07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி. Show all posts
Showing posts with label பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி. Show all posts

Sunday, March 7, 2010

நன்றியுடன் விடை பெறுகிறேன்




இன்றுடன் என் வலைச்சர ஆசிரியர் பனி முடிவடைகிறது.வலைச்சரத்தில் ஒரு வாரமாக எழுதி வந்தது மிக நல்ல அனுபவமாக அமைந்தது.எனக்கு துணையாய் இருந்து வலைச்சரம் எழுத ஊக்குவித்த அனைவருக்கும் மிக்க நன்றி . எனக்கு இந்த வாய்ப்பை அளித்த சீனா ஐயா அவர்குக்கும் நன்றி . என்னை தொடர்ந்து எழுத வரும் நண்பருக்கு வாழ்த்துக்கள் கூறி நன்றியுடன் விடை பெறுகிறேன் .
மேலும் வாசிக்க...

Saturday, March 6, 2010

கதை மாந்தர்கள்

சா.இலாகுபாரதி
இவர் செய் அல்லது செய் என்னும் பெயரில் எழுதி வருகிறார் இவரு காதலிச்சதுக்கு பிறகு என்ன என்னெல்லாம் மறந்து இருகாரு பாருங்க காதலும் மறக்கும்

வி. நா. வெங்கடராமன்.
இவர் venkatnagaraj என்னும் பெயரில் எழுதி வருகிறார் . உங்க கையெழுத்தோட மதிப்பு என்னனு உங்களுக்கு தெரியுமா . அப்படி தெரிஞ்ச யாருக்கும் கேரண்டி கையெழுத்து போடதிங்க ஏன்னு கேக்குறிங்க இங்க போய் பாருங்க ஒரு கையெழுத்தின் மதிப்பு

வலசு
இவர் சும்மா என்னும் பெயரில் எழுதி வருகிறார் கடவுள் உங்க கிட்ட வந்து வரம் கேட்ட நீங்க வேண்டாம்னு சொல்லுவீங்கள ஆன இவர பாருங்க கடவுளின் வரத்தைப் புறக்கணித்தவன்

KALYANARAMAN RAGHAVAN
இவர் ரேகா ராகவன் என்னும் பெயரில் எழுதி வருகிறார் ஒரு பக்கக் கதைகள் எழுதுவது எப்படி? -னு சொல்லி இருக்காரு நீங்களும் படிச்சி இப்படி எழுத ட்ரை பண்ணி பாருங்களேன்

அம்புலிமாமாஇவர் அம்புலிமாமா என்னும் பெயரில் எழுதி வருகிறார் புலி தான் பசுவை வேட்டை ஆடும்னு கேள்வி பட்டு இருக்கேன் . ஆன இங்க பசு புலியை வேட்டியாடுன கதையை பாருங்களேன் புலியைக் கொன்ற அதிசய பசுக்கள்!

தங்கராசு நாகேந்திரன்
இவர் செல்வனூரான் என்னும் பெயரில் எழுதி வருகிறார் கடவுளுக்கு யாராவது கடிதம் போட்டு இருக்கீங்களா ஆன இவரு போட்டு இருகாரு என்ன கேட்டு இருக்காருன்னு பாருங்க கடவுளுக்கு ஒரு கடிதம்

பவன்
இவர் எரியாத சுவடிகள் என்னும் பெயரில் எழுதி வருகிறார் . காதலிக்கனும்னு முடிவு பண்ணவங்கள பாத்து கேக்குற கேள்விய பாருங்க காதலிக்கப்போகிறீர்களா? அதுக்கு முன்னாடி இந்த போஸ்ட் படிச்சிட்டு போங்க

சந்ரு
இவர் சந்ருவின் பக்கம் என்னும் பெயரில் எழுதி வருகிறார் .காதல் இல்லாமல் வாழ்வது வாழ்வா.... -னு கேக்குறாரு நீங்க என்ன சொல்றீங்க

மீண்டும் நாளை உங்களை சந்திக்கிறேன்

என்றும் அனுபுடன்
காயத்ரி.R
மேலும் வாசிக்க...

