07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, September 11, 2013

ஸ்னேகமாயும்,பூந்தூவலாயுமாய்,,,,,,,

இன்று முன்றாவது நாளாக ........

                                                      http://iravinpunnagai.blogspot.com/.

இரவின் புன்னகை இவரது வலைத்தளத்தின் பெயர்,வெற்றி வேல் காளயார் குறிச்சி என பெயரிட்டே இவரது படைப்புகள் காணப்படுகிறது,காதல் மனம் கட்டிப்போடும்,விகசிக்கச்செய்யும் எனலாம்.இப்படியெல்லாமா நெக்குருகிப்போகச்செய்யும் என ஆச்சரிப்படவைக்கிறார்.இதில் குறிப்பிடப்படவேண்டியதாய் அவரது வலைத்தளவடிவமைப்பு இருக்கிறது.இதோ அவரது எழுத்துக்களிலிருந்து,,,,,,,,,,,

உதிரும் நான் -20

அவள் கோவிலுக்குச் 
செல்லும்போது மட்டுமே
நிகழும் அதிசயம் அது!

நவகிரகச் சிற்பங்களும்
உயிர்பெற்று- அவளைச் சுற்ற 
ஆரம்பித்து விடுவதேன்?

வெற்றிவேல்...
சளையக்குறிச்சி...



உதிரும் நான் -16

கொசுவத்தை வாரி
இடுப்பில் சொருகி, 
வியர்த்த நெற்றியோடு 
எக்கி எக்கி தான்
எட்டாத மாங்காயைத் 
தொரட்டியால் தட்டுகிறாள்...

ஆனால்,

விழுவது என்னமோ,
நானாகவே இருக்கிறேன்...

வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...
வாழ்த்துக்கள் வெற்றிவேல் சார்.இதோவருகிறோம் தங்கள் தளம் நோக்கி/ 


                                               ********************************** 


                                                          http://tamilselvane.blogspot.in/ 


காதலே முதல் பாடு பொருளாய் எழுத வருகிறவர்களுக்கு இருந்திருக்கிறது பெரும்பாலுமாய் என நீருபித்துச்செல்கிறது திரு,தமிழ்ச்செல்வன் அவர்களின் கவிதைகள்.சான்றாகவும் பிடித்ததாகவும் கைதூக்கிவிடவுமாய்,,,,,,அவரது எழுத்துக்களிலிருந்தும் கைதூக்கி விடும் முயற்சியடனும்,முனைப்புடனுமாய்,,,,,,,


நெற்றிப்பொட்டு!

நெஞ்சை மயக்கும்
மந்திர மையோ?

காதல் கடலின்
சுழலோ?

என்னுயிரைப்
பொட்டென்று சுடுவதால்
பொட்டோ?

இறைவனுக்கு
நெற்றிக்கண்!
என்னவளுக்கு
பொட்டும் கண்!

வட்டப் பொட்டழகு
என்னை
வட்டமிடச் செய்யும்!

வண்ண மலரின்
மகரந்தம்
வட்டப் பொட்டு!
எண்ணத்தின் சுடராக
நீட்டுப் பொட்டு!

சிவப்புப் பொட்டுச்
செம்மையைக் காட்டும்!

பச்சைப்பொட்டுப்
பசுமையைக் கூட்டும்!

நீலப் பொட்டு
நினைவினை வாட்டும்!

மஞ்சள் பொட்டு
மகிழ்ச்சியை ஊட்டும்!

கோடிக் கற்பனையைக்
கொட்டும் பொட்டே! - உன்னைக்
கூடி மகிழ்ந்து
கொஞ்சுவது எந்நாளோ?

 காதல் மட்டுமல்ல,நிறைய இருக்கிறது எழுத தமிழ்ச்செல்வன்.நிறைய எழுதுங்கள் வாழ்த்துகிறோம் எனச்சொல்லி அவரது வலைத்தளம் நோக்கி நகர்வோம்/
                                                       ***************************************


                                              http://tamizhmuhil.blogspot.com/                     


முகிலின் பக்கங்கள் என தமிழ் முகில் பிரகாசம் அவர்களின் வலைத்தளம் விரிகிறது கவிட்தைகளை உள்ளடக்கி,கவிதைகள் பொதுவாக எதையும் சொல்ல வல்லவை என்பதை இவது எழுத்து மெய்ப்பித்துச்செல்வதாய்.மெய்ய்பிக்கட்டும்,மெய்ப்பியுங்கள் தமிழ்முகில் சார்.இதோ அவரது எழுத்திலிருந்து,,,,,,,

 எந்தன் உள்ளங்கைகளில்  அப்படியே 
முகம் புதைத்துக் கொண்டு 
என் முகம் பார்த்து நிற்பாய் !!
தலை சாய்த்து நின்று கொண்டு 
உருளும் விழிப் பார்வையால்
மெல்ல நீவி விடச் சொல்வாய் !!
நான் செல்லுமிடமெல்லாம் 
வாலசைத்துக் கொண்டே 
காவலாய் உடன் வருவாய் !!
 கண்டதும் சந்தோஷம்  மேலிட
தாவி வந்து மேலேறிக் கொண்டு 
நாவால் அன்பாய் வருடுவாய் !!
சில வேளைகளில் உன் 
கட்டுக்கடங்கா கள்ளமில்லா 
அன்பு - பயமுறுத்தியதும் உண்டு !!
ஆனால் 
என்றென்றும் - உந்தன் 
கைமாறு எதிர்பாரா அன்பிற்கு 

ஈடு - இணை உலகிலேதுமில்லை !!!

                                                                                                                                                          மனம் கொள்ளை  கொள்கிற இக்கவிதை  ஒரு செல்லப்பிராணியை ப்பற்றிஎழுதியது,படிப்போம் அனைவருமாய்.
  
           <,<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

http://citukuruvi.blogspot.com/
  


 மிகவும் ஆத்மார்த்தமாகவும்,மனம் தொடும் பாங்குடனுமாய் வெளிப்படுகிற ஆத்மா அவர்களின் எழுத்து ஆத்மா என பெயரிடப்பட்ட வலைத்தளமாய் விரிந்து நம் முன் அவரது படைப்புகளை காட்சிப்படுத்துகிறதாய்/சமீபத்திய அவரது எழுத்து நீரில் எழுதப்பட்டிருக்கும் பூனை வாசிக்கிறது என்கிற கவிதை தொகுப்பு பற்றி சொல்லிச்செல்கிறது,நன்றாக உள்ளது இதோ அதிலிருந்து கொஞ்சமாய்,,,,,,,,,,,,,

சில மரங்கள் உங்கள் குடும்பத்தில் உள்ள அங்கத்தவர்களை எண்ணிக் கணக்கெடுத்துவிட்டு  கனிகளைத் தருகின்றன. சில மரங்கள் உங்கள் பரம்பரையில் உள்ளவர்களுக்கெல்லாம் கனி தருகின்றன.

                                                   <<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<              

                                                  http://kuttikkunjan.blogspot.in/                               


குச்சி மிட்டாயும்,குருவி ரொட்டியும்தானே நம் சிறுபிராயத்து தின் பண்டமாய் இருந்திருக்கிறது,அத்திண்பண்டம் இப்போது நம் கையில் காணக்கிடைகிறதாய் அல்லது கொணர்ந்து கொடுக்கப்படுவதாய் உணர்த்துச்செல்கிறது திரு குட்டன் அவர்களின் குச்சி மிட்டாயும்,குருவி ரொட்டியும் வலைத்தளம்,மனம் ப்பிடித்ததாய் அவரது எழுத்திலிருந்து,,,

தேடிப் பிடிக்கும் என் ஆன்மா!




எனக்குத் திசைகாட்டி தேவையில்லை
      நீ இருக்கும் இடம் தெரிய.
உனது இதயத்தின் துடிப்பொலியே
    என்னை வழி நடத்தும்
இருட்டில் ஒளிந்திருக்கும் உன்னைத்தேட
     எனக்கு வெளிச்சம் தேவையில்லை
உன் முத்துப்பல் ஒளியே போதும்
     உன்னை நான் தேடிப்பிடிக்க!
காற்றின் உதவி தேவையில்லை
     உன்னை கண்டு பிடிக்க
உன் தேன் குரல் ஒலி கிசுகிசுப்பாய்
      என் காதோடு வழிகாட்டும்

நட்சத்திரங்கள் தேவையில்லை
   என்னைக் கூட்டிச் செல்ல
இருளிலும் ஒளிரும் உன் கண்கள்
     என்னை இழுத்துச் செல்லும்!
ஆனால் என் அன்பே!
வழிதவறி என்றேனும் போக நேர்ந்தால்
      நிச்சயம் நான் உயிர் நீப்பேன்.
அப்போது என் ஆன்மா உன்னை
      அடைந்தே தீரும்!

                                                          வாழ்த்துக்கள் அனைவருக்குமாய்,






34 comments:

  1. நான் விரும்பித் தொடரும் பதிவர்
    அருமையான கவிதையுடன்
    அருமையாக அறிமுகம் செய்தமைக்கும்
    தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ரமணி சார்,நன்றி தங்களது வருகைக்கு/

      Delete
  2. நல்ல அறிமுகம்.... தொடரட்டும் அறிமுகங்கள்....

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு வலைச்சரத்திற்கு வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வெஙட் நாகராஜ் சார்,நன்றி தங்களது வருகைக்கு/

      Delete
  3. அருமையான கவிதை... வெற்றிவேல் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார் ,நன்றி தங்களது வருகைக்கு/

      Delete
  4. அண்ணா, தங்கள் மூலம் அறிமுகம் கிடைத்தமை எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க நன்றி... காளயார் குறிச்சி இல்லை சாளையக்குறிச்சி.

    மிக்க நன்றி அண்ணா...

    மற்ற பதிவர்களின் அறிமுகமும் சிறப்பாக உள்ளது. மிக்க நன்றி... தனபாலன் அண்ணா, தங்கள் வாழ்த்துகளுக்கும் நன்றி அண்ணா...

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. வணக்கம் வெற்றி வேல் சார்,நன்றி தங்களது வருகைக்கு/சாளையார் குறிச்சி என திருத்தி விடுகிறேன் இதோ கண்சிமிட்டுகிற பொழுதில்/அறிமுகம் சரியா சொல்லவில்லையே/

      Delete
  5. தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,நன்றி தங்களது வருகைக்கும் தமிழ்மணத்தில் இணைத்ததற்குமாய்/

      Delete
  6. அசையும் படங்களுடன் அசத்தல் அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சசிகலா மேடம்,நன்றி தங்களது வருகைக்கு/

      Delete
  7. அறிமுகங்கள் அருமை சகோதரரே! அவர்களை அறிமுகப்படுத்தும் அழகும் அசையும் படங்கள் மனதை கவருகின்றன.

    அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்!

    த ம.2

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் இளமதி அவர்களே,நன்றி தங்களது வருகைக்கு/

      Delete
  8. அனைவருக்கும் வாழ்த்துகள். தங்களுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வை.கோபால கிருஷ்ணன் சார்,நன்றி தங்களது வருகைக்கு/

      Delete
  9. என் வலைப்பூவை அறிமுகப்படுத்திப் பெருமைப்படுத்தி விட்டீர்கள்
    மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் குட்டன் சார்,நன்றி தங்களது வருகைக்கு/

      Delete
  10. எனது வலைப்பூவை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள் ஐயா.

    இன்று அறிமுகமான அனைத்து நண்பர்கட்கும் இனிய வாழ்த்துகள் !!!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தமிழ்முகில் பிரகாசம் சார்,நன்றி தங்களது வருகைக்கு/

      Delete
  11. அன்பின் அறிமுகங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!.. அறிமுகம் செய்வித்த திரு. விமலன் அவர்களுக்கு நன்றி!..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் துரை செல்வராஜ் சார்,நன்றி தங்கள் வருகைக்கு/

      Delete
  12. இன்றைய அறிமுகங்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் கோமதி அரசு சார்,நன்றி தங்கள் வருகைக்கு/

      Delete
  13. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் மாதேவி அவர்களே,நன்றி தங்கள் வருகைக்கு/

      Delete
  14. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் எழில் மேடம்,நன்றி தங்கள் வருகைக்கு/

      Delete
  15. தளங்களை அழகாய் அறிமுகம் செய்தீர்கள்.
    பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நிஜாமுதின் சார்.நன்றி வருகைக்கு

      Delete
  16. அறிமுகங்கள் அருமை எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தனிமரம் சார்.நன்றி வருகைக்கு/

      Delete
  17. அழகான அறிமுகங்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது