மார்கழிப் பனியில் - புதன்
➦➠ by:
துரை செல்வராஜூ
அருள் மலர்.
அனைவருக்கும் வணக்கம்.
நேற்று இரண்டாவது பதிவில் - வருகை தந்து கருத்துரையை பதிவு செய்து பாராட்டி மகிழ்ந்த - மகிழ்வித்த, நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வலைச்சரத்தில் மூன்றாம் நாளாகிய இன்றும் - முதலில் ஆலய தரிசனம் செய்வோம்.
வருக - நண்பர்களே!..
இன்று திரு ஆதிரை. திருச்சிற்றம்பலம் என்று புகழப்படும் தில்லை வனத்தில் இறைவனின் ஆனந்த தரிசனம் நிகழ்வுறும் பொன்னாள். தில்லை வனம் எனப்படும் இத்திருத்தலம் இன்று - சிதம்பரம் என வழங்கப்படுகின்றது.
இத் திருக்கோயிலின் தலவிருட்சம் தில்லை எனப்படும் மரம்.
இத்தகைய மருத்துவ குணங்களையுடைய மரங்கள் அடர்ந்த வனத்தில் வீற்றிருக்கும் ஈசனைக் கண்டு வணங்கி வலம் வரும் போது - அந்த மரங்களில் இருந்து வெளியாகும் உயிர் வளி நம்மீது படும் தானே!..
அத்தகைய மருத்துவ குணங்களுள்ள உயிர்வளியை நாம் சுவாசிக்கும் போது - தீர வேண்டிய நோய்கள் தீர்ந்து விஷக்கிருமிகள் தொலைகின்றன. நமக்கு அருள் நலமும் உடல் நலமும் எளிதில் கிட்டுகின்றன.
ஆனால் - பாருங்கள்!..
இப்போது - சிதம்பரத்தில் தில்லை மரம் ஏதும் இல்லை என்றும் அருகிலுள்ள பிச்சாவரம் காட்டில் தான் தில்லை மரங்கள் உள்ளன என்று ஒரு தகவலை சமீபத்தில் படித்தேன்.
தில்லை மரத்தினைப் பற்றி மேலும் அறிவதற்கு -
வாழ்க்கைச் சுவடுகளும் சிந்தையும் பார்வையுமாய் வளைய வரும் பதிவு என்று அன்பர் இராம.கி. அவர்கள் வழங்கும் பதிவிற்கு செல்க!..
கோயிலுக்குச் சென்றும் குறை தீரவில்லை என்றால் - அது ஏன் என்று இப்போது புரிகின்றதா!..
மரங்களைத் தொலைத்து விட்டு - மருத்துவர்களைத் தேடிக் கொண்டிருக்கின்றோம்.
இயற்கையுடன் இணைந்த வாழ்வு நம்முடையது. அதை மீண்டும் எப்போது அடையப் போகின்றோமோ!..
இறைவழிபாடு என்பது கையெடுத்து கும்பிட்டு விட்டு வருவதல்ல!..
நாம் சார்ந்திருக்கும் இயற்கைச் சூழலைக் காப்பாற்றுவதே!.. மனிதனுக்குள்ள ஐந்து கடமைகளுள் ஒன்று இயற்கையைக் காப்பாற்றுவது. அது பூத யக்ஞம் எனப்படும்.
இத்தகைய புரிந்துணர்வுகளால் சூழப்படுவதே - இறைவழிபாடு.
அதனைக் கருப்பொருளாகக் கொண்டு விளங்கும் தளங்கள் சிலவற்றில் இன்று உலவுவோம் வாருங்கள்.
வலைத்தள வாயிலாக இறைவனிடம் நம்மை வழிப்படுத்துவதில் -
அன்பின் இராஜராஜேஸ்வரி அவர்கள் குறிப்பிடத்தக்கவர்.
அழகான படங்களுடன் ஒவ்வொரு நாளும் ஒரு பதிவினை வழங்கி - நம்மை ஆச்சர்யப்படுத்துகின்றார்.
அவர் பணி மேலும் சிறக்க இறைவன் அருள் புரிவானாக!..
அவர் பணி மேலும் சிறக்க இறைவன் அருள் புரிவானாக!..
தெய்வத்தமிழ் என - திரு.சிவபாத சேகரன் வழங்கும் வலைத்தளத்தில்,
ஆழ்ந்து அனுபவித்து அவற்றின் விளக்கத்தை,
''..கெடைக்காதது கெடைக்கறது பெரிசில்ல! அது
கெடைச்சதும், ஒடனே கூடவே ஓடி வர்ற மயக்கத்தை நெருங்கவிடாமப்
பாத்துக்கறதுதான் அத்த வுடவும் பெரிய சமாச்சாரம்!..''
''..உள்ளாரயேத் தேடுங்கப்பா அந்த குகனை! குருவருளால.. அந்தக் கந்தக் குருவருளால.... கண்டிப்பாக் கிடைப்பான்!..''
- என்று, கந்தர் அநுபூதியின் விரிவுரையை அழகான சென்னைத் தமிழில் நிகழ்த்துகின்றார். எங்கே!.. ஆத்திகம் எனும் பெயரில் திரு.VSK வழங்கும் வலைத் தளத்தில்!..
''..உள்ளாரயேத் தேடுங்கப்பா அந்த குகனை! குருவருளால.. அந்தக் கந்தக் குருவருளால.... கண்டிப்பாக் கிடைப்பான்!..''
- என்று, கந்தர் அநுபூதியின் விரிவுரையை அழகான சென்னைத் தமிழில் நிகழ்த்துகின்றார். எங்கே!.. ஆத்திகம் எனும் பெயரில் திரு.VSK வழங்கும் வலைத் தளத்தில்!..
ஆன்மீகம் எனும் பெயரில் திரு.முத்துக்குமார் வழங்கும் வலைத் தளத்தில்,
மஹாலக்ஷ்மி வாசம் செய்வது எங்கே?.. - என்று தெரிந்து கொள்ளலாம்.
தியானம் செய்வோர் கவனத்தில் கொள்ள வேண்டியவைகளையும் அறியலாம்.
கெளசிகம் எனும் பெயரில் - திரு. தி.ரா.ச. வழங்கும் வலைத்தளத்தில் -
ஸ்ரீ ஹனுமனைத் துதி மனமே!.. - என்கின்றார். மேலும் காஞ்சி ஸ்ரீபரமாச்சார்ய ஸ்வாமிகளுடனான - தனது அனுபவத்தையும் பகிர்கின்றார்.
சரி.. நான் சொன்னா ஒத்துகிறயா!..
பெரியவா.. சொன்னா அப்படியே ஒத்துகிறேன்!..
திரு. ஜீவா வெங்கட்ராமன் - என்வாசகம் எனும் தளத்தில்,
காசி அல்லது காஞ்சி ஏன் செல்ல வேண்டும்?
காளி.. காளி.. காளி.. என்று நானும் சொன்னால் -
காளி அன்னையின் பெயரில் அத்தனை சக்தி
இருப்பதை யார் அறிவார்?..
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் பாடிய பாடலின் ஒலிப் பேழையை பதிவிட்டுள்ளார்.
மேலும் மலையாள மொழிப்பாடல் ஒன்றின் வரி வடிவமும் உள்ளது. அந்தப் பாடல் -
ஆனந்த நடனம் ஆடும் கனக சபாபதியைப் பற்றியது.
|
|
அனைத்தும் அருமையான
ReplyDeleteஆன்மிக வலைத்தளங்கள்
அருமையான அறிமுகம்
தொடர நல்வாழ்த்துக்கள்
அன்புடையீர்..
Deleteதாங்கள் வருகை தந்து கருத்துரைத்து
வாழ்த்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி!..
மரங்களைத் தொலைத்து விட்டு - மருத்துவர்களைத் தேடிக் கொண்டிருக்கின்றோம்.
ReplyDeleteஉண்மைதான் ஐயா.
மருதமலையில் மருதமரங்களையும்
குருந்தமலையில்
குருந்த மரங்களையும்
இன்னும் பல கோவில்களில் ஸ்தலவிருட்சங்களை தேடினேன் .
ஒருகாலத்தில் அடர்ந்து காடுகளாக இருந்து அந்த கோவில்களுக்கு பெயர்க் காராணமாக அமைந்த அந்த மரங்கள் மருந்துக்குக்கூட கண்களில் தென்படவில்லை..!
அன்புடையீர்..
Deleteநாம் செய்து கொண்டிருக்கும் தவறு நமது தலைமுறையைப் பாதிக்கும் எனபதை உணர்ந்தும் அதிலிருந்து மீளமுடியாமல் தவிக்கின்றோம்.
தாங்கள் வருகை தந்து கருத்துரைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி!..
வலைத்தள வாயிலாக இறைவனிடம் நம்மை வழிப்படுத்துவதில் -
ReplyDeleteஅன்பின் இராஜராஜேஸ்வரி அவர்கள் குறிப்பிடத்தக்கவர்.
அழகான படங்களுடன் ஒவ்வொரு நாளும் ஒரு பதிவினை வழங்கி - நம்மை ஆச்சர்யப்படுத்துகின்றார்.
அவர் பணி மேலும் சிறக்க இறைவன் அருள் புரிவானாக!..//
எமது தளத்தினை சிறப்பான அறிமுகத்தால் பெருமைப்படுத்தியதற்கு மனம் நிறைந்த இனிய நன்றிக்ள்..!
அன்புடையீர்..
Deleteதங்களை விடுத்து ஒரு ஆன்மிக வலைப்பதிவினைக் குறிப்பிட முடியுமா?..
தங்களைப் பற்றிக் குறிப்பிடும் போது எங்களுக்குத் தான் பெருமை!..
தாங்கள் வருகை தந்து கருத்துரைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி!..
அனைத்தும் அருமையான சிறப்பான தளங்கள்... நன்றி...
ReplyDeleteஅனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள் ஐயா...
அன்பின் தனபாலன்..
Deleteதாங்கள் வருகை தந்து கருத்துரைத்து
வாழ்த்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி!..
தமிழ்மணத்தில் இணைத்து ஓட்டும் அளித்து விட்டேன் ஐயா.... நன்றி...
ReplyDeleteஅன்பின் தனபாலன்..
Deleteதங்களுக்கு - மனம் நிறைந்த நன்றி!..
அரிய தகவல்கள் அடங்கிய பதிவு.
ReplyDeleteமிக்க நன்றி.
அன்பின் சகோதரி..
Deleteதாங்கள் வருகை தந்து கருத்துரைத்து
வாழ்த்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி!..
ஆன்மீக வலைபதிவுகள் அறிமுகம் சிறப்பாக இருக்கிறது. அறிமுகமானவர்களுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅன்பின் அம்மா..
Deleteதாங்கள் வருகை தந்து கருத்துரைத்து - அனைவரையும்
வாழ்த்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி!..
//வலைத்தள வாயிலாக இறைவனிடம் நம்மை வழிப்படுத்துவதில் -
ReplyDeleteஅன்பின் இராஜராஜேஸ்வரி அவர்கள் குறிப்பிடத்தக்கவர்.
அழகான படங்களுடன் ஒவ்வொரு நாளும் ஒரு பதிவினை வழங்கி - நம்மை ஆச்சர்யப்படுத்துகின்றார்.
அவர் பணி மேலும் சிறக்க இறைவன் அருள் புரிவானாக!..//
மிகச்சிறப்பான அறிமுகம். நான் தினமும் காலையில் எழுந்ததும் முதன்முதலாகப் போய் தரிஸிக்கும் வலைத்தளம் இதுவே. அதனை இங்கு தாங்களும் அடையாளப்படுத்தி சிறப்பித்துள்ளதில் எனக்கும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. மிக்க நன்றி.
அன்புடையீர்..
Deleteஅன்பின் இராஜராஜேஸ்வரி அவர்களின் அரிய பணியை மறக்க முடியுமா!..
தாங்கள் வருகை தந்து கருத்துரைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி!..
ஆன்மிகம் சம்பந்தமான வலைத் தளங்கள் அறிமுகம் அருமை.
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்.
அன்புடையீர்..
Deleteதாங்கள் வருகை தந்து கருத்துரைத்து
அனைவரையும் வாழ்த்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி!..
வணக்கம்
ReplyDeleteஐயா.
இன்று அறிமுகத்தளங்கள் அனைத்தும் சிறப்பு.சிறப்பாக தொகுத்து வழங்கிய தங்களுக்கு பாராட்டுக்கள் ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அன்பின் ரூபன்..
Deleteதாங்கள் வருகை தந்து கருத்துரைத்து -
பாராட்டியமைக்கு மிக்க மகிழ்ச்சி.. நன்றி!..
வணக்கம்
ReplyDeleteஐயா
த.ம2வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அன்பின் ரூபன்..
Deleteதங்களுக்கு என்றும் நன்றிகள் உரியன..
சிறப்பான அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅன்புடையீர்..
Deleteதாங்கள் வருகை தந்து கருத்துரைத்து -
வாழ்த்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி.. நன்றி!..
அருமையான அறிமுகங்கள் இன்றும்!
ReplyDeleteநான் அறிந்ததும் அறியாததுமான பதிவர்கள்!
உங்களுக்கும் அறிமுகப் பதிவர்கள்
அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்!
அன்பின் சகோதரி..
Deleteதாங்கள் வருகை தந்து கருத்துரைத்து - அனைவரையும்
வாழ்த்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி.. நன்றி!..
ஐயா,
ReplyDeleteமார்கழிப் பனியில் தில்லை திருச்சிற்றம்பல ஆலய தரிசனத்தை முடித்துக்கொண்டு வெளியில் வந்தால், எல்லாமே ஆன்மீகப் பதிவுகள், மகிழ்ச்சியைக் கொடுத்தது. எனக்கு எல்லோருமே புதியவர்கள்தான். அறியத் தந்தமைக்கு நன்றி பல. வாழ்த்துகள்.
அன்புடையீர்..
Deleteதாங்கள் வருகை தந்து கருத்துரைத்து
அனைவரையும் வாழ்த்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி!..
கோயிலுக்குச் சென்றும் குறை தீரவில்லை என்றால் - அது ஏன் என்று இப்போது புரிகின்றதா!..
ReplyDeleteமரங்களைத் தொலைத்து விட்டு - மருத்துவர்களைத் தேடிக் கொண்டிருக்கின்றோம்.
இயற்கையுடன் இணைந்த வாழ்வு நம்முடையது. அதை மீண்டும் எப்போது அடையப் போகின்றோமோ!..
இறைவழிபாடு என்பது கையெடுத்து கும்பிட்டு விட்டு வருவதல்ல!..
நாம் சார்ந்திருக்கும் இயற்கைச் சூழலைக் காப்பாற்றுவதே!.. மனிதனுக்குள்ள ஐந்து கடமைகளுள் ஒன்று இயற்கையைக் காப்பாற்றுவது. அது பூத யக்ஞம் எனப்படும். //
அருமையான நற் கருத்துக்களோடு மிகச் சிறப்பான முறையில்
தாங்கள் செய்திருக்கும் அறிமுக ஊர்வலமானது மனத்தைக் கவர்ந்து
செல்கிறது ஐயா .அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும்
வாழ்த்துக்களும் இங்கே உரித்தாகட்டும் .
அன்புடையீர்..
Deleteதாங்கள் வருகை தந்து கருத்துரைத்து பாராட்டியதுடன்
அனைவரையும் வாழ்த்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி!..
இறைவழிபாடு என்பது கையெடுத்து கும்பிட்டு விட்டு வருவதல்ல!..
ReplyDeleteநாம் சார்ந்திருக்கும் இயற்கைச் சூழலைக் காப்பாற்றுவதே!.. மனிதனுக்குள்ள ஐந்து கடமைகளுள் ஒன்று இயற்கையைக் காப்பாற்றுவது. அது பூத யக்ஞம் எனப்படும். //
நன்றாக சொன்னீர்கள்.
நீங்கள் குறிப்பிட்ட ஆன்மீக தளங்கள அனைத்தும் மிக சிறப்பானது.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
அன்புடையீர்..
Deleteதாங்கள் வருகை தந்து கருத்துரை வழங்கி
அனைவரையும் வாழ்த்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி!..
ஆன்மீக வலைத்தளங்கள்....... இராஜராஜேஸ்வரி அவர்கள் தளம் தவிர மற்ற அனைத்துமே எனக்குப் புதியவை.
ReplyDeleteஅறிமுகத்திற்கு நன்றி.
அன்புடையீர்..
Deleteதாங்கள் வருகை தந்து கருத்துரை
வழங்கியமைக்கு மிக்க மகிழ்ச்சி!..
ஆன்மீகப் பகிர்வர்கள் பற்றி நல்ல பகிர்வு...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
அன்பின் குமார்..
Deleteதங்களது வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மிக்க நன்றி!..