07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, October 29, 2013

என்னாச்சி? ஓ... கலக்குறாங்களா?


ஹலோ, நான் மறுபடியும் வந்துட்டேன். அப்புறம், எங்க இருந்தாலும் நம்ம வேலைய கரெக்ட்டா பண்ணணுமா இல்லையா? நமக்கு தான் இங்க வேலை இருக்கே.... அதுவும் ரொம்ப ஜாலியான வேலை...

சரி சரி, காப்பி குடிச்சவங்க எல்லாம் இங்க வந்து உக்காருங்க, டீ, போர்ன்விட்டா, கார்லிக்ஸ் குடிச்சவங்க கூட உக்காரலாம். ஆனா இது எதுவுமே குடிக்காதவங்க, முதல்ல போய் ரெப்ரெஷ் பண்ணிட்டு வாங்க... ஏன்னா நாம இப்போ பாக்க போற சில அறிமுகங்கள நாம ரொம்ப உன்னிப்பா கவனிக்க வேண்டி இருக்கு.... அதனால தான் மனச ரிலாக்ஸ்சா வச்சுக்கிட்டு இவங்கள எல்லாம் வரவேற்கணும்ன்னு நான் ஆசைப்படுறேன்.

அவ்வ்வ்வ், ஓவர் பில்ட் அப் வேணாம் (நான் என்னை சொன்னேன்), நாம இப்போ என்னப் பண்ண போறோம்னு சொல்லுங்க?

எங்களுக்கு என்ன தெரியும், நீ தானே ஒரு வாரம் எங்க உயிரை வாங்க போற, நீயே சொல்லுனு சொல்றீங்களாக்கும்? இங்க எல்லாம் என்னைய ஆசிரியர்ன்னு சொல்லிட்டாங்களா? நீங்களும் நம்பிட்டீங்கலாக்கும்? அதெல்லாம் இல்லீங்க, இதோ மேடைல இருந்து குடு குடுன்னு ஓடி வந்து, உங்க பக்கத்து சீட்ல உக்காந்துட்டேன். வாங்க இப்போ எல்லோரும் சேர்ந்து கொஞ்சம் ட்ரைலர்ஸ் பாக்கலாம்

எண்ணங்கள எழுத்துல கொண்டு வந்து கலக்கு கலக்குன்னு கலக்கிட்டு இருக்குற சில பேர் தான் இவங்க

முதல்ல நாம பாக்க போற வலைப்பூ கவிதைக்காரன் [நண்பர்களின் கூடாரம்].  கொல்லுஞ்சொல் விடுத்து குறும்புன்னகை அணிந்து எள்ளுஞ்சொல்லையும் இமயமாய் பார்க்கும் எழுத்துக் குழந்தை இவர். இவர் எனக்கு பிடிச்ச எழுத்தாளர்... இல்லல, கவிதைக்காரர், அவ்வ்வ்வ் எல்லாம் கலந்த கலவை. இவரோட ப்ளாக்ல ஏகப்பட்ட பதிவுகள் முத்து முத்தா கொட்டிக் கிடக்கு. ஆனாலும் திரட்டிகள் எதுலயும் இணைக்கப்படாததால இது புதைஞ்சு போன பொக்கிசமா மாறிடுச்சு. வாங்க, வாங்க, நாம இப்போ இத தோண்டி எடுத்து, ஊரை விட்டு வந்த ஒரு உழைப்பாளியின் குழந்தையாய் எப்படி எல்லாம் தன்னோட உணர்வுகள கொட்டுறார்னு பாப்போம்.
அப்பாவும் தென்னைமரங்களும்

அடுத்தது அகரமிட்டு சிகரம் தொடு . எண்ணங்களின் எழுத்துக்களை தேடும் தமிழ் பித்தன்னு தான் தன்னையே அறிமுகப்படுத்திக்குறார். இவர் கிட்ட இருந்து நமக்கு ஒரு பாராட்டு கிடைக்காதான்னு ஏங்க வைக்குற சிறந்த ரசனையாளர், விமர்சகர்... ஹைய்யோ, நான் ஏதாவது உலறுறேனான்னே தெரியல, அவ்வளவு மரியாத எனக்கு இவர் மேல. இவரோட வலைப்பூவுக்குள்ள போனாலே நாம கொஞ்சம் நடைமுறை தமிழ மறந்துடுவோம். ரசிச்சதாகட்டும், மேற்கோள் காட்டுறதாகட்டும், கவிதை எழுதுறதாகட்டும் பிச்சு உதறிடுறார். தேன் நிலவுக்கு போனவர்களின் பயணமும், தேடலும், சிந்தனையும் கொஞ்சல்களையும் நாமளும் ரசிக்கணுமா? அப்போ இத படிங்க
தேன் நிலவு

சிலரோட கவிதைகள படிக்கும் போது நாமளும் அப்படியே அந்த கவிதை பொருளா மாறிடுவோம். ஆரம்ப காலத்துல இவரோட கவிதை படிச்சுட்டு அதுவும் ரெண்டு மூணு தடவ படிச்சுட்டு (அப்போலாம் நான் ரொம்ப மக்கு, இப்போ கொஞ்சம் மக்கு) எப்படிண்ணே... இப்படின்னு கேட்டுட்டே இருப்பேன். அட, பில்ட் அப் போதும், ஆள சொல்லுன்னு நீங்க சொல்றது கேக்குது, அவர் தான் இந்த பூமிக்கு சொந்தக்காரர். நம் முன்னோர் நமக்கு பத்திரமாக விட்டுச் சென்ற இந்த பூமியை நம் சந்ததிக்கு நாம் பத்திரமாக விட்டுச் செல்ல கடமைப் பட்டவராவோம்னு நம்மோட கடமைய நமக்கு உணர்த்துறார். நிறைய கவிதைகள் இருந்தாலும், மனநலம் பாதிக்கப்பட்டவங்க பார்வைல இவர் என்ன சொல்ல வரார்னு நீங்களே படிச்சு பாருங்களேன்.
மனநலம் பாதித்தவர்கள் பார்வையில் 

படித்தது எனக்காக, பகிர்வது உங்களுக்காகன்னு தான் Sherkhan அறிமுகத்தையே ஆரம்பிக்குறார் இவர் . இதுல இருந்து உங்களுக்கே புரிஞ்சிருக்குமே, தான் ரசிச்ச விசயங்கள இங்க ஏராளமா நம்மோட பகிர்ந்துக்குறார்னு. இங்க கிடைக்காத தகவலே இல்லங்குற மாதிரி சினிமா விமர்சனம்ல இருந்து கம்ப்யூட்டர் பத்தின தகவல் வர எல்லாமே ரொம்ப ரொம்ப கொட்டிக் கிடக்கு. இப்போதைக்கு இலவசமா ஆயிரக்கணக்குல தமிழ் புத்தகங்கள எப்படி தரவிறக்கம் பண்ணறதுன்னு தனக்கு தெரிஞ்ச தகவல பகிர்ந்திருக்கார். வாங்க வாங்க, நீங்களும் இத பாத்து தமிழ் புத்தகங்கள டவுன்லோட் பண்ணிக்கோங்க.
இலவசமாக 1000க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் தரவிறக்க

இப்போ நான் என்னோட தம்பிய பத்தி சொல்லியே ஆகணும். நான் இதுவர உங்ககிட்ட கைகாட்டினவங்கள பத்தி உங்களுக்கு தெரியுமோ தெரியாதோ, ஆனா தம்பி மகேஷ் பத்தி நீங்க எல்லாம் நல்லாவே தெரிஞ்சு வச்சிருப்பீங்க. நான் மறுபடியும் இந்த வலைதளத்துல எழுத ஆரம்பிக்குறது அவன் கிட்ட தான் உதவியே கேட்டேன். ஹஹா அவன் இல்லனா நான் இங்க இப்போதைக்கு வந்துருக்க மாட்டேன். விழியின் ஓவியம் -மா  அவன் இங்க அழகா தன்னோட உணர்வுகள தீட்டிட்டு இருக்கான். அவனை பத்தி நான் சொல்றத விட, அவனுக்கு என்னென்ன பிடிக்கும்ன்னு நீங்களே தெரிஞ்சுக்கோங்க.
மறக்க முடியாத நாளும், பதிவுலகில் ஆல் டைம் மை ஃபேவரெட் பெண் பதிவரும்..

இனி, நாளைக்கு இன்னும் கொஞ்ச பேர பாப்போம். இப்போதைக்கு, இதெல்லாம் படிச்சுட்டு அவங்களுக்கு ஊக்கம் குடுக்குற மாதிரி கமண்ட்ஸ்சும் குடுத்துட்டு, உங்களோட சொந்த வேலைகள், குழந்தை குட்டிகளை படிக்க வைக்குறதுன்னு வேலை இருந்தா அத எல்லாம் முடிச்சுட்டு நிம்மதியா போய் தூங்குங்க. பின்ன, நாளைக்கு காலைல நான் இன்னும் கொஞ்சம் அறிமுகங்களோட மறுபடியும் வருவேன்ல. டேக் கேர்...

38 comments:

  1. வணக்கம்
    இன்று வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் அத்தோடு அருமையாக தொகுத்து வழங்கிய உங்களுக்கு எனது பாராட்டுக்கள்....தொடருகிறேன் பதிவுகளை

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுனதுக்கு தாங்க்ஸ்..... அவங்க எல்லாரோட பதிவையும் படிச்சு கமன்ட் போட்ருங்க...

      Delete
  2. காயத்ரி தேவி (ஜி.டி) அம்மா அவர்களே...
    உங்கள் பணி தொடரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. அம்மாவா.......................... அவ்வ்வ்வவ்வ்வ்... ஏங்க தங்கச்சின்னு கூப்டுங்க, பயமா இருக்குல

      Delete
  3. தமிழ் மனம் வோட்டு பிளஸ் + 2 போட்டு விட்டேன்.
    நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஓட்டு போட்டதுக்கு தேங்க்ஸ்

      Delete
  4. prakash sona, சிவக்குமார் - இவர்களின் தளம் புதிது... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நீங்க வேற அண்ணா, நீங்க இல்லாத ப்ளாக்கா தேடி தேடி எனக்கு தலை தான் சுத்துது. நீங்க கண்டுபிடிக்காத blogs எப்படியோ ரெண்டு புடிச்சுட்டேன்..... thank God

      Delete
  5. நீங்களும் கலக்கு கலக்குன்னு கலக்கிட்டு இருக்குறீங்க... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. அருமையான அறிமுகங்கள்.. பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு தேங்க்ஸ்... கண்டிப்பா எல்லா பதிவுகளையும் பாருங்க

      Delete
  7. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்......

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி :)

      Delete
  8. அன்பின் சகோதரி!.. நல்ல தளங்களை அறிமுகம் செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. வாழிய நலம்.

    ReplyDelete
    Replies
    1. நல்ல தளங்கள உங்களுக்கு குடுக்க வேண்டியது என்னோட கடமை ஆச்சே. வாழ்த்தியதுக்கு தேங்க்ஸ்

      Delete
  9. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
    உங்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. எல்லோரையும் வாழ்த்திய உங்களுக்கு தேங்க்ஸ்

      Delete
  10. இது வரை தெரியாதவர்களின் அறிமுகங்கள் சிறப்பான தொகுப்பு தோழி. வாழ்த்துக்கள். சென்றும் பார்வையிட்டு வந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. போய் எல்லா blogs பாத்ததுக்கு தேங்க்ஸ் சிஸ்டர்..

      Delete
  11. வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அவங்கள வாழ்த்திய உங்களுக்கு தேங்க்ஸ்

      Delete
  12. வலைச்சரத்தில் அறிமுகம் செய்ததற்கு நன்றி காயத்ரி.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகள் சிவா... நிறைய எழுதுங்கள்

      Delete
    2. அவ்வ்வ்வ் அண்ணா, நோ நோ.... இது என் கடமை. நல்லா இருக்குறதால தானே அறிமுகப்படுத்துறோம்

      Delete
    3. அண்ணாவ வாழ்த்திய உங்களுக்கு தேங்க்ஸ் மேடம்

      Delete
  13. வலைச்சர அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள். அனைவரின் பதிவுகளையும் பார்வையிடுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்தியதுக்கு தேங்க்ஸ்.... பார்வையிட்டு எல்லார் பதிவும் தொடர்ந்து படிக்கணும்

      Delete
  14. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்......

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திய உங்களுக்கு தேங்க்ஸ்

      Delete
  15. ஒருவரைத் தவிர மற்றவர்களெல்லாம் புதியவர்கள் தான் கண்டிப்பாக சென்று பார்க்கிறேன்
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா பாருங்க, நல்லா எழுதுவாங்க

      Delete
  16. வலைச்சரத்துக்கும் எனை செம்மை படுத்தி மேம்படுத்தி கொள்ள இங்கு இழுத்து விட்ட அம்மணிக்கும் நன்றிகள் மற்றும் உம் பணி சிறக்க வாழ்த்துகள் மேலும் எனை பற்றிய உங்களது பார்வையில் எழுதிய கருத்துகள் கொஞ்சம் தூக்கல் தான்... எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் தளமோ இது ...நன்று கிட்டதட்ட எல்லா புது எழுத்தாளரும் குழுமும் இவ்வலைச்சரத்தை காண்கையில் கதம்ப சரமாய் தெரிகிறது ..எனை எழுத தூண்டியவாறு எனை போன்றோரை வாழ்த்திய உங்கள் அனைவருக்கும் நன்றிகள் & வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. அஹா.... அண்ணா, உங்க இந்த நன்றியும் வாழ்த்துமே சொல்லுமே நான் சொன்னதுல தப்பே இல்லன்னு அவ்வ்வ்வ்

      Delete
  17. nethu morning intha post padichitten ana class ku pora avasarathula comment elutha mudiyala akka.
    arimuka padithiya 3 per oda valaipuv theriyum, 1 mattum theriyathu.

    apparam rompa thanks akka eppadiyo rompa nal kalichu ennoda pathiva nan unga mulama padikka mudinjathu.. time kidaikkumpothu elutha oru arvam vanthu irukku.. parkkalam..

    ReplyDelete
    Replies
    1. நிறைய எழுது மகேஷ், வாழ்த்துகள்

      Delete
  18. கார்த்திக்,பிரகாஷ்.மகேஷ் அளவுக்கு (சொந்தமாக) எழுததெரியாத எனையும் இக்(அறிவாளி)கூட்டத்தில் இணைத்து..சந்தோஷப்படுத்திய உங்களுக்கு என் நன்றியே (ரொம்ப) தாமதமாக தெரிவிப்பதற்கு..வருத்தம் தவிர்க்கவும்.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா அண்ணா...உங்க blog-ல எல்லா தகவலும் இருக்கே... தொடர்ந்து போஸ்ட் போடுங்க அண்ணா..

      Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது