07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, September 10, 2013

ஸ்னேகமாயும்,பூந்தூவலாயுமாய்/

இன்று  இரண்டாவது நாளாக,,,,,,,,,,,,

                                           http://karanthaijayakumar.blogspot.com/


கரந்தை ஜெயகுமார்,

இவரது வலைத்தளத்தின் சிறப்பை எடுத்துச்சொல்வதே இவரது தனித்துவம் மிக்க அழுத்தமான எழுத்துக்களே/இவரது எழுத்து போகிற போக்கில் சொல்லிச்செல்கிறது  கணித மேதை ராமானுஜம் அவர்கள் பற்றி,அவர் பணியாற்றும் பள்ளி பற்றி என அழுத்தம் நிறைந்த விஷயங்கள் பலவற்றை பகிர்ந்து செல்கிற இவரது வலைத்தளத்தின் சிறப்பான பதிவாக டாகடர் ராதா கிருஷ்ணன் அவர்கள் பற்றியும் வ.உ.சி அவர்கள் பற்றியுமாய் அவர்கள் பகிந்து கொண்ட பதிவே.
பதிவின் தலைப்பு தியாகம் போற்றுவோம்,கல்வி போற்றுவோம்  என்பதே. ராதாகிருஷ்ணன் அவர்கலை மாணவர்கள் தோளில் தூக்கி சுமந்து செல்வதும்,அவரது க்குதிரை வண்டியில் குதிரைகலை கழட்டி விட்டு விட்டு மாணவர்களே குதிரைகளாக மாறி வண்டியை இழுத்துச்செலவது அவர் சொல்லியுள்ள காட்சி நெக்குருகிப்போகச்செய்கிறதாயும் புல்லரிக்க வைப்பதாயும்/வாருங்கள் அவரது வலைத்தலம் பக்கம் செல்வோம்.

                                                      ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

                                    http://veesuthendral.blogspot.in/2013/09/blog-post_6.html
                                                 

சசிகலா அவர்கள்,,,,

பெரும்பாலுமாய் கவிதை சுமந்து செல்கிற இவரது தளம் பிரிவு பற்றியும் ஆற்றாமைபற்றியும் ,மனித உறவுகளின் அழுத்தம் பற்றியுமாய் பேசிச்செல்கிறது.அழுத்தமாகவும் அதே நேரம் மனம் கவ்வுகிற விதமாயும்/சமீபத்திய அவரது கவிதை மிகவும் பிடித்ததாய் இதோ கவிதை

 இரவின் மடியில் !


இரவின் மடியில்
கவிழ்ந்து கிடக்கிறதென்
கவிதை..
இமைகளை மூடவிடாது
வெளிச்ச பொத்தானையும்
ஏற்ற பயந்து..
எம்பித் தவிக்கும் வார்த்தைகள்
இப்படியும் அப்படியுமாக 
எனை புரட்டிப்போட்ட படி.
காலை வரை உயிர்பித்திருக்குமோ ?
கனவில் வந்ததாய் கலையக்கூடுமோ ?
இல்லை...
பிரசவக்காரியின் சூட்டு வலியாய்
எழுதுமுன் மறையக் கூடுமோ ?
தீடிரென...
விரல் வழி மைகசிந்து
விடியலுக்கோர் சாசனம் 
எழுதிட துடித்தபடியே 
தூங்கிப்போகிறேன்.

                                               ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

                                            http://www.agsivakumar.com/



சிவக்குமார் அவர்களின் நண்பேண்டா,,,,,,,

வாழிவியலின் மறுபதிப்பாயும்,இன்னுமொருமுகமாயும் இருக்கிற சினிமாவைப்பற்றி சொல்லிச்செல்கிறது இவரது வலைத்தளம்,அதில் பிடித்த விமர்சனமாய் ,,,,,,,,,,,

'சம்மருக்கு சிவகார்த்திகேயன் படம் வந்தாச்சிங்க. கதைய பத்தி கண்டுக்காம கெக்கே பிக்கேன்னு சிரிச்சிட்டு போங்க' என்றல்லாமல் கதையுடன் கலந்த நகைச்சுவை,இளைஞர்களை வசீகரிக்கும் பாடல்கள்,முக்கிய கதாபாத்திரங்களின் இயல்பான நடிப்பு என சரியான பேக்கேஜ் தந்திருக்கும் எதிர்நீச்சல் அணிக்கு வெள்ளிப்பதக்கம் தரலாம்.


                                                   ++++++++++++++++++++++++
                                                     http://skaamaraj.blogspot.in/

திருகாமராஜ் அவர்களின் அடர் கருப்பு,,,,,

இவரது வலைத்தலம் பேசிச்செல்லாத விஷயங்கள் இல்லை எனலாம்.அரசியல்,சினிமா,வாழ்வியல்,நடப்பு,இன்னும்,இன்னுமுமான நிறையவற்றை சுமந்து சூழ்கொண்டு காட்சிப்படுகிற இவரது வலைத்தளம் அனைவரும் பார்க்கப்படவேண்டியதும் பேசப்படவேண்டிய ஒன்றாகவும் இருக்கிறது, அவரது சமீபத்திய படைப்பில் ஒன்றாய்,,,,,,

தீவிரமாகும் தனிமையின் இசை.


நெடுநாட்களாகவே,புத்தகம்,இசை,சினிமா,தொலைக்காட்சி எனத்தொலைந்து கொண்டிருக்கிறது பொழுதுகள்.அம்மா வந்தாள் வாங்கி ரெண்டாவது தரம் வாசிக்க, புதிதாக தெரிகிறார் திஜா.ஊரெல்லாம் உன்பாட்டுத்தான் பாடலை பாடுகிற ஜேசுதாஸ் மிக நெருங்கி வந்து உட்கார்ந்து கொள்கிறார்.பின்னே ஆயிரம் தடவைகளுக்குமேலே கேட்டாகிவிட்டது.அதற்குவரும் ஊடிசை நெடுநாட்கள் பழகிய நண்பனின் வார்த்தைகளாக உருமாறுகிறது. கேணிக்
கரை வீதியில் இருக்கும் அந்த மேன்சனுக்கு அருகில் ஒருகுடும்பம் வடை போட்டு விற்றுக்கொண்டிருக்கும்.அவர்கள் அதிகாலை நான்குமணிக்கு எழுந்து பாத்திரங்களை உருட்டும் சத்தம் மறைந்துபோன தகப்பனாரை யாவகப்படுத்தும்.அந்த நேரத்துக்கு சரியாக ஒரு தெருப்பசுமாடு வந்து மாவு பிசைந்த தேக்சாவை தனது நாக்கால் வரக்,வரக்கென்று சுரண்டித்தின்கிற சத்தம் தினபடிக்கான சுப்ரபாதமாகும்.பிறகுதான் அந்த ஆக்காட்டிக்குருவியின் கிர்ரிக் சத்தம் கேட்கும்.

சின்னச்சின்ன அசைவுகளையும்,காய்கறி மார்க்கெட்டுக்கு அருகில் குவியும் குப்பைகளையும் அதனைதத் வறாமல் வந்து இல்லாமல் ஆக்கி விட்டுப் போகும் நகராட்சி சேவகர்களையும் ஊர்ந்து கவனிக்கும்படியாக்கிவிடுகிறது இந்த தனிமை. மார்க்கெட்டில் இருக்கும் சேகரண்ணன் கடை இனிப்பு போண்டாவும், அங்குவந்து அமர்ந்து ரெண்டு போண்டா சாப்பிட்டுவிட்டு பசியாறிப்போகும் காய்கறிவிற்கிற கிராமத்து பெண்களும் பரிமாறிக்கொள் ளாத தோழமையை கொடுத்துவிட்டுப்போகிறார்கள்.

வரும் வழியில் அதிகாலை வேளை அடர்த்தியாய் பவுடர் அப்பிக்கொண்டு கிழிந்த சேலையால் முக்காடுபோட்டுக்கொண்டு வடநாட்டுப் பாஷையில் பிச்சைகேட்கிற வயதான பெண்மணியை ஊகிக்கமுடிகிறது.அவரது கம்புக் கூட்டில் அன்றைய நாளிதழ் இருப்பதைக்கவனிக்க முடிகிறது.ஆனால் வியாழக்கிழமை தவறாமல் ஒருபெட்டிக்கடையில் ஆனந்தவிகடன் வாங்கப் போகிற போது அந்த வடநாட்டுப்பெண் காசு கொடுத்து தமிழ் நாழிதழ் வாங்கியது எதற்காக.இந்தக் கேள்வி இதுவரை பார்த்த, படித்த, கேட்ட  திகில் கதைகளின் விடைகளையெல்லாம் தாண்டி தொக்கி நிற்கிறது.

தினம் கடந்து போகும் அரண்மனை வீதியில் தான் அரசியல் கூட்டங்கள் நடக்கும்.அதனருகில் தான் எதையும் அலட்சியப் படுத்தியபடி காய்கறிகளை கடைவிரித்து உட்கார்ந்திருக்கிற பெண்களிருப்பார்கள். அதற்கருகில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு முன்னாடி எந்த நேரமும் அரைப்போதையில் உட்கார்ந்து கொண்டு போவோர் வருவபவரை அளந்து கொண்டிருப்பவர்
என்ன வேலை செய்வார் அவர் குடும்பம் எங்கிருக்கும் என்கிற கேள்வியும் கூட விடைதராமல் கிடக்கிறது.

போன செவ்வாய்கிழமை தலைமைத்தபால் நிலையத்துக்கு  முன்னாடி மேடை போட்டு பெரிய பெரிய ஒலிபெருக்கிப் பெட்டி வைத்து பாட்டுப் போட்டுக்கொண்டிருந்தார்கள்.நாளை உலகை ஆளவேண்டும் உழைக்கும் கரங்களே பாட்டு.ஜேசுதாஸ், மெல்லிசை மன்னர்,கவிஞர்முத்துலிங்கம்( சரியா தெரியவில்லை) மூவரும் சேர்ந்து அந்தப்பகுதி முழுவதையும் வசியப்படுத்திக்கொண்டிருந்தார்கள். கொஞ்சம் நின்று வரிகளையும் இசையையும் கேட்டால் நாளைக்காலையிலேயே இந்த தேசம் முழுக்க பாட்டாளி மக்கள் கைக்க்கு வந்துவிடும் போன்ற குதியாட்டம் உருவாகும்.

அப்புறம் நேரம் ஆக ஆக வங்கி இருக்கும் வீதிமுழுவதும் விலையுயர்ந்த கார்கள் கட்சிக்கொடிகட்டிக்கொண்டு வந்து தெருவை நிறைத்தன.ஏதாவது பிறந்த நாள், நூறாவது நாள் கொண்டாட்டமாக இருக்கலாம் என்று நினைத்து வேலைக்குள் முங்கிப்போனது தேரம். ஒரு பத்தரை மணிக்கெல்லாம் ’விற்காதே விற்காதே என் எல் சி பங்குகளை விற்காதே’ என்ற கோஷம் கேட்டது. இப்படியான கோஷங்கள் இடதுசாரித்தொழிற்சங்கக்கங்களின் கூட்டங்களில்,அதன் ஏனைய அமைப்புகளின் ஆர்ப்பாட்டங்களில் மட்டும் தான் கேட்கமுடியும்.ஆடிப்போனேன் ஒருவேளை ஆளும் கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிக்காரர்கள் புகுந்துவிட்டார்களா என்று பதை பதைத்துப் போனேன். பிறகுதான் தெரிந்தது என் எல் சி பங்குகளை தனியாருக்கு விற்கக்கூடது என்று ஆளும் அண்ணா திமுக நடத்துகிற போராட்டம் என்று.ஓடம் ஒருநாள் வண்டியில் வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்
எனும் சொல் எவ்வளவு சத்தியமானது.

தனது தேர்ந்த திரக்கதைகளாலும்,செய்நேர்த்தி மிக்க பொதுவுடமைப் பாடல் களா லும் தமிழகத்து உழைக்கும் மக்களை மயக்கி வைத்திருந்த எம்ஜியாரின் உத்தி இனிமேல் செல்லுபடியாகாது. சனம் சினிமாவை விரட்டிவிட்டு சீரியல் களை கட்டிப்பிடித்து அழுதுகொண்டிருக்கிறது. அவர்களின் பக்கம் தான் இருக் கிறேன் என்று திசை திருப்ப இதுபோன்ற ஆர்ப்பாட்ட உத்திகளையும் ஒரு ஆளும் கட்சி கையாள வேண்டியது, இந்த முதலாளித்துவ ஜனநாயகத்தில் புதியது. 

                                     
                                                  ==============================
                                                     http://nigalkalam.blogspot.in/


நிகழ்காலம் எழில் அவர்கள்,

படித்ததும் மனதில் வந்து பசைபோட்டு ஒட்டிக்கொள்கிற அவரது எழுத்து மனித மனங்களின் விசாலம்பற்றியும் அவர்களது நடப்பு பற்றியுமாய் சொல்லிச்செல்கிறது.சமீபத்தில் அவர் படித்த சாகித்திய அகடாமி பரிசு வாங்கிய தூப்புக்காரி  நாவலிலிருந்து அவரை பாதித்தவரிகளை சொல்கிறார்.

வாயுள்ள பிள்ளை பிழைக்கும் கரையிற பிள்ளைக்குத்தான் பாலுன்னு சும்மாவா சொல்லி வச்சிருக்காங்க... நம்ப மேல காலங்காலமா திணிச்சி வச்ச சுமைய நம்ம கடமைன்னு காலாகாலமா நாமும் செஞ்சிட்டுஇருக்கோம். இது இந்த சாதிக்குன்னு ஒதுக்கி வெச்சிருக்கறது.  நம்மளும்  சரியின்னு ஒத்துக்கிட்டு செஞ்சிட்டு இருக்கோம். ஏன் நம்ம சாதிக்கு படிச்சப்பிடாதா? நம்ம சனங்க பெரிய உத்யோகம் பாக்கப் பிடாதா? நாம் வேற சோலியே செய்யப்பிடாதா? இந்த சாக்கடையை விட்டு விலகி வேறு யாராவது வரட்டும்னு ஒதுங்கி இருந்தா நம்பள கொண்ணா போடுவானுவ...? என்னத்தை எல்லாமோ கண்டுப்பிடிக்கறானுங்க இல்லியா அழுக்கு வாரண்ணு ஒரு மிசினையும் கண்டுபிடிக்கட்டும் நம்மளும் மதிப்பும் மரியாதையோடும் வாழ ஆசப்படணும்

விருப்பம் இல்லாதவக்கூட அன்பைப் போய் எப்படி வற்புறுத்தமுடியும்.மனுசனோட ஒரு பகுதிதான் காதல். இந்த ஒரு பகுதிதான் வாழ்க்கையின் எல்லாமும்ணு சொல்ல முடியாது.ஆனா அந்த ஒரு பகுதியும் நல்லா இருந்தா தான் மத்த எல்லா பக்கமும் நல்லா இருக்கும்

 என் அம்மைக்கி இம்புடு நாளும் நாத்தமும் அழுக்கும்தான் ஆகாரமா? விரும்பாம நேசிக்காம இந்த அழுக்குகளை கழுவ என்னால முடியாது. இந்த அழுக்குகளையெல்லாம் நேசிச்சாதான் என் வாழ்க்கைக்கி சோறு கிடைக்கும் இந்த பீயோட அதோட நாத்தத்தை , கெட்டி நிக்கிய மோளு வெள்ளத்தை அதுமேல வந்து விழற ஈச்சி, கொசு எல்லாத்தையும் நான் விரும்பணுமே?

கவிதைகள் கூட அவருக்கு நன்கு கை வருகிறது....

வாழ்க்கையெனும் பயணத்தில்
சரிந்து விழும் போது
தனியே தடுக்கி விழும் போது
சாய்ந்து கொள்ள
ஒரு துளி காதல் தேவை.

நான்கு சுவற்றுக்குள்
அன்பெனும் செயலுக்காய் 
ஆடையிழந்தபோது
அவமானமாய்த் தெரியவில்லை
இப்போது தான் 
உடம்பில் ஒட்டுத்துணியின்றி 
இருப்பதைப் போல் துடிக்கின்றேன்
அவமானப்படுகிறேன்.
                                     
                                                        *****************************


                                                                                வாழ்த்துக்கள் அனைவருக்குமாய்/

                                                                                                         விமலன்



33 comments:

  1. சிறந்த தளம் அறிமுகம்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திண்டுக்கல் தனபாலன் சார் வருகைக்கு/

      Delete
  2. கரந்தை ஜெயகுமார் அவர்க்ளுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோமதி அரசு சார் வருகைக்கு/

      Delete
  3. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    நான்கும் சிறப்பான தளங்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெற்றிவேல் சார் வருகைக்கு/

      Delete
  4. அனைவருக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துகள். தங்களுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வை.கோபாலகிருஷ்ணன் சார் வருகைக்கு/

      Delete
  5. உங்கள் முயற்சி வெல்லவும் சிறந்த தளங்கள் மேலும் அறிமுகமாகவும்
    என் இனிய வாழ்த்துக்கள் சகோ !

    ReplyDelete
    Replies
    1. நன்றி அம்பாள் அடியாள் மேடம் தங்கள் வருகைக்கு/

      Delete
  6. சகோ!..இன்றைய உங்கள் அறிமுகத்தில் அருமையான பதிவர் தளங்கள்!

    உங்களுக்கும் அறிமுகப் பதிவர்களுக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி இளமதி அவர்களே வருகைக்கு/

      Delete
  7. தென்றலின் அறிமுகம் கண்டு மகிழ்ந்தேன். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிங்க. இந்த வாரம் அசத்தல் வாரமாக வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சசிகலா அவர்களே வருகைக்கு/

      Delete
  8. அறிமுகம் செய்யப்பட்ட வலைத்தளங்கள் அருமை!.. அருமை!..அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!.. வாழ்க.. வளர்க!..

    ReplyDelete
    Replies
    1. நன்றி துரை செல்வராஜ் சார் வருகைக்கு/

      Delete
  9. வணக்கம்
    விமலன்(அண்ணா)

    இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் அனைத்தும் சிறந்த தளங்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரூபன் சார்.வருகைக்கு/

      Delete
  10. உங்களுக்கும் அறிமுகப் பதிவர்களுக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனிமரம் சார்.வருகைக்கு/

      Delete
  11. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
    தொடருங்கள்... தொடர்கிறோம்...

    ReplyDelete
  12. நன்றி சேகுமார் சார் தங்களின் வருகைக்கு/தங்களது வலைத்தளமுகவரியை
    தரலாமா?

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. மனம் மகிழ்ச்சிக் கடலில் மிதக்கின்றது ஐயா. இந்த எளியேனையும் அறிமுகப்படுத்தியமைக்கு நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்து மகிழ்கின்றேன் ஐயா. நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி கரந்தை ஜெயக்குமார் சார்,நன்றி தங்களது வருகைக்கு.

      Delete
  15. சிறப்பான தளங்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. வணக்கம் மாதேவி அவர்களே.நன்றி வருகைக்கு/

      Delete
  16. அறிமுகம் செய்யப்பட்ட பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. என்னுடைய தளத்தையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் எழில் மேடம்.நன்றி தங்களது வருகைக்கு/

      Delete
  18. வணக்கம் முனைவர் ரா,குணசீலன் சார்.நன்றி தங்களது வருகைக்கு/

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது