07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, February 17, 2014

பள்ளிக்கூடம் போகாமலே! பாடங்களைப் படிக்காமலே! நான் இப்ப டீச்சர்!!

ஏம்மா! தூயா உன் அம்மா எங்கம்மா!? நீ காஃபி போட்டுக் கொண்டு வந்து கொடுக்குறே!


ஏம்பா, வீடு அமைதியா இருக்குறது உனக்கு பிடிக்கலியா!?

இல்லம்மா, ஆஃபீசுல இருந்து வந்து இம்புட்டு நேரமாகியும் உன் அம்மாவை காணலியே அதான் கேட்டேன்.

அப்பா! நீங்க நெட் கனெக்‌ஷன் வாங்கினாலும் வாங்கினீங்க. படிப்பு சம்பந்தமா தேடுறதுக்குக் கூட எங்களை கம்ப்யூட்டர் பக்கம் விடாம, அவங்களே 24 மணி நேரமும் உக்காந்துக்கிட்டு இருக்காங்கப்பா!சரி, அவங்க இம்சை இல்லாம நாங்க படிக்கலாம்ன்னு கண்டுக்கிடலை. ஆனா, இன்னிக்கு பீரோவுல இருக்குற பட்டு புடவை, நகைலாம் எடுத்து போட்டுக்கிட்டு, பியூட்டி பார்லர் போய் மேக்கப் பண்ணிக்கிட்டு வந்து காலைல இருந்து கம்ப்யூட்டர் முன்னாடியே உக்காந்துட்டிருக்காங்க.

அப்படியா! காலைல அப்ப சாப்பிடவே இல்லியா பசங்களா!?

சாப்பிட்டோம்பா! ஹோட்டல்ல இருந்து சாப்பாடு வர வச்சிட்டாங்க. அதுமட்டுமில்லாம ஒரு வாரத்துக்கு சாப்பாடு ஹோட்டல்ல இருந்துதானாம்.

ஏன் அப்பு!? அம்மாக்கு உடம்புக்கு முடியலையா! வாங்க, அம்மாக்கிட்ட போய் என்னன்னு கேட்டு வரலாம்.

ஏய் ராஜி! ராஜி! சனியனே எம்புட்டு நேரமா கத்துறேன். இங்க என்ன பண்ணிட்டு இருக்கே! பசங்களுக்கு சமைச்சு போடுறதை விட அப்படி என்ன முக்கியமான வேலை!?

எப்ப வந்தீங்க!? ஏன் இப்படி கத்துறீங்க!?

என்னது!? எப்ப வந்தீங்களாவா!? ஏண்டி நான் வந்ததுக்கூட தெரியாம இங்க என்ன பண்ணுறே!? அதுமில்லாம இதென்னடி வாய் வீங்குன அனுமார் மாதிரி லிப்ஸ்டிக் போட்டுக்கிட்டு இப்படி இருக்கே!

நான் பிளாக்கரா இருக்குறது உங்களுக்கு தெரியும்ல. என்னை மாதிரி நல்லா எழுதும் பதிவர்களை, சக பதிவாளர்களுக்கு அறிமுகப்படுத்த வலைச்சரம்ன்னு ஒரு பிளாக் ஆரம்பிச்சு சீனா ஐயா நடத்தி வர்றார். அவர்தான் என் திறமையை பார்த்து ராஜி! நீ நம்ம பிளாக்ல எழுதனும்மான்னு ரொம்ப நாளா கேட்டுக்கிட்டு இருந்தார். சரி போனாப்போகுதுன்னு ஒத்துக்கிட்டேன்.  

நீ நல்லா எழுதுறியா!? உன் திறமையைப் பார்த்து உன்னை கூப்பிட்டாங்களா!? சரி, அப்படியே கூப்பிட்டு இருந்தாலும் இந்த நகை, மேக்கப்லாம் எதுக்குடி!? 

ஏன்க! படிக்காமயே டீச்சர் ஆகிர்யிருக்கேன். டீச்சருக்கேத்த மாதிரி அழகா தெரியனுமில்ல! அதுக்குதான்.

அடிப்பாவி! ஏண்டி இம்படி அலம்பறே!? அப்படி என்னதான் எழுதி கிழிச்சிருக்கேன்னு நானும் பார்க்குறேன். நகரு.

இருங்க நீங்க போய் பார்த்தால் நான் எழுதுன எல்லாத்தையும் பார்த்துட்டு என்னைத் திட்டுவீங்க. அதனால, நானே சில லிங்க் எடுத்துக் கொடுக்குறேன் பாருங்க.

பேப்பர், நோட்டுல கிறுக்கிட்டு இருந்து, அறிவியல் வளர்ச்சி காரணமா பிளாக்ல கிறுக்குன முதல் கவிதை.

எனக்கும் சுமாராக் கவிதை எழுத தெரியும்ன்னு அப்பப்ப நான் போடும் அறுவைகள்

பிளாக்ல ஆண்கள் ராஜ்ஜியம்தான். அதனால, என் சகோதரர்கள் அவங்க வீட்டுல அடிவாங்காம காய்கறிகள் வாங்கி வந்து, சமைச்சு நல்ல பேர் எடுக்கனும்ன்னு நான் போட்ட பதிவுகள்.

டிப்ஸ் மட்டுமில்ல மொக்கையும் போட தெரியும்ன்னு நான் போட்ட பதிவு

நம்ம பசங்க பிறந்த நாளுக்கு நாம் மட்டும் வாழ்த்தினா போதுமா!? நல்லவங்க பலரும் வாழ்த்தினாதானே நல்லா இருக்கும்ன்னு நினைச்சு நான் போட்ட பதிவுகள் தூயா,   இனியா,  அப்பு , என் அப்பா அம்மா கல்யான நாள்

நாம அப்பபப்போ டூர் போன போது எடுத்த படங்களை வச்சு போடும் பதிவுகள்

போன வருசம் பதிவர் சந்திப்புக்கு போய் வந்த அனுபவம், இந்த வருசம் பதிவர் சந்திப்புக்கு போய் வந்த அனுபவம்

சந்தோசங்களில் சேர்ந்து சிரிக்க மட்டுமில்ல, துக்கத்தில் தோள் கொடுக்கவும் நாங்க இருக்கோம்ன்னு சொல்ற என் சகோதரர்களை நம்பி பகிர்ந்துக்கிட்ட சோகம்.

இதுமட்டுமில்லாம புண்ணியம் தேடி, ஐஞ்சுவை அவியல்,  கிராஃப்ட் ன்னு இன்னும் இருக்கு. போய் படிச்சு பார்த்து என்ன எழுதிக் கிழிச்சேனு பார்த்து வாங்க! உங்க கூட பேசிப் பேசி என் மேக்கப் கலைஞ்சுட்டுது. நான் போய் மேக்கப் போட்டு வரேன்.

60 comments:

  1. அதானே...! சகோதரி பாணியே தனி... அசத்தல் அறிமுகம்... வாழ்த்துக்கள்... லிப்ஸ்டிக் கொஞ்சூண்டு தான் ஜாஸ்தி.... அதுக்கு எப்படி திட்டலாம்...? பயம் இல்லாம போச்சி...!

    ReplyDelete
    Replies
    1. நிஜம்தான் அண்ணா! ஒரு வாரம் கழிச்சு அங்க மனுசன் நிலைமைய பாருங்க!

      Delete
  2. எல்லோரும் ஓடி வாங்க! ராஜி பதிவு போட்டிருக்கா.

    ReplyDelete
    Replies
    1. ஹும்... பாவம் என் சிஸ்டர்...! இப்படி ஊரைல்லாம் கூவி அழைக்க வேண்டிய நிலைக்கு வந்துட்டுதே! அவ்வ்வ்வ்வ்வ!

      Delete
    2. எல்லோரும் சோதனை மறுமொழின்னு கொடுக்குறங்களே! நாம வித்தியாசமா கொடுப்போமேன்னு டைப் பண்ணி பப்ளிஷ் பண்ணுறதுக்குள் பின்னூட்டப் புயல் டிடி அண்ணா வந்துட்டார்.

      Delete
    3. அவர்தான் பின்னூட்டப் ‘புயல்’ங்கறதை நிரூபிச்சுட்டார்!

      Delete
  3. ரொம்ப லேட்டா வந்ததுக்கு இந்த டீச்சரை மொதல்ல முட்டி போடச் சொல்லணும்னு நெனச்சுக்கிட்டே படிச்சா, அதுககு அழகா காரணம் சொல்லித் தப்பிக்கப் பாககறாங்க...! இவ்வளவையும் ‘அவரை’ படிக்கச் சொல்லிட்டு, மறுபடி மேக்கப்பா? தாங்காதும்மா...!

    ReplyDelete
    Replies
    1. குல தெய்வம் கோவிலுக்கு போய் வந்ததால லேட்டாகிடுச்சுண்ணா!

      Delete
    2. குலதெய்வத்தை தரிசனம் பண்ணிட்டு வந்த கையோட ஆசிரியர் பொறுப்பேற்று முதல் பகிர்வு & அதுவும் சுய அறிமுகம்! ரொம்பவே மங்களகரமா ஆரம்பிச்சிருக்கும்மா! மகிழ்வான என் நல்வாழத்துகள்!

      Delete
  4. உள்ளேன் டீச்சர்!

    ReplyDelete
  5. வணக்கம்

    இன்று தங்களைபற்றிய குறிப்புடன் தங்களின் பதிவுகளை அறிமுகம் செய்துள்ளிர்கள்.... வாழ்த்துக்கள் தங்களின் பக்கம் தொடருகிறேன்

    குறிப்பு- நாளைக்கு 18.02.2014அன்று காலையில் பதிவு போட்டால் வாசகர்கள் அதிகரிக்கும் எது எனது கருத்து......

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நாளைக்கு காலைலயே பதிவு வெளிவந்திடும் சகோ! முதல் நாள்ங்குறதால மேக்கப் போட்டு வர லேட்டாகிட்டுது.

      Delete
  6. டீச்சர் அக்கா! வணக்கங்க! அறிமுகப்பதிவு அசத்தல்! தொடருங்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. டீச்சரை அக்கான்னுலாம் சொல்லலாமா!? பெஞ்ச் மேல ஏறுங்க.

      Delete
  7. அம்பாளடியாள் ?உள்ளேனம்மா .இவங்க மட்டும் மேக்கப் போட்டுக் கொண்டே
    சாவகாசமா வரலாம் நான் மட்டும் எதுக்கு அவசரப்பட்டுக் கையத் தூக்கணும் .
    ரிப்போட்டு மார்க் பண்ணியாச்சு பாடத்தத் துவங்க வேண்டியது தானே அதுக்குள்ளே
    மேக்கப் பண்ண போயிட்டாங்க பாரு :))))))) .வாழ்த்துக்கள் சகோதரி அசத்துங்கள் .

    ReplyDelete
    Replies
    1. இப்படிலாம் எடக்கு மடக்கா கேள்விக் கேட்டால் அப்புறம் ப்ளே கிரவுண்டைச் சுத்தி 100 தரம் ஓட வைப்பேன்.

      Delete
    2. நானும் கொஞ்சம் பொறுமையா போவம்னு பார்த்த , இந்த டீச்சர் அட்ராசிட்டி தாங்க முடியலப்பா! ஹலோ இப்டி புடிச்சு உக்கார வச்சுருக்கிங்களே, நான் ஸ்டுடென்ட் இல்ல மேடம், உங்க கிளாசை சூபெர்வைஸ் பண்ணவந்த ஆபீசர். ஹா...ஹா.. அருமை மேடம் கலக்கலான தொடக்கம் !

      Delete
  8. பதிவு போட்டாச்சா... ஓகே....

    லேபிளில் உங்க பெயர் போட்டுக்கங்க.... அப்பத்தான் உங்க பதிவை சர்ச் செய்ய மத்தவங்களுக்கு வசதியாய் இருக்கும்....

    ReplyDelete
  9. குட்மார்னிங் டீச்சர்..

    வாழ்த்துகள் :-))

    ReplyDelete
    Replies
    1. குட்மார்னிங்க் சாந்தி!

      Delete
  10. உங்கள் வழி! தனி வழி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. இப்படியே உசுப்பேத்தி, உசுப்பேத்தியே ஜோலியை முடிச்சுடுறாங்கப்பா!

      Delete
  11. டீச்சரே லேட்டா வந்தா எப்படி! பரவாயில்லை போனா போகுதுன்னு உட்டுட்டோம்..

    அனுமார் வாய்...:))) பசங்க பாவம்...:))

    ReplyDelete
    Replies
    1. கோவிலுக்கு போய் காலைல தான் வந்தோம் ஆதி! வந்ததும் மழை. மதிய 3 மணிக்கு உக்காந்து டைப் பண்ணி போஸ்ட் போட்டேன். நாளைல இருந்து காலைலயே போஸ்ட் வந்துடும்

      Delete
  12. ஆஹா ராஜி பதிவுன்னா சாப்பாடு கூட வேண்டாம்பா அப்டின்னு முதல் பெஞ்ச்ல வந்து உட்கார்ந்தாச்சு டீச்சர் நான் காலைலயே. ஆனா பாருங்க ராஜி டீச்சர் மேக்கப் போட்டுட்டு வர லேட்டானதால நானும் வேலைக்கு கிளம்பி போயாச்சு. டீச்சர் உங்க பதிவின் ஆரம்பமே களைக்கட்டுதுப்பா... அசத்தல்....

    ReplyDelete
    Replies
    1. குலதெய்வம் கோவிலுக்கு போய் வந்தோம் மஞ்சு. காலைல இருந்து மழை..., கரண்ட் கட். மதியம் மூனு மணிக்கு மேலதான் உக்காந்து போஸ்ட் ரெடிப் பண்ணி போட்டேன். அதான் லேட். நாளைல இருந்து கரெக்ட் டைம்க்கு பதிவு போடப்படும்!!!

      Delete
  13. பள்ளிக்கூடம் போகாமலே! பாடங்களைப் படிக்காமலே! நான் இப்ப டீச்சர்!!
    .........இப்படி உங்க பதிவுகளின் தலைப்பை பார்த்து நிறைய தடவை வந்து ...ஆனால் ஏமாற்றம் இல்லை ...நல்ல தமாசு

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

      Delete
  14. சும்மா ஒரு கலக்கு கலக்கிட்டிங்க போங்க ..!!!
    அம்புட்டு சிரிப்பு வாசிக்கும் போதே ...!!!
    எழுத்து பணி ...இனிதே தொடர வாழ்த்துக்கள் ...!!!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஜெயா!

      Delete
  15. அப்பா! நீங்க நெட் கனெக்‌ஷன் வாங்கினாலும் வாங்கினீங்க. படிப்பு சம்பந்தமா தேடுறதுக்குக் கூட எங்களை கம்ப்யூட்டர் பக்கம் விடாம, அவங்களே 24 மணி நேரமும் உக்காந்துக்கிட்டு இருக்காங்கப்பா!சரி, அவங்க இம்சை இல்லாம நாங்க படிக்கலாம்ன்னு கண்டுக்கிடலை. /

    எங்க வீட்டில் நடந்ததை எல்லாம் ஏன் எழுதுகிறீகள்..?/!!

    ReplyDelete
    Replies
    1. வீட்டுக்கு வீடு வாசப்படிதானே அம்மா!

      Delete
  16. சுய கிண்டலோடு, தன் பதிவுகள் அறிமுகங்களை சுவைபட தந்தீர்கள், ராஜி! வாழ்த்துக்கள்.. தொடர்வோம்!!!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் இனி தொடரப்போவதற்கும் நன்றி சகோ!

      Delete
  17. சுயம் எப்பவும் போல் உங்கள் நடையில்...
    தொடர்ந்து கலக்குங்கள் அக்கா...
    தொடர்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. இப்ப வந்ததுக்கும், இனி வரப்போவதற்கும் நன்றி குமார்!!

      Delete
  18. உள்ளேனக்கா...! ச்சீ... டீச்சர்...!

    ReplyDelete
    Replies
    1. டீச்சருக்கு இன்ஷியல்லாம் வச்சுட்டீங்களா!? நல்லது.

      Delete
  19. ராஜி அக்காள் காந்திமதிக்கே அல்வா கொடுத்த ஆளு என்ன மேக்கப்போட்டது கொஞ்சம் லேட் :)) உள்ளேன் டீச்சர்

    ReplyDelete
    Replies
    1. சும்மா இருக்குறவங்களுக்கு மேக்கப் போட்டா பரவாயில்ல சீக்கிரம் ஆயிடும். நான் ஏற்கனவே கொள்ளை அழகு. எந்த மேக்கப் போட்டாலும் என் அழகை குறைச்சுதான் காட்டுது. அதான் லேட்

      Delete
  20. அட்டகாசமான அறிமுகம். வாழ்த்துக்கள் சகோ!!.
    ஆனா காமிராவைப் பத்தி சொல்லலையே

    "கையில காமிரா இல்லாத சகோதரியா" ஆச்சிரியமா இருக்கு.

    தொடரட்டும் தங்களது பணி.

    ReplyDelete
    Replies
    1. கேமராவுக்கு வேற ஒரு பதிவில் வேலை இருக்கு சகோ! அதான் இங்க இழுக்கலை.

      Delete
  21. அறிமுகம் அசத்தல்..உங்க வழி தனி வழி :)
    வாழ்த்துகள் ராஜி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி க்ரேஸ்

      Delete
  22. அடடா பாவம் எங்க அண்ணன்... இந்த ஒரு வாரம் என்ன என்ன அவஸ்தைகளை அனுபவிப்பாரோ...?

    ReplyDelete
    Replies
    1. அதனாலதான் ஹோட்டல்ல இருந்து சாப்பாடு வரவச்சுட்டேனே சசி!

      Delete
  23. ///சும்மா இருக்குறவங்களுக்கு மேக்கப் போட்டா பரவாயில்ல சீக்கிரம் ஆயிடும்.
    நான் ஏற்கனவே கொள்ளை அழகு. எந்த மேக்கப் போட்டாலும் என் அழகை குறைச்சுதான் காட்டுது. அதான் லேட்!..///

    அசத்தல் அறிமுகம் ... தங்கள் வரவு நல்வரவாகுக!..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோ!

      Delete
  24. நானும் ஆஜர்! வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க! வாங்க! நம்மூர் ஆளே இப்படி லேட்டா வந்தால் எப்படி!?

      Delete
  25. நீங்க லிப்ஸ்டிக் போட்ட வேகத்தைப் பார்த்து வலைச்சரம் லைவ்வா டெலிகாஸ்ட் ஆகுதோன்ன்னு நினைச்சிட்டேன்.... வலைச்சர ஆசிரியப் பணிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அதுக்குதான் முயற்சி செய்யுறேன். ஆனா, சீனா ஐயாவும், பிரகாஷும் செட்டிங்க்ஸ்லாம் மாத்தி மாத்தி வச்சிருக்காங்க.

      Delete
  26. சுய அறிமுகத்தை சுருக்கமாவும் அழகாகவும் உங்க ஸ்டைல்ல சொல்லியிருக்கீங்க அக்கா... சூப்பர்...

    ReplyDelete
    Replies
    1. எனக்கு இந்தப் புகழ்ச்சிலாம் பிடிக்காது ஸ்பை

      Delete
  27. ராஜிம்மா ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஒரு குழந்தை கை கால் எல்லாம் ஆட்டி ஆட்டி சிரித்து பேசும் போது எப்படி ஒரு தாய் பார்த்து மகிழ்வாளோ அப்படி மகிழ்ந்தேன். பதிவுகள் வாசிக்க வாசிக்க கண்கள் பிரகாசம் ஆனது.நன்றி ! தொடருங்கள் தோழி!
    எல்லா நலன்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்....!

    ReplyDelete
  28. சுவையான அறிமுகம். இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete
  29. வாழ்த்துகள்......

    மேக்கப் :)))))

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது