07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, December 27, 2013

அறுசுவை விருந்து

பெண்கள்  தங்கள் எண்ணங்களை வண்ணங்களாய் மாற்றி எல்லாத் துறைகளிலும் முன்னுக்கு வந்து பேரும் புகழும் வாங்கினாலும் இல்லத்து அரசியாய்   தன் குடும்பநலம் பேணுவதில் அவளுக்கு நிகர் அவளே!

வாசலில் அழகான கோலம் போடுவது, குடும்ப உறுப்பினர்களுக்குப் பிடித்த உணவை சமையல் செய்து தேவை அறிந்து கொடுப்பது,  அதையும் அழகாய் பரிமாறுவது எல்லாம் ஒரு கலை. அதைச் சிறப்பாய் புதிது புதிதாக செய்கிறார்கள். அது மட்டும் அல்லாமல் வீட்டை அலங்கரிக்க தங்கள் கையால்  கலைப்பொருட்களை செய்வதில் வல்லவர்கள்- இன்று பகிரப்பட்டு இருக்கும் வலைத்தளம் வைத்து இருப்பவர்கள் அவர்கள் வலைத்தளத்தில் நிறைய கற்றுக் கொள்ளலாம்.

*  ’ராதாஸ் கிச்சன்’ என்று வலைத்தளம் வைத்து இருக்கும்  ராதாராணி அவர்கள் , வீட்டு வைத்தியம், கோலங்கள், சமையல் குறிப்புகள் கைவேலைகள் எல்லாம் பகிர்கிறார் . அவர் குறிப்பில் ஒரு அல்வாவும், வீட்டு மருத்துவமும் :-

குக்கர் அல்வா
அல்வா செய்வதற்கு கோதுமையை ஊறவைத்து அரைத்து பால் எடுத்து  கஷ்டப்படாமல் எளிதாக செய்யும் முறையை சொல்கிறார். நெய்யும் நிறைய இல்லாமல்ஆரோக்கியமாய்  ஆலிவ் எண்ணெயில் செய்ய சொல்லித் தருகிறார்.

வீட்டு மருத்துவம்
வீட்டில் எப்போதும் சுக்கு ,மிளகு,இஞ்சி,தேன்,
ஓமம்,வெந்தயம் ,வாங்கி வைத்து கொண்டால் நாமே கை மருத்துவம்செய்து பார்க்கலாம்.தற்காலிக நிவாரணம் கிடைக்கும்.சில சமயங்களில் மருத்துவ செலவுக்கு அவசியமே இல்லாமல் காப்பாற்றும்.இதில் பின் விளைவுகள் எதுவும் இருக்காது என்கிறார்.

* ’அடுப்பங்கரை’ என்று வலைத்தளம் வைத்து இருக்கும் கமலா அவர்கள் கோலங்கள்,  உணவே மருந்து எனும் சமையல் குறிப்புகள் ஆகியவற்றை வைத்து இருக்கிறார்.  அவர் குறிப்பிலிருந்து உடலுக்கு நன்மை பயக்கும் இரண்டு குறிப்புகள்:-

நெல்லிக்காய்  அவ்வைக்கு அதியமான் கொடுத்த நெல்லிக்கனி என்று இலக்கியத்திலும், தெய்வீக மரம் என்று புராணங்களிலும் இடம் பெற்ற நெல்லிக்காயும் அதன் மரமும் மிக்க மருத்துவ குணம் நிறைந்தது.
என்று நெல்லிக்காயின் மருத்துவ குறிப்பைச் சொல்லி  நெல்லிக்காய் தொக்கு, நெல்லிக்காய் உடனடி ஊறுகாய் , நெல்லிக்காய் இனிப்பு ஊறுகாய்,
நெல்லிக்காய் தயிர்ப் பச்சடி குறிப்புகளைத் தருகிறார்.
இப்போது நெல்லிக்காய் சீஸன் வாங்கி செய்து மகிழுங்கள்.
சிவப்பு அவல் கொழுக்கட்டை எளிதான சத்து மிகுந்த குறிப்பு.


* ’காகிதப்பூக்கள்’ என்ற வலைச்சரம் வைத்து இருக்கும்  ஏஞ்சலின்  அவர்களும் கைவேலை , சமையல் குறிப்பு என்று பலதுறைகளில் வல்லவராக இருக்கிறார். அவர்  சமையல் குறிப்பு இரண்டு:-
 சத்தான பொட்டுக்கடலை உருண்டை.

   என்ற பதிவில் ஏஞ்சலின் தன்னை  சமையலில் முன்னேற்றிய  பிரபல சமையல்  ராணிகளின் குறிப்பையும் தருகிறார். ஆசியா, ஜலீலா, அடுப்பங்கரை கமலா,  எல்லோரும் அதில் இருக்கிறார்கள்.  இந்த பதிவில் நிறைய சமையல் குறிப்புகள் இருக்கிறது வித விதமாய். ஏஞ்சலின் அன்பு அம்மாவின் நினைவும் இருக்கிறது.


* கோதுமை ரவை தோசை- -சமையல் குறிப்பு
 //வெறும் பாம்பே ரவா தோசை சாப்பிட்டிருப்பீர்கள். நான் சொல்லப் போவது,
கோதுமை ரவா தோசை. ஐம்பது வகை தோசை, நூறு வகை தோசை லிஸ்டில் கூட நான் கண்டதில்லை உண்டதில்லை இது தன் மகளின் கண்டுபிடிப்பு //என்கிறார்,  ninewest  என்ற வலைத்தளம் வைத்து இருக்கும்  நானானி அவர்கள். அருமையாக நகைச்சுவையாக சொல்கிறார் சமையல் குறிப்பை.

*
சில்லி இட்லி. எப்போது பார்த்தாலும் இட்லி மட்டுமே செய்து கொடுக்காமல் வித்தியாசமாய்   மஞ்சூரியன் டேஸ்டில் செய்து இருப்பதாய் சொல்கிறார்.
’இனிய இல்லம்’ என்ற வலைத்தளம் வைத்து இருக்கும்  பாயிஜா காதர் அவர்கள். இவரும் வீட்டுக் குறிப்புகள், கைவேலைப்பாடுகள் எல்லாம் செய்வதில் வல்லவர்.

*
கோவைக்காய்த் துவையல்  சமையலும் கைப் பழக்கம் என்று சொல்லும் பாசமலர் தருகிறார். இவரும் பன்முக வித்தகர்.  நாலு வலைத்தளங்கள் வைத்து இருக்கிறார். இலக்கியம் , கவிதை, மற்றும் ஆங்கிலத்தில் கவிதை, ஆங்கிலத்தில் சமையல் குறிப்புகள் என்று அசத்தும் பெண்மணி.


* எவ்வளவுதான் வித விதமான சமையல் சாப்பிட்டலும் வத்தக்குழம்பும் சுட்ட அப்பளமும், அல்லது பொரித்த அப்பளமும் இருந்தால் போதும் என்று சில சமயம் தோன்றும் . அதற்கு ’மிராவின் கிச்சனில்’சுண்டைக்காய் வத்தல் குழம்பு இருக்கிறது அருமையாக.
சுண்டைக்காய் வத்தல் குழம்பு 



* பெண்கள் மட்டும் தானா சமையல் குறிப்புகள் தர முடியும் !
’பூவையின் எண்ணங்கள் ’ வலைத்தளம் வைத்து இருக்கும்  பாலசுப்பிரமணியம் ஐயா அவர்களும் தன் வீட்டில் தன் மனைவி செய்யும் .
மொளகூட்டல்  இஞ்சிப் புளி சமையல் குறிப்பைத் தருகிறார் அழகாய்.
மொளகூட்டல் இஞ்சிப் புளி காம்பினேஷன் சுவையாய் இருக்கும் என்கிறார்.
இவர் தஞ்சை ஓவியங்கள்  செய்வதில் வல்லவர். தன் இன்னொரு வலைத்தளத்தில் கதை, கவிதை , கட்டுரைகள் என்று வழங்குகிறார்.(gmb writes)



                                          என் கணவர் வரைந்த ஓவியம்
*
அடடா என்ன அழகு ! ................ ’அடை’யைத் தின்னு பழகு!!
 இப்படிச் சொல்லி  அடை செய்யும் முறையை விரிவாக அழகாய்ச் சொல்கிறார் , வை.கோபாலகிருஷ்ணன் சார். இந்த அடைமாவிலேயே இன்னொரு பலகாரம் செய்யவும் அவர் சொல்லித் தருகிறார். அதன் பெயர் ”குணுக்கு”!
.
(BACHELORS களுக்குப் பயன்படும் சமையல் குறிப்பு கேட்ட )’சமையல் அட்டகாசம்’ என்று வலைத்தளம் வைத்து இருக்கும் ஜலீலா அவர்கள்  நடத்திய சமையல் போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் பரிசு வாங்கிய குறிப்பு  இந்த அடை. கதை, கட்டுரை, ஓவியம் என்று  வலைத்தளத்தில் வழங்கி வருபவர்.


* ’வாழி நலம் சூழ’ என்ற வலைத்தளம் வைத்து இருக்கும்  அஸ்வின் ஜி அவர்கள் தன் வலைப்பூவை இயற்கை நல வாழ்வியல் நெறிகளைத் திரட்டி தரும்  வலைப்பூ  என்கிறார்.  இந்தப் பதிவில் அருமையான வளமான வாழ்விற்கு ’உணவே மருந்து’ எனும் இந்த கட்டுரையைப் பகிர்ந்து இருக்கிறார்:-

வளமான வாழ்விற்கு உணவே மருந்து -

இயற்கை உணவும் ஆரோக்கியமும் என்ற பதிவில் நாம் அன்றாடம் உண்ணும் உணவின்போது கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய வழிமுறைகளை டாக்டர் றொசாரியோ ஜோர்ஜ், Ph.D.,   அவர்கள்                          ’வளமான வாழ்விற்கு உணவே மருந்து’ என்ற கட்டுரையில்  சொல்கிறார்.
இந்தப் பதிவில் உள்ளது போல் உணவு உண்பதைக் கடைபிடித்தால் வாழ்வில் நலமாக இருக்கலாம்.



உண்ணும் உணவு உனக்கு கிடைத்தவகை எண்ணி உண்ணிடல் உன்கடன்.
                                                    வாழ்க வளமுடன்!
                                                   ------------------------------


64 comments:

  1. வணக்கம்...

    அறிமுகங்களை பார்த்து விட்டு வருகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம், திண்டுக்கல் தனபாலன், நலமா?
      உங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.

      Delete
  2. Ashvin Ji தளம் புதியது...

    அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. திண்டுக்கல் தனபாலன் வாழ்க வளமுடன் , உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
      நீங்கள் செய்யும் பணியை ரூபன் அவர்கள் செய்தார்கள் . அவர் எல்லா தளங்களுக்கும் சென்று செய்தி சொல்லி வாழ்த்தி வந்தார்.

      Delete
    2. அன்பின் தனபாலன். தங்கள் அன்பு என்னை மகிழ்ச்சியில் திக்கு முக்காட வைக்கிறது. வலைச் சரத்தில் என்னைக் கோர்த்திருக்கும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் நன்றி. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

      Delete
  3. வணக்கம்
    அம்மா.
    இன்றைய வலைச்சரஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் திரு.ரூபன்.
      மார்கழிப் பனியில் மணம் வீசும் வலைச் சரத்தின் அறிமுகம் கிடைக்கப் பெற்றது எனக்கு கிடைத்த அங்கீகாரமாக உணர்கிறேன். தங்கள் வருகைக்கும், செய்திக்கும், பாராட்டுக்கும் என் இதய நன்றிகள். புத்தாண்டு வாழ்த்துக்கள்.

      Delete
    2. வாங்க ரூபன், வாழ்க வளமுடன். உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. தொடர்வது மகிழ்ச்சி.

      Delete
  4. வணக்கம்

    த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தமிழ்மணவாக்கு அளித்தமைக்கு நன்றி ரூபன்.

      Delete
  5. இன்றைய அறிமுகங்களும், கோலம், சார் வரைந்த ஓவியம் என எல்லாமே அற்புதம்.. அறிமுகமானவர்களில் நான்கு பேர் எனக்கு புதியவரகள்...

    சிறப்பான பகிர்வு..

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஆதிவெங்கட், வாழ்க வளமுடன்.உங்கள் அருமையான கருத்துக்கு நன்றி. புதியவர்களைப் படித்து கருத்து சொல்லுங்கள்.

      Delete
  6. மிராவின் கிச்சன் வலைத்தளத்தின் இணைப்பு மட்டும் சிறிது (htm-->html)சரி செய்ய வேண்டும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. திண்டுக்கல் தனபாலன் நீங்கள் சொன்னது போல் சரி செய்தேன் வந்து விட்டது. நன்றி.
      நன்றி.
      வாழ்த்துக்கள்.

      Delete
  7. கடைசியில் தாங்கள் வரைந்துள்ள கோலம் அழகாக உள்ளது. சும்மா அந்த இரு முக்கோணங்களையும் ஒன்றுக்குள் ஒன்றாக பின்னிப்பின்னி விட்டீர்கள். சார் மிக அசால்டாக வரைந்துள்ள ஓவியமும் மிக நன்றாக உள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வை. கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
      இந்த முறையில் போட சொல்லிக் கொடுத்த கமலாஅவர்கள் ’கோலம் ’’வலைத்தளத்திற்கு நன்றி. சார் ஓவியத்தை பாராட்டியமைக்கு நன்றி.

      Delete
  8. இன்றைய அறுசுவை விருந்து அருமை. தடபுடலானது.

    எடுத்தவுடன் எல்லோருக்கும் அல்வா கொடுத்து அசத்தியுள்ளது பாராட்டுக்குரியது. சுண்டைக்காய் விஷயத்தைக்கூட விட்டுவிடாமல் சொல்லியுள்ளது மிகவும் சுவையானது.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. வாங்க சார், எந்த ஒரு நல்ல விஷ்யத்தையும் இனிப்புடன் தொடங்க வேண்டும் என்பதால் அல்வா.
      பாராட்டுக்கு நன்றி.

      Delete
  9. //அடடா என்ன அழகு ! ................ ’அடை’யைத் தின்னு பழகு!!
    இப்படிச் சொல்லி அடை செய்யும் முறையை விரிவாக அழகாய்ச் சொல்கிறார் , வை.கோபாலகிருஷ்ணன் சார். இந்த அடைமாவிலேயே இன்னொரு பலகாரம் செய்யவும் அவர் சொல்லித் தருகிறார். அதன் பெயர் ”குணுக்கு”!//

    அடடா, என் பதிவினையும் அறிமுகம் செய்துள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    அதற்கான பின்னூட்டங்களின் மொத்த எண்ணிக்கை 267 எனக் காட்டுகிறது. ஆனாலும் 200 வரை மட்டுமே பிறரால் படிக்கக் காட்சியளிக்கிறது. முழு 267ஐயும் என்னால் மட்டுமே வேறொரு வழியில் போய் படிக்க முடிகிறது.
    .
    //(BACHELORS களுக்குப் பயன்படும் சமையல் குறிப்பு கேட்ட )’சமையல் அட்டகாசம்’ என்று வலைத்தளம் வைத்து இருக்கும் ஜலீலா அவர்கள் நடத்திய சமையல் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு வாங்கிய குறிப்பு இந்த அடை. //

    முதல் பரிசு அல்ல மேடம். அது இரண்டாம் பரிசு மட்டுமே. முடிந்தால் அதற்கு ஒரு திருத்தம் அளிக்கவும். http://gopu1949.blogspot.in/2013_01_01_archive.html

    //கதை, கட்டுரை, ஓவியம் என்று வலைத்தளத்தில் வழங்கி வருபவர்.//

    மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி.

    அன்புடன் VGK

    ReplyDelete
    Replies
    1. உங்களை தெரியதவர்கள் உண்டா? சமையல் குறிப்பை கொடுத்து பரிசும் வென்றதால் இந்த பதிவில் இணைத்தேன்.
      இரண்டாம் பரிசு என்று திருத்தி விட்டேன்.
      நன்றி உங்கள் வருகைக்கு.

      Delete
  10. மார்கழிப் பனியில் பூத்த வலைச் சரத்தினை பார்வையிட்டு மகிழ்ந்தேன். எனது வாழி நலம் சூழ (frutarians.blogspot.in) வலைப்பூவைப் பற்றி அறிமுகம் செய்த கோமதி அரசு அவர்களுக்கும், வலைச்சரம் நிர்வாகத்தும் எனது பணிவான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் செய்தியை முதலில் எனக்கு சொன்ன திரு.திண்டுக்கல் தனபாலன், திரு.ரூபன் மற்றும் திருவாளர்.கோமதி அரசு அனைவரின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றிகளைத் தெரிவிப்பதில் மனமகிழ்கிறேன். வலைச்சரம் சேவை தொடர வாழ்த்துக்கள். அனைவர்க்கும் எனது அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க Ashvin Ji வாழ்க வளமுடன்.
      உங்கள் தளத்தில் உள்ள கட்டுரைகள் எல்லாமே மிகவும் நன்றாக இருக்கிறது. உங்கள் புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி.

      Delete
    2. அம்மாவின் அன்புக்கு எளியேனின் இதய நன்றி.
      வாழி நலம் சூழ....

      Delete
  11. வித விதமான பன்முக
    வித்தகர்களின்
    வலைதளங்களை சிறப்பித்தமைக்கு வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. வாங்க இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      Delete
  12. நல்ல அறிமுகம்...நன்றி
    உங்கள் அறிமுக தளங்களை தொடர்வேன்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க mathu s உங்கள் பெயர் மதுவா? மாதுவா?
      வாழ்க வளமுடன்.
      உங்கள் வருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி.

      Delete
  13. அருமையான அறுசுவை விருந்து கோமதிக்கா.அறிமுகங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.பகிர்வுக்கு மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஆசியா வாழ்க வளமுடன். உங்கள் பாராட்டுகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      Delete
  14. எல்லோரையும் நோட் பண்ணி வைத்துக்கொள்கிறேன் ...கண்டிப்பா பயன்படும்.... நன்றி

    ReplyDelete
    Replies
    1. வாங்க எழில், வாழ்க வளமுடன். நோட் பண்ணி வைத்துக் கொள்வது மகிழ்ச்சி.
      நன்றி.

      Delete
  15. வணக்கங்க எப்படி இருக்கிங்க ? அடடா அற்புதமான வலைச்சர அறிமுகங்களை தாமதமாக வந்து பாா்வையிட்டமைக்கு மன்னிக்கவும். சிறப்பான அறிமுங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. வாங்க சசிகலா, வாழ்க வளமுடன். நன்றாக இருக்கிறேன். உங்கள் வரவுக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      Delete
  16. அறிமுகங்கள் என்றிருக்க வேண்டும். கீபோா்ட்டு பிழை..

    ReplyDelete
  17. அருமையான இன்றைய வலைச்சர அறிமுகப் பதிவர்கள்!.
    அவர்களுக்கும் உங்களுக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க இளமதி, வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கும், நல் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      Delete
  18. அருமையான அறிமுகங்கள்...
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க குமார், வாழ்க வளமுடன்.
      வாழ்த்துக்களுக்கு நன்றி.

      Delete
  19. நல்ல குறிப்புகளைத் தேடித் தொகுத்திருக்கிறீர்கள். நன்றி. ஓவியம் பிரமாதம். கோலம் வெகு நேர்த்தி.

    தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
      உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.
      சாரின் நன்றிகளும்.

      Delete
  20. 'சுவை'யான அறிமுகங்கள்.

    'ஸாரி'ன் ஓவியமும் சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம், வாழ்க வளமுடன். உங்கள் கோரிக்கை நிறைவேற்றி விட்டார்கள் சார்.
      நீங்கள் கேட்டுக் கொண்டதால் சாரின் ஓவியம் தொடர்கிறது. அதனால் நன்றி உங்களுக்கு.

      Delete
  21. வணக்கம் கோமதி அக்கா..வலைசரத்தில் முதல் அறிமுகமாக என் வலை
    தளத்தை அறிமுகபடுத்தியது மகிழ்ச்சி..மிக்க நன்றி..!அறிமுகதகவலை சொன்ன
    தனபாலன் சார், ரூபன் சார் இருவருக்கும் எனது நன்றிகள்..! அறிமுக தளங்களில் இருவர் அறிமுகமானவர்கள். மற்ற தளங்களை பார்த்து தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம், ராதாராணி, வாழ்க வளமுடன்.
      பதிவுகள் எழுதி வெகுநாட்கள் ஆகி விட்டதே! பதிவுகள் தாருங்கள். மற்ற தளங்களை பார்த்து தொடர்வது மகிழ்ச்சி.

      Delete
  22. அறுசுவைப் பதீவு அருமை.அனைத்துப் பதிவுகளையும் படிக்க செல்கிறேன். ஓரிருவர் தெரிந்தவர் .அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.
      அனைவரையும் படிக்க செல்வது மகிழ்ச்சி.
      வாழ்த்துக்களுக்கு நன்றி.

      Delete
  23. அன்புடையீர்..
    சித்திரம் எழிலாக வரையப்பட்டுள்ளது.

    முதலிலேயே ’’அல்வா’’ (!!) கொடுத்து அசத்திவிட்டீர்கள்.
    நல்லதொரு பதிவுகளைத் தேடித் தொகுத்திருக்கிறீர்கள். மகிழ்ச்சி..

    ReplyDelete
    Replies
    1. அன்புடையீர் வணக்கம், வாழக் வளமுடன்.
      சித்திரத்தை பாராட்டியதற்கு நன்றி.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      Delete
  24. இன்றைய சரத்திலும்கூட அனைத்து பதிவுகளும் சிறப்பான தொகுப்புதான். அனைவருக்கும் பாராட்டுக்கள்.
    [tha.ma. +1]

    ReplyDelete
    Replies
    1. வணக்கம், அ. முஹம்மது நிஜாமுத்தீன் , வாழ்க வளமுடன்.
      உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.

      Delete
  25. எனது வலைப்பூவை குறிப்பாக :) சமையல் குறிப்புகளை இன்றைய வலைசரத்தில் அறிமுகபடுதியதற்க்கு மிக்க நன்றி கோமதியக்கா சார் வரைந்த சித்திரம் சூப்பர்ப் தாமதத்துக்கு மன்னிக்கவும்..

    Angelin

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏஞ்சலின், வாழ்க வளமுடன். சாரின் சித்திரத்தை பாராட்டியதற்கு நன்றி.

      Delete
  26. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி.

      Delete
  27. தாமதத்துக்கு மன்னிக்கவும் ,இப்போதான் பார்த்தேன் தகவல் தந்த சகோ .தனபாலன் ,ரூபன் ராஜேஸ்வரியக்கா அனைவருக்கும் மிக்க நன்றி ..

    ReplyDelete
    Replies
    1. நானும் அவர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

      Delete
  28. எனது வலைப்பூவைப் பற்றி குறிப்பிட்டமைக்கு நன்றி கோமதி அரசு.

    ReplyDelete
  29. அனைவருக்கும் வாழ்த்துக்கள் .பகிர்வுக்கு மிக்க நன்றி தோழி .

    ReplyDelete
  30. ஆஹா இன்றைக்கு அறுசுவை விருந்து படைக்கும் தளங்கள்.... நல்ல பகிர்வு......

    ஓவியம் மிக அழகு...... ஐயாவிடம் சொல்லிவிடுங்கள் எனது வாழ்த்துகளை!

    ReplyDelete
  31. வாங்க வெங்கட், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி. சாரிடம் சொல்லிவிட்டேன் உங்கள் வாழ்த்துக்களை.
    நன்றி.

    ReplyDelete
  32. அறுசுவை விருந்து அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ஓவியம் ,கோலம் .அழகு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க மாதேவி, வாழ்க வளமுடன்.
      ஓவியம், கோலம் ரசித்தமைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது