07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, August 31, 2008

செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருக்கும்.........

அன்பின் சக பதிவர்களே ஒரு வார காலமாக அருமை நண்பர் ஸ்ரீ ஏழு அருமையான பதிவுகள் இட்டு விடை பெற்றிருக்கிறார். பல புதிய வலைப்பூக்களை அறிமுகப் படுத்தி பல பதிவர்களை அடையாளம் காட்டி விடை பெற்றிருக்கிறார். காதல், கவிதை என கலக்கி விட்டுச் சென்றிருக்கிறார். அவருக்கு வலைச் சரம் சார்பினில் நல்வாழ்த்துகளைக் கூறி விடை அளிக்கிறேன்.அடுத்து செப்டம்பர் முதல் நாள் முதல் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்க அருமை நண்பர் முருகானந்தம் சுப்பிரமணியன் அன்புடன்...
மேலும் வாசிக்க...

விடைபெறுகிறேன்

பொறுத்தார் பூமி ஆள்வார். இது முதல் பதிவுல சொன்ன நான் பின்பற்றும் பொறுமை இல்லைங்க. நீங்க இந்த ஒரு வாரமா எனக்கு கொலைமிரட்டல் விடாமல் அமைதியா இருந்தீங்களே அது. உங்களுக்கு ரொம்ப பெரிய நன்றி தெரிவிக்க கடமை பட்டிருக்கேன். ஏதாவது பெருசா எழுதலாம்னு நினைச்சேன் ஆனா கடைசி நாளும் ஏன் டார்ச்சர் பண்ணிக்கிட்டுன்ற நல்ல எண்ணத்துல உங்க எல்லாருக்கும் ஒரு நன்றி சொல்லிட்டு நான் கிளம்புறேன். கடந்த ஒரு வாரம் நான் ரொம்ப ரசித்தேன் உங்களுக்கும் அப்படி...
மேலும் வாசிக்க...

Saturday, August 30, 2008

காதல் எனப்படுவது???

விளையாட்டாய் நான் ஆரம்பித்த தொடர் பதிவு இந்த "காதல் எனப்படுவது யாதெனில்". காதலை வரையறுக்க முடியாது. என் பார்வையில் காதலாய் இருப்பது அடுத்தவனுக்கு இருப்பதில்லை. எல்லோருடைய கருத்துகளை தெரிந்துகொள்ள ஒரு ஆர்வம் இருந்ததால் இதை விதிமுறைக்குட்படுத்த‌வில்லை. எழுதுபவர் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்ற போது நிறைய அழகான பதிவுகள் கிடைத்தன. இதுவரை எழுதப்பட்ட பதிவுகள் கீழே:அருட்பெருங்கோஇம்சை அரசிஜீவ்ஸ் நிஜமா நல்லவன் சென்ஷி புதுகை தென்றல்...
மேலும் வாசிக்க...

Monday, August 25, 2008

குல்மால் (அ) டக்கால்ட்டீ

நேத்து ரொம்ப காண்டு ஆகிட்டீங்களா? "இன்னைக்கே இம்புட்டு அல‌ம்பல் பண்ணிட்டு நாளைக்கு மனச கல்லாக்கிட்டு வர சொல்லிட்டான்"னு நினைச்சீங்களா? அது சும்மா லுல்லலாய்க்கு. நான் காதல் காதல்னு போட்ட மொக்கை போதும்னு நினைக்கிறேன். இன்னைக்காவது ஒரு முக்கியமான விஷயத்தை பாக்கலாமே. வேற ஒண்ணும் பெருசா இல்லைங்க வாழ்க்கை தான். நிறைய நிகழ்வுகள் வாழ்க்கையை பசுமையா வெச்சிக்க உதவும். அதை பதிவா போட்டுக்கிடே இருக்காங்க கொஞ்ச பேரு அவர்களுக்கு நடந்த சுவாரசியமான...
மேலும் வாசிக்க...

பக்கவாட்டில் எறிந்த கற்கள்

காதல் வரையறுக்க முடியாத ஒரு வார்த்தை. அது ஒரு விசித்திரமான நிலை. கண்ணீர் இனிக்கும். நம்பிக்கையில்லையா? அனுபவிப்ப‌வருக்கு புரியும். காதல் முறிந்த பிறகும் அதை அசை போட மனம் தவிக்கும். கல்லெறியப்படும் போது கனிகளோடு சில பிஞ்சுகளும் மரணமடைகின்றன. அது தவிர்க்க முடியாத ஒன்று தான் என்றாலும் அவைகளின் மரணம் முன்னமே வந்ததை எண்ணி சந்தோஷப்படலாம். பிறிதொரு நாளில் கத்தியால் பிண ஆராய்வு நடந்தேறி மரணத்தை முத்தமிடாமல் கணப்பொழுதில் இறந்ததை எண்ணி...
மேலும் வாசிக்க...

கவிதைன்னா சும்மாவா?

கவிதைகள் என்பது போதை என்னைப் பொறுத்தவரை. சில கவிதைகளை உங்களுக்காக சேகரித்துள்ளேன். வாசிக்க நிறைய கவிதைகள் இருப்பதால் நான் ஏதும் அறிமுகமோ கருத்தோ கொடுக்கவில்லை. *ப்ரேம் குமார் நிறைய கவிதைகள் எழுதி இருந்தாலும் சின்ன சோகம் புகுத்தி எழுதிய பதிவு உரக்க சொன்னதில்லை நீ. எனக்குப்பிடித்த கவிதை உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும் என்கிற நம்பிக்கையில் உங்கள் முன்னே.*இவரை காமெடியன்னு ஒரு புரளி கிளப்பி விட்டிருக்காங்க பிளாக்வுட்ல ஆனா "இவரு கல்லெடுத்து...
மேலும் வாசிக்க...

சில பூக்கள்

பொதுவாக மற்றவர் நம்மை பார்க்கின்றார்கள் எனத் தெரிந்தால் நாம் நாமாக இருப்பதில்லை. உதாரணமும் சொல்லத் தேவையில்லை நீங்களே அதை உணர்ந்திருப்பீர். உலகின் எந்த மூலையில் உள்ள‌ குழந்தையின் முகம் அழகாகத் தெரிவதன் காரணம் அது தான். அதற்கு அடுத்தவர் பார்க்கின்றார்கள் என்கிற அச்சமில்லை, பொய்யாக நடிக்க வேண்டிய நிர்பந்தமுமில்லை. முதன்முதலாக‌ குழந்தை தான் கிறுக்கிய சில கோடுகளை ஓவியமெனச்சொல்லி தலைக்கு மேல் தூக்கிக் காட்டுவதன் அழகு எத்தனை பேர் கவனித்திருக்கிறீர்?...
மேலும் வாசிக்க...

ஸ்ரீயாகிய நான்

வணக்கம் நண்பர்களே, இந்த வாரம் வலைச்சரத்தின் பொறுப்பை எனக்குத் தந்த நண்பர் சீனாவுக்கு நன்றிகள். எல்லோருக்கும் எனது அன்பு கல‌ந்த வணக்கம். அன்பர் சீனா அறிமுகப்படுத்தியது சற்று மிகைப்படுத்திவிட்டாரோ எனத் தோன்றுகிற‌து. நான் ஸ்ரீ. உங்களில் ஒருவனாக "ஒற்றை அன்றில்" என்கிற தளத்தை இயக்கி வருகிறேன். நல்ல ரசனை என சொல்ல முடியாவிட்டாலும் ஓரளவு ரசனை உள்ள ஒரு சராசரி நான். ரொம்ப பொறுமை (இது சோம்போறித்தனத்துக்கு...
மேலும் வாசிக்க...

Sunday, August 24, 2008

நன்றியும் - வரவேற்பும்

அன்பின் சக பதிவர்களே !கடந்த ஒரு வாரத்திற்கு ஆசிரியராகப் பொறுப்பேற்ற அருமை நண்பர் என் சுரேஷ் அவர்கள் 16 பதிவுகள் இட்டு - பல நல்ல உள்ளங்களை அறிமுகப் படுத்தி, அவர்களது பதிவுகளையும் சுட்டிக் காட்டி, வித்தியாசமான முறையில் ஆசிரியர் பொறுப்பினை நிறைவேற்றி இருக்கிறார். அவருக்கு வலைச்சரம் சார்பில் நல்வாழ்த்துகள் கூறி நன்றியுடன் வழி அனுப்புவதில் பெருமை அடைகிறோம். அடுத்து 25ம் நாள் தொடங்கும் இவ்வாரத்தினிற்கு ஆசிரியர் பொறுப்பேற்க அருமை நண்பர்...
மேலும் வாசிக்க...

நன்றிகள் சமர்ப்பிக்கிறேன்...!!!

அன்பினிய உள்ளங்களே,வலைச்சரத்தில் எனக்கு ஒருவார காலம் ஆசிரியர் பதவி தந்து என்னை பெருமையடையச் செய்த சீனா ஐயாவிற்கு எனது முதல் நன்றியை சந்தோஷமுடன் சமர்ப்பிக்கிறேன்.15- அல்லது 16 பதிவுகள் தான் இட்டிருந்தேன் என்றாலும் அதற்குள் பலசுட்டிகள் இருந்தன. ஆக எனது மனதின் நிறைவின் தாகத்த்தை தீர்த்துக்கொண்ட சுகம் என்னை சமாதானப் படுத்துகிறதுஎல்லா பதிவுகளுக்கும்...
மேலும் வாசிக்க...

கவிஞர் சக்தி சக்திதாசன் அவர்கள்...

இயந்திரவியல் பொறியியலில் பட்டம் பெற்ற இவர் லண்டனில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். ஈழத்தில் பிறந்த இவர் இந்தியாவில், தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் தனது வாழ்க்கைத் துணையைத் தேடிக் கொண்டவர். இவர்களின் ஒரே மகன் மருத்துவராக லண்டனில் சேவை செய்து வருகிறார். தமிழில் வெளியாகும் பல இணைய இதழ்களில் கவிஞர் சக்தி சக்திதாசன்...
மேலும் வாசிக்க...

Saturday, August 23, 2008

கட்டுரைச்சரம்

அன்பர்களே,எனது கட்டுரைகளை இங்கே இட்டுள்ளேன்வாசித்து பின்னூட்டம் இடுவீர்கள் என்ற எதிர்பார்ப்பில்...அன்புடன்என் சுர...
மேலும் வாசிக்க...

கவிதைச்சரம்

அன்பர்களே,எனது கவிதைகள் சிலவற்றை இங்கே இட்டுள்ளேன்வாசித்து பின்னூட்டமிடுவீர்கள் என்று நம்புகிறேன்.பாசமுடன்என் சுர...
மேலும் வாசிக்க...

அழகி டாட் காம் நிறுவனர் - என் இனிய நண்பர் பா. விஸ்வநாதன் அவர்கள்...

அன்பர்களே,அழகி டாட் காம் நிறுவனரைப் பற்றி எழுதித்தான் ஆகவேண்டும் என்று என் அன்பு நண்பர்கள் இன்று காலை முதல் எனக்கு அன்பு கட்டளை இட்டார்கள்.சிலருக்கு அவரை பார்க்க வேண்டும் என்று ஆசை.அதனால் இத்தனை புகைப்படங்கள் இட்டுள்ளேன்.அவரைப் பற்றி சில வருடங்கள் முன் அன்புடன் என்ற குழுமத்தில் எழுதியதின் சுட்டியை இங்கே கொடுத்துள்ளேன். எல்லோரும் வாசிக்கவும்.வலைச்சர...
மேலும் வாசிக்க...

மீண்டும் மீண்டும்...

நேற்றைய இரவின் தொலைந்து போன உறக்கம் - அவளின்குளியல் முடிந்ததும் தந்தது மயக்கம்!வேண்டாமென்று மனம் சொன்னாலும்வேண்டுமென்றே உறங்கி வென்றது தளர்ந்துபோன உடல்!கனவுகள்...நேற்றிரவின் நிர்பந்தங்கள்கலைத்துச் சென்ற ஓவியங்களைகலைத்துக்கொண்டே இருந்தது மீண்டும் மீண்டும்!காரணங்களில் நியாங்கள் ஆயிரம் ஆயிரம் இருப்பினும் சுயநீதிமன்றம்அவளின் மனக்கண்ணாடியை உடைத்து...
மேலும் வாசிக்க...

கல்யாணமாலை!!!

திருமணம் என்பதும் இந்தியாவின் பார்வையில் அது மாபெரும் செல்வாகத் தெரிகிறது.இந்தியாவில் திருமணத்தன்று மட்டும் எல்லோரும் ஜமீந்தார்கள் போல் இருப்பதைக் கண்டு ஒ சரி, இந்த ஒரு நாளாவது இவர்கள் இப்படி இருந்து போகட்டுமே என்ற மகிழ்ச்சி மனதின் ஒருபுறம் வந்தாலும், அடுத்த நொடியே, அட!வட்டிக்கு வாங்கி இப்படி இவர்களில் பலர் இப்படி ஆடம்பரமாக செலவு செய்ய...
மேலும் வாசிக்க...

Friday, August 22, 2008

அழகி- தமிழ் மென்பொருட்களின் மகாராணி...

அழகியின் சிறப்புக்கள்: அழகி - புதுமை எளிமை வலிமை ஒலிபெயர்ப்பு, தட்டச்சு, அச்சு, மின்னஞ்சல், மின்னுரையாடல், வலையாக்கம் - தமிழில்ஆங்கிலத்தில் டைப் செய்து, தமிழில் பெறலாம் - அனைத்து செயலிகளிலும்உபயோகிப்பாளரின் பெரும் தோழி, அழகி - எல்லா வகையிலும். யூனிகோட்-ரெடி. ஒலியியல், தமிழ் தட்டச்சு, தமிழ்நெட்99 - 3 வகை கீபோர்ட் லே-அவுட்.அழகியின் ப்ரொஃபஷனல் வெர்ஷன் கொண்டு, யூனிகோடில் கீழுள்ளனவையைச் செய்யலாம்:தமிழில் தேடு/மாற்று (Find/Replace)...
மேலும் வாசிக்க...

Thursday, August 21, 2008

முத்துச்சரம்

"ராமலகஷ்மி" என்பவர் தனது சிந்தனைச் சிப்பியிலிருந்து சிதறி விழும் எண்ண முத்துக்களை சேகரித்து சரமாக கோர்த்தளிக்கும் ஒரு வலைப்பூவை வைத்திருக்கிறார்; அதன் இனிய பெயர் "முத்துச்சரம்" - விலாசம் http://tamilamudam.blogspot.comதன்னைப் பற்றி அவரது வலைப்பூவில் இப்படி குறிப்பிட்டுள்ளார். வாசிக்க மிகவும் இன்பமாக இருந்தது.Interests=========Browsing in...
மேலும் வாசிக்க...

தோல்விகள் ஆக்கிரமிக்க விட்டுக் கொடுக்காதீர்கள்- அந்தோணி முத்து

அன்பர்களே,இணையதளத்தில் எல்லோருக்கும் நன்கு பரிச்சயமானவர் தான் தம்பி அந்தோணி முத்து என்றாலும், அவரைப் பற்றி ஒருவேளை தெரியாதவர்கள் யாராகினும் இருப்பின் அவர்களுகாக அந்தோணி முத்துவின் வலைப்பூ விலாசத்தை இங்கே இடுகிறேன்.ஊக்கம் பெற அந்தோணிமுத்துவின் வலைப்பூ மிகவும் உதவும்.அந்தோணிமுத்துவின் வலைப்பூ விலாசம் http://positiveanthonytamil.blogspot.com/நல்வாழ்த்துக்கள்...
மேலும் வாசிக்க...

நான் இறக்கப்போகிறேன்

http://naanirakkappokiraen-aruna.blogspot.com/"நான் இறக்கப்போகிறேன்" - என்ற தலைப்பில் வலைப்பூ ஆரம்பித்து ஒருவர் கடந்த ஒரு வருட காலமாக எழுது வருகிறார். அருமை, நன்றாக உள்ளது என்று ஏதோ பின்னூட்டம் போடவேண்டுமே என்று போடாமல் எனது பல பதிவுகளுக்கும் நிறைவாக பின்னூட்டமிடுகிறாரே! யாரிவர்? ஏன் இந்த தலைப்பில் தனது வலைப்பூவின் தலைப்பை இவர் இப்படி வைத்திருக்கிறார் என்று யோசித்து அதைப் பற்றி கேட்டுத் தெரிய நேரமின்றி அப்படியே விட்டு விட்டேன்....
மேலும் வாசிக்க...

Wednesday, August 20, 2008

வானத்து நட்சத்திரமே!!!

அன்புள்ள நண்பர்களே,தாரே சமீன் பர் என்ற திரைப்படத்தின் வசனகர்த்தாவும் நடிகருமான அமீர்கானுக்கு சென்னையில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றை ஓர் அமைப்பு இந்த மாதம் 12 ஆம் தேதி நடத்தியது. எனக்கு மிகவும் பிடித்த கஜல் பாடகர் திரு.ஜகஜித்சிங் அவர்கள் மிக இனிமையாக தனது ஆறு கஜல் பாடல்கள் பாடி நிகழ்ச்சியைத் துவக்கினார்.அதற்கு பிறகு கே.பாலச்சந்தர், அவர்...
மேலும் வாசிக்க...

அன்புள்ளம் கொண்ட மூன்று மலர்கள்

அன்பர்களே,தனது எழுபத்தி இரண்டு வயதில் தான் எனது தந்தை இறந்துபோனார் என்றாலும், அவர் இல்லாத என் வாழ்க்கையின், கடந்த பத்து வருடங்களில், அவர் என் மீது வைத்திருந்த பாசத்தால், அவரை நினைத்து என் மனம் உருகாத ஒரு நாள் கூட இருந்ததில்லை. இதை உணர்ந்த சிலரில் மூன்று பேர் என்னை தங்களின் சொந்த மகனாகவே நேசித்து வருகிறார்கள். அன்பு உள்ளம் கொண்ட அந்த...
மேலும் வாசிக்க...

Sunday, August 17, 2008

வணக்கம்

அன்பர்களுக்கு வணக்கம்,தாய் அன்போடு என்னை நேசிக்கும் சீனா ஐயாவின் வரவேற்பிற்கு மிக்க நன்றி. வலைச்சரத்தில் ஒருவார காலம் எனக்கு ஆசிரியர் பொறுப்பை தந்துள்ளதால் மிக்க மகிழ்ச்சி!!பாசமுடன்என் சுர...
மேலும் வாசிக்க...

ஏன் ??

இன்றைய இளைஞர்கள் அதிகமும் ஆன்மிகததில் அதிக ஈடுபாடு காட்டுகிறார்கள். ஒரு கோவில் திருவிழா என்றால் அகமகிழ்ச்சியுடன் தங்களுடைய பணத்தை கொடுக்கிறார்கள். இருபது வருடங்களுக்கு முன்னர் என் தந்தை அவர்கள் ஒரு கருமாரி அம்மன் கோவிலில் கொடுத்து வந்த சிறியத் தொகைக்கு அப்படி ஒரு நன்றியினனத் தெரிவிப்பார்கள். சின்ன ஒரு விஷயத்திற்கு அவர்கள் அப்படி நன்றி சொல்வதைக் கண்டு நான் வியந்து போயிருக்கிறேன். இப்போது பெரியவர்களை விட இளைஞர்கள் ஆன்மிகத்தில்...
மேலும் வாசிக்க...

திரு சிவசுப்ரமணியன்

அன்பினியே தோழர்களே,வணக்கம்.. சிவா,உங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் என்றேன்... அவர் சொல்வதைக் வாசித்துக் கேளுங்கள். உங்களுடைய இனிய வாழ்த்துக்களால் அன்புடன் இந்த இளம் எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள்!!!அன்புடன் என் சுரேஷ்பெயர் சிவசுப்பிரமணியன். வயது: 25. எனது சொந்த ஊர்: மாட்டுச்சந்தைக்கும், முறுக்கிற்கும் புகழ் பெற்ற மணப்பாறை சிறிய வயதிலிருந்தே...
மேலும் வாசிக்க...

கவிஞர் மதுமிதா

என்னுயிர் தோழர்களே, கவிஞர் மதுமிதா அவர்கள், தென்காசியில் பிறந்து, இராஜபாளையத்தில் வாழ்ந்து, சென்னையில் வசிக்கிறார். சுதந்திரப் போராட்ட தியாகி காந்திஅரங்கசாமி ராஜாவின் பெயர்த்தியாவார். தந்தை ரகுபதி ராஜா; தாயார் பாக்கியலட்சுமி. கணவர் ரெங்கனாதராஜா.எம்.ஏ ஆங்கில இலக்கியம், டிப்ளமோ இன் போர்ட் போலியோ மேனேஜ்மெண்ட் ஆகியவை கற்றவர். ஹிந்தி பிரவீன்...
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது