எங்க ஊர்க்காரங்க....
➦➠ by:
நிகழ்காலம்- எழில்
எங்க ஊர்க்காரங்க......
எங்க
ஊரு கோயம்புத்தூருங்கோ.... இந்த பஸ் ஸ்டேண்ட்ல இறங்கி போனைப்
போடுங்...எங்க ஆளுங்க கவனிக்கற கவனிப்பை எப்பவும் மறக்க மாட்டீங்க...
என்னங் நாஞ் சொல்றது நிசந்தானுங்களே கோவை மக்களே...
தினமும்
எனக்குத் தெரிந்த சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டு பின்
வலைப்பதிவர்கள் குறித்து பகிர்கிறேன். இங்கு நான் அறிமுகப்படுத்துகிறேன்
எனும் வார்த்தை பயன்படுத்த விரும்பவில்லை. ஏனெனில் இங்கு பகிரப் போகும்
பலர் உங்களுக்கு அறிமுகமானவர்களாயிருப்பர். சிறந்த எழுத்தாளர்களாகவும்
இருப்பர். அவர்களை கற்றுக்குட்டியான நான் அறிமுகப்படுத்துகிறேன் என சொல்வது
எனக்குச் சரியெனப் படவில்லை.அவர்களின் எழுத்துக்களில் எனக்கு பிடித்த சில
பக்கங்களைப் பகிர்கிறேன் அவ்வளவே....
***
வலைப்பதிவில்
கருத்துக் கூற புதிதாய் வரும் நண்பர்கள் அவர்களின் வலைதளத்தின் பெயரையும்
அங்கேயே பதிவு செய்துவிட்டால் உங்களைத் தொடர வசதியாயிருக்கும்...என்னைப்
போன்ற யாகூவில் தொடர்பிலிருப்பவர்கள் கூகுள் ப்ளஸ்ஸில் நுழைந்தால் ஒரே
கன்பியூசன்ஸ் ஆஃப் அமெரிக்கா.... யாரையும் பின் தொடர முடியாமல் போகிறது....
காட்டு விலங்குகள் அழிவதால் நமக்கு என்ன என்பவரா நீங்கள்? ஒரு பெரும் உயிரினம் முற்றிலும் அற்றுப் போனதால்
வளமான சமவெளிப் பகுதிகளைத் தாண்டியுள்ள பிரேசிலின் கிழக்கு அமேசான்
பகுதியில் பாஸ்பரஸ் 98 சதவிகித இழப்பு ஏற்பட்டுள்ளது. உயிரினங்களும்
தாவரங்களும் வளர பாஸ்பரஸ் ஊட்டச்சத்து மிகவும் அவசியம். பாலூட்டிகளில் மிக
அதிகமாக உள்ள இரண்டாவது மிகப் பெரிய கனிமம் பாஸ்பரஸ். தாவரங்களில் உயிரோடு
உள்ள ஒவ்வொரு செல்லிலும் அது அவசியம் இருக்க வேண்டும். உயிரினங்கள் அற்றுப் போவதால் ஊட்டச் சத்து குறைபாடு ஏற்படும்.
***
எப்பவுமே
நம்ம ஊர்க்காரங்க எனும் போது ஒரு தனிப்பாசம் ஏற்படுவது இயல்பு...எனக்கும்
அப்படித்தான்.....அப்படியாக கோவை நட்புக்களின் பதிவுகளை இன்று உங்களுடன்
பகிர்கிறேன்....
கோவை. மு,சரளா ....
இவரின் கவிதைகளையும், கட்டுரைகளையும் படித்திருப்பீர்கள்... சமூகக்
கருத்துக்களும், காதலும் இவரின் கவிதைகளின் பார்வையாய் இருக்கும். சமூகக்
கவிதைகளில் இருக்கும் கோபமும் , அதன் வீச்சும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
நீங்களும் படித்துப் பாருங்கள்...
"ஒவ்வொரு முறையும்
உயிர்ப்பிக்கப் படுகிறேன்
பிணமாவதற்கான சாத்தியங்களோடு" என்ற வரிகளுடனான
"யுத்தத்தில் வீசப்பட்ட வார்த்தைகளில்
இருந்து கசிகிறது அழுகிய பிணத்தின் வாடை
உற்று பார்க்கிறோம் அதன்
ஓரங்களில் நெளிகிறது புழுக்கள்"
நல்லவர்கள் போர்வையில்
வல்லூறுகள் பறக்கும்
சிவந்த வானில்
சிட்டுக்குருவிகளாய் நாங்கள்
வெட்டிச் சாய்க்கும் வார்த்தைகள்
இவரைத் தெரியாதவங்க ரொம்ப குறைவு...ஆனா இவரின் உணவையும், சுற்றுலாவையும் தாண்டி உணர்வாளனாக எழுதியுள்ள இரு பதிவுகள் இதோ...
இவரின் சின்ன சின்னக் கவிதைகளிலும் , கட்டுரைகளிலும் நிரம்பியிருக்கும் சமூக அக்கறை எனக்கு மிகவும் பிடிக்கும்
சான்றுக்கு இதோ ...
இந்தக் கவிதைகள்...
தனக்குத் தானே ஏணியாய் இருப்பவனைப் பாருங்கள்...
அதிகாரமே அலங்கோலப்படுத்தும் கொடூரங்களை இங்கே தோலுறித்துக் காட்டும் கவிதை....
இவரோட பதிவுகளைப் படிக்கும்போதெல்லாம் இதையெல்லாம் தேட வேண்டும் எனும் இவரின் தேடல் எனக்கு ஆச்சரியத்தையும், அவரின் ஆர்வம்
குறித்த
கேள்வியையும் எனக்குள் எப்போதும் ஏற்படுத்தும். ஏனெனில் அவரின் பணிக்கும்,
தேடலுக்கும் சம்பந்தமில்லை என்பதுதான். இந்த அறிவை நாமெல்லாம்
பயன்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு....
சான்றுக்கு சில பதிவுகள்....
இவரோட
பதிவுகளும் நிறைய பேருக்கு பரிட்சயமானதாகத்தான் இருக்கும். இவரின்
வித்தியாசமான எழுத்து நடை எனக்கு மிகவும் பிடிக்கும். முதலிலெல்லாம்
ஆனந்தவிகடன் சினிமா விமர்சனம் படிப்பது போல் இப்போ ஆவியோட விமர்சனங்கள்...
எல்லாவற்றையும் இங்க லிங்க் கொடுக்க முடியாதே...அழகா தொடர்ந்திட்டிருந்த
தொடர்கதையைக் இப்போ காணோம்... தொடரும் எனும் நம்பிக்கையோடு....
நகைச்சுவையாய்
அவர் அவருடன் பயணித்தது குறித்து எழுதியிருப்பதைப் பாருங்க....
குழம்பிட்டீங்களா ஆவி ஆவியைச் சந்தித்ததைச் சொல்கிறேன்...
நிகழ்வை விட புகைப்படங்கள் உங்களை ஆவியுலகிற்கே அழைத்துச் சென்று விடும்.
அதே போல முக நூல் பக்கத்தில் கவிதைகள் எழுத ஆரம்பிச்சிருக்கார்.. சின்னதா அழகா .... அதோட தொகுப்பை வலைப்பதிவிலும் போடலாம் ஆவி...
இவரின்
பதிவுகள் பெரும்பாலும் சினிமாவை நோக்கியே இருப்பதால் அனைத்தையும் நான்
படித்ததில்லை. ஆனாலும் இவரின் இந்தப் பதிவைப் படித்த பின் தான் இந்தப்
படத்தை சென்று பார்த்தேன்...
அதிலும் இந்த வரிகள்...
இங்கிலிஷ் விங்கிலிஷ்’
என்னைப்போன்ற
அலட்சிய கணவன்களுக்கு,
செலுலாய்ட் போதி மரம்
அதே
போல வெளி நாட்டுப் படங்கள் பார்க்க வேண்டும் எனும் ஆர்வத்தை தூண்டும்
இவரின் விமர்சனங்கள். இதுவரை பார்த்ததில்லை என்பது வேறு..இருந்தாலும்
இவரின் பதிவே படம் பார்த்த திருப்தியளிக்கும்
அதில் ஒன்று....
நீங்களும் படித்துப்பாருங்கள்... ஆர்வம் தானாக வரும்....
இன்று இவர்கள் போதுமென்று நினைக்கிறேன்.... நாளை சந்திப்போமா.....
|
|
இதுவல்லவோ ஊர்பாசம்...! அனைத்தும் அருமையான தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteமிக்க நன்றி தனபாலன் சார்..
Deleteநான் தொடரும் அற்புதமான பதிவர்கள்
ReplyDeleteபதிவர் சந்திப்புக்கு உங்கள் ஊரில் இருந்து
ஒரு குடும்பம்போல் வந்திருந்து சிறப்பித்தது
கொஞ்சம் பொறாமை உணர்வைக் கூட
ஏற்படுத்திப் போனது
ஊர் பாசத்துடன் ஆரம்பம் அமர்க்களம்
தொடர வாழ்த்துக்கள்
இந்த சுத்தி போடறதிலெல்லாம் நம்பிக்கை இல்லைன்னாலும் எங்க ஊர் மக்கள் கிட்ட சொல்லிடறேன் ஏதாவது ஏற்பாடு செய்யச் சொல்லி... மிக்க நன்றி ரமணி சார்
Deleteஆஹா ஊர் மேலே என்னா ஒரு பாசம்..... முதல்ல அவங்க அறிமுகம் தான்.... :)
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள்....
மிக்க நன்றி வெங்கட் சார்.
Deleteஅருமையான அறிமுகம் எழில் மேடம்.. படிக்கையில் ரொம்ப சந்தோஷமா இருந்தது. நன்றி.. எஞ்சினியர் தொடர் இந்த வாரம் ரெண்டு போட்டிருக்கேன்.. ஹிஹி.. மீண்டும் எனது நன்றிகள்..
ReplyDeleteபார்த்தேன் ஆவி அதுக்குள்ளே பதிவை எழுதிட்டதால அப்படியே விட்டுட்டேன்...
Deleteஇன்று என் தளத்தில் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Pleasure-Misery-Part-2.html
ReplyDeleteபடிச்சிடறேன் தனபாலன் சார்.
Deleteசிறுவாணித் தண்ணீராய் சுவைக்கும் எங்க கோவை நட்புக்களின்பதிவுகளை ஊர்ப்பாசத்துடன் அறிமுகப்படுத்தி பெருமைப்படுத்தியதற்குப் பாராட்டுக்கள்..
ReplyDeleteமிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.
Deleteசாப்பாட்டு பதிவை இணைக்காத காரணத்தால் வெளிநடப்பு செய்கிறேன்,,,,
ReplyDeleteஏதாவது ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட கூட்டிட்டுப் போய் சரி பண்ணிடுங்க ஜீவா..
Deleteஆஹா.. ஊர் மெச்ச தொடரட்டும்... !
ReplyDeleteமிக்க நன்றி உஷா.
Deleteநண்பர்களோடு என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. எழுத்துக்களுக்கு வாசகர்களின் அங்கீகாரம் ஒன்றுதான் எழுதுபவரை மீண்டும் மீண்டும் எழுத தூண்டுகிறது. சில பதிவுகளுக்கு பல மணி நேரங்கள் செலவிடுகிறேன். எனது ஒவ்வொரு பதிவிலும் ஒரு தேடலையும் எதிர்ப்பார்பையும் நண்பர்களின் ஆதரவு தான் எனக்கு கொடுத்து வருகிறது. பதிவு உலகம் உங்களை போன்ற பல இனிய நட்புகளை எனக்கு கொடுத்திருக்கிறது. என் ஊர் என்பதில் எனக்கும் கர்வமுண்டு. கோவை காரன் என்பதில் உங்களோடு நானும் பெருமை கொள்கிறேன்.
ReplyDeleteஉங்களோட தேடல் குறித்து நேரிலேயே பேசியுள்ளேன் மற்றவர்களுக்கும் உங்கள் உழைப்பின் வாசம் சென்றடைந்தால் சரி...
Deleteநானும் சில மாதம் சிறுவாணி தண்ணி குடித்தவன் என்ற முறையில் சொல்கிறேன் ...தங்களின் முதல் பதிவில் அந்த இனிமை தெரிகிறது ,வாழ்த்துக்கள் !
ReplyDeleteத.ம 3
http://jokkaali.blogspot.com/
மிக்க நன்றி சார் .
Deleteமிக மிக அருமை இன்றைய உங்கள் அறிமுகப் பதிவர்கள் அனைவரும்!
ReplyDeleteசென்று பார்க்கின்றேன்!..
அறிமுகப் படுத்திய உங்களுக்கும் அறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்களுக்கு நன்றி இளமதி
Deleteநீங்கள் பகிர்ந்த அனைத்து தள நண்பர்களுக்கும் வாழ்த்துகள்! உங்களுக்கும் நன்றி, வாழ்த்துகள் எழில்!
ReplyDeleteமிக்க நன்றி கிரேஸ்
Deleteஆஹா! என் கோவை மாநகரின் படத்தை பார்த்ததுமே மனதில் ஒரு உற்சாகம். 20 வருடங்கள் சிறுவாணித் தண்ணீர் குடித்து வளர்ந்தவள் நான் என்கிற பெருமை எனக்கு எப்போதுமே உண்டு...
ReplyDeleteஅருமையான பதிவர்கள். அனைவருக்கும் பாராட்டுகள்.
நாளை வாங்க இன்னம் உற்சாகமாயிடுவீங்க ஆதி... நன்றி.
Deleteஇனிய தொடக்கத்துடன் நல்ல வலைத்தளங்களை அறிமுகம் செய்தமை - அழகு!..
ReplyDeleteமிக்க நன்றி துரை செல்வராஜ் சார்...
Deleteஊர்ப்பாசம் அதிகமுங்க!!
ReplyDeleteஇருக்காதா பின்ன .... ராஜி....
Deleteநல்ல ரசனை தேர்வு செய்துதந்த கவிதைகளில் தெரிந்தது.
ReplyDeleteசின்னச் சின்னக் கவிதைகள்தானுங்க? அப்படியே தரலாமுங்களே? (அதுக்குள்ள போயி சொடுக்கி... இது வேணும்ங்களா?)
என்றாலும் பாராட்டுகள்... தொடரட்டும் தொடர்வோம்.
கோவைப் பதிவர்களின் பதிவுகள்
ReplyDeleteகொய்யாக்கனி போல் சுவையானது..
அனைவரும் சிறந்த திறமைசாலிகள்...
வாழ்த்துக்கள்..
வணக்கம் சகோதரி!
ReplyDeleteதேர்வுகள் அனைத்தும் ரசனை. தங்கள் வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள். தங்களால் மேற்கோள் காட்டப்பட்ட படைப்புகளுக்கு சொந்தக்காரர்களுக்கும் வாழ்த்துக்கள்.
அனைத்துப் பதிவுகளையும் அழகாய் விமர்சனம் செய்து இணைப்பைத் தந்தீர்கள். அருமை.
ReplyDeleteஎழில் அம்மா..
ReplyDeleteஇன்றைய அறிமுகங்கள் அருமை.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.....ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்!
♥ ♥ அன்புடன் ♥ ♥
S. முகம்மது நவ்சின் கான்.(99likes)
www.99likes.blogspot.com
நிஜந்தான் எழில்! கோவைவாசிகளின் மரியாதை நிரம்பிய பேச்சும், உபசரிக்கும் பண்பையும் வேறு எங்கயும் பாக்கவே முடியாது! எனக்கு எல்லாருமே தெரிஞ்சவங்கன்றதால ஜாலியா ஃப்ரெண்ட்ஸோட கதைபேசின உணர்வு எனக்கு இன்னிக்கு உங்க எழுத்தைப் படிக்கறப்ப கெடைச்சது.
ReplyDeleteஎழில் அம்மாவா....? அவ்வ்வ்வ்! வுட்டா பாட்டியாக்கிருவாங்க போலருக்கே...! (ஏதோ நம்மால முடிஞ்சதக் கொளுத்திப் போட்டாச்சுடோய்!)
ReplyDeleteகோவைக் காரங்க என்றதுமே யார் யார் வருவாங்கன்னு தெரிஞ்சு போச்சு. கோவைடுதில்லியைத்தான் காணோம்! (அப்புறமா வருவாங்களோ?) நல்ல அறிமுகங்கள்.
ReplyDeleteபாராட்டுக்கள் எழில்!
ரஞ்சனிம்மா - நான் முன்பே வந்துட்டேனே..... நீங்க கவனிக்கலையா? ப்ரொஃபைல் மாத்தினதால ஆதி வெங்கட் என்ற பெயரோடே பின்னூட்டம் தந்திருக்கிறேன் பாருங்கள்....
Deleteகோவைப் பதிவர்களின் அறிமுகம் அசத்தல்! வாழ்த்துக்கள்!
ReplyDelete