07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, March 4, 2012

ஆச்சரியப்படுகிறது பைங்கிளி


   சிலருக்கு மட்டுமே   மனதில் ஏதாவது ஒன்றைப்பற்றி பலவிதமான சிந்தனைகள் எழுவதுண்டு.அது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைக்கும்  சிந்திக்க வைக்கும் .
                                    இந்த வலைப்பதிவர் எண்ணங்கள் எழும் மனதையே 
கோகுல் மனதில் என்று தனது வலைப்பூவிற்குப்   பெயர் சூட்டியிருக்கிறார். 
                                    மனிதனும் கடவுளாகலாம் என்கிறார் எப்படி ?
                          துரோணர்கள் தொலைந்து விட்டார்களாம் உண்மைதானே..
                                            
                            
                                     வேகத் தடையைப் பற்றி என்றாவது ஒருநாள் நாம் சிந்தித்ததுண்டா? பயணத் தடையா நம்மிடம் கேள்வியும் கேட்கிறார்.   


                                
                    வண்ணமிட்டும் விழி திறக்கா ஓவியம் படங்களுடன் கவிதை 
யாரை நொந்து கொள்வது .
                                    முத்துக் குளிக்கத்தான் வாரியளான்னு தான்னு கேப்போம் 
இவரு முத்தமிட வாரியளான்னு கேட்கிறார் போய்ப் பாருங்க..யாருக்குன்னு தெரியும்.
                                              சந்தோசத் தீபாவளி என்றால் யாரை  நினைக்க வேண்டும் என்கிறார் இவர் ..நாம் யோசித்திருப்போமா என்றாவது ஒருநாள்?
                                                மனதை கனக்கச் செய்யும்   வாச்சாத்தி வன்மத்தின் உச்சம் வலியின் எச்சம்..கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய பதிவு.. 
                                               
                                                           இசையும் இவர் விட்டு வைக்கவில்லை 
இசை கேட்டால் என்னவாகும்..கேட்போமே நாமும்..
                                            சிலருக்கு சாப்பிடத் தெரியுமே தவிர தொப்பயக் குறைக்கத் தெரியாது..இவர் வழிமுறைகள் சொல்றார் கேளுங்க..உங்களுக்குத் தொப்பை இருந்தா!
                                                        தானே புயல் உணர்த்தியது இதைத்தானோ என்று நம்மையும் சிந்திக்க வைக்கிறார்.
                                                  இப்படி சிந்தனையின் சிகரமாகவும் நகைசுவை நாயகனாகவும் நம்மையெல்லாம் வியப்பில் ஆழ்த்துகிறார்.
    சாப்பாட்டை  வெறுப்பவர்கள் யாராச்சும் உண்டா..உழைக்றதே சாபிடுவதற்குத் தானே 
                             2 இன் 1 பொங்கலாம் சாப்பிட நான் ரெடி நீங்க ரெடியா 
மகி சமையலறைக்குப்  போகலாம் வாங்க.
                                       உடைந்த தட்டைத்  தூக்கிப் போட  மனசில்லாம 
மியாவ் வவ் ..பாருங்கப்பா இவங்க கைவண்ணத்த ..
                                           கொண்டைகடலை  சமையலாம் அருமைதான் ஆரோக்கியத்திற்கு .
                                                 கே.பி,ஜனா காதோடு ஏதோ சொல்கிறார் கேளுங்கள் .
                                                   பூண்டு ஊறுகாய் உடலுக்கு நல்லது சாப்பிட வாங்க என்கிறார் இங்கொருவர்.
                                                  
புதிய பதிவர்கள்தான் இவர்களும்  
                                          பசிச்சாதான் சோத்துப்பானைய திறந்து பார்ப்போம் 
இங்க பாட்டு கேக்கணும்னா    
அடுக்குப் பானையத் திறந்து பார்க்கணும் போல இருக்கு.. 
                                         குயில்களின் கீதங்கள் இங்கே கேட்கலாம் 

                                          புஞ்சை உண்டு நஞ்சை உண்டு ...ரசித்த பாடலாம் கேக்கலாமா கொஞ்சம்.. 
                                       கரடி பொம்மை செய்யக் கற்றுக் கொடுக்கும்  இந்த ஆச்சியிடம் நல்லா தொழில் கத்துக்கலாம்.
                                         தொலை பேசியைக் கண்டுபிடித்த கிரகாம் பெல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் சுரனிடம் சென்று. 


நன்றி நவில்கிறேன் 
                                      இந்தப் பதிவோடு என் பணி நிறைவடைகிறது .
வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்.வாய்ப்பளித்த வலைசரக் குழுவினர் அனைவருக்கும் நன்றிகள்.
                                       தென்காசித்  தமிழ்ப் பைங்கிளி அனைவரிடமும் இருந்து விடை பெறுகிறது நன்றி வணக்கம் .
                                                      


                                              
                                            


                                         
                                 
                                                                 
            



22 comments:

  1. இந்த வாரம் முழுக்க உங்கள் வலைச்சரத்தில் உங்கள் உழைப்பு ,பதிவுகளை அறிமுகப்படுத்திய விதம் கண்டு வியந்தேன்.
    என்னைப்பற்றிய இன்றைய அறிமுகத்தில் நான் என்னிலிருந்து விலகி என்னை பார்ப்பது போன்ற ஒரு உணர்வை தந்தது.மிக்க நன்றி.
    சிறந்த பணி.பாராட்டுகள்.

    ReplyDelete
  2. ஆச்சிரியப்டத்தான் தோன்றுகிறது!

    எவ்வளவு பகிர்வுகள்! எல்லா வற்றையும் படிக்க ஆவல்.
    நன்றி.

    ReplyDelete
  3. பைங்கிளியுடன் பயணம் செய்ததில் கிடைத்தது மனநிறைவு. சிறப்பான அறிமுகங்கள். நன்றி!

    ReplyDelete
  4. பல பதிவர்கள் பற்றி சிறப்பான அறிமுகம். உங்களின் பணிக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
  5. தாங்கள் அறிமுகப்படுத்திய பதிவர்கள் அனைவரும் சிறந்த பதிவர்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமேயில்லை.!

    ReplyDelete
  6. தங்களுடைய அறிமுகமே வாசிக்கத் தூண்டுகிறது.இன்றைய அறிமுகத்தில் நானும் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சியை தருகிறது.நன்றி.எத்த்னை எத்த்னை அறிமுகங்கள்!

    ReplyDelete
  7. வலைச்சர ஆசிரியைப்பணியை சிறப்பாக முடித்த பைங்கிளிக்கு வாழ்த்துகக்ள்.

    ReplyDelete
  8. மிக மகிழ்வாக, ஆச்சரியமான பதிவுகளாக,மிக வேகமாக ஓடிவிட்டது வாரம். அடுக்குப் பானைனைப் பதிந்தும் வைத்துள்ளேன். இப்படிப் பல நல்ல பதிவுகள்.இன்றைய அறிமுகப் பதிவர்கள்- தங்களிற்கும் வாழ்த்துகள். மேலும் சிறப்படைந்து முன்னேற வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  9. நல்ல இருக்கு தமிழ்

    ReplyDelete
  10. இனிதான அறிமுகங்கள்.... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  11. என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி கிளியே..

    மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. உங்களுக்கு இந்த ஒரு வாரம் போதாதென்று நினைக்கிறேன்.அத்தனை அருமையான தேடல்கள் !

    ReplyDelete
  13. //கரடி பொம்மை செய்யக் கற்றுக் கொடுக்கும் இந்த ஆச்சியிடம் நல்லா தொழில் கத்துக்கலாம்.//

    ஆச்சியில்
    ஆரம்பித்து
    அனைத்து
    அறிமுகங்களுக்கும்
    அன்பான
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  14. வலைச்சர ஆசிரியைப்பணியை சிறப்பாக முடித்த பைங்கிளிக்கு வாழ்த்துகக்ள்.

    ReplyDelete
  15. வாழ்த்திய நெஞ்சங்கள் அனைவருக்கும் நன்றிகள்

    ReplyDelete
  16. அசத்திட்டீங்க.

    ReplyDelete
  17. பலரின் கைவண்ணத்தை உங்களின் தேடல் மணம்கமழ வைத்துவிட்டது சிறந்த அறிமுகங்கள் தந்த பைங்கிளிக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  18. இன்னும் பல மாதங்களுக்கு சுவைக்கும் அளவிற்கு, பதிவுகளை அள்ளித் தந்திருக்கீங்க.. கொடுக்கப்பட்ட பணியை கனக்கச்சிதமாக செய்து முடித்திருக்கீங்க.. நன்றியும் வாழ்த்துக்களும்..!:):)

    ReplyDelete
  19. ரசித்த பாடல் அறிமுகத்துக்கு நன்றிங்க. மற்ற்வர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  20. என் பதிவின் அறிமுகத்திற்கு நன்றிகள்.அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  21. என்னையும் உங்கள் ஆச்சரியங்களில் ஒன்றாக அறிமுகம் செய்து வைத்தமைக்கு மிக்க நன்றி தென்காசிப் பைங்கிளி.

    வலைச்சரத்துக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது