Sunday, September 30, 2012
➦➠ by:
* அறிமுகம்
அன்பின் சக பதிவர்களே
இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற நண்பர் வா.மணிகண்டன், தான் ஏற்ற பொறுப்பினை அழகாக நிறைவேற்றி, மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.
இவர் இட்ட பதிவுகள் : 9
இவர் அறிமுகப்படுத்திய பதிவர்கள் : 30
இவர் அவர்களது தளத்தினையே சுட்டி கொடுத்து அறிமுகப் படுத்தி இருக்கிறார்.
அவர்களது பதிவுகளில் தனக்கு மிகவும் பிடித்த 8 பதிவுகளையும் அறிமுகப் படுத்தி உள்ளார்.
பெற்ற மறுமொழிகளோ : 58
நண்பர் வா.மணிகண்டனை வாழ்த்தி, வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.
நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் அன்புச் சகோதரி மஞ்சுபாஷினி.
இவருக்கு இவர் தாத்தா அன்புடன் ஆசையுடன் வைத்த பெயர் மஞ்சுபாஷிணி. இவர் குவைத்தில் கணவர், இரண்டு பிள்ளைகள், மற்றும் அம்மாவுடன் வசிக்கிறர். வேலைக்கு சென்றுக்கொண்டே வீட்டிலும் எல்லோர் தேவைகளையும் பார்த்துக்கொண்டு அவ்வப்போது எழுதுகிறார்.
வலைப்பூவை பற்றி எதுவுமே தெரியாமல் இருந்த இவருக்கு 2007 இல் இவரது தோழி கிருஷ்ணபக்தை பத்மஜா - ஒரு வலைப்பூ தொடங்கி அதற்கு தலைப்பு கதம்ப உணர்வுகள் என்று வைத்து இவரது படைப்புகளைப் பதிவிட கற்றுத் தந்தார்.
கூகுளீல் ஏதோ தேடப் போய் - ஒரு வலைப்பூவில் கொண்டு வந்து விட்டது… அட ஒரு அழகிய கவிதை… எளிமையான வரிகள்… உடனே அதற்கு விமர்சனம் எழுத ஆசைப்பட்டு எழுதினார்.. அப்போது தொடங்கியது இந்த பயணம் இனிமையாக….
அதில் இருந்து ஒவ்வொரு வலைப்பூவுக்கும் சென்று விமர்சனம் எழுதிக்கொண்டிருந்தார்..
அன்பை எல்லோரிடமும் அன்பாய் பகிரும்போது அங்கே அன்பு சூழ்ந்த நட்பு மலரும் என்பது நம்பிக்கை… காண்போர் எல்லோருமே நல்லவர் என்ற இவரது நம்பிக்கையும் பொய்க்கவில்லை.
சகோ மஞ்சுபாஷினியை வருக ! வருக என வரவேற்பதில் பெருமை அடைகிறேன்.
நல்வாழ்த்துகள் வா.மணீகண்டன்
நல்வாழ்த்துகள் மஞ்சுபாஷினி
நட்புடன் சீனா
பறவைகளின் வானம்
➦➠ by:
வா.மணிகண்டன்
சிறுகதை எழுத்தாளர் கே.ஜே.அசோக்குமாரின் வலைப்பதிவு. சில சிறந்த சிறுகதைகளை எழுதியிருக்கிறார். அவ்வப்போது இவர் பதிவிடும் சிறுகதைகளுக்காக இந்தத் தளத்தின் மீது ஒரு கண் வைத்திருக்கலாம்.
விளம்பரத்துறையில் பணியாற்றும் ராஜா சந்திரசேகரின் கவிதைகளால் நிரம்பியிருக்கும் வலைப்பூ. பெரும்பாலும் சிறு கவிதைகள்தான். ஆனால் தனக்குள் முடிச்சினை வைத்திருக்கும் கவிதைகள். மேஜிக்கல் தன்மையுடைய கவிதைகளை இப்பொழுது அதிகம் எழுதிக் கொண்டிருக்கிறார்.
நவீன கவிஞர்கள் வரிசையில் முக்கியமான கவிஞரான ராணிதிலக்கின் வலைத்தளம் இது. விக்கிரமாதித்யன் ராணி திலக் பற்றி எழுதிய கட்டுரை, ராணிதிலக்கின் நேர்காணல் போன்றவை முக்கியமான பதிவுகள். கவிதைகள் பற்றிய தனது விமர்சனங்களை சப்தரேகை என்ற தொகுப்பாக சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார்.
கவிஞர் மண்குதிரையின் வலைப்பூ. தற்சமயம் சென்னையில் வசிக்கிறார். அனுபவம், கவிதை, விமர்சனங்கள் என நிரம்பியிருக்கும் தளம். இவரது கவிதைத் தொகுப்பான புதிய அறையின் சரித்திரம் தொகுப்புக்கு இந்த ஆண்டிற்கான நெய்தல் விருது கிடைத்திருக்கிறது. வாழ்த்துக்கள் மண்குதிரை.
Posted by Vaa.Manikandan at 10:03 AM 2 comments
மூத்தோர் சொல்
➦➠ by:
வா.மணிகண்டன்
எனக்கு பிடித்த கவிஞரும், முன்னோடியுமான சுகுமாரன் அவர்களின் வலைத்தளம் இது. திருவனந்தபுரத்தில் வாழும் கவிஞர் இந்தத்தளத்தில் பெரும்பாலும் தனது கவிதைகளை பதிக்கிறார். தற்பொழுது அவர் எழுதிவரும் வெலிங்டன் நாவலின் சில அத்தியாயங்களையும் இங்கு வாசிக்க முடியும். ஆனால் தொய்வில்லாமல் எழுதிவரும் சுகுமாரன் அவர்களின் எழுத்துவேகத்துக்கு வலைத்தளத்தில் வாசிக்க கிடைப்பது புல்லுக்கு பொசியும் நீர் அளவுக்குத்தான்.
மூத்த கவிஞரான கலாப்ரியாவின் தளம். கட்டுரைகள், அனுபவங்கள், கவிதைகள் என வாசிக்கக் கிடைக்கின்றன. அனுபவப்பதிவுகளில் இருக்கும் சுவாரசியத்திற்காகவே இந்தத் தளத்தை தொடர்ந்து வாசிக்கலாம்.
எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் வலைத்தளம். தற்பொழுது திருப்பூரில் வசிக்கிறார். கனவு என்னும் சிறுபத்திரிக்கையை நடத்திவரும் இவரின் சிறுகதைகள், சினிமா அனுபவங்கள், வாழ்வியல் அனுபவங்கள் என பல எல்லைகளைத் தொடும் எழுத்துக்களின் சங்கமம் இந்த வலைப்பதிவு.
Posted by Vaa.Manikandan at 1:56 AM 4 comments
Saturday, September 29, 2012
துளிகள்
➦➠ by:
வா.மணிகண்டன்
சமீபத்தில் அதிக கவனத்தைக் கோரும் கவிதைகளை எழுதி வரும் ஆறுமுகம் முருகேசனின் கவிதைகளால் நிரம்பிய தளம் இது. ஈராக்கில் வசிக்கிறார். அன்பினாலும், பிரியங்களினாலும், துக்கங்களினாலும் சொல்ல முடியாத உணர்ச்சிகளாலும் நிரம்பிய கவிதைகள் இவை. கவிதைக்கான புதிய தளங்களை மிக இயல்பாக கண்டடைவது ஆறுமுகத்தின் பலமாக இருக்கிறது.
இன்னமும் இணையதளங்களிலேயே எழுதிக் கொண்டிருக்கிறார். சிற்றிதழ்களின் பக்கம் தனது பார்வையை திருப்ப வேண்டும் என விரும்புகிறேன்.
குட்டி குட்டியான கவிதைகளால் கட்டிப்போடும் நந்தாவின் வலைப்பூ. ஹைக்கூக்கள் நந்தாவுக்கு இயல்பாக கைவரப்பெற்றிருக்கிறது.
கவிஞர், பதிப்பாளர், சிறுபத்திரிக்கையாளர், வழக்கறிஞர் என்னும் பன்முக ஆளுமையான பொன்.வாசுதேவனின் வலைத்தளம். அதிகமாக எழுதுங்கள் வாசு. இதற்கு அவர் சொல்லும் பதில் என்னவாக இருக்கும் என என்னால் யூகிக்க முடிகிறது.
மும்பையில் வாழும் அனுஜன்யாவும் நினைத்தால் எழுதுபவர் இல்லாவிட்டால் துறவறம் பூண்டுவிடுவார். இவரது உரைநடை வித்தைகள் சுவாரசியமானது. ஒரு எட்டு இந்த தளத்திற்கு போய்வாருங்கள்.
Posted by Vaa.Manikandan at 8:39 AM 7 comments
Thursday, September 27, 2012
இன்னும் கொஞ்சம்
➦➠ by:
வா.மணிகண்டன்
கவிஞன், சிறுகதைக்காரன் தூரன் குணாவின் வலைத்தளம். கவிதை, கதை தவிர்த்து அனுபவங்கள், வாசிப்பு என எழுதிக் கொண்டிருக்கிறார். ஆனால் கொஞ்சமே கொஞ்சமாக எழுதிக் கொண்டிருக்கிறார். தூரன் குணாவை நினைக்கும் போதெல்லாம் ஓட்டிற்குள் அடங்கியிருக்கும் ஆமையின் சித்திரம் மனதில் தோன்றும். அது பொருத்தமான சித்திரம் என்று நினைத்துக் கொள்வேன்.
ஈழத்து காட்டாறு. சமூகம், இலக்கியம், அரசியல், கவிதை, கதை என அடித்து நொறுக்குகிறார். இந்தியாவிற்கும், கனடாவிற்கும், ஈழத்திற்குமாக றெக்கை கட்டிப் பறாக்கும் தமிழ்நதி, சமீபமாக வலைப்பதிவில் மிகக் குறைவாகவே எழுதுகிறார்.
கவிஞர் ச.முத்துவேலின் இணையதளம். பெரும்பாலும் கவிதைகளால் நிறைந்திருக்கிறது. இவரும் மிகக் குறைவாகவே எழுதுகிறார். அந்தப்பக்கம் போனால் நிறைய எழுதச் சொல்லிவிட்டு வாருங்கள்.
தீவிரமான வாசிப்பும், கூர்மையான பார்வையுமுடைய பாலசுப்ரமணியனின் வலைப்பூ. இவர் அதிகம் எழுதுவதில்லை என்று குறைபடுபவர்களில் நானும் ஒருவன்.
Posted by Vaa.Manikandan at 7:05 PM 4 comments
நவீன கவிகள்
➦➠ by:
வா.மணிகண்டன்
கவிதைகளுக்குள் கதைகளைச் சொல்வதன் மூலமாகவும், விசித்திரமான கவிதைச் சித்திரங்களினாலும் கவனம் பெறக்கூடிய கவிதைகளை எழுதிக் கொண்டிருக்கும் கதிர்பாரதியின் தளம். இவரது கவிதைகளின் புதிய பாதை ஆச்சரியமூட்டுவதாகவும், உற்சாகம் அளிப்பதாகவும் இருக்கின்றன. "கி.மு. இரண்டாயிரத்தில் கேரட்கள் ஊதா நிறத்தில் இருந்தனவாம்" பிறகு ஏன் நிறம் மாறின என்பதை கதிர்பாரதியின் கவிதையின் மூலமாக அறிந்துகொள்ளலாம்.
ஒரு காலத்தில் காதல்கவிதைகளின் மூலமாக பல இதயங்களை கொள்ளையடித்தவர் நிலாரசிகன். ஏதோ தெய்வகுத்தம் போல இப்பொழுது நவீன கவிதைகளின் பக்கம் ஒதுங்கிவிட்டார். இவரது கவிதைகளில் இருக்கும் மென்மையும், ரொமாண்டிசமும் கட்டிப்போடுபவை. 361டிகிரி சிற்றிதழை நடத்திவருகிறார். புகைப்படைக்கலைஞனாகவும் படம் காட்டுகிறார்.
நேசமித்ரன் தனது மொழியில் செய்யும் வித்தைக்காக அவரது கவிதைகளின் நேசன் நான். இவரது கவிதைகள் புரியாதது போல முதல் பார்வைக்குத் தோன்றக் கூடும். அது உண்மையில்லை. கவிதையில் ஒரு புள்ளியிருக்கும். அந்தப்புள்ளியைத் தட்டினால் கவிதையின் கதவு திறந்துவிடும். கதவுக்கு பின்னால் வேறொரு உலகம் இருக்கும். தட்டிப்பாருங்கள்.
வேல்கண்ணன் எனக்குப்பிடித்த இன்னொரு கவிஞன். சென்னையில் வசிக்கிறார்.மிகச்சிறந்த கவிதை அனுபவத்திற்குள் அழைத்துச் செல்லும் அத்தனை சாத்தியங்களையும் வைத்துக்கொண்டு மிகக் குறைவாக எழுதிக் கொண்டிருக்கும் இந்தக் கவிஞனின் தளம் இது.
கவிதையை வாசித்துவிட்டு "உர்ர்" என்று இருக்க வேண்டும் என்ற ஃபார்முலாவை தூக்கிப்போட்டு உடைத்தவர் இசை. மிக எளிமையான கவிதையை அத்தனை அங்கதத்துடன் கொடுக்க இசையால் மட்டுமே முடியும் என நம்புகிறேன். வாய்விட்டு சிரிக்கவைத்தாலும் கவித்துவத்தில் எந்தவித காம்ப்ரமைஸ்ஸும் செய்துகொள்ளாத கோயமுத்தூர் கவிஞனின் வலைத்தளம் இது.
சமகாலக் கவிஞர்களில் கவிதை பற்றிய தொடர்ச்சியான உரையாடலை முன்னெடுக்கும் இளங்கோ கிருஷ்ணனின் வலைத்தளம். இவர் கோயமுத்தூரில் வசிக்கிறார். தனக்கென மொழியையும், கவிதை வெளிப்பாட்டுமுறையையும் விரைவாக கண்டடைந்த கவிஞர். இவரது சிந்தனையும், வாசிப்பனுபவமும் எப்பொழுதும் என்னை ஆச்சரியமூட்டுகிறது.
Posted by Vaa.Manikandan at 1:38 PM 8 comments
Wednesday, September 26, 2012
அக்கரைக் காற்று
➦➠ by:
வா.மணிகண்டன்
கே.பாலமுருகன்:
மலேசிய எழுத்தாளர் கே.பாலமுருகன், சிறுகதை எழுத்தில் தனக்கென தனிமுத்திரை பதித்து வருபவர். அவரின் வலைத்தளம் இது. மலேசிய வாழ்க்கையை அசலாக பதிவு செய்யும் பாலமுருகனின் எழுத்துக்கள் வரலாறு, சமூகம், புத்தக விமர்சனங்கள், குறுநாவல், கவிதைகள் என பயணம் செய்கின்றன. மலேசிய தமிழ் இலக்கியத்தில் மிக ஆக்கப்பூர்வமான உரையாடலை முன்னெடுக்கும் சில இளைஞர்களில் பாலமுருகனுக்கு முக்கிய இடம் என்பதாலேயே அவர் மீது மரியாதை கூடுகிறது.
மாற்றுப்பிரதி:
ஈழத்துக்கவிஞர் றியாஸ் குரானாவின் வலைப்பதிவு. வலைப்பதிவின் பெயருக்கேற்றபடி கவிதையில் மாற்றுப்பிரதியை உருவாக்குவதில் முக்கியமான கவிஞர். இதுவரை கவிதை என முன்வைக்கப்பட்டதை கலைத்துப்போட்டு விளையாடுகிறார். நவீன கவிதையில் பரிச்சயம் இல்லாதவர்களுக்கு இந்தக் கவிதைகள் புரியாதது போன்ற பிம்பத்தை உருவாக்கக் கூடும். ஆனால் இந்த புரியாததன்மையே இவரது கவிதைகளின் காந்த சக்தி. திரும்பத் திரும்ப வாசிக்கச் செய்யும் வித்தையை நிகழ்த்துகிறது.
தீபச்செல்வன்:
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நேரடி சாட்சியம் தீபச்செல்வன். இரத்தமும் சதையுமாக மண்ணுக்குள் புதைந்து போன மக்களின் வலிகளையும், வேதனைகளையும் தன் கவிதைகளின் வழியாக கண் முன் நிறுத்தும் இந்த ஈழத்துக்கவிஞனின் வலைத்தளம் இது. தொடர்ச்சியான எழுத்துக்களின் மூலமாக ஈழத்து இலக்கியத்தின் தடத்தில் தனக்கான அடையாளத்தை அழுந்தப் பதிக்கிறார்.
Posted by Vaa.Manikandan at 11:55 PM 7 comments
கண்ணாடிக்கிணறு
➦➠ by:
வா.மணிகண்டன்
தந்துகி:
மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளர், களப்போராளி ஆதவன் தீட்சண்யாவின் வலைத்தளம் இது. தற்பொழுது ஓசூரில் வசிக்கிறார். இவரது கூர்மையான சமூக விமர்சனங்களுக்கும், அங்கத எழுத்திற்கும் நான் ரசிகன். இவர் ஓசூரைப் பற்றி என் விகடனில் எழுதிவரும் கட்டுரைகள் மிக அதிக அளவிலான வாசக ஈர்ப்பை பெற்றிருக்கின்றன.
இவரது எழுத்துக்கள் இந்தத் தளத்தில் வகைப்படுத்தப்படாமல் இருக்கின்றன என்பது குறை.
ஓசூர் எனப்படுவது யாதெனின்,இடி இறங்குவதற்கு முன்பிருந்த எங்கள் பூர்வீக வீடு போன்றவை சில பருக்கைகள். பதம் பார்த்துக்கொள்ளுங்கள்.
கவின்மலர்:
கவிஞர் கவின்மலரின் வலைத்தளம். இவரது கவிதைகளையும், சிறுகதைகளையும், சமூக உணர்வு சார்ந்த கட்டுரைகளையும் இந்தத் தளத்தில் வாசிக்க முடிகிறது. ஆனந்த விகடனில் பணியாற்றும் கவின்மலரின் எழுத்துக்கள் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணக் கூடிய வீச்சினைக் கொண்டவை.
சமீப காலமாக விகடனுக்காக எழுதிய கட்டுரைகளை தனது தளத்தில் பிரசுரிக்கிறார். வலைப்பதிவுக்கென பிரத்யேகமாக எழுதுகிறாரா எனத் தெரியவில்லை.
கூடங்குளம் பெண்கள் குழந்தைகளின் சென்னை வருகை, விட்டு விடுதலையாகி..,தேவதைகள் போன்றவை நான் மிக ரசித்த கவின்மலரின் பதிவுகள்.
கண்ணாடிக் கிணறு:
கவிஞர் கடற்கரய்யின் வலைப்பூ. இவர் குமுதம் குழுமத்தில் பணியில் இருக்கிறார். இவரது கவிதைகள், இவர் செய்த நேர்காணல்கள், கட்டுரைகள், விமர்சனங்கள், அனுபவங்கள் என பரவலான வாசிப்பு அனுபவத்தை தரும் தளம் இது.
[இன்னும் சில தளங்களுடன் சில மணி நேரங்களில் வருகிறேன்]
Posted by Vaa.Manikandan at 1:31 PM 4 comments
Tuesday, September 25, 2012
தீராத எழுத்துக்கள்
➦➠ by:
வா.மணிகண்டன்
அழியாத கோலங்கள்:
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து செயல்படும் இந்த வலைப்பதிவில் இதுவரை 'தீராக் காதல்' என்னும் நாவலின் அத்தியாயங்கள் மட்டுமே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இதுவரை வெளிவராதது இந்த நாவல்.
ஒரு த்ரில்லர் கதையை நேர்த்தியாகவும் விறுவிறுப்பாகவும் கொண்டு செல்லும் மீசை முனுசாமியின் எழுத்துக்களை தொடர்ந்து வாசித்துவிடுகிறேன். உண்மையில் மீசை முனுசாமி என்பது புனைப்பெயர். அவர் ஒரு பத்திரிக்கையாளர் என கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பிற தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிந்ததில்லை.
விறுவிறுப்பாக ஒரு எழுத்தை கொண்டு செல்வது சாதாரணம். இதை எழுத்தில் தனக்கு இருக்கும் பயிற்சியின் மூலம் எழுத்தாளன் செய்துவிடலாம். ஆனால் கதைகளுக்குள் இருக்கும் தகவல்கள், அனுபவங்கள் போன்றவை அந்த எழுத்தை உயிர்ப்புடையதாக மாற்றுகின்றன. அதை மீசை முனுசாமி சாதாரணமாக செய்கிறார்.
இதுவரை இருபத்தைந்துக்கும் மேற்பட்ட அத்தியாயங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த நாவலைத் தவிர வேறு எதுவும் இல்லாததால் தனியான சுட்டி தேவையில்லை என நினைக்கிறேன்.
நாவல், சிறுகதை, மொழிபெயர்ப்பு, கட்டுரைகள் என ரவுண்டு கட்டி அடிக்கும் அபிலாஷின் நாவல். சமகால இளம் எழுத்தாளர்களில் இவரிடம் இருக்கும் தீவிரத்தன்மை பிரமிப்பூட்டக் கூடியது. அந்த அளவுக்கு தொடர்ச்சியாக இடைவெளியில்லாமல் எழுதி வருகிறார்.
கிரிக்கெட் குறித்தான விரிவான கட்டுரைகள் தமிழில் அபூர்வம். அந்தக் குறையை அபிலாஷ் நிவர்த்தி செய்கிறார். கிரிக்கெட்டின் நுட்பங்கள், அதில் இருக்கும் அரசியல் என சகலத்தையும் அலசும் கட்டுரைகளை இந்த தளத்தில் வாசிக்கலாம். உதாரணமாக சச்சினும் திராவிடும் - ஒரே படகில் மேதையும் நடைமுறைவாதியும் என்ற கட்டுரை. இது ஒரு சாம்பிள்தான். ஹைக்கூ மொழிபெயர்ப்பும் நிறைய செய்திருக்கிறார் அபிலாஷ்.
இலக்கிய விமர்சனமும் இவரது எழுத்துக்களில் கிடைக்கிறது. பாலியலும் தமிழ்ப்புனைவும் கட்டுரை எனக்கு மிக விருப்பமானது.
அபிலாஷின் ஜப்பானிய ஹைக்கூ மொழிபெயர்ப்பு, கிரிக்கெட் குறித்தான கட்டுரைகள், கால்கள் (நாவல்) ஆகியன நூல்களாக வெளிவந்திருக்கின்றன.
சந்தோஷ் முதன்மையாக ஓவியர். உயிர்மை, காலச்சுவடு போன்ற பதிப்பகங்களில் வெளியான பல புத்தகங்களின் அட்டைப்படங்கள் இவரது கைவண்ணத்தில் வெளியானவை. இப்பொழுது பதிப்பகத்துறையை கொஞ்சம் ஓரங்கட்டிவிட்டு விளம்பர உலகில் படம் காட்டிக் கொண்டிருக்கிறார். இவர் ஓவியம் மட்டும்தான் வரைவார் என நினைத்துக் கொண்டிருந்தால் இவரது வலைப்பதிவு பெரும் அதிர்ச்சி. இன்ப அதிர்ச்சிதான்.
அசால்ட்டான மொழியில் தன் அனுபவங்களை எழுதிவிடுவதில் சந்தோஷ் கில்லாடி. நுட்பமாக கவனித்தால் இந்த எழுத்துக்களுக்குள் சிறுகதைக்குரிய தன்மை ஒளிந்திருக்கும். நகைச்சுவையும் பிரமாதப்படுத்தும். அவ்வப்போது சிக்ஸர் அடித்துவிட்டு காணாமல் போய்விடுகிறார். நின்று அடித்தால் செஞ்சுரியே அடிப்பார். அப்படியொரு தில்லாலங்கடி இந்த சந்தோஷ்.
[சில நல்ல வலைப்பதிவுகளை நான் கவனிக்காமல் விட்டிருக்கலாம். இணைப்பை பின்னூட்டம் வழியாகவோ மின்னஞ்சல் வழியாகவோ (vaamanikandan@gmail.com) அனுப்பி வைத்தால் தன்யனாவேன் :).]
நன்றி.
[சில நல்ல வலைப்பதிவுகளை நான் கவனிக்காமல் விட்டிருக்கலாம். இணைப்பை பின்னூட்டம் வழியாகவோ மின்னஞ்சல் வழியாகவோ (vaamanikandan@gmail.com) அனுப்பி வைத்தால் தன்யனாவேன் :).]
நன்றி.
Posted by Vaa.Manikandan at 8:17 AM 7 comments
Monday, September 24, 2012
கனாக்காலம்
➦➠ by:
வா.மணிகண்டன்
2004 ஆம் ஆண்டு படிப்பிற்காக சென்னை வந்திருந்த காலகட்டம். அப்பொழுது சினிமாவும், இலக்கியமும் மட்டுமே தேடலாக இருந்தது. சினிமா என்றால் பாடலாசிரியர் ஆகிவிடலாம் என்று கனவு. எழுதி வைத்திருந்த கவிதைகள் அந்த கனவுத் தீக்கு பெட்ரோல் ஊற்றிக் கொண்டிருந்தன.
வைரமுத்துவும், மேத்தாவும் மட்டுமே இலக்கிய கர்த்தாக்கள் என்ற நினைப்பு ஆக்கிரமித்திருந்த அந்த நாட்களில் சினிமாக்கவிஞர்களை தேடிப்பிடிப்பது ஞாயிற்றுக்கிழமைகளின் பொழுதுபோக்காக இருந்தது. கங்காரு தன் குட்டியை சுமந்து செல்வது போல எழுதி வைத்திருக்கும் கவிதைகள் அனைத்தையும் தூக்கிக் கொண்டு செல்வது வழக்கம். பாடலாசிரியர்களிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு வாஞ்சையோடு அந்த கவிதைத் தாள்களை நீட்டுவேன்.
அப்படியான ஒரு ஞாயிற்றுக்கிழமையின் மாலை வேளையில் தமிழச்சி தங்கப்பாண்டியனின் புத்தக அறிமுக விழா ஒன்று மைலாப்பூரில் நடந்து கொண்டிருந்தது. யுகபாரதியை சந்திக்க செல்லவிருக்கும் திட்டத்தை திசை மாற்றி விழாவில் இரண்டாவது வரிசையில் அமர்ந்து கொண்டேன். முந்தைய வரிசையில் மனுஷ்ய புத்திரன் அமர்ந்திருந்தார். அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். உடனடியாக நிகழ்ச்சி தொடங்கிவிட்டதால் அவருடன் அதிகம் பேச முடியவில்லை. தன்னைச் சந்திக்க வருமாறு முகவரியைக் கொடுத்தார்.
அடுத்த ஞாயிற்றுக்கிழமையில் வழக்கம் போலவே நான் எழுதி வைத்திருந்த கவிதைகளை தூக்கிக் கொண்டு அவரை சந்திக்க சென்றிருந்தேன். ஆனால் அது வழக்கமான சினிமாக் கவிஞர்களுடனான சந்திப்பு போன்றில்லை. என் கவிதைகளை புரட்டி பார்த்தவர் எதுவும் சொல்லவில்லை. பசுவய்யாவின் 107 கவிதைகள், சுகுமாரன், ஆத்மாநாம் ஆகியோரின் கவிதைத் தொகுப்புகளை கொடுத்து வாசித்துவிட்டு வரச் சொன்னார். முதலில் இந்தக் கவிதைகளில் எதுவுமே புரியவில்லை. ஆனால் அந்த புரியாததன்மைதான் வெறியூட்டியது. கவிதைகளை திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டிருந்தேன். இப்பொழுது நினைத்துப் பார்த்தால் அது ஒரு பித்து நிலை. அந்தக் காலகட்டத்தில் என்னைச் சுற்றி நடந்தவைகளை கிஞ்சித்தும் ஞாபகப்படுத்திக் கொள்ள முடியவில்லை. நவீன கவிதையுலகின் கதவுகள் மெல்லத் திறக்கத் துவங்கின. என் பழைய கவிதைகள் என்னிடமிருந்து வெகுதூரம் விலகிவிட்டன. அதற்கு பிறகு அந்தத் கவிதைகள் எழுதப்பட்டிருந்த தாள்களை தேடவே இல்லை.
ஆனால் நவீன கவிதைகளில் நான் புரிந்து கொண்டவை சரிதானா என்ற குழப்பம் அரித்துக் கொண்டிருந்தது. மனுஷ்ய புத்திரனிடமே கேட்டேன். "கவிதை என்ன சொல்ல வருதுங்கிறது முக்கியம் இல்லை. கவிதையில் நீ என்ன புரிஞ்சுக்கிட்டேங்கிறதுதான் முக்கியம். அதனால நீ எப்படி புரிஞ்சுகிட்டாலும் சரிதான்" என்றார். இனி நவீன கவிதைகள் கைகூடிவிடும் என்ற நம்பிக்கை தொற்றிக் கொண்டது.
நவீன கவிதைகளை எனக்கான அடையாளமாக்கிக் கொள்ள விரும்பியதன் விளைவாகவே வலைப்பதிவு தொடங்க விரும்பினேன். 2005 ஆம் ஆண்டு பிப்ரவரியில் "பேசலாம்" என்ற பெயரில் வலைப்பதிவை தொடங்கி கணினித்திரையில் பெயரை பார்க்கும் போது உலகமே என் காலடியில் இருப்பதான ஒரு உற்சாக பிரமை தொற்றிக் கொண்டது. ஆனால் அது உண்மையாக இருக்கவில்லை. அந்தக்காலகட்டத்தில் வலைப்பதிவில் பிரபலமாக எழுதிக் கொண்டிருந்தவர்களில் பலரும் மிகுந்த சிரத்தையுடன் எழுதிக் கொண்டிருந்தார்கள். பத்திரிக்கையாளர் மாலன், பத்ரி, மதி கந்தசாமி, காசி, முத்து தமிழினி, பாலபாரதி, குழலி, தமிழ் சசி, ஐகாரஸ் பிரகாஷ் என்ற பெயர்கள் உடனடியாக நினைவில் வருகின்றன. அவர்களோடு போட்டி போட முடியாத அளவிற்குத்தான் என் எழுத்துக்கள் இருந்தன்.
எனது எழுத்துக்கள் பக்குவமற்ற, முதிர்ச்சியில்லாத வகையினதாக இருந்திருக்கின்றன என்பதை ஆரம்பகால பதிவுகளை வாசிக்கும் போது புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் எழுத்தை தொடர்ந்து சீர்படுத்திக் கொள்ள வலைப்பதிவு உதவியிருக்கிறது. தொடர்ந்து எழுதுவதால் மட்டுமே எழுத்து மேன்மையடைகிறது என்பதை நேரடியாக உணர முடிந்தது. பல இலக்கிய இதழ்களில் கவிதைகள், விமர்சனங்கள் எழுதவும், ஆனந்த விகடன் போன்ற வெகுஜன இதழில் சிறுகதைகள் எழுதவும், கல்கியில் 'ரோபோடிக்ஸ்' குறித்தான தொடர் எழுதவும் இந்த வலைப்பதிவுதான் அடிப்படையான காரணம் என நம்புகிறேன்.
இப்பொழுது 'பேசலாம்' என்ற வலைப்பதிவு 'நிசப்தம்' என மாறியிருக்கிறது. மின்னல்கதைகள், கவிதைகள், விமர்சனங்கள், சமூகம், அனுபவங்கள், கவிதைகளை புரிந்து கொள்வது பற்றி என எழுதிக் கொண்டிருக்கிறேன்.
நான் வலைப்பதிவை ஆரம்பித்தை காலகட்டத்தில் எழுதிக் கொண்டிருந்தவர்களில் பலர் இப்பொழுது எழுதுவதில்லை. இடையில் அவ்வப்போது பிரபலமடைந்தவர்கள் பிறகு எழுதுவதை நிறுத்தியிருக்கிறார்கள். சிலர் ஒரே சீராக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இந்த வலைப்பதிவு உலகம் ஒரு காட்டாறு. தன் போக்கில் ஓடிக் கொண்டிருக்கிறது. தனக்குள் விழும் சருகுகள், பூக்கள், இலைகள் என சகலத்தையும் அடித்துச் செல்கிறது. தலையுயர்த்தும் பூக்களைப் போலவே சருகுகளும் தலையுயர்த்துகின்றன. ஆனால் பூக்கள் தனக்கான அடையாளத்தை விட்டுச் செல்கின்றன. சருகுகள் காணாமல் போகின்றன.
வலைப்பதிவை ஏழரை ஆண்டுகளாக வைத்திருப்பதில் கொஞ்சம் அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன. கொஞ்சம் நட்புகள் கிடைத்திருக்கின்றன, கொஞ்சம் அடையாளமும் கிடைத்திருக்கிறது.
(பேசுவோம்)
Posted by Vaa.Manikandan at 7:57 AM 17 comments
Sunday, September 23, 2012
➦➠ by:
* அறிமுகம்
சென்று வருக ஜலீலா கமால் - பொறுப்பேற்க வருக வா.மணிகண்டன்
அன்பின் சக பதிவர்களே
இன்றுடம் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற ஜலீலா கமால் தான் ஏற்ற பொறுப்பினை முழு மனது மற்றும் ஈடுபாட்டுடன் நிறைவேற்றி, மன நிறைவுடன் மகிழ்ச்சியாக நம்மிடம் இருந்து விடைபெறுகிறார்.
இவர் இட்ட பதிவுகள் : 008
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 124
சுய அறிமுகப் பதிவுகள் உள்ளிட்ட - அறிமுகப் படுத்தப்பட்ட பதிவுகள் : 184
பெற்ற மறு மொழிகள் : 156
184 பதிவுகளையும் அவற்றை எழுதிய 124 பதிவர்களையும் கடும் உழைப்பினால் அறிமுகப் படுத்திய ஜலீலா கமால் அவர்களை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.
நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் வா.மணீகண்டன்.
இவரது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்திற்கு அருகில் உள்ள கரட்டடிபாளையம் என்னும் சிற்றூர். தற்பொழுது பெங்களூர் வாசம்.
இவர் நிசப்தம் என்ற தளத்தில் 2005 பிப்ரவரி முதல் எழுதி வருகிறார். இது வரை 408 பதிவுகள் பல்வேறு தலைப்புகளில் எழுதி இருக்கிறார்.
வா.மணிகண்டனை வருக வருக என வரவேற்று வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
நல்வாழ்த்துகள் ஜலீலா கமால்
நல்வாழ்த்துகள் வா.மணிகண்டன்
நட்புடன் சீனா
184 பதிவுகளையும் அவற்றை எழுதிய 124 பதிவர்களையும் கடும் உழைப்பினால் அறிமுகப் படுத்திய ஜலீலா கமால் அவர்களை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.
நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் வா.மணீகண்டன்.
இவரது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்திற்கு அருகில் உள்ள கரட்டடிபாளையம் என்னும் சிற்றூர். தற்பொழுது பெங்களூர் வாசம்.
நவீன கவிதைகள், கவிதை சார்ந்த உரையாடல்கள், விமர்சனங்கள் என தொடர்ந்து பங்குபெறுவதும் சிறுகதைகள் எழுதுவதும் தற்போதைய அடையாளங்கள். கல்கி வார இதழில் தொடராக வெளிவரும் 'ரோபோஜாலம்' எழுதிக் கொண்டிருப்பது இன்னொரு அடையாளம்.
”கண்ணாடியில் நகரும் வெயில்” என்ற கவிதைத் தொகுப்பும், “சைபர் சாத்தான்கள்” என்ற கட்டுரைத் தொகுப்பும் வெளியாகியிருக்கின்றன. இரண்டும் உயிர்மை பதிப்பகத்தின் வெளியீடு.
அடுத்த கவிதைத் தொகுப்பான "என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி" காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடாக இந்த ஆண்டு இறுதிக்குள் வெளிவரவிருக்கிறது.
இவர் நிசப்தம் என்ற தளத்தில் 2005 பிப்ரவரி முதல் எழுதி வருகிறார். இது வரை 408 பதிவுகள் பல்வேறு தலைப்புகளில் எழுதி இருக்கிறார்.
வா.மணிகண்டனை வருக வருக என வரவேற்று வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
நல்வாழ்த்துகள் ஜலீலா கமால்
நல்வாழ்த்துகள் வா.மணிகண்டன்
நட்புடன் சீனா
Posted by cheena (சீனா) at 5:51 PM 8 comments
இல்லக்கலவை
➦➠ by:
ஜலீலாகமால்
வீட்டு மருத்துவம் அனைவருக்குமே பயன்படும். மாத்திரை மருந்து களை விட கை மருந்து , பாட்டி வைத்தியம் மூலம் ஓரளவுக்கு நாமே நம்மை பார்த்து கொள்ளலாம். ஹச்சுன்னா டாக்டர் , புச்சுன்னா டாக்டர் கிட்ட ஓடி போக வேண்டியது அவரும் ஒரு பை புல்லா மாத்திரை மருந்த அள்ளி கொடுப்பது.
இதனால் ஏகப்பட்ட பக்க விளைவுகள். இதிலிருந்து ஓரளவுக்கு விடுபட கண்டிப்பாக சில கை வைத்தியங்கள் தெரிந்து வைத்து கொள்வது நல்லது.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
1. முத்து சிதறலில் கண்டெடுத்த மருத்துவ முத்து க்கள். இங்கு மருத்துவ முத்துமட்டுமல்ல சமையல் முத்து, ஓவிய முத்து, சிந்தனை முத்து என பல முத்துக்கள் இருக்கிறது.
7. தமிழ் பெருங்கடலில் நான் ஒரு துளி
டெங்கு காய்ச்சல் பற்றி இங்கு அறியலாம் வாங்க
கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்
அதுக்கு நம் தோழிகள் ஈசியாக எப்படி சொல்லி கொடுக்கிறார்கள் என பார்க்கலாம்.
விதவிதமானபெயிண்டிங், இன்னும் விதவிதமான சமையலும் உண்டு.
6. பெண்கள் ஜாக்கெட் மற்றும் சல்வார் தைக்கும் போது கழுத்து பாகத்தில்
கழுத்து சில பேர் மூடிய கழுத்து போடுவார்கள் சிலர் பெரிய கழுத்து வைத்து தைத்து போடுவார்கள், அப்படி போடும் போது உள்ளாடை வெளியே தெரிவதை யாரும் கவனிப்பதில்லை. ஆனால் சில டெயிடர்கள் கழுத்தை லூசாகவும் தைத்து விடுவார்கள்.
அதற்கு மேலெ படத்தில் உள்ளது போல் கழுத்திலிருந்து தோள் பட்டை வரை சிறிய லூப் வைத்து தைத்து பட்டன் வைத்து கொண்டால் உள்ளாடை அங்க இங்க நகறாது. நீங்களும்அப்ப அட்ஜஸ்ட் செய்து கொண்டு இருக்க தேவையில்லை டென்ஷன் இல்லாமல் இருக்கலாம்.
( அறுசுவையில் முதல் முதல் பயந்து பயந்து குறிப்பு கொடுக்கும் போது என்னை தட்டி கொடுத்து கை தூக்கி விட்டு ஏணிப்படியில் ஏறவைத்த வலை உலக முதல் தோழி ) கேரள சமையலில் அசத்தும் தளிகா
"ஆவுகெச்சேனு, அப்படின்னாஎன்ன?ன்னுகேட்டேன்.
"ம்ம்ம்ம்... அதுவாபொம்பளைங்கபாஷை" ன்னாங்க!
ஒருவேளை 'வாவ்' என்பதைதான்இப்படிசொன்னாங்களோ, தெரியலை! ஆனாமுன்பொருமுறைவிமல்பெட்சீட்விளம்பரம்ஒன்றில், "பெண்கள்தங்கள்மனோபாவங்களைபலவழிகளில்வெளிப்படுத்துகிறார்கள்அவற்றில்இதுவும்ஒன்று" என்றுஒருவரிஎழுதிஇருக்கும்.அதுபோல்தான்இதுவும்என்றுநினைத்துக்கொண்டேன்.
பெருநாள் நெருங்கி கொண்டிருந்த நேரம். வீட்டில், "புது பேண்ட் இன்னும் தைக்கக் கொடுக்கலியா" என்று தினம் கேட்டுக் கொண்டே இருந்தாங்க. இன்னும் பேண்ட் பிட்டே எடுத்தப் பாடில்லை. எப்ப நேரம் கிடைத்து எப்ப தைக்க கொடுக்கிறது.
'மணி' போல் இன்னும் பலபேர் நமது நாட்டில் நிறைய வேலைகள் கற்றுக் கொண்டு உருவாக வேண்டும்.
இவர்களுடன் மீண்டும்
தமிழ்குடும்ப தோழிகள்
இங்கும் தையல் கலைகளை நிறைய உண்டு
10 அரபிக் மெகந்தி டிசைன் எப்படி வைப்பது.... வாங்க தோழி பாயிஜாவிடம் கற்று
கொள்ளலாம்
மருதாணி போட்டு கொள்வதை விரும்பாத பெண்களே கிடையாது . பெண்களுக்கு அழகே
மருதானி தான் அதை மேலும் மெருகூட்டி அரபிக் மாடலில் எப்படி மெகந்தி
போடலாம் என்பதை சொல்லி கொடுக்கிறார் பாயிஜா//
11. விஜியின் ஆர்ட் கிராப்ட் பெயிண்டிங்
பேப்பர் கலர் பொம்மை
12. எல்லா பெண்களுக்கும் பயன் படும் ஜாக்கெட் தைப்பது எப்படி? இதோ இப்படி தான்.அப்படியே மெகந்தியும் வைத்து கொள்ளுங்கள்.அடி மருதாணி
*************************************************************
*************************************
****************
அப்படியே ஜலீலாவின் வைத்தியங்களும் உங்களுக்கு பயன் படலாம் என் கை வைத்திய பதிவுகளில் அனைவருக்கும் மிகவும் பயன் பட்டது
குழந்தைகளுக்கு ஆறுமாதம் ஒரு முறை பூச்சி மருந்து கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.
வேப்பிலை இஞ்சி சாறு இது குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை வயிற்று பூச்சிக்கு குடிக்கலாம் வயசுக்கு ஏற்றவாறு அளவை கூட்டி குறைத்து குடிக்கவேண்டியது
மேலும் வாசிக்க...
இதனால் ஏகப்பட்ட பக்க விளைவுகள். இதிலிருந்து ஓரளவுக்கு விடுபட கண்டிப்பாக சில கை வைத்தியங்கள் தெரிந்து வைத்து கொள்வது நல்லது.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
1. முத்து சிதறலில் கண்டெடுத்த மருத்துவ முத்து க்கள். இங்கு மருத்துவ முத்துமட்டுமல்ல சமையல் முத்து, ஓவிய முத்து, சிந்தனை முத்து என பல முத்துக்கள் இருக்கிறது.
ஆனால் இவங்க ஓவியம் அப்ப்படியே தத்ரூபமாக
இருக்கும்.
அப்சாரா அவங்க அனுபவ கை வைத்தியத்தையும் வந்து பாருங்கள்.
சின்ன கை வைத்தியம் குழந்தை குழந்தைகளின்சளிகுறைய
வீட்டு வைத்தியம்
3. குழந்தையின் வாந்தி நிற்க
ஓமத்தை வறுத்து பொடி செய்து அதன ுடன் தேன் கலந்து கொடுக்ககுழந் தையின் வாந்தி நிற்கும்.
நான் வளர்ந்ததெல்லாம் கோவையிலுங்க, இப்ப இருக்கறது… அட நம்ம இந்தியத் தலைநகரிலுங்கோ
குழந்தைகளுக்கு சளி பிடித்தால் மாதுளம் பழசாற்றுடன் தேன்கலந்து கொடுக்கவும்.
நெஞ்சில் கபம் இருந்தால் வால் மிளகை தூள் செய்து ஒருசிட்டிகை தூளுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலையில்சாப்பிட வேண்டும்.
*************************
4. சர்க்கரை நோய்க்கான காரணியை விரிவான மோகனா
சுந்தரம் அவர்கள் சொல்லுகிறார்
மிகக் கவனமாக இருந்தால், சர்க்கரைநோய் வராமல் தடுக்கலாம். கவனமாக இருந்தால், சர்க்கரை நோய் வந்துவிட்டாலும், அதனை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம்.
- என்ன செய்யவேண்டும்,
- என்ன செய்யக்கூடாது
என்பதைத் தெளிவாக தெரிந்து கொள்வது,
உயிர் வாழ்வதற்கு உதவி செய்யும்.
வாழ்க்கை 40 வயதில்தான் தொடங்குகின்றது என்று ஒரு பேச்சுக்கு கூறுவார்கள். ஆனால் அது முற்றிலும் பொய் என்கின்றனர், சுகாதாரத்துறையைச் சார்ந்தவர்கள்.
6. வீட்டில் எப்போதும் சுக்கு ,மிளகு,இஞ்சி,தேன்,
ஓமம்,வெந்தயம் ,வாங்கி வைத்து கொண்டால் நாமே கை மருத்துவம்செய்து பார்க்கலாம்.தற்காலிக நிவாரணம் கிடைக்கும்.சில சமயங்களில் மருத்துவ செலவுக்கு அவசியமே இல்லாமல் காப்பாற்றும்.இதில் பின் விளைவுகள் எதுவும் இருக்காது.இதை கொண்டே சாதாரண பிரச்சனைகளை சிக்கனமாக சமாளிக்கலாம்.
- கொசு உருவாகும் இடங்களான உபயோகமற்ற டிரம், டயர்,பாட்டில் ஆகியவற்றை அகற்றுதல்
- சாக்கடை நீர் தேங்காது சுத்தப்படுத்தல்
- கொசு மருந்தடித்தல்
8.டாக்டர் என்ன மருந்து எழுதி இருக்காருன்னே படிப்பது கிடையாது. அப்படியே மெடிக்கல் ஷாப்ப்பில் போய் சீட்ட நீட்ட வேண்டியது வீட்டுக்கு வந்து லபக்கு லபக்குன்னு விழுங்க வேண்டியது..
இப்படி எத்தனை பேர் இருக்கீங்க.
தலைவலி,காய்ச்சலென்று வந்துவிட்டால் பாமரனும் மெடிக்கல் கடைக்குச் சென்று கால்பால்,பரசிடமல்,சரிடான் போன்ற மாத்திரைகளை தாமே வாங்கி சாப்பிட்டுவிட்டு குணமடைவதுண்டு.குணமடையாமல் போவதும் உண்டு
மருந்து எப்போழுது தயாரிக்கப்பட்டுள்ளது,எடுத்துக் கொள்ளும் அளவு,எக்ஸ்பெயரி காலம் இவற்றை தெரிந்து கொள்ள வேண்டும்.
*****************************************
இல்லத்தரசிகளுக்கு குழந்தைகளை பள்ளி அனுப்பு வீட்டு பாடம் சொல்லி கொடுத்து தேர்வு சமையத்தில் அவர்களை கண்காணித்து பார்த்து கொள்வது ஒரு பக்கம் என்றால் தேர்வு விடுமுறை கோடை விடுமுறைகளை கழிப்பதும் பெரும் பாடு. சில குழந்தைகள் பாட்டு கிளாஸ், டான்ஸ் கிளாஸ்,மற்றும் டிராயிங்க் என சென்றாலும் சிலருக்கு விட்டிலிருந்தே அவர்களுக்கு இதை எல்லாம் கற்று கொடுக்கும் படி செய்யலாம்.
அதுக்கு நம் தோழிகள் ஈசியாக எப்படி சொல்லி கொடுக்கிறார்கள் என பார்க்கலாம்.
1. 1. ஹர்ஷினிஅம்மா
முத்துமாலை மணி மாலை என்னை தொட்டு தொட்டு தாலாட்ட..
ம்ம் முத்து மாலை போட்டு கொண்டால் இருக்கும்குதுகலம் எப்படி இருக்கும் என தெரியுமா? எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களுக்கு வாங்க ஈசியா செய்ய கத்துக்கலாம்.
மினிகார்டூன்பெயிண்டிங்
பிள்ளைகளுக்கு ரொம்ப பிடிச்சது கார்டூன் அதை பெயிண்டிங் செய்ய சொல்லி கொடுத்தால் ரொம்ப சந்தோஷம் படுவார்கள்.
குழந்தைகளுக்கு முகவும் பிடித்த கார்டூனை நாமே எளிதில் பன்னி அவர்கள் அறையே அழங்கரிக்க இதோ ஒரு மினி கார்டூன்.... ஹர்ஷினிக்கு முகவும் பிடித்த மினி இதோ.
விதவிதமானபெயிண்டிங், இன்னும் விதவிதமான சமையலும் உண்டு.
2. ஏஞ்சலினும் அவங்க குட்டி தேவைதையும் சேர்ந்து கலக்கும்
குவில்லிங் பேப்பர் கிராஃப்ட் அனைவரும்
ஈசியா கத்துக்கலாம்
அது மட்டும் இல்லை விதவிதமான வாழ்த்து அட்டை செய்யவும் சொல்லி தராங்க
பாருஙக்ள். இப்ப நீங்களே மிக்க்குறைந்த விலையில் வாழ்த்து அட்டை தயாரிக்கலம்.
//மூன்று வருடமுன் என் மகள் செய்த இந்த இரண்டு பறவைகள்தான் என்னை க்வில்லிங் செய்ய தூண்டியது//
எனக்கு மிகவும் பிடித்த மற்றொரு செய்முறை .
வண்ணக்காகிதங்களை மெல்லியதாக வெட்டி அழகிய
வடிவங்கள் செய்வது paper filigree /quilling .
இதற்கென ஒரு special tool ,quilling slotted tool .இதனை கொண்டு தான்
நான் இவற்றை செய்தேன்.
( நெஜமாவே இதெல்லாம் செய்ய ரொம்ப பொருமை வேண்டும். ஏஞ்சலின்)
இங்கு வந்து வித விதமான கோலங்களை கற்று கொள்ளலாம் வாங்க...
( சாரு ரொம்ப நாட்களாக ஆளையே காணும்)
4.தாய் தரும் கல்வி - தமிழ் புத்தகம். பேசுவதோ உருது மொழி, ஆனால் தமிழ் மேல் உள்ள பற்றால் தானும் நன்கு கற்று தன் மகனுக்கும் சொல்லி கொடுக்கிறாங்க. வெளிநாடுகளில் தாய் மொழியை யாரும் கற்றுகொள்வதில்லை ஹிந்தி மற்றும் ப்ரென்ச் தான். இது கண்டிப்பாக உங்கள் குழந்தைகளுக்கு உதவும். அ ஆ இ ஈ
5.சல்வார்க்கு
தைக்கும் சுடிதார், பாட்டியாலா, கம்மிஸ் இதில் தோத்தி பேண்டை சொல்லி தராங்க இந்த
தோழி.தோதி பேண்ட்
பெண்களுக்கு பாதுகாப்பான உடையும் அழகை சேர்க்கக்கூடிய உடையுமென்றால் அது ஷல்வார்தான்....
இப்போஇவை எத்தனையோடிசைன்களில்....ஒவ்வொரு நாட்டுமக்களின் தனித்தன்மைக்கேற்பவடிவமைக்கப்பட்டிருப்பதுதான் ஆச்சரிப்படும்உண்மை.....சுடிதார்...பஞ்சாபி.(panjabi)
......பட்டேலா(patiala )...தோத்தி(.dhoti)
இப்படிப்பல.....பெயர்களிர்உண்டு....ஒவ்வொருவகையும்...ஒவ்வொருவடிவத்தில்காட்சிதந்து அழகுபடுத்துகிறது.....
6. பெண்கள் ஜாக்கெட் மற்றும் சல்வார் தைக்கும் போது கழுத்து பாகத்தில்
கழுத்து சில பேர் மூடிய கழுத்து போடுவார்கள் சிலர் பெரிய கழுத்து வைத்து தைத்து போடுவார்கள், அப்படி போடும் போது உள்ளாடை வெளியே தெரிவதை யாரும் கவனிப்பதில்லை. ஆனால் சில டெயிடர்கள் கழுத்தை லூசாகவும் தைத்து விடுவார்கள்.
அதற்கு மேலெ படத்தில் உள்ளது போல் கழுத்திலிருந்து தோள் பட்டை வரை சிறிய லூப் வைத்து தைத்து பட்டன் வைத்து கொண்டால் உள்ளாடை அங்க இங்க நகறாது. நீங்களும்அப்ப அட்ஜஸ்ட் செய்து கொண்டு இருக்க தேவையில்லை டென்ஷன் இல்லாமல் இருக்கலாம்.
( அறுசுவையில் முதல் முதல் பயந்து பயந்து குறிப்பு கொடுக்கும் போது என்னை தட்டி கொடுத்து கை தூக்கி விட்டு ஏணிப்படியில் ஏறவைத்த வலை உலக முதல் தோழி ) கேரள சமையலில் அசத்தும் தளிகா
7. குஷன்கவர் மற்றும் எம்ராய்டரிதையலும்சொல்லிகொடுக்கிறாங்கவானதி.
பார்க்கவேஅழகாகஇருக்கு.இது மட்டும் அல்ல பல சிறுகதைகளும் எழுதி இருக்காங்க..
வித விதமான மணிமாலைகள் எப்படி செய்யலாம்.
"ஆவுகெச்சேனு, அப்படின்னாஎன்ன?ன்னுகேட்டேன்.
"ம்ம்ம்ம்... அதுவாபொம்பளைங்கபாஷை" ன்னாங்க!
ஒருவேளை 'வாவ்' என்பதைதான்இப்படிசொன்னாங்களோ, தெரியலை! ஆனாமுன்பொருமுறைவிமல்பெட்சீட்விளம்பரம்ஒன்றில், "பெண்கள்தங்கள்மனோபாவங்களைபலவழிகளில்வெளிப்படுத்துகிறார்கள்அவற்றில்இதுவும்ஒன்று" என்றுஒருவரிஎழுதிஇருக்கும்.அதுபோல்தான்இதுவும்என்றுநினைத்துக்கொண்டேன்.
தமிழ்குடும்ப தோழிகள்
இங்கும் தையல் கலைகளை நிறைய உண்டு
10 அரபிக் மெகந்தி டிசைன் எப்படி வைப்பது.... வாங்க தோழி பாயிஜாவிடம் கற்று
கொள்ளலாம்
மருதாணி போட்டு கொள்வதை விரும்பாத பெண்களே கிடையாது . பெண்களுக்கு அழகே
மருதானி தான் அதை மேலும் மெருகூட்டி அரபிக் மாடலில் எப்படி மெகந்தி
போடலாம் என்பதை சொல்லி கொடுக்கிறார் பாயிஜா//
11. விஜியின் ஆர்ட் கிராப்ட் பெயிண்டிங்
அப்படியே ஜலீலாவின் வைத்தியங்களும் உங்களுக்கு பயன் படலாம் என் கை வைத்திய பதிவுகளில் அனைவருக்கும் மிகவும் பயன் பட்டது
Thread Stand இது என் பையன் செய்தது. பெண்கள் வீட்டில் துணிகளை கட்டிங் செய்யும் போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.
பதிவு நீளமாகி விட்டது என நினைக்கிறேன்.இரண்டு பிரிவாக எடுத்து வைத்து இருந்தேன். இன்றோடு என் பணி முடிவதால் அனைத்தையும் கலந்து விட்டேன்.
என் அறிமுகங்களை பொறுமையாக படித்து ஆதரவு கொடுத்த அனைவருக்கும் மிக்க நன்றி, வலைச்சர ஆசிரியர் பொறுப்பு கொடுத்த சீனா ஐய்யாவுக்கும் மிக்க நன்றி.
ஜலீலாகமால்
என் அறிமுகங்களை பொறுமையாக படித்து ஆதரவு கொடுத்த அனைவருக்கும் மிக்க நன்றி, வலைச்சர ஆசிரியர் பொறுப்பு கொடுத்த சீனா ஐய்யாவுக்கும் மிக்க நன்றி.
ஜலீலாகமால்
Posted by Jaleela Kamal at 5:21 PM 20 comments
Subscribe to:
Posts (Atom)