வலைச்சரத்தில் ஏழாம் நாள் _ ஞாயிறு மலர்
➦➠ by:
சித்ராசுந்தரமூர்த்தி
அனைவருக்கும் இனிய காலை வணக்கம், இன்றுடன் முடியும் ஒரு வாரத்திற்கான வலைச்சர ஆசிரியர் பொறுப்பை மனநிறைவுடன் முடித்து உங்களிடமிருந்து விடை பெற வந்துள்ளேன். ஹலோ, என்ன ! எல்லோரும் சோகமாயிட்டீங்க ! வாராவாரம் இப்படித்தான் ஒருவர் விடைபெறுவதும், வேறொருவர் பொறுப்பை ஏற்க வருவதுமாக இருக்கும். இதற்கெல்லாம் கவலைப்படலாமா !
எங்கோ ஒரு மூலையில் இருந்த என்னை சீனா ஐயா பொறுப்பை ஏற்க அழைத்தபோது நான் 'ஆடி'த்தான் போனேன். அதன்பிறகான 'ஆவணி, புரட்டாசி'யையெல்லாம் எப்படி சமாளித்தேன் என்பது வேறுவிஷயம். இதோ அதோ என பல மாதங்கள் ஓ(ட்)டியபிறகும், பொறுமையாக இருந்து எல்லா வசதிகளையும் செய்துகொடுத்ததற்கு ஐயாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.
ஒரு சிறிய வட்டத்திற்குள்ளேயே பதிவுகளைப் படித்துவந்த நான் அதன் பிறகுதான் பல பதிவர்களையும் தேடிச்சென்று படிக்க ஆரம்பித்தேன். இந்த ஒரு வாரமும் வெற்றிகரமாக அமைய உறுதுணையாய் இருந்த காமாக்ஷிம்மா, சகோதரி திருமதி மகி, சகோதரி திருமதி.ரஞ்ஜனி அவர்கள், சகோதரி திருமதி.இராஜலக்ஷ்மி அவர்களுக்கும் என் நன்றியைச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
அறிமுகப் பதிவர்களிடத்தில், அவர்கள் அறிமுகமான தகவலைக் கொண்டுசேர்த்த திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும், திரு.ரூபன் அவர்களுக்கும் நன்றி பல.
மேலும் தங்கள் பொன்னான நேரத்தை செலவிட்டு, பின்னூட்டங்கள் வாயிலாக உற்சாகத்தைக் கொடுத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி பல. இந்த வலைச்சரம் மூலமாக நிறைய பதிவுலக நண்பர்கள் கிடைத்துள்ளார்கள். இனிதான் அவர்களுடைய தளங்களுக்குச் செல்ல வேண்டும்.
இந்த நல்ல வாய்ப்பை நல்கிய சீனா ஐயாவுக்கு மீண்டும் என் நன்றியைத் தெரிவித்துக்கொண்டு விடைபெறுகிறேன், நன்றி !
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
வழமைபோல் இன்றைய அறிமுகங்களைப் பார்த்துவிடுவோமே ! அவற்றைப் படித்துப் பார்த்துவிட்டு தங்களது கருத்துகளையும் பகிர்ந்துகொள்ளுங்களேன்!
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
1) திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களின் வலைத்தளம் பக்தி மணம் கமழும் மணிராஜ். தினமும் ஒரு பதிவென வருடம் முழுவதும் வந்துகொண்டே இருக்கிறது. தினமும் ஒருமுறை இந்த வலைப்பதிவுக்கு வந்து, வெளியாகியுள்ள கடவுளை வணங்கி மனமகிழ்ச்சியுடன் அன்றைய நாளைத் துவங்கலாம். அன்றன்று வரும் விசேஷங்களின் தன்மைக்கேற்ப பதிவுகளாக வருவது இன்னும் சிறப்பு. இவர்களின் பணி மகத்தானது. வாழ்த்துகள்.
""""""""""""""""""""""""""
2) ஆலயம் கண்டேன் என்ற வலைப்பதிவை நிர்வகிப்பவர் திருமதி ப்ரியா பாஸ்கரன் அவர்கள். இவர் ஆங்கிலத்திலும், தமிழிலும் அவர் தரிசித்த ஆலயங்களைப் பற்றி அழகாக எழுதியிருக்கிறார். ஆங்கிலத்தில் நிறைய பதிவுகள் உள்ளன. தமிழில் சில பதிவுகளே எழுதியிருக்கிறார். ஆனாலும் அவையனைத்தும் முத்தானவை. என்னை நிறையவே கவர்ந்துவிட்டன. திருவண்ணாமலையைப் பற்றி எழுதியதும் அதற்கு ஒரு காரணம்.
கோயிலின் மூலை முடுக்கெல்லாம் சுற்றி வந்திருக்கிறேன். தீபம் சமயத்தில் மாடவீதி சுற்றி வருவதும், மலையைச் சுற்றுவதும், (பாதி)மலை ஏறி வந்ததும் உண்டு.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையைப் பற்றிய அரிய தகவல்களை இங்கே நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். படித்துப் பார்த்து, நினைத்த மாத்திரத்திலேயே, முக்தி பெறுவோமே !!
""""''''''''''''''''''''''''''''''''''''''
3) திருமதி காஞ்சனா ராதாகிருஷ்ணன் அவர்களின் வலைப்பூ சிறுவர் உலகம் . இங்கு ஏராளமான நீதிக்கதைகள் உள்ளன. உதாரணத்திற்கு ஒன்றிரண்டு தலைப்புகளைப் பார்க்கலாம்.
புத்திக் கூர்மை என்ற நீதிக்கதையில் ஆடு தன் புத்திக்கூர்மையால் எப்படி சிங்கத்திடமிருந்து தப்பியது என்பதை அறியலாம்.
மரம் வளர்ப்பதன் அவசியத்தை மரத்தின் அவசியம் என்ற நீதிக்கதையின் மூலம் குழந்தைகளுக்குச் சொல்லலாம்.
வீட்டில் சிறுவர், சிறுமியர் இருந்தால் படிக்கச் சொல்லலாம், அல்லது நாம் படித்து அவர்களுக்குச் சொல்லலாம்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
4) இளையநிலா என்ற தளத்தின் ஆசிரியர் சகோதரி இளமதி அவர்கள். இவரது பதிவுகளில் இவரது கவிதையும், க்விலிங் வேலைப்பாடும் மிகப் பிரபலமானவை. அதனுடனேயே மேலும் ஒரு சிறு கவிதையும், பதிவோடு பகிரும் பதிவர் என்று, வலையுலகில் இருந்து, திறமையான பதிவர்களில் ஒருவரைத் தேர்வு செய்து அறிமுகமும் செய்து வைக்கிறார்.
இவரது பதிவுகள் முழுவதும் கவிதைகள் கொட்டிக் கிடக்கின்றன. பதிவுலகில் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் தோழி இளமதி, மேலும்மேலும் இனிமையான கவிதைகளைப் படைத்து உலகப் புகழடைய வாழ்த்துவோம்! !
'"""""""""""""""""""""""""""""""""""
5) திரு.ரூபன் அவர்களின் வலைத்தளம் ரூபனின் எழுத்துப்படைப்புக்கள். இவர் கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி என ஆரோக்கியமான முறையில் போட்டிகள் வைத்து, திறமையான நடுவர்களைக்கொண்டு, தேர்ந்தெடுத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கிக்கொண்டிருக்கிறார்.
தற்போது தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப்போட்டியை அறிவித்திருக்கிறார். அவரது முயற்சியில் வெற்றிபெற வாழ்த்துவோம்.
"""""""""""""""""""""""""""""""""""""""""""
6) திருமதி லக்ஷ்மி பாலகிருக்ஷ்ணன் அம்மா அவர்களின் வலைப்பூ மலர்வனம். இங்கு இலக்கியம், கதைகள், கட்டுரைகள், சமையல் குறிப்புகள் என ஏராளமாக உள்ளன.
கணவன்,மனைவி இரண்டு பேருமே வேலைக்குப் போனாலும், சுமை என்னவோ மனைவிக்குதான் என்பதை புரிதல் என்ற தலைப்பிலுள்ள இந்தக்கதை கூறுகிறது.
இவர் செய்த திணை அடை/தோசையை வீட்டிலுள்ளவர்கள் வாயைத் திறக்காமலேயே சாப்பிட வைக்க இவர் செய்யும் தந்திரம்தான் என்ன ! அது என்ன என்பதை நாமும் தெரிந்துகொண்டு நம் வீட்டிலும் அதை செயல்படுத்திப் பார்ப்போமே !
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
7) ஆசிரியர் மோகன்குமார் அவர்களின் வலைப்பதிவு வீடுதிரும்பல். அனுபவங்கள், பயணக்கட்டுரைகள், சிறுகதைகள், சினிமா விமர்சனங்கள் போன்ற எண்ணற்றவை பொதிந்துள்ளன இவரது பதிவுகளில்.
இணையமே கதியாகக் கிடப்பவர்களுக்கானது இணையப் பித்து என்ற இந்தப்பதிவு. சிந்திக்க வேண்டிய விஷயம்தான்.
ஆட்டோவில் போவதென்றாலே ஒரு சுகம்தான். சமயங்களில் முகம் சுளிக்கும்படியான நிகழ்வுகளும் நடப்பதுண்டு. ஆனால் சென்னையை கலக்கும் நம்ம ஆட்டோ - நிறுவனர் அப்துல்லா அவர்களுடைய சேவை மனப்பான்மையைக் காண இங்கே போய்த்தான் வாருங்களேன்.
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
8) எழுத்தாளரின் பெயரிலேயே உள்ளது ஆறுமுகம் அய்யாசாமி என்ற வலைப்பூ.
இவர் ஓர் அடிமையாம், இவரது பலவீனங்கள்தான் என்னென்ன? உறவுகளைப் பற்றிய அழகான கவிதை 'அடிமையின் பலம்!' என்ற தலைப்புடன். விருப்பத்தின்பேரில் தன் உறவுகளுக்கு எப்படியெல்லாம் தான் அடிமையாக இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது இந்த கவிதை.
விசேஷங்களுக்குப் போனால் மொய்யை எழுதி(அழுது)விட்டு வருவார்கள் என கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அந்த மொய்யை நோட்டுப் புத்தகத்தில் எழுதுபவர்களின் நிலையைப் பற்றிக் கவலைப்பட்டுள்ளோமா ? இங்கே 'மொய்யெனப்படுவது…!' என்ற தலைப்பில் நகைச்சுவையாகக் கூறி நம்மை சிரிக்க வைத்துவிடுகிறார்.
புதிதாக எழுத ஆரம்பித்திருக்கும் இவர் மேலும் சிறக்க வாழ்த்துகள்.
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன், நன்றி !!
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

|
|
அன்பின் சித்ரா சுந்தர் - அருமையான அறிமுகங்கள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete
Deleteபாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி ஐயா.
த.ம : 1
ReplyDelete//1) திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களின் வலைத்தளம் பக்தி மணம் கமழும் மணிராஜ். தினமும் ஒரு பதிவென வருடம் முழுவதும் வந்துகொண்டே இருக்கிறது. தினமும் ஒருமுறை இந்த வலைப்பதிவுக்கு வந்து, வெளியாகியுள்ள கடவுளை வணங்கி மனமகிழ்ச்சியுடன் அன்றைய நாளைத் துவங்கலாம். அன்றன்று வரும் விசேஷங்களின் தன்மைக்கேற்ப பதிவுகளாக வருவது இன்னும் சிறப்பு. இவர்களின் பணி மகத்தானது. வாழ்த்துகள்.//
ReplyDeleteஇதை முதன்முதலாக இன்று இங்கு பார்ப்பது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.;)
அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளதற்கு மிக்க நன்றி.
வை.கோபாலகிருஷ்ணன் ஐயா,
Deleteவாங்க. ஒரு பதிவை முடிக்கவே அல்லாடும்போது, இவர் எப்படி ஒவ்வொரு நாளையும் குறித்துவைத்து அந்தந்த நாட்களுக்கேற்ப படங்கள் முதல் எழுத்துகள் வரை தயார் செய்கிறார் என்பது ஆச்சர்யமாக இருந்ததெனக்கு.
வந்து உங்கள் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி ஐயா.
என் பேரன்புக்கும், பெரும் மரியாதைக்கும் உரிய என் அம்பாளைப்பற்றி, மேலும் தாங்கள் அறிய கீழ்க்கண்ட என் பதிவுக்கு அவசியம் வாங்கோ, ப்ளீஸ்:
Deleteதலைப்பு:
ஆயிரம் நிலவே வா ....... ஓர் ஆயிரம் நிலவே வா !!,.
இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2013/08/blog-post.html
//4) இளையநிலா என்ற தளத்தின் ஆசிரியர் சகோதரி இளமதி அவர்கள். இவரது பதிவுகளில் இவரது கவிதையும், க்விலிங் வேலைப்பாடும் மிகப் பிரபலமானவை. அதனுடனேயே மேலும் ஒரு சிறு கவிதையும், பதிவோடு பகிரும் பதிவர் என்று, வலையுலகில் இருந்து, திறமையான பதிவர்களில் ஒருவரைத் தேர்வு செய்து அறிமுகமும் செய்து வைக்கிறார்.
ReplyDeleteஇவரது பதிவுகள் முழுவதும் கவிதைகள் கொட்டிக் கிடக்கின்றன. பதிவுலகில் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் தோழி இளமதி, மேலும்மேலும் இனிமையான கவிதைகளைப் படைத்து உலகப் புகழடைய வாழ்த்துவோம்! !//
இதையும் இன்று இங்கு பார்ப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.;)
நிச்சயமாக உலகப்புகழடையும் அனைத்துத் திறமைகளும் உள்ளவர்கள் தான்.
அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளதற்கு மிக்க நன்றி.
வை.கோபாலகிருஷ்ணன் ஐயா,
Deleteவாங்க. உங்கள் மகிழ்ச்சியையும், பாராட்டுகளையும் தெரிவித்ததற்கு நன்றிங்க.
அல்லாமே சோக்கா கீதும்மே...
ReplyDeleteதிருமதி இராஜராஜேஸ்வரி அவர்களை என்னால் மறக்க இயலாது. என்னுடைய தளத்தில் முதலில் இணைந்தவர்களில் அவரும் ஒருவர்...
//அறிமுகப் பதிவர்களிடத்தில், அவர்கள் அறிமுகமான தகவலைக் கொண்டுசேர்த்த திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும், திரு.ரூபன் அவர்களுக்கும் நன்றி பல. //
இவர்கள் இருவரின் சேவை அளப்பரியது...
அல்லாத்துக்கும் வாய்த்துக்கள்பா...
வாங்க முட்டா நைனா,
Deleteநேரத்த செலவிட்டு இதை செய்வது எவ்வளவு பெரிய விஷயம் ! அவர்களின் சேவை அளப்பரியதுதான். உங்கள் மலரும் நினைவுகளுடன்,கருத்துகளையும் பகிர்ந்துகொண்டு, வாழ்த்துகளையும் வாரி வழங்கியதற்கு நன்றிங்க.
சிறந்த பதிர்வர்களைப் பற்றிய தொகுப்பு
ReplyDeleteஅருமை..
