07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, October 20, 2013

நன்றி பாராட்டும் நேரமிது.....







நன்றி பாராட்டும் நேரமிது.....


வலைச்சர ஆசிரியர் பணிக்காக, நான் எந்த தளம் சென்றாலும் 
அங்கே திண்டுக்கல் தனபாலன் சார் ஏற்கனவே அறிமுகமாகி 
அங்கு கருத்துரையிட்டிருந்தார்.அவரது தேடலையும்  மீறி 
என்னால் புதிதாக தளங்கள் கண்டு பிடிப்பது கொஞ்சம் கஷ்டமாக 
தான் இருந்தது.(எனது பதிவுகளை தமிழ் மணத்தில் 
இணைத்ததோடு மட்டுமில்லாமல் என் அறிமுகங்களை 
மற்றவர்களுக்கு தெரியபடுத்தியமைக்கும்  மிக்க நன்றி சார் ) 

மேலும் நான் செல்லும் தளங்கள் எல்லாம் ஏற்கனவே வலைச்சரத்தில் அறிமுகமாகி இருந்தது. வலைச்சரத்தில் அறிமுகமாகாத தளங்கள் கண்டு பிடிக்க நான் கஷ்டபட்ட போது தான், வலைச்சரம் அடைந்திருக்கும் புகழை 
தெரிந்து கொள்ள முடிந்தது 

இப்போது நன்றி பாராட்ட வேண்டிய நேரத்திற்கு வந்து விட்டேன்.


"பாடல் சிறப்பாக உள்ளது
உண்மையில் தொடர்ந்து முயன்றிருந்தால்
உச்சம் தொட்டிருப்பீர்கள்"

என்று நான் எழுதிய சினிமா பாட்டு ஒன்றிற்கு இப்படி வாழ்த்து 
தெரிவித்து உற்சாகபடுத்திய தீதும்நன்றும் பிறர் தர வாரா ரமணி சார், 
என் சிறுகதை ஒன்றை படித்து உங்க மேல எதிர்பார்ப்பு ஜாஸ்தியாகுது 
சரவணன் என்று சொன்ன அஹமது இர்ஷாத், அன்போடு அண்ணன் 
என்று உரிமை பாராட்டி வரும் நண்பர் சே.குமார்மற்றும் இணையத்தில் அறிமுகமாகியவரை நான் சந்திக்க சென்ற போது என் தயக்கத்தை 
விரட்டி அடித்து என்னுடன் தோழமையுடன் பழகிய கரந்தை ஜெயக்குமார், எனது கதையின கேரக்டருக்கு ரசிகனாகி விட்டேன் என்று சொல்லிய பாலாவின் பக்கங்கள் பாலா, மற்றும் கரைசேராஅலை அரசன்திடங்கொண்டு போராடும் சீனு ........ இப்படி தொடரும் நண்பர்களின் 
ஊக்கம் தான் என் எழுத்து மேம்பட உதவி செய்கிறது 




எனை ஆசிரியராய் அமர்த்திய சீனா அய்யா மற்றும் தமிழ்வாசி பிரகாஷ் 
அவர்களுக்கும் , இந்த ஒரு வாரமும் தொடர்ந்து வந்திருந்து எனை 
வாழ்த்தி உற்சாகபடுத்தி கருத்துரையிட்ட நண்பர்களுக்கும் 
எனது இதயம் நிறை நன்றியும் வாழ்த்துக்களும்   

"பல கோடி பேரை உறவாக ஏற்றிருந்தாலும் அடுத்து பிறக்க போகும் 
குழந்தைகளையும் ஏற்கும் அளவு இதயத்தில் இடமிருக்கும்" 

இவ் வரிகளை ஜக்கி வாசுதேவ்  கட்டுரையொன்றில் படித்தேன்  




பல நூறு நண்பர்களை பெற்றிருந்தாலும் புதிதாய் வர போகும் 
நண்பனுக்கும் நம் வாழ்க்கையில் இடமிருக்கும் என்பதை 
குறிப்பிட்டு திருப்தியுடன் விடை பெறுகிறேன் நன்றி வணக்கம் 

ஆர்.வி. சரவணன் 

34 comments:

  1. மிக்க நன்றி...

    நாங்கள் தான் நன்றி சொல்ல வேண்டும்... சிறப்பாக ஆசிரியர் பணியை முடித்தீர்கள்... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றிகள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி தனபாலன் சார்

      Delete
  2. பாராட்டுகள் நண்பா!!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி நண்பா

      Delete
  3. உங்கள் பதிவுகளை மொபைலில் வாசித்ததால் கமெண்ட்ட வில்லை...

    தொடக்கம் முதல் இன்று வரை.... அருமையாக எல்லாமே சரியாக திட்டமிட்டு பகிர்ந்து இருந்திங்க...

    வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி பிரகாஷ்

      Delete
  4. சிறப்பாக சென்ற வாரப் பணிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சசிகலா

      Delete
  5. அருமையாக வலைச்சர ஆசிரியப் பணியை நிறைவேற்றியுள்ளீர்கள் சகோதரரே!

    மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி இளமதி

      Delete
  6. வணக்கம் அய்யா,
    மிகச் சிறப்பாக வலைச்சரத்தில் ஆசிரியர் பணியை செய்திருப்பதற்கு வாழ்த்துக்கள். மறவாமல் நன்றி பாராட்டியிருக்கிருக்கும் குணம் கண்டு வியந்தேன். தவிர்க்க முடியாத பணியால் வலைச்சரம் பக்கம் வந்தும் கருத்திட முடியவில்லை. நல்லதொரு பணிக்கு வாழ்த்துக்களுடன் கூடிய நன்றி அய்யா.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி பாண்டியன்

      Delete
  7. Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஸ்கூல் பையன்

      Delete
  8. அன்பின் சரவணன் அவர்களுக்கு,
    நன்றியும் நல் வாழ்த்துக்களும் என்றும் உரியன!..
    வாழ்க.. வளமுடன்!..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சார்

      Delete
  9. சூப்பர்..... வாழ்த்துகள்.... (நான் கை தட்டுறது கேக்குதா?)

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி காயத்ரி தேவி

      தங்களின் கை தட்டலுக்கும் சேர்த்து தான் சொல்கிறேன்

      Delete
  10. சிறப்பான பணி...
    பாராட்டுக்கள் அண்ணா...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி வெற்றிவேல்

      Delete
  11. வெற்றி-கரமாக- பணியினை சிறப்புடன் செய்தமைக்கு
    எனது கைகுலுக்கல்கள் சரவணன்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

      Delete
  12. சிறப்பினைப் பாராட்டாதவன்
    நிச்சயம் சிறந்தவனாக இருக்கச் சாத்தியமில்லைதானே
    அருமையான வலைச்சர வாரம் தந்தமைக்கு
    மனம்மார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சார்

      Delete
  13. என்னையும் நினைவு கூர்ந்தமைக்கு நன்றிங்க சரவணன்...உங்கள் பண்பு மிகவும் பாராட்டத்தக்கது... ஆசிரியர் பணியை சிறப்பாக முடித்தமைக்கு வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

      Delete
  14. உங்கள் மனசுக்குள் நானும்...
    நன்றி அண்ணா...
    அருமையான வாரமாக்கிய உங்களுக்கு நாங்கள்தான் நன்றி சொல்ல வேண்டும்...
    தொடர்ந்து குடந்தையூரில் கலக்குங்கள் அண்ணா...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

      Delete
  15. நன்றி ஐயா. நட்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

      Delete
  16. ஆசிரியர் பணியைச் சிறப்பாக செய்து எங்களை மகிழ்வித்தீர்கள். உங்கள் எழுத்து இன்னும் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

      Delete

  17. சிறப்புடன், பொறுப்புடன் பணியாற்றி உள்ளீர்கள்.. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

      Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது