மார்கழிப் பனியில் - திங்கள்
➦➠ by:
துரை செல்வராஜூ
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா!..
தமிழ் மூதாட்டி ஒளைவையார் அருளிய செந்தமிழைக் கேட்டு மகிழ்ந்திருக்கும் - ஐங்கரனே!..
இதோ என் தமிழையும் கேட்டு - எல்லாருக்கும் நல்லருள் புரிய வேண்டும்!..
மலைச்சரிவில் பாரதத்தைப் பதிந்தவனே வருவாய்..
இதோ என் தமிழையும் கேட்டு - எல்லாருக்கும் நல்லருள் புரிய வேண்டும்!..
மலைச்சரிவில் பாரதத்தைப் பதிந்தவனே வருவாய்..
வலைச்சரத்தில் - தமிழ்பதிய வழித்துணையும் தருவாய்..
கலைவளரும் தமிழ் வழியில் தடை தகர்ப்பாய் போற்றி..
தலைமகனே!.. கரிமுகனே!.. கரங்குவித்தேன் போற்றி!..
அன்புடையீர்!.. அனைவருக்கும் அன்பின் வணக்கம்.
தாயின்
கையைப் பிடித்துக் கொண்டு வகுப்புக்கு வரும் குழந்தையைப் போல - தமிழின்
சிறு விரல் நுனியைப் பற்றிக் கொண்டு - வலைச்சரத்திற்குள் நானும் வந்துள்ளேன்.
முன்னதாக -
என்னையும் வலைச்சரப் பணியில் ஈடுபடுத்திய
அன்பின் சீனா ஐயா அவர்களுக்கும்
தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கும்
மனம் நிறைந்த நன்றி!..
அன்பின் சீனா ஐயா அவர்களுக்கும்
தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கும்
மனம் நிறைந்த நன்றி!..
சில வாரங்களுக்கு முன் - எனது விருப்பத்தினை கேட்டறிந்து,
ஊக்கப்படுத்திய அவர்களது பெருந்தன்மையினால் -
இன்று தங்கள் முன் - நான்!..
ஊக்கப்படுத்திய அவர்களது பெருந்தன்மையினால் -
இன்று தங்கள் முன் - நான்!..
முந்தைய
வாரங்களில் வலைச்சரத்தினை நடத்திச் சென்றவர்களுக்கும் கடந்த வாரத்தில்
பணியாற்றிய அன்பின் சித்ராசுந்தர் அவர்களுக்கும் நன்றி!..
நவம்பர் 22 - 2012 முதல் - ''தஞ்சையம்பதி'' எனும் தளத்தினூடாக -
''அறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்'' - என எழுதி வருகின்றேன்!..
ஏதோ ஓடும் என்ற நினைத்தேன்!.. இருந்தாலும் - இந்த அளவுக்கு வேகமாக ஓடும் என்று நினைக்கவில்லை.
வலைச்சரத்தில்
- இந்தப் பணியின் மூலம்,
மூத்தவர்களும் முன்னோடிகளும் ஆன - ஜாம்பவான்களுடன் நட்பு விளைகின்றது - என்ற அளவில் மிகவும் மகிழ்ச்சி.
மூத்தவர்களும் முன்னோடிகளும் ஆன - ஜாம்பவான்களுடன் நட்பு விளைகின்றது - என்ற அளவில் மிகவும் மகிழ்ச்சி.
நான் எழுதியவற்றுள் - எல்லாமே எனக்குப் பிடித்தவை தான். இருப்பினும் - இவற்றுள் சிறந்ததென சிலவற்றை சுட்டிக் காட்டவேண்டும் என்பது மரபு!..
தஞ்சையம்பதியில்
வெளியாகும் ஆலய தரிசனம் - திருப்பதிகங்கள், திருப்பாசுரங்கள் மற்றும்
ஸ்லோகங்கள் அனைத்தையும் பிழையில்லாமல் - சரி பார்த்த பின்னரே
வெளியிடுகின்றேன்.
அதையும் மீறி சொற்பிரயோகங்களில் - பிழைகள் காணப்பட்டால் - பொறுத்தருள்க!..
அதையும் மீறி சொற்பிரயோகங்களில் - பிழைகள் காணப்பட்டால் - பொறுத்தருள்க!..
முதல் பதிவு விநாயகர் வணக்கத்துடன்!..
பதிவுகள் தொடங்கின. அதன் பின் அடுத்தடுத்து மனதில் தோன்றியவற்றை பதிவில் இணைத்தேன்.
அவற்றுள் பொது ஆவுடையார் கோயில் பற்றிய கார்த்திகை சோமவாரம்,
மார்கழித் திங்கள், திருவாதிரை,
அவற்றுள் பொது ஆவுடையார் கோயில் பற்றிய கார்த்திகை சோமவாரம்,
மார்கழித் திங்கள், திருவாதிரை,
நந்தி திருக்கல்யாணம் பங்குனி உத்திர சேர்த்தி
பஞ்சநத பாவா
புன்னை நல்லூர் ஆகியனவும்
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பெருமானாகிய திருநாவுக்கரசர்
குலதெய்வம் உறையும் திருக்கோயில் விளங்கும் உவரி
ஆகியனவும் சட்டென நினைவுக்கு வருவன.
இன்னும் சிலவற்றை நாம் ஆலய தரிசனம் செய்யும் போது வழங்குகின்றேன்.
மகிழ்ச்சி நிறைந்த இந்த வேளையில் -
அவளுடைய பாதமலரில் தலை வைத்து வணங்குகின்றேன்.
தொடுத்து வழங்கும் பணியில் காணப்படும் நிறை - என்னைச் செதுக்கியவர்களுடையது!.. குறைகளைப் பொறுத்தருள்க!..
நாளை முதல் - நான் உங்களுக்கு அறிமுகம்!..
அதுவரையில் - நமது சிந்தனைக்கு!..
மீண்டும் சந்திப்போம்!.. அன்பின் வணக்கங்களுடன்
துரை செல்வராஜூ
|
|
மலைச்சரிவில் பாரதத்தைப் பதிந்தவனே வருவாய்..
ReplyDeleteவலைச்சரத்தில் - தமிழ்பதிய வழித்துணையும் தருவாய்..
கலைவளரும் தமிழ் வழியில் தடை தகர்ப்பாய் போற்றி..
தலைமகனே!.. கரிமுகனே!.. கரங்குவித்தேன் போற்றி!..//
அருமையான ஆரமபம் ..
வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!
அன்புடையீர்!..
Deleteமுதல் வருகை தங்களுடையது!.. நினைக்கவே மகிழ்ச்சியாக இருக்கின்றது.
மிக்க நன்றி!..
This comment has been removed by the author.
ReplyDeleteஅன்பின் துரை செல்வராஜூ -
ReplyDeleteமார்கழைப் பனியில் - திங்கள் - பதிவு அருமை - சுய அறிமுகப் பதிவுகள் அருமை - சென்று பார்க்கிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அன்புடையீர்!..
Deleteஇதில் எல்லா மகிழ்ச்சியும் தங்களுக்கே!..
தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி!..
தங்களின் பகிர்வுகளைப் போலவே, சுய அறிமுகம் மிகவும் சிறப்பு ஐயா... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅன்பின் தனபாலன்..
Deleteதாங்கள் வருகை தந்து கருத்துரை வழங்கி பாராட்டியமைக்கு மிக்க நன்றி!..
கருத்திட வரும் அன்பர்களுக்கு :
ReplyDeleteதைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் சிறப்புக் கட்டுரைப் போட்டி... விளக்கம் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Pongal-Special-Article-Contest.html
அன்பின் தனபாலன்!..
Deleteதைப் பொங்கல் சிறப்புக் கட்டுரைப் போட்டியை அறிவித்து - அதில் கலந்து கொல்லும்படி அனைவரையும் அழைத்த பெருந்தன்மை வாழ்க!..
நல்ல தளங்களை தொடர்ந்து அறிமுகம் செய்ததற்கு நன்றி...
ReplyDeleteவாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்கட்டும்...
அன்புடையீர்..
Deleteதங்களின் வருகைக்கும் வாழ்த்தினுக்கும் மிக்க நன்றி!..
முதலில் எழுதியுள்ள விநாயகர் துதியும், அன்பின் அம்மா பற்றிய குட்டிக்கவிதையும், கடைசியில் காட்டியுள்ள கிளியின் தாகமும் மிகவும் ரஸிக்கும்படியாக உள்ளன. சுய அறிமுகத்திற்குப் பாராட்டுக்கள்.
ReplyDeleteநாளை முதல் துவங்கவுள்ள அறிமுகப்படலத்திற்கு வாழ்த்துகள்.
அன்புடையீர்..
Deleteதாங்கள் வருகை தந்து பாராட்டி வாழ்த்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி!..
அம்மா பற்றிய கவிதைப் படம் - Facebook- ல் இருந்து பெற்றது.
விநாயகர் துதியுடன் ஆரம்பித்தது அருமை ஐயா. 'அம்மா' கவிதையும் அருமை. சுட்டியுள்ள பதிவுகளுக்கு சென்று பார்க்கிறேன். பல வருடங்களுக்குப் பிறகு தமிழ் வகுப்பினுள் நுழைந்ததுபோல் இருக்கிறது. சிறப்பான சுய அறிமுகம், வாழ்த்துக்கள் ஐயா .
ReplyDeleteஅன்புடையீர்..
Deleteவருகை தந்து பாராட்டி வாழ்த்துரைத்த தங்களுக்கு மிக்க நன்றி!..
அம்மா பற்றிய கவிதைப் படம் - Facebook- ல் இருந்து பெற்றது.
இந்த வாரம் ஆசிரயர் பொறுப்பினை ஏற்று வழிநடத்த வந்திருக்கும்
ReplyDeleteதங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ஐயா .
தொப்பை அப்பனைத் தொழு தேற்றிய பகிர்வு கண்டு உள்ளம் குளிர்ந்து .
தொடரட்டும் தங்கள் பணி வெகு சிறப்பாக .தொடர்கின்றேன் அன்போடு
சீனா ஐயாவிற்கும் என் நன்றி கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக்கொண்டு .
அன்புடையீர்!..
Deleteதங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி!..
வணக்கம்
ReplyDeleteஐயா
இன்று தங்களைப்பற்றிய அறிமுகம் மிகச்சிறப்பாக உள்ளது.. தொடர்ந்து சிறப்பாக வலைச்சரத்தில் பதிவுகள் வலம் வர எனது வாழ்த்துக்கள் ஐயா.தொடருங்கள் எங்கள் ஆதரவு எப்போதும் இருக்கும்.....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அன்பின் ரூபன்..
Deleteதங்களின் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!.. நன்றி!..
ஐங்கரனை வேண்டி அழகாய் கவியமைத்து
ReplyDeleteபைந்தமிழில் பக்திரசத்துடன் பதிந்திட்ட சுய அறிமுகம்!
மிகச் சிறப்பு! தொடருங்கள்!...
சிறக்கட்டும் இவ்வார வலைச்சரம் உங்களால்!
வாழ்த்துக்கள் ஐயா!
அன்பின் சகோதரி..
Deleteதங்களின் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!.. நன்றி!..
சுய அறிமுக வலைச்சர பதிவு சிறப்புடன் இருக்கிறது.
ReplyDeleteஅன்பின் முஹம்மது நிஜாமுத்தீன்..
Deleteதங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!.. நன்றி!..
ஐங்கரனை துதித்த வண்ணம் அறிமுகப்படலம் அருமை ஐயா பணி சிறப்புற நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅன்புக்குரிய நண்பரை - தனிமரம் குறிப்பதோ !?..
Deleteபல்கிப் பெருக நல்வாழ்த்துக்கள்.
தங்களின் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!.. நன்றி!..
அன்பின் அய்யா!
ReplyDeleteதங்களின் வலைச்சரப் பணியினை செம்மையாய் ஆற்றிடவும், மார்கழிப்பனியின் வேணுகானம் பாடிடவும் வாழ்த்துக்கள்! எம் கண்ணன் துணையால் வளமும் நலமும் பெற மார்கழித் திங்களில் எம் கண்ணனைப் பிரார்த்திக்கின்றேன். நன்றி அய்யா!
அன்பின் கிருஷ்ணா ரவி..
Deleteதாங்கள் வருகைக்கும் தந்து வாழ்த்துரை நல்கியமைக்கு கண்டு மிக்க மகிழ்ச்சி!.. நன்றி!..
சிறப்பான சுய அறிமுகம். தொடர்ந்து சந்திப்போம்.
ReplyDeleteஅன்பின்.. வெங்கட்..
Deleteதங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன். நன்றி.
கரிமுகன் பாடலும், அம்மா பாடலும் அருமை.
ReplyDeleteஅன்புடையீர்..
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி!..
கலக்கல் ஆரம்பம்... வேலைப்பளூவின் காரணமாக எல்லாப் பதிவுகளையும் இன்று மொத்தமாகப் பார்த்தேன்... ரசித்தேன்...
ReplyDeleteஅன்பின் குமார்..
Deleteநான் அறிவேன் தங்களுடைய வேலை சூழ்நிலையை..
எனினும் சிரமம் பாராமல் - வருகை தந்து
கலந்து கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி!..