வலைச்சரத்தில் ஐந்தாம் நாள் _ வெள்ளி மலர்
➦➠ by:
சித்ராசுந்தரமூர்த்தி
அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இன்றும் சில பதிவர்களுடன் உங்களை சந்திக்க ஆவலுடன் வந்துள்ளேன். முன்பே அறிமுகமானவர்களாக இருந்தாலும் அவர்களை என்னுடைய பார்வையிலிருந்து உங்களுக்கு அறிமுகப்படுத்த விருப்பம் கொண்டுள்ளேன். படித்துவிட்டு உங்களின் கருத்துகளையும் பகிர்ந்துகொள்ளலாமே !!
::::::::::::::::::::::::::::::::::::::::::::::
1) திருமதி இராஜலக்ஷ்மி அவர்களின் வலைப்பூ அரட்டை . இவர் அரட்டையை ஆரம்பித்தால் எல்லோரும் வந்து களைகட்ட வைத்துவிட்டுத்தான் போவார்கள். இவருக்கு வரும் பின்னூட்டங்களை வைத்தே இவர் எவ்வளவு பிரபலமானவர் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். இப்போதெல்லாம் ப்ளாக் ஹெட்டரை மாற்றிமாற்றி போட்டு பொறாமைபட வைத்துக்கொண்டிருக்கிறார்.
இவரது பதிவுகளில் வரிக்குவரி நகைச்சுவை இழைந்தோடும். சில எழுத்தாளர்கள் தங்களது கதை மாந்தர்களுக்கு ஒரு பெயரை நிர்ணயித்து அவர்களது எல்லா கதைகளிலும் அவர்களை உலவ விடுவார்கள். அதைப் போலவே இவருடைய பதிவுகளிலும் வரும் விக்ஷ்ணு, இராசி என்ற இருவருமே வாசகர்களிடத்தில் பிரபலம்.
இவரது பதிவுகள் மட்டுமல்லாது மின்மடல்களும்கூட நகைச்சுவையாகத்தான் இருக்கும். ஒருமுறை உதவி என்று ஓடியபோது, "இதுவரைக்கும் போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா" என்று கேட்டு மங்கல்ராயனுடன் போட்டிபோட்டு சீறிப் பாய்ந்துகொண்டிருந்த என் டென்ஷனை அப்படியே பூமிக்குத் திருப்பிவிட்டு வெற்றிக்கோட்டைத் தொடவிடாமல் செய்த பெருமை இவரையே சாரும். அதை இப்போது நினைத்தாலும் சிரிப்புதான்..
வரலாற்றுத் தலைவர்களைப் போல ராசியும் இங்கே சரித்திரம் படைத்திருக்கிறாராம், அது எப்படி என சென்று பார்த்துவிட்டு வருவோமே.
இவரது கணவரின் கனவுக்கன்னி யார்? எதற்காக அவர்களைப் பார்த்தால் இவருக்கு பொறாமையாக இருக்கிறதாம்? எல்லாவற்றிற்கும் இங்கே தன் நகைச்சுவை எழுத்துக்களாலேயே பதிலைத் தருகிறார்.
'ராசி " சூப்பர் சிங்கர் "ஆகிறாள்' இந்தப் பதிவை எத்தனை முறை படித்தாலும் அலுக்காது.
உதாரணத்துக்கு சொன்னவை ஒருசிலதான். உள்ளே போனால் நீங்கள் விழுந்துவிழுந்து சிரிக்காமல் வெளியேறமாட்டீர்கள்.
விக்ஷ்ணுவும் ராசியும் சேர்ந்து மேலும்மேலும் கலக்க வாழ்த்துகள்.
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
2) 'சமைத்து அசத்தலாம்' வலையின் ஆசிரியர் சகோதரி ஆஸியா ஓமர் அவர்கள். இவரும் வலையுலகில் பிரபலமானவர். சமையல்,கதை,கவிதை என எல்லாமும் இங்கு உண்டு. வலைப்பதிவிற்கான விளக்கம் போலவே சைவ அசைவ சமையல் எல்லாம் செய்து அசத்துகிறார்.வீடியோ சமையலும் உண்டு. இது மட்டுமல்லாமல் இன்னும் சில தளங்களிலும் தன் பங்களிப்பை அளித்துள்ளார்.
இப்போது 'சிறப்பு விருந்தினர் பக்கம்' என்ற புதுமையான முயற்சியை அறிமுகப்படுத்தி இருக்கிறார். சமையலில் ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்.
அல்_ஐன் ல் உள்ள ஒரு பூங்காவில் செயற்கையாக வடிவமைக்கப்பட்ட பூந்தோட்டத்தை தன் காமிராவில் 'க்ளிக்'கிக்கொண்டு வந்து பாலைவனத்தில் இப்படியொரு சோலையா என இங்கே வியப்படைய வைக்கிறார்.
அனைவருக்கும் பயன்படும் வகையில் இங்கே ஆங்கிலத்தில் உள்ள உணவுப் பொருள்களுக்கு தமிழில் மொழிமாற்றம் செய்து கொடுத்து பயனடைய வைத்திருக்கிறார்.
அசத்தல் மேன்மேலும் சிறப்படைய வாழ்த்துகள்.
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
3) 'சமையல் சுவைகள்' என்ற சமையல் தளத்தை நிர்வகிப்பவர் சகோதரி யாஸ்மின் அவர்கள். இவரது சமையல் குறிப்புகள் எல்லாம் படிப்படியாக, படங்களுடன் விளக்கப்பட்டிருக்கும். சைவம், அசைவம் என இரண்டுமே இருக்கும்.
ப்ரெட் வகைகளும், கேக் வகைகளும்கூட இருக்கின்றன. எல்லா குறிப்புகளும் செய்வதற்கு எளிதானதாக படங்களுடன் உள்ளன.
இவருக்கு பலாப்பழம் ரொம்பவும் பிடிக்குமாம். இப்படித்தான் ஒரு கீற்று வாங்கி, அதை குழந்தைகள் வீட்டிற்கு வருமுன் நறுக்கி அழகாக வைத்தால் யாருக்குதான் பிடிக்காது !
பால்கோவா செய்யச்சொல்லி கற்றுக்கொடுத்துவிட்டு, செய்ததை பாக்கெட் போட்டு வைத்திருப்பதைப் பார்த்தால் பார்சல் வீடு தேடி வரும்போல. இனிப்பு
பிரியர்களுக்கு நிறைய இனிப்புகள் உள்ளன. நீங்களும் போய் பார்த்து மனதளவில் மகிழலாமே !
ஏனோ, கொஞ்ச நாட்களாக எழுதாமல் இருக்கிறார். மீண்டும் தொடர வாழ்த்துகள்.
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
4) லக்ஷ்மி அம்மா அவர்களின் வலைப்பூ குறை ஒன்றுமில்லை . சமையல், தனது அனுபவங்கள், பயணங்கள் இவைபற்றியெல்லாம் எந்தவிதமான மேல்பூச்சும் இல்லாமல், ஆடம்பரமில்லாத வார்த்தைகளால் எழுதுவதே இவரின் சிறப்பு.
பயணங்கள் என்று சொல்லும்போது அமெரிக்கா, ஐரோப்பா என வளர்ந்த நாடுகளைப் பற்றியே நிறையப் படித்திருக்கிறோம். முதல்முறையாக இங்குதான் ஆப்பிரிக்க நாட்டு பயண அனுபவத்தைப்பற்றி படித்தேன். ஆப்பிரிக்க நாடான 'கென்யா'வுக்கு தான் மேற்கொண்ட பயணத்தை படிப்போருக்கு ஆர்வம் ஏற்படும் வகையில் இங்கே எவ்வளவு அழகாக எழுதியிருக்கிறார். நிறைய பதிவுகள் உள்ளன. அதேபோல் சிங்கப்பூர் பற்றிய பயணமும் பல பதிவுகளாக உள்ளன.நேரம் கிடைக்கும் போதெல்லாம் இவருடைய பதிவுகளை மீண்டும்மீண்டும் படித்துப் பார்ப்பேன்.
அனுபவம் வாய்ந்தவராச்சே, சமையலிலும் கலக்குகிறார். நிறைய குறிப்புகள் உள்ளன. அவற்றிலிருந்து உதாரணத்திற்கு ஒன்று இந்த புல்கா ரொட்டி .
ஏனோ இப்போதெல்லாம் எழுதுவதில்லை. இவர் எழுதாமல் விட்ட சமயத்தில்தான் இவரது தளம் படிக்க நேர்ந்தது. முன்புபோல் மீண்டும் வந்து எழுத வேண்டுமென வேண்டிக்கொள்கிறேன்.
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
5) 'என் ஓவிய உலகம் ' என்றொரு வலைப்பூ. இதில் அழகான ஒரு ஓவியமும், அதற்கு பொருத்தமாக ஒரு சிறு கவிதையும் என பதிவுகள் வெளியாகி வருன்றன. ஓவியமும், கவிதையும் ஒன்று சேர வரும் திறமை ஒருசிலருக்கே அமையும். ஆசிரியரின் கற்பனை வளத்தைப் போய் பார்வையிட்டு வருவோமே !!
அவற்றிலிருந்து உதாரணத்திற்கு ஒன்று விடியல் . இதுபோல் நிறைய இருக்கின்றன.
குழந்தையின் சிரிப்பில் இறைவன்
காண முடியும் - படிப்பின்
உலகில் விடியல் காண முடியும்
கல்வி கற்போம்
விடியல் கொள்வோம் !
3 – டி கிறுக்கல் என்ற தலைப்பில் 3_டி யிலும் ஒரு படத்தை வரைந்திருக்கிறார். எப்படி இருக்கிறது என்று போய் பார்ப்போமே !
மேலும் கற்பனை சிறந்து நிறைய கவிதகளும், ஓவியங்களும் வெளியிட வாழ்த்துகள்.
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
இன்றைய பதிவர்களை இத்துடன் முடித்துக்கொண்டு, நாளை வேறுசில பதிவர்களுடன் உங்களை சந்திக்க வருகிறேன், நன்றி !
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

|
|
முதல் நான்கு பேரும் தெரிந்தவர்கள்.... ஐந்தாமவர் புதியவர்.... பார்க்கிறேன்.
ReplyDeleteத.ம. 1
வாங்க வெங்கட்ராஜ்,
Deleteவந்து கருத்தைப் பகிர்ந்துகொண்டதற்கும் நன்றிங்க.
This comment has been removed by the author.
Deleteசித்ரா,
ReplyDeleteஎன் வலைத்தளம் மட்டுமல்லாமல் , என் மின் மடல்களையும் பாராட்டுவதற்கு மிக்க நன்றி . உங்களைப் போன்றவர்கள் கொடுக்கும் ஊக்கம் தான் எனக்கெல்லாம் நல்ல பூஸ்ட்.மீண்டும் நன்றி என்னை அஅறிமுகம் செய்ததற்கு.
ராசியையும்,விஷ்ணுவையும் வாழ்த்தியதற்கு ஸ்பெஷல் தாங்ஸ் சித்ரா.
ராஜலக்ஷ்மி,
Deleteவாங்க வாங்க ! முதலில் வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள். உடனே ஓடிவந்து, மகிழ்ச்சியான உங்க கருத்தையும் பகிர்ந்துகொண்டதற்கு நன்றிங்க.
வணக்கம்
ReplyDeleteஇன்று வெள்ளி மலர்கள் அனைத்தும் அருமை தொடருகிறேன் பதிவுகளை.....சிறப்பாக தொகுத்து வழங்கியமைக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாங்க ரூபன்,
Deleteஉங்க வாழ்த்துகளுக்கும், பாராட்டுகளுக்கும் நன்றிங்க.
வணக்கம்,
ReplyDeleteசின்ன சின்ன கிறுக்கல்களுக்கு பாரட்டியதற்கும், பகிர்தமைக்கும் மிக்கநன்றிங்க சித்ரா. வலைசரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.
இது போன்ற ஊக்கத்திலே மனநிறைவுடன் இன்னும் சிறப்பாக செயல்படவும் ஆயுத்தம் ஆவேன்.
நன்றி :)
வாங்க பவானிகணேக்ஷ்பாண்டி,
Deleteயாராவது பாராட்டும்போது உற்சாகம் வருவது இயல்புதானே ! மேலும் சிறப்பான படங்களுடன் பதிவுகள் வர வாழ்த்துகள். வந்து உங்கள் கருத்தையும் பகிர்ந்துகொண்டது மகிழ்ச்சிங்க.
ஐந்தாவது தளம் புதியது... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
வாங்க டிடி,
Deleteஉங்களுக்குத் தெரியாமல் ஆச்சரியம்தான். வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.!
பகிர்வு அறிமுகங்களுக்கு மிக்க நன்றி சிதரா. உங்கள் வாரம் அசத்தலாக இருக்கிறது!
ReplyDeleteஅறிமுகப்படுத்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
வாங்க ஆஸியா ஓமர்,
Deleteஉங்களுக்கும் அறிமுக வாழ்த்துகள். உங்க வருகைக்கும், பாராட்டுகளுக்கும் நன்றிங்க.
ராஜி அவர்களின் ரசிகை நான். அவரது பதிவுகள் எதையும் தவற விடுவதில்லை நான். இன்று சமையல் தளங்களினால் வலைச்சரம் கமகமக்கிறது. எல்லோர்க்கும் வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு வந்தேன். ஓவியமும், கவிதையுமாக பவனி வரும் பவானியும் என் வலைபதிவு தோழி தான்.
ReplyDeleteஉங்களுக்கும் பாராட்டுக்கள்! வரும் இரண்டு நாட்களில் யாரெல்லாம் இங்கு பவனி வரப்போகிறார்கள் என்பதை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.
வாங்க ரஞ்ஜனி,
Deleteஇன்று பெண்களே ஆக்கிரமிச்சிருக்காங்க. தற்செயலாத்தான் பார்த்தேன். யாரைத்தான் தோழியாகத் தெரியாது ! பெயரை சொன்னால் அறிமுகப்படுத்திவிட வசதியாக இருக்கும். உங்க நேரத்தை செலவிட்டு, இங்கு வருவதும், போய் வாழ்த்துகளைச் சொல்வதும் பெரிய விஷயம். பெரீஈஈய டாங்ஸ்ங்கோ !!
சிறப்பான அறிமுகங்கள்... அனைவருக்கும் வாழ்த்துகள்... லஷ்மிம்மா தான் எழுதி ரொம்ப நாள் ஆச்சு....
ReplyDeleteவாங்க ஆதிவெங்கட்,
Deleteலஷ்மிம்மா விரைவில் வந்து தொடருவார் என நம்புவோம் ! தங்களின் பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.
அருமையான தள அறிமுகம்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாங்க சுரேஷ்,
Deleteதங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.
இன்றைக்கு இரண்டு ஷிப்ட் வேலை. எனவே இப்போது தான் வந்தேன். அதிலும் இணைய இணைப்பு - வெள்ளிக்கிழமைகளில் குளித்து முழுகி சீவி சிங்காரித்து - (அன்னம் - வேண்டாம் !.. வருத்தப்படும்!) நத்தை நடை நடந்து கொண்டிருக்கின்றது!.. எனினும் - (போராடி) சென்று பார்த்த தளங்கள் சிறப்பான தேர்வு!..
ReplyDeleteவாங்க துரைசெல்வராஜு,
Deleteஇணைய பிரச்சினையிலும் ஓய்வெடுத்துக்கொள்ளாமல் அறிமுகத் தளங்களுக்கு சென்று வந்து கருத்தையும் பகிர்ந்துகொண்டதற்கு நன்றிங்க. நகைச்சுவையான உங்க பின்னூட்டத்திற்கும் நன்றிங்க.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteவாங்க தனிமரம்,
Deleteதங்களின் வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteவாங்க சே.குமார்,
Deleteதங்களின் வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.
ennai aavaludan ethirpaarkkum anpu nenjangalukku nanriyo nanri arimukathukku nanrimma koodiya seekkirame varuven
ReplyDeleteலக்ஷ்மிம்மா வாங்கோ,
Deleteபார்த்ததில் ரொம்ப சந்தோஷம். நீண்ட நாட்களாகவே உங்களைத்தான் எல்லோரும் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். நீங்க வந்ததில் மகிழ்ச்சிம்மா. கூடிய சீக்கிரமே வாங்க, நாங்களும் ஆவலாய் இருக்கிறோம் உங்களின் பதிவுகளைக் காண. வந்து கருத்தைப் பகிர்ந்துகொண்டது மகிழ்ச்சிம்மா, நன்றியும்.
அப்பாடா! லஷ்மிம்மா வந்தாச்சு.... சீக்கிரம் வந்து உங்க அனுபவங்களை பகிருங்கம்மா...
Deleteசித்ரா தங்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்...
வாங்க ஆதிவெங்கட்,
Deleteஎனக்கும் அவரது பின்னூட்டத்தைப் பார்த்ததும் சந்தோஷம் தாங்கல. புத்துணர்ச்சியோட வந்து நிறைய எழுதுவாங்கன்னு நினைக்கிறேன். வந்து உங்க மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டது மகிழ்ச்சிங்க.
பல நாட்களாக காணாமல் போயிருந்த திருமதி லக்ஷ்மி அவர்களை உங்கள் வலைச்சரம் தேடிக் கொண்டுவந்துவிட்டதே!
ReplyDeleteவாங்க லக்ஷ்மி அம்மா வாங்க! மறுபடி எழுதி அசத்துங்க!
வாங்க ரஞ்ஜனி,
Deleteலக்ஷ்மி அம்மாவின் வலைப்பூவை எழுதும்போதுகூட இவ்வளவு பெரிய ஆச்சர்யம் காத்துக்கிட்டு இருக்கும்னு நான் நினைக்கவே இல்லை. எவ்ளோ பெரிய விஷயம் இது ! பின்னூட்டத்தைப் பார்த்ததும் ஓடிவந்து விசாரித்ததற்கு நன்றிங்க.
எல்லோருக்கும் எனது அபரிமிதமான வாழ்த்துகள். அன்புடன்
ReplyDeleteகாமாக்ஷிம்மா,
Deleteவாங்க. உங்களது அபரிமிதமான வாழ்த்துகளுக்கு நன்றிமா. அன்புடன் சித்ரா.