07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, April 18, 2013

சுட்டது...:)

"என்னை பாத்து... என்னை பாத்து... என்னை பாத்து எப்படிடா அவன் அந்த கேள்விய கேக்கலாம்" என டைரக்டர் சாரதிமேனன் டென்சனாய் குட்டி போட்ட பூனை போல் கிழக்கும் மேற்கும் நடந்து கொண்டிருக்க
 
"சார் சார்... அப்படி என்ன கேட்டாங்க? யார் கேட்டாங்க?" என அசிஸ்டன்ட் மூர்த்தி தெற்கும் வடக்கும் நடந்தபடி கேட்டான்
 
"இல்லடா... அவன் எப்படி அப்படி கேக்கலாம்?" என மீண்டும் டைரக்டர் புதிர் போட
 
"நீங்க நல்லவரா கெட்டவரானு கேட்டுடாங்களா சார்"
 
"அப்படி கேட்டுருந்தா பரவாயில்லையே... அ ஆ இ ஈ உ ஊ'னு ரியேக்சன் காட்டி எஸ்கேப் ஆகி இருப்பனே"
 
"வேற என்ன சார் கேட்டாங்க...யாரு கேட்டாங்க?"
 
"அந்த சொட்ட மண்டையன் ப்ரொடியூசர் இருக்கானே... என்னை பாத்து... என்னை பாத்து... படத்தோட கதை என்னனு கேட்டுட்டான்யா..."
 
"ஹும்கும்... கோடி கோடியா கொட்றவன் கேக்காமயா இருப்பான்" என முணுமுணுக்க
 
"என்ன?"
 
"அ...அது... அதுக்கென்ன சொல்லிட்டா போச்சுனேன் சார்" என தெரியாமல் வாயை விட
 
"அப்ப உன்கிட்ட நெறைய கதை இருக்கும் போல இருக்கே... எடுத்து விடு பாப்போம்"
 
"இதென்னடா வம்பா போச்சு" என புலம்பியவர், திடீரென நினைவு வந்தவராய் உற்சாகமாய் "அது சார்... இப்பெல்லாம் கதை பண்றது பெரிய மேட்டரே இல்ல சார்"
 
"என்னைய்யா புதிர் போடற"
 
"சார்... வலைப்பூ பத்தி கேள்விப்பட்டு இருக்கீங்களா? அதான் சார் ப்ளாக்"
 
"ஆமா கேள்விப்பட்டு இருக்கேன். நெறய பிரபலங்கள் கூட ப்ளாக் வெச்சு இருக்கறதா கேள்வி"
 
"அதே தான் சார்... ஒரு பத்து ப்ளாக் படிச்சா பதினாறு கதை தேத்தலாம் சார்"
 
"அவ்ளோ நல்லவா எழுதறாங்க?"
 
"என்ன சார் இப்படி கேட்டுடீங்க... நம்ம அமைதிச்சாரல் அக்காவோட சிறுகதைகள படிச்சு பாருங்க, அதுலயே நெறைய கதை கிடைக்கும். ஆனா அக்கா இப்ப பெரிய ஆள் ஆகிட்டதா கேள்வி. டிவி ரேடியோனு பேட்டி குடுக்க கால்ஷீட் மேனேஜ் பண்ணவே ஒரு அசிஸ்டன்ட் போட்டு இருக்காங்களாம்"
 
"ஒ... ப்ளாக் மூலமா பிரபலமா?"
 
"என்ன இப்படி சொல்லிடீங்க, நம்ம தியாவோட பேனா பேசறத கேட்டு பாருங்க. இவங்க எழுதின கதை அமெரிக்காவின் மின்னெசோட்டா மாநிலத்தின் தமிழ் சஞ்சிகையான பனிப்பூக்கள் பதிவாகி இருக்காம்"
 
"அடேங்கப்பா கண்டம் விட்டு கண்டம் தாண்டியும் தமிழ் சேவையா... சூப்பர். உள்ளூர்ல யாரும் பப்ளிஷ் பண்ணலியா"
 
 
"ஏன் பண்ணாம? போன வாரம் கூட நம்ம நித்துஸ் கிட்சன் நித்யா பாலாஜி எழுதின 'லஞ்சம்'ங்கற கதை வாரமலர்ல வந்ததே"
 
 
"ஓஹோ... கிட்சன்ல சமையல் தானே செய்வாங்க.கதையுமா?"
 
"ஆமா சார். நீங்க நம்ம தமிழ்உதயம் பக்கத்துல போய் பாருங்க, எக்கசக்க கதைகள் இருக்கு. அப்புறம் தமிழ்ப்பிரியன்னு ஒருத்தர் ஆவிகதை சொல்றார் கேளுங்க.செமையா இருக்கு "
 
 
"ஏன்யா ராத்திரி நேரத்துல பீதிய கெளப்பற. வேற எதாச்சும் தொடர்கதை இருந்தா சொல்லேன். நம்ம கதைக்கு சரி வருமானு பாப்போம்"
 
 
"நம்ம சே.குமார் அவரோட மனசுல கலையாத கனவுகள்னு ஒரு தொடர் ஆரம்பிச்சு இருக்கார் பாருங்க, ஆரம்பமே அமர்களமா இருக்கு பாஸ்"
 
"சரி கதய மட்டும் வெச்சு இந்த காலத்தல ரீல் ஒட்ட முடியுமா? ஜோக்கு கீக்கு இருந்தா தானே பய புள்ளைக தியேட்டர் பக்கம் வருது"
 
"அது தான் இங்க கொள்ள கொள்ளையா இருக்கே. கீதமஞ்சரி புதுசா கலக்க ஆரம்பிச்சு இருக்காங்க, இன்னொருத்தர் இருக்கார் சேட்டைக்காரன்னு நகைச்சுவை எழுத்தாளர்களில் முதல் 10 எடத்துல இருப்பார்னா பாருங்களேன்"
 
"ஓஹோ...இவ்ளோ இருக்கா? ஆனா எனக்கு ஒரு சந்தேகம்"
 
"அதான் எப்பவும் வருமே"
 
"இதையெல்லாம் நாம சுட்டு போட்டா மக்கள் கண்டுபுடிச்சுட மாட்டாங்களா?"
 
 
"ஜோக் அடிக்காதீங்க சார். எடுத்த கதையே மறுபடி எடுத்தாலும் கண்ணு கொட்டாம பாக்கராங்களாமா இதென்ன பெரிய விசியம்"
 
 
"அப்ப எடுத்துடுவோம். சரி படத்துக்கு பேர் என்ன வெக்கறது?"
 
 
"பேர் தானே 'சுட்டது'னு வெயுங்க, புதுமையாவும் இருக்கும் உண்மையாவும் இருக்கும்...:)"
 

19 comments:

  1. வித்தியாசமான முறையில் அறிமுகம்.. கலக்கீட்டீங்க அப்பாவி..

    ReplyDelete
  2. வாங்கோ வாங்கோ உங்கள் வாரமா கலக்குங்கோ கலக்குங்கோ

    யாரோன்னு நினைத்து பயந்துடாதீங்கோஒ

    இப்படிக்கு
    ஜலீலாகமால்
    சமையல் அட்டகாசங்கள்

    ReplyDelete
  3. அறிமுகங்கள் யாவும் அருமை. அனைவருக்கும் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

    வலைச்சர ஆசிரியராகிய தங்களுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. ஆஹா... நாம கொங்குதமிழை கலக்கோ கலக்குன்னு கலக்கினதை கோயமுத்தூர் அம்மிணியே கலக்கல்னு பாராட்டுறாங்களே... ஒருவேளை வஞ்சப்புகழ்ச்சி அணியா இருக்குமோன்னு ஒரு நொடி தோன்றினாலும் அடுத்த நொடியே ச்சே ச்சே... அப்பாவிக்கு அதெல்லாம் தெரியாதுப்பா, அவங்க உண்மையிலே அப்பாவின்னு மனசாட்சி சொன்னதை ஏற்றுக்கிட்டு மிகவும் மகிழ்ச்சியோடு நன்றி சொல்கிறேன் புவனா. :-)

    அறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். இரண்டு மூன்று பேர் தவிர பலரும் அறியாத புதுமுகங்கள்தான் எனக்கு. நன்றி புவனா.

    ReplyDelete
  5. கலக்கலான உரையாடல் மூலம் அறிமுகம்... ஒரு தளம் புதியது.. நன்றி...

    தமிழ்உதயம் சிலருக்கு மட்டும் உதயம் என்று சொல்கிறது.... (This blog is open to invited readers only) வாழ்த்துக்கள் - அனைவருக்கும்...! தமிழ்மணம் (+1) இணைத்தாகி விட்டது...

    மேலும் அசத்த வாழ்த்துக்கள்... நன்றிகள்...

    ReplyDelete
  6. வலைச்சர தற்போதைய டைரக்டர என்னமா படம் காட்றீங்க சூப்ப று போங்க
    அறிமுகங்களுக்கு வாழ்த்துகள் அசத்தலான அறிமுகபடலத்திற்கு நன்றி மேலும் பல புது படங்களை கொடுக்க வாழ்த்துகள்

    ReplyDelete
  7. Bhuvana, thank you..didn't expect you would introduce me here..matra arimugangalukkum nandri..ellamey arumai.

    ReplyDelete
  8. வித்தியாசமான முறையில் அறிமுகம். வாழ்த்து.
    http://kovaikkavi.wordpress.com/

    ReplyDelete
  9. வித்தியாசமான முறையில் அறிமுகம். வாழ்த்து.
    http://kovaikkavi.wordpress.com/

    ReplyDelete
  10. சுவையான அறிமுகங்கள்...

    ReplyDelete
  11. ஆஹா! அருமையான அறிமுகங்கள்...

    ReplyDelete
  12. உங்க உரையாடல்கள படிக்கும்போது நீங்க அப்பாவியா என்று கேட்கத் தோன்றுகிறது, புவனா!
    என்னைப் பாத்து, என்னைப் பாத்து..ன்னு ஆரம்பிச்சிடாதீங்க! நான் எஸ்கேப்....!

    ReplyDelete
  13. அட பல தெரிந்த பதிவர்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. நகைச்சுவையூடே வலை அறிமுகம் புதுவகைக் கொண்டாட்டம் வாழ்த்துக்கள் அறிமுகம் எல்லோருக்கும் .

    ReplyDelete
  15. என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி அக்கா...

    காலையிலேயே அலுவலகத்தில் இருக்கும் போது படித்தேன்... கமெண்ட் போட முடியலை...

    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    வலைச்சரத்தில் மீண்டும் ஒரு முறை அறிமுகம்... தொடரும் அறிமுகத்துக்கு நன்றி...

    ReplyDelete
  16. அறிமுகம் செய்த விதம் வெகு அழகு! சில புதிய தளங்களும் அறியப் பெற்றேன். நன்றிங்க! அறிமுகம் பெற்ற அனைவருக்கும் என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  17. அறிமுகத்துக்கு நன்றி அப்பாவி :-))

    ReplyDelete
  18. @ To all - தாமதமான மறுமொழிக்கு மன்னிக்கவும்... கொஞ்சம் பிஸி

    @ கோவை ஆவி - நன்றிங்க ஆனந்த்

    @ Chennai Plaza - சென்னை ப்ளாசா* - தேங்க்ஸ் அக்கா... உங்கள தெரியாதா என்ன..:)

    @ வை.கோபாலகிருஷ்ணன் - நன்றிங்க

    @ கீதமஞ்சரி - ச்சே ச்சே... வஞ்ச புகழ்ச்சி எல்லாம் இல்லைங்க... அட்டகாசமா எழுதி இருக்கீங்க.. .தேங்க்ஸ்...:)

    @ திண்டுக்கல் தனபாலன் - ரெம்ப நன்றிங்க... மீண்டும் தமிழ்மணத்தில் இணைத்ததற்கு

    @ துளசி கோபால் - அப்படீனா... எவ்ளோ மார்க் டீச்சர்...:)

    @ poovizi - தேங்க்ஸ்'ங்க

    @ Nithu Bala - I was so excited to know that was you the author of the story. I'm pretty sure many others bloggers would feel the same and wanted to pass on that message. Thanks Nithu

    @ kovaikkavi - நன்றிங்க கவி

    @ தமிழ்வாசி பிரகாஷ் - நன்றிங்க பிரகாஷ்

    @ Asiya Omar - நன்றிங்க ஆசியா அக்கா

    @ Ranjani Narayanan - நம்புங்க... நான் அப்பவியே தான்...:)

    @ வெங்கட் நாகராஜ் - நன்றிங்'ண்ணா

    @ தனிமரம் - நன்றிங்க

    @ சே. குமார் - நன்றிங்க ப்ரதர்

    @ பால கணேஷ் - ரெம்ப நன்றிங்க

    @ அமைதிச்சாரல் - நோ ப்ராப்ளம் அக்கா... தேங்க்ஸ்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது