மார்கழிப் பனியில் - வெள்ளி
➦➠ by:
துரை செல்வராஜூ
பாச மலர்
அனைவருக்கும் வணக்கம்.
நேற்று நான்காவது பதிவில் - வருகை தந்து கருத்துரையை பதிவு செய்து பாராட்டி
மகிழ்ந்த - மகிழ்வித்த, நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத்
தெரிவித்துக் கொள்கின்றேன்.
வலைச்சரத்தில் ஐந்தாம் நாளாகிய இன்றும் - முதலில் ஆலய தரிசனம் செய்வோம்.
வருக - நண்பர்களே!..
பெண்ணிற் பெருந்தக்க யாவுள - என்பது வள்ளுவப் பெருமானின் திருவாக்கு.
கால சுழற்சியில் - சித்திரை முதற்கொண்டு பங்குனி வரையிலான பன்னிரு மாதங்களில், ஆடி - முதல் ஆறு மாதங்கள் தட்சிணாயண புண்யகாலம் என்றும், தை - முதல் ஆறு மாதங்கள் உத்ராயண புண்ய காலம் என்றும் சான்றோர்கள் வகுத்துள்ளனர்.
நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் என்பது குறிப்பு. தட்சிணாயணம் - தேவர்களுக்கு பொழுது சாயும் நேரம் எனில் உத்ராயணம் பொழுது விடியும் நேரம். இந்த -
ஆடி மாதத்தில் - சிறப்பிக்கப்படுவது பெண்மை என்றால்,
மார்கழி மாதம் - பெண்களால் சிறப்பிக்கப்படுகின்றது என்பதே உண்மை.
பாருங்களேன்!.. வானவர்களுக்கு உரிய விடியற்பொழுதான மார்கழி எப்படி எல்லாம் சிறப்பிக்கப்படுகின்றது!..
கொட்டும் பனியில் வாசலில் கோலமிட்டு விளக்கேற்றி அழகு செய்வதிலிருந்து,
கொட்டும் பனியில் வாசலில் கோலமிட்டு விளக்கேற்றி அழகு செய்வதிலிருந்து,
அதுவரையில் கவனிக்கப்படாமல் - சிவனே என்று இருக்கும் தெருக்கோடி பிள்ளையாரையும் விடியற்காலையில் எழுப்பி விட்டு - அவருக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்து -
ஒருநாள் மண்டகப்படி உபயதாரராக இருந்து - தரிசனம் செய்ய வருவோர்க்குப் பொங்கலும் புளியோதரையும் பிரசாதமாகக் கொடுத்து மகிழ்ந்து -
அடடா!.. எத்தனை எத்தனை சந்தோஷங்களை நம் வீட்டுக் கொண்டு வருகின்றார்கள்!..
இதனால் தான் - பெண்மை வெல்க..! - என்று மகாகவி பாரதியார் ஆனந்தக் கூத்தாடினார்.
புகைப் பழக்கத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டு
வேலையை இழந்த நண்பருக்காக உருகும் - மஞ்சுபாஷிணி. தன் வீட்டில் நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றினை விவரிக்கின்றார் - இறைவன் நம்முள் இருக்கிறார். ஷீரடி சாய்நாதர் துணையிருக்கின்றார். என்ற நம்பிக்கையுடன்!..
ஸாதிகா - இவரும் அதே நம்பிக்கையுடன் கூறுகின்றார்.
அல்லாஹ் ஒருபோதும் கைவிட மாட்டான்!... -
என் நண்பர் திரு. இஸ்மாயில் அவர்கள் - இலங்கை சென்று வரும் போதெல்லாம் கொண்டு வரும் இனிப்பு தொதல்.
இனி அவரது அன்புடன் கலந்த தொதல் எப்போது கிடைக்கும்?.. கிடைக்காது.
ஆத்தா, ஆச்சி, அம்மா, அக்கா, அண்ணி, அத்தை - ஆகிய
நேசப் பிணைப்புகளுக்கு வணக்கம் கூறுவோம்.
தங்கை, மகள், பக்கத்து வீட்டு பெண் - ஆகிய
பாசப் பிணைப்புகளுக்கு வாழ்த்து கூறுவோம்.
அன்பில் நிறைந்த - மங்கல மனையறத்தைக்
கட்டிக் காக்கும் மனைவிக்கு நெற்றியில் குங்குமம் இட்டு,
கருங்கூந்தலில் ஒரு முழம் மல்லிகைப் பூவினைச் சூட்டுவோம்!..
பெண்மையே நீ வாழ்க!..
ஏ..சாமி!.. மாலை போட்டுக்கிட்டு இருக்கிறப்ப
ஒனக்கு இதெல்லாம் தேவையா!..
சாமியே சரணம் ஐயப்பா!..
ஏ..சாமி!.. மாலை போட்டுக்கிட்டு இருக்கிறப்ப
ஒனக்கு இதெல்லாம் தேவையா!..
சாமியே சரணம் ஐயப்பா!..
ஆக - இந்த இனிய தருணத்தில்,
பெண்களிடம் ஒரு கேள்வி - நான் கேட்கலீங்க!... அம்மா கேட்கிறாங்க!..
அம்மாவா?!.. ஆமாங்க.. நம் அனைவருடைய மதிப்புக்குரிய ரஞ்சனி அம்மா!..
அவர்களுடைய வலைத்தளத்திற்குள் சென்று விட்டால் அத்தனையும் சுவையோ சுவை!.. திரும்பி வருவதற்குத் தோன்றவே இல்லை..
திருவரங்கத்திலிருந்தும் நமக்கு பல தகவல்களை வாரி வழங்குகின்றார்கள்.
எந்த ஒரு எண்ணத்திற்கும் - மறு எண்ணம் யாருக்கும் இருக்கும் தானே!.. இவர்களுக்கும் இருக்கின்றது.
தவிரவும், நான்கு பெண்கள் சேர்ந்தால் - என்னவெல்லாம் செய்யலாம்?.. முக்கியமாக ஊர்க்கதை பேசலாம்!.. சொல்லலாம்!.. அதைச் செவ்வனே செய்திருப்பதைப் பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கின்றது.
பெண்கள் உலகின் கண்கள் என்பர். (ஆனால் - கண்களைப் பெண்கள் என்கிறார்களோ!?...) அப்படியாகப்பட்ட - பெண்களும் (!) கண்களும் காக்கப்பட வேண்டியது அவசியம் அல்லவா!.. அதற்கான அருமையான குறிப்புகள்!.
இசைப்பா எனும் தமிழ் இசைப் பாடல்களின் தளத்தில் சுட்டும் விழிச்சுடர் தான் கண்ணம்மா என்று மகாகவியின் பாடல் விமரிசனமும் காணக் கிடைக்கின்றது.
செந்நெற்களஞ்சியம் என்பார்கள் - தஞ்சையை!.. செஞ்சொற்களஞ்சியம் என்று தாராளமாக சொல்லலாம் - இவர்களுடைய தளத்தை. .
அத்தனையும் மனிதத்திற்கு அத்யாவசியமான விஷயங்கள்..
அவர்களை நான் அறிமுகப்படுத்துவதாக இல்லை!..
அவர்களிடம் - என்னை அறிமுகப்படுத்திக் கொள்கின்றேன்!..
பார்வதி ராமச்சந்திரன் - இவரது தளத்தில் -
சிவநாமம் சிந்தனையில் என்றும்
கும்புடுறோம் மாரியம்மா.. என்றும் முத்து முத்தாய் பாடல்கள்.
படித்ததில் பிடித்தது என்று நல்ல நீதிக் கதைகள் - நிறைந்திருக்கின்றன.
நல்லதை நினைத்து நாளும் உயர்வோம்.. எனும் முத்திரையுடன் இவரது தளம்.
அம்பாளடியாள் - கவிதாயினி. இவரது கவிதைகளில் கோபம் கொந்தளித்துக் குமுறும். அதே சமயம் மனித நேயமும் மல்லிகையாய் மலரும். தமிழை அலங்கரிக்கும் இவரது தளத்திலிருந்து -
வேரொடு பகைக்கும் நிலை வரினும்
வரம் வேண்டியே தொழுவேன் உனை நானே!..
ஏழைகள் வயிற்றைக் குளிர வைத்தால்
தங்கும் மங்களம் எந்நாளும்
கற்றவர் விரும்பும் கனி எங்கள் மொழியைக்
கற்றிட கற்றிட இன்பம் பொங்கும் !..
ஸ்ரவாணி - இனிய கவிதைகள், நலந்தரும் குறிப்புகள், யுவதி பக்கங்கள் - என பன்முகம். தளத்தினுள் என்ன இருக்கின்றது என்று போனால் ,
கிடைத்தது - சுடச்சுட அருமையான புதினா பரோட்டா .

>>>>> <<<<<
பார்வதி ராமச்சந்திரன் - இவரது தளத்தில் -
சிவநாமம் சிந்தனையில் என்றும்
கும்புடுறோம் மாரியம்மா.. என்றும் முத்து முத்தாய் பாடல்கள்.
படித்ததில் பிடித்தது என்று நல்ல நீதிக் கதைகள் - நிறைந்திருக்கின்றன.
நல்லதை நினைத்து நாளும் உயர்வோம்.. எனும் முத்திரையுடன் இவரது தளம்.
>>>>> <<<<<
அம்பாளடியாள் - கவிதாயினி. இவரது கவிதைகளில் கோபம் கொந்தளித்துக் குமுறும். அதே சமயம் மனித நேயமும் மல்லிகையாய் மலரும். தமிழை அலங்கரிக்கும் இவரது தளத்திலிருந்து -
வேரொடு பகைக்கும் நிலை வரினும்
வரம் வேண்டியே தொழுவேன் உனை நானே!..
ஏழைகள் வயிற்றைக் குளிர வைத்தால்
தங்கும் மங்களம் எந்நாளும்
கற்றவர் விரும்பும் கனி எங்கள் மொழியைக்
கற்றிட கற்றிட இன்பம் பொங்கும் !..
>>>>> <<<<<
ஸ்ரவாணி - இனிய கவிதைகள், நலந்தரும் குறிப்புகள், யுவதி பக்கங்கள் - என பன்முகம். தளத்தினுள் என்ன இருக்கின்றது என்று போனால் ,
கிடைத்தது - சுடச்சுட அருமையான புதினா பரோட்டா .
புகைப் பழக்கத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டு
வேலையை இழந்த நண்பருக்காக உருகும் - மஞ்சுபாஷிணி. தன் வீட்டில் நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றினை விவரிக்கின்றார் - இறைவன் நம்முள் இருக்கிறார். ஷீரடி சாய்நாதர் துணையிருக்கின்றார். என்ற நம்பிக்கையுடன்!..
>>>>> <<<<<
ஸாதிகா - இவரும் அதே நம்பிக்கையுடன் கூறுகின்றார்.
அல்லாஹ் ஒருபோதும் கைவிட மாட்டான்!... -
அல்பத்தையும் மகா அல்பத்தையும் பட்டியல் இடுகின்றார். இலங்கையின் இனிப்பு வகைகளுள் ஒன்றான தொதல் - பற்றியும் பதிவிட்டுள்ளார்.
என் நண்பர் திரு. இஸ்மாயில் அவர்கள் - இலங்கை சென்று வரும் போதெல்லாம் கொண்டு வரும் இனிப்பு தொதல்.
இனி அவரது அன்புடன் கலந்த தொதல் எப்போது கிடைக்கும்?.. கிடைக்காது.
ஏனெனில் திரு. இஸ்மாயில் இறைவன் திருவடிகளில் கலந்து விட்டார்.
நிழல்கள் எப்போதும் நிஜத்தைக் காட்டுவதில்லை என்கின்றார் இளமதி. ஆனால் இவர் தம் - க்விலிங் கைவேலையில் நிஜம் என உருவாகின்றன அழகிய பழங்களும், மலர்களும். இவை மட்டும் தான் என்றில்லை -
இனிய கவிதைகளை வரைவதிலும் தனித்துவம் மிக்கவர். இதனுடன் -
தனது வலைப்பதிவின் தோழர்களில் ஒருவரை இனிமையுடன் அறிமுகமும் செய்து வைக்கின்றார் என்றால் அவரைப் பற்றி சந்தோஷப்படவேண்டும்.
இனியா - இவரது தளம் காவியகவி .வண்ணமயமான தளம்.
ஆத்தா மகமாயி அன்பு செய்ய வருவாய் நீ
திருவாய் உருவாய் திகழ்ந்தாரே அன்னை மரியாள் மடியில் தவழ்ந்தாரே
சாயி என்பது மந்திரமே செய்திடும் பற்பல அற்புதமே
கனிந்து வரும் நாளும் வெகுதூரம் இல்லை.
சின்னச் சின்ன மணிகளால் , மலர்களால் பெரிய மாலைகளைக் கட்டுவதை போல இருக்கின்றது - இவரது கைவண்ணம்.
ஒரு காலமிருந்தது - மகனே!.. அது நாங்களெல்லோரும்
அன்பில் திளைத்திருந்த காலம்.
- என்று கவிதைக்குள் கதை சொல்பவர் - தீபிகா.
விதைத்த பயிரை அறுவடைக்கு முன்னே
தொலைத்து வந்திருக்கிறவர்கள்.
- என்று ஆழ்ந்த சோகத்தைப் பிரதிபலிக்கும் அழுத்தமான வரிகள் நம் நெஞ்சை அறுக்கவில்லையா?..
ஒரு குடிகாரனின் அவலத்தால் - அவனது மகள்களின் முகங்கள் வெட்கத்தாலும் அவமானத்தாலும் வீங்கிக் கிடப்பதைக் காட்டும் போது - கண்ணீர் சுரக்கின்றது.
கலங்க வேண்டாம் காலமும் காட்சியும் ஒருநாள் மாறும்.
பூங்குழலி - மருத்துவரான இவருடைய பக்கங்கள் பலவிஷயங்களைப் பேசுகின்றன.
- என்று
எனும் தளங்களையும் கொண்டுள்ளார்.

நாளை சந்திக்கும் வரை நமது சிந்தனைக்கு,
|
|
அன்பின் துரை செல்வராஜூ - ஐந்தாம் நாள் - ஆன்மீகப் பயனம் நன்று - அறிமுகங்கள் அருமை - சென்று பார்க்க வேண்டும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஅன்புடையீர்!..
Deleteநேற்று இரண்டு ஷிப்ட் வேலை.
எனவே கருத்துரைத்தவர்களுக்கு நன்றி கூற தாமதமானது. மன்னிக்கவும்.
தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி!..
செய்யும் தொழிலே தெய்வம் என்று தங்களின் விடா முயற்சியால்
ReplyDeleteஎத்தை எத்தனை தளங்களை அறிமுகம் செய்துள்ளீர்கள் ஐயா ..!!!!
தங்களுக்குக் கொடுக்கப்பட்ட ஆசிரிய வாரம் முழுவதையும் மிகவும்
பயனுள்ள முறையில் கையாண்ட விதம் பெருமை கொள்ள வைக்கின்றது
.மிக்க நன்றி ஐயா எனது தளத்தினையும் இங்கே அறிமுகம் செய்து
வைத்துக் கௌரவித்தமைக்கு .இன்றைய வலைச்சரத்தில் அறிமுகமான
அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில்
நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன் .வலைத்தள ஆசிரியருக்கும் என்
நன்றி கலந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .
அன்புடையீர்!..
Deleteநேற்று இரண்டு ஷிப்ட் வேலை.
எனவே தங்களுக்கு நன்றி கூற தாமதமானது. மன்னிக்கவும்.
தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி!..
அறிமுகங்களுக்கு நன்றி.
ReplyDeleteஅன்புடையீர்,
Deleteதங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.
என் 'தொகுப்பு' தளத்தை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு மனமார்ந்த நன்றி!!..வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மற்ற பதிவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteஅன்புடையீர்,
Deleteதங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன்.
அனைத்தும் தொடரும் சிறந்த தளங்கள்...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
அன்பின் தனபாலன்..
Deleteதங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.
சீரிய தொண்டினைச் சிறப்பாகச் செய்யும்
ReplyDeleteநேரிய உள்ளம் நிறைந்த ஐயா!..
இன்றும் அருமையான உங்கள் ஆரம்பப் பதிவுடன்
சிறந்த நல்ல பதிவர்களை அறிமுகம் செய்துள்ளீர்கள்!
அவர்களோடு என்னையும் இணைத்தமை கண்டு மிகவும் மகிழ்கின்றேன்!
மிக்க நன்றி ஐயா!
உங்களுக்கும் இன்று அறிமுகமாகும் அனைத்துப் பதிவர்களுக்கும்
மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!
என் வலைத்தளத்தில் இத்தகவலைத் தந்த சகோதரர் தனபாலனுக்கும்
என் அன்பு நன்றியும் வாழ்த்துக்களும்!
அன்பின் சகோதரி!..
Deleteபன்முக வித்தகத்துடன் பதிவுகளை வழங்கும் தங்களை அறிமுகம் செய்யும் வாய்ப்பு கிடைத்ததே!..
அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.
வணக்கம் ..!
ReplyDeleteஎன் வலைசரம் தங்களை கவர்ந்ததை இட்டு பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அத்துடன் நின்று விடாமல் அறிமுகமும் செய்து வைத்தது மிகுந்த மனநிறைவையும், ஊக்கத்தையும் அளிக்கிறது. இன்னும் எழுத முடியும் எழுத வேண்டும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. உங்கள் கடமையில் இருந்த ஆர்வமும் முயற்சியும் என்னை வெகுவாக கவர்ந்தது. தங்களுக்கு என் பணி வன்பான நன்றியும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும். அத்துடன் அறிமுகமான ஏனைய பதிவர்களும் மேலும் இனிய நல் படைப்புகள் படைக்க என்னுடைய நல் வாழ்த்துக்கள்...!
அன்பின் சகோதரி!..
Deleteதங்கள் பணி மேலும் சிறக்க நல்வாழ்த்துக்கள்.
அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..
இத் தகவலை தந்த சகோதரன் தனபாலன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவிக்கிறேன்.
ReplyDeleteவாழ்க வளமுடன்...!
அன்பின் சகோதரி!..
Deleteதிரு.தனபாலன் அவர்களின் பணி மேலும் சிறக்க நல்வாழ்த்துக்கள்.
அன்பின் இனிய கருத்துரைக்கு நன்றி!..
ஆடி மாதத்தில் - சிறப்பிக்கப்படுவது பெண்மை என்றால்,
ReplyDeleteமார்கழி மாதம் - பெண்களால் சிறப்பிக்கப்படுகின்றது என்பதே உண்மை. //
மணம் வீசும் சிறப்பான
வலைச்சர அறிமுகங்களுக்கு இனிய வாழ்த்துகள்..!
அன்புடையீர்..
Deleteதங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி.
வணக்கம் துறைராஜூ!
ReplyDeleteஎன்னுடைய மூன்று தளங்கள், மற்றும் நான் பங்களிக்கும் இரண்டு தளங்கள் என்று எல்லாவற்றையும் உங்கள் எண்ணங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
எப்படி உங்களால் இத்தனை படித்து பார்க்க முடிந்தது என்று கொஞ்சம் வியப்பாகவும் இருந்தது.
இன்று அறிமுகம் ஆகியிருக்கும் சகோதரிகளுக்கும் பாராட்டுக்கள்.
ஒவ்வொரு தளத்திலும் வந்து தகவல் சொன்ன திரு DD அண்ணாச்சிக்கு கோடானுகோடி நன்றி!
அம்மா.. வணக்கம். அனைத்தும் இறைவன் அருளாலும் தங்களைப் போன்ற பெரியோர்களின் நல்லாசியினாலும் தான்!..
Deleteநேற்று இரண்டு ஷிப்ட் வேலை.
எனவே தங்களுக்கு நன்றி கூற தாமதமானது. மன்னிக்கவும்.
தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி!..
இன்றைய அறிமுகங்களில் பலரும் மிக அருமையான எழுத்தாளர்களே. அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.பதிவுக்கும் பகிர்வுக்கு மிக்க நன்றி.அனைவருக்கும் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.
ReplyDeleteஅன்பின் அண்ணா..
Deleteதங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.
இன்று வெள்ளிக்கிழமை நவராத்திரி நாயகிகள் போல ஒன்பது பெண்மணிகளை அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளீர்கள். பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.
ReplyDeleteஒன்பதில் ஐவர் [பாதிக்குமேல் மெஜாரிட்டி] நான் விரும்பிப்படிக்கும் தளங்களே என்பதில் எனக்கு மேலும் மகிழ்ச்சியே.
அன்பின்அண்ணா..
Deleteதாங்கள் வருகை தந்து பாராட்டி வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி.
இன்று ஒரு சிலரை தவிர மற்ற எல்லா பதிவுகளும் அடிகடி சென்று படித்து மகிழ்வேன். எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteமார்கழி மாதம் - பெண்களால் சிறப்பிக்கப்படுகின்றது என்பதே உண்மை. //
பெண்களை சிறப்பாய் சொன்னதற்கு நன்றி.
அன்புடையீர்..
Deleteதாங்கள் வருகை தந்து சிறப்பித்து அனைவரையும்
பாராட்டி வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅன்புடையீர்..
Deleteதாங்கள் வருகை தந்து சிறப்பித்து
வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி.
பெண்களுக்காகவே ஒரு நாள் ஒதுக்கி பெண்களை சிறப்பித்து விட்டீர்களே!
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்!
அன்புடையீர்..
Deleteதாங்கள் வருகை தந்து அனைவரையும்
வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி.
அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் .
ReplyDeleteஅன்புடையீர்..
Deleteதாங்கள் வருகை தந்து அனைவருக்கும்
வாழ்த்து கூறியமைக்கு மிக்க நன்றி.
இன்றைய அறிமுகங்கள் அருமை..அனைவருக்கும் வாழ்த்துகள். .
ReplyDelete♥ ♥ அன்புடன் ♥ ♥
S. முகம்மது நவ்சின் கான்
www.99likes.blogspot.com
அன்பின் முஹம்மத் நவ்சின் கான்..
Deleteதாங்கள் வருகை தந்து அனைவரையும்
வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி.
பல்வகையான பதிவுகளின் தொகுப்பாய் இன்று(ம்) அழகான அறிமுகங்கள் ஐயா; நன்று!
ReplyDeleteஅன்பின் முஹம்மத் நிஜாமுத்தீன்....
Deleteதாங்கள் வருகை தந்து கருத்துரைத்தமைக்கு மிக்க நன்றி.
மகளிர் மட்டும்....
ReplyDeleteசிறப்பான தளங்கள்.. ஒன்றிரண்டு தளங்கள் நான் இதுவரை செல்லாதவை... பார்க்கிறேன்.
அன்பின் வெங்கட்..
Deleteதங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..
ஆன்மீகப் பகிர்வும் அறிமுகப் பதிவர்களும் அருமை...
ReplyDeleteசிலர் புதியவர்கள்... சென்று வாசிக்கிறேன் ஐயா.
அன்பின் குமார்..
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..
வலைச்சர அறிமுகத்திற்கு மிக்க நன்றி.எனது மூன்று பதிவுகளின் சுட்டிகளையும் தந்து அரிமுகப்படுத்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி.வலைச்சரபணி சிறக்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்பின் சகோதரி..
Deleteதங்களுடைய வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..
தங்களின் வாழ்த்துரைக்கு நன்றி!..
அறிமுகத்திற்கு மிக்க நன்றி
ReplyDeleteஅன்பின் சகோதரி..
Deleteதங்களுடைய வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி.. நன்றி..
வலைப்பக்கம் சில நாட்களாக வர முடியவில்லை.
ReplyDeleteஇன்று தான் வந்து பார்த்தேன்.
உங்கள் அன்பான அறிமுகத்திற்கும் மற்றவர்களுக்கும்
என் நன்றிகள் & வாழ்த்துக்கள்.
அன்பின் சகோதரி..
Deleteதங்களுடைய வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..