07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, February 14, 2013

காதலர் தின சிறப்பு வலைச்சரம்:


காதலர் தின சிறப்பு வலைச்சரம்:

யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே
                              -குறுந்தொகை 

இந்த குறுந்தொகை பாடலை நம் தற்கால நடையில் ரீமேக் செய்தால் அது புதுக்கவிதை போலவே இருக்கிறது... ஒரு சிறு முயற்சி.தவறிருப்பின் தமிழ் ஆர்வலர்கள் பொறுத்தருள்க,தவறேதும் இருப்பின் திருத்தம் தருக !

என் தாயோ உன் தாயோ
சொந்தமில்லை
என் தந்தை உன் தந்தை
உறவும் இல்லை

நீ யாரோ நான் யாரோ
வழியேதும் அறியேன்

செம்மண் சேறும்
நீர்த்துளி போல
கண்டதும் கலந்தன
காதலில் மனங்கள்


சரி எனது இலக்கிய பார்வையை கொஞ்சம் ஓரம் கட்டி வைத்துவிட்டு இன்றைய சரத்திற்குள் செல்வோம்.இன்றைய சரம் காதலர் தின சிறப்பு சரம்..

காதலிக்க போகிறவர்களுக்கும்,காதலில் இருப்பவர்களுக்கும் காதலர்தின வாழ்த்துக்கள்! சொல்லி வரவேற்கிறேன்...

காதல் என்றால் என்ன??

காதல் என்பதற்கு ஆளாளுக்கு ஒரு கருத்தை சொல்கிறார்கள்.காதல் பற்றி எல்லோரும் கவிதை சொல்கிறார்கள்.அட அப்டீனா என்ன?? இந்த பதிவுகளை படித்து பாருங்கள் விடை கிடைக்கலாம்...

காதல் என்றால் என்ன? -  கட்டுரை  மற்றும் கவிதை இணைந்த படைப்பு ஒன்றை எழுதியிருக்கிறார் மதுமிதா

எது காதல்?.. காதல் எது என்பதை அழகாக சுட்டுகிறார் நன்பர் வெ.சுப்ரமணி

காதல் பற்றி ஒரு ஆராய்ச்சி கட்டுரை - நல்லதொரு ஆராய்ச்சி ராஜ்குமார்

என் பங்கிற்கு நானும் காதலின் ரகசியம் என்று ஒரு மின் புத்தகம் தயாரித்து வெளியிட்டிருக்கிறேன்...(கட்டுரையாகத் தான் முயற்சித்தேன் பக்கங்கள் கொஞ்சம் நீண்டுவிட்ட்து) நேரமிருந்தால் வாசித்துபாருங்கள்..

அட என்ன்ங்க கவிதை இல்லாம காதலர் தின சிறப்பு வலைச்சரமா?

காதல்-கவிதைகள்:


காதல் கவிதை என்றதும் எனக்கு ஞாபகத்திற்கு வரும் முதல் கவிஞர் தபூ சங்கர் தான் .காதல் தேவதையின் ஆசிர்வாதம் பெற்ற கவிஞர் தபூ சங்கர் அவர்களின் வலைப்பூவில் எட்டு பதிவுகள் தான் உள்ளன.காதல் ரயில் ஓடிய தடங்கள் அந்த தண்டவாளங்களில் இன்னும் எதிரொலித்து கொண்டே இருக்கின்றன.போய் கேட்டு பாருங்கள்.
ஒரு கவிதையில் தனது காதலியிடம்...
உன் பேச்சு கா...தல் என்று செல்ல கோபம் கொள்கிறார்...

(ஒரு முக்கியமான விசயம் காதல் கவிதைகளின் தலைவரான தபூ சங்கர் திருமணம் ஒரு நிச்சயக்கப்பட்ட மணம் (Arranged Marriage) ! )

இனிப்பெடுத்துக் கொள்ளுங்கள் காதல்பிறந்திருக்கிறது...  என்ற தலைப்பில் உள்ள கட்டுரையை மறக்காமல் படியுங்கள்ரேவதி அக்கா எழுதியிருக்கும் பெரும்பான்மை கவிதைகள் காதல் பேசும் கவிதைகள்.போய் பாருங்கள் காதல் காத்து கிடக்கிறது 

ராமானுஜம் அவர்கள் எழுதியிருக்கும் இந்த கவிதையை படியுங்கள்,காதலை அழகாக பதிவிட்டிடிருக்கிறார் தனது கவியில்...


இதையும் படிங்க இதிலும் காதல் இருக்கு...

காதல் சுரங்க பாதை... பற்றிய செய்தி ஒன்றை விசித்திரன் பதிவு செய்திருக்கிறார்.படித்து பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள்!


காதலர் தினம் மீது தனக்குள்ள கோபத்தை தமாஷாகவும்,ஒரு தகவலாகவும் பதிந்திருக்கிறார் சங்கவி.இவரை சென்னை பதிவர் சந்திப்பில் பார்த்திருக்கிறேன்.

காதல் பற்றி கவிஞர்கள் நிறைய சொல்லி இருக்கிறார்கள்...காதல் பற்றிய ஒரு மனைவியின் பார்வையை பாருங்கள்...
நான் மனைவியானவள்.... என்ற ஒரு கவிதையில் அக்கா உஷா அன்பரசு இப்படி சொல்கிறார்கள்...

நாளைய வலைச்சரத்தில் சந்திக்கிறேன்....

11 comments:

 1. நீங்கள் குறிப்பிட்ட வலைதளங்களுக்கு சென்று பார்க்கவேண்டும்.. இன்றைய காதலர் தின சிறப்பு வலைதள அறிமுகங்கள் அருமை!

  உங்கள் புது கவிதை அழகு!!

  ReplyDelete
 2. எனது கருத்து இங்கே!!
  http://inaiyakavi.blogspot.com/2013/02/blog-post.html

  ReplyDelete
 3. மறுமொழி @ சமீரா said...

  நன்றி சமீரா...
  அந்த கவிதைக்கு குறுந்தொகை கவிஞன் தான் உரிமைக்காரன். :)

  ReplyDelete
 4. மறுமொழி @ Er.Rajkumar P.P said...

  உங்கள் கருத்தையும் வலைசரத்தில் இணைத்துவிட்டேன்.நன்றி ராஜ்

  ReplyDelete
 5. கவி மழை, காதல் மழை பொழியும் தளங்கள்... தபூ சங்கர் + என்பா - இரு தளங்களையும் வாசித்தேன்... மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 6. வணக்கம்
  விஜயன்(அண்ணா)

  இன்று வலைச்சரத்தில் மிக அருமையான படைப்புக்கள் இன்று காதலர் தினம் இன்றைய பதிவுகள் காதல் பரிசுகளை சுமந்த வண்ணம் உள்ளது அறிமுகம் கண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்
  காதலர் தின வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 7. நாளுக்கு ஏற்றார் போர் பதிவு... மற்றும் அறிமுகம்... என அத்தனையும் அழகு...

  ReplyDelete
 8. Reply @ கவிதை வீதி... // சௌந்தர் // said...

  Thank you anna

  ReplyDelete
 9. சரத்தில் எனது பூவையும் தொடுத்தமைக்கு மிக்க நன்றி நண்பரே! மற்ற அறிமுகங்களும் அருமை!.

  ReplyDelete
 10. காதலர் தினத்துக்கு பொருத்தமான அறிமுகங்கள்

  ReplyDelete
 11. காற்றுவெளி வலைப்பதிவின் லிங்க் இணைத்தமைக்கு நன்றி விஜயன் _^_

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது