07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, April 4, 2013

காடும் காடு சார்ந்தும்...


நின்னே போலும் மஞ்ஞை ஆல, நின்
நன்னுதல் நாறும் முல்லை மலர
நின்னே போல மா மருண்டு நோக்க
நின்னே உள்ளி வந்தனென்
நன்னுதல் அரிவை காரினும் விரைந்தே!முல்லைத் திணையில் பேயனார் பாடிய இப்பாடலுடன் வலைச்சர நண்பர்களை உள்ளியே விரைந்து வந்தேன் வணக்கத்துடன்!

இப்பாடலின் பொருள்: "உன்னைப் போல் மயில்கள் நடனம் ஆட,  உன்னுடைய அழகிய நெற்றியின் நறுமணம் போல் முல்லை மலர்ந்து நறுமணம் வீச, உன்னைப் போல மான்கள் மருண்டு நோக்க, உன்னையே நினைத்து கார்மேகத்தினும் விரைவாய் வந்தேன் " என்று தலைவன் தலைவியைப் பார்த்துப் பாடுவதாக அமைந்துள்ள ஐங்குறுநூற்றுப் பாடல் (எண்:492).

வாழும் நிலத்திற்கு ஏற்ப வாழ்வுமுறை வகுத்த நம் முன்னோர் காடும் காடு சார்ந்த நிலங்களையும் முல்லை என்று வழங்கினர்.


காடுகளில், குறிப்பாக மழைக்காலங்களில் அதிகம் மலரும் முல்லை மலரால் இப்பெயர் பெற்றது.
முல்லைத் திணையில் காதலர் காத்திருத்தல் உரிப்பொருளாகும். மான்,முயல்,முல்லை,மழை, மயில் போன்றச் சொற்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

முல்லை திணைக்குப் பொருத்தமானவை என்று நான் எண்ணும் சிலப் பதிவுகளை உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்.

1. SRH அவர்களின்  கவரிமானின் கற்பனைக் காவியம் என்ற தளத்தில்  காத்திருந்த காதல் இனிப்புகளுடன் வருவாயா என்று காத்திருக்கிறது.
இந்தக் காதலும் பதிலைத் தேடியபடி பொறுமையாய்க் காத்திருக்கிறது.
நீயே உயிரின் முதலானாய் என்று இந்தப் பதிவர் சொல்வது யாரை? பார்க்கவும் கண்ணோடு காடுகள்.
கோபுரம் கட்ட ஆசையாம், கூரை போடவாவது ஏதேனும் செய்வோமா? கவலை தேவதையைத் துரத்திடுவோமா? சமுதாயக் கவிதைகள் சதம் அடித்து விட்டது இவர் தளத்தில், ஒவ்வொன்றும் அருமை.
தமிழ் வளர்க்க அழகிய வழி சொல்லும் கவிதை இனிய தமிழ் இனி. தமிழுக்கு வயது 20000, ஆனால் என்ன என்றும் இனிமை தானே?

2. முகிலின் பக்கங்கள் என்ற வலைப்பூவில் திரு.தமிழ் முகில் அவர்களின் அழகியக் கவிதை மண்ணின் மைந்தர்கள், படித்து இரசித்துப் பின்  மரங்களைக் காக்க உறுதி கொள்ளலாமே! பசி, முல்லை, காகிதம் என்ற கவிதையில் பேனாவிற்கு இலக்கியப் பசி என்கிறார். பல பேனாக்கள் இலக்கியப் பசி கொண்டால் நல்லது தானே? உறுதியாய் இரு என்ற கவிதையில் இராஜாக்கள், இராணிகள், மந்திரிகள் என்று ஓரூ பெரிய இராஜாங்கத்தைப் பற்றியும் அதில் நிமிர்ந்து நிற்க வழியும் சொல்கிறார், பாருங்கள். இயற்கை என்ற இவரின் கவிதை அழகிய படத்துடன் அழகாய் உள்ளது.

3. என்றாவது உலகம் திரும்பிப் பார்க்கும் என்று காத்திருக்கிறேன் என்று சொல்லும் கவிதை கனவு மெய்ப்பட வேண்டும்.
திரு.கா.ந.கல்யாணசுந்தரம் அவர்களின் கவிதை வாசல் தளத்தில் உள்ள  ஒரு மழை நாளில்  அருமை.  காத்திருப்பு கவிதையானது எப்படி என்று பாருங்கள்.
காதல் காத்திருக்கும் தெரியும், தோல்விகளுமா? தெரிந்து கொள்ள பாருங்கள் வெற்றிக்கான விழுப்புண்கள்.

4. நெல்லை பாஸ்கர் அவர்களின் தமிழ் கவிதைகள் வலைப்பூ இந்த வருடம்தான் மலர்ந்துள்ளது.  "காடுகளை அழித்த பின் கானல் நீரில் தாகம் தணிக்க முற்படுவாயா?" - கூர்மையாய்க் கிழிக்கும் பல வரிகளில் இது ஒரு வரிதான் மரங்களைத் திண்ணும் மானுடன் என்ற அக்விதையிலிருந்து.
அச்சோ, இது புதுவிதமான கலப்படமாய் இருக்கிறதே! அட, அனைவரும் இப்படி புரிந்து கொண்டால் நலமாய் இருக்குமே..அதுவும் இன்றைய சூழலில் - மகளிர் தின வாழ்த்துக்கள்! அருமை! சிந்திக்கவேண்டிய கவிதை சிட்டுக்குருவி, என்ன செய்ய? நம் பெருமையின்  முத்தான மூன்று எழுத்துக்கள்!

5. உஷா அன்பரசு அவர்களின் இது எங்கள் கோட்டை வலைத்தளத்தில் காதலில் காத்திருத்தல் அலுப்பதில்லை என்கிறார் யுகந்தோறும் காத்திருப்பேன் என்ற கவிதையில்.
என்ன படிக்க கவிதை படித்து சிரித்தாலும், அது உண்மை தானே?

6. எண்ணிய முடிதல் வேண்டும் என்ற தளத்தில் பதிவர் சைலஜா அவர்கள் மாங்காயில் எவ்வளவு செய்திகள் சொல்கிறார் பாருங்கள்!
காண மயிலே! நீ எங்கள்  தேசியப் பறவையானது எப்படி மயிலே,மயிலே.
கருவின் கதறல் மனத்தைக் கலக்குகிறது.
உண்ணவா தின்னவா, இந்த தமிழ் படுத்தும் பாடு பாருங்கள்!

7. T.V.ராதாகிருஷ்ணன் அவர்களின் தமிழா தமிழா தளத்தில் வாரார் ஆயினும் வரினும் அருமையான முல்லைத்திணை பாடல் விளக்கத்துடன், அருமை!

இந்தப் பதிவுகள் உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன்!

நாளை மீண்டும் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்!

நட்புடன் ,
கிரேஸ்
தேன் மதுரத் தமிழோசை உலகமெல்லாம் முழங்கிடச் செய்வோம்!

28 comments:

 1. அறியாத சில தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

  ReplyDelete
 2. அனைவருக்கும் வாழ்த்துக்கள். பல புதிய தளங்கள். அழகான பதிவு கிரேஸ் :)

  ReplyDelete
 3. நன்றி...திண்டுக்கல் தனபாலன்

  ReplyDelete
 4. முன்னுரையும் அறிமுகமும் மிக மிக அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. அனைவருக்கும் வாழ்த்துகள்... நல்ல அறிமுகங்கள் கிரேஸ்..

  ReplyDelete
 6. அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. வணக்கம்
  இன்று வலைச்சரத்தில் அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 8. மிக்க நன்றிகள் அண்ணா
  நானும் அங்கு சென்று பார்கிறேன் இன்னும் சில நண்பர்களை என் வலைத்தலத்திருக்கு
  அழைக்கிறேன் வாய்ப்புக்கு அன்பு நன்றிகள் அண்ணா

  ReplyDelete
 9. என்னோட தளத்தை இங்கு அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றிகள்

  ReplyDelete
 10. முல்லைத்திணை பாடலுடன் ஆரம்பம் அசத்தல். வலைப்பக்கத்தை பகிர்ந்து கொண்டதிற்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 11. எனது தளத்தை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள் சகோதரி...

  ReplyDelete
 12. அறிமுகப்பதிவாளகளர் அனைவருக்கும் அறிமுகப்படுத்திய உங்களுக்கும் நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 13. வணக்கம் உறவே

  மீனகம் திரட்டியில் உங்கள் இணையத்தை பதியவும். உங்களின் இடுகைகள் செய்தியோடை (RSS Feed) வாயிலாக எளிதாக திரட்டப்படும்...

  http://www.thiratti.meenakam.com/

  ReplyDelete
 14. மனத்தை வசீகரிக்கும் முல்லைத்திணைப் பாடலோடு அறிமுகப்பதிவுகள் அனைத்தும் அருமை. அறிமுகப்படுத்திய பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. சினிமா விமர்சனம், நகைச்சுவை இது போன்ற இன்னும் பல கமர்சியல் நிகழ்வுகளை எழுதும் வலைப்பக்கங்களே என் கண்ணுக்கு இது வரை தெரிந்தது.. இந்த வலைச்சரமும் அது போல ஒன்றுதான் நான் முதல் நாள் எண்ணினேன் ஆனால் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து இத்தனை வலைப்பூக்கள் இருப்பது இப்போது எனக்கு அதிக தமிழுணர்வை என்னுள் பொங்கியெழ வைக்கிறது.. பல தளங்களை அறிமுகப்படுத்திய ஆசிரியர் அவர்களுக்கு மனதார நன்றியை தெரிவித்து கொள்கிறேன்..

  இந்த கருத்தில் ஏதாவது தமிழ் பிழை இருந்தால் மன்னிக்கவும்,, நான் இப்போதுதான் தமிழில் கணிணியில் எழுத பழகி வருகிறேன்

  ReplyDelete
 16. முல்லைத் திணைப்பாடலுடன் படங்களும் அறிமுகங்களும் அழகு சேர்க்கின்றன.

  அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 17. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 18. மிகச் சிறப்பான அறிமுகங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் .
  பகிர்ந்துகொண்ட தங்களுக்கும் என் நன்றியும் பாராட்டுக்களும் ..

  ReplyDelete
 19. நன்றி ஸ்ரீனி!

  ReplyDelete
 20. நன்றி திரு.ரமணி அவர்களே!

  ReplyDelete
 21. நன்றி தியானா!

  ReplyDelete
 22. நன்றிங்க உஷா!

  ReplyDelete
 23. நன்றி தோழி இளமதி!

  ReplyDelete
 24. நன்றிங்க கீதமஞ்சரி!

  ReplyDelete
 25. மிக்க மகிழ்ச்சி திரு.கார்த்திகேயன். உங்கள் கருத்து மேலும் ஊக்கப்படுத்துகிறது. நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 26. நன்றி மாதேவி அவர்களே!

  ReplyDelete
 27. பாராட்டுக்கு நன்றிங்க அம்பாளடியாள்.

  ReplyDelete
 28. வாழ்த்துக்கு நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன்!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது