07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, December 11, 2013

வலைச்சரத்தில் மூன்றாம் நாள்: புதன் மலர்

அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய தினத்தில் மேலும் சில பதிவர்களை அறிமுகம் செய்ய வந்துள்ளேன். அறிமுகங்களைப் படித்துவிட்டு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்களேன் !.

1) இன்றைய முதல் அறிமுகமாக திருமதி ரஞ்ஜனி அவர்களின் வலைப்பூ ரஞ்ஜனிநாராயணன். இவரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. இவரைப்போலவே இவரது பதிவுகளும் பிரபலமானவை. இவரை நான் அறிமுகப்படுத்தித்தான் ஆக வேண்டுமென்பதில்லை. ஆனாலும் நான் விரும்பிச் சென்று படிக்கும் தளங்களில் இவருடையதும் ஒன்று.

இவர் இரண்டு பிரபலமான பதிவுகளை நான்கு பெண்கள் தளத்திற்காக எழுதிக் கொண்டிருக்கிறார். இதுவரை வெளிவந்த பதிவுகளை தொகுத்து வைத்திருக்கிறார்கள். விரும்பியதை 'க்ளிக்' செய்து படித்து பயன்பெறலாம்.

அதில் ஒன்று குழந்தை பராமரிப்பு பற்றியது. இது இளம் தாய்மார்களுக்கும், அம்மாவாகப் போகிறவர்களுக்கும் மிகுந்த பயன் கொடுக்கக்கூடியது. பதிவுகள் முழுவதும் லேசான நகைச்சுவையுடன் நகர்த்தியிருப்பது அழகு.

மற்றொரு பதிவு நோய்நாடி நோய்முதல்நாடி என்ற மருத்துவத்தொடர். இங்கும் சில இடங்களில் நகைச்சுவையைச் சேர்த்தும், சில இடங்களில் உதாரணங்களுடனும், தன் அனுபவங்களுடனும் சொல்லிச்செல்வதும் அழகு.

இதுதவிர‌ தன்னுடைய‌  திருவரங்கத்திலிருந்து  என்னும் வலைப்பூவிலும் எழுதுகிறார். இங்கு கட்டுரைகளும், பல பதிவுகளை நகைச்சுவையாகவும் எழுதியிருக்கிறார்.

சாம்பார் ஊத்தும்மா……!    என்ற பதிவில் தன் தோழியுடன் தான் சினிமா பார்த்த அந்த நகைச்சுவைக் காட்சியைக் கூறுகிறார். போய் படித்துவிட்டு வாய்விட்டு சிரித்துவிட்டு வருவோமே.

'நலம் நலம் தானே நீயிருந்தால்' என்ற பதிவில் தன் வா.து வுடன் மருத்துவமனை சென்று வந்ததை நகைச்சுவையாகக் கூறுகிறார். அதென்ன வா.து. உங்களை மாதிரிதான் முதலில் நானும் முழித்தேன். நீங்களும் போய் பார்த்துவிட்டு வாங்க அது யார் என்று.

மேலும் இரண்டாவது எண்ணம் என்ற வலையும் உள்ளது. இங்கும் கட்டுரைகள், நகைச்சுவை பதிவுகள் என்று கலக்குகிறார்.

ஆதார் அட்டை படுத்தும் பாட்டை எவ்வளவு நகைச்சுவையாக எழுதியிருக்கிறார் பாருங்கள்.

இங்கே மலாலா பற்றி இவர் எழுதிய கட்டுரையை வாசித்துப் பாருங்கள்.

மேன்மேலும் எழுத வாழ்த்துவோமே !!

                        ................................................................

2)  காவேரிக்கரை என்றொரு வலைப்பூ.

"கவிதை,கட்டுரை,கொஞ்சம் தத்துவம்,சில புகைப்படம் இப்படியா ஒரு சின்ன கிறுக்கல்கள்", இவற்றை உள்ளடக்கியதாக இருக்கும் இந்த வலைப்பூ' என்கிறார் புதிதாக வலைப்பூவை ஆரம்பித்து அழகழகான கவிதைகளை முயற்சித்துக்கொண்டிருக்கும் ஆசிரியர் முனைவர் நா.சிவாஜி கபிலன்.

 பாட மறக்கும் பாட்டு என்ற தலைப்பில், ஒப்பாரிப் பாடல் காணாமல் போனதால் தமிழனின் அருமருந்தான மனச்சுமையைக் குறைக்க முடியாமல் போய்விட்டதாகப் புலம்புகிறார். உண்மைதான், ஆராய்ச்சிகளும் அதைத்தானே சொல்கின்றன. இக்கவிதையில் வரும் அருக்காணி அக்கா மனதில் நிலைத்து நிற்கிறார்.

பெருந்தீ என்னும் தலைப்பில் இன்னொரு கவிதை. வெளியூரில் இருந்து புகைவண்டியில் வீடு திரும்பும் ஒரு இளைஞனின் கண்ணெதிரில் பசுமை சூழ்ந்த தன் கிராமம் இப்போது எப்படி வெறிச்சோடிக் கிடக்கிறது என்பதுதான் இக் கவிதை. நம்மையும் அவருடன் அவரது கிராமத்திற்கே அழைத்துச்சென்று விடுகிறார் கவிதையின் வாயிலாக.

தலைப்பில்லாமல் இங்கொரு கவிதை உள்ளது. இதிலுள்ள வரிகள் எவ்வளவு வலிமையானவை என்பதை வாசித்துப் பாருங்களேன்.இன்னும் நல்லநல்ல கவிதைகள் எழுதிட வாழ்த்துவோம்.
                              ...........................................................

3) அஞ்சு அவர்களின் வலைப்பூ காகித பூக்கள்

கைவினை, சமையல் என பன்முகத் திறமை கொண்டவர்.

அழகழகான க்வில்லிங் வேலைப்பாடுகளை செய்து அசத்துகிறார். இங்கே 'க்வில்லிங் எப்படி செய்வது' என எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் படிப்படியாக கற்றுகொடுக்கிறார். எனக்குத்தான் வராது, விருப்பமுள்ளவர்களாவது இங்கு  சென்று கற்றுக்கொள்ளலாமே.

அம்மாஞ்சி குழம்பு_ பெயர் வித்தியாசமாக இருக்கிறதுதானே ? மாம்பிஞ்சுகள் கிடைத்தால் செய்துபார்க்கலாம். செய்வதென்ன, செய்வதற்குமுன் நான் அவற்றை என்னிடமிருந்தே பாதுகாக்க வேண்டும் ! அதனால் இப்போதைக்கு 'உச்சு' கொட்டுவதைத் தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை.

/இவரைப் போலவே இவரது குட்டி ஏஞ்சலினும் கைவினையில் திறமை உடையவராக‌ இருப்பதை Flowers Crafty Room என்ற‌ அவரது வலைப்பூவுக்கு சென்று பார்த்து, வாழ்த்திவிட்டு வருவோமே !.
                                        .........................................

4)  'புத்தக அலமாரி'   என்னும் வலைப்பூவின் எழுத்தாளர் த.பெ.கேசவமணி. வலைப்பூவின் பெயரைக் கேட்கும்போதே நூல் நிலையத்தின் நினைவு வருகிறது. இலக்கியத்தின்மீது ஆர்வம் கொண்டு கல்லூரி நாட்களில் கதைகள்,கட்டுரைகள் என எழுதியிருக்கும் இவர் அப்போதே ‘அக்கினிக் குஞ்சு’ என்ற கையெழுத்துப் பிரதியையும் நடத்தியிருக்கிறார்.

'அரிய புத்தகங்கள் கொண்ட நூலகம்' அமைக்க விரும்பும் இவரிடம் சுமார் 300 புத்தகங்கள் உள்ளனவாம். இவரது ஆசை நிறைவேற வாழ்த்துவோம்.

இவர் எழுதிய கவிதைகளை நானும் நீயும் என்ற தலைப்பில் ஒரு தொகுப்பாக‌ பதிந்து வைத்திருக்கிறார், சென்று வாசித்து மகிழுங்கள்.

த‌ன் மனதில் துளிர்த்த சில சிந்தனைகளை சிறுசிறு கவிதைகள் வடிவில்  இங்கே வடித்திருக்கிறார்.

 கி.ராஜநாராயணனின் கதவு, சுந்தர ராமசாமியின் முதலும் முடிவும், புதுமைப்பித்தனின் ஆற்றங்கரைப் பிள்ளையார் போன்ற பிரபல எழுத்தாளர்களின் சிறுகதைகளை அப்படியே கொடுத்துள்ளார். கதைப் பிரியர்கள் இங்கே  சென்று வாசித்து மகிழலாம்.
                                   ...............................................................

5) தன் மனதில் உள்ளதை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள அனுவின் பதிவுகள் என்ற வலைப்பூவில் எழுதுகிறார் ஆசிரியர் அனு. இவரது பதிவுகளில் உறவுகளின் வலிமை புலப்படும்.

'அப்படியே கண்ணு கலங்கிடுது, பொலபொலன்னு தண்ணி கொட்டுதே" என்று பொதுவாக பெண்களைப் பார்த்துதான் சொல்லுவார்கள். அப் பெண்ணின் கண்ணீருக்குப் பின்னால் உள்ள கதையைத் தெரிந்துகொள்ளும் ஆவல் இருக்கிறதா ?  பெண்ணின் கண்ணீர்….' என்ற தலைப்பில் இவரெழுதியுள்ள பதிவைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

உதவி தேவைப்படும் நேரத்தில் ஒரு தப்பனாரால்கூட செய்ய முடியாத சில‌ வேலைகளை இவரது மாமனார் இவருக்கு செய்ததை தாயுமானவன்…… என்ற தலைப்பில் எவ்வளவு அழகாக நினைவு கூர்கிறார். அப்படியானால் இவர் எப்படிப்பட்ட மருமகளாக இருந்திருப்பார் எனும்போது ஆச்சரியமாகத்தான் உள்ளது.

தனக்கு கடுக்காயும் கணக்கும் ஒன்றுதான் என்று தனக்கும் கணக்குப் பாடத்திற்குமான தொடர்பை இங்கே எவ்வளவு நகைச்சுவையாகக் கூறுகிறார், படித்துதான் பாருங்களேன்.

முதியோர் இல்லத்திற்கு சென்றபோது அவர்கள் சொன்ன விஷயங்கள் இவர் மனதை எவ்வாறு பாதித்தது என்பதை 'ஆத்ம திருப்தி' என்ற தலைப்பில் இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

சில பதிவுகளே எழுதியிருந்தாலும் அவை எல்லாமே சிறப்பாக உள்ளன என்பதே அவரது வலையின் சிறப்பு.
                  ********************************************
 இத்துடன் இன்றைய அறிமுகங்களை முடித்துக்கொண்டு, நாளை வேறுசில அறிமுகங்களுடன் வருகிறேன். நன்றி !
                                             ...............................................................              

          'வலைச்சரம் எனக்கு எப்படி அறிமுகமானது' ......... (தொடர்ச்சி)

அதன்பிறகு ஒரு 3 மாதங்கள் கழித்து திண்டுக்கல் தனபாலன் அவர்கள் வந்து என்னுடைய பதிவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருப்பதாகக் கூறினார். முந்தைய பெயரிலிருந்து இந்தப்பெயர் வித்தியாசமா இருக்கேன்னு, உடனே அங்கே போய் பார்த்தால் சௌந்தர் என்பவர் அறிமுகப்படுத்தி இருந்தார். மீண்டும் குழப்பம். வந்து சொன்னவர் ஒருவர், அறிமுகம் செய்தது வேறொருவராய் இருக்கிறாரே என்று. ஒருவேளை இருவரும் ஒருவர்தானோ என நினைத்து (எதற்கு வம்பென)பெயர் எதுவும் குறிப்பிடாமால் நன்றி மட்டும் சொல்லிவிட்டு வந்துவிட்டேன். நான் மனதிற்குள் நினைத்துக்கொண்டது 'ஒருவேளை வலைச்சரம் தளம் கைமாறிக்கொண்டே இருக்கிறதோ' என்று.

மெல்லமெல்ல மற்ற‌ வலைகள் பக்கம் வந்தபோதுதான் கவனித்தேன், DD அவர்கள் 'அறிமுகம்' செய்திருப்பதாகக் கூறும் பின்னூட்டம் எங்கும் தென்பட்டதால் ஒரு கட்டத்தில் 'DD அவர்கள்தான் ஆசிரியர்' என்ற முடிவுக்கே வந்துவிட்டேன். அப்படியே சில நாட்கள் போனது. பிறகு அதுவும் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. அதற்கும் வந்தது ஆப்பு..........அது தோழி திருமதி.ரஞ்ஜனி அவர்களின் மின்மடல் வாயிலாக...........(தொடரும்)

 ........................இப்பகுதி எங்கே என மேலே தேடினீங்கதானே !!

44 comments:

  1. வணக்கம்
    இன்று வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. அனைத்தும் தொடரும் தளங்கள்..பதிவுகளை தொடருகிறேன்.வாழ்த்துக்கள்..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரூபன்,

      வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.

      Delete
  2. நல்ல அறிமுகங்கள்
    மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஆத்மா,

      உங்க பாராட்டுகளுக்கும் நன்றிங்க.

      Delete
  3. ஒரு சில வலைப பதிவ்களைத் தவிர மற்றவற்றை நான் அறிந்ததில்லஅறிமுகங்களுக்கு நன்றி
    DD ஐ பற்றி அறியாதது ஆச்சர்யம்தான்.

    ReplyDelete
    Replies
    1. டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று,

      வாங்க ! சிலர் புதிய வலைப்பதிவர்களாக இருப்பதால் அறிய வாய்ப்பில்லாமல் இருந்திருக்கலாம்.

      முன்பு நான் வலைப்பக்கம் வருவது குறைவு, எனவேதான். தங்களின் கருத்தைப் பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சிங்க.

      Delete
  4. அழகான தொகுப்பு. ரொம்ப நல்லா இருந்துச்சு

    ReplyDelete
    Replies
    1. வாங்க காயத்ரிதேவி,

      பாராட்டிற்கும் நன்றிங்க.

      Delete
  5. இயல்பான நடையில் - அசத்தலான அறிமுகங்கள்.. அழகு!..

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரைசெல்வராஜ்,

      உங்கள் பாராட்டிற்கும் நன்றிங்க.

      Delete
  6. அறிமுகங்கள் சூப்பர்.. தொடர்கிறேன்.. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க நம்மாழ்வார்,

      தொடர்வதற்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.

      Delete
  7. நல்ல அறிமுகங்கள்..
    சிலர் நான் அறிந்திராதவர்கள்
    சென்று படிக்கிறேன்.
    வளர்க உம் பணி...

    ReplyDelete
    Replies
    1. வாங்க மகேந்திரன்,

      சிலர் புதிதாக எழுத ஆரம்பித்திருப்பவர்கள், அதனால்கூட இருக்கலாம்.

      தங்களின் பாராட்டிற்கு நன்றிங்க.

      Delete
  8. நல்ல அறிமுகங்கள்.. ரஞ்சனி அம்மா தவிர மற்றவர்கள் புதுசு!

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோவை ஆவி,

      தங்களின் பாராட்டிற்கும் நன்றிங்க.

      Delete
  9. ஹா... ஹா... மிக்க நன்றி...

    அட...! இன்று எனக்கு இரு தளங்கள் கிடைத்தது... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க திண்டுக்கல் தனபாலன்,

      நீங்க தினமும் இப்படியே சொல்ல வேண்டும் என்ற முடிவோடுதான் வந்திருக்கேன். வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.

      Delete
  10. என்னங்க! இன்னிக்கு நான்தான் போணியா? என்னுடைய எல்லா தளங்களையும் அறிமுகப்படுத்தி, கடைசியில் வேற சஸ்பென்ஸ் வைச்சிருக்கீங்களே! என் எழுத்துக்கள் எல்லாவற்றையும் படிப்பதற்கு முதலில் உங்களுக்கு எனது நன்றி. வலைசரத்தில் அறிமுகத்திற்கும் நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரஞ்ஜனி,

      நீங்களேதான் போணி, போணியானது எப்படின்னு பிறகு சொல்கிறேன். உங்க ஊக்கத்தை விடவா நாங்க படிப்பது அதிகம் ! வலைச்சரத்தில் அறிமுகமானதற்கு முதலில் வாழ்த்துகள் !!!!! வருகைக்கும் நன்றிங்க.

      Delete
  11. அனின் சித்ரா சுந்தர் - அருமையான அறிமுகங்கள் - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. சீனா ஐயா,

      பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி ஐயா.

      Delete
  12. இன்று உங்களால் அறிமுகப்படுத்தப் பட்டவர்களுக்கு என் வாழ்த்துகள். காவேரிக்கரை,புத்தக அலமாரி இவை இரண்டும்தான் எனக்குப் புதிது. அதையும் ஓடிப்போய் ரஸித்துவிட்டு வந்தேன்.
    ரஞ்ஜனி பதிவுலகம்பூராவும் நன்றாகத் தெரிந்தவர். ஸகலகலாவல்லி என்று நான் நினைத்துக் கொள்வேன்.
    அஞ்சு அழகானதளம்,க்வில்லிங் கைவேலைகள்,சமையல் என்று அசத்தும்,அன்புடன் ஸ்நேகமனப்பான்மை கொண்டவர்.

    அநு ஸ்ரீனி சொல்லவே வேண்டாம். . அத்தனை ரஸங்களும் எழுதுவதில் இருக்கும்..ஒரு எடுத்துக்காட்டான
    மருமகள்.
    காவேரிக்கரையும், புத்தக ஷெல்பின் ஒரு கவிதையும் படித்தேன். மிக்க அழகாக இருந்தது.
    இனி எல்லோரையும் முடிந்தபோது தவராமல் பார்க்க வேண்டும் என்பது என் ஆவல்.
    புதன் மலர் அழகாக பூத்திருக்கிறது. பொன் கிடைக்கும், புதன் கிடைக்காது. ஆக புதனின் தேர்வுகள்
    அருமை. அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க காமாக்ஷிமா,

      எல்லா தளங்களையும் நினைவு கூர்ந்து அவர்களைப்பற்றிய சுருக்கமான அறிமுகம் சூப்பர். அறிமுக தளங்களுக்கும் சென்று வந்தது மகிழ்ச்சிமா. புதன் கிழமையின் பெருமையை நீண்ட நாட்களுக்குப் பிறகு கேட்க நேர்ந்தது. நன்றிமா, அன்புடன் சித்ரா.

      Delete
  13. என் தோழி அனுவின் பதிவுகளை அறிமுகம் செய்ததற்கும் நன்றி. முதன் முதலாக அவரது தளம் இன்று உங்களால் அறிமுகப்படுத்தப் பட்டு இருக்கிறது. பயங்கர சந்தோஷத்தில் இருக்கிறார். சீக்கிரமே இங்கு வந்து நன்றி சொல்வார்.
    காவிரிக்கரை, காகிதப்பூக்கள் இரண்டு தளங்களும் புதியவை. படித்துவிட்டு வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மீள் வருகைக்கு நன்றிங்க. அனு உங்கள் தோழியா ! எப்போதாவது அவர் பதிவுகளை அந்த வேர்ட்ப்ரஸ் லிஸ்டில் இருந்து எடுத்து படிப்பதுண்டு. மற்ற தளங்களையும் சென்று பார்த்து வரும் உற்சாகம் மகிழ்ச்சியாக உள்ளது. மீண்டும் நன்றிங்க.

      Delete
  14. சில தளங்கள் புதிது அறிமுகத்திற்கு நன்றிகள் !

    ReplyDelete
    Replies
    1. வாங்க தனிமரம்,

      உங்கள் வருகைக்கும் நன்றிங்க.

      Delete
  15. திருமதி ரஞ்சனியின் எழுத்துக்களுக்கு விசிறி நான். ஒரிரண்டு பதிவர்கள் எனக்குப் புதிது. படித்து விடுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ராஜலக்ஷ்மி,

      ரஞ்ஜனி அவர்களின் எழுத்துக்கு முக்கியமாக நகைச்சுவையான பதிவுகளுக்கு நானும் விசிறிதான். வந்து கருத்தைப்பகிர்ந்து கொண்டதற்கு நன்றிங்க.

      Delete
  16. அருமையான அறிமுகங்கள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ராஜேஸ்வரி,

      வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றிங்க.

      Delete
  17. மிக்க நன்றி சித்ரா அம்மா மகள் இருவரையும் :)இன்று வலைசரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு ...அறிமுகம் ஆன அனைவருக்கும் வாழ்த்துக்கள்
    தகவல் மற்றும் தெரிவித்த ராஜெஸ்வரியக்கா கோபு அண்ணா சகோதரர் தனபாலன் ,ரூபன், நால்வருக்கும் நன்றி ..அனைவருக்கும் ம்மிக்க நன்றி ..

    Angelin :) a.k.a Anju

    ReplyDelete
    Replies

    1. வாங்க அஞ்சு,

      நேரமின்மையால் அறிமுகப்படுத்துவதை சொல்ல முடியாமல் போவதில் வருத்தம் இருக்கிறது.தக‌வல் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் பல. உங்களின் கருத்தைப்பகிர்ந்துகொண்டதற்கும் நன்றிங்க.

      Delete
  18. அந்த அம்மாஞ்சி குழம்பு நம்ம குறை ஒன்றுமில்லை லஷ்மி அம்மா அவர்களின் குறிப்பு பார்த்து செய்தது ..கலகலவென அனைவருடனும் பழகுபவர் ஏனோகிட்டத்தட்ட ஒரு வருடமாக அவரை வலையுலகில் காணவில்லை .
    .யராவது அவருடன் தொடர்பு கொண்டால் சொல்லுங்களேன் ..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், பதிவுகள் போடாத சமயம்தான் அவரது வலை எனக்கு அறிமுகமானது.

      Delete
  19. சிறப்பான அறிமுகங்கள்... ஒவ்வொருவராய் ஆசிரியர் என நினைத்து விட்டீர்களோ....:))

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஆதிவெங்கட்,

      அதையேன் கேட்கறீங்க !! இடையில் எடிட் பண்ணி டக்குன்னு முடிச்சிட்டேன். தெரிஞ்சா எனக்கு பி ஹெச் டி யே குடுத்திடுவீங்க.

      வருகைக்கும், பாராட்டுகளுக்கும் நன்றிங்க.

      Delete
  20. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.....

    ரஞ்சனிம்மா.... நான் தொடர்ந்து படிக்கும் வலைப்பூ.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட்நாகராஜ்,

      ரஞ்ஜனி அவர்களைத் தெரியாமல் இருக்க முடியாது. தங்களின் வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.

      Delete
  21. பகிர்வுகள் மிக அருமை..அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஆஸியா ஓமர்,

      வாழ்த்துகளுக்கும், பாராட்டுகளுக்கும் நன்றிங்க.

      Delete
  22. வணக்கம் சீனா அவர்களே!என் கவிதையை மதிப்பீடு செய்தமைக்கு நன்றி.வாழ்த்துக்கள்---- புத்தாண்டுக்கும்.....அன்புடன் தூரிகைகபிலன்( முனைவர் நா.சிவாஜிகபிலன் )

    ReplyDelete
  23. வணக்கம் சீனா!என் கவிதைகளைத் திறனாய்வு செய்து எழுதியமைக்கு நன்றி,புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது