மார்கழிப் பனியில் - வியாழன்
➦➠ by:
துரை செல்வராஜூ
எழில் மலர்
அனைவருக்கும் வணக்கம்.
நேற்று மூன்றாவது பதிவில் - வருகை தந்து கருத்துரையை பதிவு செய்து பாராட்டி
மகிழ்ந்த - மகிழ்வித்த, நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத்
தெரிவித்துக் கொள்கின்றேன்.
வலைச்சரத்தில் நான்காம் நாளாகிய இன்றும் - முதலில் ஆலய தரிசனம் செய்வோம்.
வருக - நண்பர்களே!..
நல்லனவற்றைச் சிந்திப்பது பெரிய விஷயம். அதை அப்படியே வெளியில் சொல்வது மிகப் பெரிய விஷயம். அப்படிச் சொல்வதற்கு தடங்கல் இல்லாமல் ஆனது - இந்த தலைமுறையில் உள்ள நல்லவர்களுக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய வரப்பிரசாதம்!..
பின்னே!.. எண்ணங்களை இயல்பாக வெளியிட எளிதாகக் கிடைத்திருப்பது - இதைப் போன்ற வலைப்பூ வசதி அல்லவா!..
இதை மிகச் சரியாக கையாளும் அனைவரையும் அடையாளம் காண்பது மிகவும் கடினம்.
எனினும் கைக்கெட்டியவரை கிடைத்த தளங்களில் அவர்களின் பங்களிப்பு!.. இதோ!..
தூய துறவறம் கொண்டு பரிவினாலும் பண்பினாலும் மனித நேயத்தினாலும் - கண்முன் வாழ்ந்து - இன்னும் நம் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்றிருப்பவர் காஞ்சி ஸ்ரீஸ்ரீஸ்ரீ பரமாச்சார்ய ஸ்வாமி அவர்கள்.
காஞ்சி பரமாச்சார்ய ஸ்வாமிகள் வழங்கிய அறிவுரைகளையும்
குல தெய்வ வழிபாடு பற்றி காஞ்சி மகான் அளித்த விளக்கமும்
அந்த காலகட்டத்தில் நடந்த உண்மை நிகழ்வுகளையும்
பல இடங்களில் இருந்தும் திரட்டி, தனது தளத்தில் சிறப்பாகப் பதிவிட்டு வருபவர் - வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள்.
= = = > > > < < < = = =
அடுத்து ஐயா புலவர் ராமாநுசம் அவர்கள்.
வாய் நொந்து போகும்வரை எடுத்துச் சொன்னோம் - ஆனால்
வடநாடு கேட்டதா பலன் தான் என்ன?.. - என்று குமுறுகின்றார்.
முயலா விட்டால் ஏமாற்றம் - எனவும் -
வளங்காணக் கடன்பட்டு வருந்த வேண்டாம் - எனவும்
ஐயா அவர்கள் வழங்கும் அறிவுரை எந்த காலத்திற்கும் ஏற்புடையது.
= = = > > > < < < = = =
உள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தையில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும் - என்ற தத்துவத்துடன் - GMB Writes எனும் தளத்தில் கவிதை கட்டுரை என கலகலப்புடன் இருப்பவர் ஐயா GMB அவர்கள்.
குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டார் - என்று பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதியிருப்பார். அந்தக் குறட்டையைப் பற்றி!..
மயிலின் படங்கள் சிலவற்றை வெளியிட்டு, அதற்கு பொருத்தமாக
கவிதை எழுதலாமே என்று சக தோழர்களை அழைத்துள்ளார்கள். (நானும் ஒரு கவிதை எழுதி இருக்கின்றேன்..ல)
மேலும் அன்பு எனப்படுவது யாது?. என்று ஒரு ஆய்விலும் தீவிரமாக இருக்கின்றார்கள்.
எனவே மயில் பாட்டு விஷயம் அறிந்தவர்கள் விவரத்தைக் கூறி செண்பகப் பாண்டியனிடம் பரிசினைப் பெற்றுச் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. எனவே மண்டபத்தில் யாரிடமாவது பாட்டை எழுதி வாங்காமல் செல்லவும்.
= = = > > > < < < = = =
அயர்வது இன்றி நாளும் தொடர்ந்து நீ முயன்றால் போதும்!.. - என்று நமது வெற்றிக்கு வித்திடுகின்றார்.
குஞ்சு வளர்வதற்குத் தேவையான முட்டை மூடிய ஓடு போல -
ஆத்திகமும் தேவையென்பதுவும் சரிதானோ?.. என்று கேட்பது நியாயமாகப் படுகின்றது.
= = = > > > < < < = = =
மற்ற ( வலைச்சர!?.. ) ஆசிரியர்களைப் போல அல்லாமல் -
கடுமையான ஆசிரியன் - யாரைச் சொல்கின்றார் !?..
கடவுள் எங்கிருக்கின்றார் தெரியுமா?.. - யாரைக் கேட்கின்றார்!..
கல்வி பயில மாணவர்களுக்கு என்ன வேண்டும் ?.. - யார் சொல்வது!..
நம்முடைய கவிதை வீதி செளந்தர் அவர்கள் தான்!..
= = = > > > < < < = = =
கடமை துறக்கச் சொன்ன கடவுள் உண்டா மகனே!..
அருமையான - இந்த வரிகளுக்குச் சொந்தக்காரர் - கவியாழி.
பெற்றோர் கடமை மறந்து போதையில் வாழ்தல் முறையா?.. என இடித்து உரைக்கின்றார். அருமையான - இந்த வரிகளுக்குச் சொந்தக்காரர் - கவியாழி.
முறையாய் சொல்லாத கல்வியால் - எல்லாம் தலைகீழ் - என்ற ஆதங்கமும்,
மரத்தை பிழைக்க வைக்க நீயும் வா - என - மழையை அழைப்பதும் மனதைக் கவர்கின்றன.
= = = > > > < < < = = =
அவர்களிடம் நீங்களாகவே இருங்கள்!.. -
யாரிடம்!.. எதற்காக?... என்ற கேள்விக்கு - எழுதிய பதிவின்
நடுவில் எங்கேயோ இருக்கிறது விடை.
மறுபடி முதலிலிருந்து படித்துப் பாருங்கள்.
இப்படிச் சொல்பவர் அன்பின் அப்பாதுரை அவர்கள். பதிவின் இறுதியில் உள்ள பின்னூட்டம் நல்லதொரு விவாதக் களம். விவாத மேடையில் பெரிய பெரிய ஜாம்பவான்களை சந்திக்கலாம்.
மீன் பிடிப்பது லாபமா?. தூண்டில் விற்பது லாபமா?. விவரங்களுக்குக் காண்க -
விண்வெளிச் சாகுபடியில்
= = = > > > < < < = = =
அன்பு நண்பர்களே!.. மேலும் தளங்களுடன் -
அன்பு நண்பர்களே!.. மேலும் தளங்களுடன் -
நாளை சந்திக்கும் வரை நமது சிந்தனைக்கு,
இன்று இந்த அளவுடன் உங்களிடம் விடை பெற்றுக் கொள்கின்றேன். வணக்கம்.
|
|
//தூய துறவறம் கொண்டு பரிவினாலும் பண்பினாலும் மனித நேயத்தினாலும் - கண்முன் வாழ்ந்து - இன்னும் நம் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்றிருப்பவர் காஞ்சி ஸ்ரீஸ்ரீஸ்ரீ பரமாச்சார்ய ஸ்வாமி அவர்கள்.//
ReplyDeleteமிகச்சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது.
இன்றும் பலர் நெஞ்சங்களில் வாழ்பவரே ஸ்ரீஸ்ரீஸ்ரீ பரமாச்சார்யார் அவர்கள்.
//காஞ்சி பரமாச்சார்ய ஸ்வாமிகள் வழங்கிய அறிவுரைகளையும், குல தெய்வ வழிபாடு பற்றி காஞ்சி மகான் அளித்த விளக்கமும். அந்த காலகட்டத்தில் நடந்த உண்மை நிகழ்வுகளையும் பல இடங்களில் இருந்தும் திரட்டி, தனது தளத்தில் சிறப்பாகப் பதிவிட்டு வருபவர் - வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள்.//
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவர் அனுக்ரஹத்தால் மட்டுமே இந்தத்தொடருக்கான பல்வேறு தகவல்களை பலவழிகளில் திரட்டி, தொடரை இனிதே தொடங்கி மொத்தம் எழுத நினைத்துள்ள 108 பகுதிகளில், இதுவரை 97 பகுதிகள் வெளியிட முடிந்துள்ளது.
ஒருநாள் விட்டு ஒருநாள் வெளியிட்டு வருவதால், வரும் ஜனவர் மாதம் தைப்பொங்கல் பண்டிகைக்கு முன்பு இந்தத்தொடர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகள் அனுக்ரஹத்தால் நிறைவடையக்கூடும் என நினைக்கிறேன்.
இந்தத்தொடரினை பார்க்கவோ, படிக்கவோ, ரசிக்கவோ ஒரு கொடுப்பிணை இருக்க வேண்டும். அது எல்லோருக்கும் கிடைக்கக்கூடியது அல்ல.
இந்த என் தொடரினை சிறப்பித்து இங்கு சுட்டிக்காட்டியுள்ள தங்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
அன்புடையீர்..
Deleteகுருவருளும் திருவருளும் அனைவருக்கும் கூடி வரவேண்டும்.
தங்களுடைய வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன்.
இன்று குருவாரம் - வியாழக்கிழமை - அதற்கேற்றது போல முதல் அறிமுகம் ’ஜகத்குரு’வைப்பற்றி செய்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
ReplyDeleteஅவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம், அவர்களை நாம் தரிஸித்தோம், அவர்களின் அருள் பார்வை நம் மீது பட்டது, அவர்களை நமஸ்கரித்தோம், அவர்களிடம் நாமும் பேசினோம், அவர்கள் பேச்சினை [அருள் வாக்கினை] நாமும் கேட்டுள்ளோம் என்பது மட்டுமே இந்த புண்ணிய பூமியாம் பாரத தேசத்தில் நாம் பிறந்ததன் பயன் என்று கூறினால் மிகையாகாது.
அவர்களை தரிஸிக்காதவர்கள், அவர்களைப்பற்றி சரிவரத் தெரியாதவர்கள், அவர்களை உணரும் வாய்ப்பு கிடைக்காதவர்கள், அவர்கள் காலத்திற்குப்பிறகு பிறந்துள்ள இளைஞர்கள் ஆகியோருக்குப் பயன்படட்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே இந்தத்தொடரினை அடியேன் ஆரம்பித்துள்ளேன்.
வலைச்சரத்தின் மூலமும் பலருக்கு இப்போது தாங்கள் அறியச் செய்துள்ளதில் மகிழ்ச்சி. மீண்டும் நன்றிகள்.
அன்புடன் VGK
அன்புடையீர்..
Deleteதங்களுடைய வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி!..
வணக்கம்
ReplyDeleteஐயா
இன்று வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அன்பின் ரூபன்..
Deleteதங்களுடைய வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..
அறிமுகங்கள் அருமை ஐயா
ReplyDeleteநன்றி
அன்புடையீர்..
Deleteதங்களுடைய வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..
அன்பின் துரை செல்வராஜு - பதிவு அருமை - அறிமுகங்கள் நல்ல தலைப்பில் நன்றாக அறிமுகப் படுத்திய பதிவுகள் - நன்று நன்று - நல் வாழ்த்துகள் -நட்புடன் சீனா
ReplyDeleteஅன்புடையீர்..
Deleteதங்களுடைய வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..
அருமையான அறிமுகங்கள்..
ReplyDeleteநிறைவான பாராட்டுக்கள்..!
அன்புடையீர்..
Deleteதங்களுடைய வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி!..
அனைத்தும் சிறப்பான தளங்கள் ஐயா... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅன்புடையீர்..
Deleteதங்களுடைய வருகையும் இனிய வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி!..
அழகான அறிமுகங்கள் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள் .
ReplyDeleteமிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .
அன்புடையீர்..
Deleteதங்களுடைய வருகையும் இனிய வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி!..
இன்றும் உங்கள் அறிமுகப் பதிவர்கள் அருமை ஐயா!
ReplyDeleteஅனைவருக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்!
அன்புடையீர்..
Deleteதங்களுடைய வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி!..
அன்பின் இனிய துரை! என்னை வலைச்சர வாயிலாக அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி!
ReplyDeleteமுதுமையும் , முதுகுவலியும் அடிக்கடி தொல்லைதர முன்போல் எழுத இயலவில்லை! இதனை எனக்கு அறிவித் த தனபாலுக்கும் நன்றி!
அன்புடையீர்..
Deleteதங்களின் நலம் நாடி வேண்டிக் கொள்கின்றேன்..
தங்களுடைய வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி!..
அன்பின் துரை செல்வராஜு, என் சில பதிவுகள் மூலம் என் வலைத்தளத்தை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி. அறிமுகம் பற்றி அறிவித்த திண்டுக்கல் தனபாலனுக்கும் நன்றி
ReplyDeleteஅன்புடையீர்..
Deleteதங்களுடைய வருகையும் இனிய வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி!..
அனைத்து தளங்களுக் மிகச் சிறப்பானவை! ஒரு சில நாங்கள் தொடர்ந்தாலும் பல தளங்கள் அறிமுகம் கிடைத்ததற்கு மிக்க நன்றி!! தொடர்கிறோம்!
ReplyDeleteஅன்பின் துளசிதரன்..
Deleteதங்களுடைய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி!..
எல்லோருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்புடையீர்..
Deleteதங்களுடைய வருகையும் இனிய வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி!..
இன்று இடம் பெற்ற அன்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்புடையீர்..
Deleteதங்களுடைய வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மிக்க நன்றி!..
இன்று(ம்) அழகான முறையில் அறிமுகங்களைத் தொகுத்தளித்தீர்கள், நன்று ஐயா!
ReplyDeleteஅன்பின் நிஜாமுத்தீன்..
Deleteதங்களுடைய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி!..
ஐயாவிற்கு வணக்கம்
ReplyDeleteதங்கள் வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க அன்பான வாழ்த்துகள். அறிமுகங்கள் அனைத்தும் அருமை. எளிமையாக அறிமுகம் செய்த விதமும் அழகு.
அன்பின் திரு.பாண்டியன்..
Deleteதங்களுடைய வருகையும்
இனிய வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி!..
அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅன்புடையீர்..
Deleteதங்களுடைய வருகையும்
இனிய வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி!..
அனைத்தும் அருமையான அறிமுகங்கள். அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.
ReplyDeleteஅன்புடையீர்..
Deleteதங்களுடைய வருகையும் பாராட்டுரையும்
இனிய வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி!..
தொடக்கத்தில் பதித்தப் படம் பிரமிக்க வைக்கிறது.
ReplyDeleteஅறிமுகத்துக்கு நன்றி. தித வாழ்க.
அன்புடையீர்..
Deleteஅந்தப் படம் நூல்முகத்தில் கிடைத்தது.
தங்களுடைய வருகையும் இனிய
கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி!..
அருமையான தளங்கள் இன்று. அனைத்தும் நான் தொடரும் பதிவுகள் தான்......
ReplyDeleteஅன்பின் வெங்கட்..
Deleteதங்களுடைய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி!..
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅன்பின் குமார்..
Deleteதங்களது வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ச்சி!..