வருகிறது புத்தகக் கண்காட்சி!
➦➠ by:
பாலகணேஷ்
பயிர் பப்ளிகேஷன்ஸ் அதிபர் பச்சையப்பன் தன் லேப்டாப்பில் எதையோ செய்து கொண்டிருக்க, உள்ளே வருகிறார் அவரின் நண்பர் எழுத்தாளர் ஏகலைவன். ‘‘என்ன பச்சை...? இப்பல்லாம் கடும் பிஸியாயிட்ட போலருக்கு...’’ என்கிறார். ‘‘வாய்யா... அடுத்த மாசம் 10ம் தேதிலருந்து புத்தகக் கண்காட்சி ஆரம்பிக்கப் போவுது, தெரியும்ல... புதுசா ஏழெட்டு டைட்டில் ரிலீஸ் பண்ணலாம்னு ஆசை. அதான் இன்னிக்குத் தேதியில என்ன மாதிரி புக் போட்டா விக்கும்னு ஒரு சின்ன சர்வே எடுத்துட்டிருந்தேன். உமக்கு எதும் ஐடியா இருந்தா சொல்லுமேன்...’’
‘‘அதுக்கென்ன... எனக்குத் தெரிஞ்ச ஒரே ஒரு நல்ல எழுத்தாளர் இருக்காரு. அவரு பேரு ஏகலைவன். அவரோட புக்ஸைப் போடேன்...’’ என்க, ‘‘அடேய்... ‘நல்ல’ன்னு அடைமொழி குடுத்தா உன் பேர் எப்படிடா வரும்? உன் புக்ல்லாம் நிறைய ஸ்டாக் இருக்கு. இந்த வருஷத்து புது புத்தகங்களோட இலவச இணைப்பாக் குடுத்துரலாமான்னுல்ல யோசிச்சுட்டிருக்கேன்... உருப்படியா ஏதாச்சும் சொல்றா...’’ என்கிறார் பச்சை. ‘‘ஹும்...! ரைட்டருக்கு சரியா ராயல்டி குடுத்தால்ல நல்ல சப்ஜெக்டா எழுதித்தரத் தோணும்? நீ சிங்கிள் டீ வாங்கித் தர்றதுக்கே யோசிக்கற ஆசாமியாச்சே!’’ என்று பதிலுக்கு வாருகிறார் ஏகா. பின், ‘‘இதோபாரு... இப்பல்லாம் இணையத்துல எழுதறவங்க நிறையப் பேரு நல்லாவே எழுதறாங்க. அந்த மாதிரி ரைட்டர்ஸோட புக்கைக் கொண்டு வாயேன்...’’ என்கிறார்.
‘‘என்னய்யா சொல்ற? இணையத்துல வந்ததை தொகுத்து புத்தகமாக்கறதா? சரியா வருமா இது?’’ என்று பச்சை சந்தேகமாகக் கேட்க... ‘‘நல்லா வரும்ப்பா....’’ என்று அருகில் வந்து அவர் லேப்டாப்பில் நெட்டை ஓபன் செய்கிறார். ‘‘இந்தத் தளத்தைப் பாரு. இதுல ‘தினம் ஒரு பா’ அப்படின்னு எழுதின அத்தனை பதிவுகளையும் தொகுத்து இப்ப புத்தகமாப் போட்டிருக்காங்க. சூப்பரா இருக்குது’’ என்று காட்டுகிறார்.
‘‘அட... நல்லாத்தான் இருக்குது. இதுதான் புத்தகமாய்டுச்சுங்கறியே... வேற ஏதாச்சும் சொல்லேன் பாக்கலாம்...’’
‘‘அதுக்குத்தானே வர்றேன்... பச்சை, இந்தத் தளத்துல பாரு. ஜோதிட சாஸ்திரத்தைப் பத்தின கட்டுரைகளும், தகவல்களும் கொட்டிக் கிடக்கு. இதையெல்லாம் பர்மிஷன் வாங்கி தொகுத்துப் போட்டேன்னா நல்லாயிருக்கும்பா...’’
‘‘அதுக்கென்ன... எனக்குத் தெரிஞ்ச ஒரே ஒரு நல்ல எழுத்தாளர் இருக்காரு. அவரு பேரு ஏகலைவன். அவரோட புக்ஸைப் போடேன்...’’ என்க, ‘‘அடேய்... ‘நல்ல’ன்னு அடைமொழி குடுத்தா உன் பேர் எப்படிடா வரும்? உன் புக்ல்லாம் நிறைய ஸ்டாக் இருக்கு. இந்த வருஷத்து புது புத்தகங்களோட இலவச இணைப்பாக் குடுத்துரலாமான்னுல்ல யோசிச்சுட்டிருக்கேன்... உருப்படியா ஏதாச்சும் சொல்றா...’’ என்கிறார் பச்சை. ‘‘ஹும்...! ரைட்டருக்கு சரியா ராயல்டி குடுத்தால்ல நல்ல சப்ஜெக்டா எழுதித்தரத் தோணும்? நீ சிங்கிள் டீ வாங்கித் தர்றதுக்கே யோசிக்கற ஆசாமியாச்சே!’’ என்று பதிலுக்கு வாருகிறார் ஏகா. பின், ‘‘இதோபாரு... இப்பல்லாம் இணையத்துல எழுதறவங்க நிறையப் பேரு நல்லாவே எழுதறாங்க. அந்த மாதிரி ரைட்டர்ஸோட புக்கைக் கொண்டு வாயேன்...’’ என்கிறார்.
‘‘என்னய்யா சொல்ற? இணையத்துல வந்ததை தொகுத்து புத்தகமாக்கறதா? சரியா வருமா இது?’’ என்று பச்சை சந்தேகமாகக் கேட்க... ‘‘நல்லா வரும்ப்பா....’’ என்று அருகில் வந்து அவர் லேப்டாப்பில் நெட்டை ஓபன் செய்கிறார். ‘‘இந்தத் தளத்தைப் பாரு. இதுல ‘தினம் ஒரு பா’ அப்படின்னு எழுதின அத்தனை பதிவுகளையும் தொகுத்து இப்ப புத்தகமாப் போட்டிருக்காங்க. சூப்பரா இருக்குது’’ என்று காட்டுகிறார்.
‘‘அட... நல்லாத்தான் இருக்குது. இதுதான் புத்தகமாய்டுச்சுங்கறியே... வேற ஏதாச்சும் சொல்லேன் பாக்கலாம்...’’
‘‘அதுக்குத்தானே வர்றேன்... பச்சை, இந்தத் தளத்துல பாரு. ஜோதிட சாஸ்திரத்தைப் பத்தின கட்டுரைகளும், தகவல்களும் கொட்டிக் கிடக்கு. இதையெல்லாம் பர்மிஷன் வாங்கி தொகுத்துப் போட்டேன்னா நல்லாயிருக்கும்பா...’’
‘‘ரைட்டு... இதை புக்மார்க் பண்ணி வெச்சுக்கறேன்...’’ என்று பச்சை சொல்ல... ‘‘புக் பப்ளிஷர் புக் மார்க் பண்றியா? குட்’’ என்று கடிக்கிறார் ஏகா. ‘‘இந்த சப்ஜெக்ட் ஓ.கே.டா. இன்னும் நாலஞ்சு சப்ஜெக்ட் சஜஸ்ட் பண்ணேன்... நிறைய புத்தகங்கள் போடறதா ஐடியா இருக்குன்னு சொன்னேன்ல...?’’ என்கிற பச்சையிடம், ‘‘இன்னிக்கு விஞ்ஞானம் வளர வளர வியாதிகளும் வளர்ந்துட்டேதான் வருது. அதுனால மெடிக்கல் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் போட்டா நிச்சயம் சூப்பராப் போகும். இந்தத் தளத்துல போய்ப் பாரேன்... சித்த மருத்துவம் பத்தின கலைக் களஞ்சியம்னே சொல்லலாம்... அவ்வளவு தகவல்கள் இருக்குது. அப்படி இல்லன்னா... பூங்குழலி மாதிரி டாக்டர்கள் இப்ப இணையத்துல அருமையா எழுதறாங்க. அவங்களை புத்தகம் எழுதச் சொல்லி வாங்கிப் போடலாம் நீயி...!’’
‘‘நல்ல ஐடியாதான்யா. இத்தோட சேர்த்து சமையல் குறிப்புகள் புத்தகம் ஒண்ணும் வெளியிடலாம்னு இருக்கேன். அதுக்கு எதும் சைட்ல இருக்குதா?’’ என்க, ‘‘தோ பாரு பச்சை... இணையத்துல சமையல் குறிப்பு தர்ற தளங்கள் எக்கச்சக்கமா இருக்குது. அந்த சப்ஜெக்ட் நீ வெளியிடறது விசேஷமேயில்ல... ஏகப்பட்ட பப்ளிகேஷன்ல சமையல் புக்ஸ் வந்திட்டிருக்கு. அதனால சமையல் குறிப்புகளைவிட சாப்பாட்டு ரசனையைப் பத்தி நீ ஒரு புத்தகம் போடேன்...’’ என்கிறார் ஏகா.
‘‘என்னது... சாப்பாட்டு ரசனையைப் பத்தியே போடறதா? எனக்குப் புரியலை...’’ என்கிறார் பச்சை.
‘‘ரைட்டு... சொன்னா சட்டுன்னு புரிஞ்சுக்கறதுக்கு வேண்டிய சமாச்சாரம் உன்தலையில இல்லன்னு எப்பவோ எனக்குத் தெரியும். இந்தத் தளத்தைப் பாரு... இதைப் படிச்சாலே உனக்கு ரசனைன்னா என்னன்னு புரிஞ்சிடும்...’’ என்கிறார். பச்சை பொறுமையாகப் படித்துவிட்டு, ‘‘சூப்பரா இருக்குய்யா... அப்பப்ப நீகூட உருப்படியா ஏதோ படிக்கற போலருக்கு...’’ என்று அவர் தோளில் தட்ட, ‘‘இதையும் கொஞ்சம் பாரு. கிச்சன் சாப்பிடறதை... ச்சே, சிக்கன் சாப்பிடறதுங்கற விஷயத்தை என்னமா எழுதியிருக்காங்க...’’ என்று வேறொரு தளத்தைக் காட்டுகிறார்.
‘‘இதையும் பண்ணிரலாம். சினிமா பத்தின புத்தகம் ஏதாவது போடலாமான்னும ஒரு ஐடியா இருக்குது.’’ என்று பச்சை துவக்கவுமே உற்சாகமாகிறார் ஏகா. ‘‘நானும் இதைத்தான் சொல்லலாம்னு இருந்தேன். சினிமா சம்பந்தப்பட்ட விஷயங்கள்ன்னாலே ஒரு தனி சுவாரஸ்யம் ஜனங்ககிட்ட இருக்கத்தான் செய்யுது. இதைப் பாரு... சினிமாப் பாடல்களை என்னா நுணுக்கமா ரசிச்சு எழுதிட்டிருக்காரு என்.சொக்கன் ஸார். ஒவ்வொரு பாட்டைப் பத்தியும் அவர் எழுதறதப் படிக்கறப்ப கைதட்டிப் பாராட்டத்தான் தோணுது. இதைப் புத்தகமாக்கலாம் நீயி. இல்லயா... சினிமாவைப் பத்தியும், அதன் இயக்குனரைப் பத்தியும் இந்தக கட்டுரையில அருமையா அலசியிருக்காரு பாரு ஜீ! இது மாதிரி ஆர்ட்டிக்கிளைத் தொகுத்துப் போடலாம்.’’
‘‘அப்பப்ப நீகூட நல்ல விஷயம்லாம் சொல்றே...’’ என்று பச்சை சிரிக்க, ‘‘இன்னொரு ஐடியாவும் கைவசம் உண்டு. பழைய ஆனந்தவிகடன், குமுதம் பத்திரிகைகள்ல வந்த சினிமா விமர்சனங்கள்ல்லாம் இப்ப படிச்சாலும் சுவாரஸ்யமா இருக்கு. அதுமாதிரி பார்த்து ரசிக்கற பழைய படங்களைப் பத்தி இந்தத் தளத்துல தொடர்ந்து எழுதிட்டிருக்காரு ஒருத்தரு. படிக்கப் படிக்க நாமல்லாம் மிஸ் பண்ணின பழைய படங்களைப் பாத்துரணும்னு ஆசையே வந்துருது. இதை மாதிரி கட்டுரைகளைத் தொகுத்துப் புத்தகமாக்கினா எனக்கு வந்த அதே ஃபீல் படிக்கிறவங்களுககும் வரும். வந்தா... புத்தகம் நிறைய விக்கும்’’
‘‘<உனக்கும் எனக்கும் வேணும்னா விக்கும். புத்தகம் எப்படிரா விக்கும்?’’ என்று பச்சை கேட்க, ‘‘சரிசரி... நீ கடிக்க ஆரம்பிச்சன்னா நான்ஸ்டாப்பால்ல போயிட்டிருப்ப... என்கிட்டயும் ரெண்டு புத்தகம் எழுதித்தரச் சொல்லி ஒரு ‘நல்ல’ பதிப்பகம் கேட்ருக்கு. இந்த சமயத்துல எழுதி நாலு காசு பாத்தாத்தான் உண்டு. மீ எஸ்கேப்ரா...’’ என்றபடி ஓடுகிறார் ஏகா.
|
|
பதிப்பாளர் பச்சையப்பன் அவர்களுக்கு சீக்கிரமா பணக்காரன் ஆவது எப்படி ? அப்படிங்கற புக்கைதான் மக்கள் பலபேர் தேடிட்டிருக்காங்க...என்ன செய்வது வலைதளத்தில எழுதிட்டிருக்கும் யாரும் அது மாதிரி குறுக்கு வழியை எதிர்பார்க்காத நல்லவங்க ..அதனால இங்க கிடைக்காது ... எங்காவது புடிச்சி புத்தகம் போடுங்க...விக்குமோ விக்கும்...
ReplyDeleteஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.....
புத்தக ஐடியாவும் தந்து அறிமுகங்களையும் வாழ்த்தின உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!
DeletePrakash Shankaran அவர்களின் தளம் புதிது... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteபுதிய அறிமுகத்தை ரசித்து அனைவரையும் வாழ்த்தின டி.டி.க்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteபல தளங்கள் எனக்குப் புதியவை கணேஷ். ஒவ்வொருவராக படிக்க வேண்டும். படிக்கிறேன்.
ReplyDeleteத.ம. 3
பொறுமையாகப் படித்து ரசியுங்கள் நண்பா! மிக்க நன்றி!
Deleteவிதம் விதமான அறிமுகங்கள்... இரண்டு தளங்கள் புதியவை.... அனைவருக்கும் வாழ்த்துக்கள்....
ReplyDeleteஅனைவரையும் வாழ்த்திய ஸ்.பை.க்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteஎல்லோருக்கும் வாழ்த்துகள்!
ReplyDeleteமிக்க நன்றி ஆனந்து!
Delete"பழைய ஆனந்தவிகடன், குமுதம் பத்திரிகைகள்ல வந்த சினிமா விமர்சனங்கள்ல்லாம் இப்ப படிச்சாலும் சுவாரஸ்யமா இருக்கு" ரொம்ப ரொம்ப அழகா சொன்னீங்க... அந்த காலத்தில் சிவாஜியின் நடிப்பை எப்படி மதிப்பிட்டாங்க, இளையராஜாவைப் பத்தி ஆரம்ப காலத்துல என்ன நெனச்சாங்க அப்படீங்கறதை எல்லாம் ஆர்வமான கவனிப்பவன் நான்... அறிமுகங்கள் அனைத்தும் அருமை...அதை கதை போன்ற நடையில் சொல்லும் அழகு அதனினும் அழகு....என் தளத்தையும் அறிமுகம் செய்ததற்கு மனமார்ந்த நன்றி
ReplyDeleteஉங்களின் விமர்சனங்களை ரசித்த என் நடையை ரசித்து வாழ்த்திய உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!
Deleteவணக்கம்
ReplyDeleteஎனது தளத்தை வெளியிட்டதற்க்கு மிக்க நன்றி.
மகிழ்வு தந்த உங்களின் வருகைக்கு மனம் நிறைய நன்றி!
Deleteஅருமையான தளங்கள்
ReplyDeleteஅறிமுகத்திற்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
அறிமுகங்களை வாழ்த்திய உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி!
Deleteசோக்கா கீதுபா... புச்சாகீற எயித்தாளர் அல்லாத்துக்கும் வாத்துக்கள்பா... ஏம்பா மிஸ்டர் பச்சை... நம்ப கைல கோவை ஆவின்னு ஒரு எயித்தாளர் கீறார்பா... சோக்கா கதை எய்துவார்பா... அவுரு கதெலாம் ஒரு பொஸ்தகமா போடுபா... அப்பால... நம்பளே மாறி அப்ப்ரசண்டு பதிவர்களையும் கொஞ்சம் கண்டுக்கபா... பொஸ்தகமா போட மிடியாட்டியும், நோட்டீசு... இல்லாங்கட்டி விசிட்டிங் கார்டு அத்து மாறி போட்டு விடுபா...
ReplyDeleteஅல்லாரையும் வாழ்த்தின நைனாவுக்கு சந்தோஸமா டாங்க்ஸ்!
Deleteஅறிமுகப்படுத்தபட்ட அனைத்து வலைப்பூதாரர்களுக்கும் வாழ்த்துகக்ள்.
ReplyDeleteவாழ்த்திய தங்கைக்கு மகிழ்வுடன் என் நன்றி!
Deleteநன்றி! நீங்கள் அறிமுகப்படுத்திய தளங்களை விரைவில் படிக்கிறேன்!
ReplyDeleteபடியுங்கள் ஜீ! உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!
Deleteபதிப்பாளரும் எழுத்தாளரும் சந்தித்துக் கொண்டதில் பயனடைந்தது - நாங்கள் தான்!..
ReplyDeleteஅவர்களுக்கும் நன்றி!.. தங்களுக்கும் நன்றி!..
பயனடைந்தீர்கள் என்பதில் கொள்ளை மகிழ்வு எனக்கு. மிக்க நன்றி!
Deleteபெட்டகம் தவிர மற்ற அனைத்தும் எனக்கு புதிய தளங்கள்தான்... நன்றி நல்ல தளங்களை அறிமுகப்படுத்தியதற்கு!
ReplyDeleteஅறிமுகங்களை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!
Deleteசுவாரஸ்யமான அறிமுகங்கள்.. பாராட்டுக்கள்..!
ReplyDeleteபாராட்டிய உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி!
Deleteஉங்கள் பாணி மிகவும் சுவையாகவும், வித்தியாசமாகவும் இருக்கிறது, கணேஷ்! திரு சொக்கன் அவர்களின் தளங்களை ஆவலுடன் படித்துவருகிறேன். மற்றவர்களின் தளத்திற்கும் போய் படிக்கிறேன்.
ReplyDeleteவாழ்த்துகள்!
என் பாணியைப் பாராட்டிய உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றிம்மா!
Deleteரசிக்கவைக்கும் பாணியில் பதிவர்களின் அறிமுகப் பதிவு இன்றும் மிக அருமை சகோ!
ReplyDeleteஅனைவருக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்!
என் பாணியைப் பாராட்டி, தொடர்ந்து ரசித்து ஊக்கம்தரும் உங்களுக்கு என் உளம்கனிநத் நன்றி!
Delete
ReplyDeleteநீங்கள் குறிப்பிட்டு இருக்கும் ஜோதிட வலைக்கு சென்று பார்த்தேன்.
கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது.
நிறைய சிரிப்பாக வந்தது.
ஜோதிடத்தை நம்புவது, நம்பாதது அவரவர் கருத்து.
அதில் நீங்கள் குறிப்பிட்ட பதிவில் நான் பார்த்தவை குறித்து என் கருத்துக்களை பின்னூட்டமாகப்போட்டு இருக்கிறேன்.
அதை அவர் பிரசுரிக்கும் வாய்ப்பு இல்லை. அவர் பிரசுரிக்கவேன்டும் என நான் எதிர்பார்க்கவும் இல்லை. உங்களுக்கு வேண்டுமானால், அதன் நகல் ஒன்றை நீங்கள் விரும்பினால் அனுப்புகிறேன்.
இந்தக்காலத்தில் எந்தப்புத்தகம் அதிகமாக விற்கும் என்ற ஒரு நோக்கில் பார்த்தால்,
ஒரு கணிப்பில் .
முதலாவது, சினிமா , இல்லை, சினிமாவில் நடிப்பவர் பற்றிய தகவல்கள்.
இரண்டாவது ஜோதிடம் பற்றியவை.
மூன்றாவது அரசியல்
நான்காவது, ஐந்தாவது, ஆறாவது நிலைகளிலாவது
விஞ்ஞானம், இலக்கியம் மொழி இயல் , மொழி உணர்வு, பொது அறிவு
வருமா என்று பாருங்கள்.
உங்கள் நண்பர் பச்சை அவர்கள் , எது விற்கும் என்பதை விட எதை வெளியிட்டால், அவர் பெயர் உலகில் நிலைத்து நிற்கும் என ஒரு கணம் சிந்தித்து செயல்படுவது நம் நாட்டிற்கும் நம் மொழிக்கும் நன்மை பயக்கும்.
சுப்பு தாத்தா.
ஜோதிடம், ஜாதகம் என்பவற்றைப் பொறுத்தமட்டில் என் கருத்து வேறு சுப்புத் தாத்தா! அதுபற்றி ஆர்வம் உள்ளவர்கள் பயன்பெறட்டுமே என்றுதான் அத்தகைய தகவல்கள் அடங்கிய தளத்தைக் குறிப்பிட்டேன். உங்களின் கருத்தைப் படித்து எனக்குத் தெரிந்ததைப் பகிர்ந்து கொள்ள நான் என்றும் தயார்தான். மிக்க நன்றி!
Deleteஉங்கள் அறிமுகத்திற்கு நன்றி
ReplyDeleteசிறந்த எழுத்துக்குச் சொந்தக்காரரான தங்களைக் குறிப்பிடுவதில் எனக்குத்தான் மகிழ்ச்சி. வருகைக்கு என் மனம் நிறைய நன்றி!
Deleteஉனக்கும் எனக்கும் வேணும்னா விக்கும். புத்தகம் எப்படிரா விக்கும்?’’ என்று பச்சை கேட்க,
ReplyDeleteவார்த்தைகளில் விளையாடறீங்க சார் அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சுவையாய் தந்த உங்களுக்கும் பாராட்டுக்கள்
வார்த்தை விளையாட்டை ரசித்த குடந்தையூராருக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteஎழுத்தாளர்களை அறிமுகம் செய்ய தேர்ந்தெடுத்த களமும் குட்டிச் சிறுகதை போல் இருந்தது...
ReplyDeleteகதை வடிவத்தை ரசித்த சீனுவுக்கு.... மிக்க நன்றி!
Deleteஅட, வித்தியாசமா எவ்வளவு அழகா கதை மாதிரி அறிமுகம் செஞ்சிடிங்க உரையாடல்ல! :) என்னோட, கிச்சன்.. ச்சீ சிக்கன் பதிவையும் அறிமுகம் செஞ்சதுக்கு நன்றிகள்! :)
ReplyDeleteகதை போன்றதொரு அறிமுகப் பாணியைப் பாராட்டிய உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!
Deleteஎழுத்தாளரும் பதிப்பாளரும் பேசிக் கொள்ளும்வண்ணம் உரையாடலை வழங்கியிருப்பது புத்தக் கண்காட்சி அடுத்தமாதம் வரயிருக்கும்நிலையில் மிகப் பொருத்தம்.
ReplyDeleteபாராட்டிய தங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி!
Deleteஅழகா ரசிச்சிப் படிக்க வைத்து பதிவர் அறிமுகத்தையும் ரசனையாய் செய்கிறீர்கள்...
ReplyDeleteஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ரசித்துப் பாராட்டிய, அறிமுகங்களை வாழ்த்தியமைக்கு என் மனம் நிறைய நன்றி!
Deleteஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவரையும் வாழ்த்திய நேசனுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteசிறப்பான அறிமுகங்கள்.... பாராட்டுகள் சார்..
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றி அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஐயா .
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDelete