07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, June 16, 2014

ஆரம்பம்!!!

நண்பர்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள். வலைச்சர பொறுப்பாசிரியராக ஒரு வார காலம் பணியாற்ற அழைத்த அய்யா சீனா அவர்களுக்கும் வலைச்சர ஆசிரியர் குழுவிற்கும் நன்றிகள் பற்பல. பதிவுலகிற்கு வந்த ஐந்தாண்டுகளில் எனக்குக்  கிடைத்த முதல் அங்கீகாரமாக இதை ஏற்று முடிந்த வரை பணியை சிறப்பாகத்  தொடர முயல்கிறேன்.

சீனா அய்யாவிடமிருந்து அழைப்பு வந்த உடனே நா கேட்ட முதல் கேள்வி "அய்யா பேச்சு வழக்கில் பதிவுகள் எழுதலாமா?" ங்குறதுதான். "ஆமா தூய தமிழ்ல தான் எழுதனும்னு சொன்னா மட்டும் அப்டியே வெண்பாவா எழுதித் தள்ளிடப் போறியா... எப்டியாது எழுதித் தொலை" அப்டின்னு மனசுல இருக்கத வெளில  சொல்லாம "உங்க விருப்பம் எப்டியோ அப்படியே எழுதுங்க" என்றார். அதுவே பெரிய தைரியத்த குடுத்துச்சி. ஏன்னா பேச்சுவழக்கில் இல்லாம நா எழுதுன சில பதிவுகள இப்போ படிக்கும் போது இது நா எழுதுன  மாதிரியே இல்லியேன்னு ஃபீல் பண்ணிருக்கேன்.

என்னைப்பற்றிய ஒரு சிறு அறிமுகம். எனக்கு சொந்த ஊர் பட்டுக்கோட்டைக்கு பக்கத்துல உள்ள மதுக்கூர். இப்போ சென்னையில ஒரு தனியார்  நிறுவனத்துல வேலை பாத்துகிட்டு இருக்கேன். 2009ல நண்பர் ஒருவர் மூலமா வலையுலகத்துக்கு வந்து  "அதிரடிக்காரன்" ங்குற பேர்ல இதுவரைக்கும் 200க்கும் அதிகமான பதிவுகளை எழுதியிருக்கேன்.
பெரும்பாலும் சினிமா தொடர்பான விமர்சனங்களும், நகைச்சுவைப் பதிவுகளுமே அதிகம். சினிமா விமர்சனமா இருந்தாலும் சரி அல்லது வேறு எதேனும் அனுபவப் பதிவா இருந்தாலும் சரி, சொல்ல வந்த விஷயத்தைத் தாண்டி ஏதோ ஒரு இடத்தில் படிப்பவர்களுக்கு ஒரு சிரு புன்னகையையோ அல்லது சுவாரஸ்யத்தையோ வரவழைக்க வேண்டும் என்ற முயற்சியோட எழுதிக்கிட்டு இருக்கேன். சிரிப்பு வரவைக்க முயற்சி தான். சிரிப்பு  வரலன்னா அதுக்கு கம்பெனி பொறுப்பாகாது.

நகைச்சுவை மன்னன் கவுண்டரின் தீவிர ரசிகனாதாலல் பெரும்பாலும் பதிவுகளில் அவர் பயன்படுத்திய  வசனங்களையும் அவர் ஸ்டைல் காமெடிகளையுமே முயற்சிக்கிறேன். கவுண்டமணின்னு ஒருத்தர் இருந்தா செந்தில் ஒருத்தர் அடி வாங்கித்தானே ஆகனும். அந்த மாதிரி இதுவரைக்கும் பல முறை பதிவுகளில்  அடிவாங்கியிருப்பது விஜய்யும் சிம்புவும் தான். நா ரொம்பவும் ரசிச்சி எழுதுறது கவுண்டரை மையமா வச்சி  வர்ற பதிவுகளைத் தான்.

ஒரு சில சாம்பிள்கள் இதோ...

கவுண்டரின் அ.இ.ஆ.மு.க (அகில இந்திய ஆம்ளைஸ் முன்னேற்ற கழகம்)


எந்திரனில் கவுண்டர் நடித்திருந்தால்



பதிவுலகில் பெரும்பாலனவங்களுக்கு இப்படி ஒரு வலைப்பதிவு இருப்பதே இன்னிக்கு தான் தெரியும். ஏன்னா  ரொம்ப நாளா பதிவுலகத்துல இருந்தாலும், பதிவுலகில் நெருங்கிய நண்பர்கள்னு எனக்கு யாருமே இல்லை.  ஒரு சிலர்கிட்ட பேசிருக்கேன். ஆனா நெருக்கமான நட்புங்குறது இல்லை. இது என்கிட்ட உள்ள மிகப்பெரிய  குறை. வலைப்பதிவர்கள் சந்திப்புக்குக்கூட போனதில்லை. ரெண்டு தடவ போகலாம்னு முயற்சி செய்தும் சில தவிர்க்க முடியாத காரணங்களால கடைசில போக முடியாம போயிடுச்சி.


பெரும்பாலும் பதிவுகளில் நடக்குற விவாதங்கள்லயும் நான் பங்கெடுத்துக்கிட்டது இல்லை.  கொஞ்ச நாளுக்கு முன்னால "கமெண்ட் கூனியா" ன்னு ஒரு வியாதி  நம்ம பதிவுலகத்துல இருந்துச்சி.  அதாவது பதிவுக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாமல் கமெண்ட் போடுவதே அந்த வியாதி.  "மொத வெட்டு" " த.ம.1"  "me the first" "வடை எனக்கு" கமெண்ட் போடனும்ங்குறதுக்காக என்னென்னவோ போட்டுக்கிட்டு இருந்தாங்க. இந்த மாதிரி கமெண்ட் போடுறவங்க உண்மையிலயே எத்தனை பேர் பதிவ முழுசா படிக்கிறவங்கன்னு ஆண்டவனுக்கே வெளிச்சம்

சில பதிவுகள்ல நாற்பது அம்பது கமெண்ட்ட பாத்துட்டு போய் பாத்தா அங்க இருக்க பதிவுக்கும் அந்த கமெண்டுகளுக்கும் சம்பந்தமே இருக்காது. சிலர் அவங்க அந்த week end எங்க போகலாம்னு கூட அந்த பதிவுலயே டிஸ்கஸ் பண்ணிருந்தாங்க. பொதுவா ஒரு பதிவுல எவ்வளவு கமெண்ட் இருக்கோ அந்த அளவு அந்தப் பதிவு சுவாரஸ்யமாகவோ இல்ல விவாதத்திற்குறிய கருத்துக்கள் அடங்கியிருப்பதாகவோ தான் அர்த்தம். ஆனா நமக்கு அது வேற.. நம்ம SMS சர்வீஸ் மாதிரி ஆட்களை தொடர்பு கொள்றதுக்கு கமெண்ட் பாக்ஸூம் ஒரு வழி


எனக்கு நடந்த ஒரு சின்ன சம்பவம்.  ஊர் பெயரை முதலில் கொண்ட ஒரு பதிவர் (திண்டுக்கல் அண்ணே.. நீங்க இல்லை.. ஹி ஹி ). ஒரு நாள் அவரோட பதிவு ஓண்ண படிச்சிட்டு ஒரு கமெண்ட் போட்டேன். அடுத்த 10 நிமிடத்தில் அவர்கிட்டருந்து என்னோட ஒரு பதிவுக்கு ஒரு கமெண்ட் "வந்துட்டேன்,, இனி டெய்லி வருவேன்" ன்னு. என்னடா பதிவுக்கும் இந்த கமெண்டுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லியேன்னு யோசிச்சிட்டு விட்டுட்டேன். திரும்ப மறுநாள் அவரோட இன்னொரு பதிவுக்கு எதேச்சையா கமெண்ட் போட அடுத்த 10 வது நிமிஷத்துல என்னோட இன்னொரு பதிவுக்கு அதே போல சம்பந்தமில்லாத இன்னொரு கமெண்ட் அதே பதிவர்கிட்டருந்து வந்துருக்கு. ரைட்டு..

ஆஹ்க நம்ம ஒண்ணு போட்டா நமக்கு ஒண்ணு வரும். சூப்பர். இப்டியே போனா நம்ம போட்ட பதிவு நல்லாருக்கா இல்லையான்னே  நமக்கு சந்தேகம் வந்துடுமேன்னு நெனைச்சி பதிவு புடிச்சவங்க போட்டா போடட்டும் இல்லைன்னா  இருக்கட்டும்னு மிகவும் பிடித்த பதிவுகளுக்கோ இல்லை பதிவுகளுக்கு மாற்றுக்கருத்தோ , விவாதங்களோ இருந்தாலொழிய கமெண்ட் போடுறத நிறுத்திட்டேன்.  இப்புடியெல்லாம் ஓவரா பண்ணா உங்கூடல்லாம் யாருடா நட்பா இருப்பான்னு தானே யோசிக்கிறீங்க. உங்க மைண்ட் வாய்ஸ கேட்ச் பண்ணிட்டேன். 

என்னுடைய பதிவுகள்ல கதைகள், காமெடிப்படங்கள், அனுபவங்கள்னு என்னதான் எழுதினாலும் சினிமா விமர்சனங்கள் மூலமே பெரும்பாலும் அறியப்படுகின்றேன்.அவற்றில் சில..

 

மேலும் நண்பர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட மற்றும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்ட சில பதிவுகள் 





இந்த மாதிரி அடுத்தவங்களை உரண்டை இழுக்குற பதிவுகளையே எழுதிக்கிட்டு இருந்த என்னை கொஞ்சம் மாத்துனது நண்பர் விமல் தியாகராஜன். சமூகத்திற்கு சில விழிப்புணர்வு கருத்துக்களையும், பாசிடிவ் விஷயங்களையும் பகிர்ந்துகொள்வதற்காக அவரால் நடத்தப்படும் www.bepositivetamil.com என்னும் மாதாந்திர e-magazine ல எனக்கும் ஒரு பகுதி எழுத வாய்ப்பளித்திருக்கிறார். ஓவ்வொரு இதழிலும் இளைஞர் பகுதியில் ஒரு கட்டுரை எழுதிக் கொண்டிருக்கின்றேன். "இதெல்லாம் நாஞ்சொன்னா சிரிச்சிருவாய்ங்கப்பா" ன்னு சொல்லியும் என் மேல நம்பிக்கை வச்சி எழுதச் சொன்ன அவருக்கும் நன்றிகள். நேரமிருக்கும்போது நீங்களும் படிச்சி உங்க கருத்துக்கள சொல்லுங்க. 

சரி.... அடுத்த பதிவிலிருந்து பதிவர்கள் அறிமுகங்களைப் பார்க்கலாம்.  அடுத்து உங்களை சந்திக்கவிருப்பவர்கள் சரவெடிப் பதிவர்கள்!!! காத்திருங்கள்!!


20 comments:


  1. //"ஆமா தூய தமிழ்ல தான் எழுதனும்னு சொன்னா மட்டும் அப்டியே வெண்பாவா எழுதித் தள்ளிடப் போறியா... எப்டியாது எழுதித் தொலை"// ROFL

    Expecting huge from you ...!

    ReplyDelete
    Replies
    1. முடிந்த வரை முயல்கிறேன் நண்பா :-)

      Delete
  2. திரு. முத்துசிவா அவர்களுக்கு நல்வரவு..
    வாழ்க நலமுடன்..

    ReplyDelete
  3. // ஏதோ ஒரு இடத்தில் படிப்பவர்களுக்கு ஒரு சிரு புன்னகையையோ அல்லது சுவாரஸ்யத்தையோ வரவழைக்க வேண்டும்// நல்லதொரு எண்ணம்.

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. நல்ல அறிமுகம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. நல்வரவு முத்துசிவா.

    bepositivetamil சஞ்சிகையில், இளைஞர் பகுதியில் நீங்கள் எழுதிய 'சிரிப்பும் மகிழ்ச்சியும்' கட்டுரை படித்தேன். அருமையாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. வணக்கம்
    தங்களைப்பற்றிய அறிமுகம் சிறப்பாக உள்ளது தங்களின் வலைப்பக்கம் நான் நன்கு அறிந்தவன் இந்த வாரம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. வணக்கம் சகோதரர்
    சிறபபான அறிமுகம். தங்கள் வலைச்சர ஆசிரியர் பணி சிறப்பாக அமைய என் அன்பான வாழ்த்துகள். தங்கள் அறிமுகத்தில் தங்களைப் பற்றிக் கூறியிருப்பது கண்டு பதிவுகளின் அறிமுகங்கள் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். தங்கள் பதிவுகளை இனி தான் ஒவ்வொன்றாக படிக்க வேண்டும். பகிர்ந்தமைக்கு நன்றிகள். வாழ்த்துகள் சகோதரர்.

    ReplyDelete
  8. உங்களுடைய காமெடி சென்ஸ் ரசிக்க வைக்கிறது. அதே போல வெளிப்படைத் த‌ன்மை. ம்ம் கலக்குங்கள்!!

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் நண்பரே! நீங்களே சொன்னது போல இதுவரை உங்கள் பதிவுகளை வாசித்ததாக நினைவு இல்லை! சென்று படிக்கிறேன்! வெளிப்படையாக பல கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

    ReplyDelete
  10. வித்தியாசமான சுய அறிமுகம்.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள்.
    தொடர்வோம்!!!

    ReplyDelete
  12. ஹா ஹா, வலைச்சரமே இனி ஒரு வாரத்துக்கு காமெடி பதிவுகளால் நிறையும் என்று நம்புகிறேன்.... வாழ்த்துக்கள் நண்பா...

    ReplyDelete
  13. ஹலோ நண்பர்களே, நண்பர் சிவா ரொம்ப பெருந்தண்மையோடு, நா அவருக்கு bepositivetamil.com இல் வாய்ப்பு கொடுத்ததாக சொல்லிர்கார். அதெல்லாம் நம்பாதீங்க, நா எழுத்துலகத்துல இப்போதான் பிறந்திருக்கிறேன், அவரோ 5 வருஷமா consistentஆ எழுதிருக்கார். நம் முயற்சிக்கு இஞ்சினே அவர்தான். சிவா ரொம்ப சீரியசான மேட்டரக் கூட சிம்பிளா, நகைச்சுவையோட சொல்லிடுவார். இந்த வயசுல இவ்ளோ திறமையானு அவர பாத்து நான் வியந்திருக்கேன். அதனால, இந்த இளைஞர சீரியசா அங்கீகரியுங்கள். உங்கள் பாராட்டுக்கள் அவர பெரிய லெவலுக்கு ரீச் அடையச் செய்யும். Good luck Siva.

    ReplyDelete
  14. வாருங்கள்... மேலும் அசத்துங்கள்... சுய அறிமுகம் நன்று... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  15. தங்களின் வலைப்பூவிற்கு சென்று பார்க்கிறேன்.
    தங்களின் ஆசிரியப்பணிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. வருகை தந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள் பற்பல!!!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது