வலைச்சர நண்பர்களுக்கு வணக்கம்!
➦➠ by:
கிரேஸ்
அசைவளி கொணர்ந்த அதிரல் நறுமணம்
எழிலி கண்டுவிரிந்த மஞ்ஞை தோகை
பெரும்பெயல் பொழிந்து குளிர்ந்த மாடம்
இவற்றினும் மேலாக உள்ளம் உகள
தமிழே நீ வேண்டும் என்பதே என் நசை!
என் வலைப்பூவிலிருந்து தமிழ் காதல் என்ற இந்தக் கவிதையுடன் வலைச்சரப் பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் என் பணிவான வணக்கம்!
என்னை வலைச்சர ஆசிரியராக அழைத்த திரு.சீனா ஐயாவிற்கு முதற்கண் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வலைச்சரப் பதிவர்கள் அனைவரையும் இங்கு சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பலரும் இனிதாய்த் தொடுத்த இந்த வலைச்சரத்தின் அழகு குறையாமல் நானும் சிறிது தொடுக்க முயற்சிக்கிறேன்.
கணினிப் பொறியாளராய் சிறுது காலம் செக்கிழுத்துவிட்டு பின்னர் குடும்பத் தலைவியாய் வாழ்வை ரசிக்கும் சாதாரணப் பெண் நான்.
என் கற்பனைகளையும் எண்ணங்களையும் ஒரு வலைப்பதிவில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருந்தேன். தமிழில் நிறைய எழுதவேண்டும் என்ற உந்துதல் உயிர்த்தது. அதனைத் தனியாக ஒரு தமிழ் வலைப்பதிவில் செய்யலாம் என்று முடிவு செய்தேன். நல்ல தமிழ் பெயராகச் சூட்டித் துவங்கவேண்டும் என்னும் ஆசையில் பல திங்கள் ஓடியது.
அப்பொழுது,
தமிழ் தேனினும் இனியதன்றோ?
தமிழ் மதுரத்திற்கு ஈடு உண்டோ?
இந்த இனிமை அனைவருக்காகவும் அன்றோ?
இப்படிச் சிந்தித்த நேரத்தில்
மனதில் ஒரு குரல் சொன்னது
இதைத்தானே மகாகவி பாரதி சொன்னார்
'தேன் மதுரத் தமிழோசை உலகமெல்லாம்
பரவிடச் செய்தல் வேண்டும்' என்று!
மேலும், என் ஊர் மதுரை!
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை!
அட! அருமை! இதுவும் இணைந்துள்ளதே
என்னே ஒரு பொருத்தமான பெயர்!
இவ்வாறாக மலர்ந்தது என் வலைப்பூ
"தேன் மதுரத் தமிழ்"!
பின்னர் ஒரு நாள் என் நெருங்கியத் தோழி என் வலைப்பூவை தமிழ்மணத்தில் இணைக்க வழிகாட்டினாள். அங்கு இணைந்தபின்னர் தான் தெரிந்தது எத்தனை வலைப்பூக்கள் தமிழ் பேசுகின்றன என்று. பின்னர் முந்தைய ஆசிரியர்கள் சிலரால் அறிமுகப்படுத்தப்பட்டு வலைச்சரத்தில் இணைந்தேன். இவ்வாறாக வலைச்சரத்தில் சேர்ந்து இன்று ஆசிரியப் பணி ஏற்றுள்ளேன்.
என்னுடைய பதிவுகளில் இருந்து சிலவற்றை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் அளவில்லா உவகை அடைகிறேன்.
தமிழ் மீதான என் காதலைச் சொல்லும் பதிவுகளில் சில:
இன் உயிர் தமிழ் அன்றோ
என் தமிழை உலகமே கேள்!
தாய்மை மற்றும் குழந்தைச் செல்வம் பற்றிய பதிவுகளில் இருந்து,
இனிமையினும் இனிமை
தாய் என்று ஆகும் வரை
இயற்கை பற்றிய சில கவிதைகள்,
ஆறு பேசுகிறேன்
மேகம்
கடற்கரை
காதல் கவிதைகள் சில:
தலைவன் தலைவி பாகற்காய்
பொன்றாக் காதல்
சிறுவர்களுக்கு,
ஆத்திச்சூடி கதைகள்
எண்கள் பாட்டு
உயிர் எழுத்துக்கள்
இன்னும் சில,
முல்லைப்பாட்டு முன்வைக்கும் மன்னன் மனம்
சுதந்திர தினம்
தமிழ் தாத்தாவுக்கு நினைவாஞ்சலி
நீந்தப் பிடிக்காதவன்
சம்மட்டி அடி
இங்கு குறிப்பிட்ட என் பதிவுகள் உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன். நாளை மீண்டும் உங்களை சந்திக்கிறேன்.
நட்புடன் ,
கிரேஸ்
தேன் மதுரத் தமிழோசை உலகமெல்லாம் முழங்கிடச் செய்வோம்!
|
|
அழகான தொடக்கம் கிரேஸ். அடுத்து வரும் உங்கள் பதிவுகளுக்காக ஆவலோடு காத்து கொண்டு இருக்கிறேன் :-)
ReplyDeleteதேன் மதுரத் தமிழோசை உலகமெல்லாம் முழங்கிடச் செய்வோம்!
ReplyDeleteவலைச்சர வருகைக்கும்
அருமையான அறிமுகங்களுக்கும் வாழ்த்துகள்..!
தோழி கிரேஸ் வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கும் ,தேனினும் இனிமையான தமிழ் கொண்டு நடத்திட வாழ்த்துகள்
ReplyDeleteமிக அருமையான பகிர்வுகள்.வாழ்த்துக்கள்.தொடருங்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteஅறிமுகம் நல்லா இருக்கு. வந்து பார்க்கிறேன். பகிர்வுக்கும், வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துகள் கிரேஸ்!!!
ReplyDeleteவலைச்சரம் ஆசிரியை பணி பொறுப்பேற்றுள்ள சகோதரி கிரேஸ் பிரதீபா ( தேன் மதுரத் தமிழ்! ( http://thaenmaduratamil.blogspot.in ) அவர்களுக்கு எனது உளங்கனிந்த வாழ்த்துக்கள்!
ReplyDeleteஉங்களைப்பற்றிய சீனா ஐயா அவர்களின் அறிமுகத்தையும் வாசித்தேன்...
ReplyDeleteசுய அறிமுகமும் நன்று... வாழ்த்துக்கள்...
தோழி கிரேஸ் வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்மைக்கும் உங்களின் பதிவுகளின் பகிர்தலுக்கும் வாழ்த்துக்கள்! தொடரட்டும் உங்கள் பணி!
ReplyDeleteநான் இன்றுதான் இந்த தளத்திற்கு வரும் பாக்கியம் கிட்டியது... இந்த வலைப்பக்கத்தை எனக்கு அறிமுகப்படுத்தியவருக்கு எனது நன்றிகள்.. நான் வந்த நேரம் இந்த வலைப்பக்கத்திற்கு புது ஆசிரியர்.. நான் அதிர்ஸ்டசாலி என்று நினைக்கிறேன்..
ReplyDeleteவாழ்த்துக்கள் புது ஆசிரியர் கிரேஸ் மற்றும்
நான் கார்த்திகேயன்ஹிஹிஹி
வணக்கம்
ReplyDeleteநல்ல சுய அறிமுகம் வலைச்சரப் பொறுப்பு ஏற்றிருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன் இந்த வாரம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள் பதிவுகளை தொடருகிறேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ஸ்ரீனி!
ReplyDeleteநன்றி இராஜராஜேஸ்வரி அவர்களே!
நன்றி பூவிழி அவர்களே!
நன்றி திரு.ஆசிய ஓமர்!
நன்றி திரு.பிரேம்!
நன்றி பூந்தளிர், வாங்க வாங்க..மகிழ்ச்சி!
நன்றி தியானா!
நன்றி திரு.தி.தமிழ் இளங்கோ!
நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்!
நன்றி இளமதி!
நன்றி திரு.கார்த்திகேயன்! உங்களை வலைச்சரத்திற்கு மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.
நன்றி திரு.ரூபன்!
இனிய தமிழ் நடை இனிக்கிறது
ReplyDeleteநன்றி திரு.ஜீவலிங்கம் காசிராஜலிங்கம் அவர்களே!
ReplyDelete// என் ஊர் மதுரை!
ReplyDeleteசங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை!// இத மட்டும் மதுரைமக்கள் யாரும் எழுதாதீர்கள் முதலில் வாய் திறந்து தமிழை தமிழ் என்று திருந்த சொல்லுங்கள் தமில் என்று உச்சரிக்காதீர்கள்.
ReplyDeleteஇனிது இனிது தமிழ் இனிது உங்கள் தமிழ் இனிது வாழ்த்துக்கள்
This comment has been removed by the author.
ReplyDelete@புரட்சி தமிழன்... பொது வலைதளத்தில் எப்படி எழுதுவது என்று கற்று கொண்டால் நல்லது. தமிழ் மீது அதிக பாசம் கொண்ட ஊர்களில் ஒன்றாக இருக்கிறது மதுரை என்பது நாடறிந்த விடயம். மற்றவர்களை ஊக்கப்படுத்தவில்லை என்றாலும் மட்டம் தட்டாதீங்க.
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் சீனா ஐயா இதை கவனித்தால் நல்லது
யாரையும் மட்டம் தட்டவேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல மிக நீண்ட நாட்களாக என் மனதில் தோண்றிய கேள்வி மதுரையில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்தேன் என்கிறார்களே அப்படி வளர்த்தவர்கள் எல்லாம் ஆங்கிலேயர்களோ தமிழுக்கு பதிலாக தமில் வளர்த்துள்ளார்கள் ழ என்ற எழுத்துதான் தமிழின் தனி சிறப்பு என்று சொல்லும்போது தமிழ் ஆர்வளர்கள் பள்ளிகளுக்கு சென்று மதுரை மாவட்டத்தில் உள்ள தமிழ் ஆசிரியர்களுக்கு தமிழ் கற்றுக்கொடுக்கலாம் என்பது எனது கருத்து. இதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள் கேட்கவேண்டும் என்று மனதில் தோன்றியது கேட்டேன் இது யாரையும் புன்படுத்தவேண்டும் என்ற நோக்கம் அல்ல.
ReplyDeleteஉங்களுக்கு மதுரை மீதும் மதுரை மக்கள் மீதும் என்ன வெறுப்போ தெரியவில்லை. இன்றைய சூழலில் தமிழை தமில் என்று சொல்பவர்கள் எல்லா ஊர்களிலும் இருக்க தான் செய்கிறார்கள். அவர்கள் மதுரையில் மட்டும் தான் இருக்கிறார்கள் என்பதை போல பேசுவது முற்றிலும் ஏற்று கொள்ள முடியாத வாதம். இது இடம் சார்ந்த பிரச்னை அல்ல, மனம் சார்ந்த பிரச்னை.
ReplyDeleteதமிழால் இணைந்த வந்த இடத்தில் இப்படி பிரித்து பார்ப்பது சரியல்ல.
அன்பின் புரட்சி தமிழன் ( புரட்சித் தமிழன் என்று எழுத வேண்டாமா ? )
ReplyDeleteமதுரை மக்களின் மீது என்ன கோபமோ ? மதுரை மக்கள அனைவரையும் தமில் என்று உச்சரிப்பவர்கள் என்றும், மதுரை மாவட்டத்தில் பணியாற்றும் தமிழ் ஆசிரியர்கள் அனைவரும் தமில் என உச்சரிக்கிறார்கள் எனவும், அவர்களுக்கு தமிழ் ஆர்வளர்கள் ( ஆர்வலர்கள் என் எழுத வேண்டாமா ? ) சென்று தமிழ் கற்றுக் கொடுக்கலாம் என்ற பொதுவான கருத்தினை இங்கு பொது வெளியில் கூறுவது தவறல்லவா ?
தட்டச்சுப் பிழைகள் இங்கும் அங்குமாக அனுமதிக்கப் படலாம் - அப்படி இல்லை எனில் தங்களுக்கும் .........................
மேலும் தங்களின் கருத்தினை வெளிப்ப்டுத்த இது சரியான் இடம் இல்லை.
யாரையும் புண் படுத்த வேண்டும் என்பது தங்கள் நோக்கமில்லை என்று கூறியது மகிழ்ச்சியைத் தருகிறது. இருப்பினும் மதுரை மக்கள் மனம் புண்படுமே என்றும் சற்றே சிந்தித்திருக்கலாமே !
சிரினி அவர்கள் என் கவனத்திற்குக் கொண்டு வந்ததால் இம்மறுமொழி.
சாதாரணமாக இப்படிப்பட்ட மறுமொழிகளை நாங்கள் வெளிப்ப்டுத்துவதில்லை.
தமிழ் வளர்க்க வேண்டும் என்ற தங்களின் ஆர்வம் பாராட்டுக்குரியது. அப்படி என்றால் நாளும் நல்ல தமிழ்ச் சொற்களை நம்மால் இயன்ற இடங்களீலெல்லாம் பயன் படுத்தியும், இயன்ற வரை பயன் படுத்த்ச் செய்தாலே தமிழ் தானாக வளர்ந்து விடும் என்பது என் எண்ணம்.
அதற்குப் பலர் வாய்ப்புத் தராமல் இருப்பதே தமிழ் வளர்ச்சிக்குத் தடையாய் இருக்கிறது.
இம்மறுமொழி வலைச்சர பொறுப்பாசிரியர் என்ற முறையில் வெளியிடப் ப்டுகிறது
தாங்கள் மதுரையா !
நல்வாழ்த்துகள் புரட்சி தமிழ்ன்
நட்புடன் சீனா
அய்யா மன்னிக்கவும் இதனை சாதாரன படிக்காத மக்கள் பேசும்போது உச்சரிப்பது தவறு இல்லை பி இ படித்த எஞ்சினியர்கள் எல்லாம் கூட இப்படித்தான் பேச்சுவழக்கில் உச்சரிக்கிறார்கள். எனக்கு மதுரைமீதெல்லாம் எந்த கோபமும் இல்லை தமிழ் நாட்டிலேயே பசி என்று செல்வோருக்கு 24 மனி நேரமும் ருசியாக சாப்பாடுபோடும் ஊர் மதுரை நான் மதுரை தபால் தந்தி நகரிலே 2004முதல் 2007 வரை 3 ஆண்டுகள் இருந்திருக்கிறேன் அங்குள்ள குக்கிரமங்களுக்கெல்லாம் சென்று பி எஸ் என் எல் மொபைல் டவருக்கான கருவிகளை பொருத்தியிருக்கிறேன் நான் எதையும் மேலோட்டமாக பார்த்து கருத்து சொல்வதில்லை. ஒரு சில வட மாவட்டங்களில் தமிய், தமிய் ஈயம் என்றெல்லாம் . பேச்சு வழக்கில் உச்சரிக்கிறார்கள், எழுதுவதில் எழுத்து பிழை இருப்பதெல்லாம் நான் யாரையும் சொல்லவில்லை சங்கம் வைத்து தமிழ் வளர்த்தஊர் என்று சொல்வதால்தான் என் மனதில் இந்த கேள்வி தோன்றியது கேட்டேன் நான் என் நன்பர்களிடம் இதை பற்றி பலமுறை விவாதித்திருக்கிறேன் அவர்கள் சொன்னதுதான் பள்ளியில் தமிழ் ஆசிரியரும் இப்படித்தான் உச்சரிப்பார்கள் என்ற தகவல். நல்வாழ்த்துக்கள் சீனா ஐய்யா. நன்றி!.
ReplyDeleteவணக்கம் புரட்சித் தமிழன் அவர்களே!
ReplyDeleteஆமாம், தமிழைத் தமிழ் என்று தான் உச்சரிக்க வேண்டும், தமில் என்று சொன்னால் சினம் தான் வருகிறது. 'தமில்' என்று அனைத்து ஊர்களிலும் சொல்லத்தான் செய்கிறார்கள். தமிழர் அனைவரும் சரியாக உச்சரிக்க வேண்டும்.
//சங்கம் வைத்து தமிழ் வளர்த்தேன் என்கிறார்களே அப்படி வளர்த்தவர்கள் எல்லாம் ஆங்கிலேயர்களோ // - ஆங்கிலேயர் வருவதற்குப் பற்பல ஆயிரம் ஆண்டுகள் முன்னரே நம் முன்னோர் சங்கம் வைத்து தமிழ் வளர்த்தனர் என்ற தகவலைச் சொல்ல ஆசைப்படுகிறேன்.
//இதனை சாதாரன படிக்காத மக்கள் பேசும்போது உச்சரிப்பது தவறு இல்லை பி இ படித்த எஞ்சினியர்கள் எல்லாம் கூட இப்படித்தான் பேச்சுவழக்கில் உச்சரிக்கிறார்கள்// - படிப்பிற்கும் தாய் மொழி உச்சரிப்புக்கும் சம்பந்தம் இல்லை என்பது என் கருத்து. சாதாரண மக்களோ அறிஞரோ, அனைவரும் தாய் மொழியைச் சரியாகவே உச்சரிக்க வேண்டும்.
மதிப்பிற்குரிய சீனா ஐயா அவர்கள் சொன்னது போலப் பொதுவாகக் குறை கூறி விட முடியாது.
//சங்கம் வைத்து தமிழ் வளர்த்தஊர் என்று சொல்வதால்தான் என் மனதில் இந்த கேள்வி தோன்றியது கேட்டேன் //
// என் ஊர் மதுரை!
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை! இத மட்டும் மதுரைமக்கள் யாரும் எழுதாதீர்கள் / /
இந்த இரண்டுக்கும் சேர்த்து என் கருத்து: சொன்னாலும் சொல்லாவிட்டாலும் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த ஊர் தான் மதுரை. இன்றைய தலைமுறையினர் சிலர் தவறு செய்வதால் நம் முன்னோரின் மகிமையை நாம் மறக்க முடியாது அல்லவா? அதனால் அந்த ஆணித்தரமான உண்மையை நான் எழுதுவதிலும் சொல்வதிலும் எனக்குப் பெருமையே!
ஊரின் பெயரால் பிரியாமல் தமிழர் என்று இணைந்து பெருமை கொள்வோம்!
நல்வாழ்த்துக்கள்!
அழகாக மறுமொழியிட்ட சீனி ஐயா அவர்களுக்கும் ஸ்ரீனிக்கும் நன்றி!
ReplyDelete//இனிது இனிது தமிழ் இனிது உங்கள் தமிழ் இனிது வாழ்த்துக்கள்//
ReplyDeleteமிக்க நன்றி திரு. பாலசுப்ரமணியன் அவர்களே!