07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, February 5, 2013

எங்களின் முன்னோடிகள்

அனைவருக்கும் காலை வணக்கம்.

இன்று  நான் அறிமுகம் செய்யப் போகும் இருவர் மிகவும்
முக்கியமானவர்கள். எங்களது சங்க முன்னோடிகள்.

அதில் முதலாவதாக தோழர்  காஷ்யபன்  எல்.ஐ.சி ஊழியராய்,
சங்கத்தின் முன்னணி ஊழியராய், செம்மலர் பத்திரிக்கையின்
துணை ஆசிரியராய் பணியாற்றியவர். அவரது வயது 
அவரது எழுத்துக்களில் தெரியாது. பல்வேறு கடந்தகால
சம்பவங்களை இன்றைய நிலைக்கு ஏற்ப நமக்கு
நினைவுபடுத்துவதில் அவருக்கு நிகர் அவரே.  அன்றைய சதி
பற்றியும் முகமது அலி ஜின்னா       பற்றியும் அவர்
எழுதியதை அவசியம் படியுங்கள். ஐவரானோமா?     என்ற
இந்த கதையும் அருமை.

இன்னொருவர் எங்கள் சங்கத்தின் தென் மண்டலத் 
துணைத்தலைவராக இருந்து ஓய்வு பெற்ற
தோழர் தோழர் இ.எம்.ஜோசப்  சிறந்த பொருளாதார
அறிஞர். பண வீக்கம்தான் என்ன என்ற அவரது நூல்
சமீபத்தில் வெளியானது. எங்கள் சங்கத்தின் மகத்தான
தலைவர் தோழர் என்.எம்.சுந்தரம் அவர்கள் எழுதிய
நூல், தோழர் ஜோசப் அவர்களின் தமிழாக்கத்தில்
" தகர் நிலையில் சர்வ தேச நிதி மூலதனம் " என்று
வெளியானது.  ஆங்கில மொழி   பற்றிய அவரது இந்த
பதிவு மிகவும் சுவாரஸியமானது. 

நான் பெற்ற இன்பம் நீங்களும் பெற றேடியோஸ்பதி  க்கு
அவசியம் செல்லுங்கள். இங்கே ஒரு இசைப் பொக்கிஷமே
உள்ளது. மிகக் கடினமான உழைப்பால் அவர்  இசைஞானி
இளையராஜாவின் பிரபலமான பின்னணி இசைக்
கோர்வைகளை தொகுத்துள்ளார். நாடோடித் தென்றல் 
உங்களை இங்கே வருடிச் செல்லும். நாயகன் உங்களை
சிலிர்க்க வைப்பான்.

எனது ஒரு தமிழாக்கத்தை  இங்கே வழங்க ஆசைப்
படுகிறேன். எங்களது அகில இந்தியத் தலைவர் 
தோழர் அமானுல்லாகான் ப்ரண்ட்லைன்  இதழிற்கு
அளித்த பேட்டி  மிகவும் முக்கியமானது. யாருக்காக
இந்த அரசு செயல்படுகிறது என்பதை உணர
இப்பேட்டியை  அவசியம் படியுங்கள்.  

அவரது பேட்டி இன்னும் விரிவாக ஹிந்து இதழில்
வெளிவந்தது. ஆங்கிலத்தில்  இங்கே படியுங்கள்.
நாளை தமிழில் அளிக்கிறேன்.


அவகாசம் இருப்பின் மாலை சந்திப்போம்.

அதுவரை சீனாவின் பன்ஜின் கடற்கரையில்
கொஞ்சம் இளைப்பாறுங்கள்,
அதன் அழகை ரசித்தபடி







 


11 comments:

  1. பதிவுகள் மனதிற்கு குளிர்ச்சி
    படங்கள் கண்களுக்கு குளிர்ச்சி
    அருமை தொடர்ந்து குளிச்சியான பல பதிவுகள அறிமுகம் செய்ய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அழகான காட்சிகள் அறிமுகங்களும் சிறப்பு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. தேர்ந்தெடுத்த பதிவுகள். குளுமையாய் படங்கள். நல்ல தொகுப்பு.

    ReplyDelete
  4. திரு. காஷ்யபன் அவர்கள் தளம் தவிர, மற்ற அனைத்து தளங்களும் எனக்கு புதியவை... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    அழகான, குளிர்ச்சியான படங்களுக்கு நன்றி...

    ReplyDelete
  5. அழகான காட்சிகள் அறிமுகங்களும் இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  6. வணக்கம்
    S.இராமன்(அண்ணா)


    இன்று அறிமுகம் கண்ட அனைவருக்கும் எனது பாராட்டுக்கள் அத்தோடு அழகாக தொகுத்து வழங்கிய உங்களுக்கும் எனது நன்றிகள் தொடருகிறேன் பதிவுகளை

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள்!
    காஸ்யபன் ஒரு beacon.

    ReplyDelete
  8. வணக்கம்
    இராமன்(அண்ணா)

    இன்னொருவர் எங்கள் சங்கத்தின் தென் மண்டலத்
    துணைத்தலைவராக இருந்து ஓய்வு பெற்ற
    தோழர் தோழர் இ.எம்.ஜோசப் சிறந்த பொருளாதார
    அறிஞர். பண வீக்கம்தான் என்ன என்ற அவரது நூல்
    சமீபத்தில் வெளியானது. எங்கள் சங்கத்தின் மகத்தான
    தலைவர் தோழர் என்.எம்.சுந்தரம் அவர்கள் எழுதிய
    நூல், தோழர் ஜோசப் அவர்களின் தமிழாக்கத்தில்
    " தகர் நிலையில் சர்வ தேச நிதி மூலதனம் " என்று
    வெளியானது. ஆங்கில மொழி பற்றிய அவரது இந்த
    பதிவு மிகவும் சுவாரஸியமானது.


    இந்த வலைத்தளத்தைப் பார்கமுடியாமல் உள்ளது கொடுக்கப்பட்ட லிங் வேலை செய்ய வில்லை, மீண்டும் பார்கவும்,,,,


    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  9. அன்பின் நண்பர் இராமன்

    சிறப்பாகப் பகிர்ந்த இந்தத் தொகுப்பில் என் பதிவையும் இணைத்தமைக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. பலரும் எனக்கு புதியவர்கள்! பகிர்வுக்கு நன்றி! சீன கடற்கரை படங்கள் அழகு! நன்றி!

    ReplyDelete
  11. பலரும் எனக்கு புதியவர்கள் அறிமுகம் செய்தமைக்கு நன்றி

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது