மலையும் மலைசார்ந்தும்...
➦➠ by:
கிரேஸ்
" மால் வரை இழிதரும் தூ வெள் அருவி
கல் முகைத் ததும்பும் பன் மலர்ச் சாரல்
சிறு குடிக் குறவன் பெருந்தோள் குறுமகள்
கல் முகைத் ததும்பும் பன் மலர்ச் சாரல்
சிறு குடிக் குறவன் பெருந்தோள் குறுமகள்
குறிஞ்சித் திணையில் கபிலரால் பாடப்பெற்ற மலையின் அழகைக் கண் முன் கொண்டு வரும் இந்தப் பாடலுடன் வலைச்சர நண்பர்களுக்கு வணக்கம்!
இப்பாடலின் பொருள்: விண்ணைத்தொடும் மலையிலிருந்து குதித்து ஓடும் வெண் முத்தைப் போன்ற தூய அருவி கற்குகைகளில் எதிரொலிக்கும் பல மலர்கள் மலர்ந்திருக்கும் மலைச் சாரலில் வசிக்கும் அகன்ற தோள்களையுடைய குறவனின் இளம் மகள் , நீரைப் போன்ற மென்மையான சாயல் உடையவள், நெருப்பைப் போன்ற என் குணத்தை அணைத்துவிட்டாளே! என்று தன் மனதை ஈர்த்தப் பெண்ணைப் பற்றி த் தலைவன் தோழனிடம் சொல்வதாக அமைந்துள்ள குறுந்தொகைப் பாடல்(எண்: 95).

என்னால் இயன்ற வரை இந்த வகையிலானப் பதிவுகளைத் தேடித் பகிர்கிறேன். தேர்ந்தெடுத்த வலைப்பூக்களில் இருந்து எனக்குப் பிடித்த வேறு சில பதிவுகளையும் பகிர்கிறேன்.
1. பல இனியக் காதல் கவிதைகள் எழுதியுள்ளார், புரியாத வாழ்க்கைக்குள், புதைந்து கிடைக்கும் அன்பின் புதையலை, அன்போடு அனுபவிப்பவள் என்று சொல்லும் ரேவா.
தலைவனை நினைத்து தலைவி பாடும் பாடலோ எனக்குள் தான் நீ என்ற கவிதை, 'யாயும் ஞாயும் யாராகியரோ' என்றக் குறிஞ்சிப் பாடலை நினைவு படுத்தியது. சின்ன சின்னதாய் காதல் என்ற தலைப்பில் சில பதிவுகள் பாருங்கள்..அருமை! படங்கள் எங்கிருந்துதான் சரியாகக் கிடைக்கிறதோ இவருக்கு!!
மனதைத் தொட்டு உண்மைச்சூடு போடும் ஒரு பகிர்வு எதற்கு இந்த விலை.
2. வழக்கம் போல் என்ற தலைப்பில் வலைப்பூ எழுதிவரும் சதங்கா குழந்தைகளுக்காக எழுதிய யானைப் பாடல் அருமை. இவரின் 'எங்கும் எதிலும் கலாம்' என்ற பதிவில் நம் வாழ்வில் 'கலாம்' எப்படி இணைந்திருக்கிறார் என்று சொல்கிறார் பாருங்கள்.
இவரின் வாக்கினிலே இனிமை வேண்டும் அழகான படத்துடன் நல்ல கருத்தைக் கூறுகிறது.
புவி நாள் இந்தத் திங்களில் வருவதால் இதனைப் பகிர்வது பொருத்தமாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.
சதங்கா எழுதும் மற்றுமொரு வலைப்பூ சித்திரம் பேசுதடி. அதில் இருந்து யானைப் படம் உங்களுக்காக!
3. காதலி காதலை ஏற்றவுடன் காதலனுக்கு சுற்றுப்புறம் எப்படித் தோன்றுகிறது என்பதை பச்சைக்குள்ளொரு பச்சை என்ற கவிதையில் அழகாகச் சொல்லியிருக்கிறார் திரு.ச.முத்துவேல் தூறல் கவிதை என்ற தன் வலைப்பூவில்.
4. திரு.மாடசாமி ராஜாமணி அவர்களின் வானவில் தளத்தில் காதல் கிறுக்கல் என்ற கவிதை தலைவனும் தலைவியும் பார்த்ததால் ஏற்பட்ட அலரைச் சொல்கிறதோ என்று நினைக்கிறேன். யோசிக்கவேண்டிய ஒரு கட்டுரை அறநெறிகளைப் பின்பற்றுகிறதா பள்ளிக்கூடங்கள்?
5. டைரிக் கிறுக்கல்கள் என்ற தேனம்மை லக்ஷ்மணன் அவர்களின் தளத்தில்
மலையரசி என்றக் கவிதை மலையின் அழகை, அதனைக்காக்க வேண்டியதை அழகாகச் சொல்கிறது. இவரின் அங்குசம் என்ற கவிதை அருமையாக உண்மை பேசுகிறது. ஈசல் மேகங்கள் வித்தியாசமான கவிதை.
6. இயற்கைமகள் என்று சொல்லும் ராஜியின் இதயப்பூக்கள் அன்பாக மணம் வீசுகின்றன. சமுதாயத்தின் நிலையைச் சொல்கிறது நாங்கள் மனிதர்கள் என்றக் கவிதை.
இவரின் காதல் கவிதை ஒன்று ஏனோ..என்ன..எதற்கு. இவர் வழக்கொழிந்த தமிழ் சொற்களையும் பட்டியலிடுகிறார்.
7. மழையில் நனையும் ஆசை பல பேருக்கு உண்டு, ஆனால் அதை கவிதையாக்கிவிட்டார், என்னவனும் நானும் மழையும் என்று. மழை மலையில் பெய்யும், காட்டில் பெய்யும், எல்லாவிடத்திலும் பெய்யும், இவரின் மனத்திலும், புரிந்துகொள்ள சாரல்கள் வாசிக்கவும். இந்த அழகிய கவிதைகளை ஆழிமழை என்ற தளத்தில் படைத்த இவர் இன்னும் நிறைய எழுதவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
8. இன்று பூமி எங்கும் மாசு ஏற்படுத்தி மலைகளையும் காடுகளையும் அழித்துக் கொண்டிருக்கும் நமக்கு இந்த செய்தி மிகவும் அவசியம். அதாங்க..பிளாஸ்டிக் பயன்படுத்தாதிங்க...பூவிழி அவர்களின் இந்த குப்பையும் கோபுரம் ஆகுதாம் என்ற பதிவைப் பாருங்கள். அட, மழை வருமான்னு நத்தை சொல்லுமா? இதை நான் இங்கு பகிர்கிறேன்..நட்புகளே தயவு செய்து அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.. அண்டிபயொடிக் சாப்பிட்டால் வைரஸ் சாகுமா?
9. டினேஷ் பக்கங்கள் என்ற வலைப்பூவை எழுதி வரும் நண்பர் பதிவு செய்திருக்கும் பின்னவலவு பயணக் கட்டுரையில் யானை இலத்தியில் இருந்து காகிதம் செய்வதாகத் தகவல் சொல்கிறார். அழகியப் படங்கள் உள்ள பதிவு. ஆறு இவ்வளவு வண்ணமயமாக இருக்குமா....நீரில் ஒரு வானவில் பதிவைப் பாருங்கள். காதலர்களுக்காக சுரங்கப் பாதையா..இரகசியமாய்ச் சந்திக்கும் குறிஞ்சிக் காதலர்களுக்கு ஏற்றது போல! மலையும் மலை சார்ந்தும் என்று நான் தேடிக் கொண்டிருக்க இவர் மருத்துவமும் மருத்துவம் சார்ந்தும் என்று எழுதியிருக்கும் காதல் கவிதையைப் பாருங்கள்!!
இந்தப் பதிவுகள் உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன்!
நாளை மீண்டும் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்!
நட்புடன் ,
கிரேஸ்
தேன் மதுரத் தமிழோசை உலகமெல்லாம் முழங்கிடச் செய்வோம்!

|
|
பலர் எனக்குப் புதியவர்கள். மாலை வந்து ஒவ்வொன்றாய் படிக்கிறேன்.
ReplyDeleteமகிழ்ச்சி! நன்றி திரு.வெங்கட் நாகராஜ்!
ReplyDeleteபலர் புதியவர்கள்... அறிமுகத்திற்கு நன்றி கிரேஸ்...
ReplyDeleteமகிழ்ச்சி தியானா! கருத்துரைக்கு நன்றி!
ReplyDeleteபல புதிய தளங்கள். அழகாக தொகுத்து வழங்கி இருக்கீங்க கிரேஸ். நன்றி :)
ReplyDeleteநன்றி ஸ்ரீனி!
ReplyDeleteகுறிஞ்சி மலரே நின்
ReplyDeleteவிரிந்த அழகை வர்ணிப்பதற்கே
க்ரேஸை அனுப்பி உள்ளாயோ !!
இதயப்பூக்களைக் காணச்சென்றேன்.
என்ன அழகான பதிவுகள் !!
மற்ற வலைகளில் சில நானறியேன்.
கண்டறிவேன்.
துவக்கம் இன்டீட் க்ரேஸ்ஃபுல்.
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in
//குறிஞ்சி மலரே நின்
ReplyDeleteவிரிந்த அழகை வர்ணிப்பதற்கே
க்ரேஸை அனுப்பி உள்ளாயோ !!//
மகிழ்ச்சி சுப்பு தாத்தா அவர்களே! மிக்க நன்றி!
ஆமாம் அருமையான தளங்கள்..
பாராட்டுக்கு மீண்டும் நன்றி!
அழகான அறிமுகத்துக்கு நன்றி க்ரேஸ்.:)
ReplyDeleteநன்றி தனபாலன் சார் & சீனா சார் & வலைச்சரம். :)
எனது வானவில் தளத்தை அறிமுகப்படுத்தியதர்க்கு மிக்கநன்றி ! எனது கவிதைக்கு கிடைத்த அங்கீகாரமாக எடுத்து கொள்கிறேன் !
ReplyDeleteபல புதிய தளங்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி
ReplyDelete8.15 am : இன்றைய சரம் வெளியானவுடன், அறிமுக தளங்களுக்கு சென்று விட்டு இங்கு வந்தால்... இந்தப் பதிவே தளத்தில் இல்லை... மின்சாரமும் போய் விட்டது...
ReplyDelete11.30 am : இப்போது வந்து பார்த்த போது தான் சந்தோசம்... அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்... நன்றிகள் பல...
பாடல் வரிகளை ரசிக்க... நண்பர்களை அன்போடு அழைக்கிறேன்...
ReplyDeleteClick here
மிக்க நன்றி சகோ, என் பதிவுகளை திரும்பி பார்த்தலுக்கு எனக்கொரு வாய்ப்பு கொடுத்ததிற்கு... ஏனைய பதிவர்களுக்கும் வாழ்த்துகள்... சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களில் சுட்டிக்காட்டலில் வந்தேன் அவருக்கும் நன்றிகள்
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள் வாழ்த்துக்கள் நன்றிங்க.
ReplyDeleteஅறிமுகங்கள் அருமை. அறிவித்த உங்களுக்கும் அறிமுகப்பூக்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்!
ReplyDeleteஆமாம் திரு.தனபாலன் ஐயா, வெளியிட்டு சிறுது நேரத்தில் பதிவைக் காணவில்லை..என்ன ஆனதோத் தெரியவில்லை. நல்ல வேலையாகப் பார்த்தேன்...மீண்டும் வெளியிட்டேன்.. திரு.வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரை அழிந்திருக்குமோ என்று நினைத்தால் நல்ல வேலை அதுவும் இருந்தது..
ReplyDeleteநன்றி!
வாழ்த்துக்கு நன்றி இளமதி!
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றிங்க சசிகலா!
ReplyDeleteதோழி கிரேஸ் என் தளத்தை ஆராய்ந்து கொடுத்த அறிமுகத்திற்கு நன்றி
ReplyDeleteஎன்னை மேலும் வளர்த்துகொள்ள தூண்டுகிறது வலைச்சரம் அதற்கும் நன்றி
அறியாதவர்களின் அறிமுகத்தை கண்டேன் அதற்கும் நன்றி
அறிமுகங்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅறிமுகங்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்!
ReplyDeleteபல இனிய அறிமுகங்களைத் தந்துள்ளீர்கள். வாழ்த்துகள்.
ReplyDelete