3. வலைச்சரம் மூன்றாம் நாள்: “வாழ்க்கை என்றால் என்ன?”
➦➠ by:
தி.தமிழ் இளங்கோ
நான் கல்லூரி படித்த நாட்களில் கிராமத்திற்கு சென்ற போது ரொம்பவும் வயதான
பெரியவர்கள் பலரைப் பார்த்து ”இத்தனை நாள் இருந்ததில்
நீங்கள் கண்டது என்ன?” கேட்பேன். அவர்கள் சிரிப்பார்கள். சிரித்துக் கொண்டே “என்னத்தைச்
சொல்றது. ஒன்னும் இல்லை” என்பார்கள்.
இப்போது அதே கேள்வியை எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். “வாழ்க்கை என்றால் என்ன?” என்று நினைத்துப் பார்த்தால் ஒன்றுமே இல்லை
என்றுதான் தெரிகிறது. இத்தனை நாட்கள் வாழ்ந்த நாட்களில் நாம் அடைந்த துயரம்,
துரோகம், அவமானம், ஏமாற்றம் ஆகியவை தானாகவே முன்னே வந்து நிழலாடுகின்றன. இனிமையான
நினைவுகளை நாம்தான் அசை போட்டு கொண்டு வர வேண்டியுள்ளது. ஒரு சங்க இலக்கியப்
புலவர் ஒருவர் இவ்வாறு கூறுகிறார்.
இன்னாது
அம்ம, இவ் உலகம்;
இனிய
காண்க, இதன் இயல்பு உணர்ந்தோரே
- பக்குடுக்கை நன்கணியார்
( புறநானூறு 194 )
இன்றைய எனது அறிமுக வலைப்பதிவுகள்:
இவரைப் பற்றிய அறிமுகமும் தேவையில்லை. தனது பதிவுகளில் கேள்வியையும் வைத்து பதிலையும் சொல்லி விடுவார். இடையிடையே பாட்டுக்குப் பாட்டும் இருக்கும். திருக்குறள் சிந்தனைகளும் இருக்கும் ”மனிதனின்
மிகப் பெரிய எதிரி யார்?” போன்ற தலைப்புகளில் மனித
மனத்தை அடிப்ப்டையாகக் கொண்ட .பல பதிவுகளை தந்துள்ளார். கூர் இல்லா ரம்பத்தை வைத்து மரம்
அறுத்தவன் உவமானம் ஒன்றைச் சொல்லி நழுவ விடக் கூடாதது வாய்ப்புதான் என்பதனை
அழுத்தம் திருத்தமாக
மனித வாழ்வில் நழுவ விடக்கூடாதது எது? http://dindiguldhanabalan.blogspot.com/2012/12/Opportunity-Peace-Re-Search.html
மனித வாழ்வில் நழுவ விடக்கூடாதது எது? http://dindiguldhanabalan.blogspot.com/2012/12/Opportunity-Peace-Re-Search.html
எனும் பதிவில் அண்மையில் சொல்லி இருக்கிறார். தித்திக்கும்
திண்டுக்கல் என்ற தலைப்பில் தனது ஊர் பெருமையை
http://dindiguldhanabalan.blogspot.com/2012/08/About-Dindigul-Tamilnadu.html#axzz2LLUx3qrq இங்கே சொல்லுகிறார். அண்மைக் காலமாக பதிவுகள் எதுவும் தராமல், மற்றவர்களின்
பதிவுகளுக்கு மட்டும் கருத்துரைகள் எழுதி வருகிறார். அவர் மீண்டும் எழுத வேண்டும்.
மீசைக் கவிஞன் பாரதியின் பாடல்களை ரசிக்கும் இவர் எழுத்துச் சித்தர்
பாலகுமாரனின் வாசகர். ஆங்காங்கே தனது பதிவுகளில் பாலகுமாரனின் கவிதைகளைப்
பற்றியும் நூல்களைப் பற்றியும் ரொம்பவும் ரசித்து எழுதுவார். மற்ற தலைப்புகளிலும்
எழுதுவார்.
” மனிதன் எந்த
வகை? “ என்ற
தலைப்பில் பாலகுமாரனின் (http://tnmurali.blogspot.com/2012/12/balakumaran-karaiyoramudhaligal-kavithai-part3.html ) கவிதை ஒன்றினை மேற்கோள்
காட்டுகிறார்.
// நீங்கள் மரபுக் கவிதை எழுத முயற்சிப்பவரா? நீங்கள் எழுதிய மரபுக் கவிதையை சரிபார்க்க உதவுகிறது அவலோகிதம் என்ற தமிழ் யாப்பு மென்பொருள் // என்று ஒரு பதிவை தருகிறார். சென்று பாருங்கள். மரபுக் கவிதை சரிபார்க்க உதவும் மென்பொருள்-அவலோகிதம் http://tnmurali.blogspot.com/2012/02/blog-post_05.html
கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றார். கணிதமேதை ராமானுஜம் அவர்களது வாழ்க்கை வரலாற்றை தனது வலைப் பதிவில்
தொடராக எழுதி வருகிறார். ”மருத்துவமும் மனிதநேயமும்” என்ற
தலைப்பில் (http://karanthaijayakumar.blogspot.in/2012/02/blog-post.html)
//காலடிச் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்க்கிறோம். மருத்துவர் பிரேம் குமார் அவர்கள் ஆபரேசன் தியேட்டரில் அணியும் உடையுடன் எங்களை நோக்கி வேகமாக வந்து கொண்டிருக்கிறார். She is all right, இதயம் ஆரோக்கியமாய் இருக்கிறது. இதயத்தில் ஓட்டை என்பது கிடையவே கிடையாது. தற்சமயம் மயக்கத்தில் இருக்கிறார். I will discharge her
immediately. மயக்கம் தெளிந்ததும், மகளை அழைத்துக்கொண்டு நீங்கள் வீட்டிற்குச் செல்லலாம். மருந்து எதுவும் தேவையில்லை என்று கூற,மூவரும் கலங்கிய கண்களுடன் அவரையேப் பார்த்துக்
கொண்டிருக்கிறோம். மகிழ்வை வெளிப்படுத்தக்
கூட, வார்த்தைகள் வெளிவராத நேரம் அது. மருத்துவரின் கைகளைப் பற்றிக் கொண்டேன்.//
என்று தனது மகளுக்காக தனது வாழ்க்கையில் சந்தித்த ஒரு பெரிய மனப் போராட்டத்தை பதிவாக்கியுள்ளார்.
பதிவின் பெயர் : மின்னல் வரிகள்
கணிதமேதை அத்தியாயம் என்ற தொடரில் கணிதமேதை இராமானுஜம் வாழ்க்கை
வரலாற்றுத் தொடரை எழுதி வருகிறார்.
பதிவின் பெயர் : மின்னல் வரிகள்
நடை வண்டிகள் என்ற தொடரில் பிரபல தமிழ் எழுத்தாளர்களுடன் தனக்கிருந்த தொடர்பைப் பற்றி எழுதுகிறார்.
பழமை- என்றும் இனிமை! என்ற பதிவில் பழைய
சினிமா செய்திகளைத் தருகிறார். http://minnalvarigal.blogspot.com/2012/04/blog-post.html
'வாடிய
பயிரைக்கண்ட போதெல்லாம் வாடினேன்' என்று வலைப்
பதிவில் எழுதி வரும் திரு.வே.நடனசபாபதி அவர்கள்
சிண்டிகேட் வங்கியிலிருந்து ஓய்வு
பெற்ற அதிகாரி. பணியில் இருக்கும் போது தனக்கு கிடைத்த அனுபவங்களையும் மற்றவற்றையும் எளிய
நடையில் சொல்லி வருகிறார். நினைத்துப் பார்ப்பது ஏன்?
http://puthur-vns.blogspot.com/2012/06/blog-post.html என்று ஒரு பதிவு
தந்துள்ளார். அதில் தான் வலைப்பதிவில் எழுதுவதற்கான காரணங்களை சுவைபட கூறுகிறார்.
// பணியில் சுறுசுறுப்பாக
இருந்தது போல,இப்போதும் சுறுசுறுப்பாக இருக்க
விரும்புவதால் பதிவில் எழுதுகிறேன். மற்றபடி புகழ்பெற அல்லது பாராட்டுபெற அல்ல.
பழைய நிகழ்வுகளை
நினைத்துப் பார்த்து எழுதும்போது,
மூளையில் உள்ள
திசுக்கள் சுறுசுறுப்பூட்ட(Activate) படுவதால்
அவைகள் அழிவது
தடுக்கப்படுகிறது என்பதும் அதனால்
முதுமையில்
ஏற்படும் நினைவாற்றல்
இழப்பு தடுக்கப்படுகிறது
என்பதும் உண்மை.//
கிறுக்கல்கள் என்ற தலைப்பில் எழுதி வரும் சகோதரி யுவராணி தமிழரசன் அவர்கள் நல்ல எழுத்தோவியங்களை
தருகிறார். அண்மையில் இவர் பொறுப்பேற்ற வலைச்சரம் ஆசிரியை பணியை திறம்பட செய்திருக்கிறார். விலாசமில்லாத வினாக்கள்
என்ற தலைப்பில்
( http://dewdropsofdreams.blogspot.in/2012/08/blog-post.html ) அரசு அலுவலகம்
ஒன்றிற்கு சான்றிதழ் வாங்கச் சென்ற அனுபவத்தினை அமைதியாகச் சொல்லி இருக்கிறார்.
சகோதரி மஞ்சுபாஷிணி
அவர்கள் சின்னச் சின்ன கதைகளை சஸ்பென்ஸ் தந்து எழுதி வருகிறார். அன்புப்பிணைப்பு...என்ற
http://manjusampath.blogspot.in/2012/10/blog-post_23.html சிறுகதையை உதாரணமாகக் காட்டலாம்.
சமையலறை பகுதியில் நாவுக்கினிய உணவு வகைகளைச் சொல்லுகிறார். இவர் எழுதிய கதைகள்
மற்றும் கவிதைகள் யாவும் அன்பை மையமாகக் கொண்டே வருகின்றன.
இந்த வலைப்பதிவினை எழுதிவரும் ஷைலஜா அவர்கள் ஸ்ரீரங்கத்தில் பிறந்து வளர்ந்தவர். இப்போது பெங்களூரில் வசிக்கிறார்.. (இவரது தந்தை அண்மையில் மறைந்த பிரபல எழுத்தாளர் இராகவன் அவர்கள்.) கவிதை கட்டுரை சமயம் என்று பல படைப்புகள்.இவர் எழுதிய பதிவுகளில் மறக்க முடியாத ஒரு பதிவு
அன்புள்ள அப்பா! http://shylajan.blogspot.com/2012/06/blog-post.html
என்பதாகும்.
ஸ்ரீரங்கம் வெள்ளை கோபுரத்தை மையமாகக் கொண்டு ஒரு வரலாற்று நிகழ்ச்சியை சிறுகதையாய் தருகிறார்.
வெள்ளை கோபுரம்! http://shylajan.blogspot.com/2012/01/blog-post_20.html
ஸ்ரீரங்கம் வெள்ளை கோபுரத்தை மையமாகக் கொண்டு ஒரு வரலாற்று நிகழ்ச்சியை சிறுகதையாய் தருகிறார்.
வெள்ளை கோபுரம்! http://shylajan.blogspot.com/2012/01/blog-post_20.html
பதிவின்
பெயர் : சின்னு ரேஸ்ரி
அழகிய புகைப் படங்களோடு சமையல் கலையின் நுட்பங்களைச் சொல்லித் தருகிறார் சகோதரி
மாதேவி அவர்கள். இவர் சொல்லும் சமையல் குறிப்பை
படிக்கும்போதே அதன் சுவை காரம் சாரமாக உள்ளதை காட்டுகிறது. தேங்காய்ப்பால் பட்டர்
பீன்ஸ் http://sinnutasty.blogspot.in/2012/10/blog-post.html இவரது இன்னொரு வலைப்
பூவான ரம்யம் http://ramyeam.blogspot.in பெயருக்கு ஏற்ப மிக
ரம்யமாகவே அழகிய புகைப் படங்களுடன் இருக்கிறது. இதில் இலங்கையின் எழிலுறு
இடங்களையும் தனது பயண அனுபவங்களையும் படங்களால் வர்ணித்துள்ளார்.
வீடியோ, சினிமா, தொழில்நுட்பம், நேர்காணல் என்று அசத்துகிறார்.
வலைச்சரக் குழுவிலும் இருக்கிறார். சின்ன வயதில் நாம் சுவைத்த ஒரு இனிப்பு மிட்டாயை
சுவையாகத் தந்துள்ளார். இனிப்பைச் சுவையுங்கள்.
வாரத்தில் ஐந்துநாள் மட்டுமே வேலை சிறந்தது என்கிறார். அவர் சொல்லும்
சித்தாந்தத்தை (LOGIC)
கவனியுங்கள்.
திருச்சி திருவானைக்காவலைச் சேர்ந்த ஆர்.ராமமூர்த்தியின் கட்டுரைகள், கதைகள், அனுபவங்கள் யாவும் யதார்த்தமானவை. திரு VGK (வை.கோபாலகிருஷ்ணன்) அவர்களது பதிவுகளில் இவர் சொல்லும் கருத்தும், இதற்கு அவர் தரும் பதிலும் தொடர்ந்து படிக்க சுவாரசியமாக இருக்கும். திருச்சி ஆண்டார் வீதியில் வாழ்ந்த அந்த காலத்தை இந்த பதிவில் நினவுகளாகத் தந்துள்ளார்.ஆண்டார் வீதியும் நானும்!
பதிவின் பெயர் : தருமி
தருமி எனும்
பெயரில் இணையத்தில் எழுதி வருகிற திரு சாம் ஜார்ஜ், மதுரையைச் சேர்ந்தவர். 1970 முதல் 2003 வரை மதுரை அமெரிக்கன் கல்லூரியில் விலங்கியல் துறை விரிவுரையாளராகப் பணியாற்றி ஓய்வு
பெற்றவர். இவரது பதிவில் அரசியல், சமூகம், இலக்கியம்,
அனுபவம், நகைச்சுவை, போட்டோகிராபி என்று பல்வேறு அலசல்களையும் காணலாம்.
எல்லாவற்றையும் நயம்பட உரைத்து இருக்கிறார்.
609. பிச்சைப் பாத்திரம் ஏந்தினோம் .. அய்யனே ..அய்யனே என்ற தலைப்பில் தொடர் மின்வெட்டு காரணமாக ஒரு பதிவர் படும் பாட்டை நகைச்சுவையோடு சொல்கிறார். ஒச்சப்பனும் நானும் என்ற தலைப்பில் இவர் எழுதிய கட்டுரைகள், இவருக்கு போட்டோகிராபியில் உள்ள ஆர்வத்தை காட்டும். இதோ ஒரு பதிவு. 552. நானும் photogrphy-யும் ... 6 & "ஒச்சப்பனும் நானும்"
|
|
பல பதிவர்களின் நிஜப் பெயர்களை அறிந்து கொண்டேன்.
ReplyDeleteஎனது பதிவையும் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி அய்யா. அனைத்தும் நல்ல அறிமுகங்கள். ஷைலஜா மாதேவி இருவர் மட்டும் நான் அறியாதவர்கள்.இன்றே வாசித்து விடுகிறேன்.
ReplyDeleteஇன்றைய வலைச்சரத்தில் என் பதிவுகளைப் பற்றி எழுதியதைக் கண்டும் உங்கள் கவனத்தில் நான் இருப்பதிலும் மகிழ்ந்து மனம் நிறைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய சிறப்பான அறிமுகங்களில் தருமி அவர்களைத் தவிர மற்ற அனைவரும் நான் படித்த/பழகிவரும் நட்புகள் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி. அனைவருக்கும் என் நல்வாழ்த்துகள்!
ReplyDeleteஇன்றைய வலைச்சரத்தில் எனது வலைப்பதிவு பற்றி எழுதி அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.
ReplyDeleteஅறிமுகங்கள் அருமை... அனைத்து தளங்களுமே நான் ரெகுலராக பார்வையிடும் தளங்களே...
ReplyDeleteஅத்தனைபேரும் சத்தான படைப்பை தருபவர்கள் .அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்
ReplyDeleteதிரு நடன சபாபதி அவர்கள் மட்டுமே என்னைப்பொறுத்த அளவில் புதிய அறிமுகம்.
ReplyDeleteபொதுத்துறை அதிகாரியாக இருந்தவர். அவர் வலைக்குச் சென்று ஆறுதல் தந்தேன்.
நடன சபாபதி என்ற பெயர் பொருத்தம். பொதுத்துறையில் அதிகாரி ஆகிவிட்டால்
என்ன தொல்லை என்பதை, ஒரு காலில் நின்று இன்னொரு காலைத்தூக்கி நடனமாடும்
தொல்லை , சாரி, தில்லை சபாபதி யைக் கேட்கும்பொழுது என்னுடைய பழைய கால
நினைவுகள் எல்லாமே வருகின்றன.
மறப்போம். மன்னிப்போம். என்று இருக்கணும்.
இதெல்லாம் பொதுத்துறைலே சகஜமுங்க.. அப்படியும் இருக்கலாம்.
போனால் போகட்டும் போடா என்று உதறித் தள்ளி விட்டு இப்ப
ஜாலியா வலைச்சரத்திலே ஜோக் படிக்கலாம். ஜொள்ளு விடலாம்.
இல்லயா.. இன்னமும் இருமல் போகல்லையே !!
லொக். ...லொக்...லொக்....
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in
இப்பொழுதுதான் தருமி என்ற பெயரில் எழுதும் திரு ஜார்ஜ் வலைக்குச் சென்றேன்.
ReplyDeleteமனிதக் கழிவுகளை அகற்ற யந்திரங்களை பயன் படுத்தவேண்டும் என்று வலியுறுத்தி ஒரு ஐந்தாண்டு அரசுடன்
போராடும் மனிதர்.
பாராட்டுக்குரியவர்.
மனிதனின் உடல் கழிவுகள் ஒரு பக்கம் இருக்கட்டும். மனிதனின் மனக் கழிவுகளைப் பற்றி என்ன சொல்ல ?
மனித மனதின் வக்கிரச் செயல்கள் எத்துணை அளவுக்கு அதே சமூகத்தில் வாழும் மற்றவர்களை நிலை குலையச் செய்கிறது !
நினைத்தாலே மனம் பதைபதைக்கிறது.
இந்த மனித மனக்கழிவுகளைக் கண்டிக்கும் எண்ணங்கள் சொற்களோடு வாய்ச்சொல் வீரத்துடனே நின்று போகின்றன.
பல பதிவுகளில் பல்வேறு துறைகளில் நடக்கும் விபரீதச் செயல்களைக் கண்டித்து கதைகள், கட்டுரைகள், கவிதைகள்
வருகின்றன.
இதற்கெல்லாம் முடிவு உண்டா ? தெரியவில்லை.
சுப்பு தாத்தா.
எனது வலைப்பதிவு பற்றி எழுதி என்னையும் எனது ஊரையும் பற்றிய பதிவையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி... இந்த இரண்டையும் வைத்து ஒரு சிந்தனை வந்து போயிற்று... பதிவு எழுத வாய்ப்பு வரும் போது முதலில் இதைப்பற்றி எழுதலாம் என்றுள்ளேன்... மறுபடியும் நன்றி...
ReplyDeleteவேறு தொழில் + இடம்... உறவினர் கணினி + இணையம்... அதனால் அன்பர்களின் பதிவுகளுக்கு மட்டும் கருத்துரைகள்...
விரைவில் முழுதாக இணையம் வர முயற்சி செய்கிறேன்...
அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...
தமிழக மக்களின் பயன் பாட்டிலிருந்து எக்மோர் ரயில் நிலையம் பறிபோகப் போகிறது.
ReplyDeleteஎக்மோர் இரயில் நிலையம் தென் தமிழக மக்களுக்கு தொடர்ந்திட
தந்தி மற்றும் இ - மெயில் மூலம் மத்திய அரசை வலியுறுத்துவோம் நீங்களும் உங்களது நண்பர்களும் தவறாமல் அனுப்பிடக் கேட்டுக் கொள்கிறோம்
URGENT Dear friend we kindly Request you and your friends post your blog be help our peopls more... visit www.vitrustu.blogspot.in
" பின்னூட்ட புயல் " திண்டுக்கல் தனபாலன் அவர்களை குறிப்பிட்டமைக்கு நன்றி அன்பரே அன்பரே
ReplyDeleteமறுமொழி >பழனி. கந்தசாமி said...
ReplyDelete// பல பதிவர்களின் நிஜப் பெயர்களை அறிந்து கொண்டேன். //
எனது வலைச்சரம் பணி பயனுள்ளதாக இருந்தது கண்டு மகிழ்ச்சி. கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி >T.N.MURALIDHARAN said...
ReplyDeleteநன்றி தெரிவித்த சகோதரருக்கு நன்றி!
மறுமொழி >பால கணேஷ் said...
ReplyDelete// இன்றைய வலைச்சரத்தில் என் பதிவுகளைப் பற்றி எழுதியதைக் கண்டும் உங்கள் கவனத்தில் நான் இருப்பதிலும் மகிழ்ந்து மனம் நிறைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் //
உங்களை நான் மறக்கவில்லை. இடையில் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக, பலருடைய பதிவுகளை படித்தும் கருத்துரை இயலாமல் போய்விட்டது. நன்றி தெரிவித்தமைக்கு நன்றி!
மறுமொழி > வே.நடனசபாபதி said...
ReplyDeleteநன்றி தெரிவித்த உங்களுக்கு நன்றி!
மறுமொழி >ஸ்கூல் பையன் said...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
மறுமொழி > கவியாழி கண்ணதாசன் said...
ReplyDeleteகவிஞரின் வருகைக்கு நன்றி!
மறுமொழி >sury Siva said... ( 1, 2 )
ReplyDeleteதிரு நடன சபாபதி அவர்கள் பதிவில் உங்கள் கருத்துரையைப் படித்தேன்.
// இன்னமும் இருமல் போகல்லையே !! லொக். ...லொக்...லொக்....//
உடல்நிலையை கவனித்துக் கொள்ளவும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
// மனிதனின் மனக் கழிவுகளைப் பற்றி என்ன சொல்ல ? //
மனக் கழிவுகளை சுத்தப்படுத்த நமது தமிழில் ஏராளமான நீதி நூல்கள் உள்ளன.
மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தெரிவித்தமைக்கும் உங்களுக்கு நன்றி! மீண்டும் எழுத வாருங்கள். உங்கள் பாணியை கொஞ்சம் மாற்றி எழுதுங்கள்.
மறுமொழி > Bala subramanian said...
ReplyDeleteஉங்கள் சமூகசேவை வாழ்க!
மறுமொழி > Prem s said...
ReplyDelete// " பின்னூட்ட புயல் " திண்டுக்கல் தனபாலன் //
தங்கள் கண்ணோட்டம் சரிதான்.
This comment has been removed by the author.
ReplyDeleteஅன்புள்ள திரு. தி. தமிழ் இளங்கோ ஐயா அவர்களுக்கு,
ReplyDeleteகாலை வணக்கங்கள்.
//“வாழ்க்கை என்றால் என்ன?” என்று நினைத்துப் பார்த்தால் ஒன்றுமே இல்லை என்றுதான் தெரிகிறது.//
நான் சமீபத்தில் ”கிழக்கு வாசல் உதயம்” என்ற தமிழ் மாத இதழினை விரும்பிப் படித்தேன் ஐயா.
அதன் ஆசிரியரும் என் இனிய நண்பருமான திரு. உத்தமசோழன் என்பரின் தலையங்கத்தில் எழுதியுள்ளதின் தலைப்பினை மட்டும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
”வாழ்தல் என்பது ... நாம்
பிறர் மனதில் வாழ்வதுதான்....!”
>>>>>>
இன்றைய வலைச்சரத்தில் தங்களால் அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ள அனைத்துப் பதிவர்களுக்கும் என் அன்பான பாராட்டுக்கள், வாழ்த்துகள்.
ReplyDelete>>>>>>
//பதிவின் பெயர் : கிறுக்கல்கள்...
ReplyDeletehttp://dewdropsofdreams.blogspot.in(யுவராணி தமிழரசன்)
கிறுக்கல்கள் என்ற தலைப்பில் எழுதி வரும் சகோதரி யுவராணி தமிழரசன் அவர்கள் நல்ல எழுத்தோவியங்களை தருகிறார். அண்மையில் இவர் பொறுப்பேற்ற வலைச்சரம் ஆசிரியை பணியை திறம்பட செய்திருக்கிறார். விலாசமில்லாத வினாக்கள் என்ற தலைப்பில்
(http://dewdropsofdreams.blogspot.in/2012/08/blog-post.html ) அரசு அலுவலகம் ஒன்றிற்கு சான்றிதழ் வாங்கச் சென்ற அனுபவத்தினை அமைதியாகச் சொல்லி இருக்கிறார்.//
ஐயா,
அன்புச்சகோதரி செல்வி. யுவராணி அவர்கள் சார்பில், நான் என் மனமார்ந்த நன்றிகளைத் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மிக்க ந்ன்றி ஐயா!
>>>>>
ReplyDelete// வாழ்தல் என்பது ... நாம்
பிறர் மனதில் வாழ்வதுதான்....!”//
திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் மிகவும் அழகாக சொல்லியிருக்கிறார்கள்.
அந்த காலத்திலே படித்த உருது கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது. முகமது இக்பால் எழுதியது என நினைக்கிறேன்.
அதன் பொருள் இது போல் :
" மனிதா ! நீ பிறக்கையிலே நீ அழுதாய் ! உனைச்சுற்றி இருந்த அனைவருமே உன் வரவைக் கண்டு குதூகலமடைந்தனர்.
மகிழ்ந்தார்கள். சிரித்து மகிழ்ந்தார்கள். "
" மனிதா ! நீ இறக்கையிலே உன்னை இழந்து விட்டோமே என நாடு முழுவதும் அழவேண்டும். நீ மன நிறைவுடன் மகிழ்ந்து செல்லவேண்டும
சிரித்துக்கொண்டே செல்லவேண்டும் "
ஒரு வேளை இது தான் பிறர் மனதில் வாழ்வதோ !!
சுப்பு தாத்தா
www.subbuthatha.blogspot.in
பதிவின் பெயர் : கதம்ப உணர்வுகள்
ReplyDeletehttp://manjusampath.blogspot.in (மஞ்சுபாஷிணி)
சகோதரி மஞ்சுபாஷிணி அவர்கள் சின்னச் சின்ன கதைகளை சஸ்பென்ஸ் தந்து எழுதி வருகிறார்.
அன்புப்பிணைப்பு...என்ற
http://manjusampath.blogspot.in/2012/10/blog-post_23.html சிறுகதையை உதாரணமாகக் காட்டலாம்.
சமையலறை பகுதியில் நாவுக்கினிய உணவு வகைகளைச் சொல்லுகிறார்.
இவர் எழுதிய கதைகள் மற்றும் கவிதைகள் யாவும் அன்பை மையமாகக் கொண்டே வருகின்றன.//
அன்பின் ஐயா,
அன்புச்சகோதரி திருமதி.மஞ்சுபாஷிணி அவர்கள் சார்பில், நான் என் மனமார்ந்த நன்றிகளைத் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மிக்க நன்றி ஐயா!
>>>>>
//திருச்சி திருவானைக்காவலைச் சேர்ந்த ஆர்.ராமமூர்த்தியின் கட்டுரைகள், கதைகள், அனுபவங்கள் யாவும் யதார்த்தமானவை.
ReplyDeleteதிரு VGK (வை.கோபாலகிருஷ்ணன்) அவர்களது பதிவுகளில் இவர் சொல்லும் கருத்தும், இதற்கு அவர் தரும் பதிலும் தொடர்ந்து படிக்க சுவாரசியமாக இருக்கும்.//
திரு. ராமமூர்த்தி அவர்கள், என் மிகச்சிறந்த நகைச்சுவை நண்பர்களில் ஒருவர் ஆவார். இவருடன் எனக்கு நீண்டகால பழக்கம் உண்டு. மேலும் நாங்கள் ஒரே அலுவலகத்தில், ஒரே துறையில், ஆனால் வெவ்வேறு பிரிவுகளில் பணியாற்றியவர்கள்.
மரத்தடி, கேண்டீன், பேருந்துப்பயணம் போன்றவற்றில் ஒருவர் அருகே மற்றொருவர் என எப்போதுமே இணைந்திருந்து, பலவிதமான நகைச்சுவைகளை பரிமாறி மகிழ்வோம்.
நாங்கள் இருவரும் கூடிப்பேச ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாதபடி பேசி சிரித்து மகிழ்வோம்.
இப்போது அலைபேசியிலோ, பதிவுகளின் பின்னூட்டங்களிலோ மட்டுமே பேசிக்கொள்ள முடிகிறது.
நாங்கள் நேரில் சந்தித்து பல மாதங்கள் ஆகிவிட்டன.
எங்களின் நட்பினை புரிந்துகொண்டு இங்கு சுட்டிக்காட்டியுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. அதற்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.
>>>>>>
இன்றைய வலைசரத்தினை மிக அழகாகத் தொடுத்துள்ளீர்கள், ஐயா.
ReplyDeleteதங்களுக்கு என் அன்பான பாராட்டுக்கள்.
ooOoo
வெகு சிறப்பான தங்கள் பணி மிகவும் பாராட்டுக்குரியது. சிறப்பான அறிமுகங்களைத் தந்து அசத்துறிங்க.
ReplyDeleteஇன்று உங்களால் குறிப்பிடபட்டவர்கள் எல்லோரும் அருமையாக எழுதுபவர்கள். எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்களுக்கும் வாழ்த்துக்கள்.
இன்று உங்களால் குறிப்பிடபட்டவர்கள் எல்லோரும் அருமையாக எழுதுபவர்கள். எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்களுக்கும் வாழ்த்துக்கள்.
sury Siva said...
ReplyDelete*****
வாழ்தல் என்பது ... நாம்
பிறர் மனதில் வாழ்வதுதான்....!”
*****
//திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் மிகவும் அழகாக சொல்லியிருக்கிறார்கள். //
அநேக நமஸ்காரங்கள்.
மிக்க நன்றி, ஐயா.
ஜெயகுமார் எழுதி வரும் 'கணிதமேதை' நான் விரும்பிப் படிக்கும் தொடர்.
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்.
பல பதிவர்கள் எனக்கு அறிமுகம் இல்லாதவர்கள்.இனி அறிந்து கொள்கிறேன் . நன்றிகள் பல
ReplyDelete.
ReplyDeleteஇன்றைய சுட்டல்கள் அனைத்தும் பிரபல பதிவர்களின் பதிவுகளில் ஒரு சில.
அழகாய் தொகுத்தளித்தீர்கள்.
.
//”இத்தனை நாள் இருந்ததில் நீங்கள் கண்டது என்ன?” கேட்பேன். அவர்கள் சிரிப்பார்கள். சிரித்துக் கொண்டே “என்னத்தைச் சொல்றது. ஒன்னும் இல்லை” என்பார்கள். //
ReplyDeleteஎல்லாம் ‘வெங்காயம்’ தான் ...!
இப்பதிவில் என்னையும் கூட சேர்த்துக் கொண்டதற்கு என் நன்றி..
அத்தனையும் மணியான அறிமுகங்கள்.
ReplyDeleteஎல்லாப்பதிவர்களிற்கும் தங்களிங்கும் இனிய வாழ்த்து.
ஐயா இளங்கோ நேற்று மாலை தங்கள் வலைக்கு வர முயற்சித்தென் அது ஆடத்தொடங்கிவிட்டது. என்னால் வாசிக்கவே முடியவில்லை. திருமதி கோமதி பக்கம் - திருவாளர் நடனசபாபதி இவர்கள் வலைகளிற்கும் என்னால் போக முடியவில்லை. கடகடவென ஆடுகிறது. பயர் பொக்ஸ்லும் திறந்து பார்த்தேன் அதே நிலை தான். யாராவது உதவிசெய்ய முடியுமா?.
வேதா. இலங்காதிலகம்.
ஆஃபீஸ் போவது போல் கொஞ்சம்
ReplyDeleteதாமதமாக வந்து விட்டேன் போல இருக்கிறது...பிரபல பதிவர்களுடன் என்னையும் அறிமுகப் படுத்தியதால் மனதில் பிரவகிக்கும் சந்தோஷத்தை
வெளியில் காட்ட இயலாத ஒரு இன்ப அவஸ்தையுடன்,
’ஆரண்ய நிவாஸ்’ ஆர்.ராமமூர்த்தி
ReplyDeleteகோபு சாருக்கு,
நாம் பேசிப் பழகிய அந்த இனிமையான நாட்கள் மறக்க முடியாதவை...சிலபேரைப் பார்த்தவுடன் மனத்துள் சந்தோஷம் பொங்க, நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருப்போம்..’அட அதுக்குள்ள மெயின் கார்ட் கேட் வந்துடுத்தா’ என்று ஒரு ஆதங்கம் நம் இருவருள்ளும் எழும் இல்லையா கோபு சார்!
மறுமொழி >வை.கோபாலகிருஷ்ணன் said... ( 1 )
ReplyDeleteதிரு VGK அவர்களின் அன்பான வரவிற்கு நன்றி!
மறுமொழி >வை.கோபாலகிருஷ்ணன் said... ( 2 )
// ”வாழ்தல் என்பது ... நாம்
பிறர் மனதில் வாழ்வதுதான்....!” //
நல்ல மேற்கோள், மற்றும் உங்கள் நண்பர் நடத்தும் பத்திரிகையை எனக்கும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி!
மறுமொழி >வை.கோபாலகிருஷ்ணன் said... ( 3 )
//அனைத்துப் பதிவர்களுக்கும் என் அன்பான பாராட்டுக்கள், வாழ்த்துகள். //
மறுமொழி >வை.கோபாலகிருஷ்ணன் said... ( 4, 5 )
// கிறுக்கல்கள் என்ற தலைப்பில் எழுதி வரும் சகோதரி யுவராணி தமிழரசன் அவர்கள் நல்ல எழுத்தோவியங்களை தருகிறார்.//
நல்ல எழுத்தாளர்களான யுவராணி தமிழரசன் மற்றும் மஞ்சுபாஷிணி ஆகியோருக்கு உங்கள் ஆசிகள் தொடரட்டும்.
மறுமொழி >வை.கோபாலகிருஷ்ணன் said... ( 6 )
// திரு. ராமமூர்த்தி அவர்கள், என் மிகச்சிறந்த நகைச்சுவை நண்பர்களில் ஒருவர் ஆவார். இவருடன் எனக்கு நீண்டகால பழக்கம் உண்டு. மேலும் நாங்கள் ஒரே அலுவலகத்தில், ஒரே துறையில், ஆனால் வெவ்வேறு பிரிவுகளில் பணியாற்றியவர்கள்.//
//இப்போது அலைபேசியிலோ, பதிவுகளின் பின்னூட்டங்களிலோ மட்டுமே பேசிக்கொள்ள முடிகிறது.//
வலைத்தளம் உலகிலும் நீங்கள் நண்பர்களாக தொடர்வது மிக்க மகிழ்ச்சி!
மறுமொழி >வை.கோபாலகிருஷ்ணன் said... ( 7 )
// இன்றைய வலைசரத்தினை மிக அழகாகத் தொடுத்துள்ளீர்கள், ஐயா. தங்களுக்கு என் அன்பான பாராட்டுக்கள்.//
தங்கள் இதயப் பூர்வமான உற்சாகம் தரும் பாராட்டுக்களுக்கு நன்றி!
மறுமொழி > sury Siva said...( 3 )
ReplyDeleteசுப்பு தாத்தாவின் உருதுக் கவிதை மேற்கோளுக்கு நன்றி!
மறுமொழி > Sasi Kala said...
// வெகு சிறப்பான தங்கள் பணி மிகவும் பாராட்டுக்குரியது. சிறப்பான அறிமுகங்களைத் தந்து அசத்துறிங்க. //
நாம் பதிவெழுத ஆரம்பித்த சமயம் உங்களைப் போன்றவர்கள் தந்த ஊக்கம்தான் காரணம் நன்றி
மறுமொழி > கோமதி அரசு said... ( 1, 2 )
திருமதி பக்கங்கள் – வலைத்தள ஆசிரியர் கோமதி அரசுவின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
மறுமொழி > அப்பாதுரை said...
அப்பாதுரையாருக்கு நன்றி!
இன்று அறிமுகமானவர்களில் ஒரு சிலரைத் தவிர அனைவரும் அறிந்தவர்களே என்பதில் மகிழ்ச்சி.
ReplyDeleteமறுமொழி > ezhil said...
ReplyDelete// பல பதிவர்கள் எனக்கு அறிமுகம் இல்லாதவர்கள்.இனி அறிந்து கொள்கிறேன் . நன்றிகள் பல //
சகோதரி எழில் அவர்களின் நன்றிக்கு நன்றி!
மறுமொழி > NIZAMUDEEN said...
// அழகாய் தொகுத்தளித்தீர்கள். //
நன்றி அய்யா!
மறுமொழி > தருமி said...
ReplyDelete// எல்லாம் ‘வெங்காயம்’ தான் ...! //
பேராசிரியரின் பெரியார் வெங்காயத்திற்கு நன்றி! உங்கள் பதிவை ஒருநாள் தமிழ்மணத்தில் முதன் முதல் பார்த்தபோது , உங்கள் பதிவுகள் அனைத்தையும் இரவு 11 மணி வரை உட்கார்ந்து படித்து முடித்தேன். அதன் எதிரொலிதான் இந்த பதிவில் உங்களது பெயர். மீண்டும் ஒருமுறை நன்றி!
//”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
ReplyDeleteகோபு சாருக்கு,
நாம் பேசிப் பழகிய அந்த இனிமையான நாட்கள் மறக்க முடியாதவை... சிலபேரைப் பார்த்தவுடன் மனத்துள் சந்தோஷம் பொங்க, நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருப்போம்.. ’அட அதுக்குள்ள மெயின் கார்ட் கேட் வந்துடுத்தா’ என்று ஒரு ஆதங்கம் நம் இருவருள்ளும் எழும் இல்லையா கோபு சார்!//
ஆம், ஸ்வாமீ. அந்த நாளும் வந்திடாதோன்னு, [மன வருத்தங்களுடன்] பாடத்தோன்றுகிறது.
//”சிலபேரைப் பார்த்தவுடன் மனத்துள் சந்தோஷம் பொங்க”//
மிகச்சரியாகவே சொல்லியுள்ளீர்கள்.
நம்மாளு, ஸ்நேகா [பாம்புக்குட்டி], நிர்மலா [இருமலா] மூவரையும் கேட்டதாக்ச் சொல்லுங்கோ.
பாம்புக்குட்டி என்றதும் “போறாத வேளைக்கு ____ பாம்பாச்சாம்” என்ற கதைதான் ஞாபகம் வருகிறது.
உங்களுக்கு அதைச் சொல்லியுள்ளேன் என்ற ஞாபகமும் உள்ளது.
மனமகிழ்ச்சியுடன் ..... கோபு.
ReplyDeleteமறுமொழி > kovaikkavi said...
உங்கள் கம்ப்யூட்டரில் இணைப்புகள் சரியாக இறுக்கமாக இருக்கிறதா என்று பாருங்கள். அல்லது System Restore செய்து பாருங்கள். ( எனது கம்ப்யூட்டரிலிருந்து உங்கள் வலைத் தளத்தை நன்றாக பார்வையிட முடிகிறது.) பயன் இல்லை எனில் சர்வீஸ் செய்யவும்.
மறுமொழி >
ReplyDelete// ஆஃபீஸ் போவது போல் கொஞ்சம் தாமதமாக வந்து விட்டேன் போல இருக்கிறது. //
உங்கள் பதிவின் சிறபம்சமே இந்த நகைச்சுவைதான். நன்றிக்கு நன்றி!
மறுமொழி > ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
ReplyDelete// ஆஃபீஸ் போவது போல் கொஞ்சம் தாமதமாக வந்து விட்டேன் போல இருக்கிறது. //
உங்கள் பதிவின் சிறபம்சமே இந்த நகைச்சுவைதான். நன்றிக்கு நன்றி!
மறுமொழி > கோவை2தில்லி said...
ReplyDeleteசகோதரியின் வருகைக்கும் கருத்துரை சொன்னமைக்கும் நன்றி!
மறுமொழி >
ReplyDeleteஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி < > வை.கோபாலகிருஷ்ணன்
// கோபு சாருக்கு, நாம் பேசிப் பழகிய அந்த இனிமையான நாட்கள் மறக்க முடியாதவை... //
// ஆம், ஸ்வாமீ. அந்த நாளும் வந்திடாதோன்னு, [மன வருத்தங்களுடன்] பாடத்தோன்றுகிறது. //
வலைத்தளங்களின் கருத்துரைப் பெட்டிகளிலும் உங்கள் நட்பு தொடரட்டும்.
வலையுலகின் சிறந்த பதிவர்களை அறிமுகம் செய்து சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி!
ReplyDeleteஇன்றைய அருமையான சிறப்பான அறிமுகங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்...
ReplyDeleteசிறப்பான அறிமுகங்கள். சிலர் எனக்கு புதியவர்கள். அவர்களது பதிவுகளையும் இனி படிக்கிறேன்.....
ReplyDeleteமறுமொழி > s suresh said...
ReplyDeleteமறுமொழி >இராஜராஜேஸ்வரி said...
மறுமொழி >வெங்கட் நாகராஜ் said...
கருத்துரை தந்த மூவருக்கும் நன்றி!
அய்யா, வணக்கம்.
ReplyDeleteஇன்றைய வலைச் சரத்தில் எனது வலைப் பூவினையும், என்னையும் அறிமுகம் செய்தமையைக் கண்டு உள்ளம் நெகிழ்ந்தேன் அய்யா. எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்து மகிழ்கின்றேன்.
தங்களைப் போன்றவர்கள் வழங்கும் ஊக்கத்தினையும், ஆதரவினையும் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டுமே என்ற ஏக்கம் என் நெஞ்சில் எந்நாளும் இருந்து கொண்டே இருக்கும் .
கணித மேதை இராமானுஜனின் தொடரினைத் தொடர்ந்து, நூற்றாண்டு கண்ட கரந்தைத் தமிழ்ச் சங்கம் என்னும் மாபெரும் தமிழ் அமைப்பின், நூற்றாண்டு கால வரலாற்றினை எழுத வேண்டும், என்ற ஆவலில், அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் அய்யா. இத் தொடருக்கும் தங்களின் அன்பான ஆதரவினை வேண்டுகின்றேன்.
நன்றி அயயா.
மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...
ReplyDeleteவலைச்சரம் பணி காரணமாக உங்கள் வலைத்தளம் பக்கம் சில நாட்களாக வர இயலவில்லை. கரந்தை தமிழ்ச் சங்கத்தின் வரலாற்றினையும் (வாரா வாரம் என்றில்லாமல்) நேரம் கிடைக்கும் போதெல்லாம், தொடர்ந்து எழுதுங்கள்! வாழ்த்துக்கள்!
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
இரண்டு நாட்கள் கணனி பக்கம் வர முடியவில்லை.
ReplyDeleteஉங்கள் வலைச்சரப் பணிக்கு பாராட்டுகள்.
அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
சின்னு ரேஸ்ரி, ரம்யம் இரண்டையும் அறிமுகப் படுத்தியுள்ளீர்கள் மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மிக அருமையான பதிவர்களை அறிமுகப்படுத்தி இருக்கீறீர்கள்
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்
http://samaiyalattakaasam.blogspot.com/2013/02/badam-masala-milk.html
http://www.chennaiplazaik.com/2011/12/welcome-to-chennai-plaza.html
ஜலீலாகமால்
சமையல் அட்டகாசங்கள்
மறுமொழி > மாதேவி said...
ReplyDelete// இரண்டு நாட்கள் கணனி பக்கம் வர முடியவில்லை.
உங்கள் வலைச்சரப் பணிக்கு பாராட்டுகள். //
மறுமொழி > *Chennai Plaza - சென்னை ப்ளாசா* said...
// ஜலீலாகமால் சமையல் அட்டகாசங்கள் //
வலைச்சரம் வந்து கருத்துரை தந்த அன்பு பதிவர்களுக்கு நன்றி!
வணக்கம் ஐயா...
ReplyDeleteஎனது தளத்தையும் இணைத்து குறிப்பிட்டமைக்கு நன்றி....
தாமத பின்னூட்டத்திற்கு மன்னிக்க.
மறுமொழி > தமிழ்வாசி பிரகாஷ் said...
ReplyDeleteதாமதமாக வந்தாலும் தாமாகவே வந்து கருத்துரை தந்தமைக்கு நன்றி!