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
வலைச்சரப் பணியினை திறம்பட
செயலாற்றி முடித்திருக்கும் உங்களுக்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மகேந்திரன்,
Deleteவாங்க, உங்கள் பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.
1) திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களின் வலைத்தளம் பக்தி மணம் கமழும் மணிராஜ். தினமும் ஒரு பதிவென வருடம் முழுவதும் வந்துகொண்டே இருக்கிறது. தினமும் ஒருமுறை இந்த வலைப்பதிவுக்கு வந்து, வெளியாகியுள்ள கடவுளை வணங்கி மனமகிழ்ச்சியுடன் அன்றைய நாளைத் துவங்கலாம். அன்றன்று வரும் விசேஷங்களின் தன்மைக்கேற்ப பதிவுகளாக வருவது இன்னும் சிறப்பு. இவர்களின் பணி மகத்தானது. வாழ்த்துகள்//
ReplyDeleteஎமது பணியை சிறப்பித்து அறிமுகம் செய்தமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..!
ராஜராஜேஸ்வரி,
Deleteவாங்க, தங்களின் வருகைக்கும், பாராட்டுகளுக்கும் நன்றிங்க.
ஆலயம் கண்டேன் - இன்று தான் கண்டேன்... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
சிறப்பாக ஆசிரியர் பணியை முடித்தீர்கள்... பாராட்டுக்கள்... நன்றி... வாழ்த்துக்கள் பல...
திண்டுக்கல் தனபாலன்,
Deleteவாங்க,வாழ்த்துகளுக்கும், பாராட்டுகளுக்கும், உங்களின் சேவை மனப்பான்மைக்கும் மிகப்பெரிய நன்றிங்க.
இந்த வாரம் முழுதும் கலகலப்பாக அறிமுகங்கள் செய்து - விடை பெறும் தங்களுக்கு நல்வாழ்த்துக்கள்!..
ReplyDeleteதுரை செல்வராஜூ,
Deleteவாங்க, தங்களின் பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.
பதிவுலக அன்பர்களுக்கு வணக்கம். என்னையும், என் கவிதை, கட்டுரையையும் , பதிவுலக அன்பர்களுக்கு அறிமுகப்படுத்திய திருமதி சித்ரா சுந்தர் அவர்களுக்கு நன்றிகள் பல. நீண்ட காலமாகவே பதிவு எழுத வேண்டும் என்ற எண்ணம் இருந்தபோதும் இப்போது தான் அது நிறைவேறியுள்ளது. உங்கள் அன்பும் ஆதரவும், தொடர்ந்து எழுதுவதற்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளன. திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் என் வணக்கங்கள்.
ReplyDeleteஆறுமுகம் அய்யாசாமி,
ReplyDeleteவாங்க, வந்து உங்கள் கருத்துகளையும் இங்கே பகிர்ந்துகொண்டதற்கு நன்றிங்க. நீங்கள் நினைப்பது போலவே மேலும் சிறப்படைய வாழ்த்துகள்.
சிறப்பான அறிமுகங்கள்.... அனைவருக்கும் வாழ்த்துகள்..
ReplyDeleteஇந்த வாரம் சிறப்பான வாரமாக அமைந்தது... பாராட்டுகள்..
வாங்க ஆதிவெங்கட்,
Deleteதங்கள் பாராட்டுக்கும், வழ்த்திற்கும் நன்றிங்க. மேலும் இந்த ஒரு வாரமும் கூடவே பயணம் செய்துவந்ததற்கும் நன்றிங்க.
ஆலயம் கண்டேன் தமிழ் பதிவை அறிமுகம் செய்தமைக்கு சகோதரி சித்ராவுக்கு நன்றி. உங்கள் ஊக்கம் என்னை மேலும் தமிழில் எழுத தூண்டுகிறது. திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் நன்றி.
ReplyDeleteவாங்க ப்ரியா பாஸ்கரன்,
Deleteமீண்டும் எழுத ஆரம்பிப்பதற்கு வாழ்த்துகள் + மகிழ்ச்சி. திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களின் சேவையும் பாராட்ட வேண்டிய ஒன்று. நன்றிங்க.
மிக சிறப்பாக ஆசிரியர் பணியை முடித்தீர்கள்.
ReplyDeleteபாராட்டுக்கள்.வாழ்க வளமுடன்
வாங்க சத்யா நம்மாழ்வார்,
Deleteதங்கள் பாராட்டுக்கும், வாழ்த்திற்கும் நன்றிங்க.
வணக்கம் தோழி!
ReplyDeleteஉங்கள் வலைச்சர ஆசிரியப் பணி சிறப்பாக முடிவடையும் தருணத்திலும்
என்னையும் இங்கு அறிமுகப் படுத்தி ஊக்குவித்துள்ளீர்களே... மிக்க மகிழ்ச்சி!
உங்கள் அன்பிற்கு என் உளமார்ந்த நன்றிடன் வாழ்த்துக்களும் தோழி!
தகவலை என் தளத்தில் தெரிவித்த வை.கோ ஐயா, சகோதரர் தனபாலன் ஆகியோருக்கும் இனிய நன்றி!
என்னுடன் இங்கு அறிமுகமாயிருக்கும் சக பதிவர்களுக்கும்
அன்பான நல் வாழ்த்துக்கள்!
வாங்க இளமதி,
Deleteஉங்கள் பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிங்க. மேலும் உங்களிடமிருந்து சந்தோஷ கீதங்களாகவே வெளிவர வேண்டும் என்பதே ஆவல்.
நல்ல பதிவர்களை அறிமுகம் செய்த உங்களுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteவாங்க மது,
Deleteதங்களின் பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.
வாரம் முழுவதும் நல்ல அறிமுகங்கள்......
ReplyDeleteஅறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.
ஆசிரியர் பணியைச் செவ்வனே செய்திட்ட உங்களுக்கு பாராட்டுகள்.
வாங்க வெங்கட் நாகராஜ்,
Deleteநீங்களெல்லாம் கொடுத்த ஊக்கம்தான் இந்த ஒரு வார காலமும் கூடவே வந்து தைரியத்தைக் கொடுத்தது. தங்களின் பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.
இந்த வாரம் பகிர்வுகளும் பகிர்ந்த விதமும் மிக அசத்தல் சித்ரா,பாராட்டுக்கள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாங்க ஆஸியா ஓமர்,
Deleteதங்கள் நேரத்தில் சிறிது ஒதுக்கி தினமும் வந்து உற்சாகமான வார்த்தைகளைக் கூறி வாழ்த்தியும், பாராட்டியும் சென்றது மகிழ்ச்சிங்க, நன்றியும்கூட.
இன்றும்,என்றும் உன் வலைச்சர வாரம் மிகவும் அழகாகப் போய்க்கொண்டிருக்கும் எல்லார் மனதிலும். இன்று குறிப்பிடப்பட்ட யாவருக்கும் வாழ்த்துகள். உனக்கும்,நல் வாழ்த்துகள். அன்புடன்
ReplyDeleteவாங்க காமாக்ஷிமா,
Deleteஉங்கள் கருத்துடன் பாராட்டையும், வாழ்த்தையும் வாரிவழங்கியதில் மகிழ்ச்சிம்மா. இந்த ஒரு வாரமும் இதற்காக நேரத்தை ஒதுக்கி வந்து பார்வைய்ட்டது பெரிய விஷயம், நன்றிமா, அன்புடன் சித்ரா.
இன்றைய வலைச்சரத்தில் இருவர் புதியவர். இப்போதுதான் இங்கு வரமுடிந்தது. எல்லோரையும் போய்பார்த்து வாழ்த்து சொல்லிவிட்டு வருகிறேன்.
ReplyDeleteநீங்கள் அறிமுகப்படுத்தி நாங்களும் நிறைய பேர்களை அறிந்தோம். அதேபோல உங்களுக்கும் நிறைய நண்பர்கள் கிடைத்திருப்பார்கள். இந்த ஒரு வாரம் மறக்கமுடியாததாக இருந்திருக்கும், உங்களுக்கும், இல்லையா?
இதைபோல பலரையும் முன் நிறுத்தி வலைச்சரம் என்ற ஒன்றை தொடர்ந்து நடத்திவரும் அன்பின் சீனா அவர்களுக்கு நம் எல்லோருடைய அன்பும், வணக்கங்களும்.
வெற்றிகரமாக ஆசிரியர் பணியை முடித்ததற்கு வாழ்த்துகள், சித்ரா!
வாங்க ரஞ்ஜனி,
Deleteஅறிமுகம் இல்லாதவர் என்றில்லாமல் அனைவரும் வந்து உற்சாகப்படுத்தியது மறக்கமுடியாதது. நீங்கள் எல்லாம் கூடவே இருந்த தைரியத்தாலும், கொடுத்த உற்சாகத்தாலும்தான் என்னால் இந்த ஒரு வாரத்தைத் தாக்குப்பிடிக்க முடிந்தது.
நிச்சயமாக நிறைய அறிமுகங்கள் கிடைத்துள்ளனர். நேரமின்மையால் பின்னூட்டமிட்டவர்களின் தளங்களுக்குப் போக முடியவில்லை. இனி பொறுமையாக உலா வருவேன். சரியாச்சொன்னீங்க, சீனா ஐயாவின் பணி மகத்தானதுதான், இல்லையென்றால் இவ்வளவு பேரையும் ஒருசேர இங்கே பார்க்க முடியுமா !
உங்க வாழ்த்துகளுக்கும், பாராட்டுகளுக்கும் என்றைக்கும் நன்றிங்க.
திருமதி ராஜராஜேஸ்வரியின் வலைத் தளம் நீங்கள் சொல்வது போல் பக்தி மனம் கமழும் தளம்.
ReplyDeleteஆசிரியப் பணியை சிறப்பாக செய்து முடித்து விட்டீர்கள். பாராட்டுக்கள்.
அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
வாங்க ராஜலக்ஷ்மி,
Deleteஆமாங்க, சில சமயங்களில் சில விசேஷங்களை ராஜேஸ்வரி அவர்களின் தளத்தை வைத்துதான் கண்டுபிடிப்பேன். போனால் பக்தி மயமாக இருக்கும்.
நீங்க இந்த ஒரு வாரம் முழுவதும் கூடவே வந்து உற்சாக வார்த்தைகளைக்கூறி வாழ்த்தியும், பாராட்டியும் சென்றதில் மகிழ்ச்சி + நன்றிங்க.
அறிமுகத்திற்கு நன்றி.
ReplyDeleteவாங்க லக்ஷ்மிம்மா,
Deleteதாங்கள் வந்து கருத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு மகிழ்ச்சிங்க.
மிக அழகாக, எளிமையான வரிகளால் பல புதிய
ReplyDeleteதளங்களை அறிமுகம் செய்து...
இந்த ஒரு வாரம் முழுவதும் விருந்து
படைத்திட்டீர்கள்.
சிறப்பான பணி செய்தீர்கள். நல்வாழ்த்துக்கள்.
வாங்க அ. முஹம்மது நிஜாமுத்தீன்,
Deleteதங்களது பாராட்டுகளுக்கும், நல்வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.
வணக்கம்
ReplyDeleteஇன்று வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கு வாழ்த்துக்கள் இன்று என்னுடைய தளத்தையும் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாங்க ரூபன்,
ReplyDeleteஉங்களின் வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.
I came here today. I read all your blog introductions. Very nice your blog too.
ReplyDelete