என்னை அறிந்தால்... நீங்கள் என்னை அறிந்தால்....!!!
➦➠ by:
தமிழ்வாசி பிரகாஷ்
வணக்கம் வலைச்சர நண்பர்களே,
சென்ற வார வலைச்சர ஆசிரியராக இருந்த கோமதி அரசு அவர்களுக்கு வாழ்த்தை சொல்லி எனது வலைச்சர வாரத்தை ஆரம்பிக்கிறேன். நான் வலைச்சர ஆசிரியராக இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்தேன். அதன்பிறகு சீனா ஐயாவிற்கு உதவியாக துணை பொறுப்பாசிரியராக வலைச்சரத்திற்கு பொறுப்பேற்று உள்ளேன். மற்ற பதிவர்கள் ஆசிரியராக வலைச்சரத்தில் எழுதுவதை வாசிக்கும் போது எனக்கும் சில சமயங்களில் வலைச்சர ஆசிரியராக ஒரு வாரத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என்ற ஆசை வரும். ஆனால் பதிவர்கள் ஒவ்வொரு வாரமும் தவறாமல் தங்கள் வலைச்சர பணியை செம்மையாக நிறைவேற்றுவார்கள். இன்று முதல் ஆரம்பிக்கிற வாரத்திற்கு பொறுப்பேற்க இருந்த பதிவர் தவிர்க்க இயலாத காரணத்தால் பொறுப்பேற்க இயலாத காரணத்தால், நானே ஆசிரியர் பொறுப்பேற்றுக் கொண்டேன். நிற்க.....
இயற்பெயர் பிரகாஷ் குமார். வலைப்பூ பெயர் தமிழ்வாசி. எனவே பதிவுலகிற்கு தமிழ்வாசி பிரகாஷ் என்ற பெயரை மாற்றிக் கொண்டேன். வாழ்வாதாரத்திற்காக மதுரை வந்த நான், எனது வலையில் மதுரை பற்றிய பல பதிவுகள் எழுதியுள்ளேன். அவற்றுள் முக்கியமாக மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் , பிளக்ஸ் பேனர் எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படுகிறது , டூவீலர் ஸ்டாண்டு அவலம் , மதுரையின் பசுமை பூங்கா போன்ற சில பதிவுகளை குறிப்பிட்டுச் சொல்லலாம்.
புதிய பதிவர்களுக்கும், வலைப்பூ ஆரம்பிக்க ஆசை இருப்பவர்களுக்கும் உதவியாக வலைப்பூ வழிகாட்டுதல் தொடர் எழுதியுள்ளேன். இத்தொடர் உங்களுக்கு பயனுள்ளவையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பல்சுவை செய்திகளை இரண்டு பேர் உரையாடும் வகையில் தனபாலு... கோபாலு... என்ற தலைப்பிலும், சின்ன பாப்பா... பெரிய பாப்பா என்ற தலைப்பிலும், லென்ஸ் ரவுண்டு என்ற தலைப்பிலும் பதிவிட்டுள்ளேன்.
சமூக சிந்தனை பதிவுகளாக கஞ்சா, சிகரெட், மது பற்றிய கேடுகளும், முகநூல் மற்றும் வலைப்பூவில் தமிழில் எழுத எளிதான மென்பொருள் பற்றியும், தொழில்நுட்ப பதிவுகளும் எழுதியுள்ளேன். தொழிநுட்ப பதிவுகள் பற்றி அறிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
சரி நண்பர்களே, என்னைப் பற்றியும் எனது வலைதளம் பற்றியும் சில வரிகள் குறிப்பிட்டுள்ளேன். இனி நாளை முதல் பல தலைப்புகளில் பதிவுகளை பார்ப்போமா!!!!!!!!!
|
|
சோதனை மறுமொழி....
ReplyDeleteவணக்கம்.. பிரகாஷ் அவர்களே!..
ReplyDeleteதங்களின் வரவு நல்வரவாகுக!..
வலைச்சரத்திற்கு வாழ்த்துகள்..!
ReplyDeleteவருக வருக இனிய நண்பரே... சுருக்கமான சுய அறிமுகம்...
ReplyDeleteஅசத்த வாழ்த்துக்கள்...
நீங்களே களத்துல குதிச்சிட்டீங்களே... வாழ்த்துக்கள்.... கலக்குங்க...
ReplyDeleteவாழ்க வளமுடன், தமிழ்வாசி பிரகாஷ்.
ReplyDeleteஉங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
சுய அறிமுகம் அருமை.
வாழ்த்துக்கள்.
வருகைக்கும், கருத்திற்கும் நன்றி... நண்பரே...
Deleteதமிழ்வாசி என்ற பெயரே பிரமாதமாக இருக்கிறது.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
வருகைக்கும், கருத்திற்கும் நன்றி... நண்பரே...
Deleteஇந்த வார வலைச்சர ஆசிரியராக பணியேற்கும் திரு தமிழ்வாசி பிரகாஷ் அவர்களே தங்களை வருக வருக என வரவேற்று நீங்கள் மேற்கொண்டுள்ள பணி சிறக்க வாழ்த்துகிறேன்!
ReplyDeleteவருகைக்கும், கருத்திற்கும் நன்றி... நண்பரே...
Deleteசுய அறிமுகம் அருமை...தங்களுக்கு என் வாழ்த்துக்களும், வரவேற்புகளும்...
ReplyDeleteவருகைக்கும், கருத்திற்கும் நன்றி... நண்பரே...
Deleteமதுரை பற்றிய இன்றைய செய்திகளை புகைப்படத்துடன் தினமும் பகிருங்கள்! (நே.வி!)
ReplyDeleteவருகைக்கும், கருத்திற்கும் நன்றி... நண்பரே...
Deleteஇந்த வார வலைச்சர ஆசிரியராக பணியேற்கும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் பிரகாஷ்
ReplyDeleteவருகைக்கும், கருத்திற்கும் நன்றி... நண்பரே...
Deleteதமிழ்வாசி பெயரே எனக்குப் புதுமையாக இருக்கிறது.
ReplyDeleteஒரு ஐயம் உள்ளது. அருள் கூர்ந்து அதனைக் களையவேண்டும்.
தமிழ் என்னும் மொழியை வாசி , பிறகு மற்ற மொழிகளை வாசித்துக்கொள்ளலாம் என்று ஒரு தாயும் தந்தையும் தனது குழந்தைக்கு சொல்வது போல எடுத்துக்கொள்ளலாம்.
அல்லது,
நான் திருச்சி வாசி, சென்னை வாசி, மதுரை வாசி என்று சொல்கிறார்கள்.
நீங்களோ தமிழிலே வாசம் செய்வதாகச் சொல்வதாகவும் தோன்றுகிறது.
எப்படி இருப்பினும்,
வாசமுள்ள மலரிது.
வசந்தத்தை தரும்.
சுப்பு தாத்தா.
www.vazhvuneri.blogspot.com
www.subbuthatha.blogspot.com
வணக்கம் ஐயா...
Deleteதமிழ்வாசி என்ற பெயர் தாங்கள் குறிப்பிட்டது போல தமிழை வாசி என்றும், மதுரை வாசி, சென்னை வாசி என்பதுபோல தமிழ்வாசி என இரு பொருள் படும்...
அனால் நான் மதுரை வாசி என்ற அர்த்தத்தில் வருமாறு தமிழ்(நாடு) வாசி என கொண்டுள்ளேன்.
வணக்கம்
ReplyDeleteசுய அறிமுகம் சிறப்பாக உள்ளது..வலைச்சர பணி சிறக்க எனது வாழ்த்துக்கள்..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கும், கருத்திற்கும் நன்றி...
Delete//தமிழ்வாசி பிரகாஷ்Mon Dec 30, 08:19:00 AM
ReplyDeleteசோதனை மறுமொழி....//
நீங்களே முதல் கமெண்ட் போட்டுக்கிட்டா... நாங்க me the first-னு போடவேணாமா?
த. ம. +1
தலைப்பு நல்லாயிருக்கு...
ReplyDeleteஅதோடு உங்க சுய அறிமுகம் சுறு-க்காக இருக்கு...
நல்வாழ்த்துக்கள் தமிழ்வாசி பிரகாஷ். சுய அறிமுகம் சிம்ப்ளி சூப்பர்ப்.தொடர்ந்து அசத்துங்கள்.
ReplyDeleteதம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்பார்கள்! அன்பின் சீனா அவர்களுக்கு அன்புத் தம்பியாய் தளபதியாய் விளங்கும் தமிழ்வாசி பிரகாஷுக்கு வாழ்த்துக்கள்! இந்த வாரத்திற்கு பொறுப்பேற்க இருந்த பதிவர் வர இயலாத சூழ்நிலையில், இக்கட்டான நிலையிலும், ஆசிரியர் பொறுப்பேற்றுக் கொண்ட உங்களுக்கு நன்றி! தொடரட்டும் பணி!
ReplyDeleteதுணையாசியர் இந்த வாரம் பொறுப்பாசிரியர்.பணி சிறப்புற நல்வாழ்த்துக்கள் பிரகாஸ்.
ReplyDeleteவாழ்த்துகள் பிரகாஷ்..... நல்ல சுய அறிமுகம். தொடரட்டும் வலைச்சரத்தில் பகிர்வுகள்.
ReplyDeleteவருக ! தமிழ்வாசி! தருக! புதிய பதிவர்களை! நன்றி! பணி சிறக்க வாழ்த்து!
ReplyDeleteகேப் கிடைத்தால் ரேடியோவில் ...நிலைய வித்துவான் வாசிக்க கேட்கலாம் என்பார்கள் !இவ்வாரம் முழுவதும் 'தமிழ்வாசி'யின் கைவண்ணத்தை வாசிக்க ஆவலுடன் இருக்கிறேன் !
ReplyDelete+1
+1
ReplyDeleteநல்ல பதிவு!