உலகங்கள் யாவும் அவன் அரசாங்கமே
➦➠ by:
ஆர்.வி.சரவணன் குடந்தையூர்
உலகங்கள் யாவும் அவன் அரசாங்கமே
எல்லார் இடத்திலும் தெய்வம் உண்டு. ஆனால் எல்லாரும் தெய்வத்திடம் இல்லைனு ஒரு வரி எங்கோ படிச்சிருக்கேன்.என்னடா இவன் ஆன்மீக உபதேசம் ஆரம்பிச்சிட்டான் னு நினைக்கறீங்களா. இன்னிக்கு நாம ஆன்மீக தளங்கள் (ஸ்தலங்கள்) தாங்க பார்க்க போறோம்.
பக்தி மலரில் நான் படித்த ஒரு செய்தியை இங்கு குறிப்பிட
விரும்புகிறேன். லட்சுமியிடம், ஒரு முனிவர் நீங்கள் யார் வீட்டில்
நிரந்தரமாக இருப்பீர்கள்.உங்களை பூஜிப்பவர்களிடமா,அல்லது
உங்களை நேசிப்பவர்களிடமா என்று கேட்டாராம்.அதற்கு லட்சுமி
என்னை பூஜிப்பவரை விட நேசிப்பவரிடமே நான் நிலைத்திருப்பேன்
என்று பதில் அளித்திருக்கிறார்.
பூஜிப்பது தெரியும்.அது என்ன நேசிப்பது. அதாவது செல்வத்தின்
பெருமையை அறிவது பணத்தின் மகிமையை உணர்வது என்பது தான் நேசிப்பது. நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த அரும் பாடுபட்டு அற வழியில் பல மணிகள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை, நொடி பொழுதில் ஆடம்பரமாக செலவு செய்யாமல் சிக்கனமாய் அவசியமான செலவுகளை செய்பவர் செல்வத்தின் பெருமை அறிந்தவர். அதுவே லட்சுமியை நேசிப்பதாகும்.
விரும்புகிறேன். லட்சுமியிடம், ஒரு முனிவர் நீங்கள் யார் வீட்டில்
நிரந்தரமாக இருப்பீர்கள்.உங்களை பூஜிப்பவர்களிடமா,அல்லது
உங்களை நேசிப்பவர்களிடமா என்று கேட்டாராம்.அதற்கு லட்சுமி
என்னை பூஜிப்பவரை விட நேசிப்பவரிடமே நான் நிலைத்திருப்பேன்
என்று பதில் அளித்திருக்கிறார்.
பூஜிப்பது தெரியும்.அது என்ன நேசிப்பது. அதாவது செல்வத்தின்
பெருமையை அறிவது பணத்தின் மகிமையை உணர்வது என்பது தான் நேசிப்பது. நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த அரும் பாடுபட்டு அற வழியில் பல மணிகள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை, நொடி பொழுதில் ஆடம்பரமாக செலவு செய்யாமல் சிக்கனமாய் அவசியமான செலவுகளை செய்பவர் செல்வத்தின் பெருமை அறிந்தவர். அதுவே லட்சுமியை நேசிப்பதாகும்.
எனக்கு இதை படித்த போது தோன்றியதை இங்கே பதிவு செய்கிறேன்.
அப்படி கஷ்டப்பட்டு சேர்க்கும் செல்வத்தில் கொஞ்சமேனும் வாழ்க்கையில் கஷ்டப் படுபவர்களுக்கு (உதவினால்) செலவிட்டால் கடவுளே நம்மைநேசிக்க வாய்ப்பிருக்கிறது. உதாரணத்திற்கு, கடவுளின் குழந்தைகள் நாம் என்று எல்லோரும் சொல்ல கேட்டிருக்கிறோம். அப்படி எனில் ஒரு பெற்றோரை துதி பாடுதல் மட்டுமே அவர்களை திருப்திபடுத்தி விடாது. தான் பெற்ற பிள்ளைகள் சண்டையிடாமல் ஒருவருக்கொருவர் உதவி வாழ்தலை தானே பெற்றோர் விரும்புவர். அதை தானே கடவுளும் விரும்புவார்.
ஆன்மீகம் எனும் போது எனக்கு கிடைத்த ஒரு அனுபவத்தை இங்கு குறிப்பிடும் முன் புண்ணிய தளங்கள் சென்று வந்து விடுவோம்
பார்ப்பவற்றை கவிதைக்குள் பதுக்கி வைக்கும்,நண்பர் சிவகுமாரனின்
அருட்கவி தளத்தில்அவர் இயற்றிய பக்தி பாடல்கள் மயம் தான் செட்டி குலத்து சித்தி விநாயகா பாடலும் அதற்கு சுப்பு தாத்தா பாடிய
பாடலின் வீடியோவும் நம்மை ஈர்க்கும்.
அடுத்து கும்பகோணத்திலிருந்து 36 கிலோ மீட்டரில் மன்னார்குடியில்
நல்லாட்சி புரியும் மன்னார்குடி ஸ்ரீ ராஜ கோபால சுவாமி திருக்கோவில்
பற்றி நண்பர் துரை செல்வராஜூ, தன் தஞ்சையம்பதி தளத்தில்
சொல்வதை படியுங்கள்.
அடுத்து அங்கிருந்து நாம் கீதா சாம்பசிவம் அவர்களின் ஆன்மீக பயணம் தளத்திற்கு சென்றால் அரங்கனின் தேரோட்டம் தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும்
அங்கிருந்து நாம் செல்ல போவது நண்பர் தி.தமிழ் இளங்கோ அவர்களின் எனது எண்ணங்கள் தளத்திற்கு. இங்கே மாகாளிக்குடி (சமயபுரம்) உஜ்ஜயினி மாகாளி கோவில் பற்றியும் அக் கோவிலுக்கு தான் சென்று வந்த அனுபவத்தையும் அழகுற பகிர்ந்திருக்கிறார்
அடுத்து விவேக் ஆனந்த் தளமானஆலயங்கள் சென்று பார்க்கும்
போது கடலூரில் அமைந்திருக்கும் அமிர்த கடேஸ்வரர் திருக்கோவில்
தரிசிக்க முடிகிறது
பாடல்களுக்கு என்றே ஒரு தளம் இருக்கிறது. அது அம்மன் பாட்டு.
இங்கே எண்ணற்ற பாடல்கள் நிறைந்திருக்கின்றன இதிலிருந்து ஒரு
பாடல் கேட்போமே தாயே முகாம்பிகே
இணையத்தில் நான் கண்டவற்றில் சிறிதளவே இங்கே உங்களிடத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். இன்னொரு தளத்தை நான் குறிப்பிட
வேண்டும். எண்ணற்ற பண்டிகைகள் பற்றி படங்களுடன் செய்திகள் குவிந்திருக்கும், சகோதரி ராஜ ராஜேஸ்வரி எழுதி வரும் மணிராஜ் தளம் தான் அது. இத் தளத்தை நான் அறிமுகம் என்று குறிப்பிட முடியாது. ஆன்மீகம் என்று வரும் போது இத் தளத்தை பற்றி குறிப்பிடாமல் இக் கட்டுரையை நிறைவு செய்ய முடியாது என்பதால் குறிப்பிடுகிறேன்.
இப்போது அனுபவத்திற்கு வருவோம். நான் சென்னையில் உள்ள
கந்தசுவாமி கோவிலுக்கு வாரா வாரம் செல்வதுண்டு அப்படி சென்று
திரும்பும் போது நண்பர்களுக்கு கொடுக்க பிரசாதம் வாங்கி வருவேன்.
அன்று நான் செல்லும் போது கோவிலில் திருவிழா என்பதால் பிரசாதம் கொடுத்து கொண்டிருந்தார்கள்.பிரசாதம் வாங்கி சென்று நண்பர்களுடன் சாப்பிடலாம் என்று வரிசையில் நின்றேன். அன்று கொஞ்சம் ஸ்பெசலாக சக்கரை பொங்கல் தயிர் சாதம் சுண்டல் வடை என்று பேப்பர் தட்டில்
வைத்து கொடுத்து கொண்டிருந்தார்கள். அதை பார்த்தவுடன் ஆசையாகி நண்பர்களுக்கு கொண்டு செல்ல வேண்டாம் நாமே இங்கு சாப்பிட்டு
விடலாம் என்று முடிவு செய்தேன். (நானும் மனிதன் தானே). வரிசையில் நிற்க விரும்பாத மற்றவர்கள் எனக்கு முன்னே சென்று நுழைந்ததால் நான் அருகில் சென்று கை நீட்டும் போது அங்கே பாத்திரம் காலி ஆகி விட்டது. கொஞ்சம் ஏமாற்றத்துடன் கிளம்பும் போது தான் எனக்கு உரைத்தது. நமக்கு மட்டும் வேண்டும் என்று நினைத்ததால் தான் கிடைக்கவில்லை எல்லோருக்கும் என்ற எண்ணத்தில் நின்றிருந்தால் கண்டிப்பாக கிடைத்திருக்கும்.
கடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல நமக்கு தேவையானதை கொடுப்பவர் என்ற எண்ணத்துடன் விடை பெறுகிறேன். நாளை கவிதை சாரலில் நாம் சென்று நனைந்து வர ஆயத்தமாகி கொண்டிருக்கிறேன்
படம்: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே மலைகளின் பின்னணியில்
அழகுற அமைந்திருக்கும் திரிகம்பேஸ்வரர் ஆலய கோபுரம் எனது கிளிக்கில்
ஆர்.வி சரவணன்
|
|
வணக்கம்
ReplyDeleteஇன்று வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கு எனது வாழ்த்துக்கள் ஒரு வித்தியாசமான அறிமுகம் தொடருகிறேன் பதிவுகளை.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரூபன்
Deleteபக்தி பரவசத்துடன் துவங்கியது இன்றைய அறிமுகங்கள்!!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா
Deleteகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல நமக்கு தேவையானதை கொடுப்பவர்
ReplyDeleteமேன்மையான வரிகள் ரசிக்கவைத்தன.. பாராட்டுக்கள்..
தங்களது வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி சகோதரி
Deleteஎமது தளத்தினை அருமையாக அறிமுகம் செய்துவைத்தமைக்கு இனிய நன்றிகள்..!!
ReplyDeleteதிரு.ஆர்.வி. சரவணன் அவர்களுக்கு அன்பின் வணக்கம். அறிமுக மடலைத் தொடர்ந்து மங்கலகரமான தொடக்கம்!..
ReplyDeleteதங்களுக்கு கந்தசுவாமி - நிகழ்த்தியதைப் போலவே - திருஆனைக்காவில் அன்னை அகிலாண்டேஸ்வரி எனக்கு நிகழ்த்தினாள். அப்புறம் என்ன!.. வட்டியும், முதலும் போல மறு வருடம் கொடுத்து என்னை அங்கே அழவைத்தாள்.
வலைச்சரத்தில் - நமது தஞ்சையம்பதி தளத்தினையும் அறிமுகம் செய்தமைக்கு என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நல்வாழ்த்துக்களுடன் -
துரை செல்வராஜு.
தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி துரை செல்வராஜூ சார்
Deleteஅனைத்தும் சிறப்பான தளங்கள்...
ReplyDeleteவிவேக் ஆனந்த் அவர்களின் தளம் புதிது... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி தனபாலன் சார்
Deleteநன்றி திண்டுக்கல் தனபாலன் !
Deleteபடம்: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே மலைகளின் பின்னணியில்
ReplyDeleteஅழகுற அமைந்திருக்கும் திரிகம்பேஸ்வரர் ஆலய கோபுரம் எனது கிளிக்கில் ///
நிறைவளிக்கிறது ..வாழ்த்துகள். கைவண்ணத்திற்கு..!
அனைத்து சிறப்பான ஆன்மீக தளத்திற்கும் தங்களுக்கும் வாழ்த்துகள். நன்றி.
ReplyDelete//எண்ணற்ற பண்டிகைகள் பற்றி படங்களுடன் செய்திகள் குவிந்திருக்கும், சகோதரி ராஜ ராஜேஸ்வரி எழுதி வரும் மணிராஜ் தளம் தான் அது. இத் தளத்தை நான் அறிமுகம் என்று குறிப்பிட முடியாது. ஆன்மீகம் என்று வரும் போது இத் தளத்தை பற்றி குறிப்பிடாமல் இக் கட்டுரையை நிறைவு செய்ய முடியாது //
ReplyDeleteமிகவும் அழகான அறிமுகங்கள்.
அனைவருக்குமே பாராட்டுக்கள், வாழ்த்துகள்.
தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
இன்றைய வலைச்சரத்தில் எனது வலைப்பதிவினை அறிமுகம் செய்து வைத்த சகோதரர் குடந்தையூர் ஆர் வி சரவணன் அவர்களுக்கு நன்றி! இந்த தகவலை எனக்கு தெரிவித்த கவிஞர் ரூபன், இராஜராஜேஸ்வரி மற்றும் துரை செல்வராஜ் ஆகியோருக்கு நன்றி!
ReplyDeleteபக்தியுடன் தொடங்கிய அறிமுகங்கள் அனைவருக்கும் தொகுத்து வழங்கிய தங்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆன்மீக பதிவர்களின் அறிமுகங்கள் அருமை. தொடருங்கள். தொடர்ந்து படிக்கிறேன்.
ReplyDeleteகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல நமக்கு தேவையானதை கொடுப்பவர்//
ReplyDeleteகடவுள் தேவையானவற்றை தேவையானவருக்கு தேவையான போது கொடுப்பார் என்பது வெள்ளிடை மலை.
நீங்கள் சென்னையிலா இருக்கிறீர்கள் ? விலாசம் தாருங்கள். அடுத்த சில மணி நேரங்களில், கந்தனின் பிரசாதம் சுண்டல், வடை, சக்கரை பொங்கல் நான் உங்கள் வீட்டுக்கே கொண்டு வந்து தருகிறேன் .
சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com
www.vazhvuneri.blogspot.com
தங்களின் அன்பிற்கு நன்றி அய்யா. நானே நேரம் கிடைக்கும் போது தங்களை வந்து பார்க்கிறேன்
Deleteநான் விரும்பித் தவறாது தொடரும்
ReplyDeleteபதிவர்கள் இவர்கள்
அருமையாகப் பகிர்ந்தமைக்கும்
தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
ஆரம்பம் ஆன்மீகமாய்...
ReplyDeleteகோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள்...
கோபுர படம் அருமை.
அனைத்துப் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
தொடருங்கள் அண்ணா... தொடர்கிறோம்....
அமர்க்களமான ஆரம்பங்கள் ./.. தொடருங்கள்
ReplyDeleteவலைச்சரத்தில்பக்தி மணம் கமழ வைத்திருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்
ReplyDelete//அப்படி கஷ்டப்பட்டு சேர்க்கும் செல்வத்தில் கொஞ்சமேனும் வாழ்க்கையில் கஷ்டப் படுபவர்களுக்கு (உதவினால்) செலவிட்டால் கடவுளே நம்மைநேசிக்க வாய்ப்பிருக்கிறது.//
ReplyDelete-கடவுளால் நாம் நேசிக்கபடுவதற்குண்டான அருமையான வழியினை மிக எளிய வார்த்தைகளில் விளக்கிவிட்டீர்கள்.
அறிமுகங்கள் அருமை.
அறிமுகப்படுத்தியதற்கு நன்றி! www.aalayangal.com
ReplyDeleteபக்திப் பரவசமாக ஆரம்பித்துள்ளீர்கள்!
ReplyDeleteஇன்றைய அறிமுகப் பதிவர்களுக்கும் உங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்!
பக்தி அறிமுகங்கள் அருமை! லஷ்மியை நேசிப்பவர்கள் பற்றிய ஆரம்பமும், பிரசாதம் பற்றிய முடிவும் சிறப்பு! வாழ்த்துக்கள்! தொடருங்கள்! நன்றி!
ReplyDeleteசிறப்பான தளங்களை அருமையாய் அறிமுகம் செய்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்
ReplyDeleteஆன்மீகம் பேசும் வலைத்தளங்கள் அறிமுகம்
ReplyDeleteமிகவும் அருமை நண்பரே....
அனைத்து நண்பர்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி
ReplyDeleteமிக்க நன்றி சரவணன்
ReplyDeleteஅன்மீகப் பதிவர்கள் நிறைய இருக்கிறார்கள்... இங்க இது தான் சிறப்பு. நமக்குத் தேவையான தளங்கள் என்று தேடினால் நிறைய கிடைக்கும். பல பேர் தங்களுக்கு தேவையான தளங்கள் இருக்கும் முகவரி தெரியாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு இது போன்ற அறிமுகங்கள் பயனுள்ளதாக இருக்கும்.
ReplyDeleteபக்தி மணம் எங்கள் ஊர் வரை பரவி விட்டது. இறுதியில் நல்ல ஒரு பன்ச் கருத்து. நல்ல கருத்தும் கூட.
ReplyDeleteசிறப்பான பல தளங்களோடு என் தளத்தையும் அறிமுகம் செய்தமைக்கும், தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
ReplyDelete