07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, April 11, 2013

பூக்கிறதே தனிமரம்!


இன்றைய விடயங்களைப்பேசும் அதிக பதிவாளர்களிடையே கடந்த கால நிலைகளையும் கொஞ்சம் அசை போட வேண்டிய தேவை ஏன் ?என்றால் பதில் வரும் இவையும் ஞாபகத்தில் இருக்க வேண்டும் என்று. உடனே பதில் கேள்வி கேட்பார்கள் உனக்கு என்ன விசரோ ??என்றால் இவன் விசரன் (அண்ணா )என்ற பெயரில் பதிவு எழுதினாலும்!http://visaran.blogspot.fr/2013/02/blog-post.html

 பல விடயத்தை பதியம் போடுவதில் படு கெட்டிக்காரர் .இவர் பதிவுகள் எல்லாம் வித்தியாசம்.  இணையத்தில் இன்றைய ஈழத்தின் உண்மை நிலை புரியாமல், புலூடாவிடுவோருக்கு நம் உறவுகளின் உண்மை சொல்லும் பல பதிவுகளை பகிர்வதோடு ,தொலைக்காட்சியிலும் நேரடியாக கருத்துப்பகிர்வில் பங்குகொள்ளும் பண்பாளர். !


இவரைப்போல  எனக்கு இன்னொருவர் நட்பு கிடைத்து இருக்கு இணையம் மூலம் தென் இலங்கை அரசியல் பேசினால் சில முகநூல்  குழுமத்தைவிட்டே ஓடவேண்டிய நிலை கடந்த காலங்களில் ஏற்பட்ட போது எல்லாம்! அசராமல் தனிமரம் அடுத்தவர்களும் கடந்தகால விடயங்கள் அறியவேண்டும் நீ தொடர்ந்து செல்  என்ற நண்பர் என்பதில் அம்பலத்தார் எனக்கு இன்னொரு உந்து சக்தி .

இவரின் ஊடே ஜேவிபியின் இந்த பதிவு   நடுநிலமை தெரிந்து கொள்ள நினைக்கும் பலர் நாடவேண்டியது  .http://ampalatharpakkam.blogspot.fr/2012/04/jvp.html


நான் எல்லாம் வாசகனாக எப்போதோ  வாசித்த வலை இந்த பதிவாளினி! http://manaosai.blogspot.fr/2010/10/1.htmlஇப்போது முன்னர் போல துடிப்பு இல்லாமல்  இருந்தாலும்  மூத்த பதிவாளினி ..
எனக்கு பதிவுகில் இலக்கியகர்த்தாக்கள் பற்றி  படிக்க எதிர்பாராமல் போய் இப்போது இவரின் எழுத்தில் நானும் கலந்து விடுகின்றேன் மொக்கைகள் போடாமல் .வாசிப்பு நேயர்களுக்கு இது இன்னொரு வாசிகசாலை இவர் தளம்



அது பலர் புதியவர்கள் தெரிந்துகொள்ளவேண்டியவர்!http://bavachelladurai.blogspot.fr/2013/04/blog-post.html


இன்னும் இருக்கின்றேன் என்று கவிதையில் கலக்கும் இவர் இலங்கை ஊடகங்களிலும் கதை ,கவிதை எழுதி ,காகிதத்திலும் பெயர் பதிக்கும் இளம் கவிஞர் இந்த நெற்குழுதாசன் .http://netkoluvan.blogspot.fr/2012/07/blog-post_19.html

நெஞ்சில் வலி வரும் கவிதைகள், கதைகள்  அரசியல் ஆய்வுகள் என வன்னிவாசம் தொடங்கி யாழ் வரை வாசம் வீசும் வீடு இவரின் தளம்.



 இங்கும் வாசிக்கலாம் நம்மவர் தியாகத்துக்கு தன்னையே அயல் தேசத்தில் இருந்து தீயாக்கியவருக்கு நன்றிகள் சொல்லும் இவரின் எழுத்தில். கவிதைகள் ,ஹைகூ வடிவில் வண்ணத்தமிழ் வந்து போகின்றது படிக்கும் போது மனசில் பட்டாம்பூச்சி பறக்கும் பலர் இவரை இன்னும் பார்க்கவில்லை என்று தோன்றும் பல நேரத்தில் http://valvaiyooraan.blogspot.fr/2012/09/blog-post_25.html.

பண்பானவர் தந்தையைப்போல தனயனும் கவிதையில் கலக்க வெளிக்கிட்டான் இந்த வல்லையூரான் வலையில் வந்து அமருங்கள் வாசகர்களே!
அதைச்சொல்லும் போதே சப்பாத்தி ரெடி என்கின்ற என் வீட்டுக்காரி செல்லமாக கேட்பது என்ன கறி வைக்க (கூட்டு) உடனே நான் சொல்வது கொஞ்சம் இரு !

அஞ்சலின் அக்காளிடம் காகிதப்பூக்கள் வலையில் பார்த்துவிட்டுவாரன் http://kaagidhapookal.blogspot.fr/2013/02/with.html.

என்ன சமையல் உனக்கு  சொல்லித்தர ,

புதுவருடதுக்கு என்ன கிரீட்டிங்காட் என் கையாலே உனக்கு  செய்து  தரலாம் என்றால் என்று ஜோசிக்கின்றேன் என்கின்ற போதே  என் தங்கை கிராமத்துக்கு கருவாச்சி கேட்பாள் !


வாங்க அண்ணா சூரியன் கோவில் பார்போம் என்று http://kalaicm.blogspot.fr/2012/04/blog-post_23.html!அதிக வேலைப்பளு இப்ப வலைக்கு மூடு விழா!

ஆனாலும்  இந்த சகோதரியின் கவிதை ரசிக்கலாம் !கனாக்காண்கின்றேன் எப்படி எல்லாம் வரைகின்றா வாங்க ரசிப்போம்http://kanaakangiren.blogspot.fr/2013_03_01_archive.html.

தொடர்வோம்!

19 comments:

  1. அத்தனை பதிவர்களிற்கும் இனிய நல் வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete

  2. வணக்கம்!

    தனிமரம் தந்த தமிழ்வலை யாவும்
    கனிமரம் போன்றே கமழும்! - பனிமரம்
    காணும் குளிர்போல் கருத்தெழுதி ஓங்குகிடுமே!
    வேணும் துணிவை விளைத்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  3. சிறப்பான பகிர்வு .அனைவருக்கும் வாழ்த்துக்கள்பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே .....

    ReplyDelete
  4. எனக்கு இந்த இடத்தில் மீண்டும் அறிமுகம். சிலிர்க்கின்றது. நன்றிகள் நேசன். தொடர்க பணி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. அறிமுகப்படுத்திய வலைத்தளங்கள் அனைத்தும் அருமை. இப்போதுதான் பவா செல்லதுரை அவர்களின் தளம் சென்று வந்தேன். மற்ற தளங்களுக்கும் விரைவில் செல்வேன். தள அறிமுகங்களுக்கு மனமார்ந்த நன்றி தங்களுக்கு.

    ReplyDelete
  6. enakku puthiyVarkal!

    mikka nantri !
    arimukathirku...!

    ReplyDelete
  7. என்னடா கருவாச்சி இப்பல்லாம் எழுதக் காணமேன்னு யோசி்ச்சிட்டே இருந்தேன். அதிக வேலைப்பளுதான் காரணமா...? சீக்கிரம் வரட்டும்! நிறையப் புதியவர்களை இன்று அறிந்து கொண்டேன் தனிமரம் பூத்ததால். மிக்க நன்றி நேசன்!

    ReplyDelete
  8. நல்ல அறிமுகங்கள். தொடரட்டும்....

    ReplyDelete
  9. அனைவரும் நன்கு அறிந்த தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. உங்களின் பதிவுகள் அத்தனையும் அருமை நீங்கள் அறிமுகப் படுத்திய எல்லா பதிவர்களும் தகுதியான திறமையுள்ள பதிவர்களே
    .வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. சிலர் எனக்கு புதியவர்கள் நேசன்... நல்ல பகிர்வு

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் நேசன்!

    இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. சிறப்பான அறிமுகங்கள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. நல்ல பகிர்வு,நேசன்!!!///சைக்கிள் கேப்பில அன்புத் தங்கச்சியையும் சொருகிட்டாரு!Ha!Ha!!Haa!!

    ReplyDelete


  15. தாங்கள் வலைச்சர பணியேற்றமைக்கு முதற்கண் என் வாழ்த்துக்கள்!ஒரு முறை உங்களுக்கு எழுதிய மறுமொழியில்,நீங்கள் தனி மரமல்ல நல்ல கனிமரம் என்று எழுதினேன் இன்று வலைச்சரம் மூலமாக பற்பல கனிகளைத் தருகின்றீர்! வளர்க உங்கள் பணி!

    ReplyDelete
  16. நல்ல அறிமுகங்கள்! நான் அறியாத நல்ல எழுத்தாளர்கள் பலரை அறிய வைத்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  17. நேசன் மிக்க நன்றி ..........அருமையான தொகுப்பு மற்றும் அறிமுகங்கள் .
    விடுமுறையாதலால் பதிவுகளை சரிவர கவனிக்கவில்லை .ஆரம்ப நாளில் இருந்து வந்திருப்பேன் ..வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் .பவா செல்லத்துரை அவர்களின் வலைபூ காட்டியதற்கு நன்றி

    ReplyDelete
  18. இளமதி தான் பின்னூடம் மூலம் தெரிவித்தார் அவருக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  19. வணக்கம்
    இன்று அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது