07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, April 14, 2013

நேசன், ஆசிரியர் பொறுப்பை அப்பாவி தங்கமணிக்கு தருகிறார்!

வணக்கம் வலை நண்பர்களே,
இன்றுடன் முடிகிற வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்றிருந்த நேசன் அவர்கள் தமது பணியை திறம்பட செய்து நம்மிடமிருந்து மன நிறைவுடன் விடை பெறுகிறார்.

தனிமரம் ஒரு அறிமுகம்!!!!!!!!!!, தனிமரம் சுற்றும் வேர்கள்., மரத்தில் ஏறி ஊரைச்சுற்றப்போறன்!!!!!!!, பூக்கிறதே தனிமரம்!, இசையில் ஒரு ஜீவன்., பூக்கள் எல்லாம் தத்துவம் சொல்லுதடா!!!, மரத்தில் தோன்றும் சிலைகள்....!, மரத்தின் நிழல்கள்., தனிமரம் போற்றுவோர்!, தனிமரம் சொல்லும் நன்றிச் செதுக்கல்...!!!!!! ஆகிய தலைப்புகளில் பதிவர்களை அறிமுகம் செய்து சுமார் 80 மறுமொழிகளை பெற்றுள்ளார்.

நேசனை வாழ்த்தி வழியனுப்புவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்க "அப்பாவி தங்கமணி" என்ற வலைப்பூவில் எழுதி வரும் புவனா கோவிந்த் அவர்களை அழைக்கின்றேன். கோவையில் வசிக்கும் இவர் இன்னும் சில நாட்களில் கோவையில் உள்ள ஒரு மேலாண்மை கல்லூரியில் பேராசிரியராக பணியாற்ற உள்ளார். பணியில் திறம்பட முன்னேற வாழ்த்துக்கள். 

இவரது சிறுகதை, நேசம் பவுண்டேசன் நடத்திய கேன்சர் விழிப்புணர்வு சிறுகதை போட்டியில் முதல் பரிசு ரூபாய்.5000 பெற்றுள்ளது. சமீபத்தில் தினகரன் பத்திரிகையின் வசந்தம் வார இதழில் "இணையத்தில் கலக்கும் இலக்கிய பெண்கள்" என்ற கட்டுரையில் இவரது பெயரும் இடம் பெற்று இருந்தது. மேலும் விகடன், திண்ணை, வல்லமை போன்ற இதழ்களில் இவர் எழுதிய கதைகள், கவிதைகள் வெளியாகி உள்ளன.

அப்பாவி தங்கமணி அவர்களை ஆசிரியர் பொறுப்பேற்க வாழ்த்தி வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

நல்வாழ்த்துகள் நேசன்!
நல்வாழ்த்துகள் புவனா கோவிந்த்!


நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்.

10 comments:

  1. சிறப்பாக பல தளங்களை அறிமுகம் செய்து வைத்த நேசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... நன்றிகள்...

    புவனா கோவிந்த் அவர்களை வரவேற்கிறேன்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. விடைபெற்றுச்செல்லும் வலைச்சர ஆசிரியர் அவர்களுக்கும், புதிதாகப் பதவி ஏற்கும் வலைச்சர ஆசிரியர் அவர்களுக்கும் என் இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. சென்ற வார ஆசிரியருக்குப் பாராட்டுகள்....

    இந்த வார ஆசிரியர் அப்பாவிக்கு வாழ்த்துகள். கலக்குங்க அம்மணி!

    ReplyDelete
  4. சென்ற வார ஆசிரியர் பணியாற்றிய திரு நேசன் அவர்களுக்கு சிறப்பான முறையில் பணியாற்றியதற்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

    வருக வருக அப்பாவி தங்கமணி என்னும் திருமதி புவனா கோவிந்த்!
    ஒருவாரம் நகைச்சுவை மழையில் நனையத் தயாராகிவிட்டோம்!

    ReplyDelete
  5. வரவேற்ற அனைவருக்கும் நன்றிகள் பல, இதோ துவங்குகிறேன்.நன்றிங்க தமிழ்வாசி பிரகாஷ்

    ReplyDelete
  6. வாழ்த்தி வரவேற்கிறேன்!!!

    ReplyDelete
  7. புவனா கோவிந் என்ற நல்ல பெயர் இருக்க ஏன் அப்பாவி தங்கமணி என்று யோசித்தபடி.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  8. கோவையில் வசிக்கும் இவர் இன்னும் சில நாட்களில் கோவையில் உள்ள ஒரு மேலாண்மை கல்லூரியில் பேராசிரியராக பணியாற்ற உள்ளார். பணியில் திறம்பட முன்னேற வாழ்த்துக்கள்.

    பிறந்த இடம் தேடி நட்ந்து -பற்ந்து - வந்த தென்றலுக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
  9. நல்வாழ்த்துக்கள் திருமதி புவனா கோவிந்த்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது