07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, September 14, 2013

ஸ்னேகமாகவும்,பூந்தூவலாகவுமாய்,,,,

வணக்கம் இன்று ஆறாவது நாளாக,,,,,,,
திரு அருணாச்செல்வம் அவர்களின் கதம்பவலையிலிருந்து,,,,,,,,
                          http://arouna-selvame.blogspot.com/ 

ஒளிர்கின்ற பொருளெல்லாம் உயர்ந்த தில்லை!   ஊர்கின்ற உயிரெல்லாம் நடப்ப தில்லை!குளிர்கின்ற காலமெல்லாம் கொடுமை இல்லை!   குவிந்திருக்கும் மலரெல்லாம் காய்ப்ப தில்லை!களிப்பென்று நினைப்பதெல்லாம் நீல்வ தில்லை!   கவிஞர்கள் காதலினை வெறுப்ப தில்லை!துளிர்க்கின்ற மரமெல்லாம் தழைப்ப தில்லை!   துயரங்கள் என்னாளும் தொடர்வதில்லை!

நான் ஏன் உயிர் வாழ்கிறேன்? (நகைச்சுவை)
  
       இலக்கித்தைப் பொறுத்தவரை யாராவது தவறு செய்து விட்டால் ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவிற்குப் பயங்கரக் கோபம் வந்துவிடும்.    “இலக்கியத்தில் தவறே இல்லை. தவறு செய்யக் கூடாதது இலக்கியம்“ என்பார்.    பெர்னார்ட் ஷா காலத்தில் ஓர் இளம் கவிஞர் இருந்தார். அவர் பெர்னார்ட் ஷாவின் தீவிர விசிறி. ஆங்கில இலக்கியத்தில் பெர்னார்ட் ஷாவைப் போல் தானும் புகழ்பெற வேண்டும் என்று அவர் விரும்பினார்.
 
இல்லை.. இல்லை... இல்லை...!!
                                                    ***************************

தேடலின் பாதையிலிருந்து,,,,,,,


                                      http://rathnapeters.blogspot.in/


அகத்தின் அழகு முகத்தில் தெரியுமா

இரவு பத்து மணிக்கு மேல் பேருந்து கிளம்பும் என்று சொல்லப்பட்டது, இரவு பயணிகள் உறங்கும்போது உபயோகிகின்ற ஐந்து வாட்ஸ் விளக்கு போடப்பட்டிருந்தது, பயணிகள் ஒருவரின் முகத்தையும் காண இயலவில்லை, பேருந்து கிளம்புவதற்கு சில நிமிடங்களே இருந்ததால் அவசரமாக அதில் அமர்ந்துகொண்டு இருக்கையில் நமக்கு அடுத்த இருக்கையில் உட்கார்ந்திருப்பவர் யார் என்பதை பார்கைகூட முடியவில்லை, இரவு பயணம் என்பதால் எல்லோரும் இருக்கையிலேயே உறங்கிய நிலையில் இருந்தனர், எனக்கு பேருந்து பயணம் முற்றிலும் புதிது, அதிலும் பேருந்தில் ஊர் பிரயாணம் நான் அறிந்திராத ஒன்று. உறக்கத்தை வருந்தி அழைத்தாலும் வருவதாக இல்லை. அங்கேயே குடியிருக்கும் கொசுக்களுக்கு உணவாக ரத்த தானம் கொடுக்கவேண்டிய கட்டாயமிருந்தது. குளிர் சாதனம் பொருத்தப்பட்டிருப்பதாக நம்மிடம் சொல்லி அதிக பணம் வசூல் செய்து விடுவதால் இயற்க்கை தருகின்ற காற்றை உள்ளே நுழைய விடாமல் சன்னல்கள் இறுக்கமாக மூடப்பட்டிருந்தன. உள்ளே சுவாசிக்கின்ற காற்றைத்தவிர வேறு காற்று புகுவதற்கு வழி இருக்குமோ என்னவோ தெரியவில்லை.

                       ****************************

டீ.என் முரளிதரன் அவர்களின் மூங்க்ல் காற்று,,,,,
                http://tnmurali.blogspot.com/
சிறிய வாழ்க்கை! பெரிய சாதனை!
  முறுக்கு மீசைக் கவிஞனின் கம்பீர முகத்தைப் பார்த்தாலே நமக்கும் வீரம் பொங்கும். அநீதியைக் கண்டு மோதி மிதித்துவிடத் தோன்றும்.அவனது நறுக்கு வரத்தைப் பாடல்கள் ஆங்கிலேயரை அச்சப்பட வைத்தன. காலத்தை வென்ற பாடல்களைப் படைத்த பாரதியின் நினைவு நாள் இன்று. உண்மையில் 12.09.1921 காலை 1.00 மணிக்கு இறந்தார் என்று ஒரு குறிப்பு கானபடுகிறது. அனால். பாரதியின் மறைவு 11.09.1921 என்றே பல நூல்களில் கூறப்பட்டுள்ளது.தனது  பாடல் மூலம் தேசபக்தியை தட்டி எழுப்பிய பாரதி குறுகிய காலமே உயிர் வாழ்ந்தபோதிலும் மகாகவியாக இன்றும் நம் நெஞ்சில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.   இந்தியாவின் முதல் திரைப்படம் வருவதற்கு முன்பே மறைந்து போன பாரதியின் பாடல்கள் இன்றும் திரைப்படங்களில் இடம் பெறுகின்றன.இந்தக்  காலத்துக்கும் பொருந்தும் வண்ணம் அவரது பாடல்கள் அமைந்துள்ளது சிறப்பு.   எழுதப்பட்ட பாடல்களுக்கு திரைப்படங்களில் இசை அமைப்பாளர்களால் அதிகமாக மெட்டமைக்கப்பட்டது பாரதியின் பாடல்களாகத் தான் இருக்கும்.. எம்.எஸ்.வி. க்கு முந்தைய காலத்து இசை அமைப்பாளர்கள் முதல் இன்றைய ரகுமான் வரை பாரதி பாடல் எழுதாத இசை அமைப்பாளரைக் காண்பது அரிது.இதோ  அவரது சுருக்கமான வாழ்க்கைக் குறிப்பு 1882- டிசம்பர் 11 பாரதி பிறந்தார். தாயார் லட்சுமி அம்மாள். தந்தை      சின்னசாமிஅவர்கள் பாரதிக்கு இட்ட பெயர் சுப்பையா1887- பாரதியின் தாயார் மரணம்- பாரதிக்கு வயது ஐந்து 1889- தந்தையார் மறுமணம் 1893-  எட்டயபுரம் சமஸ்தானப் புலவர்கள் பாலகன்  சுப்பையாவை       சோதித்து  வியந்து பாரதி என்ற பட்டம் அளிக்கின்றனர்.
                                                            ************************************
ஆம்னி பஸ்ஸிலிருந்து,,,,,,,,,
                                          http://omnibus.sasariri.com/

தற்செயல்களின் ரசவாதம்

முற்றலும் புதிய ஒரு பாதையில், பார்த்துப் பழகியிராத மனிதர்களுடன் பேருந்தில் பயணிக்கும்போது, திடீர் என்று இந்த இடத்தையும் இந்த மனிதர்களையும் நாம் 
இதற்கு முன் பார்த்த மாதிரியும் பழகிய மாதிரியும் உங்களில் எவருக்கேனும் தோன்றியிருக்கிறதா? அது மட்டுமல்லாமல் இன்ன இடத்தில் ஒரு வேகத்தடையோ 
பள்ளமோ இருந்து, முன்பு எப்போதோ கடைசி சீட்டில் அமர்ந்திருக்கும்போது 
எகிறியடித்து புடறி வலித்த அனுபவம் நினைவுக்கு வந்து, சுதாரிப்புடன் அமரும்
 அந்தக் கணத்தில் உண்மையிலேயே அங்கு ஒரு வேகத்தடை வந்தால் மனம் 
கொள்ளும் பரபரப்பு இருக்கிறதல்லவா- . யுவனின் சிறுகதைகளை வாசித்த 
அனுபவத்தை இப்படித்தான் விளங்கிக்கொள்ள முடியும். யுவனின் கவிதைகள்
 மீது கொஞ்சம் அறிமுகம் உண்டு என்றாலும் அவருடைய  சிறுகதைகளை
 வாசிப்பது இதுவே முதல்முறை. உண்மையில் அபாரமான 
வாசிப்பனுபத்தை அளித்தது.
 

பயங்கரவாதம் : நேற்று இன்று நாளை - பி. ராமன்

புதிதாக வெளிவந்திருக்கும் கிழக்கு பதிப்பக வெளியீடு `பயங்கரவாதம்: நேற்று இன்று நாளை` புத்தகத்தின் முன்னுரையை இணையத்தில் முதல்முறையாக வெளியிடுவதில் ஆம்னிபஸ் பெருமை கொள்கிறது. உடனுக்குடன் அனுப்பிவைக்கும் கிழக்கு பதிப்பக நண்பர்களுக்கு மிக்க நன்றி.
இன்றைய உலகில், தொடர்ந்து வளர்ந்து வரும் பெரிய அச்சுறுத்தலாகப் பயங்கரவாதம் உள்ளது. கைகளால்பயன்படுத்தப்படக் கூடிய ஒற்றைப் பரிமாண அபாய ஆயுதங்களில் தொடங்கி, சட்ட  ரோத வெடி பொருட்கள்,மனித வெடிகுண்டுகள், கண்ணி வெடிகள், நாசத்தைத் தூண்டும் கரு களாக செல்போன்கள்,  மானக் கடத்தல்,இணையதளம் வாயிலான தாக்குதல் எனப் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டதாக இன்றுஉருவெடுத்துள்ளது.
இன்றைய பயங்கரவாதம், நேற்றைய பயங்கரவாதத்திலிருந்து வேறு-பட்டிருக்கிறது. நாளைய பயங்கரவாதம்,இன்றைய பயங்கரவாதத்-திலிருந்து பெரிதும் மாறுபட்டிருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

                                            *************************************************

கவிதாயினி தாமரை அவர்களின் வளைத்தளத்திலிருந்து,,,,,,,,

                    http://kavithayini-thamarai.blogspot.in/


                                                        

முடிந்தால் அவளையும் மகளே என்று விளி.


குறைந்தது நூறு முறை
என் கடிதம்
சுமந்து போனது
கண்ணீரையும்,
கடந்தகாலத்தையும்,
வந்துஅழைத்துப் போங்களையும்...
திடீரென்று எனக்குள் ஒரு கதவு
அறைந்து திறந்தது
என் அறைக்கதவு
திறந்தது போலவே...
அறை தோழியாய்
வந்தவள்
என்னைவிடச் சின்னவள்
அகதிகள் ஒதுக்கீட்டில்
இடம் கிடைத்திருக்கிறது
யாழ்ப்பாணத்துக்காரியாம்!
இறுக்கி மூடிய உதட்டுக்குள்ளிருந்து
கள்ளிப்பால் போல் ஒவ்வொன்றாய்
சொட்டிய கதைகள்...
என் நேற்றைய கடிதம் கண்டு
அம்மா வியந்திருக்க வேண்டும்
"அம்மா நான் மிக நலம்
அடிக்கடி வர வேண்டாம்
அழுவதை நான் நிறுத்தி விட்டேன்
அடுத்த முறை அங்கே
வரும்போது
ஒரு சினேகிதியை
அழைத்து வருவேன்...
முடிந்தால் அவளையும்
மகளே என்று விளி..."


புத்தர் சிரித்தார்


ஆக்சிஜன் மேலிருந்த
அன்பு குறைந்துபோய்
இப்போதெல்லாம்
ஹைட்ரஜனோடு
ஐக்கியமாகி விட்டோம்
புத்தர் சிரித்தார் என்று
நாமும் சிரித்து வைத்தோம்
அணுக்குண்டுகளைக்
கக்கத்தில் இடுக்கிக் கொண்டு
மனித நேயத்தை
ஏவு கணையில்
ஏற்றி அனுப்பி விட்டார்களே
என்ற உதைப்பின் ஊடாக..

                               <<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

பாலா அவர்களின் பாலாவின் பக்கங்களிலிருந்து,,,,,,

                                    http://balapakkangal.blogspot.com/


கல்வித் தந்தையின் டைரி பாகம் - 1



செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். 

வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் மொக்கையாகவே எழுதிக் கொண்டிருப்பது? இந்த முறை உண்மையிலேயே கொஞ்சம் சீரியஸான விஷயம் எழுதப் போகிறேன். இது ஒன்றிரண்டு கட்டுரையோடோ, அல்லது அதற்கு மேலாகவோ தொடரலாம். நான் கண்ட கேட்ட சில தகவல்களை வைத்து இந்த கட்டுரையை எழுத முடிவு செய்து இருக்கிறேன். இதில் பகிரப்படும் சில தகவல்கள் உங்களை திடுக்கிட செய்யலாம். என் நோக்கம் குறிப்பிட்டு யாரையும் தாக்குவதோ, இழிவு படுத்துவதோ அல்ல. தங்கள் குழந்தை இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து, பெயருக்கு பின்னால் பிஇ என்ற இரண்டு எழுத்துக்கள் போட்டுக்கொண்டாலே அவர்கள் வாழ்க்கை உருப்பட்டுவிடும் என்று குருட்டுத்தனமாக நம்பிக்கொண்டிருக்கும் லட்சக்கணக்கான பெற்றோர்களில் ஒரே ஒருவருக்கு கூட இந்த கட்டுரை விழிப்புணர்வை ஏற்படுத்துமானால், அதுவே எனக்கு போதும்.

                                                ***********************************************

திருவேல்முருகன் அவர்களின் நெடுஞ்சாலையிலிருந்து,,,,

                                              http://vel63.blogspot.in/

விருட்சத்திருவிழா மதுரை [ 25 வது பசுமைநடை விழா] பகுதி2


25 வது பசுமைநடையின் கொண்டாட்டம் அதன் பெயர் ”விருட்சத்திருவிழாசெங்கதிரவன் இன்னும் வானில் எழும் முன்
         பசுமைநடை ஒருங்கினைப்பாளர்கள் சமணர்மலை அடிவாரத்தில்          கூடிவிட்டனர்.  முன் தினம்    இரவு அரங்கவேலைகள் 
 விழாவுக்கு வரும் வாகனங்கள்  நிறுத்தம் இடம் பற்றி அறிவிப்பு அட்டைகளை 
கட்டி கொண்டு இருக்கும் போதே பசுமைநடை ஆர்வலர்கள் வர ஆரம்பித்து
விட்டனர். காலை 7.30 மணிக்குள்  300 பேருக்கும் மேல் கூடிவிட்டனர்
காலை 9 மணிக்குள் சமணர்மலை அடிவாரம் நோக்கி கார்கள், 
இருசக்கரவாகனங்கள், ஆட்டோ என மக்கள் வந்து இறங்கிகொண்டே
 இருந்தனர். கார்களை, பைக்குகளை பார்க்கிங் பகுதியில் அவர்களாகவே
 நிறுத்தியது மகிழ்ச்சியை அளித்தது.
முடிந்து இருந்தாலும், பசுமைநடை பேனரை விழா மேடை முன் கட்டும் பணிகளும்,


   காலை 7.30 மணிக்கு வருகை தந்தவர்களின் முகவரி, தொலைபேசி
 விபரங்களை பாரங்கள் தந்து நிரப்பும்பணி தொடங்கிவிட்டது, தீபா நாகராணி அவர்கள் தலைமையில் கல்லூரிமாணவிகள் குழு அந்த பணியை சிறப்பாக செய்தனர், பாரம் பூர்த்திசெய்தவர்களுக்கு அவர் அவர் பெயர் எழுதி விருட்சத்திருவிழா பேட்ஜ் வழங்கப்பட்டது, குழந்தைகளுக்கு என தனிபதிவு அவர்களுக்கும் விழா பேட்ஜ் என கலந்துகொண்டவர்கள் எல்லோர் நெஞ்சிலும் விருட்சத்திருவிழா பேட்ஜ்.,,,,,,,,
                                                                                  
                                                                        வாழ்த்துக்கள் அனைவருக்குமாய்

                                                                                         விமலன்,,,,,,





32 comments:

  1. அறிமுகங்கள் அருமை ஐயா. தொடருங்கள்.
    கல்வித் தந்தை டைரி படிக்கதற்காகக் காத்திருக்கின்றேன் நன்றி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,நன்றி வருகைக்கு/

      Delete
    2. வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,நன்றி வருகைக்கு/

      Delete
  2. கவிதாயினி தாமரை அவர்களின் வலைத்தளம் புதிது... அறிமுகத்திற்கு நன்றி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்... கிராபிக்ஸ் படங்கள் அசத்தல்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,நன்றி வருகைக்கு/

      Delete
    2. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,நன்றி வருகைக்கு/

      Delete
  3. புதிய தளங்களின் அறிமுகத்திற்கு நன்றி!.. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் துரை செல்வராஜ் சார்,நன்றி வருகைக்கு/

      Delete
    2. வணக்கம் துரை செல்வராஜ் சார்,நன்றி வருகைக்கு/

      Delete
  4. நல்ல அறிமுகங்கள்.... தொடரட்டும் உங்கள் சிறப்பான ஆசிரியர் பணி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ் சார்,நன்றி வருகைக்கு/

      Delete
    2. வணக்கம் வெங்கட் நாகராஜ் சார்,நன்றி வருகைக்கு/

      Delete
  5. அருமையான அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஜலீலா கமல் சார்,நன்றி வருகைக்கு/

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  6. பல புதிய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தனிமரம் சார்,நன்றி வருகைக்கு/

      Delete
    2. வணக்கம் தனிமரம் சார்,நன்றி வருகைக்கு/

      Delete
  7. சுவையான தகவல்கள் தரும் பதிவுகளின்
    அறிமுகங்கள்- நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் கலையன்பன் சார்,நன்றி வருகைக்கு/

      Delete
    2. வணக்கம் கலையன்பன் சார்,நன்றி வருகைக்கு/

      Delete
  8. விமலன் அறிமுகம் அறியாததை அறியவைக்கும்
    அவர் வலைதளத்தில் பதியும் பதிவுகளின் வேகம் மலைக்க வைக்கும்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வேல்முருகன் சார்,நன்றி வருகைக்கு

      Delete
    2. வணக்கம் வேல்முருகன் சார்,நன்றி வருகைக்கு

      Delete
  9. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சே குமார் சார்,நன்றி வருகைக்கு/

      Delete
  10. வணக்கம்

    வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கு எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ரூபன் சார்,நன்றி வருகைக்கு/

      Delete
  11. எனது வலைப பக்கத்தையும் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி விமலன் சார்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் டீஎன் முரளிதரன் சார்,நன்றி வருகைக்கு/

      Delete
  12. திரு அருணாச்செல்வம்...போன்று நிறைய கவிதைப் பக்கங்களை அறிமுகம் செய்துள்ளீர்கள்.......இலக்கியத்தில் தங்களுக்குள்ள பற்று அளவிடமுடியாதது என்பதின் வெளிப்பாடு.....நன்றி

    ReplyDelete
  13. வணக்கம் பரிதிமுத்தரசன் சார்,நன்றி வருகைக்கு/

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது