07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, December 21, 2013

மார்கழிப் பனியில் - சனி

எழில் மலர்.

அனைவருக்கும்  வணக்கம். 

நேற்று ஐந்தாவது பதிவில்  - வருகை தந்து கருத்துரையை பதிவு செய்து  பாராட்டி மகிழ்ந்த - மகிழ்வித்த,   நண்பர்கள் அனைவருக்கும்  மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

வலைச்சரத்தில் ஆறாம் நாளாகிய இன்றும் -  முதலில் ஆலய தரிசனம் செய்வோம். 

வருக - நண்பர்களே!..
  = = = = > > > < < < = = = =

தமக்கென வாழாது பிறர்க்கென வாழ்பவர் - பெரியோர்.. 
அப்படி எண்ணற்றோர் வாழ்ந்ததனால் பெருமையுற்ற பாரத தேசத்தில் - தென் தமிழகத்தில் - ஸ்ரீவில்லிபுத்தூர் எனும் திருத்தலத்தில் - 
அப்பாவும் பெண்ணும் பேசிக் கொள்வதைக் கேளுங்கள்!..
ஏனம்மா..  நான்  உன்னை -  அழைத்தது உனக்குக் கேட்கவே இல்லையா ?..
எப்படியப்பா கேட்கும்!. வாய் பாடும்போது மனம் கேசவனையே சிந்திக்கின்றது. அதனால்  வேறெதிலும்  சிந்தனை செல்வதில்லை!..

அழைத்தவர் - பெரியாழ்வார்.
அழைக்கப்பட்டவள் - சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்.

எண்ணிய முடிதல் வேண்டும்  என்று -  நம் கண் முன்னே - திருப்பாவையைப் பதிவிடுகின்றார் - ஷைலஜா. 
  = = = = > > > < < < = = = =

அன்பில் ஏதும் குறையும் உண்டோ நீயும் கூறடி!.. - இப்படிக் கேட்பவர் - கவிநயா!..

மணியே.. மணியின் ஒளியே!.. - எனும் இவரது வலைத்தளம் முழுதும் 
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ - என்று அம்மன் பாட்டுக்கள் தான். 
தளத்தினுள் சென்றால் - தன்னை மறந்து உலவலாம்!.. தாயின் மடியில் துயிலலாம்!..
  = = = = > > > < < < = = = =

பிறர்க்கென வாழ்ந்த பெரியோர்களில் உயரிய நிலையில் ஞான பரவசத்தில் ஆழ்ந்து சிவானந்தப் பெருவெளியில் லயித்திருப்பவர்களை சித்தர்கள் என்று குறிப்பது நமது மரபு. 

அவர்களுக்கு நம்மிடமிருந்து தேவைப்படுவது யாதொன்றும் இல்லை - நல்லொழுக்கத்தை தவிர!..

மனுக்குலம் தான் அவர்களை நாடி நின்றது. சித்தர்களும் ஆன்மாக்களின் அவலங்களை உணர்ந்திருந்ததனால் - மக்கள் வாழ்வில் எல்லாப் பக்கங்களிலும் தமது முத்திரையைப் பதித்தனர். 

அந்த வகையில்  - ஆசான் அகத்திய மாமுனிவரின் அறிவுரைப்படி, ஞானகுரு போகர் நவபாஷாணங்களைக் கொண்டு அமைத்து - நமக்கு வழங்கியதே  - பழனி பாலதண்டாயுதபாணி ஸ்வாமியின் திருமேனி.

சித்தர் பெருமக்களின் - திருவாக்கு -  கால சூழ்நிலை கருதி மறைவான பொருளில் (பரிபாஷையில்) இருந்ததால் - மக்களின் வழக்கத்திலிருந்து அவை மறைந்திருந்தன. 

அவற்றின் பயனை அனைவரும் அறியும் வண்ணம் குரு அருளும் திருவருளும் ஒன்றுசேர - தனது தளத்தில் பதிவிடுகின்றார் - தோழி.
வியப்பின் எல்லை உங்களை அழைத்துச்செல்வது -

அகத்தியர் அருளிய   திரிகடுக லேகியம்
அகத்தியர் அருளிய  சண்முக யந்திரம் 
அகத்தியர் அருளிய மகா மந்திரங்கள்
போகர் வடிவமைத்த பழனி முருகன்
கருவூரார் அருளிய  கீழாநெல்லி கற்பம்
புலிப்பாணி சித்தர் கூறியருளும் சனி பகவான்   

பலவித மூலிகை மருந்துகளைப் பற்றியும் உடல் நலம் தரும் ஆசனங்கள், மனநலம் தரும் மந்த்ர யந்த்ரங்களைப் பற்றியும் அறிய முடிகின்றது. 

ஆர்வத்துடன் படித்தறிந்து கொள்க. 
எதையும் செய்து பார்க்க வேண்டுமெனில் - கவனம். 
தகுந்த குருவின் சீரிய வழிகாட்டுதல் அவசியம்!..
  = = = = > > > < < < = = = =

தேவி எனும் சகோதரியின் தளம் -  காகிதத்தில் கிறுக்கியவை.

அங்கே போனால் - 
வாசல் முழுதும் வண்ணமயமான   அழகு    மார்கழிக் கோலங்கள்!..
பக்கத்தில் பூரிக்கட்டை இருக்கே!.. அதனால தானா?.. இல்லே.. இல்லே!.. - உண்மையிலேயே அருமை!..

கிறுக்கியவையே - இப்படி இருக்கின்றன என்றால் - 
ஒழுங்காக எழுதியிருந்தால் எப்படி இருக்கும்!?... நீங்களே சொல்லுங்கள்!..
  = = = = > > > < < < = = = =

வந்து கொண்டிருக்கின்றது புத்தாண்டு.. பலபேர் பல விஷயங்களுக்கு சபதம் செய்வதுண்டு, சிலர் - வரும் ஆண்டில் இதை இதை செய்ய (!?) மாட்டேன் என்று சபதம் செய்திருக்கக்கூடும் . 

அந்த சபதத்தின் கதி  அந்த ஆண்டிலேயே அதோ கதியாகி இருக்கும் எனினும் புத்தாண்டில் தயாராக இருப்பார்கள் - மறுபடியும் சபதம் செய்வதற்கென்று!.. பாவம் !.. அதை இன்னமும் நம்பும் பெண்களின் நிலைதான் பரிதாபமானது.

கீதா. M  - தனது - தென்றல் - தளத்தில், சபதத்தின் கதையைச் சொல்கின்றார்.
அதுமட்டுமில்லை!.. 

தொட்டில் குழந்தை  மொட்டுகள் - எனும் பதிவுகளில் மனம் கலங்கும்படி கவிதைகளைச் சொல்கின்றார்.  

ஆசிரியையாக விளங்கும் இவர்  வளரும் சந்ததிகள் கவலையில்லாமல் வளர வாய்ப்பில்லையா? - என மனித நேயத்துடன் வருந்துகின்றார்.

இவரது தளம் - கட்டுரை, கவிதை, சமூகம் - எனும் வகைப்பாடுகளில் இலங்குகின்றது.
  = = = = > > > < < < = = = =

மணல் கடத்தல்!.. புது வீடு கட்டவா?.. இல்லீங்க.. கலர் பொடி கலக்கி வீட்டுக்கு முன்னால கோலம் போடுறதுக்கு!..

இனிமையாக சொல்றாங்க - கஸ்தூரி!.. மகிழ்நிறை எனும்  தலத்தில்!.. பெருநகர வாழ்க்கை நரகம் - யாரோ ஒப்புதல் வாக்குமூலம் தர்றாங்க!..
 DSR - நூல்முகம்
அவங்களும் வாத்யாரம்மா போல இருக்கு.. இங்கிலீசு எல்லாம் சொல்லித் தர்றாங்க!.
= = = = > > > < < < = = = =
உஷா அன்பரசு, வேலூர் ( வீரமானவங்களா இருப்பாங்க போல இருக்கு!..) 
பள்ளி நாட்களில் இருந்து எழுத்தின் மீது நாட்டம் என்று சொல்கின்றார்.. 

அறிவியல் வகுப்பு ஆசிரியை:
தண்ணியிலிருந்து ஏன் மின்சாரம் எடுக்கறாங்க?..

மாணவி(புத்திசாலி): டீச்சர்.. அப்படி எடுக்கலைன்னா நாம குளிக்கும்  போது ஷாக் அடிக்குமே!..

வெகுநேரம் சிரித்துக் கொண்டிருந்தேன். பற்பல இதழ்களில் வெளியான இவரது படைப்புகளை  - சிறுகதைகள், கவிதை (இவங்களுமா!..) தனது தளத்தில் கருத்துரை போடும் ரகசியத்துடன் வெளியிடுகின்றார்.

  = = = = > > > < < < = = = = 

அன்பு நண்பர்களே!.. மேலும் தளங்களுடன் -  
நாளை சந்திக்கும் வரை நமது சிந்தனைக்கு,

இன்று இந்த அளவுடன் உங்களிடம் விடை பெற்றுக் கொள்கின்றேன்.  வணக்கம். 

34 comments:

  1. மிகச் சிறப்பான அறிமுகங்கள் ! அறிமுகமான வலைத்தள உறவுகளுக்கு
    என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .

    ReplyDelete
    Replies
    1. அன்பின் கவிதாயினி!..
      தங்களின் முதல் வருகை கண்டு மகிழ்ச்சி!.. தங்களின் இனிய கருத்துரைக்கு நன்றி!..

      Delete
  2. அறிமுகம் அருமை...
    நன்றிகள் ..

    ReplyDelete
    Replies
    1. அன்புடையீர்,
      தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி!..

      Delete
  3. நல்ல அறிமுகங்கள்....

    அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. அன்புடையீர்,
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன். நன்றி!..

      Delete
  4. காகிதத்தில் கிறுக்கியவை எனக்கு புதிய தளம்... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

    பதிவை தமிழ்மணத்தில் இணைத்து விட்டேன் ஐயா...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. அன்பின் தனபாலன்..
      தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி!..

      Delete
  5. எழில் மலர்களாக அருமையான அறிமுகங்கள்..பாராட்டுக்கள்..
    வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. அன்புடையீர்..
      தாங்கள் வருகை தந்து அனைவரையும்
      பாராட்டி வாழ்த்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி!..

      Delete
  6. அருமையான அறிமுகங்கள்.
    எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அன்புடையீர்..
      தாங்கள் வருகை தந்து கருத்து வழங்கி
      அனைவரையும் வாழ்த்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி!..

      Delete
  7. என்னுடைய வலைப்பக்கத்தை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி! ஒவ்வொரு பதிவிற்கும் அழகான தலைப்புகளாக சொல்லியிருந்தது சிறப்பாக இருந்தது...!

    ReplyDelete
    Replies
    1. அன்புடையீர்..
      தாங்கள் வருகை தந்து பார்வையிட்டு
      நன்றி கூறியமைக்கு மிக்க மகிழ்ச்சி!..

      Delete
  8. அதே போல் வலை உலகின் நல்ல மனசுக்கு சொந்தக்காரரான திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்படும் ஒவ்வொரு பக்கங்களுக்கும் சென்று அறிமுகப்படுத்தியிருக்கும் விஷயத்தை சொல்லி வருகிறார். அவருக்கு வலைச்சரம் சார்பாகவும், வாழ்க்கை வேகமான ஓட்டத்திலும் அனைவர்க்கும் ஊக்கம் தரும் அவருக்கு பதிவர்கள் சார்பாகவும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அன்புடையீர்..
      தாங்கள் கூறியது மிகவும் சரியே!..
      திரு. தனபாலன் அவர்களின் பணி மகத்தானது!..
      கருத்துரை பதிவிட்டமைக்கு மிக்க மகிழ்ச்சி!..

      Delete
  9. அழகிய மலர்களால் தொடு(கு)க்கப் பட்ட இன்றைய வலைச் சரமும் அருமை ஐயா!

    உங்களுக்கும் அறிமுகமாகும் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. அன்புடையீர்..
      தாங்கள் வருகை தந்து வாழ்த்து
      கூறியமைக்கு மிக்க மகிழ்ச்சி!..

