தங்கமணி ரங்கமணி - ஒரு ப்ளாக்மன்றம்...:)
➦➠ by:
அப்பாவி தங்கமணி
"வாவ்...சூப்பர்... ஹ ஹ ஹ... ச்சே, சான்சே இல்ல" என ரங்கமணி சிலாகிக்க
"அது என்னனு சொல்லுங்க. சான்ஸ் இருக்கா இல்லையானு நான் சொல்றேன்" என்றார் தங்கமணி
"என்ன தான் சொல்லு... எழுத்து உலகில் எங்கள அடிச்சுக்க உங்களால முடியாது"
"நான் எதுக்கு உங்கள அங்க வந்து அடிக்கணும்"
"அதான் வீட்லயே வேணுங்கற அளவுக்கு அடிக்கறேங்கறயா. நான் சொன்னது அதில்ல. எழுதறதுல ஆண் எழுத்தளர்கள அடிச்சுக்க பெண்களால முடியாதுன்னேன்"
"நெனப்பு தான்... அதெல்லாம் ஒத்துக்க மு
"நான் சொல்லி நீ எப்ப எதை ஏத்துட்டு
"ப்ரூபோட சொல்லுங்க ஒத்துக்கறேன்"
"ஒண்ணு என்ன அஞ்சே சொல்றேன்... இக்கட சூடு...."
"இக்கட மட்டுமில்ல குளோபல் வார்மிங்ல உலகமே இப்ப சூடு தான்"
"ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்பா... எப்படிம்மா உன்னால மட்டும்"
"சரி சரி ரெம்ப புகழாதீங்க... ஏதோ லிஸ்ட்னு சொன்னீங்க... ஒண்ணையும் காணோம். ஒருவேள அப்படி ஒண்ணு இல்லையோ" என கேலி செய்ய
"திஸ் இஸ் டூ மச் ஐ சே... லிஸ்ட் போடறேன் கேட்டுக்கோ"
1 .டினேஷ் பக்கங்கள் போய் பாரு... Nano Medicine பத்தி என்னமா எழுதி இருக்கார் தெரியுமா?
3. தனிமரம் வலைப்பூவில் சும்மா கலக்கிட்டு இருக்கார்
4. கோவை ஆனந்தின் பயணம் பாரு, அதுவும் இப்ப "ஹலோ நாங்களும் இஞ்சினியர் தான்"னு ஒரு சூப்பர் சுயவரலாறு எழுதிட்டு இருக்கார்... செம காமடி தெரியுமா... :)
5. "மாற்றுபார்வை" பேர்ல மட்டுமில்ல, பதிவுகளும் பெருகேத்தமாதிரி தான் இருக்கு
"இந்த லிஸ்ட் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா? இதெப்படி இருக்கு... ஹ ஹ ஹ"
"லிஸ்ட் நீங்க தான் குடுப்பீங்களா? லிஸ்ட் போடறதுல நாங்க எக்ஸ்பெர்ட் தெரியுமா?"
"ஷாப்பிங் லிஸ்ட் தானே, அது ஊருக்கே தெரியுமே"
"எல்லா லிஸ்டும் தான்... இங்க தேக்கோ"
"எங்க தேய்க்கணும்"
"அது தேக்கரதில்ல ஜென்டில்மேன்... இங்க பாருங்கனேன் ஹிந்தில"
"நமக்கு தமிழே ததிங்கதினதோம்... இதுல ஹிந்தி வேற... ஹையோ ஹையோ"
"வேண்டாம்... அப்புறம் ப்ளாக் லிஸ்ட் போடறதுக்கு பதிலா வேற லிஸ்ட் போட வேண்டி வரும்"
"சரி சரி... அதெல்லாம் பப்ளிக்ல எதுக்கு. நீ சொல்ல வந்தத சொல்லு தங்கம்"
"ம்... அந்த பயம் இருக்கட்டும். ஹியர் யு கோ"
"எங்க போகணும்" என ரங்கமணி புரியாமல் விழிக்க, தங்கமணி முறைக்க, அதன் பின் புரிந்தவராய் "ஒ... லிஸ்ட் சொல்ல போறியா. சொல்லு சொல்லு"
ஒருத்தர் இல்ல ரெண்டு பேர் இல்ல 12 பேர் சேந்து கலக்கலா எழுதிட்டு இருக்காங்க அம்மாக்களின் வலை பூக்களில், பதிவு ஒண்ணு ஒண்ணும் முத்து முத்தா இருக்குமாக்கும். இந்த வலைப்பூ பத்தி சமீபத்துல வசந்தம் வார இதழ்ல கூட எழுதி இருந்தாங்க
மஞ்சு சுபாஷிணியோட கதம்ப உணர்வுகளில் டென்சன் அலமேலுவ பத்தி படிச்சா நம்ம டென்சன் எல்லாம் காணாம போய்டுமாக்கும்
நம்ம பூவிழி பக்கம் போய் பாருங்க, MBBS படிக்காத டாக்டர் தான்
நெறய பெண்களுக்கு இன்னைக்கி இருக்கற பிரச்சன பிரசவத்துக்கு பின்ன வெயிட் போடறது தான், அதை எப்படி குறைக்கறதுனு ரஞ்சனி நாராயணன் அம்மா அழகா சொல்லி தராங்க
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... பாட்டி சொல்லும் கதைகள் கேட்டு பாருங்க, விடிய விடிய கேட்டுட்டே இருக்கலாம்
"இது வெறும் ஒரு சோற்று பதம் தான் யு சி... வேணும்னா சொல்லுங்க நூறு பக்க லிஸ்ட் ரெடி பண்ணி தரேன்"
"போதும்மா தாயே. ஆளை விடு"
"அப்படி விட முடியாது. இப்ப சொல்லுங்க, எழுத்து உலகில் யார் பெஸ்ட், மேல் ஆர் பீமேல்?" என தங்கமணி விடுவேனா என வம்பு செய்ய
ஒரு கணம் விழித்தவர், பின் சுதாரித்து சார்ஜ் இல்லாத செல்போனை காதில் வைத்தபடி "ஹலோ... யாருங்க. என்னது? நீங்க சொல்றது சரியா கேக்கல. சிக்னல் சரி இல்லைனு நினைக்கிறேன், இருங்க வெளிய வந்து பேசறேன்" என எஸ்கேப் ஆனார் ரங்கமணி
நாட்டமையின் தீர்ப்பு : ஆண்கள் எழுதறதுல பெஸ்ட்டா இல்லையாங்கறது அந்த ப்ளாக் ஆண்டவருக்கே வெளிச்சம், ஆனா பெண்கள சமாளிக்கரதுல பெஸ்டோ பெஸ்ட்...:)
|
|
பதிவு அறிமுகத்துக்கு நன்றி, புவனா.. நாட்டாமையின் தீர்ப்பை நிச்சயமா எல்லாருமே ஒத்துக்குவாங்க..
ReplyDeleteஅறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.
ReplyDeleteமாறுபட்ட முறையில் கோர்வையாக வலைச்சரத்தைத் தொடுத்துத்தந்துள்ள தங்களுக்கு நன்றிகள்.
//நாட்டமையின் தீர்ப்பு : ஆண்கள் எழுதறதுல பெஸ்ட்டா இல்லையாங்கறது அந்த ப்ளாக் ஆண்டவருக்கே வெளிச்சம், ஆனா பெண்கள சமாளிக்கரதுல பெஸ்டோ பெஸ்ட்...:)//
ReplyDeleteநல்லதொரு தீர்ப்புக்கொடுத்துள்ள நாட்டு ஆமைக்கு நன்றி. ;)))))
நல்ல அறிமுகங்கள்...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
மிகவும் அழகாக மனத்தைக் கவரும் வண்ணம் இயல்பான
ReplyDeleteநகைச்சுவையுடன் தளங்ககளை அறிமுகம் செய்த விதம்
பாராட்டுக்குரியது .வாழ்த்துக்கள் அனைவருக்கும் .மிக்க
நன்றி உங்கள் பணி மென்மேலும் சிறப்பாய்த் தொடரட்டும் .
தங்கமணி ரங்கமணி புண்ணியத்தில் இன்று பல புதிய தளங்கள் அறியக் கிடைத்தன. அறிமுகப்பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். சுவாரசியமாய் தளங்களை தொகுத்து வழங்கியமைக்கு பாராட்டுகள் புவனா.
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteதமிழ்மணம் (+1) இணைத்தாகி விட்டது....
தொடர வாழ்த்துக்கள்...
Arumayana arimugankal..keep up the great work bhuvana.
ReplyDeleteதங்கமணியும் ரங்கமணியும் இயல்பான உரையாடலின் மூலம் செய்த அறிமுகங்கள் அருமை! வலையுலக எழுத்தைப் பொறுத்த மட்டில் ஃபீமேலே மேல் என்பது என் கருத்து!
ReplyDeleteஹாஹா ஹாஹா....
ReplyDeleteஎல்லோரும் எல்லாரையும் அடிச்சுக்கணுமா இப்போ:-))))
அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.
ReplyDeleteVetha.Elangathilakam.
அருமையான அறிமுகங்கள் புவனா. தொடருங்க..
ReplyDeleteஅழகான அருமையான அறிமுகம்.பாட்டியையும் நினைவில் வைத்துச் சொன்னதற்கு மிக்க நன்றி.
ReplyDeleteவலைசரத்தில் அறிமுகம் கொடுத்தற்கு நன்றி அதுவும் பஞ்சோட எல்லா அறிமுகங்களும் நகைசுவையுடன் நன்றி வாழ்த்துகள் ஆனாலும் நீங்க இப்படி அப்பாவியாக இருக்க கூடாது
ReplyDeleteவித்தியாசமான அறிமுகம்.அறிமுகத்திற்கு நன்றி
ReplyDeleteஅன்பு புவனா,
ReplyDeleteஎன்னுடைய பதிவை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.
தாமதமாக வந்து நன்றி கூறுவதற்கு மன்னிக்கவும்.
என் அருமைத் தோழி திருமதி ருக்மிணி சேஷசாயி யும் என்னுடன் அறிமுகம் ஆகியிருப்பது சந்தோஷமாக இருக்கிறது.
என்னுடைய பக்கத்திற்கு வந்து தகவல் சொல்லிப் போனதற்கு இன்னொரு ஸ்பெஷல் நன்றி!
நகைச்சுவையுடன் உங்கள் அறிமுகம் நன்றாக இருக்கிறது.
தொடருங்கள். வாழ்த்துகள்!
அருமையான அறிமுகங்கள். சிலர் எனக்குப் புதியவர்கள்.
ReplyDeleteஅறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.
அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்..
ReplyDeleteநகைச்சுவையுணர்வுடன் பதிவாளர்கள் பற்றிய அறிமுகம் தந்த உங்களின் ஆசிரியர் பணிக்கு முதலில் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஒவ்வொரு பதிவாளரும் பதிவாளினிகளும் சளைத்தவர்கள் அல்ல என்பதே என் கருத்து நாட்டாமை:)))))
ReplyDeleteதாமதமான வருகைக்கு மன்னிக்கவும் வசந்தகாலம் வேலை அதிகம் தாங்கள் அறியாத விடயம் இல்லை வெளிநாட்டு வாழ்வில்! ஏதோ ஒரு ஆர்வத்தில் இந்த வலையில் வலம் வருகின்றேன் தனிமரம் என்னையும் இந்த வலைச்சர மகுடத்தில் ஏற்றிய தங்களின் அன்புக்கு நன்றிகள் பலகோடி ஐயா. தொடரட்டும் சிறப்பாக உங்கள் பணி!
ReplyDeleteநாட்டாமை தீர்ப்புதான் பெஸ்டோ பெஸ்ட்!
ReplyDelete@ To all - தாமதமான மறுமொழிக்கு மன்னிக்கவும்... கொஞ்சம் பிஸி
ReplyDelete@ கோவை ஆவி - நன்றிங்க ஆனந்த்...:)
@ வை.கோபாலகிருஷ்ணன் - நன்றிங்க சார்
@ சே. குமார் - நன்றிங்க குமார்
@ அம்பாளடியாள் - ரெம்ப நன்றிங்க
@ கீதமஞ்சரி - ரெம்ப நன்றிங்க கீதா
@ திண்டுக்கல் தனபாலன் - நன்றிங்க... தமிழ்மணத்தில் இணைத்ததற்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்
@ Nithu Bala - தேங்க்ஸ் நித்து
@ பால கணேஷ் - ஹ ஹ... நன்றிங்க
@ துளசி கோபால் - அப்படி தான் சொல்றாங்க டீச்சர்... இதை சொன்னதுக்கு நீங்க என்னை அடிச்சுட மாட்டீங்களே ...:)
@ kovaikkavi - நன்றிங்க
@ Asiya Omar - நன்றிங்க ஆசியா
@ Rukmani Seshasayee - நன்றிங்கம்மா
@ poovizi - நன்றிங்க... நீங்களாச்சும் அப்பாவினு ஒத்துக்கிட்டீங்களே...:)
@ S.டினேஷ்சாந்த் - நன்றிங்க
@ Ranjani Narayanan - ரெம்ப நன்றிங்க
@ வெங்கட் நாகராஜ் - நன்றி ப்ரதர்
@ இராஜராஜேஸ்வரி - நன்றிங்கம்மா
@ தனிமரம் - ரெம்ப நன்றிங்க
@ Vasudevan Tirumurti - தேங்க்ஸ் திவாண்ணா...:)