Friday, March 5, 2010

வாழ்த்தும் நெஞ்சங்கள்

ஹாய் மக்களே அனைவரும் நல்ல இருபீங்கனு நினைகிறேன் . இன்னைக்கு எனக்கு கொஞ்சம் ஸ்பெஷல் டே . சோ இனிக்கு நாம பாக்க போற பதிவுகளும் ஸ்பெஷல் தான் . என்ன தான் நாம சந்தோசமா இருந்தாலும் நம்ப மேல அன்பு பாசம் வச்சி இருக்கவங்க நமக்கு வாழ்த்து சொல்லும் போது கிடைக்கிற சந்தோசம் வேற எதுலயும் வராதுங்க .

அண்ணம்
இவங்க சும்மா... லுலுலாய் என்னும் பெயரில் எழுதி வருகிறார்கள் . சும்மா ப்ளாக் நேம் பாத்தாலே அதிருதுல . இவக பெயர் மட்டும் இல்லைக இவங்க சொல்ற வாழ்த்தும் இப்படி தான் இருக்கும் .இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சின்ன அண்ண பய புள்ள வயச சொல்லிடிசினு அண்ணா ரொம்ப பீளிங்க்ஸ்ல இருந்தாரு .

G3
இவங்க பிரவாகம் என்னும் பெயரில் எழுதி வருகிறார்கள் . G3 ப்லோக்னா மாசத்துக்கு ஒரு வாழ்த்து பதிவாச்சி இருக்கனும் அப்படி இல்லன அது அவக ப்ளாக் இல்லன்னு அர்த்தம்ங்க . திருவள்ளுவருக்கு அப்பறம் அண்ணனுக்காக திருக்குறள் எழுதுனவங்க இவங்கள தான் இருப்பாங்கனு நினைகிறேன் .
அகர முதல எழுத்தெல்லாம் கார்த்திக் அண்ணன்
முதற்றே உலகு.. Appy Bday brother !!

நிஜமா நல்லவர்
இவர் நெஜமாவே நல்லவர் தாங்க . இனிய பிறந்தநாள்(05-01-2010) வாழ்த்துக்கள் ஆயில்ஸ்!... கும்மி அடிச்சி வாழ்த்து சொல்ல இவரால மட்டும் தாங்க முடியும்

ஜீவா
இவருஎண்ணங்கள் இனியவைஎன்னும் பெயரில் எழுதி வருகிறார் HBTY இதுக்கு என்ன அர்த்தம்னு தெரியாதவங்க இங்க போய் பாருங்க.::மைஃப்ரண்ட்::. ஓ .::மைஃப்ரண்ட்::. ஹ்ப்டி
மக்களே அப்படியே இந்த கவிதையும் படிங்க தனிமையின் இனிமையிலே

கில்ஸ்

இவர் Variety is the spice of lifeஎன்னும் பெயரில் எழுதி வருகிறார்
Kovil valatha pi(tho)ல்லைஇப்படி எல்லாம் கூட மொக்க போடலாமா.

இதை எல்லாம் படிச்சிட்டே இருங்க மறுபடி நாளை உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் காயத்ரி
மேலும் வாசிக்க...

Thursday, March 4, 2010

அறிமுக நாயகர்கள்

பூபதி ராஜ

இவர் இப்படிக்கு ~ பூபதிராஜா என்னும் தலைப்பில் எழுதி வருகிறாய் புதிய பதிவர்
இவர் எழுதிய கவிதை காதலுடன்... வெட்கமாய்.... ஏனோ ?காத்திருக்கிறார்

எதிரே வந்த - நீ
திரும்பி செல்கின்றாய் என்னுடன்
திரும்பாமல் வருகிறது உன் நினைவு !

அமைதிச்சாரல்.

இவர் அமைதிச்சாரல். என்னும் பெயரில் எழுதி வருகிறாய் பெயர் மட்டும் தான் அப்படி கவிதை சும்மா சுனாமி மாதிரி இருக்குங்க அன்பெனும் மழையில்.. .. நனைந்து என்ன பண்றதுன்னு தெரியாம இருக்காருங்க .

உன் கூந்தலில்
ரோஜாவை சூட்டியதால்
மற்ற மலர்களெல்லாம்
நிறமிழந்து போயின.
உன் கூந்தல் வாசத்தின் முன்
ரோஜாவோ
வாசமிழந்து போனது.

ஸ்ரீசூர்யா

இவங்க srisurya என்ற பெயரில் எழுதிட்டு இருக்க
இவங்கள பத்தி நான் என்னங்க சொல்றது ரொம்ப அழக கவிதை எழுதி இருகாங்க யாருக்காகவோ ரொம்ப நேரம் காத்திருகாங்க யாருக்கா இருக்கும் . நீங்களே இங்க போய் பாருங்க .காத்திருக்கிறேன்....

உயிரே,
இந்த உலகை வெறுத்தேன்...
உன் நினைவோடு வாழ!
நான் ஷாஜகான் அல்ல உனக்காக தாஜ்மகால் எழுப்ப!
சாதரண மனிதன்! உள்ளமெங்கும் உன்னை நிரப்பி, அதில் கனவுகளுடன் நீந்துபவன்!

முத்து

இவர் நாளேடு என்னும் பெயரில் எழுதி வருகிறார் .இவர் எதற்காக
காதல் செய்றாருன்னு இவருக்கே தெரியலையாம்
எதற்காக உன்னை....
காதல் செய்கிறேன்
என தெரியவில்லை - ஆனால்
அதற்காக தான் எல்லாம் செய்கிறேன்...!

அபிசேகா மோகன்

இவர் ஈழமகளின் "கவிமழை" ஈழத்தில் பொழிகிறது. என்னும் பெயரில் எழுதி வருகிறார் ஈழா மக்களை நினைத்து இவர் எழுதின எல்லா கவிதயும்நல்ல இருக்கு
என்ன பாவம் செய்தேன்....
அணைக்க இரு கை இல்லை.
என் இதயம் .... வலிக்கிறதே....!

சே.குமார்

சே . குமார்
இவர் கிறுக்கல்கள் என்னும் பெயரில் எழுதி வருகிறார் . எல்லாருக்கும் வர தடுமாற்றம் தான் ஆன இவருக்கு எப்படி வந்து இருக்கு பாருங்க , ஒற்றை ரோஜா எங்க இருந்த அழாக இருக்கும்னு சொல்லி இருகாரு பாருங்க

இவர்கள் அனைவரும் புதிய வலைபதிவாளர்கள் . இவர்களின் கவி பனி தொடர இவர்களின் நிறை குறைகளை அவர்களுக்கு சுட்டி காட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வாழ்த்தும் நெஞ்சங்களோடு நாளை உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள்
காயத்ரி. R
மேலும் வாசிக்க...

Wednesday, March 3, 2010

கலக்கும் கவிஞ்சர்கள்

கந்தசாமி

இவர் இந்திய தயாரிப்பு என்னும் பெயரில் எழுதி வருகிறார் இவரு ஒரு தமிழ் பொண்ண தேடி போய் நொந்த கதைய எவளவு அழக கவிதைய சொல்லி இருக்காரு பாருங்க என் தமிழ் பெண்ணே
மல்லிகை மணமணக்க உன்னை

காண விழைந்தேனடி என் தமிழ் பெண்ணே,
அந்தோ உனக்கு தமிழ் அறியாது
என்றரிந்து மனம் நொந்தேன்......."

இவரு எழுதின தற்கொலை செய்வது - சில குறிப்புகள் இந்த குறிப்புகளை படிச்சதும் தற்கொலை செஞ்சிக்கணும்னு நினைகிரவங்க கூட மனச மாத்திபாங்க தற்கொலை செய்வது - சில குறிப்புகள் நீங்களும் படிச்சி பாருங்க கொஞ்சம் சிரிப்பாவும் நெறைய சிந்திக்கிற மாதிரியும் இருக்கு .




தமிழரசி அம்மா

எங்க கூட்டத்துக்கே அரசி இவங்க தான் . அப்பப்பா இவங்க எழுத்துக்களை பத்தி சொல்லனும்ன நேரம் காலம் இல்லாம சொல்லிட்டே இருக்கலாம் . இவங்க எழுதுற கதைய பத்தி சொன்ன கவிதை கோச்சிக்கும் கவிதைய பத்தி சொன்ன மத்த எல்லாம் கோச்சிக்கும் இவங்க .எழுத்தோச...... என்னும் பெயரில் எழுதுகிராரிகள் எங்கே சென்றாயடா? என்று யாரையோ தேடிட்டு இருக்காக இவங்க தேடல் இன்னும் முடிஞ்ச பாடு இல்ல .



adi ஆத்தி இது தான் காதல் என்பதா? பயபுள்ள என்னமா தவிச்சி இருக்கு
பாருங்க
அரசியா? அல்வாவா? மக்களே நீங்களே இத படிச்சி பாத்து உங்க வோட்டு அரசிக்க இல்ல அல்வாக்கன்னு நீங்களே சொல்லுக.

அடலேறு

இவர் "அடலேறு" பக்கம்என்னும் பெயரில் எழுதி வருகிறார் இவர் கவிதை மட்டும் இல்லைங்க இவரு எழுதுற எல்லாமே நல்ல இருக்கு இதற்காக வேணும் காதல் செய்- எவளவு அழாக அந்த பொண்ணு கிட்ட கேக்குறாரு பாருங்க .

வாழ்க்கைல எவ்வளவோ நொந்த அனுபவம் இருந்தாலும் அவரோட பேரே அவருக்கு நொந்த அனுபவமா ஆனது தான் கொடுமை .சொந்த அனுபவமும் நொந்த அனுபவமும், http://adaleru.wordpress.com/2009/10/20/sontha-nontha-experience/
இன்று எதோ அவசரமாக அலுவலகம்
கிளம்புகையில்உனக்கு முத்தம் தர மறந்ததால்,
“இன்னைக்கு முழுவதும் என்னை
நினைக்காமல் இரு “என்றாய் !!
அடி போடி ஒரு நாள் முழுவதும்
எப்படிசுவாசிக்காமல் இருப்பது.


மோகன்

இவர் தொலைந்த கனவு...என்னும் பெயரில் எழுதி வருகிறார் இவர் எழுதின கவிதை விண்ணைத் தாண்டி வருவாயா? படிச்சி பருக எப்படி இருக்குனு

காய்ந்த சருகாய்உதிர்ந்து
கிடக்கின்றனஉன் ஞாபகங்கள்.
மிச்சமிருக்கும் இலைகளுக்குஎன்னையும்
அறியாமல்உயிரூட்டிக்
கொண்டிருக்கின்றனஎன் நிழல்கள்.......


க‌விதைக் காத‌லி பயபுள்ள லவ் பண்ண வொடனே சொல்லாம இருந்ததால பாருங்க கடைசீல என்னாச்சின்னு

காதலைக் கொலை செய்தல்
உன் அன்பும் கிடைக்காமல்என்
பிரியங்களும் கிடைக்காமல்தனித்து
விடப்பட்டஒரு வெயில்
காலத்தில்நம் கால்களையே
சுற்றித் திரிந்துகத்திக் கதறிதனித்து
விடப்படப்பட்டதின் அவமானத்தில்ஜீவித்திருக்க
வேறு வழி தெரியாமல்நம் காதல் தற்கொலை செய்து கொண்டது
கொலை செய்த குற்றவுணர்ச்சிஏதும்
இல்லாமல்அடுத்த கொலைகளுக்காக
ஆயத்தமாகிறோம்நாம்...


கதையும் கவிதையும் மட்டும் தான் எழுதுவாருன்னு நெனச்ச விமர்சனத்தையும் நல்ல தான் எழுதி இருக்காரு தீராத விளையாட்டுப் பிள்ளை‍-திரை விமர்சனம் இந்த விமர்சனத்தை parthutu padam பாக்கலாம வேண்டாம்னு முடிவு பண்ணுங்க


விட்டாலன்


இவர் தேடுதலே வாழ்க்கை ..- என்னும் பெயரில் எழுதி வருகிறாய் ரெண்டை ஜடை வயச பத்தி கேள்வி பட்டு இருபீங்க இங்க போய் அத பத்தி படிச்சி பாருங்க ரெட்டை ஜடை வயசு ..

தொலை தூரத்தில் காட்டு குருவியின்
குரல் கேட்கும் கணங்களில் ..
உன் நினைவுகளின் பிம்பமே
வந்து விட்டு செல்கிறது ..



இந்த கதைய படிச்சதுல இருந்து அநேகமா இவரோட வருங்கால ஆசையும் இதா தான் இருக்கும்னு நினைகிறேன் அப்படி என்ன ஆசைன்னு கேக்குறிங்களா நவீனின் உலகம் - சிறு கதை - சிறு கதை இங்க போய் பாருங்களேன்


மீண்டும் நாளை ஒரு சில புது முகங்களோடு உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது


உங்கள்
காயத்ரி.R
மேலும் வாசிக்க...

Tuesday, March 2, 2010

கவிதை கலைஞர்கள்

லோகு
மறவாதே கண்மணியே.. என்னும் பெயரில் எழுதிவருகிறார் . இவர் கவிதைகளை எத்தனைமுறை படித்தாலும் மீண்டும் மீண்டும் படிக்க தோன்றும்

என் தனிமை இனிக்கநல்ல நினைவாய்இருக்கிறாய்..
நான் விழி மூடி ரசிக்கநல்ல கனவாய்வருடுகிறாய்..
என் மனம் நிறைந்து வாழஒரு நல்ல துணையாய்இருக்க முடியவில்லையேஉன்னால்..

....
இயற்கை ராஜி

இத‌ய‌ப்பூக்க‌ள் என்னும் பெயரில் எழுதி வருகிறார்கள் காதல பத்தி எவ்வளவு அழகா சொல்லி இருக்காங்க பாருங்க .

காதல்
எவனோ ஒருவன் எனத் தொடங்கி
என்னவனாயிருக்கலாமே நீ என மாறி
உனக்கானவளாய் நான் நிலைப்பது
----

பூங்குன்றன்
பாக்தாத்திலிருந்... பூங்குன்றன்...என்ற பெயரில் எழுதி வருகிறார், தமிழ்நாட்டில் பிறந்து இப்போது ஈராக்கில் ஒரு அமெரிக்க நிறுவனத்தில் கணிப்பொறி வல்லுனராக வேலை செய்துகொண்டு இருக்கிறார். இவரு எப்படி காதல் ஞானி !!! ஆனாருன்னு இந்த கவிதைய படிச்சி பாருங்க உங்களுக்கே தெரியும்

பெண்மீது கொண்டகாதல்பித்தனாக்கி
சித்தனாக்கி பாதைமாற்றி போதைஏற்றி
பின்பு ஞானியாக்கும் என்று!!!
---

வித்யாசாகர்
இவர் வித்யாசாகரின் எழுத்து பயணம்என்னும் தலைப்பில் எழுதி வருகிறாய் எவரேனும் இப்படி காதலித்துண்டா அப்படின்னு கேக்குறாரு நீங்களே இந்த கவிதைய படிச்சிட்டு சொல்லுங்க இப்படி எல்லாம் நீங்க காதலிச்சி இருக்கீங்களான்னு

நீர் நிலம் காற்று வானம்
பூமி அறிந்த நம் காதலை
எல்லோருமே அரிய வாய்ப்பில்லைதான்;
இப்படி -

யாருமே அறியாத காதல்
உனக்கும் எனக்கும் மட்டுமே
தெரிந்த காதல் -

உனக்கும் எனக்கும்
அற்றுப் போனதை -வருடங்கள்
பல தொலைத்தத பின்பும்
மனசு நினைக்கத் தான்!
செய்கிறது!
---

கவிதை காதலன்

இவர் கவிதை காதலன்என்னும் பெயரில் எழுதி வருகிறார் நமக்கெல்லாம் வாயல பேசினாலே புரியறது கஷ்டம் ஆன இங்க பாருங்க இவரு கன்னங்களோடு பேசிவிட்டு போ -னு சொல்றாரு

என்னை கொஞ்சும் போது உன்னிலிருந்து
வெளிப்படும் காதலைவிட,
என்னை திட்டும் போது உன்னிலிருந்து
வெளிப்படும் காதலே மிக அழகு

மீண்டும் நாளை சில கவிஞர்களுடன் உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன்

என்றும் அன்புடம்
காயத்ரி. R
மேலும் வாசிக்க...

Monday, March 1, 2010

நாங்களும் வந்துட்டோம்ல

நாங்களும் வந்துட்டோம்ல

தங்கத்தின் தங்கங்களே , சிங்கத்தின் சிங்கங்களே , அன்பின் சீனா ஐயா அவர்களே, வலைஉலகின் முகம் அறியா நண்பர்கள் அனைவருக்கும் இந்த குட்டி தங்கையின் அன்பு வணக்கங்கள் .

என்னையும் இந்த வலைச்சரத்தில் ஆசிரியராக எழுத அழைத்த சீனா ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் .

சின்ன புள்ள எதோ ஆசை பட்டு எழுத வந்துட்டேன் . எதாவது பிழை இருந்தால் கூறுங்கள் ஏற்று கொள்கிறேன்.

என்னை பற்றி ஒரு சிறு அறிமுகம் .

எனது பெயர் காயூ , என்னங்க பாக்குறிங்க பதிவுலகத்துக்கு வந்ததுல இருந்து என் பெயர் காயத்ரிங்கரதையே நான் மறந்துட்டேன் :((((((. எனக்கு பிடிச்சது கவிதை , ரொம்ப புடிச்சது காதல் கவிதை , நான் பிறந்து வளர்ந்தது சென்னை . இப்போது வளர்ந்து கொண்டு இருப்பதும் சென்னை தான் . (இதுக்கு மேல மொக்க போட்டா நீங்களே அடிப்பிங்க சோ நான் எஸ்கேப் ஆய்கிறேன் )))))

பிரிவையும் நேசிப்பவள் என்னும் பெயரில் 2008டிசம்பர் மாதம் முதல் பதிவுகளை எழுதி வருகிறேன். நான் எழுதுன பதிவுகள் எல்லாமே எனக்கு பிடிச்சாலும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பதிவுகள் உங்களுக்காக.

யூத் புல் விகடனில் வந்த என் முதல் பதிவு இதழ் தொட்ட பட்டாம்பூச்சி

இந்த கவிதை எனக்கு புடிச்சி இருக்குனு சொல்றத விட மத்தவங்களுக்கு ரொம்ப புடிச்சி இருக்கு நானும் பெங்குவினும்
இந்த பதிவ படிச்சிட்டு காமெடியா இருக்கா இல்ல சீரியசா இருக்கானு நீங்களே சொல்லுங்க என்னை பற்றி உங்களுக்கு
நான் தவம் இருந்து வேண்டும் வரம் நீயே வேண்டும் என்று வரம் கேட்பேன் எப்ப பாரு காதல் கவிதையே எழுதிட்டு இருக்கியே வேற எதாவது எழுதுன்னு என் அம்மா சொன்னதால ஒரு மாறுதலுக்கு ஒரு காதல் கதை .நினைவெல்லாம் நீயே . இதிலும் காதல் தானான்னு அவங்க தலைல அடிச்சிகிட்டது இன்னொரு கதைங்க .

நாளை ஒரு சில காதல் கவிதைகளோடு உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன்

நட்புடன் காயத்ரி
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது