நான் வியக்கும் பதிவர்கள் (பாகம்-2)
➦➠ by:
vijayan durairaj,
விஜயன் துரை
நான்
வியக்கும் பதிவர்கள் பாகம்-2
1.
சீனு :சலிப்பு தட்டாமல் தனது கருத்தை வலைப்பூ வழியாக வார்த்தைகளில் வார்த்து தரும்
வாலிபர் . திடங்கொண்டு போராடு என்ற பாரதியின் வரிகளை தனது வலைப்பூவின் முகவரியாக
கொண்ட சீனு அண்ணன் எனக்கு சென்னை பதிவர் சந்திப்பில் அறிமுகமானவர்,இவர் வலைப்பூவின் பெயரை கேட்டவுடன் எனக்குள்
வியப்பு மற்றும் புத்துணர்வு உடனே அதன் முகவரியை என் அலைபேசியில் குறித்து
கொண்டேன்.அதன் பின்பு வலைப்பூ வழியாக அண்ணனின் அன்பு கிடைத்தது.
இவர்
ராமேஸ்வரம் பற்றியும் தனுஷ்கோடி பற்றியும் எழுத துவங்கிய போது எனக்கு பொறாமையாக
இருந்தது,நம்ம ஊரை பற்றி இதுவரை
எழுதவில்லையே என்று என் மீது எனக்கே சின்ன கோபம் வந்தது.தொழிற்களத்திலும்களமிறங்கி பேஸ்புக் பற்றி ஒரு தொடர் எழுதி கலக்கி கொண்டு இருக்கிறார்.
2.
திண்டுக்கல் தனபாலன்: இவரை தெரியாத பதிவர்களே இல்லை எனலாம்.செல்லமாக இவருக்கு DD என்று பெயரிட்டுள்ளனர்.இவரதுவலைப்பூவில்
தன்னம்பிக்கை பளிச்சிடும்.திருக்குறளில் இவருக்கு உள்ள ஈடுபாட்டையும்,பரிட்சயத்தையும்,இவரது பதிவுகள் பளிச்சென
சொல்லும்.இந்த பதிவு என்று குறிப்பிட முடியவில்லை ,இவரது அனைத்து பதிவுகளும் அருமை !தழிழில் இருக்கும் பெறும்பான்மையான வலைப்பூக்களில் இவரின் முகம் பாலோவர்(Follower) கேட்ஜட்டில் சிரித்து கொண்டிருக்கும்.பதிவுகளின்
கீழே இவரது பாராட்டும்,வாழ்த்தும்,கருத்தும்
பதிவிட்ட நபருக்கு ஊக்கம் தந்து கொண்டிருக்கும்.அண்ணனை பார்க்கும் போது எனக்கு ஒரு
குறள் நினைவுக்கு வருகிறது...
"கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்து இவ்வுலகு"
"தனது
பணியை செய்து கொண்டு,அந்த
கருமம் கெடாமல் பிறர் கருத்துக்கள் மீது கண்ணோட்டம் உடையவருக்கு உலகமே உரிமை
உடையது" ,என்று வள்ளுவர் தாத்தா வாக்களித்துள்ளார்.தமிழ்
பதிவுலகின் நம்பிக்கை நட்சத்திரம் DD அவர்களுக்கு என்
பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்.
3.
மதுமதி: தொழிற்களம் சார்பில் நடந்த "உறவோடு நிகழ்ச்சி தான் மதுமதி அண்ணன்
அவர்களை எனக்கு அறிமுகம் செய்தது.திரைத்துறை பாடலாசிரியர்,நாவலாசிரியர்,போட்டித்தேர்வு
ஆசான் ,என்று பல துறைகளில் பாதம் பதித்து வெற்றி நடை
போட்டுக்கொண்டு இருப்பவர்.இவரது நகைச்சுவை உணர்வும்,பேச்சும்
சுவரசியத்திற்கு பஞ்சமில்லாமல் பல விசயங்களை நமக்கு சொல்லும்.பல மணி நேரத்தைக்கூட
சில நிமிடங்களாக எண்ண வைக்கும் அளவு சுவைபட பேசும் திறமை கொண்டவர்.
இவர் போட்டி தேர்வுகள் பற்றி எழுதுகிறார் வீடியொ பதிவும் உண்டு
இவர் பதிவுகளில் அரசியல் ,சினிமா ,என்று பல விசயங்களை விவாதிக்கிறார் ..
4.
ராஜா அண்ணா டேலி: சென்னைபதிவர் சந்திப்பில் பதிவர் அறிமுகத்தின் போது இவர் தன்
வலைப்பூவை பற்றி கூறிய போது எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.தனது மொபைல் போன்
உதவியுடன்(Nokia -ன் Express
Music).தனது வலைப்பூவில் பதிவுகளை எழுதி வருகிறார்.இவரை பற்றி என்
வலைப்பூவில் ஒரு பதிவிட்டுள்ளேன்...மறக்காமல் படிங்க!,அதிசயித்து
போவீர்கள்!
அனைவருக்கும் எனது சல்யூட் ...!
|
|
ஒரே ஒரு பதிவரைத் தவிர மற்ற எல்லோரும் சிறந்த பதிவர்கள் தான். அருமையான தேர்வு!!
ReplyDeleteவலைச்சர அறிமுகத்திற்கு முதலில் நன்றி... தங்களின் பாராட்டுகளை, வாழ்த்துக்களை சிரம் தாழ்ந்து ஏற்றுக் கொள்கிறேன்...
ReplyDeleteநம்ம தாத்தாவின் வாக்கு நிறைவேறட்டும்... மற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
இதற்கு முன் பதிவு மட்டும் தான் முதலில் பார்த்தேன்... இந்தப் பதிவை கவனிக்கவில்லை... மகிழ்ச்சி...
இரண்டு நாளாக அதிக மின்வெட்டு ஆரம்பம் போலே... பகல் நேரம் இரண்டு அல்லது மூணு மணி நேரம் மட்டுமே மின்சாரம் உள்ளது... அன்பர்களே... மின்சாரம் இருக்கும் போது பதிவுகளை எழுதி வையுங்கள்... விரைவில் நானும் வருகிறேன்... தற்போது வேறு இடம் - உறவினர் கணினி + இணையம்...
மிக்க நன்றி...
அருமையான அறிமுகம்! கடைசி நபர் ராஜா அண்ணா அறிமுகம் கிடையாது! மற்றவர்கள் அறிந்தவர்கள் வலைப்பூ மூலமாக! பகிர்வுக்கு நன்றி!
ReplyDelete