07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, August 10, 2009

அறிமுகம்

வலைச்சரம் வாசகர்களுக்கும் ,இந்த வாய்ப்பை எனக்குத்தந்த திரு .சீனா அய்யா அவர்களுக்கும் என் நன்றிகள் முதலில்.சென்ற வாரம் இந்த வலைப்பக்கத்தை அழகாக நடத்திச் சென்ற திரு.பழமைபேசி அவர்களுக்கும் என் வாழ்த்துகள்.

நான் - ஸ்ரீதர் என்கிற ஸ்ரீ ,மதுரைவாசி,தொழில் இரும்பு விற்பதும்,இறக்குமதி செய்வதும், பகுதி நேர கல்லூரி விரிவுரையாளரும் கூட.திருமணம் ஆகவில்லை,மதுரையிலேயே வசிக்கிறேன் என் தாயோடும்,பாட்டியோடும். 15 வயதுக்கு மேல் புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்தேன்.வார இதழ்களில் தொடங்கி நாவல்கள் படிக்க ஆரம்பித்த போதெல்லாம்,எனக்கு எழுத வேண்டும் என்கிற எண்ணம் இருந்ததில்லை.கவிதைகள் என்கிற பெயரில் அவ்வப்போது கிறுக்கியதோடு சரி,அதையெல்லாம் இப்போது வெளியிட்டால் அடிக்க வருவீர்கள்.சென்ற வருடத்தில் ஒரு நாள் (சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அந்த நாளை எப்படியோ மறந்துவிட்டேன்) வலையில் அலைந்து கொண்டிருந்தபோது வலைப் பக்கங்களை படிக்க நேர்ந்தது.சரி இருக்கட்டும் என்று ஒரு வலைப்பக்கத்தை தொடங்கினேன்.கொஞ்ச நாளைக்கு இதை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம் என்று விழித்துக் கொண்டிருந்தேன், நான் பதிவெழுதத் துவங்கியது சென்ற வருடக் கடைசியில்தான், எடுத்த எடுப்பில், பெரிய அளவுக்கு பதிவுகள் ஏதும் இடாமல் கொஞ்ச காலத்துக்கு நகைச்சுவை,குட்டிக் கதைகள் என்று ஜல்லியடித்துக் கொண்டிருந்தேன். முதன் முதலில் சொல்லிக் கொள்ளும்படியாக ஒரு இடுகை எழுதினேன் என்றால் ஜோதிடம் பற்றிய இந்த இடுகையைச் சொல்லலாம்.நண்பர் வால்பையன் எழுதிய ஒரு இடுகைக்கு பதிலளிக்கும் விதமாக அந்த இடுகை. மற்றவர்களிடம் இருந்து பாராட்டுப் பெரும் விதத்தில் இடுகைகள் எழுதுவது என்பதல்ல என் நோக்கம் என்பதாலும் ,காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு என்கிற மனோபாவத்தாலும் நான் எழுதியவை எல்லாமும் எனக்குப் பிடித்த இடுகைகளே.நீங்கள் படித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

அடுத்து வரும் பதிவுகளில் எனக்குப் பிடித்த வலைப் பக்கங்களை அறிமுகப்படுத்துவேன் ,அவை கண்டிப்பாக உங்களுக்கும் பிடித்திருக்கும். நன்றி.

23 comments:

 1. முதல் நாள் வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் ஸ்ரீ.

  ஈரோட்டில் உங்களோடு கழிந்த சில மணி நேரம் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் ஸ்ரீ!!

  ReplyDelete
 4. நன்றி ஜமால்,நன்றி கதிர்-எனக்கும் உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.
  நன்றி திகழ்மிளிர்.

  ReplyDelete
 5. நன்றி சென்ஷி

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் நண்பா....

  ReplyDelete
 7. முதல் நாள் அறிமுகம்.. ரைட்டு.. வாழ்த்துகள் நண்பா

  ReplyDelete
 8. வாழ்த்துகள் நண்பா!

  ReplyDelete
 9. முதல் நாள் இடுகைக்கு வாழ்த்துகள் நண்பர் ஸ்ரீ..

  தங்களை மதுரையில் சந்தித்த நினைவுகள் மறக்க இயலாதவை.

  ReplyDelete
 10. வலைச்சரத்திலும் ‘பகுதி நேர ஆசிரியர்' :) ஆனதற்கு வாழ்த்துக்கள் ஸ்ரீ!!!!

  ReplyDelete
 11. முதல் நாள் வாழ்த்துகள்.

  ReplyDelete
 12. முதல் நாள் வாழ்த்துகள்.

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள் ஸ்ரீ

  ReplyDelete
 14. முதல் நாள் வாழ்த்துக்கள் ஸ்ரீ.

  ReplyDelete
 15. ஸ்ரீ !! புகுந்து விளையாடுக!!!

  ReplyDelete
 16. பதிவுலக மன்மதன் ஸ்ரீக்கு வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
 17. ஈரோடு பயணம் நல்ல முறையில் அமைந்ததா!!

  ReplyDelete
 18. வாழ்த்துகள் நண்பரே

  ReplyDelete
 19. வாழ்த்துகள்

  ReplyDelete
 20. அத்தோட விடலையே!
  இன்னும் நான் சண்டை போட்டுகிட்டு தானே இருக்குறேன்!

  ReplyDelete
 21. நன்றி மணிஜி,
  நன்றி கார்த்தி,
  நன்றி பழமை,
  நன்றி ராகவன் சார்,எனக்கும் அப்படியே.
  நன்றி வெயிலான்,
  நன்றி அன்புமணி,
  நன்றி ஜீவராஜ்,
  நன்றி அத்திரி,
  நன்றி டாக்டர்,பயணம் நன்றாக இருந்தது.
  நன்றி ஞானசேகரன்,
  நன்றி அமுதா,
  நன்றி வால்.

  ReplyDelete
 22. நல்ல் அறிமுகம் - நல்வாழ்த்துகள்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது