07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, October 30, 2013

மகளிர் அணி - இது அவங்க ஏரியா


கூ... கூ... ன்னு குயில் ஒண்ணு கூவிகிட்டே இருக்கு. கீச் கீச்ன்னு அணில் எல்லாம் என்னவோ அவங்களுக்குள்ள பேசிட்டு இருக்கு. ரொம்ப கூர்ந்து பாத்தா குட்டி குட்டி உயிரினங்கள் எல்லாம் அவங்க அவங்க இருப்பை இந்த உலகத்துக்கு உணர்த்த எதோ ஒரு வகைல பேசிகிட்டு தான் இருக்குதுங்க. அப்போ நாம மட்டும் பேசாம இருந்தா எப்படி? அதான் டான்னு உங்க முன்னால ஆஜர் ஆகிட்டேன்.

சரி, வந்தாச்சு. முதல்ல எல்லோருக்கும் குட் மார்னிங். இன்னிக்கி நாள் பூரா நீங்க சந்தோசமா, உற்சாகமா இருக்கணும். அதுக்கு இப்போ நாம புதுசா ஒரு அஞ்சு பேர பாக்க போறோம். நாம இப்போ பாக்க போறவங்க எல்லோரும் பெண் பதிவர்கள். ஆமாங்க, இவங்க எல்லாம் மகளிர் அணி, வாங்க வாங்க, ரொம்ப டைம் எடுத்துக்காம அவங்கவங்க ஏரியாவுக்கு போய் ஒவ்வொருத்தரயா பாப்போமா?

முதல்ல நாம பாக்க போற வலைப்பூ நினைவலைகள். கல்லூரி ஒண்ணுல மைக்ரோபயாலாஜி துறைத் தலைவியான இவங்க, தன்னோட எண்ணங்களின் நினைவுகள்ல தொக்கி நிக்குற அனுபவங்கள தன்னோட நினைவலைகளா இங்க உலவ விட்டுருக்காங்களாம். இவங்களோட ப்ளாக் பக்கம் போனா தன் பிரெண்ட்ஸ் கூட அவங்களோட சந்திப்பு, நமக்கு உடம்புல வர்ற பிரச்சனைகள், சமூகம் பத்தி என்ன நினைக்குறாங்க, கவிதைகள்னு ஒரு மசாலா கலவை கொட்டி கிடக்கு. படிக்க எல்லாமே சுவாரசியமா தான் இருக்குன்னாலும், பதினெட்டு வருஷம் கழிச்சு அவங்க மீட் பண்ணின பிரெண்ட்ஸ் கூட எங்க போனாங்க, என்ன நடந்துச்சுன்னு விவரிக்குறாங்க பாருங்க, நாமளும் கொஞ்சம் அவங்க கூட போயிட்டு வருவோம்..
பள்ளி நண்பர்களுடன் ஒரு சந்திப்பு

பிறந்தது மதுரைனாலும் சீனாவின் பீய்ஜிங்ல வாழுறவங்க இவங்க. சீனாவை பத்தின இவங்களோட பார்வையை “அண்ணன் தேசம்” ன்னு ஒரு புத்தகமா விகடன் பதிப்பகத்தார் வெளியிட்டுருக்காங்க. புத்தகமே வெளியிட்டுட்டாங்க, அப்புறம் இவங்கள பத்தி வேற என்னங்க சொல்ல? அன்பானவங்க, பண்பானவங்க, இவங்கள நேசிக்குற ஒரு கூட்டமே இருக்கு. இவங்களோட வலைப்பூ பெயரே தமிழுக்கு ஒரு பிரேமாஞ்சலி  தான். தமிழை அவ்வளவு காதலிக்குற இவங்க மூழ்கி முத்தெடுக்கும் நிலவு கன்னி, வாரி அணைக்க காத்திருக்கும் அலைகடல்லோட சங்கமத்துல ரம்மியமான சூழ்நிலையில சீனாவை பத்தின தன்னோட பார்வை, தன்னோட பயண அனுபவங்கள், அங்க கொண்டாடப்படும் திருவிழாக்கள்னு பல விசயங்கள அழகு தமிழ்ல இங்க பதிவு பண்ணிருக்காங்க. இப்போ நாம அவங்க பார்வைல ஹாங்காங் எப்படி இருக்குன்னு பாக்கப் போறோம். வாங்க.


ஒரு பிசியோதெரபிஸ்ட்டா வாழ்க்கைய தொடங்கி, அப்புறமா குடும்ப தலைவியாகி, இசையையும், புத்தகங்களையும் தோழிகளாக்கி வாழ்க்கையை கவிதையாய் வந்துட்டு இருக்காங்க இவங்க. இவங்களோட மன எண்ணங்களை தூரிகை கொண்டு தீட்டி எண்ணத் தூரிகையா நமக்கு குடுக்குறாங்க. இவங்க ப்ளாக்ல கூட கவிதை, மருத்துவம், கல்விமுறை, நட்பு, தியானம், சந்தோசம்னு பல விஷயங்கள் கொட்டிக் கிடந்தாலும், இப்போதைக்கு மன உளைச்சல்ல இருந்து எப்படி விடுபடுறதுன்னு விளக்குரங்க பாருங்க, கண்டிப்பா எல்லோரும் படிச்சு கடைபிடிக்க வேண்டிய ஒண்ணு. கடைப்பிடிச்சுடுங்க.
மனஉளைச்சலில் (STRESS) இருந்து வெளிவர சில வழிமுறைகள்

அறிவியல் ஆசிரியையா இருந்தாலும் கவிதைகள் மேல தனக்கு இருக்குற தீராத காதலால கவிதாயினின்னு தன்னை அடையாளப்படுத்திக்குறாங்க இவங்க. என்ன தான் இவங்க இவங்கள கவிதாயினியா சொல்லிக்கிட்டாலும் இவங்களோட ப்ளாக்ல அறிவியல், முகநூல், எண்ணங்கள், நூல் விமர்சனம், சிறுகதை, கட்டுரைன்னு ஏகப்பட்ட பதிவுகள உணர்வின் நெருடல்களா பதிவு பண்ணியிருக்காங்க. இவங்க இலங்கையை சார்ந்த கவிதாயினிங்குறதால இவங்களோட எழுத்துகள்ல இலங்கை தமிழின் வாசம் நம்ம வீடு வரை அடிக்கும். அதுக்காகவே இங்க பதிவுகள தேடிப் படிக்கலாம். கவிதைகளுக்காக பல பரிசுகள வாங்கின இவங்க அப்பா பத்தி ஒரு கவிதை எழுதி இருக்காங்க. அந்த கவிதை ரொம்பவே எதார்த்தமா, உணர்வு பூர்வமா இருக்கு. அப்போ கண்டிப்பா அத படிக்கணும் தானே... வாங்க, படிங்க  
தந்தைக்கோர் கடிதம்

இவங்கள பத்தி சொல்றதுக்கு அதிகமா இல்லையாம், நடுத்தர குடும்பத்த சேர்ந்த இவங்கள எல்லோரும் எழுதுன்னு ஊக்கம் குடுத்ததால அவங்களோட சிந்தனை சிறகுகளை விரிக்க வந்துடுக்காங்க. சாதி மதம் மேல் தனக்கு ஈர்ப்பு இல்லைன்னு சொல்ற இவங்க, இவங்கள பத்தின நம்மோட எண்ணங்கள அவங்களோட பகிர்ந்துக்கவும் சொல்றாங்க. கதை சொல்லப் போறேன்னு தான் ஆரம்பிக்கவே செய்துருக்காங்க, இப்போ தொடர் கதை வேற எழுத ஆரம்பிச்சுட்டாங்க. குட்டி குழந்தையோட மனநிலை பத்தி குழந்தையாவே மாறி கதையா சொல்லியிருக்காங்க பாருங்க, வாங்க, நாமளும் குழந்தையா மாறி இந்த கதைய ரசிக்கலாம். 
பிறந்தநாள் வேண்டுதல்

சரிங்க, இப்போ நமக்கு அறிமுகமானவங்க எல்லோருக்குமே இந்த பதிவர் உலகத்துல கண்டிப்பா அவங்களுக்கான அங்கீகாரத்த நாம குடுக்கணும்ங்க. அடுத்ததா நான் காலேஜ் போய் அங்க என்னோட பொறுப்புகள பாக்கணும்ல, அதனால அப்புறமா வந்து இன்னும் கொஞ்ச பேரை பத்தி பாக்கலாம். அதுவரைக்கும் நீங்களும் வீட்ல இருந்தா வீட்டு வேலை, ஆபிஸ்ல இருந்தா அங்க உள்ள வேலையெல்லாம் பாத்துட்டு, அப்புறமா அடுத்த அறிமுகங்கள பாக்க வந்துடுங்க. இப்போ கிளம்புவோம். 

26 comments:


  1. Miss G.T. அவர்களே:
    மிக மிக நன்றாக எழுதுகிறீர்கள். உங்கள் சேவை தொடரவேண்டும் என்று என் தமிழ்மணம் பிளஸ் +1 வோட்டு போட்டு உள்ளேன்,
    வாழ்க! தமிழ் வாழ்க!
    நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஓட்டு போட்டதுக்கும் வாழ்த்தியதுக்கும் தேங்க்ஸ்

      Delete
  2. இன்றைய உங்கள் ஏரியாவில் Subasree Mohan, விஸ்வப்ரியா - இரு தளங்களும் புதியவை... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் அண்ணா, நீங்க தான் எல்லா தளங்களுக்கும் போய்டுறீங்களே, அப்புறம் எப்படி புதுசா கண்டுபிடிக்குறது?

      Delete
  3. 2 thalangal thavira matrathu ellam puthusu akka. sendru padikkanum.. ungalathu adutha pathivukkaka waiting..

    ReplyDelete
    Replies
    1. நாளைக்கு அடுத்த பதிவு போடுறேன் மகேஷ்... கண்டிப்பா படி

      Delete
  4. அழகிய நடை. வாழ்க.வாழ்க !
    அவங்க எழுதின 'அப்பா' கவிதையை இங்கே போட்டிருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்போம்ல..:)

    ReplyDelete
    Replies
    1. கவிதை எல்லாம் படிக்கணும்னா லிங்க் கிளிக் பண்ணி போய் படிக்கணும். எல்லாத்தையும் இங்கயே போட்டா அப்புறம் அவங்க blog எழுதி என்ன யூஸ்?

      Delete
  5. வணக்கம்
    இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு தேங்க்ஸ்... தொடருங்க

      Delete
  6. அருமையான
    அறிமுகங்கள்.. பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ், உங்க பாராட்டுக்கு

      Delete
  7. அழகாகப் பதிவு செய்கிறீர்கள் காயத்ரி..வாழ்த்துகள்!
    அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. அவங்கள வாழ்த்தின உங்களுக்கு தேங்க்ஸ் :)

      Delete
  8. அறிமுகபடுத்தியதற்கு மகிழ்ச்சி டா.... பெரிய பெரிய எழுத்தாளர்களுடன் என்னையும் சேர்த்திருப்பதை நினைக்கும் போது மிக்க சந்தோஷமாக இருக்கு டா ....

    ReplyDelete
    Replies
    1. அம்மா, நீங்க சூப்பரா சிம்பிளா எழுதுறீங்க அம்மா :)

      Delete
  9. புதிய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள் பா. தீயா வேலை செய்றிங்க போல.... தீபாவளி வாழ்த்துக்கள். நான் ஊருக்கு செல்கிறேன். வந்து பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஊருக்கு போயிட்டு வந்து கண்டிப்பா பாருங்க... தீயாவா??????? அவ்வ்வ்வ் இந்த வாரம் முழுக்க நான் காலேஜ்ல பிசி

      Delete
  10. வாவ சூப்பர் என்னொட காயூ....ரொம்ப சந்தோஷமா இருக்குடா.....வாழ்க வளமுடன், நலமுடன்....

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் அக்கா, உங்களோட ஆசிர்வாதம் எப்பவும் எனக்கு வேணும்

      Delete
  11. ரொம்ப நன்றிடா கண்ணம்மா...

    ReplyDelete
    Replies
    1. இதுக்கெல்லாம் எதுக்குக்கா தேங்க்ஸ்? ஆனாலும் தேங்க்ஸ்க்கு தேங்க்ஸ்

      Delete
  12. வாழ்த்துக்கள் சிறந்த தள அறிமுகங்களுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. உங்க வாழ்த்துக்கு நன்றி :)

      Delete
  13. புதிய தளங்கள்... பலவகையான சுவையுடன் கூடிய தளங்கள் அறிமுகங்கள்... தொடர்ந்து அசத்து(றீ)ங்க.

    ReplyDelete
    Replies
    1. உங்க பாராட்டுக்கு தேங்க்ஸ்...

      Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது