1.முதல் நாள்: என்னைப் பற்றி
➦➠ by:
தி.தமிழ் இளங்கோ
அனைவருக்கும் வணக்கம்! கல்லூரி ஆசிரியர் ஆக வேண்டும் என்ற கனவில்தான் நான் இருந்தேன். ஆனால் குடும்பச் சூழ்நிலை காரணமாக கிடைத்த
வேலையை விட்டுவிடக் கூடாது என்பதற்காக வங்கிப் பணியில் சேர்ந்தேன். இப்போது
வலைச்சரம் ஆசிரியர் பணி எனது கனவை நிறைவு செய்துள்ளது. வலைச்சரத்தின் ஒருவார கால
ஆசிரியர் பணி தந்த ”வலைச்சரம் அன்பின் சீனா” அவர்களுக்கும, வலைச்சரம் பொறுப்புக் குழுவில் இருக்கும் தமிழ்வாசி பிரகாஷ்
அவர்களுக்கும், எனக்காக பரிந்துரை செய்த திரு VGK
(வை.கோபால கிருஷ்ணன் ) அவர்களுக்கும் எனது நன்றி!
என்னைப் பற்றி நானே என்ன சொல்லிக்
கொள்வது என்று தெரியவில்லை. கல்லூரியில் பயின்ற (இளங்கலை,முதுகலை) தமிழ் காரணமாக, வங்கியிலிருந்து விருப்ப ஓய்வு
பெற்றதும் வலைப் பதிவில் எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது. கவிச்சக்கரவர்த்தி கம்பர், ”பாற்கடலை
நோக்கிய ஒரு பூனை அதனை ஆசையுடன் நக்கியது போன்றே நானும் இராமன் கதையை எனது ஆசையின்
காரணமாக சொல்லுகிறேன்” என்றார்.
ஓசை
பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு
பூசை, முற்றவும் நக்குபு புக்கென,
ஆசை பற்றி அறையலுற்றேன்-மற்று, இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதைஅரோ! 4
பூசை, முற்றவும் நக்குபு புக்கென,
ஆசை பற்றி அறையலுற்றேன்-மற்று, இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதைஅரோ! 4
- கம்பராமாயணம் - பால காண்டம் (அவையடக்கம்)
என்னுடைய கருத்துக்களை வெளியிட வேண்டும் என்ற ஆசையில்தான் “எனது எண்ணங்கள் http://tthamizhelango.blogspot.in “
என்ற வலைப்பதிவைத் தொடங்கினேன். ”தமிழ்
மணம்” தந்த “தமிழில் எழுதலாம் வாருங்கள்” என்ற வரவேற்பும் மற்றும் வலைப்பதிவு நண்பர்களின்
ஆதரவும் ஊக்கமும் இதுநாள் வரை எழுத வைத்துக் கொண்டிருக்கிறது. என்னைப் பற்றி அனுபவம் என்ற தலைப்பில் எழுதப்பட்ட எனது கட்டுரைகளில்
முழுமையாக தெரிந்து கொள்ளலாம். இருந்தாலும் உடனடியாக பார்த்துக் கொள்ள எனது இரண்டு
பதிவுகளின் தலைப்புகள் இதோ.
http://tthamizhelango.blogspot.com/2012/03/blog-post.html
நானும் எனது ஊரும் (தொடர் பதிவு) - திருமழபாடி
ஐந்து வருடங்களுக்கும் மேலாக வலைப் பதிவுகளை படித்தும், செப்டம்பர் – 2011 இலிருந்து எனது
வலைப்பதிவில் எழுதியும் வருகிறேன். இங்கு நான் சுட்டிக் காட்டும் பதிவுகள்
அனைததும் நான் படித்தவையே. ( தமது பதிவுகளில் தங்களது புகைப்படம் வெளியிட விருப்பம் இல்லாதவர்களின் படங்களை இங்கு சேர்க்கவில்லை)
இன்றைய எனது அறிமுக வலைப்பதிவுகள்:
இவ் வலைப்பதிவின் பதிவர்
ஞானவெட்டியான் அவர்கள். நான் வலைப்பதிவைத் தொடங்குவதற்கு முன்பு மற்றவர்கள் பதிவில் கருத்துக்களை
மட்டுமே சொல்லி வந்தேன். அப்போது தமிழில் எழுத இகலப்பை (‘ikalappai) என்னும் தமிழ் எழுதியைப் பற்றி எனக்கு விளக்கியவர் இவர். திருச்சியில் நான் பணிபுரிந்த அரசு வங்கி கிளையில் எங்களுக்கு கள அதிகாரியாக இருந்த திரு ஜெயச்சந்திரன் அவர்கள் இப்போது வலைப் பதிவுகளில் ஞானவெட்டியான் என்ற பெயரில் ஆன்மீகக் கருத்துக்களை எழுதி வருகிறார். Golden Melodies என்ற மற்றொரு வலைப் பதிவின் பெயரில் http://melodies.siththan.com
900 திரைப் படங்களிலிருந்து 7500 திரை இசைப்
பாடல்களை MP3 ஒலி வடிவில்
தொகுத்துள்ளார்.
பதிவின்
பெயர்: படியுங்கள் சுவையுங்கள்
இகலப்பையை தமிழில் எழுத
பயன்படுத்தும்போது எனது கம்ப்யூட்டர் சரியாக ஒத்துழைக்கவில்லை. அந்தசமயம் திரு Faizal K.Mohamed
அவர்கள் எழுதிய. “NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? “என்ற கட்டுரை எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.. அப்போது அவர் பதிவில் நான்
இட்ட கருத்துரை (http://blog.zquad.in/2008/10/nhmwriter.html ) இதோ.
“வணக்கம்!நாமும் தமிழில் எழுதி பார்ப்போம் என்று e-kalappai-யை தரவிறக்கம் செய்து எழுதிப் பார்த்தேன்.என்னவென்று
தெரியவில்லை,திடீரென்று ஒரு வாரத்திற்குள்ளாக எனது கணிணியில் அது செயல் இழந்துவிட்டது.கூகிள் மூலம் இந்த கட்டுரையை படித்து NHM Writerஐ தரவிறக்கம் செய்து கொண்டேன்.இப்போது தமிழில் என்னால் தட்டச்சு செய்ய முடிகிறது.தங்களுக்கு மிக்க நன்றி! “
பதிவின்
பெயர்: வை.கோபாலகிருஷ்ணன்
என்னால் VGK
என்று அன்புடன் அழைக்கப்படும் திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களைப் பற்றி
வலைப்பதிவில் அறிமுகம் செய்வது என்பது “கொல்லர் தெருவில் ஊசி விற்பது” போன்றது. திரு VGK அவர்களுக்கென்று ஒரு வாசகர்கள் பட்டாளமே இருக்கிறது.
அவரும் சளைக்காமல் தனது வாசகர்களுக்காக அவர்களது பதிவில் சென்று ஊக்கமும்
கருத்துரைகளும் மற்றும் தனது பதிவுகளில் பதிலும் தருகிறார். வாசகர்கள் இவருக்கு
விருதுகள் தர, இவர் அந்த விருதுகளை மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்க ஒரே
அமர்க்களம்தான். இந்த அளவுக்கு அவர் பதிவுலக ஹீரோவாக வலம் வருவதற்கு காரணம் அவர்
பதிவுகளில் உள்ள நகைச்சுவையும் எளிமையான நடையும் மற்றும் எல்லா பதிவர்களிடமும்
காட்டும் அன்பும்தான் என்று நினைக்கிறேன். நானே அவர் பதிவுகளில் கிறங்கி திருச்சியும் பதிவர் வை.கோபால கிருஷ்ணனும் என்ற தலைப்பில் ஒரு
பதிவு எழுதியுள்ளேன். அவருடைய பதிவுகளில் எல்லாமே எனக்குப் பிடிக்கும்.
இருந்தாலும் எடுத்துக் காட்டாக சில பதிவுகள்.
”மறக்க மனம் கூடுதில்லையே!”
“ மீண்டும் பள்ளிக்குப் போகலாம் (தொடர் பதிவு) “http://gopu1949.blogspot.in/2012/03/1.html
பதிவின்
பெயர்: அசைபோடுவது
இந்த வலைப்பதிவினை எழுதி வருபவர் இந்த
வலைச்சரத்தின் பொறுப்பாசிரியரான அன்பின் ”வலைச்சரம்” சீனா அவர்கள். மேலும் இதன் ஆசிரியர் குழுவிலும் இடம் பெற்றுள்ளார். எனது வலைப் பதிவில் “வங்கிகளில் வாடிக்கையாளர்கள் படும்பாடு ”
என்ற தலைப்பில்( 9 நவம்பர் 2011) ஒரு கட்டுரை ஒன்றினை எழுதி இருந்தபோது கருத்துரை தந்து
பாராட்டினார். இப்போதும் இந்த வலைச்சர ஆசிரியருக்கான பொறுப்பை எனக்கு தந்துள்ளார்.
அவருக்கு மீண்டும் நன்றி!
தனது பதிவுகளில் பல மலரும் ( சிறுவயதில் தஞ்சையில் வாழ்ந்த) நினைவுகளையும் அனுபவங்களையும் எழுதியுள்ளார். இவர்
தனது பதிவு ஒன்றில் ( http://cheenakay.blogspot.in/2008/01/blog-post_17.html )
//எனக்கு எழுதியதில் இருந்த இன்பத்தை விட பதிவுகளைப் படித்ததிலும், பொருள் பொதிந்த மறு மொழிகள் எழுதியதிலும் அதிக இன்பம் பெற்றேன். அதிக நேரம் செலவிட்டேன். அதிக நண்பர்களைப் பெற்றேன்.//
என்று சொல்கிறார். ஒரு பதிவில் “ சகோதரி அனுராதாவுடன் ஒரு சந்திப்பு ” என்ற தலைப்பில் (http://cheenakay.blogspot.in/2007/11/blog-post_26.html) புற்று நோயுடன் போராடிய ஒரு
வலைப் பதிவரைப் பற்றி எழுதி இருந்தார். அந்த பதிவினைப் படித்ததும் அந்த பெண்
பதிவரின் http://anuratha.blogspot.in என்ற வலைப்பதிவைப்
படித்தபோது எனக்கு கண்ணீர்தான் மிஞ்சியது. ஏனெனில் எனது சித்தப்பாவும், அத்தை
ஒருவரும் புற்றுநோய் என்ற அந்த கொடிய நோய்க்கு பலியானவர்கள்தான்.
இந்த பதிவினில் எழுதிவரும் சென்னை பித்தன் என்ற திரு. சந்திரசேகரன் அவர்கள் ஓய்வுபெற்ற
வங்கி அதிகாரி. இவர் தனது அனுபவங்களோடு ஆன்மீகம் போன்றவற்றையும் எழுதி வருகிறார். வலைப் பதிவில் நான் உள்ளே நுழைந்த நேரம் “இவரது ஒரு பதிவர் மனம் திறக்கிறார்! “ (http://chennaipithan.blogspot.com/2011/05/blog-post_26.html ) என்ற கட்டுரையை
படித்தபோது வலைப்பதிவினில் நான் தொடர்ந்து எழுதுவதற்கு உற்சாகம் வந்தது.
பதிவின்
பெயர்: சாமியின் மன அலைகள்
ஓய்வு பெற்ற தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பேராசிரியர்
(மண்வளம் மற்றும் நீர் மேலாண்மை) திரு. பழனி.கந்தசாமி அவர்களின் பதிவுகள்
உலகம் இது. இயல்பான நகைச்சுவை ததும்ப கட்டுரைகள் எழுதி வருகிறார்.
விழிப்புணர்வு, அனுபவ மொழிகள், பதிவர்களுக்கு ஆலோசனைகள்
மற்றும் தான் பணியாற்றிய துறை சார்ந்த வேளாண்மை பற்றியும் சுவைபட சொல்லியுள்ளார்
. “வயதுக்கு (60+) வந்தவர்களுக்கும் வராதவர்களுக்கும் “ (http://swamysmusings.blogspot.com/2012/11/60.html) என்ற பதிவில் எல்லோருக்கும் தேவையான பத்து ஆலோசனைகளை
சொல்லியுள்ளார். எப்போதும் உதவும் என்பதற்காக இந்த பத்தையும் தனியே எடுத்து வைத்துக் கொண்டேன்
எனக்கு ரொம்ப நாளாக ரேசன் அரிசி மட்டும் பழுப்பு நிறத்தில்
மட்டமானதாக ஏன் உள்ளது என்று சந்தேகம் இருந்தது. இந்த சந்தேகத்தை அவரது “ரேஷன் அரிசி தயாராகும் விதம்.” என்ற பதிவு (http://swamysmusings.blogspot.com/2012/11/blog-post_13.html) தீர்த்து வைத்தது.
http://swamysmusings.blogspot.com/2012_05_01_archive.htm என்ற பதிவில், ஒரு தீர்க்கதரிசி போன்று, ஈமு கோழிப்பண்ணை மோசடிகள் குறித்து முதன் முதல் புள்ளி விவரங்களுடன் சொன்னவர் இவரே.
இயற்கை விவசாயம் பற்றியும் அது ஏன் இந்தியாவில் சாத்தியம் இல்லை என்பதனையும்
தெளிவுபடுத்தி இருக்கிறார்.
பதிவின்
பெயர்: தேவியர் இல்லம்
//. திருப்பூரில் ஒரு சாதாரண தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு தொழில் நிறுவனத்தின் நிர்வாகியாக உயர்ந்திருப்பவர் திருப்பூர் ஜோதிஜி. தான் சார்ந்த தொழில்துறையின் நுணுக்கங்கள் அனைத்தையும் அறிந்து வைத்திருப்பவர். எழுத்து, வாசிப்பு, என்பவற்றில் ஆர்வம் மிகுந்தவர். அதற்கும் மேலாக சமூகம் சார்ந்த அக்கறை மிக்கவர். இவையாவும் இணைந்ததில் பிறந்திருக்கிறது இந்த டாலர் நகரம். //
என்ற முன்னுரையே இவரது பெருமையைச் சொல்லும்.
|
|
தமிழ் இளங்கோ, முதலில் உங்கள் ஆசிரியர் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎன்னுடைய பதிவை நீங்கள் ரசித்துப் பாராட்டி வலைச்சரத்தில் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.
உங்கள் பதிவு மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்.
எங்க ஊர் திரு ஜெயச்சந்திரன் அவர்களின் தளம் முதல் ஆரம்பித்து, இனிய நண்பர் ஜோதிஜி வரை அனைவரும் சிறப்பாக எழுதுவதில் வல்லவர்கள்...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
வருக வருக தமிழ் இளங்கோ ஐயா! தங்கள் அறிமுகங்களை ஆர்வமுடன் எதிர் நோக்குகிறோம்.பழனி கந்தசாமி,வை.கோபாலகிருஷ்ணன்,சென்னைபித்தன் போன்றவர்கள் அனைவரும் ரசிக்கும் சிறந்த முன்னுதாரணங்கள்
ReplyDeleteஎனது வலைபதிவோடு எனது முதல் நூலான டாலர் நகரத்தையும் குறிப்பிட்டு எழுதியமைக்கு என் மனமார்ந்த நன்றி திரு.இளங்கோ. மின் அஞ்சல் வழியே என்னை தொடர்பு கொள்ள முடியுமா?
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்... நன்றி...
ReplyDeleteungal pani sirakka vaazhthukkal ayyaaa!
ReplyDeletearimukangalukku mikka nantrikal ayya..!
இவ்வார வலைச்சர ஆசிரியராக பணி ஏற்றமைக்கும், தங்கள் பணி சிறக்கவும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇந்த் வார வலைச்சரம் ஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள்.....
ReplyDeleteமுதல் நாளிலிலேயே சிறப்பான வலைப்பூக்களின் வரிசை.... பூங்கொத்து.....
தொடர்ந்து அசத்துங்க!
வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள் ..
ReplyDeleteஅருமையாய் சிறப்பான பதிவர்களை அறிமுகப்படுத்தி ஒளிர வைத்தமைக்கு மனம் நிறைந்த இனிய பாராட்டுக்கள்..
அருமையான துவக்கம் சார்... வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்க. வளர்க.
ReplyDeleteஎளியேனைப் பற்றிக் குறிப்பிட்டமைக்கு நன்றி.
மறுமொழி > பழனி. கந்தசாமி said.
ReplyDelete//என்னுடைய பதிவை நீங்கள் ரசித்துப் பாராட்டி வலைச்சரத்தில் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.//
அய்யாவின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteதங்கள் வாழ்த்துரைக்கு நன்றி!
மறுமொழி > T.N.MURALIDHARAN said...
ReplyDeleteமூங்கில் காற்று முரளிதரன் பாராட்டிற்கு நன்றி!
மறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said...
ReplyDeleteஜோதிஜி திருப்பூர் அவர்களுக்கு நன்றி! மதியம் உங்களுக்கு மின்னஞ்சல் செய்கிறேன்!
மறுமொழி > ஸ்கூல் பையன் said
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
மறுமொழி > Seeni said..
ReplyDeleteசகோதரரின் பாராட்டிற்கு நன்றி!
மறுமொழி > வே.நடனசபாபதி said...
ReplyDeleteபணி சிறக்க வாழ்த்திய வங்கி அதிகாரி(ஓய்வு) அவர்களுக்கு நன்றி!
மறுமொழி > வெங்கட் நாகராஜ் said.
ReplyDeleteதாங்கள் கொடுத்த பூங்கொத்திற்கு நன்றி!.
மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteசகோதரியின் பாராட்டிற்கு நன்றி!
மறுமொழி > சீனு said...
ReplyDeleteசகோதரரின் வாழ்த்துரைக்கு நன்றி!
மறுமொழி > JAYAN said...
ReplyDelete// வாழ்க. வளர்க. எளியேனைப் பற்றிக் குறிப்பிட்டமைக்கு
நன்றி. //
அய்யா ஞானவெட்டியான் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! நான் வலைப்பதிவு எழுத உங்கள் ஆரம்பகால பதிவுகளும் ஒரு காரணம்.
ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள். சிறப்பான தொடக்கம் தொடருங்கள். தொடர்கிறோம் ஆர்வத்துடன்.
ReplyDeleteவாருங்கள் தமிழ் இளங்கோ! இந்த வாரம் உங்கள் அசத்தலா?
ReplyDeleteரொம்ப ரொம்ப சந்தோஷம்!
உங்களைப் பற்றி மிகவும் தன்னடக்கத்துடன் கூறிக் கொண்டு இன்றே உங்கள் மனம் கவர்ந்த மற்ற பதிவாளர்களைப் பற்றியும் கூற ஆரம்பித்து விட்ட உங்கள் தனித்தன்மையை மிகவும் போற்றுகிறேன்.
இன்றைக்கு நீங்கள் குறிப்பிட்டுள்ள எல்லோரையும் நானும் படிக்கிறேன், தொடர்கிறேன் என்பதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன்.
இந்த வாரம் இனிய வாரமாக அமைய வாழ்த்துகள்!
பாராட்டுக்கள். வலைச்சரப் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteநீங்கள் குறிப்பிட்டுள்ள பதிவர்கள் அனைவருமே அறிமுகம் தேவையில்லாத புதுமுகங்கள் :-)
உங்களுடன் நானும் அடிக்கடி படித்து ரசிக்கும் பதிவுகள்.
வலைச்சர ஆசிரியருக்கும் என் வாழ்த்துகள்.
ReplyDeleteஇன்று குறிப்பிட்டுள்ள அனைவரின் அறிமுகங்களும் அருமை.
இவ்வார வலைச்சர ஆசிரியராக பணி ஏற்றமைக்கும், தங்கள் பணி சிறக்கவும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்கள் வலைக்கு வர முயற்சித்த போது அது ஆடத் தொடங்கியது. .2-3 தடவை முயற்சித்துப் பின் வாங்கினேன். இதோ இன்று நன்றாகத் திறக்கிறது. மாலையில் பார்ப்பேன்
வேதா. இலங்காதிலகம்.
அத்தனை மூத்த பதிவர்களிற்கும் இனிய வாழ்த்து.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
என் பேரன்புக்குரிய திருச்சி திரு. தி. தமிழ் இளங்கோ ஐயா,
ReplyDeleteஇனிய காலை வணக்கங்கள்.
என் வீட்டு ஜன்னல் கம்பிகள் வழியாக மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார், ஸ்ரீ தாயுமானவர், ஸ்ரீ ஆனந்தவல்லி ஸமேத ஸ்ரீ நாகநாதர் கோயில் கோபுரங்களை தரிஸித்த பிறகு இன்றைய பொழுதின் இனிமையான துவக்கத்திற்கு காரணம் என்னவென்று யோசித்தேன்.
பகல் மணி சரியாக 12, ”வலைச்சரம் பக்கம் போகவேண்டும்” என் கைபேசியின் நினைவூட்டல் அலாரம் அடித்தது.
தாங்கள் இன்று முதல் வலைச்சர ஆசிரியர் என்பதனை நினைத்து மிகுந்த சந்தோஷத்துடன் கணினியில் அமர்ந்தேன்.
ஆஹா, முதல் நாள் உங்களைப்பற்றியல்லவா முழுவதும் அறிமுகம் செய்திருக்க வேண்டும்!
என்னே ஒரு தன்னடக்கம்! வியந்து போனேன், ஐயா.
முதல் நாளே முற்றிலும் வித்யாசமாகவே துவங்கி அசத்தியுள்ளீர்கள், ஐயா.
மனமார்ந்த பாராட்டுக்கள் ஐயா.
>>>>>>
ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு பூசை, முற்றவும் நக்குபு புக்கென,
ReplyDeleteஆசை பற்றி அறையலுற்றேன்-மற்று, இக்காசு இல் கொற்றத்து இராமன் கதைஅரோ! 4
- கம்பராமாயணம் - பால காண்டம்(அவையடக்கம்)
கம்பரைக்கூட்டி வந்து, நாலே வரிகளில் சொல்ல வேண்டியதை மிகவும் அற்புதமாகச் சொல்லிவிட்டீர்கள்.
தங்களின் ஊரான திருமழபாடி பற்றியும் தங்கள் பெயர் காரணம் பற்றியும் நல்லவேளையாக நான் ஏற்கனவே படித்துள்ளேன். மீண்டும் ஒருமுறை போய் படிக்க நினைத்துள்ளேன்.
>>>>>>>>
இன்று தங்களால் வலைச்சரத்தில் அடையாளம் காணப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ள
ReplyDeleteஆலயங்கள்
திரு.ஞானவெட்டியான் அவர்கள்
படியுங்கள் சுவையுங்கள்
திரு. கே. முஹமது அவர்கள்
அசைபோடுவது
அன்பின் திரு. சீனா ஐயா அவர்கள்
நான் பேச நினைப்பதெல்லாம்
திரு. சென்னைப்பித்தன் ஐயா அவர்கள்
சாமியின் மன அலைகள்
திரு.பழனி கந்தசாமி ஐயா அவர்கள்.
தேவியர்இல்லம்
திரு. ஜோதிஜி அவர்கள்
ஆகிய அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகள், பாராட்டுக்கள்.
இவர்கள் எல்லோரையும் முன்னிலைப்படுத்தி சிறப்பித்துள்ள தங்களுக்கு என் நன்றியோ நன்றிகள்.
>>>>>>>>
//எனக்காக பரிந்துரை செய்த திரு VGK
ReplyDelete(வை.கோபால கிருஷ்ணன் ) அவர்களுக்கும் எனது நன்றி!//
அடடா, நான் பரிந்துரை செய்து பல மாதங்கள் ஆகியும், பலமுறை நானே தங்களைத் தொடர்புகொண்டு வற்புருத்தியும், தாங்கள் ஏனோ ஒருவித தயக்கத்திலேயே இருந்தீர்கள்.
கடைசியில் தங்களை எப்படியோ கஷ்டப்பட்டு தன் வலையில் சிக்க வைத்து விட்ட, வலைச்சர தலைமை ஆசிரியர் அன்பின் திரு. சீனா ஐயா அவர்களுக்கு, என் அன்பான நன்றிகளை இங்கு நானும் பதிவு செய்துகொள்கிறேன்.
>>>>>>>>
பதிவின் பெயர்: வை.கோபாலகிருஷ்ணன்
ReplyDeletehttp://gopu1949.blogspot.in
//என்னால் VGK என்று அன்புடன் அழைக்கப்படும் திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களைப் பற்றி வலைப்பதிவில் அறிமுகம் செய்வது என்பது “கொல்லர் தெருவில் ஊசி விற்பது” போன்றது.//
அடடா, நான் என்றும் மிகச்சாதாரணமானவன் தான் ஐயா.
இதுபோன்ற அறிமுகங்கள் மட்டுமே “கொல்லர் தெருவில் விற்கும் ஊசி” யை
மேலும் கூர்மையாக்கும் [SHARP], மெருகூட்டும் என்பது என் அபிப்ராயம், ஐயா.
>>>>>>
//திரு VGK அவர்களுக்கென்று ஒரு வாசகர்கள் பட்டாளமே இருக்கிறது. அவரும் சளைக்காமல் தனது வாசகர்களுக்காக அவர்களது பதிவில் சென்று ஊக்கமும் கருத்துரைகளும் மற்றும் தனது பதிவுகளில் பதிலும் தருகிறார்.//
ReplyDeleteநான் என் பதிவுகளை வெளியிடுவதைவிட, பிறர் பதிவுகளில் சிலவற்றையாவது முழுமையாக ரஸித்துப் படிப்பதிலும், அவர்களை அவ்வப்போது, என் பின்னூட்டங்களால் உற்சாகப்படுத்தி ஊக்குவிப்பதிலும் தான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
அதுபோல என் பதிவுகளுக்கு கருத்தளிப்போர்களையும், அவர்களின் கருத்துக்களையும், ஓர் பொக்கிஷம் போல நினைத்து பாதுகாத்து மகிழ்கிறேன்.
அதனாலேயே பொறுமையாக ஒவ்வொருவருக்கும் ப்தில் எழுதி முடித்த பிறகே, அடுத்த பதிவினை வெளியிடலாமா என யோசிக்கிறேன்.
>>>>>>
//வாசகர்கள் இவருக்கு விருதுகள் தர, இவர் அந்த விருதுகளை மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்க ஒரே அமர்க்களம்தான்//
ReplyDeleteஆம், அவை அமர்க்களமான தருணங்களாகவே இருந்து என்னையும் மகிழ்வித்த்து.
ஓய்ந்திருந்த என்னை மீண்டும் கொஞ்சமாவது எழுத வைத்து உற்சாகப்படுத்தியது என்பதே உண்மை.
>>>>>>>
//இந்த அளவுக்கு அவர் பதிவுலக ஹீரோவாக வலம் வருவதற்கு காரணம் அவர் பதிவுகளில் உள்ள நகைச்சுவையும் எளிமையான நடையும் மற்றும் எல்லா பதிவர்களிடமும் காட்டும் அன்பும்தான் என்று நினைக்கிறேன். //
ReplyDeleteதங்களின் புரிதலுக்கு மிக்க நன்றி ஐயா.
பிறரின் அன்புக்கு நான் என்றுமே அடிமைதான் ஐயா.
பதிவுகளையும், பின்னூட்டங்களையும் தாண்டி பலரும் என்னுடன் பலவிதமாக அன்பு செலுத்துகிறார்கள்.
என்னுடைய நலம் விரும்பிகளாக இருக்கிறார்கள்.
ஆத்மார்த்தமான ஆரோக்யமான நட்புடன் பழகி வந்து, பல சொந்த விஷயங்களை என்னுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.
என்னுடைய மற்றும் என் குடும்பத்தின் ஆரோக்யத்திற்கும் நலத்திற்கும் பிரார்த்தனைகள் செய்து வருகிறார்கள்.
அவை மட்டுமே என் மனதுக்கு மிகவும் ஆறுதல் தருவதாக உள்ளன.
அதுபோன்ற ஒருசில தூய்மையான நட்புக்காகவே நானும் அவ்வப்போது வலைத்தளப்பக்கம் வலம் வர வேண்டியுள்ள சூழ்நிலையில் உள்ளேன்.
>>>>>>>>
//நானே அவர் பதிவுகளில் கிறங்கி திருச்சியும் பதிவர் வை.கோபால கிருஷ்ணனும் என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதியுள்ளேன்.//
ReplyDeleteஅந்தப்பதிவினைப்பார்த்ததும், தாங்கள் என் மீது வைத்துள்ள பேரன்பை நினைத்து, நானும் கிறங்கிப்போய் விட்டேன் என்று தான் சொல்ல வேண்டும் ஐயா.
>>>>>>>>
//அவருடைய பதிவுகளில் எல்லாமே எனக்குப் பிடிக்கும். இருந்தாலும் எடுத்துக் காட்டாக சில பதிவுகள்.
ReplyDelete”மறக்க மனம் கூடுதில்லையே!”
http://gopu1949.blogspot.com/2011/06/1-of-4_19.html
” ஊரைச் சொல்லவா பேரைச் சொல்லவா
http://gopu1949.blogspot.in/2011/07/blog-post_24.html
“ மீண்டும் பள்ளிக்குப் போகலாம் (தொடர்பதிவு)
“http://gopu1949.blogspot.in/2012/03/1.html //
இந்த சாதாரணமானவனின் ஒருசில பதிவுகளை எடுத்துக்காட்டாகச் சொல்லி, என்னையும் இன்று வலைச்சரத்தில் தொடுத்து அழகு பார்த்துள்ள தங்களின் செயலுக்கு நான் என் மனமார்ந்த நன்றிகளையும், சந்தோஷங்களையும் பகிர்ந்து கொள்கிறேன், ஐயா.
இருவரும் திருச்சியிலேயே இருந்தும் கூட இதுவரை நாம் ஒருவரையொருவர் சந்திக்காமலும், சந்திக்க சந்தர்ப்பம் ஏற்படாமலும் உள்ளது, மிகவும் வியப்பாகவே உள்ளது, ஐயா.
எல்லாவற்றிற்கும், என் மேல் தாங்கள் காட்டும் அன்புக்கும் நன்றியோ நன்றிகள், ஐயா.
>>>>>>>
இந்த வார வலைச்சர ஆசிரியர் பணி மிகச்சிறப்பாக
இந்த வார வலைச்சர ஆசிரியர் பணி தங்களுக்கு மிகச்சிறப்பாக அமைய என் அன்பான வாழ்த்துகள், ஐயா.
ReplyDeleteஎன்றும் அன்புடன் தங்கள்,
VGK
>>>>>>>
இன்றைய வலைச்சர அறிமுகம் பற்றி என் சமீபத்திய பதிவின் பின்னூட்டப்பெட்டி மூலம் தகவல் அளித்துப் பாராட்டியுள்ள
ReplyDeleteதங்களுக்கும்,
அருமை நண்பர் திண்டுக்கல் திரு. தனபாலன் அவர்களுக்கும்,
நம் தெய்வீகப்பதிவர்
திருமதி.இராஜராஜேஸ்வரி அம்பாள் அவர்களுக்கும்
என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ooooo
வருக வருக! உங்கள் அறிமுகங்கள் அமர்க்களம்!
ReplyDeleteவருக வருக! உங்கள் அறிமுகங்கள் அமர்க்களம்!
ReplyDeleteமறுமொழி > Sasi Kala said...
ReplyDeleteசிறப்பான தொடக்கம் என்று சிறப்பித்த சகோதரிக்கு நன்றி!
மறுமொழி > Ranjani Narayanan said...
ReplyDelete// இந்த வாரம் இனிய வாரமாக அமைய வாழ்த்துகள்! //
உங்கள் வாழ்த்துக்கள் எப்போதும் ஒலிக்கட்டும்.!
மறுமொழி > அப்பாதுரை said...
ReplyDelete// நீங்கள் குறிப்பிட்டுள்ள பதிவர்கள் அனைவருமே அறிமுகம் தேவையில்லாத புதுமுகங்கள் :-) //
அப்பாதுரையார் கருத்திற்கு மறுமொழி ஏது?
மறுமொழி > கோவை2தில்லி said...
ReplyDeleteசகோதரியின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
மறுமொழி > kovaikkavi said...
ReplyDelete//தங்கள் வலைக்கு வர முயற்சித்த போது அது ஆடத் தொடங்கியது. .2-3 தடவை முயற்சித்துப் பின் வாங்கினேன்.//
நானும் காலையில் எனது வலைச்சரப் பணியில் தொழில்நுட்ப ரீதியாக ஏதோ குறை இருப்பதாக உணர்ந்தேன்.
கவிஞரும் சிறந்த வலைப் பதிவருமான தங்கள் பாராட்டிற்கு நன்றி!
மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 1 to 12 )
ReplyDeleteதிரு VGK அவர்களின் வாழ்த்துரைகளுக்கு நன்றி!
// முதல் நாளே முற்றிலும் வித்யாசமாகவே துவங்கி அசத்தியுள்ளீர்கள், ஐயா. //
உங்கள் வழி தனி வழி! வித்தியாசமானது. எனவே நடைமுறையில் வித்தியாசமாகவே தொடங்கினேன்.
// கம்பரைக்கூட்டி வந்து, நாலே வரிகளில் சொல்ல வேண்டியதை மிகவும் அற்புதமாகச் சொல்லிவிட்டீர்கள். //
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்! கம்பர் துணை இருப்பின் தமிழில் தடங்கல் ஏது?
// அடடா, நான் பரிந்துரை செய்து பல மாதங்கள் ஆகியும், பலமுறை நானே தங்களைத் தொடர்புகொண்டு வற்புருத்தியும், தாங்கள் ஏனோ ஒருவித தயக்கத்திலேயே இருந்தீர்கள்.//
தாங்கள் சொல்வது உண்மைதான். அந்த தயக்கத்தை மின்னஞ்சல் மூலம் போக்கியதும் உற்சாகம் தந்ததும் நீங்களே!
நன்றி!
// அதனாலேயே பொறுமையாக ஒவ்வொருவருக்கும் ப்தில் எழுதி முடித்த பிறகே, அடுத்த பதிவினை வெளியிடலாமா என யோசிக்கிறேன். //
உங்கள் பொறுமையையும், மற்றவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் மதிப்பினையும் அளவிட வார்த்தைகள் இல்லை!
// இருவரும் திருச்சியிலேயே இருந்தும் கூட இதுவரை நாம் ஒருவரையொருவர் சந்திக்காமலும், சந்திக்க சந்தர்ப்பம் ஏற்படாமலும் உள்ளது, மிகவும் வியப்பாகவே உள்ளது, ஐயா. //
எனக்கும் வியப்பாகவே இருக்கிறது. நான் முன்புபோல் எனது இருசக்கர ( TVS 50 XL Super ) வாகனத்தில் வெளியில் செல்லாததும் ஒரு காரணம் என்று எண்ணுகிறேன்!
உங்களைப் போல யாராலும் சலிக்காது கருத்துரைகள் போட இயலாது. இதுவும் உங்களது திறமைகளில் ஒன்று.
மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... …
ReplyDeleteதிரு VGK அவர்களின் கருத்துரைப் பெட்டியில் எனது வலைச்சரம் ஆசிரியர் பணி குறித்து தகவல் சொன்ன திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும், சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் எனது உளங்கனிந்த நன்றி!
மறுமொழி > கே. பி. ஜனா... said...
ReplyDeleteஅமர்க்களமாய் இரண்டுமுறை பாராட்டு சொன்ன எழுத்தாளர் கே பி ஜனா அவர்களுக்கு நன்றி!
முதல் பதிவில் சுய அறிமுகமும் மூத்த பதிவர்களின் + முக்கிய பதிவர்களின்
ReplyDeleteஅறிமுகங்களும்
சிறப்பு.
முதல் நாளிலேயே முத்தான நல்ல பதிவர்களை பற்றிய விரிவான அறிமுகம்! சிறப்பான பகிர்வு! நன்றி!
ReplyDeleteசில நாட்களாக எழுதுவதையே நிறுத்தியிருக்கும் என்னையும் நினைவில் வைத்து அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி ஐயா!மீண்டும் எழுதத் தூண்டுகோலோ இது?!
ReplyDeleteமறுமொழி > NIZAMUDEEN said
ReplyDeleteநிஜாம் பக்கம் – நிஜாமுதீன் அவர்களின் பாராட்டிற்கு நன்றி!
மறுமொழி > s suresh said..
ReplyDeleteசகோதரரின் பாராட்டிற்கு நன்றி!
மறுமொழி > சென்னை பித்தன் said...
ReplyDelete// மீண்டும் எழுதத் தூண்டுகோலோ இது?! //
என்னுடைய அன்பின் பிரதிபலிப்பு இது. உடல்நிலை ஒத்துழைத்தால் எழுதவும்.
தமிழ் இளங்கோ ஐயா என்றால் போதாதா VGK சார்? அது என்ன திருச்சி தமிழ் இளங்கோ ஐயா?
ReplyDeleteநாம் அறிந்த சிறந்த பதிவர்களையே அறிமுகம் செய்துள்ளீர்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா மேலும் உங்கள் பணி சிறப்பாகத் தொடரட்டும் .
மிக்க நன்றி பகிர்வுக்கு .
அப்பாதுரை said...
ReplyDelete//தமிழ் இளங்கோ ஐயா என்றால் போதாதா VGK சார்? அது என்ன திருச்சி தமிழ் இளங்கோ ஐயா?//
நல்லதொரு கேள்வியை நயம்படக் கேட்டுள்ளீர்கள்.
மிகச்சிறந்த இந்தக்கேள்விக்கே உங்களுக்கு நான் ஒரு பரிசளிக்கலாம்.
அதற்கான முக்கியக்காரணங்களாக நான் ஒரு மூன்றாவது சொல்லித்தான் ஆக வேண்டும்.
நாங்கள் இருவருமே திருச்சிக்காரர்கள் என்பதில் மிகவும் பெருமைப்பட்டுக்கொள்பவர்கள்.
அதுவும் நியாயமாக இவரை நான்
”திருச்சி. திருமழபாடி, திரு. தி. தமிழ் இளங்கோ ஐயா” என்று தான் அழைத்திருக்க வேண்டும்.
அதுபோல நீ...ள....மா....க நீட்டி அழைப்பது தில்லுமுல்லு படத்தில் ரஜினி தன் பெயரை தேங்காய் சீனிவாசனிடம் சொல்வதுபோல
இருக்குமே என நினைத்து சுருக்கி விட்டேனாக்கும்.
>>>>>>>
VGK to Mr அப்பாதுரை Sir [2]
ReplyDeleteஎன்னுடைய 300க்கும் மேற்பட்ட பதிவுகளில் இவர் தேர்ந்தெடுத்து அறிமுகம் செய்து வெளியிட்டுள்ள மூன்று பதிவுகளைப்பாருங்கோ.
மூன்றுமே திருச்சியை மையமாக வைத்து என்னால் எழுதப்பட்டுள்ளவை:
இதிலிருந்தே என்னை விட என் படைப்புகளை விட, திருச்சி மேல் அவருக்குள்ள காதல் உணர்வுகள் புரிகிறதா இல்லையா சொல்லுங்கோ:
”மறக்க மனம் கூடுதில்லையே!”
http://gopu1949.blogspot.com/2011/06/1-of-4_19.html
” ஊரைச் சொல்லவா பேரைச் சொல்லவா http://gopu1949.blogspot.in/2011/07/blog-post_24.html
“ மீண்டும் பள்ளிக்குப் போகலாம் (தொடர் பதிவு) “http://gopu1949.blogspot.in/2012/03/1.html
>>>>>>>
VGK to Mr அப்பாதுரை Sir [3]
ReplyDeleteநானும் இந்த திருச்சி, திருமழபாடி, திரு.தி. தமிழ் இளங்கோ ஐயா அவர்களும் ஒரே பள்ளியில் படித்தவர்கள், என்னைவிட ஓர் ஐந்து ஆண்டுகள் மட்டும் அவர் ஜூனியர்.
திருச்சி National College High School இல்
நான் 1965-66 இல் 11th Std. [S.S.L.C.] படித்தவன்
அவர் 1970-71 இல் 11th Std.
[S.S.L.C.] படித்தவர்
>>>>>>
VGK to Mr அப்பாதுரை Sir [4]
ReplyDelete”என் வீட்டு ஜன்னல் கம்பி ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார்”மூலம், நான் எப்படி உங்களை மறக்க முடியாதோ அதே போல இந்தக்கீழ்க்கணட இரண்டு பதிவுகள் மூலம் என்னை அவரும் அவரையும் நானும் மறக்க இயலாது.
1] இயற்கை அழகில் ’இடுக்கி’ இன்பச் சுற்றுலா
http://gopu1949.blogspot.in/2012/03/blog-post_17.html
இதிலுள்ள Highlighted Portion by Yellow Ink மட்டும் படித்துப்பாருங்கோ.
>>>>>>
VGK to Mr அப்பாதுரை Sir [5]
ReplyDelete2] ”திருச்சியும் பதிவர் வை. கோபாலகிருஷ்ணனும்” என்ற தலைப்பிலேயே ஒரு தனிப்பதிவு வெளியிட்டுள்ளார் இந்தத் திருச்சி, திருமழபாடி, திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள்.
அதைப்பற்றி இன்றைய தன் வலைச்சரத்தில் அவர் கூறியுள்ளாரே தவிர, அதற்கான இணைப்பினை அவர் இன்று ஏனோ வலைச்சரத்தில் வெளியிடவில்லை.
இதோ அதன் இணைப்பு. முடிந்தால் போய்ப்படித்துப்பாருங்கள:
http://tthamizhelango.blogspot.com/2012/09/blog-post.html
இவ்வாறெல்லாம், திருச்சி என்ற எங்கள் இருவரின் ஊர் மீதும், திருச்சியைச்சார்ந்த என் மீதும் மிகுந்த அபிமானம் கொண்ட ஐயா அவர்களை நான் “திருச்சி, திரு. தி, தமிழ் இளங்கோ ஐயா” என அழைத்தது தானே மிகப்பொருத்தமாக இருக்கும்?
ooooo
மறுமொழி >அம்பாளடியாள் said...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! உங்கள் பதிவுகளை தமிழ்மணத்தில் காணும்போது படிப்பதுண்டு. கருத்துரைகள் அதிகம் இட்டதில்லை.
மறுமொழி > அப்பாதுரை / வை.கோபாலகிருஷ்ணன் said... …
ReplyDelete// நாங்கள் இருவருமே திருச்சிக்காரர்கள் என்பதில் மிகவும் பெருமைப்பட்டுக்கொள்பவர்கள். //
எல்லோருக்குமே தங்கள் ஊர் பெருமை சொல்லிக் கொள்வதில் அலாதியான பிரியம் இருக்கத்தான் செய்கிறது.
// அதைப்பற்றி இன்றைய தன் வலைச்சரத்தில் அவர் கூறியுள்ளாரே தவிர, அதற்கான இணைப்பினை அவர் இன்று ஏனோ வலைச்சரத்தில் வெளியிடவில்லை. //
முடிந்தவரை எனது பதிவுகளை நானே அறிமுகம் செய்து கொள்வதை தவிர்த்து இருக்கிறேன். இதுதான் காரணம்.
தங்களின் ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள் அய்யா.
ReplyDeleteஅருமையான துவக்கம்.
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா.
ஆஹா vgk சார்! அருமை!(பின்னிட்டீங்க) ஊர்க்கரருக்கு மேலே என்பது புரிந்தது. அது என்ன 'திருச்சி. திருமழபாடி, திரு. தி. தமிழ் இளங்கோ ஐயா' என்று கேட்கலாமா கூடாதா என்று யோசிக்கிறேன் ;-)
ReplyDeleteமறுமொழி >கரந்தை ஜெயக்குமார் said... அருணா செல்வம் said...
ReplyDeleteவருகை தந்து பாராட்டிய வலைப்பதிவு நண்பர்களுக்கு நன்றி!
Super starting!
//அப்பாதுரை said...
ReplyDeleteஆஹா vgk சார்! அருமை!
(பின்னிட்டீங்க) ஊர்க்காரருக்கு மேலே என்பது புரிந்தது.
அது என்ன 'திருச்சி. திருமழபாடி, திரு. தி. தமிழ் இளங்கோ ஐயா' என்று கேட்கலாமா கூடாதா என்று யோசிக்கிறேன் ;-)//
நீங்கள் யோசித்துக் கேட்டாலும் கேட்காவிட்டாலும் நான் மேற்கொண்டு சிலவற்றைப் பேச வேண்டியுள்ளது.
இதோ ஆரம்பித்துப்பேச உள்ளேன்
>>>>>
VGK >>>>> Mr. அப்பாதுரை Sir [2]
ReplyDeleteஇனிமேல் நான் அவரை திருச்சி திருமழபாடி திரு. தி. தமிழ் இளங்கோ ஐயா அவர்கள் என நீட்டி முழக்கி அழைக்கப்போவதில்லை.
ஏனென்றால் ’திருமழபாடி’ என்ற ஊர் இப்போது திருச்சி மாவட்டத்திலேயே இல்லை.
திருமழபாடி என்ற அழகான ஊரை அலாக்காகக் கடத்திப்போய் அரியலூர் என்ற திருச்சியிலிருந்து தனியாகப்பிரிந்து சென்ற மாவட்டத்துடன் இணைத்து விட்டார்கள்.
இருப்பினும் ஐயா அவர்கள் தற்சமயம் வாழும் பகுதியான K.K. NAGAR என்பது திருச்சி மாவட்டத்தில் தான் உள்ளது.
என் வீட்டு ஜன்னல் கம்பிகள் வழியாக ஏறிக்குதித்து, பஸ்ஸில் போய் ஏறினால் ஒரு முக்கால் மணி நேரத்தில் அவர் வீடு அமைந்துள்ள K.K. NAGAR ஐச் சென்றடைய முடியும்.
அதுபோல அடிக்கடி திருச்சியின் Heart of the City பகுதிக்கு வந்து போக வேண்டிய நிர்பந்தம் உள்ள, அவராலும் இங்கு என் வீட்டு ஜன்னல் கம்பிகளை அடிக்கடி வந்து தொட்டுச்செல்லவும் முடியும்.
>>>>>
VGK >>>>> Mr. அப்பாதுரை Sir [3]
ReplyDeleteநேற்று 18/02/2013 அன்று இரவு ஒரு சுவையான சம்பவம் நிகழ்ந்தது.
மழபாடி ராஜாராம் என்றொரு மூத்த எழுத்தாளர் உள்ளார்கள். என்னைவிட ஒரு 10 ஆண்டுகளாவது பெரியவராக இருப்பார்கள். ஆனால் மிகவும் சுறுசுறுப்பான இளைஞர், உங்களைப்போலவே. ;)))))
இவரும் திருமழபாடியைச் சேர்ந்தவர் தான்.
வழக்கம் போல, என்னை வேறொரு விஷயமாக சந்திக்க என் வீட்டுக்கே நேற்று வந்திருந்தார்கள்.
அப்போது திருமழபாடியைச் சேர்ந்த நம் நண்பர் திரு.தி.தமிழ் இளங்கோ ஐயா பற்றி நான் அவரிடம் தெரிவித்தேன்.
பிறகு என் அலைபேசி மூலம் திரு. தி. தமிழ் இளங்கோ ஐயாவை அழைத்து, மழபாடி ராஜாராம் ஐயாவுடன் பேச வைத்தேன்.
இருவரும் நீண்ட நேரம் பேசி மகிழ்ந்தனர்.
வேடிக்கை என்னவென்றால், அந்த மழபாடி ராஜாராம் என்பவருக்கு, கணினி பற்றியோ, வலைப்பதிவுகள் பற்றியோ ஒன்றுமே தெரியாது.
அவருக்குத் தெரிந்ததெல்லாம், பேப்பரில் பேனாவால் எழுதுவது, பத்திரிகைகளுக்கும், வானொலி நிலயங்களுக்கும் படைப்புகளை, தபால் மூலம் ஸ்டாம்பு ஒட்டி அனுப்புவது போன்றவைகளாகும்.
>>>>>>
VGK >>>>> Mr. அப்பாதுரை Sir [4]
ReplyDeleteஅவரிடம் நம் வலைப்பதிவுகளைப்பற்றி விளக்கினேன்.
சிலவற்றைப்படித்து மகிழ்ந்தார்.
உலகளாவிய தொடர்புகளைக் கண்டு மிகவும் வியந்து பிரமித்துப்போனார்.
கணினி + நெட் கனெக்ஷன் இவற்றிற்கெல்லாம் நிறைய செலவாகுமே என்றார்.
ஆம் ஐயா, முதல் போட்டு மெஷின்கள் வாங்கியபிறகு, ஓரளவு மாதம் 1000 ரூபாயாவது Recurring செல்வாகும் என்றேன்.
இதனால் ஏதும் வருமானம் உண்டா? எனக்கேட்டார்.
”சிலர் இதிலும் ஏதேதோ எப்படி எப்படியோ சம்பாதிக்கலாம் என்றும் சொல்லுகிறார்கள், ஐயா ....
அதைப்பற்றியெல்லாம் அடியேன் அறியேன் ....
உலகின் பல மூலை முடுக்குகளிலிருந்தும் கிடைத்து வரும் பின்னூட்டம் என்ற பொக்கிஷம் மட்டுமே இதிலிருந்து எனக்குக் கிடைக்கும் இலாபமும் ஆத்ம திருப்தியும் ஆகும்” என்றேன், நான்.
இதில் என்ன பிரயோசனம் உள்ளது, எனச்சொல்லி புறப்பட்டு விட்டார், அந்தப் பெரியவர்.
>>>>>>
VGK >>>>> Mr. அப்பாதுரை Sir [5]
ReplyDeleteவரும் 24.02.2013 மாசி மகத்தன்று நால்வரால் பாடல் பெற்ற ஸ்தலமாகிய திருமழபாடியில் உள்ள
ஸ்ரீ சுந்தராம்பிகை உடன் கூடிய ஸ்ரீ வைத்தியநாத ஸ்வாமி கோயிலில் தேரோட்டம் நடைபெற உள்ளது என்ற நல்ல செய்தியுடன் என் இந்த பதில்களை முடித்துக்கொள்கிறேன்.
அன்புடன் VGK
உங்களின் பதிவுகள் குறித்து சொல்லும் முதல் நாளிலேயே மற்றவர்க்கு வாய்ப்பு கொடுத்துள்ளமை.... வாழ்த்துக்கள் அய்யா உங்கள் ஆசிரியப்பணிக்கு...
ReplyDeleteமறுமொழி >”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDelete// உலகின் பல மூலை முடுக்குகளிலிருந்தும் கிடைத்து வரும் பின்னூட்டம் என்ற பொக்கிஷம் மட்டுமே இதிலிருந்து எனக்குக் கிடைக்கும் இலாபமும் ஆத்ம திருப்தியும் ஆகும்” ... .. நான்.//
சரியாகச் சொன்னீர்கள்.! வலைப் பதிவாளர் அடையும் பிறவிப் பயன் இதுதான்.!
எங்கள் ஊர்க்காரர் மழபாடி ராஜாராமை எனக்கு அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி!
திருமழபாடி தேரோட்டம் பற்றிய செய்தியை தினமலரில் படித்தேன்.
தங்கள் மேலான வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
மறுமொழி > ezhil said...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
//இதில் என்ன பிரயோசனம் உள்ளது, எனச்சொல்லி புறப்பட்டு விட்டார், அந்தப் பெரியவர்.
ReplyDeleteஇப்படிச் சொல்லிட்டாரே கடைசியில்!
பலன்களை காசால் அளக்கும் காலத்தவரா? ஹ்ம்ம்.
மஞ்சுபாஷிணியை சந்திச்சப்ப, "இப்பல்லாம் உங்க வேலையை வைகோ செய்யறாரு" என்றேன். விழாம விழாம சிரிச்சாங்க.
'பின்னூட்டப் புயல்'னா நீங்க தான் vgk சார்.
அப்பாதுரை said...
ReplyDelete*****இதில் என்ன பிரயோசனம் உள்ளது, எனச்சொல்லி புறப்பட்டு விட்டார், அந்தப் பெரியவர்.*****
//இப்படிச் சொல்லிட்டாரே கடைசியில்!
பலன்களை காசால் அளக்கும் காலத்தவரா? ஹ்ம்ம்.//
ஆம், அந்தக்கால மனிதர். அவ்ர் பணி ஓய்வு பெறும்போதே மூன்று இலக்கச் சம்பளம் மட்டுமே வாங்கியிருப்பாரோ என்னவோ?
எப்போதும் கையில் ஓர் மஞ்சள் பையுடனேயே எங்கும் செல்கிறார்.
ஆனால் பழகுவதற்கு மிகவும் தங்கமான மனிதர்.
பழுத்த அனுபவசாலி.
எனக்கு 7 வயதுக்கு உட்பட்டவர்களையும், 70 வயதினைத் தாண்டியவர்களையும் பார்த்தால் மட்டுமே பேசப்பிடிக்கிறது.
இவர்களின் பார்வைகள் எப்போதும் வித்யாசமானவை.
அதில் ஓர் குழந்தைத்தனம் இருக்கும். அதை நான் மிகவும் ரஸிப்பேன்.
>>>>>>
அப்பாதுரை said...
ReplyDelete//மஞ்சுபாஷிணியை சந்திச்சப்ப, "இப்பல்லாம் உங்க வேலையை வைகோ செய்யறாரு" என்றேன். விழாம விழாம சிரிச்சாங்க.//
நீங்கள் மஞ்சுவை சந்தித்த விஷயத்தை மஞ்சுவே எனக்கு அலைபேசிமூலம் சொல்லி மகிழ்ந்தார்கள்.
அதுவும் நீண்ட நேரம் விழுந்து விழுந்து சிரித்தப்படி சொன்னார்கள். நல்ல அடி பட்டிருக்கும் பாவம்! ;)
குழந்தை இபான் உங்களிடம் அப்படியே ஒட்டிக்கொண்டு, நீங்கள் இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டதையும் சொன்னாங்கோ. ;))
//'பின்னூட்டப் புயல்'னா நீங்க தான்
vgk சார்.//
மிக்க நன்றி, சார்.
[ஆனால், இதுவும் ஒருநாள் கடந்து போகும். ;( ]
மறுமொழி > அப்பாதுரை said...
ReplyDeleteமறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...
உங்கள் இருவரது நகைச்சுவை உரையாடல்களுக்கு நன்றி!
உங்கள் வலைச்சரவாரம் சிறப்புறுகின்றது.
ReplyDeleteஇன்றைய அறிமுகங்கள் தெரிந்தவர்கள்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
மறுமொழி > மாதேவி said...
ReplyDeleteசகோதரியின் அன்பான வருகைக்கு நன்றி!
அன்பின் தமிழ் இளங்கோ - முதல் நாள் அறிமுகங்கள் அனைத்தும் அருமை - அசைபோடுவது தளத்தினில் உள்ள பதிவுகளைப் படித்து அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி - மற்ற மூத்த பதிவர்கள் உள்ளிட்ட அறிமுகங்களும் அருமை - தேடிப்பிடித்து அறிமுகப் படுத்தியமை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteமறுமொழி > cheena (சீனா) said...
ReplyDeleteஅன்பின் சீனா அவர்களின் பாராட்டிற்கு நன்றி!