண்டு வலைப்பூ துவக்கியதில் இருந்து வெகுவாய் முன்னேற்றம் கண்டுள்ளது.
அதாவது, முன்பு இரண்டே இரண்டு விரல்களின் துணையுடன் பேனா பிடித்து முகவரி மட்டும் எழுதிக் கொண்டிருந்த நான், தற்போது பத்து விரல்கள் கைகோர்க்க(!) பக்கம் பக்கமாய் டைப்பிக் கொண்டிருக்கிறேன்! :)
எனது
மனதுக்கு
பிடித்தமான (தமிழ்) காமிக்ஸ் பற்றி எழுதும் நோக்கில் கடந்த ஆண்டு
ப்ளேட்பீடியாவை துவக்கியிருந்தாலும், அத்தோடு நில்லாமல் கொஞ்சம்
பொழுதுபோக்கு, கொஞ்சம் அனுபவங்கள், கொஞ்சம் தொழில்நுட்பம் என கலந்துகட்டி
பதிவிட்டு வருகிறேன்! நகைச்சுவை
(அல்லது அறுவை) இழையோடும் பதிவுகள் - இதுவே ப்ளேட்பீடியாவின் அடிநாதம்.
நான் இதுவரை இட்ட 98 பதிவுகளில் இருந்து சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து வழங்குவது என்பது அப்படி ஒன்றும் லேசான காரியமாக இருந்திடவில்லை! அவையனைத்துமே அதியற்புதமான பதிவுகள் என்பதால் அல்ல! என்னுடைய பதிவுகள் பலவற்றை பின்னோக்கிப் பார்க்கையில், எனக்கே படிக்க சகிக்கவில்லை என்பதுதான் உண்மையான காரணம்! :) இருந்தாலும் மனதை திடமாக்கிக் கொண்டு தேர்ந்தெடுத்த ஒருசில பதிவுகள் மட்டும் உங்களின் கீழான பார்வைக்கு - அதாவது கீழே பாருங்கள் என்ற அர்த்தத்தில்! :)
நான் இதுவரை இட்ட 98 பதிவுகளில் இருந்து சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து வழங்குவது என்பது அப்படி ஒன்றும் லேசான காரியமாக இருந்திடவில்லை! அவையனைத்துமே அதியற்புதமான பதிவுகள் என்பதால் அல்ல! என்னுடைய பதிவுகள் பலவற்றை பின்னோக்கிப் பார்க்கையில், எனக்கே படிக்க சகிக்கவில்லை என்பதுதான் உண்மையான காரணம்! :) இருந்தாலும் மனதை திடமாக்கிக் கொண்டு தேர்ந்தெடுத்த ஒருசில பதிவுகள் மட்டும் உங்களின் கீழான பார்வைக்கு - அதாவது கீழே பாருங்கள் என்ற அர்த்தத்தில்! :)
1. காமிக்ஸ்:
"காமிக்ஸ் சிறுவர்களுக்கானது
மட்டுமல்ல" என்ற உண்மையை இணைய வாசகர்களின் மனதில் அழுத்தமாய் பதிவு செய்யவே
தொடர்ந்து காமிக்ஸ் பதிவுகள் இட்டு வருகிறேன். சில சாம்பிள் பதிவுகளை கீழே
பார்க்கலாம். குறைந்த பட்சம் பதிவுகளுக்கான இணைப்புகளின் அடியில்
இருக்கும் மேற்கோள்களையாவது படிக்க முயலுங்கள்! :)
1a. லார்கோ வின்ச்: தமிழ் காமிக்ஸ் உலகின் புதிய சூப்பர் ஸ்டார்! (May 16, 2012):
துப்பாக்கியை உபயோகிக்காமல் வெறும் உடல் பலத்தையும், கத்தி வீசும் திறனையும் காட்டுவது "Casino Royale" ஜேம்ஸ்பாண்டை நினைவுபடுத்துகிறது! லார்கோவின் ப்ளேபாய் காட்சிகள் நமது ஓவியர்களால் மூடி மறைக்கப்பட்டுள்ளன - இருந்தாலும் வசனங்கள் கொஞ்சம் தாராளம்! கதை நெடுக நிகழ்காலத்தையும், கடந்தகாலத்தையும் பின்னிப்பிணைத்த விதம் அட்டகாசம்!
1b. தமிழ் பேசிய பேட்மேன் - திகில் காமிக்ஸ்! (Jul 12, 2012):
பேட்மேன் ஒரு வழக்கமான ஹீரோ அல்ல, அவரின் வில்லன்களும் அப்படித்தான்! கைகலப்போடு நில்லாமல் மனோரீதியாகவும் மோதிக்கொள்வார்கள்! மன உளைச்சல் தரும் வில்லன்கள், மனநோயாளி எதிராளிகள், ஹிப்னாடிச வில்லன்கள், போதை மருந்துக் கும்பல்கள் என ஒவ்வொரு கதையும் மிக மிக வித்தியாசமான அனுபவத்தை அளிக்கும்!
1c. வன்மேற்கின் வஞ்ச நெஞ்சங்கள் - வெஸ்ட்டர்ன் - ஒரு மாறுபட்ட கிராபிக் நாவல்! (Sep 23, 2012):
கதைநாயகன் நாதன் சிஸ்லிமின் 14 வயது இளம்பிராயப் பார்வையில் விரிவதாய் அமையும் இந்தக் கதை Spaghetti வெஸ்டர்ன் படங்களின் ஆரம்பக் காட்சிகளுக்கு சற்றும் சளைத்ததில்லை! வறண்ட, பரந்த பாலைப் பரப்பில் ஊர்ந்து வந்து வ்யோமிங்கில் உள்ளதொரு சிறு நகரில் நிலை கொள்ளும் அந்தப் புகை வண்டி நம்மை ஒரு கனத்த கதைக்குள் இட்டுச் செல்கிறது!
1d. முத்து காமிக்ஸ் - 40வது ஆண்டு மலர் - டெலிபோன் டைரக்டரி சைஸில் ஒரு காமிக்ஸ்! (Apr 3, 2013):
ஜேம்ஸ் பாண்ட் போன்ற நளினமான(?) முரட்டுத்தனம் கொண்ட உளவாளி வேடத்தில் நடித்திட நாற்பது வயதை கடந்து, காதோரம் நரை தட்டிய நடிகர்தான் பொருத்தமான தேர்வாக இருந்திடுவார் இல்லையா? அப்படியொரு நாயகர்தான் வேய்ன் ஷெல்டனும்! பணத்திற்காக ஆபத்தான பணிகளை மேற்கொள்ளும் முரட்டுத்தனமும், தெனாவட்டும் கலந்த ஒரு துடிப்பான நபர்!
1e. காமெடி கௌபாய், கில்லாடி கௌபாய்! (Apr 4, 2013):
இந்த டெக்ஸ் வில்லர் இதழின் வடிவமைப்பு, டெக்ஸ் காமிக்ஸை 'உருவாக்கும்' இத்தாலிய பதிப்பகத்திற்கு மிகவும் பிடித்துப் போனதால்; இதை மிலன் நகரிலுள்ள காமிக்ஸ் மியூசியத்தில் பார்வைக்கு வைக்கப் போகிறார்களாம்! இந்தியாவிலிருந்து வெளியாகும் ஒரு காமிக்ஸ் இதழுக்கு (அதுவும் தமிழில்!) இந்த கௌரவம் கிடைத்திருப்பது பெருமை சேர்க்கும் சங்கதிதானே?
2. அனுபவப் பதிவுகள்:
நான்
மிகவும் அனுபவித்து(?!) எழுதிய பதிவுகள் எவை என்று நீங்கள் பட்டியலிடச்
சொன்னால் அவற்றில் கீழ்க்கண்ட அனுபவங்களும் நிச்சயம் இடம் பெறும்!
2a. மழுங்கிய மனிதர்கள் - 1 - இரயில் பயணங்களில்! (Jun 10, 2012):
2b. சலூனில் சில Sci-Fi சிந்தனைகள்! (Jun 10, 2012):
2c. பல் பிடுங்கிய பதிவர்! (Jul 28, 2012):
2d. சிக்கலில் சிக்கிய பதிவர்! (Jan 6, 2013):
2e. ஒரு கைராசி வைத்தியரின் நம்பிக்கை நோயாளிகள்! (Feb 24, 2013):
2a. மழுங்கிய மனிதர்கள் - 1 - இரயில் பயணங்களில்! (Jun 10, 2012):
ரயில்வே ஸ்டேஷனில் காத்திருக்கும் போது, தாங்கள் மட்டும் உட்காராமல், தமது பெட்டி படுக்கைகளையும் இருக்கைகள் மேல் வைத்துக்கொண்டு சாவகாசமாக அரட்டை அடித்துக்கொண்டிருப்பார்கள்! இது என்ன மாதிரியான ஒரு பழக்கம் என்று எனக்கு புரியவில்லை! வாய் விட்டு கேட்ட பிறகே பாதி மனதுடன் கொஞ்சமாக பெட்டியை நகர்த்தி விட்டு இடம் கொடுப்பார்கள்!
2b. சலூனில் சில Sci-Fi சிந்தனைகள்! (Jun 10, 2012):
காதை சுற்றியுள்ள முடியை வெட்டும் போது காதை மடக்கி, கிருதாவின் மேல் வைத்து அழுத்திப் பிடித்து வெட்டுவார்கள் - எழுந்து ஓடி விடலாம் போலிருக்கும். பேசாமல் ஒரு வாய், ஒரு ஒரு மூக்கு போல; ஒரே ஒரு காது மட்டும் மூக்குக்கும் வாய்க்கும் இடைப்பட்ட பிரதேசத்தில், மீசைக்கு பதிலாக வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என Sci-Fi ரேஞ்சில் சிந்தனைகள் ஓடும்!
2c. பல் பிடுங்கிய பதிவர்! (Jul 28, 2012):
பல்லை பிடுங்க ஆயத்தமான டென்ட்டல் சர்ஜன், தொண்டையை செருமிக்கொண்டு கேட்டார் - 'புடுங்கறதுக்கு முன்னாடி ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க' என்றார்! 'நீங்க பல்லை தானே புடுங்கப்போறீங்க, நாக்கை இல்லையே?' என மனதில் நினைத்தவாறு, 'நைட்டு டின்னர் சாப்பிடலாமா டாக்டர்?' என்று கேட்டேன், 'குடிக்கலாம்' என்றவாறு வேலையை ஆரம்பித்தார்.
2d. சிக்கலில் சிக்கிய பதிவர்! (Jan 6, 2013):
அது வரை சினிமாவில் மட்டுமே பார்த்திருந்த ஆபரேஷன் தியேட்டரை முதன் முறையாக நேரில் பார்த்தேன்! சர்ஜனின் அசிஸ்டெண்டுகள் வேக வேகமாக என் முன்புறத் துணியை விலக்க எத்தனிக்க, கொப்புளத்தை நசுக்காமல், வேறு எதையாவது நசுக்கி விடுவார்களோ என்ற பயத்தில் - 'பின்னாடி, பின்னாடி' என்று பதறியவாறு திரும்பிப் படுத்தேன்!
2e. ஒரு கைராசி வைத்தியரின் நம்பிக்கை நோயாளிகள்! (Feb 24, 2013):
உள்ளே நுழையும்போதே அந்த சிடுமூஞ்சி வரவேற்பாளரிடம் தவறாமல் ஒரு டோக்கனை வாங்கி விட வேண்டும்! அதில் இருபதோ, அறுபதோ - கூட்டதிற்கேற்ப ஏதோ ஒரு வரிசை எண் எழுதப் பட்டிருக்கும்! 'இப்போ எந்த நம்பர் போயிருக்கு?!' என்று நீங்கள் கேட்டீர்களானால் 'கூப்பிடுவாங்க, வெயிட் பண்ணுங்க!' என்று பிடி கொடுக்காமல் ஒரு பதில் வரும்!
3. சினிமா:
கோடிகளைக்
கொட்டி எடுக்கும் படங்களைப் பற்றி பைசா செலவில்லாமல் எழுதலாம் என்பதால்
சினிமா விமர்சனம் எழுதுவது எனக்கு பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஒன்றாக
மாறிவிட்டது! இருந்தாலும் என்னைக் கவர்ந்த படங்களுக்கு மட்டுமே விமர்சனம் எழுதுவது என்பதை ஒரு கொள்கையாகவே வைத்துள்ளேன்!
3a. ஹரிதாஸ் - அர்த்தமுள்ள தமிழ் படம்! (Feb 24, 2013):
3a. ஹரிதாஸ் - அர்த்தமுள்ள தமிழ் படம்! (Feb 24, 2013):
இது போன்ற கேரக்டர்கள் என்றாலே முகத்தை அஷ்ட கோணலாக வைத்துக்கொண்டு இலக்கின்றி சிரிக்கும் வழக்கமான சினிமா மேனரிசத்தை உடைத்தெறிந்து நிதர்சனத்தை தன் நடிப்பில் காட்டுகிறார்! தன்னிலை மறந்து தன் திறமையை வெளிக்காட்டும் அந்த குதிரைப் பந்தயக் காட்சி உணர்வுகளை உரக்க மீட்டும் ஒரு வலிய ஆக்கம்!
4. தொழில்நுட்பம்:
போரடிக்கும் தொழில்நுட்பப் பதி வுகள்
பல தரப்பினரையும் சென்றைடைய வேண்டுமானால் அதில் சற்று
நகைச்சுவையை கலந்தாலே போதும்! ப்ளேட்பீடியாவில், ஹிட்ஸ் எண்ணிக்கை அடிப்படையில் இன்றளவிலும் முதலிடத்தில் இருக்கும் பதிவு இதுதான்!
IRCTC-யில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வித்தை! - Ver 1.0 (May 13, 2012):
டிக்கெட் பதிவு செய்ய வேண்டிய நாள், காலையில் சீக்கிரமாக - குறைந்தது ஏழு மணிக்காவது எழுந்து கொள்ளுங்கள். பல் துலக்கி விட்டு, அப்படியே லைட்டாக ஒரு பாக்கியராஜ் டான்ஸ் போட்டால், கைகளும் விரல்களும் தயார் நிலைக்கு வந்து விடும். சூடாக காபியோ டீயோ குடித்து விட்டு அவசர காரியங்கள் 'ஒன்றோ', 'இரண்டோ' இருந்தால் அதையும் முடித்துக்கொள்ளுங்கள்.
5. கவிதைகள்:
ஆர்வக் கோளாறில் எழுதிய கொலைவெறிக் கவிதைகள்! :)
ட்விதைகள் - 1 - பிய்த்துப் போட்ட காதல் வரிகள்! (Jul 04, 2012):
6. இதர பதிவுகள்:
சமூகப் பிரச்சினைகள், அரசியல் பற்றி அதிகம் எழுதியதில்லை. இருந்தாலும் LKG சேர்க்கை, வட இந்திய மீடியாக்களின் இன வெறி என ஒரு சில சமூகம் சார்ந்த பதிவுகள் எழுதி உள்ளேன்!
6a. LKG படிக்காதவனும், LKG அட்மிஷனும்! (சென்னை & பெங்களூர்) (, 2012):
ஆர்வக் கோளாறில் எழுதிய கொலைவெறிக் கவிதைகள்! :)
ட்விதைகள் - 1 - பிய்த்துப் போட்ட காதல் வரிகள்! (Jul 04, 2012):
♂ ♥ ♀பல மணி பேசிக் களைத்த அவள்சில நொடி நான் பேசவும்நாளை பேசலாம் என கைபேசி துண்டித்தாள்!நாளையும் பேசுவாள், நானும் கேட்பேன்...
6. இதர பதிவுகள்:
சமூகப் பிரச்சினைகள், அரசியல் பற்றி அதிகம் எழுதியதில்லை. இருந்தாலும் LKG சேர்க்கை, வட இந்திய மீடியாக்களின் இன வெறி என ஒரு சில சமூகம் சார்ந்த பதிவுகள் எழுதி உள்ளேன்!
6a. LKG படிக்காதவனும், LKG அட்மிஷனும்! (சென்னை & பெங்களூர்) (, 2012):
குழப்பம் இத்தோடு நிற்பதில்லை! பல பள்ளிகள் Pre-KG முதலே குழந்தைகளைச் சேர்த்தால் மட்டுமே LKG-இல் அட்மிஷன் தருகின்றன! பெங்களூரில் Pre-KG என்பதை ஒவ்வொரு பள்ளியும் ஒவ்வொரு வகையில் வரையறுத்து, ஒவ்வொரு பெயரில் அழைத்து பெற்றோரின் தலையில் எஞ்சியிருக்கும் கொஞ்ச நஞ்ச முடியையும் பிய்க்க வைக்கின்றன!
6b. இனவெறியைத் தூண்டுகிறதா டைம்ஸ் ஆஃப் இந்தியா? (Jul 11, 2012):
குறிப்பாக TOI இணையதளத்தில் "Comment Moderation" மிகுந்த பாரபட்சத்துடன் செயல்படுவதால் - இது போன்ற வெறுப்பை தூண்டும் தலைப்புகள் கொண்ட செய்திகள் வெளியாகும்போது, நச்சை கக்கும் நூற்றுக்கணக்கான இனவெறிப் பின்னூட்டங்கள் தமிழர் மீதான வெறுப்பை உமிழ்கின்றன! அதை படித்து எரிச்சலாகும் நம்மவர்களும் பதிலுக்கு எதிர்வினை ஆற்றுகிறார்கள்.
பொறுமையாக படித்த அனைவருக்கும் மிக்க நன்றி! பொறுமை - உங்களுக்கு இது அவசியம் தேவைப்படும். ஏனெனில் இந்த வாரம் முழுக்க எழுதப் போவது நான்தானே?! ;)
வலைச்சரத்தில் எழுத வாய்ப்பளித்த நண்பர் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கும், வலைச்சர குழுவினர்க்கும் நன்றி! பேசாமல் தமிழ்வாசி எஃபெக்டில், என் (வலைப்) பெயரை "காமிக்ஸ்வாசி கார்த்திக்
அன்புடன்,
|
|
வணக்கம் நண்பரே... நான் இன்றுதான் தங்களது தளத்தை முதல்முறையாகப் பார்க்கிறேன்... அருமையான எழுத்துநடையில் அழகான பதிவுகள்.... பேனா பிடித்து பலகாலம் ஆகியிருந்தாலும் சிந்தனையும் படைக்கும் வித்தையும் தங்களிடமிருந்து விலகவேயில்லை என்பதற்கு தங்களது படைப்புகளே சான்று... ஒவ்வொன்றும் முத்தான பதிவுகள்... வலைச்சரத்தில் கலக்க வாழ்த்துக்கள்.... நன்றி...
ReplyDeleteகலக்குங்க ..உங்க blade க்கு ரத்த தானம் நான் தயார் !
ReplyDeleteவாரம் முழுவதும் அசத்தலான பதிவுகள் எழுதிட வாழ்த்துகள்.
ReplyDeleteஅன்பின் கார்த்திக் - நல்லதொரு சுய அறிமுகம் - அத்தனை சுட்டிகளையும் சுட்டிச் சென்று, பார்த்து, படித்து, ,அகிழ்ந்து மறுமொழிகள் இட ஆசை - செய்கிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஅருமையான துவக்கம்.... நானும் பேப்பரில் எழுதி பல வருடங்கள் ஆகிறது, பதிவுகளுக்கு என்று எழுதத் தொடங்கிய பின் தான் மீண்டும் தமிழ்..... தொடர்ந்து கலக்குங்ககள்
ReplyDeleteஇது தான் அறிமுகம். இத்தனை நாள் தெரியாமல் போனது வருத்தம்.
ReplyDeleteஉங்கள் எழுத்தும் attitudeம் நன்று.
நண்பருக்கு வாழ்த்துக்கள் :)
ReplyDeleteசுய அறிமுகம் நன்று... கார்த்திக் என்றாலே கலக்கல் தானே... (திரைப்பட பாத்திரங்களிலும்) கலக்குங்க... வாழ்த்துக்கள்...
ReplyDelete"காமிக்ஸ்வாசி கார்த்திக்" - சூப்பர்...
கலக்குங்க கார்த்திக்! இதுவரை அறியாதவர்களும் ப்ளேடின் கூர்மையை உணரட்டும்! :)
ReplyDeleteஅடுத்தடுத்த பதிவுகளுக்காக ஆவலுடன்...
வாழ்த்துக்கள் கார்த்திக்..
ReplyDeleteவலை சரம் ஆசிரியர் ஆனதற்கு வாழ்த்துகள் கார்த்திக்!
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே!
ReplyDeleteவாழ்த்துக்கள் கார்த்திக்! கலக்குங்க! : )
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஇந்த வாரம் வலைச்சரப்பொறுப்பு ஏற்றிருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன் நல்ல அறிமுகம் மேலும் அசத்த வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Congrats karthik, very good introduction.
ReplyDeleteஇது தான் எனக்கு உங்கள் எழுத்தின் முதல் வாசிப்பு, இனிய அறிமுகம். இத்தனை நாள் படிக்காமல் போனதேயென்று நினைக்கவைத்தது.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
(காலையில் போட்ட பின்னூட்டத்தைக் காக்கா தூக்கிட்டுப் போயிருச்சா?)
தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள் நண்பரே!
ReplyDeleteஅன்பு தோழர் கார்த்திக் அவர்களே! கலக்கல் படலத்தின் அடுத்த அதிரடி இது! சிக்ஸராகப் பொழியுங்கள்! வாழ்த்துகிறேன்!
ReplyDeleteஅன்பு தோழர் கார்த்திக் அவர்களே! கலக்கல் படலத்தின் அடுத்த அதிரடி இது! சிக்ஸராகப் பொழியுங்கள்! வாழ்த்துகிறேன்!
ReplyDeleteவாழ்த்து சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி! :) தனியே பதிலிட முடியாமைக்கு வருந்துகிறேன்!
ReplyDeleteVery interesting! Congrats!
ReplyDeleteCongrats Karthik !
ReplyDeleteவாழ்த்துக்கள்! கார்த்திக்
ReplyDeleteவாழ்த்துக்கள்.கார்த்திக்
ReplyDelete