      Delete
  10. இன்றைய வலைச்சரத்தை அலங்கரிக்கும் ஷைலஜா மற்றும் உஷா அன்பரசு இருவரும் தெரிந்தவர்கள். மற்றவர்களின் தளங்களுக்குச் சென்று படித்து விட்டு வருகிறேன்.
    அறிமுகம் ஆன எல்லோருக்கும் இனிய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அம்மா..
      தாங்கள் வருகை தந்து பார்வையிட்டு
      வாழ்த்து கூறியமைக்கு மிக்க மகிழ்ச்சி!..

      Delete
  11. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அன்பின் குமார் ..
      தங்கள் வருகைக்கும் அனைவருக்கும்
      வாழ்த்து கூறியமைக்கும் மிக்க மகிழ்ச்சி!..

      Delete
  12. திருமதி ஷைலஜா அவர்கள் + திருமதி உஷா டீச்சர் அவர்கள் இருவரும் எனக்கு ஓரளவு பரிச்சயமானவர்கள். அவர்கள் இருவரையும் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அனைவருக்கும் பாராட்டுக்கள் + வாழ்த்துகள். தங்களுக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. அன்புடையீர்..
      தாங்கள் வருகை தந்து பாராட்டி வாழ்த்துக்கள்
      கூறியமைக்கு மிக்க மகிழ்ச்சி!..

      Delete
  13. எனது வலையை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சார்.தனபாலன் சார் மூலம் அறிந்தேன்.வலை பற்றி எங்களுக்கு தெளிவான கருத்துக்களை தந்தவர்.மேலும் தொடர ஊக்கப்படுத்தியமைக்கு நன்றி.வாழ்த்துக்கள் கூறியதோழர்களுக்கும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரை வழங்கியமைக்கும் நன்றி ..
      பார்வையிட்டு வாழ்த்தியவர்க்கு நன்றி கூறியமைக்கும் மகிழ்ச்சி.!..

      Delete
  14. வலைச்சர ஆசிரியர் பணியில் சிறப்பாக செயல்படும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்
    எனது தளத்தை அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி..
    அழகிய மலர்கள் என்கிற பதிவில் தோழியரோடு என்னையும் அறிமுகம் செய்தது மகிழ்ச்சி...
    தனபாலன் அண்ணா மூலம் அறிந்தேன்.. அறிமுகம் செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஆசிரியைகள் என்பது கூடுதல் மகிழ்ச்சி..
    தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்களும் நன்றிகளும்.

    ReplyDelete
    Replies
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரை வழங்கியமைக்கும் நன்றி ..
      பார்வையிட்டு வாழ்த்தி நன்றி கூறியமைக்கும் மகிழ்ச்சி.!..

      Delete
  15. இன்று அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.
    அறிமுகம் செய்த தங்களுக்கு நன்றிகள்...

    ReplyDelete
    Replies
    1. அன்பின் முஹம்மத்..
      தாங்கள் வருகை தந்து கருத்துரை வழங்கி
      நன்றி கூறியமைக்கு மகிழ்ச்சி.. நன்றி! ..

      Delete
  16. என்னுடைய அறிமுகத்தை இங்கே கண்டதில் மிக்க சந்தோஷம்...
    நன்றி நன்றி....

    ReplyDelete
    Replies
    1. அன்பின் சகோதரி..
      தங்கள் வருகைக்கு நன்றி..
      உண்மையில் தங்களின் வலைப் பக்கத்தை - பதிவிட்டதில் எனக்குத் தான் மிக்க மகிழ்ச்சி!..

      Delete
  17. அம்மன் பாட்டு தளத்தை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி. செய்தி தெரிவித்த அம்பாளடியாள், மற்றும் தனபாலனுக்கு நன்றிகள். அறிமுகமான அனைத்துப் பதிவர்களுக்கும் இனிய வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. அன்பின் சகோதரி..
      தங்கள் வருகைக்கு நன்றி..தங்களின் வலைப் பக்கத்தை - பதிவிட்ட செய்தியைத் தங்களுக்கு அறிவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி!..

      Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது