வாங்க காப்பி (யங்கள்) பருக !
➦➠ by:
தென்றல் சசிகலா
இதமான காலை வணக்கம் உறவுகளே. பொதுவாக நண்பர்கள் ஒன்றாக கூடினால் என்ன பேசுவாங்க ?
தாம் பார்த்த அல்லது நேற்று நிகழ்ந்த அல்லது கேள்விப்பட்ட நிகழ்வைப் பற்றித்தான் பேசுவாங்க. அதுபோல நானும் நேற்று படித்த புத்தகம் பற்றி தங்களிடம் பகிர்ந்து அதற்கான சரியான விளக்கங்கள் தங்கள் பின்னூட்டங்கள் மூலம் தெரிந்து கொள்கிறேன்.
ஐம்பெரும் காப்பியங்களில் வளையாபதி குண்டலகேசி பற்றிபடித்ததை பகிர்கிறேன். விவரமான தகவல் தெரிந்தவர்கள் பகிருங்கள். அனைவருக்கும் உதவும் அல்லவா ?
சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி ஆகியவை ஐம்பெரும் காப்பியங்கள் என வழங்கப்படுவது நாம் அறிந்ததே.
இதில் முதல் மூன்று நூல்களும் முழுமையாகக் கிடைக்கப்பெற்றுள்ளன. வளையாபதி ,குண்டலகேசி ஆகிய இருநூல்கள் முழுமையாக கிடைக்கவில்லை. வளையாபதி 72 பாடல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன் ஆசிரியர் பெயரும் தெரியவில்லையாம்.
குண்டலகேசி என்னும் நூலில் 19 பாடல்களே கிடைக்கப் பெற்றுள்ளன. இது விருத்தப்பாவால் அமைந்துள்ளமையின் குண்டலகேசி விருத்தம் எனவும் அழைக்கப்படுகிறது.
இது பௌத்த சமயத்தைச் சார்ந்த நூலாகும். இந்நூலாசிரியர் நாதகுத்தனார் ஆவர்.
வளையாபதி அருகக் கடவுள் வாழ்த்து
உலகம் மூன்றும் ஒருங்குடன் ஏத்துமாண்
திலகம் ஆய திறல்அறி வன்அடி
வழுவில் நெஞ்சொடு வாலிதின் ஆற்றவும்
தொழுவல் தொல்வினை நீங்குக என்று யான்.
விளக்கம் : மூன்று உலகங்களில் உள்ளவர்களும் ஒருசேரத் துதித்துப் போற்றும் சிறப்புடையவர் அருகப்பெருமான் ஆவார். மாண்புடைய இவ்வுலக உயிர்களுக்குத் திலகம் போன்று விளங்கும் அந்தப் பெருமானின் தூய திருவடிகளைத் தொழுவேன். குற்றமில்லாத நெஞ்சத்துடன் சிறந்து விளங்கவும் பண்டை வினைகள் தொலையவும் அந்த இறைவனைத் தொழுது போற்றுகிறேன்.
ஒருங்குடன் - ஒன்றிய மனத்துடன் : வாலிதின் - உறுதியுடன் :
தொல்வினை - பண்டைவினை : முற்பிறப்பில் செய்தவினை.
சிறந்த மனிதப்பிறவி
உயர்குடி நனிஉள் தோன்றல்
ஊனமில் யாக்கை ஆதல்
மயர்வறு கல்வி கேள்வித்
தன்மையால் வல்லர் ஆதல்
பெரிதுணர் அறிவே யாதல்
பேரறம் கோடல் என்றாங்கு
அரிதிவை பெறுக லோடே
பெற்றவர் மக்கள் என்பார்.
மக்களாய்ப் பிறந்தாலும் உயர்குடியில் தோன்றுதல் அரிது. அங்ஙனம் தோன்றினாலும் கூன் குருடு செவிடு முதலான குறைபாடுகள் இல்லாமல் பிறத்தல் அரிது. பிறவித்துன்பமாகிய மயக்கத்தைப் போக்கும் ஆன்ம வளர்ச்சியை இனிது உண்டாக்கும் கல்வி கேள்விகளில் சிறந்து வல்லமை பெறுதல் அரிது.
இங்ஙனம் மெய்யுணர்வு தரும் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினாலும் அவற்றிற்கேற்ப நல்லறத்தை மேற்கொண்டு ஒழுகுதல் அரிது. மேற்கூறிய அனைத்தையும் ஒருங்கு பெற்றவரே சிறந்த மனிதப்பிறவி அடைந்தவராவார்.
உயர்குடி - ஒழுக்கம் மிகுந்த குலம் : மயர்வு - அஞ்ஞானம்.
தமிழ்மக்கள் இந்நூலை கற்றுணர இவ்விதம் அழகாக தெளிவுரையோடு புத்தகமாக தந்திருக்கும் புலவர் ப.இராசேந்திரன் அவர்களை வணங்கி நன்றி தெரிவித்து. இன்றைய அறிமுகங்களை பார்ப்போமா ?
இவங்க மற்றவர்களிடமும் மற்றவர் இவரிடமும் அன்பை மட்டும் எதிர்பார்க்கிறாங்களாம் இப்படி எல்லா மனிதர்களும் இருந்து விட்டால் நாட்டில் பிரச்சனையே இருக்காது இல்லையா ? இவங்க தனது அறிமுகத்தை இப்படி கொடுத்து விட்டு என்ன என்ன பதிவிடுறாங்க பார்க்கலாம் வாங்க.
முகநூல் அறிமுகமான ஒரு சகோதரர் தென்றலை படித்து விட்டு தனக்கும் இப்படி எழுத ஆர்வம் என்று சொன்னாங்க. நானும் ஒரு வலை ஆரம்பித்து கொடுத்து எழுதச்சொன்னேன். தம்பி பிரகாஷ் வலை தொடங்குவது பற்றி பதிவிட்டது இப்படி என்னைப் போன்றவர்களுக்கு எத்தனை உதவியா இருக்கு பாருங்க. நன்றி தம்பி. சரி இந்த சகோதர் முதல் பகிர்வை ஆதி முதல்வனுக்கு நன்றி சொல்லும் விதமாக பகிர்ந்திருக்காங்க இன்னும் என்ன என்ன சொல்றாங்க வாங்க பார்க்கலாம்.
எனக்கு திருவண்ணாமலையில் ஒரு தோழி இருக்காங்க அவங்க பெயரும் சசிகலா. எனக்கு சரியா வராதா ஒரு கலையை அவங்க எத்தனை அழகா தெரியுமா செய்றாங்க. அதற்க்காக ஒரு வலையும் துவங்கி இருக்காங்க வாங்க பார்க்கலாம். ஆமாங்க அழகாக கோலம் போடுறாங்க.
அடுத்து நம்ம சகோ சீனு நடத்திய போட்டியில் கலந்து சிறப்பிக்கவே ஒரு வலை துவங்கி எழுத ஆரம்பித்த பதிவர் இவர் பெயர் நாகராசன் இவர் தமிழ் மீது உள்ள பற்றை இனி வரும் தலைமுறைகள் தாம் இன்று மறந்தும் மறுத்தும் அந்நிய மொழியை திணிக்கும் பெற்றோருக்கு மழலைகளை வைத்தே மம்மி டாடி என்று அழைக்காதே அம்மா அப்பா என்று அழகுத் தமிழால் அழைக்க கற்றுத்தருகிறார். வாங்க பார்க்கலாம்.
இவர்கள் எல்லாம் தங்களுக்கு புதியவராக இருந்தால் தொடர்ந்து அவர்கள் எழுத உற்சாகம் தரும் பின்னூட்டங்களைத் தந்து ஊக்கப்படுத்துவோம் வாருங்கள். மீண்டும் நாளை சந்திப்போம் உறவுகளே.
|
|
This comment has been removed by the author.
ReplyDeleteநாட்டில் பிரச்சனையே இருக்காது உண்மை தான்... முதல் அறிமுகத்தின் இணைப்பை சரி செய்ய வேண்டும்...
ReplyDeleteஇரு தளங்கள் புதியவை... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
என்னவென்றே தெரியவில்லை. காலையில் பதிவிடவும் அத்தனை சிரமமாக இருந்தது. அறிமுகப்பகிர்வுகளை டைப் செய்து விட்டு பார்க்கிறேன் காணவில்லை. இப்போது தான் சரியானது. மிக்க நன்றிங்க.
Deleteஇப்படி செந்தமிழில் போட்டு தாக்கறீங்க! எங்களுக்கும் புரியும் தமிழில் எழுதினால் நாங்களும் பங்கேற்க முடியும்!
ReplyDeleteபுரியும் படி தானே இருக்கிறது. சரிங்க புரியும் தமிழில் எழுத முயற்சிக்கிறேன். மிக்க நன்றிங்க.
Deleteகடைசி ஒருவர் புதியவர். பார்த்துட்டு வரேன்
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க அக்கா.
Deleteவாங்க காப்பி (யங்கள்) பருக !
ReplyDeleteஅழகான தலைப்புடன்
அருமையான அறிமுகங்கள்..
பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..!
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteஅருமையான அறிமுகங்கள்..
ReplyDeleteபாராட்டுக்கள்..வாழ்த்துகள்
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteஅருமையான அறிமுகங்கள்
ReplyDeleteஅருமையாகவும் அறிமுகம் செய்துள்ளீர்கள்
தொடர வாழ்த்துக்கள்
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க ஐயா.
Deleteஅறிமுகங்கள் தொடரட்டும் ....தொடர்ந்து தொடர முடியுமா என்பது சந்தேகமே என்றாலும் தொடர்கிறேன்.
ReplyDeleteநேரம் இருக்கும் போது வாங்கப்பா. மிக்க மகிழ்ச்சி. வருகைக்கும் நன்றியும்.
Deleteஅருகக் கடவுள் வாழ்த்து, அதன் விளக்கம்
ReplyDeleteசிறந்த மனிதப்பிறவி பற்றிய செய்யுள், அதன் விளக்கம் எல்லாமே புதிதாக இருந்தது. காப்பியங்கள் பருக எங்களையும் அழைத்துச் சென்றது மகிழ்ச்சியாக இருந்தது. இந்த மாதிரி எளிமையாக இவற்றைக் கொடுத்தால் எல்லோருக்குமே பயன்படும். புலவர் பு. இராசேந்திரன் அவர்களுக்கு நன்றி.
முதல் இணைப்பு சரியாக இல்லை. தயவு செய்து சரி செய்யவும்.
புதியவர்களுக்கு நல்வரவு மற்றும் வாழ்த்துக்கள்!
முதல் இணைப்பை சரி செய்து விட்டேன். தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteஇனிய அறிமுகங்கள்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteஅழகுத் தமிழும் அறிமுகங்களும் நன்று சசி !
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteஅறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவளையாபதி குண்டலகேசி அறிமுகத்திற்கும் நன்றி
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteசிறப்பான விளக்கமுடன் நல்ல அறிமுகங்கள்!
ReplyDeleteபார்க்கின்றேன். அறிமுகப்படுத்திய உங்களுக்கும்
அறிமுகப் பதிவர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்!
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteஅறிமுக பதிவர்கள் அனைவருமே எனக்கு புதியவர்கள். அவர்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி!
ReplyDeleteதங்களையும் வலையில் எங்கும் பார்க்க முடியவில்லை. நலம் தானே ஐயா.
Deleteஅன்பின் சசிகலா - இன்று கூட தங்களின் மறுமொழிக்கு முன்னதாகவே ஒரு பதிவு போட்டிருக்கிறாரே - பார்க்க வில்லையா ? http://puthur-vns.blogspot.com/2013/10/72.html
Deleteநல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ஐயா என் டேஸ் போர்ட்டில் தான் சரியாக காண்பிக்க வில்லை. அல்லது நான் கவனிக்கவில்லை. மன்னிக்கவும். தகவலுக்கு நன்றி.
Deleteசிறப்பான அறிமுகங்கள். அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteவாழ்த்துக்கள்..
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteஅன்புடன் காப்பி(யங்கள்) வழங்கியமைக்கு மிக்க நன்றி!..
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteவாழ்த்துக்கள்! அறிமுக உரை நன்று! தொடருங்கள்!
ReplyDeleteதங்கள் ஆசியுடன் தொடர்கிறேன். மிக்க மகிழ்ச்சிங்க ஐயா. நன்றியும்.
Deleteகவிதை மட்டுமல்லாமல் கட்டுரைகளும் அழகாகவே உங்களுக்கு எழுத வருகிறது. அறிமுக பதிவர்களை ஊக்குவிப்பதும் ஒரு கலைதான்.... உங்களுடைய இந்த பதிவில் அதுவும் தெரிகிறது.. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஹஹ கட்டுரை எழுத இன்னும் நான் கற்க வேண்டும் நிறைய.. இது சும்மா நினைப்ப தை எழுதியதுங்க. மிக்க நன்றிங்க.
Deleteவணக்கம்
ReplyDeleteஇன்று வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteநல்ல காபிங்க :) நன்றி!
ReplyDeleteஅப்படியா .. மிக்க மகிழ்ச்சிங்க.
Deleteதொடக்கவுரை நன்றாக இருந்தது
ReplyDeletehttp://www.srmuniv.ac.in/tamilperayam/tamil_courses/Lessons/MA_Tamil/I_Year/matt03/html/mat03008bp5a.htm
குண்டலகேசி பற்றிய விளக்கவுரை படிக்க பகிர்ந்தமைக்கு நன்றிங்க. புத்தகத்தில் அதுவும் இருக்கிறது. மற்ற நண்பர்களுக்கு உதவும்.
Deleteஅருமையாக அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்.
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துகள்.
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteரொம்ப ரொம்ப தேங்க்ஸ் சிஸ்டர், என்னை இங்க அறிமுக படுத்தி வச்சதுக்கு... இப்போ பி.ஹச்.டி பண்ணிட்டு இருக்கேன், அது தான் அதிகமா ஆன்லைன் வர முடியல, இந்த blog கூட எனக்கு எதுவுமே தெரியாது, என்ன பண்ணனும்னு தெரியாம தான் எதோ எழுதிட்டு இருக்கேன். நிறைய கவிதைகள் படிக்க யாருமே இல்லாம அப்படியே இருக்கு, பாக்கலாம், நீங்க எல்லாம் எனக்கு ஊக்கம் குடுத்தா கண்டிப்பா நல்லா எழுதுவேன். உங்க எல்லோரோட பதிவுகள நான் எனக்கு தெரிஞ்ச வரைக்கும் படிச்சு கமன்ட் போடுறேன். தேங்க்ஸ்
ReplyDeleteமிக்க நன்றி சகோதரி படிக்கும் போதே வந்த தங்கள் தமிழ் ஆர்வத்திற்கு மிக்க மகிழ்ச்சி. இயல்பான எழுத்து நடையில் எழுதுறிங்க. தொடருங்கள். கண்டிப்பாக ஊக்கப்படுத்த நாங்கள் இருக்கிறோம்.
Deleteகாப்பிய விளக்கங்களுடன் அறிமுகங்கள் அசத்தல்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteஅறிமுகங்களை அழகாய் தந்தீர்கள்...
ReplyDeleteதொடருங்கள்...
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteநீங்கள் அறிமுகம் செய்த இளம் பதிவர்கள் எண்ணில் உயர்ந்தவர்கள் (காயத்ரி தேவி), தென்றலின் வாசம் (மேலூர் ராஜா), சசியின் கோலங்கள் மற்றும் கவிச்சோலை ( கவி நாகா) – ஆகிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஆமாங்க இங்கு வருகை தந்து வாழ்த்தியமைக்கும் நன்றிங்க.
Deleteசிறிய அறிமுகப்பகுதியே ஆயினும் சிறப்பாக உள்ளது.
ReplyDeleteமுதலில் கொடுக்கப்பட்டுள்ள ஐம்பெரும் காப்பியங்கள் பற்றிய விளக்கங்கள் மிக அருமையாக உள்ளது.
எல்லாவற்றையும் விட தலைப்பு அசத்தலாக உள்ளது.
மிகப்பெரிய டவரா டம்ளரில், ஸ்ட்ராங் டிகாக்ஷனை ஊற்றி, திக்கான தரமான பாலையும் காய்ச்சிக் கலந்து, மிதமாக சர்க்கரைபோட்டு, சூடான ஸ்ட்ராங் காஃபியை ஒரு ஆத்து ஆத்தி சொட்டுச்சொட்டாக ருசித்துச் சாப்பிட்ட திருப்தி ஏற்பட்டது.
பாராட்டுக்கள்.
ஐயா தங்களின் அற்புதமான காபி வர்ணனையில் பருக வேண்டுமென்கிற ஆவல் பிறக்கிறது. நன்றிங்க ஐயா.
Deleteஅன்பின் சசிகலா
ReplyDeleteவிதிமுறைகளின் படி குறைந்த பட்சம் ஐந்து பதிவுகளாவது அறிமுகப் படுத்தப் பட வேண்டும். இவ்விதி தங்களின் பார்வைக்கு வரவில்லை போலும் . எதிர்காலத்தில் இவ்விதியினை நினவில் கொள்க.
பதிவு அருமை - அனைத்துச் சுட்டிகளையும் சுட்டி, சென்று, பார்த்து, படித்து, மகிழ்ந்து, மறுமொழியும் இட்டு வந்தேன் - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ஐயா இந்த விதியினை இப்போதே அறிந்தேன். போன முறை நிறைய பதிவுகளை அறிமுகம் செய்து படிப்பவர்களுக்கு போய் பார்க்க சிரமம் இருந்ததாக தெரியவே இந்த முறை அந்த யுத்தியை தவிர்த்தேன். இருப்பினும் ஐவர் என்பதை நினைவில் வைத்துக்கொள்கிறேன்.
Deleteசசிகலா அம்மா..
ReplyDeleteஇன்றைய நான்கு அறிமுகங்கள் அருமை...ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்!
♥ ♥ அன்புடன் ♥ ♥
S. முகம்மது நவ்சின் கான்.(99likes)
www.99likes.blogspot.com
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். மிக்க மகிழ்ச்சிங்க. தங்கள் வலையையும் பார்வையிட்டு வந்தேன். தொழில் நுட்ப பதிவுகள் சிறப்புங்க.
Deleteசசிகலா அம்மா.. தொடர்ந்தும் உங்கள் ஆதரவினை எதிர்பார்கிறேன் . .. நன்றி..
Delete♥ ♥ அன்புடன் ♥ ♥
S. முகம்மது நவ்சின் கான்.(99likes)
Arumaiyaana arimugangal.. paarthuttu varren..
ReplyDeleteவணக்கம் சசிகலா.
ReplyDeleteபதிவு அருமை. வாழ்த்தக்கள்.
தவிர முன்னால் சொன்ன காப்பியங்களில் குண்டலகேசி,
வலையாபதி இவை இரண்டின் மூலங்களையும் நான் படித்ததில்லை.
அவைகள் எங்கே கிடைக்கும்?
தெரியப்படுத்தினால் மகிழ்வேன். நன்றி.
வணக்கம் தோழி.
ReplyDeletehttp://www.srmuniv.ac.in/tamilperayam/tamil_courses/Lessons/MA_Tamil/I_Year/matt03/html/mat03008bp5a.htm
இந்த லிங்க்கிலும் புத்தகமாகவும் கடைகளில் கிடைக்கிறது.
புதியவர்களை .... புதியமுறையினால் அறிமுகப்படுத்தியதற்கு முதற்கன் வணக்கங்கள்...
ReplyDeleteஎன்னைப் போல புதியவர்களுக்கு அறிமுகமும் செய்து மற்றவர்களின் பார்வைக்கும் கொண்டுசென்று அவர்களின் வாழ்த்தையும் பெரும்போது..அந்த மகிழ்வுக்கு இனையாக எந்த வார்த்தை பயன்படுத்தினால் சரியாக இருக்கும் என்று அறியவில்லை..
இருந்தும் குழந்தையின் பசியறிந்து நிலவைக்காட்டி பால்சோறு ஊட்டும் அண்ணை தான் அந்த மகிழ்வுக்கு பொருத்தமான வாக்கியம்..
வாழ்த்துங்கள் வளர்கின்றோம்..
நன்றிகளுடன்..
தென்றலின்வாசம்