மின்னல் வரிகள் கனேஷ் - கலாகுமரனிடம் இருந்து ஆசிரியப் பொறுப்பினை ஏற்கிறார்
அன்பின் சக பதிவர்களே !
இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற - கலாகுமரன் - தான் ஏற்ற பொறுப்பினை சரி வர, மிகுந்த ஆர்வத்துடனும் பொறுப்புணர்வுடனும் நிறைவேற்றி நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார்.
இவர் எழுதிய பதிவுகள் : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 069
அறிமுகப் படுத்திய பதிவுகள் : 110
பெற்ற மறுமொழிகள் : 231
வருகை தந்தவர்கள் : 2662
இவர் எழுதிய பதிவுகள் : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 069
அறிமுகப் படுத்திய பதிவுகள் : 110
பெற்ற மறுமொழிகள் : 231
வருகை தந்தவர்கள் : 2662
நணபர் கலா குமரன் - தன் சொந்த வலைத்தளத்தில் எழுதுவதை நிறுத்தி விட்டு - அங்கு எழுத வேண்டிய பதிவுகளை தினம் ஒன்றாக இங்கு ஏழு நாட்களுக்கும் எழுதி விட்டார். அப்பதிவுகளுடன் வலைச்சரத்தில் எழுத வேண்டிய பதிவுகளையும் - அறிமுக பதிவுகளுடன் - சேர்த்து ஏழு நாட்களிலும் எழுதி விட்டார்.
இப்படி எழுதுவது வலைச்சர விதி முறைகளுக்கு முரணானது - எனினும் அவரது ஆர்வத்தினை மதித்து பொறுத்துக் கொண்டோம்.
இனி வரும் ஆசிரியர்கள் இதனை முன்னுதாராணமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என நம்புகிறோம்.
பதிவுகளை அறிமுகப் படுத்தும் போது அப்பதிவுகள் பற்றிய கருத்துகளைக் கூறி இருக்கலாம். பதிவர் பெயரும் பதிவின் பெயரும் சுட்டிகளும் மட்டும் கொடுத்து அறிமுகப் படுத்தி இருக்கிறார்.
கலா குமரனின் கடும் உழைப்பினைப் பாராட்டி, வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
நாளை பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் மின்னல் வரிகள் பால கணேஷ்.
பாலகணேஷ் - மதுரையில் பிறந்து வளர்ந்து வேலை நிமித்தம் தமிழ்நாடு முழுவதும் சுற்றிவிட்டு இப்போது 13 வருடங்களாக சென்னையில் வசித்து வருகிறார். தினமலர், க்ரைம் நாவல், கிழக்குப் பதிப்பகம், ஆனந்தவிகடன் போன்ற இதழ்களில் வடிவமைப்பாளராகப் பணியாற்றியவர். தற்சமயம் ஃப்ரீலான்ஸ் வடிவமைப்பாளராக செயல்பட்டு வருகிறார். ‘ஊஞ்சல்’ என்ற மாத இதழில் வடிவமைப்பாளராகவும் உதவியாளராகவும் இருந்து செயல்பட்டது இவருக்கு மனநிறைவைத் தந்த ஒன்று. இசை கேட்பதிலும், நகைச்சுவைப் படங்கள் பார்ப்பதிலும் ஈடுபாடு கொண்ட இவர், தனது ‘மின்னல் வரிகள்’ வலைப்பூவில் சிறுகதைகள், படித்து ரசித்த படைப்புகள், அனுபவங்கள் என பல்சுவை விஷயங்களை ஒரு பத்திரிகை படித்தால் ஏற்படும் அனுபவம் கிடைக்கும்படி எழுதி வருகிறார். ‘மேய்ச்சல் மைதானம்’ என்ற மற்றொரு வலைப்பூவில் பழைய இதழ்களில் இருந்து திரட்டிய பொக்கிஷமான விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார்.
பால கணேஷை வருக வருக ! என்று வரவேற்று வாழ்த்தி ஆசிரியப் பொறுப்பில் அமர்த்துவதில் மிகுந்த மகிழ்ச்சியுடன் கூடிய பெருமை அடைகிறோம்.
நல்வாழ்த்துகள் பால கணேஷ்
நட்புடன் சீனா
|
|
சோதனை மறுமொழி
ReplyDeleteசிறப்பாக ஆசிரியர் பணியை முடித்த இனிய நண்பர் கலா குமரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅசத்த காத்திருக்கும் மின்னல் ஐயாவிற்கு வாழ்த்துக்கள் பல...
அசத்துவேன் என்ற உங்களின் நம்பிக்கை யானை பலம் தருகிறது டி.டி. மிக்க நன்றி!
Deleteமீண்டும் வலைச்சர ஆசிரியராக பணியேற்கும் மின்னல் வரிகள் கணேஷ் அவர்களை வருக வருக என வரவேற்று அவரது பணி சிறக்க வாழ்த்துகிறேன்!.
ReplyDeleteவரவேற்று வாழ்த்தும் தந்த நண்பருக்கு மனம் நிறைந்த நன்றி!
Deleteகணேஸ் அண்ணாச்சி வாங்க அசத்தல் வாரம் தொடங்கட்டும்! வாழ்த்துக்கள்.
ReplyDeleteமகிழ்வு தந்த வரவேற்புக்கு மனம் நிறைய நன்றி நேசன்!
Deleteஎடுடா மேளம் அடிடா தாளம் இனி தான் நம்ம பால கணேஷ் சார் அவர்களின் கச்சேரி ஆரம்பம்
ReplyDeleteவாங்கய்யா வாத்தியாரையா (பாலா கணேஷ் அய்யா) வரவேற்க வந்தோமையா
எனக்குப பிடித்த தலைவரின் பாடலுடன் மகிழ்ச்சி பொங்க வரவேற்புத் தந்த குடந்தையூராருக்கு இதயம் நிறை நன்றி!
Deleteநமக்கு பிடித்த தலைவரின் என்று சொல்லுங்கள் சார்
Deleteகரீக்ட்டா சொல்லிக்கினப்பா சரவணர்! அப்படி மாத்திப் படிச்சுடுங்க நண்பர்களே...!
Deleteநண்பர் பாலகணேஷ் அவர்களை வாழ்த்துக்களுடன் வருக வருக என வரவேற்கிறேன்
ReplyDeleteபல பிரமிப்பான விஞ்ஞானத் தகவல்களுடன் ஒரு கோணத்தில் அசத்தோ அசத்துன்னு அசத்திட்டீங்க கலாகுமரன்! உங்களுக்கு அதற்கான என் வாழ்த்துக்கள்! என்னை வரவேற்றமைக்கு மகிழ்வுடன் என் நனறி!
Deleteகலா குமரன் அவர்களுக்கு வாழ்த்து கூறி மின்னல் வரிகளை வரவேற்கிறோம்
ReplyDeleteமகிழ்வுடன் எனக்கு வரவேற்புத் தந்து உற்சாகம் தந்த நண்பர் ஜெயக்குமாருக்கு மனம் நிறைய நன்றி!
Deleteவாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இதுவரை ஆசிரியர் பொறுப்பில் இருந்து
ReplyDeleteவிடைபெற்ற கலாகுமரன் அவர்களுக்கும் இனித் தொடர்ந்து கலக்க
இங்கே வருகை தந்திருக்கும் எங்கள் அபிமான பதிவர் பால கணேஷ்
ஐயா அவர்களிற்கும் .தொடரும் வாரங்கள் மிகச் சிறப்பாகத் தொடரட்டும் .
வெற்றிக் கனிகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் ஐயா .
அபிமான பதிவர் என்று நீங்கள் சொன்னதிலேயே பூரித்து (அ) சப்பாத்தித்து விட்டேன் சகோதரி! வெற்றிக் கனிகளைப் பறிக்க வாழ்த்திய உஙகள் அன்பிற்கு தலைவணங்கிய நன்றி!
Deleteகலக்கிச் சென்றவருக்கும் கலக்க இருப்பவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteமின்னல் வரிகள் போல வலைச்சரமும் சிரிப்பும் சிந்தனையுமாய் பயணிக்கட்டும்...
வாழ்த்துக்கள் அண்ணா..
மின்னல் வரிகள் போல இங்கும் சிரிப்பும், குதூகலமுமாகப் பயணிக்கும் குமார். அத்தோட சேர்த்து ‘மின்னல் வரிகள்ல’ முத்ல தடவையா சரிதா கதைகள்ல ஒரு மினி தொடர் எழுதப் போறேன். அங்கும் என்னை உற்சாகப்படுத்தணும்னு அன்போட வேண்டிக்கறேன். மிக்க நன்றி!
Deleteஅதிக எதிர்பார்ப்புடன் இருக்கிறோம்
ReplyDeleteஇந்த வார வலைச்சர வாரம்
நிச்சயம் வித்தியாசமாகவும் அசத்தலாகவும் இருக்கும்
அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
உங்களனைவரின் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும் என்ற மைல்டா ஒரு பயமே இப்ப வந்துடுச்சு ரமணி ஸார்! இயனறவரை முயல்கிறேன். உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி!
Deleteபல வித்தியாசமான தகவல்களைப் பகிர்ந்த கலாகுமரன் அவர்களுக்கு பாராட்டுக்கள்....
ReplyDeleteநாளை முதல் பொறுப்பேற்கும் பதிவுலகின் ரெமோ அவர்களுக்கு வாழ்த்துக்கள்....
இந்த ரெமோவை வரவேற்ற ஸ்.பை.க்கு மகிழ்வுடன் என் நன்றி!
Deleteஇந்த வார ஆசிரியர் கலாகுமரன் அவர்களுக்குப் பாராட்டுகள்.....
ReplyDeleteவரும் வாரம் - அட நம்ம கணேஷ் வாரமா... வாழ்த்துகள் கணேஷ். வலைச்சரத்திலும் இந்த வாரம் முழுவதும் மின்னல் மட்டுமல்லாது இடி மழையோடு பதிவுகள் வரும் என எதிர்பார்க்கிறேன். அசத்த வாழ்த்துகள்!
இடி, மின்னலை எதிர்பார்த்து எனக்கு வரவேற்புக் கூறிய நண்பனுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteஅன்புடன் கலா குமரன் அவர்களுக்கு விடையளித்து,
ReplyDeleteமின்னல் வரிகளுக்கு வாழ்த்து கூறி வரவேற்கிறேன்!..
வாழ்த்துக் கூறி வரவேற்ற நண்பருககு என் இதயம் நிறை ந்ன்றி!
Deleteமின்னல் வரிகளின் வலைச்சர வருகைக்கு வாழ்த்துகள்...!
ReplyDeleteவாழ்த்துக் கூறிய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!
Deleteவிடைபெற்றுச் செல்லும் கலாகுமரன் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.
ReplyDeleteவலைச்சரம் ஆசிரியர் பணி ஏற்க வரும், சகோதரர் மின்னல் வரிகள் பால கணேஷ் அவர்களை வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறேன்!
மின்னல் வரிகள் பால கணேஷ் அவர்களை வலைப்பதிவர் உலகில் அறிமுகம் செய்வது என்பது கொல்லர் தெருவில் ஊசி விற்பது போன்றது. (பழைய பழமொழி! இப்போதும் பொருந்தும். சரிதானே?)
ஹா... ஹா... இன்றைய இளைஞர்களிடம் பீட்ஸா விற்பது போல-ன்னு புதுமொழி எழுதிடலாமா தமிழ் இளங்கோ ஸார்? எனக்கு வரவேற்பளித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!
Deleteமின்னல் வரிகளின் வலைச்சர வருகைக்கு வாழ்த்துகள்...!
ReplyDeletehttps://www.youtube.com/watch?v=uX3eo4dEJZU
மின்னல் வரிகளின் கணேஷ் அவர்கள்
விண்ணிலிருந்து மின்னலைக் கொண்டு வருவாரோ
மண்ணுக்குள் இருக்கும் நல ஊற்றுகளைக்கண்டு
மனதுக்கினிய சுவை நீரைத் தருவாரோ /
எதுக்கும் இந்த பாடலை அவர் வருகைக்கு
டெடிகேட் செய்யலாம்.
சுப்பு தாத்தா.
மின்சாரப் பாடலை வழங்கி என்னை வரவேற்ற சூரித்தாத்தாவுக்கு என் மனம் நிறைய நன்றி!
Deleteவணக்கம்
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் பணிக்கு அன்புடன் அழைக்கிறோம்..இந்த வாரம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அன்புடன் அழைத்து வாழ்த்திய ரூபனுக்கு இதயம் நிறை நன்றி!
Deleteமின்னம்பலத்தில் மின்னலாய் மின்னும் பதிவுகளை மின்னல் வரிகளில் தொகுக்க போகும் பால கணேஷர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஉங்களின் வாழ்த்துக்களுடன் என் பணி சிறக்கும்! மனமகிழ்வுடன் என் நன்றி நண்பர் வவ்வால்!
Deletevanga ganeshe iya.
ReplyDeletevazhthukkal.
வாழ்த்தி வரவேற்ற அருணாவுக்கு என் இதயம் நிறைந்த நன்றி!
Deleteபெண் பதிவர்களின் நண்பன், டைனசரே வந்தாலும் கலங்காமல் இருக்கும் அமைதிப்புயல், ஒரு மால, தியேட்டர் விடாம சென்னையை சுற்றும் வாலிபன்!!பி.எட் படிக்காமயே வாத்தியார் பட்டம் பெற்ற எங்கள் அண்ணா வலைச்சரத்தை கரண்டி இல்லாமயே கலக்க வர்றார்ன்னு ஒரு பேனர் ரெடி பண்ணுங்கப்பா.
ReplyDeleteம்ம்ம்... இதுக்குத்தான் தங்கச்சி கூடவே இருக்கணும்கறது! இந்த வாசகங்களோட பேனர் போட்டு அசத்திரலாம்மா! மிக்க நன்றி!
Deleteகலக்குங்க வாத்தியாரே கலக்குங்க
ReplyDeleteஉங்கள் வாழ்த்துக்களுடன் கலக்கறேன் நண்பா! மிக்க நன்றி!
Deleteவருக வருக..வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்தி வரவேற்கிறேன்.
ReplyDeleteவாழ்த்திய தங்கைக்கு மனம் நிறை நன்றி!
Deleteபாலகணேஷ் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்.
ReplyDelete//'ஊஞ்சல்' என்ற மாத இதழில்//
உல்லாச ஊஞ்சல் மாத இதழ்தானே அது?
ஆம் நண்பரே... ‘உல்லாச ஊஞ்சல்’ இதழ்தான் அது! னாழ்த்தி வரவேற்ற உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!
Deleteவலைசர ஆசிரியர் பொறுப்பேற்கும் , மின்னல் வரிகளுக்கு சொந்தக்காரான கணேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteமனமகிழ்வு தந்த தங்களின் வாழ்த்துக்கு மனம் நிறைய நன்றி!
Deleteஇந்த வார வலைசர ஆசிரியர் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்/
ReplyDeleteவாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி ஜமீலா சிஸ்!
Deleteமுன்னாள் அமிச்சர் கலாகுமரன் ஐயாவுக்கு ரெம்ப டேங்ஸ்பா... அல்லாருக்கும் சோக்கா சேவ செஞ்சிகினாருபா...
ReplyDeleteபுச்சா அமிச்சர் பதவி ஏத்துகினாரு நம்ப பால கணேஷ் ஐயா... கங்குசிக்காபா...
அப்பால அமிச்சர் கைல ஒரு அப்புளிகேசன்பா...
தொவுதில கரண்டு ஒயுங்கா வர்ரதில்லபா... யாரும் ஒயுங்கா பதிவு போட்றது இல்லபா... அப்பாலிக்கா யாரும் கமண்டு போட்றது இல்லபா... அப்புடிக்கா போட்டாலும் யாரும் ஓட்டு போட்றது இல்லபா... சட்டசபில பேசி இத்தெ கொஞ்சம் கண்டுக்கபா...
ரெம்ப டேங்ஸ்பா...
நைனா சொல்லிட்டா... அப்பாலிக்கா அப்பீல் ஏது? கண்டுக்கிறம்ப்பா... டாங்க்ஸ்ப்பா...!
Deleteவாருங்கள் பிறதர்...:)
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் பொறுப்பு ஏற்கபோகும் உங்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!
சிறப்பாக உங்கள் பணி அமையட்டும்!
வரவேற்று வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteவாழ்த்துக்கள் கணேஷ் அவர்களே...
ReplyDeleteஆசிரியர் பணி சிறப்பாகட்டும்...
வாங்க வாத்தியாரே!!
ReplyDeleteஇங்காவது தங்களைக் காணமுடிந்ததே! நன்றி! வாழ்த்து!
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDelete