07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, October 31, 2013

கதை சொல்றாங்கோ - கூடவே கவிதையும் தத்துவமும் வருது


ஆரம்பத்துல இருந்தே ஒரே யோசனை. எப்படியாவது ஒரு தத்துவத்த உங்க கிட்ட சொல்லியே ஆகணும்ன்னு. ஐய்யய்யோ தத்துவமா, ஆத்தா, எங்கள பாத்தா உனக்கு எப்படி இருக்குன்னு பதறிடவே பதறிடாதீங்க... அப்புறம், தத்துவத்த படிக்காம எஸ்கேப் ஆகிட கூடாது பாருங்க.... நான் தத்துவம் சொல்லியே தீருவேன்...

நாம ஒருத்தர் மேல அன்பு வச்சிருக்கோம்னு வைங்க, அந்த அன்பு எப்படி பட்டதா இருக்கணும் தெரியுமா? எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாம, நாம அன்பு வச்சிருக்குறவங்களோட சுதந்திரத்துலயும் தலையிடாம இருக்கணும். அப்போ தான் அந்த அன்பு கடைசி வரை நிலைக்கும்.

ஆனா நான் உங்க கிட்ட ஒரு எதிர்பார்ப்பு வச்சிருக்கேன். அது என்னன்னு சொல்லுங்க பாக்கலாம்.... சரி, நானே சொல்லிடுறேன், இப்போ நான் உங்களுக்கு இன்ட்ரோ பண்ண போற ப்ளாகர்ஸ் எல்லாரையும் நீங்க கைத்தட்டி உற்சாகமா வரவேற்கணும். அப்போ தானே அவங்களுக்கு உற்சாகமா இருக்கும், தொடர்ந்து எழுதுவாங்க...

சரி, கை தட்ட நீங்க ரெடி ஆகிட்டீங்க, இன்ட்ரோ பண்ண நான் ரெடி ஆக வேணாமா? வாங்க, ஒவ்வொருத்தரா பாப்போம்.

சிநேகம்னா நட்பு, மித்ரானாலும் நட்பு, இப்படி பெயர்லயே நட்பு நட்பு நட்பை தவிர வேறெதுவுமில்லைன்னு காற்று வெளியிடை பிரகடனப் படுத்திட்டே வராங்க இவங்க. நிறைய கவிதை எழுதியிருக்காங்க. கொஞ்சமா கதையும் எழுதியிருக்காங்க. இவங்களோட எழுத்துக்கள வாசிச்சா ரொம்பவே வித்யாசமா இருக்கு. கண்டிப்பா எல்லோரோட பார்வைலயும் பட வேண்டியவங்க இவங்க. பெண்களை பற்றி இவங்க எழுதுற விதம், அப்படியே நம்ம வீட்டு பெண்களையோ, இல்ல பக்கத்து வீட்டு பெண்களையோ பாத்த மாதிரி இருக்கு. இவங்களோட ஒரு கதை தான் இப்போதைக்கு படிச்சேன், அழ வச்சுட்டாங்க. என்னை அழ வச்ச அந்த கதையை படிச்சுட்டு நீங்களும் அழ வேண்டாமா, கிறுகிறுன்னு தலை சுத்த வச்சி, பிரசவிக்கவும் வச்ச இவங்க கதை இதோ இங்க.
குருனைக்கட்டி

இவங்க கிட்ட ஒண்ணு இல்ல, ரெண்டு இல்ல, மூணு ப்ளாக் இருக்கு. காரணம் இவங்களோட கனவுகள அவரோட தேவைகளுக்குள்ள அடக்கி வைக்கத் தெரியாம தேவைகள கனவுகள் போல விஸ்த்தரிசுக்கிட்டதா தன்னோட கண்மணி- தமிழும் கவிதையும்ல சொல்றாங்க.  வாழ்க்கை கடல்ல மூழ்கிடாம இருக்க, நீந்திக்கிட்டே இருக்குற பல்லாயிரக்கணக்கான படகுகள்ல இவங்களும் ஒண்ணுன்னு சொல்லிட்டு, இந்த சமூகத்தின் மேல இருக்குற கோபத்த, வருத்தத்த, ஆற்றாமைய வாய்ப்பு கிடைச்சதும் எப்படி கொட்டியிருக்காங்கன்னு பாருங்க. இது மட்டுமில்ல, இன்னும் நிறைய இருக்கு.

வாழ்க்கை எனபது நீ சாகும் வரை அல்ல, மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரைனு ஒரு தத்துவத்த சொல்லிட்டு, தமிழின் தோன்றல் காதல் சார்ந்தவைனு நமக்கு தெரியப்படுத்துறார் இவர். மூணு வருசமா எழுதிட்டு இருக்கார். மனசுல தோணுற கவிதை, கதைன்னு ஒரு கலவை இவரோட வலைப்பூ முழுக்க இருக்கு. அதிகமா போஸ்ட் இல்லனாலும், இனிமேல் அதிகமா இவங்கள எழுத வைக்க வேண்டியது நம்ம எல்லோரோட பொறுப்பு. ஒரு பொண்ணோ பையனோ வயசுக்கு வரது இயற்கை, அதுவே பாலினம் மாறி வயசுக்கு வந்தா??? அதுவும் இயற்கை தான்னு நாம கண்டிப்பா ஏத்துகிட்டு தானே ஆகணும். அது பத்தி இவங்க என்ன சொல்றாங்கன்னு பாருங்க
குமரி


சுவாதியும் கவிதையும்ன்னு தலைப்பை பாத்தாலே இது கவிதைகளுக்கான ப்ளாக்னு உடனே நம்ம மனசுக்குள்ள தோணிரும். குட்டி குட்டியா நிறைய எழுதி இருக்காங்க இவங்க. அதுல அனுபவம் அதிகமா கலந்து இருக்கு. அனுபவம்னா எல்லோரோட அனுபவங்களும் தாங்க. படிச்சு முடிச்சதும், அட ஆமாலன்னு நாம நமக்கு நாமே சொல்லிப்போம். கவிதைன்னு நினச்சு படிக்க ஆரம்பிச்சா, தத்துவமா கொட்டி தீத்துடுறாங்க. அப்படி என்ன சொல்லியிருக்காங்கன்னு பாக்கணும்னா நீங்க ஒரு சாம்பிள் இப்போ பாக்கணும். இந்தா பாருங்க.
முகங்கள்


இவங்க கவிதைகள் எழுதுறதுக்காகவே வலைப்பூ ஆரம்பிச்சுருக்காங்கன்னு நினைக்குறேன். ரொம்ப குறைவான அளவே போஸ்ட் பண்ணியிருக்காங்க. ஆனாலும் கவிதைகள் மேல இவங்களுக்கு இருக்குற காதல் இங்க சாரல்லா பொழிஞ்சிருக்காங்க. இவங்க என்னை விட பெரியவங்களான்னு கூட எனக்கு தெரியாது. ஆனாலும் இவங்க இன்னும் நிறைய கவிதைகள் எழுதணும்னு ஊக்கம் குடுக்க வேண்டியது நம்மோட கடமை தானே. ஒரு குழந்தை வச்சு விளையாடிய காகித கப்பலையும், ஒரு இளைஞனோட பார்வைல அது தொனிக்குற விதத்தையும் இங்க விவரிச்சுருக்கார். அப்படி என்ன எழுதி இருக்கார்னு இங்க பாக்கலாம்.

நான் இப்போ டையர்ட் ஆகிட்டேன். அதனால இந்த பட்டாம்பூச்சி இப்போ ரெஸ்ட் எடுக்க போகுது. அப்புறமா பிரெஷா வேற பூக்கள்ல தேன் தேடி போகணுமே. அதனால இப்போதைக்கு ரெஸ்ட். ரெஸ்ட் ஆப் தி இன்ட்ரடக்சன் நெக்ஸ்ட்... கொர்ர்ரர்ர்ர்.....   


17 comments:

  1. Bhuvana Ganeshan, தமிழ்ச்செல்வி, saaral hema - இந்த மூன்று தளங்களும் புதியவை... தேடித் படித்து அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்...
    http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/charity.html

    ReplyDelete
    Replies
    1. நான் உங்க பதிவு பாத்துட்டேன் அண்ணா.... ஒரு சந்தோசம், உங்களுக்கே நான் புதுசா அறிமுகப்படுத்துறேன்... அவ்வவ்வ்வ்வ்

      Delete
    2. நமக்குள்ள தேங்க்ஸ் எல்லாம் எதுக்கு அக்கா

      Delete
  2. வணக்கம்
    இன்று வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...தொடருகிறேன் பதிவுகளை
    இனியதீபாவளி வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தொடர்வதுக்கு தேங்க்ஸ் :)

      Delete
  3. // எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாம, நாம அன்பு வச்சிருக்குறவங்களோட சுதந்திரத்துலயும் தலையிடாம இருக்கணும்.

    யோசிக்க வைத்தீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா, உண்மை தானே அது, இல்லனா ஒரு பறவைய பிடிச்சு கூண்டுக்குள்ள அடச்சு வச்ச மாதிரி தான் இருக்கும்

      Delete
  4. ரசித்த்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்;
    மறு மொய் எனக்கு வைக்கவேண்டும் என்று உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன?

    ReplyDelete
    Replies
    1. எப்படி பாத்தாலும் நானும் ஒரு மொய் தானே வைக்க முடியும், வச்சுட்டேன் வச்சுட்டேன்

      Delete
  5. நாம அன்பு வச்சிருக்குறவங்களோட சுதந்திரத்துலயும் தலையிடாம இருக்கணும். அப்போ தான் அந்த அன்பு கடைசி வரை நிலைக்கும்.உண்மை... உண்மை...

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா, அது தான் உண்மை உண்மை உண்மை....

      Delete
  6. புது புது தளங்களை தேடி பகிர்ந்தமை சிறப்பு! அனைவருக்கும் வாழ்த்துக்கள்! சென்று பார்க்கிறேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. எல்லோரையும் வாழ்த்திய உங்களுக்கு ஒரு பெரிய தேங்க்ஸ்

      Delete
  7. இன்றைய வலைசாரத்தில் எல்லோருமே எனக்குப் புதியவர்கள்தான். நல்ல (தளங்கள்) அறிமுகம்...

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது