அறிவோம் அறிவியல்....
➦➠ by:
காயத்ரி தேவி
அதுக்காக நாளைக்கு வர மாட்டேன்னு நினைக்காதீங்க, காலைல வருவேன்ல....
சரி சரி, இப்போ எல்லோரும் கொஞ்சம் அறிவியல் படிக்கலாம், வாங்க...
செவ்வாய் கிரகத்தில பூமியை விட அதிக அளவில் பாஸ்பேட் தாது இருப்பதா ஆய்வு ஒன்று தெரிவிச்சிருக்காம். உயிரினங்கள் வாழ தேவையான முக்கியமான தாதுல பாஸ்பேட்டும் ஒன்றுங்குரதால பூமியைப் போலவே செவ்வாயிலும் உயிரினங்கள் இருக்கலாம்னு ஒரு நம்பிக்கை வருது. எப்படி ஆரம்ப காலத்துல பூமி இருந்துச்சோ அப்படிதான் செவ்வாய் கிரகமும் இருக்குறதா வி்ஞ்ஞானிங்க தெரிவிச்சிருக்காங்க. பூமியின் இயற்கை வளங்களை சுரண்டி தீர்த்துக் கொண்டிருக்கும் மனித இனம் அடுத்து செவ்வாய் மீது கண் வச்சிருக்கு. செவ்வாயில் மனிதன் வசிக்க முடியுமான்னு உங்களுக்கு சந்தேகம் இருந்தா இத பாருங்க.
செவ்வாய்க்கு போகலாமா?
சரிங்க, அவர் தான் செவ்வாய்க்கு போகலாம்ன்னு சொல்றார்னா இங்க ஒருத்தர் என்னனமோ சொல்றார் பாருங்க. அப்படி என்ன தான் சொல்றார்னு கேக்குறீங்களா? அவ்வ்வ்வ் நாம எல்லாம் பூமியில தோன்றவே இல்லையாம். அதாவது பூமியில உயிர் செவ்வாய் கிரகத்துல இருந்து தான் வந்துச்சாம். எப்படி எப்படின்னு நானும் தான் ஆச்சர்யமா பாத்தேன். நீங்களும் தான் படிங்களேன்
நாம் எல்லாரும் ஏலியன்கள், மார்ஸியர்கள்
உயிர் இருக்குறதெல்லாம் இருக்கட்டும்ங்க, தங்கம் எங்க இருக்கும்? அத நம்மளால பயிரிட முடியுமா? ஹையய்யோ ஷாக் ஆகிடாதீங்க. இந்த தங்கம் பெரும்பாலும் நிலத்தடியில் தனி நிலையிலேயே ரேகை மாதிரி பாறைகள்ல படர்ந்திருக்கும். இந்த தங்கம் சுரங்கங்கள்ல இருந்து தோண்டி எடுக்கப்படுது. பாறைகளில் வெடி வச்சு தகர்த்துத் தங்கத்தை இரசாயன (வேதியியல்) முறையில் பிரிச்செடுக்கிறாங்க. இது நமக்கு தெரிஞ்ச விஷயம் தான், ஆனா இங்க இவங்க வேற மாதிரியும் சொல்றாங்க. அப்படி என்ன சொல்றாங்கன்னு தான் கேப்போமே
தங்கத்தை உருவாக்கும் பாக்டீரியா
இப்போ தங்கம் விக்குற விலைல, இது எங்களுக்கு தேவையாக்கும்னு முணுமுணுக்காதீங்க, அத விட முக்கியமான ஒரு விசயத்த பத்தி இவர் சொல்றார். தங்கத்த விட முக்கியமா? ஆமாங்க, எரிபொருள், அதாங்க, இந்த பெட்ரோல் டீசல், இதெல்லாம். நமக்கு ரொம்ப ரொம்ப முக்கியம் தானே. இத எந்த நேரத்துல நாம நம்ம வண்டிகளுக்கு போடணும்னு நேரம் காலம் எல்லாம் பாக்கணுமாம். ஏன்? ஏன்? ஏன்? அட, படிச்சு பாத்து தெரிஞ்சுக்கோங்க
உங்கள் வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்ப போறீர்களா?
விலைவாசி இப்படியே ஏறிகிட்டு போனா ஒரு நாள் உலகம் இப்படியே அழிய வேண்டியது தான்னு சில பேர் சொல்ல நான் கேட்டுருக்கேன். கொஞ்ச நாள் முன்னாடி பூமி அழிய போகுது, பூமி அழிய போகுதுன்னு பெருசா பீதிய கிளப்பினாங்களே, அதெல்லாம் நீங்க கண்டிப்பா மறந்துருக்க மாட்டீங்க. அதுல கருந்துளை அதாவது ப்ளாக் ஹோல் அப்படின்னு ஒரு பெயர் அடிபட்டுருக்கும். இந்த கருந்துளைனா என்னது? அத வச்சு ஏன் பூமி அழிய போகுதுன்னு சொன்னாங்க? இதுக்கெல்லாம் ரொம்ப ரொம்ப சுருக்கமா விடை சொல்லியிருக்காரு இவரு. வாங்க படிப்போம்.
கருந்துளைகள் (black hole): ஒரு அறிமுகம்
இதெல்லாம் படிச்சுட்டு நானே தலை சுத்தி போயிட்டேன்னா பாத்துக்கோங்களேன். பட்டாம்பூச்சி ரெஸ்ட் எடுக்க ஒரு இடம் தேடி தான் அலஞ்சுது. ஆனா மாத்தி மாத்தி இதெல்லாம் படிச்சதால உடனே ஒரு கப் தேன் குடிச்சே ஆகணும். அதனால உலகத்துலயே பெரிய பூ எதுன்னு தேடி கண்டுபிடிச்சி வைங்க, நான் வந்து தேன் குடிக்குறேன். அது வரைக்கும், டாட்டா... பை பை....
இதெல்லாம் படிச்சுட்டு நானே தலை சுத்தி போயிட்டேன்னா பாத்துக்கோங்களேன். பட்டாம்பூச்சி ரெஸ்ட் எடுக்க ஒரு இடம் தேடி தான் அலஞ்சுது. ஆனா மாத்தி மாத்தி இதெல்லாம் படிச்சதால உடனே ஒரு கப் தேன் குடிச்சே ஆகணும். அதனால உலகத்துலயே பெரிய பூ எதுன்னு தேடி கண்டுபிடிச்சி வைங்க, நான் வந்து தேன் குடிக்குறேன். அது வரைக்கும், டாட்டா... பை பை....
|
|
அறிவியல் தளங்களை - புதிய தளங்களை பார்த்து விட்டு வருகிறேன்...
ReplyDeleteகண்டிப்பா பாத்துட்டு வாங்க அண்ணா
Deleteந்த... கலக்குற போ...
Deleteஅறிவோம் ஆயிரம், ProfessorRamesh,- இரு தளங்களும் புதியவை... ஆனால் பல மாதங்களாக பகிர்வுகள் இல்லை... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
Deleteதேங்க்ஸ் சிவக்குமார் அண்ணா
Deleteநானும் கவனிச்சேன் அண்ணா, ஆனாலும் இதை பாத்தாவது மறுபடியும் எழுத மாட்டாங்களான்னு தான்
Deleteதங்கம் .. தங்கம் ..ன்னு தங்கமான அறிமுகப் பதிவுகள்.. நல்ல செய்திகள் தங்கும் படியான பதிவுகள்.. வாழிய நலம்!..
ReplyDeleteதேங்க்ஸ். எல்லா பதிவையும் படிச்சுட்டு சொல்லுங்க
Deleteஅறிவுச் சாரம் நிரம்பிய பதிவுகளின் இன்றைய அறிமுகங்கள் அனைத்தும் பயன்தரக் கூடியவை. நல் அறிமுகங்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கு தேங்க்ஸ்
Deleteமார்ஸ் பற்றிய பதிவை அறிமுகப்படுத்தியதற்கும், அதை தெரிவித்த திண்டுக்கல் தனபாலன் சாருக்கும் நன்றி
ReplyDeleteஉங்க நன்றிக்கு ஒரு நன்றி
Deleteஅறிவியல் தளங்கள் அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteதேங்க்ஸ் உங்க வாழ்த்துக்கு
Delete[[அதுக்காக நாளைக்கு வர மாட்டேன்னு நினைக்காதீங்க, காலைல வருவேன்ல....]]
ReplyDeleteவாங்க! நல்ல பதிவு.
என் தமிழ்மணம் + 1 வோட்டு போட்டு விட்டேன்!
தொடர்ந்து எழுதுங்கள்!
நன்றி!
ஓட்டு போட்டதுக்கு தேங்க்ஸ்.... இப்போ அறிமுகம் பண்ணவங்களையும் பாருங்க
Deleteவணக்கம்
ReplyDeleteவலைச்சர அறிமுங்கள் அனைத்தும் சிறப்பு......தொடருகிறேன் பதிவுகளை..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உங்களோட வாழ்த்துக்கு நன்றி
Deleteninga lost week valaicharam aasiriyara poruppu erkka kupittu irukkuranga sonnappo kuda koncham payanthen eppadi ninga sariya oru varam valaicharam aasiriyar poruppa etru nadathuvingalonu, 1 masam tan akuthu ungalukku theriyuma entru.. but 2 nala 4 pathiva eluthi maruthuvam ariviyal nu thani thaniya arimukam paduthurathu super akka. oru anupavam mikka pathivar pola eluthuringa akka. thodarnthu ungal pani mudikka valthukkal. ninga arimuka paduthiya thalangal senru padikkanum...
ReplyDeleteதேங்க்ஸ் மகேஷ்... கண்டிப்பா எல்லா blog ம் போய் படி
Delete