07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, February 11, 2013

வலைச்சர ஆசிரியர் பொறுப்பு இந்த வாரம் என்னிடம்..!



நாள் -1

லைச்சரத்தில் எனது எழுத்துக்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போது தான் வலைச்சரம் எனக்கு அறிமுகமானது."சிறந்த பதிவுகளை தேடி எங்கும் சுற்ற வேண்டாம் வலைச்சரம் தளத்திற்கு வந்தாலே போதும்" என்று மனதிற்குள் தோன்றியது.. இங்கிருக்கும் பதிவுகளில் பலவற்றை நான் "புக் மார்க்" செய்து வைத்துள்ளேன். இந்த வலைச்சரம் தளம் துவங்கப்பட்ட நாளினை ஆராய்ந்தேன்,, (நவ:16,2006) அன்றைய தினத்தில் இணையம் பற்றி ஏதொன்றும் அறிந்திராமல் ராமேசுவரம் தீவில் சுற்றித்திரிந்த எனக்கு அப்போது பதினாறு வயது!

 தினம் தினம் புதிய புதிய பூக்கள் கொண்டு வலைச்சரத்தை அமைத்து தமிழன்னைக்கு சூட்டிடும் இத்தளத்திற்கு என் பாராட்டுக்கள். பல பதிவர்கள் அலங்கரித்த இந்த சரத்தில் நானும் ஒரு மலராக இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன்..

வலைச்சரம் எழுத வாய்ப்பளித்த வலைச்சர உரிமையாளர் சீனா ஐயா அவர்களுக்கும்,தமிழ்வாசி பிரகாஷ் அண்ணன் அவர்களுக்கும்.,இந்த வாய்ப்பை எனக்கு பெற்று தந்த திடங்கொண்டு போராடும் சீனு அண்ணன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்! வலைச்சரம் வாசிக்கும் உங்களுக்கு எனது வணக்கங்கள்...

 
சுய அறிமுகம்:

2011 ம் வருடம் ஏபரல் 4 .இந்த தேதியில் தான் வலையுலகில் எனது எழுத்துக்களை நான் முதன் முதலாக பதித்திருக்கிறேன் என்பதை வலைச்சரம் எழுதும் இந்த வினாடியில் தான் பார்க்கிறேன்.
 நாளா பக்கமும் கடலால் சூழப்பட்ட ராமேஸ்வரம் தீவை பூர்விகமாக கொண்டவன் நான்.இயற்கையின் பிரம்மாண்டம் எப்போதும் என் விழிகளையும்,மனதையும் அகல விரிய வைக்க தவறுவதே இல்லை.
எங்கள் ஊரின் எந்த பக்கம் சென்றாலும் கடைசியில் கடற்கரைதான் இருக்கும்.கடல் எனக்கு மிகவும் பிடித்த இயற்கையின் அதிசயம்...
எனது வலைப்பூவின் பெயரை "கடற்கரை" யில் நின்று கொண்டுதான் நான் யோசித்தேன்... இயற்கையின் முன் மனிதன் மிக மிக சிறியவன் என்பதை கடலையும் ,வானத்தையும் கண்டுதான் நான் முதன்முதலில் கண்டுகொண்டேன்.

எனது வலைப்பூக்கள்:

முதல் வலைப்பூ:

வலைப்பூவின் பெயர் : வானம்பாடி
தளத்தின்உள்ளடக்கம் : கவிதை, கவிதைப்புத்தகங்கள்(இலவச தரவிரக்கம்)

இரண்டாம் வலைப்பூ:

வலைப்பூவின் பெயர் : கடற்கரை
தளத்தின் உள்ளடக்கம்: என் எண்ணங்களில் தோன்றும் எல்லாமும்

·         கடற்கரையில் எனது முதல் பதிவு ராமேசுவரம் மீனவர்கள் பற்றியது...
(கட்டுரையின் பெயர்: கடல் மீன்கள் )இந்த கட்டுரையை நான் "புதிய தலைமுறை" பயிற்சி பத்திரிக்கையாளர் திட்டத்தில் இணைவதற்காக விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பியிருந்தேன்.இந்த கட்டுரை "புதிய தலைமுறை" குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு என்னை எழுத்து தேர்வுக்கு அழைப்பிட வைத்தது, எழுத்து தேர்வில் நான் தேரவில்லை...  :(

·         இரண்டாம் பதிவாக வலை உலகை எனக்கு அறிமுகம் செய்த கூகுள்-ஐ கவுரவிக்கும் வகையில் கூகுள் பற்றி பதிவிட்டேன்.. 
(கட்டுரையின் பெயர்:கூகுளின் பரிணாம வளர்ச்சி)இப்பதிவை பதிவிட்ட அடுத்த நாளே அது வேறொரு வலைப்பூவில் அப்படியே அப்பட்டமாக காப்பி-பேஸ்ட் செய்யப்பட்டிருந்தது.. (பின்னாளில் இந்த நிகழ்வு பதிவு திருட்டும் அதை தடுக்கும் வழிமுறைகளும் என்று  கட்டுரை எழுத காரணமாக அமைந்தது.)

வலைப்பூக்களின் வாசம் கிடைப்பதற்கு முன்:

னக்கு பாட புத்தகங்கள் தவிர வேறு புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் 6 ஆம் வகுப்பு படிக்கும் போது துவங்கியது.நிறைய வாசிப்பேன்,வாசிப்பை பொருத்த வரையில் நான் சகலபட்சினி (omnivorous).கடலை மடித்து வரும் காகிதத்தை கூட கை துடைத்து கசக்கிபோடாமல் வாசித்துக்கொண்டிருப்பேன்.புத்தகங்கள் மீது எனக்கு அதீத காதல் உண்டு.
பள்ளிக்கூட நாட்களில் எங்கள் தீவிலுள்ள ஒரு கிளை நூலகத்தில் சென்று புத்தகம் வாசிப்பேன்,நான் தமிழ் நடை பழகியது அதன் மூலம் தான்.அதன்பிறகு கல்லூரி நாட்களில் கல்லூரி நூலகம்.(கல்லூரி நூலகத்தை பாட சம்பந்தமான நூல்கள் தான் அதிகம் இருந்தன,பொது நூல்கள் அங்கு குறைவாகவே இருந்தன...).நூலக புத்தகங்கள் மட்டுமின்றி காசு கிடைக்கும் போதெல்லாம் சில புத்தகங்கள் வாங்கி வாசிப்பதுண்டு.

வலைப்பூக்களின் வாசம் கிடைத்த தருணம்:

 கல்லூரி நாட்களில் தான், நான் இணைய உலகின் பிரம்மாண்டத்தை உணர ஆரம்பித்தேன்.இணைய உலகம் பற்றி ஒன்றுமே தெரியாமல் ஒரு தீவின் மூலையில் இருந்த எனக்கு இந்த இணைய உலகம் ஆச்சரியம் அளித்தது. ( இதன் தாக்கம் தான் தொழிற்களத்தில் நான் எழுதும் ஆச்சரியங்கள் நிறைந்த மாய உலகம் தொடர்பதிவு )

 என் புத்தக வாசிப்பு பழக்கம் காரணமாக ஒரு நாள் ஏதேச்சையாக தமிழ் புத்தகங்களின் பெயர்களை நான் இணையத்தில் தேட ஆரம்பித்தேன்.கூகுள் என்னை ஒரு தமிழ் வலைப்பூவிற்கு கூட்டிச்சென்றது.நான் சந்தித்த முதல் வலைப்பூ அதுவே! .அங்கு ஏராளமான தமிழ் புத்தகங்கள் இலவச தரவிரக்கம் செய்து கொள்ளும் வகையில் கிடைத்தன.இலவசமாகவே நிறைய நல்ல நல்ல புத்தகங்கள் கிடைத்தபோது எனது சந்தோசம் எல்லை மீறி போனது, புத்தகங்களை தேடி தேடி சேகரித்து எனது கணிப்பொறியில் ஒரு குட்டி நூலகமே கட்டி வைத்திருந்தேன்.

அந்த தமிழ் புத்தக வலைப்பூவில் கருத்திட விளைந்தபோது,ஏற்கனவே கருத்திட்டவர்களின் பெயர்களும்,கருத்துக்களும் இருந்தன,ஏதார்த்தமாக ஒரு பெயரை க்ளிக் செய்தேன்.அந்த க்ளிக் என்னை Blogger Profile  பக்கத்திற்கு அழைத்து சென்றது .அவர் பற்றிய அறிமுகமும் அவர் தொடரும் வலைப்பூகளின் பட்டியலும் இருந்தது.அந்த பக்கத்தில் இருந்த அத்தனை வலைப்பூக்களுக்கும் தேன் தேடும் வண்ணத்துப்பூச்சி பூ பூவாக தேடுவது மாதிரி சுற்ற ஆரம்பித்தேன்.தமிழ் வலைப்பூக்களின் வாசம் எனக்கு அறிமுகமாக துவங்கியது. அடுத்தடுத்த சரங்களில் அந்த பூக்களை பற்றிய விவரங்களையெல்லாம் விவரமாக சொல்கிறேன்...

நான் எழுதிய பதிவுகளில் (இதுவரை 50 க்கும் மேல் எழுதிவிட்டேன் !) குறிப்பிட்ட சில எனக்கு மிகவும் பிடித்தமானவை.



கவிதைகளில்..

வலைஉலகில் எனக்கு முதன் முதலில் அறிமுகமான தளங்கள் பற்றி நாளைய வலைச்சரத்தில் பகிற்கிறேன்...
        

                                                                   
                                                                                விஜயன்.துரை
    







24 comments:

  1. தங்களின் அறிமுகம் என்னையே மறுமுறை திரும்பி பார்க்க வைத்தது. நானும் இப்படித்தான் தமிழ் ஆர்வத்தின் பெயரால் ஒரு பிளாக் பக்கம் சென்று அங்கிருந்து பல நண்பர்களை தேட ஆரம்பித்தேன் சிறப்புங்க தொடருங்கள் தொடர்கிறோம்.

    ReplyDelete
  2. எனது நண்பரொருவர் வலைச்சர சிறப்பாசிரியர் பொறுப்பேற்றுள்ளபோது, நானே பொறுப்பேற்றதுபோல் பூரிப்பு உண்டாகிறது! மிக்க மகிழ்ச்சி!. "அட..!இத்தனைநாள் இந்த பக்கத்தை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோமே!" என்று, தங்களது அறிமுகங்களை படிப்போர் மகிழ்ந்துகூறும் அளவிற்கு, அறிமுகங்களை காட்ட நல்வாழ்த்துக்கள் நண்பரே! சுய அறிமுகம், அசத்திவிட்டீர்கள். வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete
  3. மறுமொழி @ Sasi Kala said...//

    //தங்களின் அறிமுகம் என்னையே மறுமுறை திரும்பி பார்க்க வைத்தது. //

    ரொம்ப சந்தோசம் ! மிக்க நன்றி அக்கா !,தொடர்கிறேன் அக்கா

    ReplyDelete
  4. உங்களின் அறிமுகம் பதிவர்களின் பழைய நினைவுகளை மீட்டும்... மேலும் அசத்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. மறுமொழி @ வே.சுப்ரமணியன். said...

    வாங்க ! நன்பா,
    //அட..!இத்தனைநாள் இந்த பக்கத்தை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோமே!" என்று, தங்களது அறிமுகங்களை படிப்போர் மகிழ்ந்துகூறும் அளவிற்கு, அறிமுகங்களை காட்ட நல்வாழ்த்துக்கள் //
    மிக்க நன்றி நன்பா!.

    ReplyDelete
  6. மறுமொழி @ திண்டுக்கல் தனபாலன் said...

    உங்களை இன்னும் கணோமே?? என்று யோசித்துக்கொண்டிருந்தேன்,உடனே வந்துட்டீங்களே!,ரொம்ப நன்றி அண்ணா!

    ReplyDelete
  7. வாழ்த்துகள் விஜயா,,!

    ReplyDelete
  8. ஆசிரியர் பணியை சிறப்பாக செய்ய வாழ்த்துக்கள் சகோ.!

    ReplyDelete
  9. To me ...புதியவர்...ஆசிரிய வாரத்திறுஇகு இனிய நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  10. reply @ Abdul Basith said...
    தமிழ் பதிவுலகின் மருத்துவரே !, மிக்க நன்றி..

    ReplyDelete
  11. மறுமொழி @ அருணேஸ் said...

    ரொம்ப நன்றி அண்ணா!

    ReplyDelete
  12. kovaikkavi said...

    மிக்க நன்றி வேதா இலங்கா திலகம் அவர்களே!

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள் விஜயன்.தொடருங்க..

    ReplyDelete
  14. வணக்கம்
    விஜயன்(அண்ணா)

    உங்களின் சுய அறிமுகம் மிக அருமையாக உள்ளது இந்த வாரம் வலைச்சரப் பொறுப்பு ஏற்றதை இட்டு மிக சந்தோசமாக உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  15. வலைச்சரம் ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள் ... உங்கள் அறிமுகங்களுக்குக் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  16. நல்ல தொடக்கம். வாழ்த்துக்கள் நான் வலைசரத்தில் 05.06.2012 அன்று உங்களது காதலின் ரகசியம் என்ற மின்னூலை அறிமுகம் செய்திருந்தேன். நினைவு இருக்கிறதா தம்பி?

    ReplyDelete
  17. அருமையான தகவல் பெட்டகம் பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள் விஜயன், வலைச்சரம் உங்களுக்கும் இனிய அனுபவமாகவே அமையும் என நம்புகிறேன்

    ReplyDelete
  19. T.N.MURALIDHARAN said...

    எப்படி சார் மறக்க முடியும் ,வலை சரத்தில் என்னை முதன்முதலில் அறிமுகம் செய்தது நீங்கள் தான் .நீங்கள் அறிமுகம் செய்த சமயம் நான் தேர்வுக்கு படித்துக்கொண்டிருந்தேன் ... :)

    ReplyDelete
  20. S.Raman,Vellore said... ezhil said...
    நன்றி

    ReplyDelete
  21. நன்றி ரூபன் தம்பி

    ReplyDelete
  22. அற்புதமான தொடக்கம் விஜயன்... சலிப்பு தட்டாத எழுத்து நடை... சகல பட்சினி என்றும் பசியுடன் இருக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. வலைச்சரம் ஆசிரியர் பொறுப்புக்கு வாழ்த்துகள் விஜயன்!
    ஒரு வாரமாக ஊரில் இல்லாததால் நீங்கள் பொறுப்பேற்றது தெரியவில்லை. அதனால் இந்த தாமதமான வாழ்த்துகள்.
    மன்னிக்கவும்.
    ஒவ்வொரு நாளாகப் படித்து விட்டு பின்னூட்டம் போடுகிறேன்.

    வெற்றிகரமான வாரமாக அமைந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது