வணக்கம் பல முறை சொல்வேன் !
➦➠ by:
அறிமுகம்,
தென்றல் சசிகலா
வலைச்சர ஆசிரியராய் ஆன்றோரும் சான்றோரும் அழகாய் அமர்ந்த இடத்தினிலே எனக்கொரு அங்கீகாரம் தந்து அமர்த்திய தமிழ்வாசி பிரகாஷ், சீனா ஐயா உள்ளிட்ட வலைச்சரக் குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றியை உரித்தாக்கி ....
நானே அது நானே
தென்றலாகிய நானே - மீண்டும்
வலைச்சர ஆசிரியரும் நானே...
அடிக்க வந்துடாதிங்க..பாட்டெல்லாம் எனக்கு பாடத்தெரியாது.
சரிங்க முதலில் அறிமுகம் என் பெயர் சசிகலா.
வலை உலகம் வந்த பிறகு தென்றல் சசிகலா என்றால் தான் எல்லோருக்கும் தெரியும்.
பிறந்த ஊர் வந்தவாசி பக்கத்தில் இருக்கும் அம்மையப்பட்டு கிராமம். மண் வாசத்தை சுவாசித்து, மனிதர்களை நேசித்த அண்ணாமலையாரின் இளைய புதல்வி. விவசாயின் மகள் என்பதில் பெருமிதம் அடைகிறேன்.
அன்பும் அடக்கமும் நிறைந்த ராஜகுமாரி எங்க அம்மா. பெயருக்கு தகுந்த மாதிரி ராஜகுமாரியா எல்லோர் இதயத்திலும் இன்னமும் வாழ்ந்து கொண்டு இருக்காங்க... பொதுவாக எல்லா அம்மா அப்பாவும் அவங்க குழந்தைங்க செய்கிற சேட்டைகளை ரசிப்பவங்க. அது போல எங்க வீட்டில் சேட்டைக்காரி நான் தான் அப்பா " அம்மா சமையல் நல்லா இருக்கா ? . என் சமையல் நல்லா இருக்கா ?என்று கேட்டு இருவரையும் சண்டை போட வைத்து விட்டு சிரித்துக்கொண்டிருப்பேன்." இரட்டைப்பிறவி தம்பியிடம் வம்பிழுத்து சரியான அடி கொடுப்பேன். அக்கா சரஸ்வதி தேவியின் சிநேகத்தில் இருந்ததால் அவர்களிடம் சகஜமாக இருக்க வில்லை. மரியாதை கலந்த பாசம் மட்டும் . ஆனா அக்கம் பக்கத்து சகோதரிகள் போல அடித்து பிடித்து விளையாட வில்லை என் ற ஏக்கம் உண்டு. அதை என் கவிதை வரிகளிலும் சொல்லி இப்போதே அக்காவுக்கு தெரியப்படுத்தினேன். சென்ற ஆண்டு முதல் பதிவர் சந்திப்பில் எனது முதல் கவிதை வெளியீடு நடந்தது. வலை உலக உறவுகள் அனைவரும் வந்து பாராட்டி வாழ்த்தினாங்க. அவர்கள் வாழ்த்துக்களால் வளர்கிறேன்.
எனது சேட்டைகளை வீட்டில் ரசிக்கும் கணவர் மற்றும் குழந்தைகளும் வந்திருந்தாங்க. அனைவருக்கும் மீண்டும் மீண்டும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டு. அன்றைய நிகழ்வை காணொலியில் கண்டு மகிழ இங்கே கிளிக் செய்யவும்.இன்றைய என் அறிமுகத்தில் இதை விட சொல்ல என்ன இருக்கு...
தென்றலைப்பற்றி சக உறவுகள் என்ன சொல்றாங்க கேட்போமா ?
எனது அறிமுகத்திற்கு என்று எனது பகிர்வுகளை நானே திரும்பிப் பார்க்கும் போது கண்ணில் பட்டவை அனைவரின் வாழ்த்தையும் பகிர முடியாது என்பதால் வாழ்த்திய அனைவருக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்து.. விழித்தூண்டிலில் சிக்கியவற்றை வெளியிடுகிறேன்.
தி.தமிழ் இளங்கோ
"தென்னாட்டிலே தென்றல் என்றொரு பொருள் உண்டு ; தனியே அதற்கொரு சுகம் உண்டு. வசந்த காலத்தில் தெற்கேயிருந்து அசைந்து வரும் தென்றலின் சுகத்தை நன்றாக அறிந்தவர் தமிழர்; வடக்கேயிருந்துவரும் குளிர்காற்றை " வாடை" என்றார்கள் ; தெற்கேயிருந்து வரும் இளங்காற்றைத் " தென்றல்" என்றார்கள் . வாடையென்ற சொல்லிலே வன்மையுண்டு; தென்றல் என்ற சொல்லிலே மென்மையுண்டு . தமிழகத்தார் வாடையை வெறுப்பர்; தென்றலின் மகிழ்ந்து திளைப்பர்."
-பேராசிரியர் ரா.பி.சேதுப்பிள்ளை.
-பேராசிரியர் ரா.பி.சேதுப்பிள்ளை.
தார்மீகக் கோபமும் நாட்டு உண்மைநிலையும் அதற்கான் தீர்வும்
கலந்து தந்த மே தினப் பதிவு அருமை
தங்கள் படைப்புகளைத் தொடர்ந்து படித்துவந்தாலே
நல்ல கவிதைகள் யாரும் படைக்கலாம் என்கிற
நம்பிக்கை பிறக்கிறது
மனம் கவர்ந்த பதிவு.
கலந்து தந்த மே தினப் பதிவு அருமை
தங்கள் படைப்புகளைத் தொடர்ந்து படித்துவந்தாலே
நல்ல கவிதைகள் யாரும் படைக்கலாம் என்கிற
நம்பிக்கை பிறக்கிறது
மனம் கவர்ந்த பதிவு.
அருமை
எப்போதுமே சுண்டைக்காய் கால் பணம்
சுமைகூலி முக்கால் பணம் எனத்தான்
வாழ்வின் சூழல் உள்ளது அருமையான சிந்தனை பதிவு
தொடர வாழ்த்துக்கள்
எப்போதுமே சுண்டைக்காய் கால் பணம்
சுமைகூலி முக்கால் பணம் எனத்தான்
வாழ்வின் சூழல் உள்ளது அருமையான சிந்தனை பதிவு
தொடர வாழ்த்துக்கள்
கவிதையின் ஊடாக கதையும் பின்னியிருக்கிறீர்கள். வலிமையான தமிழ் வார்த்தைகளால் எங்கள் மனதையும் பின்னி விட்டீர்கள் தென்றல். மற்றவரின் வயிறெரியப் பெறும் எதுதான் நிலைக்கும்...? பிரமாதம் கருத்தும், சொன்ன நடையும். நாளுக்கு நாள் உங்கள் எழுத்து உ(ய)ரம் பெற்று வருவதைக் கண்டு நான் மிகமிக அகமகிழ்கிறேன்.
''...எண்ணிய தெழுதுகிறேன்
எனக்கென எழுதவில்லை...''
என்று பல கருத்துகள் அலசியுள்ளீர்கள் சகோதரி. உங்கள் எழுத்துகள் பல நல்ல வினைகள் புரியட்டும். வாழ்த்துகள் சகோதரி.
வேதா. இலங்காதிலகம்.
எனக்கென எழுதவில்லை...''
என்று பல கருத்துகள் அலசியுள்ளீர்கள் சகோதரி. உங்கள் எழுத்துகள் பல நல்ல வினைகள் புரியட்டும். வாழ்த்துகள் சகோதரி.
வேதா. இலங்காதிலகம்.
தோழி... குழந்தைகளை கவனமாக வளர்த்த பல பெற்றோர்கள் நிற்கதியாக ஆனாதை இல்லங்களிலும், முதியோர் இல்லங்களிலும் உள்ளனர்... கல்நெஞ்சம் கொண்டு வயதான பெற்றோர்களை நிற்கதியாக்கிய நபர்கள் இந்த கவிதையை பிடித்து தங்கள் பெற்றோர் வளர்க்க சிரமபட்ட நிகழ்வுகளை எண்ணி பார்க்கவேண்டும்.. உங்கள் கவிதை அருமை!
எழுத்து
மதியையும் மனதையும்
நேர்கோட்டில் இணைக்கும்
ஒருவித தவம்
மதிக்கும்
மனத்திற்கும் அவ்வப்போது
தர்கங்கள் ஏற்படும்
தர்காக்கள் நீளுமாயின் கலைந்துவிடும்
நம் தவம்
நகைப்போர்
தூற்றுவோர்
நம்மைச் சுற்றிக்கொண்டு இருப்பார்கள்
ஒருசில நகைப்பு தூற்றலுக்காக நம் தவத்தை கலைப்பது
அழகல்ல
எழுத்தாய்
உருவெடுக்கும்
நல்ல எண்ணங்கள் சிந்தனைகள்
நாளைய தலைமுறையை
நெறிப்படுத்துகிறது
நிறைய எழுதுங்கள் தோழி.
மதியையும் மனதையும்
நேர்கோட்டில் இணைக்கும்
ஒருவித தவம்
மதிக்கும்
மனத்திற்கும் அவ்வப்போது
தர்கங்கள் ஏற்படும்
தர்காக்கள் நீளுமாயின் கலைந்துவிடும்
நம் தவம்
நகைப்போர்
தூற்றுவோர்
நம்மைச் சுற்றிக்கொண்டு இருப்பார்கள்
ஒருசில நகைப்பு தூற்றலுக்காக நம் தவத்தை கலைப்பது
அழகல்ல
எழுத்தாய்
உருவெடுக்கும்
நல்ல எண்ணங்கள் சிந்தனைகள்
நாளைய தலைமுறையை
நெறிப்படுத்துகிறது
நிறைய எழுதுங்கள் தோழி.
வரிகள் தொறும் அருமை-வாரி
வழங்குகிறாய் தமிழுக்குப் பெருமை.
சென்னை பதிவர்
சென்று வந்த சசியம்மா...
உன் பதிவை யாரும்
குறை சொல்ல முடியுமா..
மட மடன்னு கவிதை எழுதும் சசியம்மா..
உன் கவிதை வரி அத்தனையும் சந்தோஷமம்மா....
சென்று வந்த சசியம்மா...
உன் பதிவை யாரும்
குறை சொல்ல முடியுமா..
மட மடன்னு கவிதை எழுதும் சசியம்மா..
உன் கவிதை வரி அத்தனையும் சந்தோஷமம்மா....
எங்கே எங்கே என்று எங்கே சென்றாலும் இப்போது எளிதில் பார்க்க முடியாத இன்பங்களை இங்கே தங்கள் கவிதையில் படித்து நினைவுக்குக் கொண்டுவந்ததில், மனதைத் தென்றல் வருடியது போல இன்பமாக உள்ளது..
பாராட்டுக்கள், பகிர்வுக்கு நன்றிகள்.
பாராட்டுக்கள், பகிர்வுக்கு நன்றிகள்.
தென்றலை தேடி எங்கும் செல்ல வேண்டாம் உங்கள் வலைதளம் வந்தாலே போதுமே.
மூக்குத்தி போட்டுக்கத்தான்
மூக்கொழுகி ராசாத்திக்குத்தான்
மூக்குமேல வந்த ஆசையைக்கேட்டு
மூக்கால அழுவுறா ஆத்தாளும்.
பொன்னு வக்கிற இடத்திலே
பூ வக்கத் தெரியாதா பொண்ணுக்கு?
மூக்குத்திப் பூக்குத்தி மனசத்தான்
தேத்திக்குவா அந்த மவராசி!
மனசத் தொடுற கவிதைபாடி
மயங்கவைக்கிறா இந்த சசி!
மூக்கொழுகி ராசாத்திக்குத்தான்
மூக்குமேல வந்த ஆசையைக்கேட்டு
மூக்கால அழுவுறா ஆத்தாளும்.
பொன்னு வக்கிற இடத்திலே
பூ வக்கத் தெரியாதா பொண்ணுக்கு?
மூக்குத்திப் பூக்குத்தி மனசத்தான்
தேத்திக்குவா அந்த மவராசி!
மனசத் தொடுற கவிதைபாடி
மயங்கவைக்கிறா இந்த சசி!
இளமதி அழகா பூத்த ரோசாப்பூ !":
அழகா பூத்தது ரோசா மட்டுமா.. உங்க கவிதையும்தான் ...:)
ஆளை மயக்கும் அற்புத கற்பனை!
சிற்பமோ.. சித்திரமோ.. உங்கள் கற்பனையில் உயிர்பெற்றுவிடும்!
மிக அருமையான நாட்டுப்புறக் கவிதை!
தென்றல் வருடிய சுகம்!
அழகா பூத்தது ரோசா மட்டுமா.. உங்க கவிதையும்தான் ...:)
ஆளை மயக்கும் அற்புத கற்பனை!
சிற்பமோ.. சித்திரமோ.. உங்கள் கற்பனையில் உயிர்பெற்றுவிடும்!
மிக அருமையான நாட்டுப்புறக் கவிதை!
தென்றல் வருடிய சுகம்!
கிராமத்து வாசத்தை உங்களின் தளத்தில் ஒவ்வொரு வரியிலும் பார்க்க முடிகிறது. ஆத்தோரம், தோப்போரம் என்று வரிகளிலாவது ஆறையும், தோப்பையும் நான் உங்கள் மூலம் தரிசித்துக் கொள்கிறேன்.
கவிதையின் மண்வாசனை கணினியைத் தாண்டியும் என் நாசிகளைத் துளைக்கிறது.
கவிதையின் மண்வாசனை கணினியைத் தாண்டியும் என் நாசிகளைத் துளைக்கிறது.
அருமைத் தங்கை சசிகலா! அருமை தங்கள் படைப்பு!
சும்மா “சாப்பாடு நல்லா இருந்துச்சு“ன்னு வாயால சொல்றத விட, வெக்கப்படாம “இன்னும் கொஞ்சம் பாகக்கா வறுவல் வைங்க“ன்னு கேட்டு வாங்கறதுதானே உண்மையான பாராட்டு? நான் உங்கள் வாலைப் படைப்புகளைத் தொடர்கிறேன் என் கவித்தங்கையே உன் பயணம் தொடரட்டும். பக்கததிலேயே முமு., வெண்ணிலா வேற இருக்காங்க... அப்புறமென்ன கலக்குங்க... அண்ணனின் வாழ்த்துகள்.
சும்மா “சாப்பாடு நல்லா இருந்துச்சு“ன்னு வாயால சொல்றத விட, வெக்கப்படாம “இன்னும் கொஞ்சம் பாகக்கா வறுவல் வைங்க“ன்னு கேட்டு வாங்கறதுதானே உண்மையான பாராட்டு? நான் உங்கள் வாலைப் படைப்புகளைத் தொடர்கிறேன் என் கவித்தங்கையே உன் பயணம் தொடரட்டும். பக்கததிலேயே முமு., வெண்ணிலா வேற இருக்காங்க... அப்புறமென்ன கலக்குங்க... அண்ணனின் வாழ்த்துகள்.
தாய்மொழியில் பா உருவில் என்றும் வாழ்ந்திருப்பாய், கவிதாயினி.
எளிய நடையில் அழகிய கவிதை வரிகள்.....
நேசம் மனதில் தொடங்கிவிட்டால் கவிதை வரிகள் அனாயசமாக அழகாக வெளிப்பட ஆரம்பிக்கிறது சசி....
காதல் எனும் வாசம் மனதில் மலர்ந்திருக்கும்போது எங்கிருந்து நேரம் காலம் தெரிவது? தூக்கமும் வராது.... உணவும் இறங்காது....பகையை கூட காதல் தன் வசமாக்கிவிடும் என்று அறியமுடிகிறது.... காதல் வந்த வழி எது தேடிச்செல்லும் அழகு அலாதி..... நேசத்தை என்றும் அழியா தமிழுக்கு ஒப்பாக்கி உயிருக்கு ஒப்பாக்கி....
இருந்தாலும் இல்லையென்று ஆனாலும் உன் உருவில் வாழ்ந்திருப்பேன் என்று முடித்திருப்பது மிக அழகு சசி...
அன்பு வாழ்த்துகள் சசி அழகிய கவிதை வரிகளுக்கு.
நேசம் மனதில் தொடங்கிவிட்டால் கவிதை வரிகள் அனாயசமாக அழகாக வெளிப்பட ஆரம்பிக்கிறது சசி....
காதல் எனும் வாசம் மனதில் மலர்ந்திருக்கும்போது எங்கிருந்து நேரம் காலம் தெரிவது? தூக்கமும் வராது.... உணவும் இறங்காது....பகையை கூட காதல் தன் வசமாக்கிவிடும் என்று அறியமுடிகிறது.... காதல் வந்த வழி எது தேடிச்செல்லும் அழகு அலாதி..... நேசத்தை என்றும் அழியா தமிழுக்கு ஒப்பாக்கி உயிருக்கு ஒப்பாக்கி....
இருந்தாலும் இல்லையென்று ஆனாலும் உன் உருவில் வாழ்ந்திருப்பேன் என்று முடித்திருப்பது மிக அழகு சசி...
அன்பு வாழ்த்துகள் சசி அழகிய கவிதை வரிகளுக்கு.
மஞ்சு அக்காவை நேரில் பார்த்த பிறகு...
Manju Bashini Sampathkumar மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் சசி.. உன் அமைதியான புன்னகையில் கண்டுப்பிடிக்கவே முடியாது நீ இத்தனை அழகிய கவிதைகளுக்கு சொந்தக்காரி என்று... அழகிய கவிதைகளின் கருக்களை சுமந்துக்கொண்டு அடக்கத்துடன் அமைதியுடன் நீ சிரித்துக்கொண்டு இருந்த அன்றைய நாள் நினைவுக்கு வருகிறது... நிறைகுடம் நீ...இறையாசியுடன் என்றும் தொடர்க எழுத்துப்பயணம்...
வணக்கம்!
நல்ல நேரம் என்பதுவும்
கெட்ட காலம் என்பதுவும்
வல்ல சதியோன் வகுத்தனவே!
வாழ்வை உணா்ந்து தெளிந்திடுக!
சொல்ல நினைக்கும் கருத்துகளைச்
சொக்கும் வண்ண மணமேந்தி
மெல்ல வீசும் தமிழ்த்தென்றல்
மேலும் மேலும் தொடருகவே!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு.
உன்னுயிர்த் தோழிக்கு இயம்பிய பா..படித்து
என்னுயிர் ஏங்கும் இளைத்து!
[நான் உங்கள் தோழியாகப் பிறப்பெடுக்க
ஆசை பெருக்கெடுக்கும்]
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
என்னுயிர் ஏங்கும் இளைத்து!
[நான் உங்கள் தோழியாகப் பிறப்பெடுக்க
ஆசை பெருக்கெடுக்கும்]
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
வாடிநிக்கும் பயிருக்கு
வாழ்க்கை தர வருவாயா
வான்மழையா பொழிஞ்சி நீ
வாழத்தான் வைப்பாயா!//
கவிதை மழை பொழிந்து மழை வேண்டி பாடிவிட்டீர்கள். அருமை.
மழை பொழிஞ்சி வாடிய பயிர், வாடிய வயிறு எல்லாம் குளிரவேண்டும்.
எல்லோர் வாழ்வும் மேம்பட மாரி மனம் இரங்க வேண்டும் மக்கள் சுற்றத்தை காக்க வேண்டும்.
வாழ்க்கை தர வருவாயா
வான்மழையா பொழிஞ்சி நீ
வாழத்தான் வைப்பாயா!//
கவிதை மழை பொழிந்து மழை வேண்டி பாடிவிட்டீர்கள். அருமை.
மழை பொழிஞ்சி வாடிய பயிர், வாடிய வயிறு எல்லாம் குளிரவேண்டும்.
எல்லோர் வாழ்வும் மேம்பட மாரி மனம் இரங்க வேண்டும் மக்கள் சுற்றத்தை காக்க வேண்டும்.
வே. நடன சபாபதி : ‘தென்றல்’ என்ற வலைப்பதிவில் தினம் ஒரு கவிதை பதிவிடும் சசிகலா அவர்களை ஆசுகவி எனலாம். இவரது கவிதைகள் பெரும்பாலும் காதல் கவிதைகளாய் இருப்பதால் தென்றலை வீசினாலும், சமூக அவலங்களைப் பற்றி இவர் பாடும் போது அந்த கவிதைகள் தீயாகவும் சுடும். உழவன் படும் பாட்டை விளக்கும் ‘தூரத்து பசுமை’ என்ற இவரது கவிதையும்,தாவரங்களின் வலியைச் சொல்லும் ‘வேரின் வலிகள்’ என்ற கவிதையுமே இதற்கு சான்று.
இப்படி வாழ்த்துக்களால் வளர்கிறேன். இவர்கள் அனைவரும் வலைச்சரத்தில் தென்றல் அறிமுகம் மூலமாக வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.. அவ்வாறு தென்றலை வலைச்சரத்தில் அறிமுகம் செய்த அனைத்து நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டு இன்று விடைபெறுகிறேன்..மீண்டும் நாளை சந்திப்போம்.
|
|
தென்றல் அறிமுகம் மூலமாக வந்த சக உறவுகளை சிறப்பித்தது அருமை... பாராட்டுக்கள் சகோதரி... மேலும் அசத்த வாழ்த்துக்கள்...
ReplyDeleteஉதவுவதாக இருப்பினும் வாழ்த்துவதாக இருப்பினும் எங்கும் எதிலும் முதலிடம் பிடிக்கும் தங்களுக்கே எனது வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
Deleteவித்தியாசமா உங்கள் அறிமுகத்தில் நட்புக்களையும் அறிமுகப்படுத்தி விட்டீர்கள்....வாழ்த்துக்கள்
ReplyDeleteவலைச்சரத்தில் இரண்டாவது முறையாக ஆசிரியராக வருகிறேன். ஆதலால் நம்மைப் பற்றி நாமே மறுபடி சொல்வதை விட சக உறவுகள் சொல்வதை பகிர்ந்திருக்கிறேன். தங்கள் வாழ்த்து கண்டு மகிழ்ந்தேன்.நன்றி தோழி.
ReplyDeleteநேற்று (06.10.2013) திருச்சி வந்திருந்த அன்பின் சீனா அவர்களை நானும் திரு வை கோபாலகிருஷ்ணன் அவர்களும் சந்தித்தோம். இந்தவாரம் வலைச்சரம் ஆசிரியர் கவிஞர் தென்றல் சசிகலா என்பதனையும் தெரிவித்தார். மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.
ReplyDeleteஇன்றுமுதல் வலைச்சரம் ஆசிரியையாக மீண்டும் பொறுப்பேற்றதற்கு எனது நன்றியையும் வாழ்த்துக்களையும் சகோதரிக்கு தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் எடுத்த எடுப்பிலேயே நான் மேற்கோள் காட்டிய தமிழறிஞரின் பெயரோடு என்னையும் குறிப்பிட்டமைக்கு நன்றி!
தென்றல் ஆரம்பித்த புதிதில் மட்டுமல்ல தொடர்ந்து இன்றும் உற்சாகம் தரும் தங்களைப் போன்ற சகோதர உறவுகளின் வாழ்த்துக்களை எப்படி மேற்கோள் காட்டாமல் இருக்க முடியும் . மிக்க மகிழ்ச்சிங்க. தங்கள் வருகைக்கு நன்றியும்.
Deleteவாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க மகிழ்ச்சிங்க. நன்றியும்.
Deleteஓ! புது விதமாக மக்கள் வாழ்த்து தொகுக்கப்பட்டுள்ளது. நன்று...நன்று... அசத்துங்கள்!..இனிய வாரமாக ஆசிரிய வாரம் அமையட்டும்.
ReplyDeleteவாழ்த்து! நல்வாழ்த்து!
வேதா. இலங்காதிலகம்.
மனம் கவர்ந்த வாழ்த்துரைகள் தாம் தோழி. நன்றிங்க.
Deleteதென்றலாகிய நானே - மீண்டும்
ReplyDeleteவலைச்சர ஆசிரியரும் நானே...//
இனிய வாழ்த்துகள்..!
பாடலை மேற்கோள் காட்டியதும் வசை பாடப்போறிங்க என நினைத்தேன்... வாழ்த்திவிட்டீர்கள் மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.
Deleteஓ இரண்டாம் சுற்றா ? கலக்குங்கள் !
ReplyDeleteநல்ல யுக்தியைக் கடைபிடித்திருக்கும்
சிறப்பான பகிர்விற்கு என் பாராட்டுக்கள் !
அறிமுகங்கள் அறியும் ஆவலில் ....
மகிழ்ச்சி தோழி. நன்றியும்.
Deleteஆசிரியர் பொருப்பேற்றிருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteவணக்கம்! எனதருமைத் தோழி தென்றல் சசிகலா _()_
ReplyDeleteஇவ்வார வலைச்சர ஆசிரியராக நீங்களா?.. மெத்த மகிழ்ச்சி!
உங்கள் பணி சிறப்பாக அமைய நல் வாழ்த்துக்கள்!!!
உங்கள் சுய அறிமுகம் அசத்தலாக இருக்கின்றது.
சக நண்பர்களை மதிக்கும் உங்கள் பாங்கு அதற்கு ஈடு இணை இல்லை.
அற்புத எழுதாளர் நீங்கள் சசிகலா!..
இத்தனை சுட்டி என்று நீங்களே உங்கள் நெற்றியில்
எழுதி ஒட்டிக் காட்டினாலும் உங்கள் முகமும் எழுத்தும் பார்த்து
யாரும் நம்பமாட்டார்கள்...:))).
தொடரட்டும் உங்கள் பணி! மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!
தோழியின் அன்பிற்கு ஈடு இணையேது தாங்கள் அருகிருக்க தழைக்குமே என் எழுத்தும்.. நன்றிங்க .
Deleteஆசிரியராக மீண்டு பொறுப்பேற்றதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். தினம் ஒரு கவிதை படைத்து வரும் நீங்கள் அதையும் தொடர்ந்து செய்வீர்கள் என்று நம்புகிறேன்.
ReplyDeleteதங்களை நம்பிக்கை பொய்த்துப் போக எண்ணமில்லை ஆதலால் இப்போதே ஒரு பதிவிட்டு வந்தேன். மிக்க நன்றிங்க.
Deleteவலைச்சரத்தை இந்த வாரம் கலக்க வந்த தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteகலக்கல் பதிவுகளை தரும் படி உத்தரவு போடும் தங்கள் அன்பான வாழ்த்திற்கு நன்றிங்க. கலக்கலா என்பதை தாங்கள் தான் சொல்ல வேண்டும். ஆவலுடன் காத்திருக்கிறேன்.
Deleteமீண்டும் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றுள்ள தென்றலுக்கு என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஇதைப்பற்றி நான் என் இன்றைய பதிவினில் ஓர் சிறப்புச் செய்தி வெளியிட்டுள்ளேன்.
முடிந்தால் நேரமிருந்தால் பாருங்கோ, மேடம். http://gopu1949.blogspot.in/2013/10/61-2-2.html
தங்கள் பகிர்வனை பார்த்தேன் ஐயா. மிக்க மகிழ்ச்சி நன்றியும்.
Deleteகுருவின் பெருமைகளை சீடன் கூறுவதைவிட அவனின் நடத்தையிலே குருவின் பெருமைகளை அடையாளம் காணலாம்...
ReplyDelete"குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ...."
என்ற அருணகிரியாரின் பாடலின் வரியை போல் எனக்கான கவி வரிகளுக்கு குருவாய் வந்து எனது குறைகளையும் எனது நிறைகளையும் எனக்கு உணர்த்தி எனது திறமைகளை மேம்பட செய்த எனது குரு இன்று "மகாகுரு" வாக இருப்பதில் அணைவரைவிட நான் பெருமை அடைகின்றேன்...
எனது குரு என்றுமே என்னுடன் இருக்கவேண்டும் என்ற ஆசையை தெரிவித்த உடனே ..
எனக்காக உருவாக்கி தந்த " தென்றலின்வாசம் " வலைதளகாரணாகிய நான் அவர்களை வாழ்த்துவதைவிட வணங்குகின்றேன்..!
இறைவனின் பூர்ணஅனுகிரகத்தோடும் குருவின் ஆசியோடும் அவர்கள் பல்லாண்டு காலம் மகிழ்வோடு வாழ வேண்டுகின்றேன்...!
மிக்க மகிழ்ச்சிங்க தொடர்ந்து எழுதுங்க. நாளைய அறிமுகத்தை இன்றே செய்துவிட்டீர்கள். நன்றி.
DeleteNaan i pad use pannuvathal tamizhil ezhutha mudivathillai muthalil athrkkaga mannippu keddukkolkiren. vaazhthukkal.
ReplyDeleteதங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். மன்னிப்பு எல்லாம் எதற்கு ?
Deleteவணக்கம்
ReplyDeleteசசி(சகோதரி)
இந்த வாரம் வலைச்சர ஆசிரியர் பணிக்கு எனது வாழ்த்துக்கள்....சிறப்பான வாரமாக அமையட்டும்
தென்றல்க்காற்று வீசட்டும்
அனைவரும் சுவாசம் செய்யட்டும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் அனைவரின் ஆசியுடன் தொடர்கிறேன். மிக்க மகிழ்ச்சியும் நன்றியுங்க.
Deleteஆஹா! இந்த வாரம் வலைச்சரம் தென்றல் காற்றாக எல்லோரையும் தழுவ இருக்கிறதா? வாழ்த்துக்கள். கலக்குங்கள் சசி!
ReplyDeleteதங்கள் அனைவரின் ஆசியுடன் தொடர்கிறேன். மிக்க மகிழ்ச்சியும் நன்றியுங்க.
Delete//அக்கா சரஸ்வதி தேவியின் சிநேகத்தில் இருந்ததால் அவர்களிடம் சகஜமாக இருக்க வில்லை.//
ReplyDelete:-)
இந்த குறியீட்டுக்கு எல்லாம் என்ன அர்த்தம் இதுவரை எனக்கு தெரியாதுங்க ?
Deleteஅக்காவை பார்த்தா எங்க வீட்டில் எல்லாருக்கும் ஒரு வித மரியாதை தான் இருக்கு.
இனிய நல் வாழ்த்துக்கள் தென்றலுக்கு !
ReplyDeleteதங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteவித்தியாசமான அறிமுகம்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteவாங்க வாங்க.... தங்களைப் பற்றி மற்றவர்கள் சொன்னதை அழகாக பகிர்ந்து இருக்கீங்க...
ReplyDeleteவந்தேன் சகோ. தங்கள் வருகைக்கும் நன்றி.
Deleteவாங்க.. வணக்கம்.. சுகமான தென்றல் வீசட்டும்.
ReplyDeleteதங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅன்பின் சசிக்லா - முதல் பதிவு அருமை - சுய அறிமுகம் அருமை - இதுவரை தென்றலுக்கு வந்த மறுமொழிகளில் சிறந்த மறுமொழிகளைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டமை நன்று - புதுமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteதங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.
Deleteவித்தியாஸமான சுய அறிமுகம்
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் பணியும்
வித்தியாசமாய் சுவாரஸ்யமாய்த் தொடர
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க ஐயா.
Deleteஆரம்பமே வித்தியாசமாய்...!
ReplyDeleteஅடுத்ததறிய நான் ஆவலாய் ...!!
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteஅழகான அறிமுக மடல். அன்பின் நல் வாழ்த்துக்கள்!..
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteஅருமையான அறிமுகப் பதிவு சசிகலா! வலைச்சரத்தில் தென்றல் வீசினால் நறுமணம் தானே..நுகர்ந்து மகிழக் காத்திருக்கிறேன்! வாழ்த்துகள் தோழி!
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteமீண்டும் ஆசிரியர் பொறுப்பேற்றிருக்கும் உங்களை வருக வருக என வரவேற்கிறேன். பணி சிறக்க வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Delete