”நண்பர்கள் ராஜ்” இடம் இருந்து கார்த்திக் சோமலிங்கா பொறுப்பினை ஏற்கிறார்.
அன்பின் சக பதிவர்களே
இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற “நண்பர்கள் ராஜ்” தான் ஏற்ற பொறுப்பினை மிகுந்த ஈடுபாட்டுடனும் ஆர்வத்துடனும் நிறைவேற்றி - நம்மிடமிருந்து மனநிறைவுடன் விடை பெறுகிறார்.
இவர் இந்த வாரத்தில் சுய அறிமுகம், யூத் பதிவர்கள், பெண்கள், அதிரடி மன்னர்கள், வியக்க வைக்கும் பதிவர்கள், என்னமா எழுதுறாங்க, நன்றி நவிலல் என்ற ஏழு தலைப்புகளில் பதிவுகள் இட்டுள்ளார். பெற்ற மறுமொழிகளோ நூற்றி எண்பத்தேழு. அறிமுகப் படுத்தப் பட்ட பதிவர்களோ முப்பத்தேழு. அறிமுகப் படுத்தப் பட்ட பதிவுகளோ 40.
“நண்பர்கள் ராஜ்” - வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.
நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் பெங்களூரினைச் சார்ந்த நண்பர் கார்த்திக் சோமலிங்கா.
பெங்களூரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனமொன்றில் பணி புரிந்து வரும் கார்த்திக் கடந்த ஓராண்டாக bladepedia.com என்ற வலைப்பூவை நடத்தி வருகிறார். காமிக்ஸ் மீது இருக்கும் அளவற்ற ஈடுபாடால், தனது வலைப்பூவில் தமிழில் வெளி வரும் காமிக்ஸ் இதழ்கள் பற்றி தொடர்ந்து எழுதி வருகிறார். காமிக்ஸ் என்பது குழந்தைகளுக்கானது என்ற பொதுவான / தவறான எண்ணத்தை மாற்றி, காமிக்ஸ் குறித்த விழிப்புணர்ச்சி ஏற்பட தனது வலைப்பூ மிகச் சிறிதளவேனும் உதவியாய் இருந்தால் அது தனக்கு மிகுந்த மனநிறைவைத் தரும் என்று குறிப்பிடுகிறார் கார்த்திக்.
நணபர் கார்த்திக்கினை வருக ! வருக என வரவேற்று வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
நல்வாழ்த்துகள் “ந்ண்பர்கள் ராஜ்”
நல்வாழ்த்துகள் கார்த்திக் சோமலிங்கா
நட்புடன் சீனா
|
|
சோதனை மறுமொழி
ReplyDeleteசிறப்பாக ஆசிரியர் பணியை முடித்த கே.எஸ்.எஸ்.ராஜ் அவர்களுக்கு நன்றி...
ReplyDeleteகார்த்திக் சோமலிங்கா அவர்களே... வருக வருக... அசத்துங்க... வாழ்த்துக்கள்...
வருக வருக
ReplyDeleteஅருமையான பணி வாழ்த்துக்கள் ராஜ்
ReplyDeleteகலக்க வாருங்கள் கார்த்திக்
பணிசிறக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteஇந்த வாரம் காமிக்ஸ் வாரம்! வாழ்த்துக்கள் நண்பா! :)
ReplyDeleteஅட கார்த்திக் வாங்கோ வாங்கோ
ReplyDeleteவாழ்த்துக்கள் ராஜ்!
ReplyDeleteவாய்ப்புக்கு நன்றி வலைச்சரம்!
வாழ்த்துகளுக்கு நன்று நண்பர்களே! :)