07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, August 7, 2009

சாமான்யனின் பாவனாதீதம் - 5

ஒரு நாள், பெண்ணைப் பெத்த அந்தம்மா அழுது புலம்பிட்டு இருந்தாங்க. உடனே அந்தப் பெரியவர்,

”இதுக்கு ஏன் இப்ப அழுதுட்டு இருக்கே நீ? சேய் அப்படீன்னா, ஒரு நாள் இல்லாவிட்டாலும் ஒரு நாள் பிரிஞ்சி எட்டத்தான போகும்? அதனாலத்தான அவுகளை சேய்ன்னு சொல்றது?”

பக்கத்துல இருந்த நாம உடனே அந்த பெருசுகிட்ட, ”அய்யா, என்ன சொல்றீங்க நீங்க?”

“ஆமா சேய்ன்னா தூரம், அண்மைன்னா கிட்டக்கங்றதுதான் தமிழ்?”

“அய்யா, சித்த வெவரமாச் சொல்லுங்க! நீங்க எடக்குமொடக்கா சொல்றீங்க போலிருக்கு?”

“டேய், டேய்... அது எடக்குமொடக்கு அல்லடா! இடக்குமுடக்குன்னு சொல்லணும்!!”

“செரி வுடுங்க. இடக்குன்னா என்ன? முடக்குன்னா என்ன??”

“இடக்குன்னா குதர்க்கம். முடக்குன்னா ஒழுங்கில்லாதது. குதர்க்கமாப் பேசி ஒழுங்கில்லாமச் செய்யுறதுதான் இடக்குமுடக்கு”

“ஓ அப்படியா? அப்ப ஏடாகூடான்னா என்னங்க பெரியவரே?”

”டேய், நீயென்னடா வெவகாரமாவே கேள்வி கேக்குற? இருந்தாலும் வயசுல சின்னவங் கேக்குறதால சொல்றேன், கேட்டுக்க; ஏடன், ஏடான் அப்படின்னா, தோழன் அல்லது நட்பானவன்னு அர்த்தம். கூடான் அப்படின்னா, சேரக் கூடாதவன். ஆக, எதிர்ப்பதமா இருக்குறதைச் சொல்லுறது ஏடாகூடான்னு!”

”பெருசூ.... அப்ப எதிரும் புதிருமாப் பேசுறான்னு சொல்றாங்களே? அது?? இஃகிஃகி!”

“டேய், கேனக்காத்தானாட்டம் இளிக்காத! ஒன்னுக்கொன்னு எதிர்ப்பதமா இருக்குற அர்த்தத்துல பாவிக்கிறது அல்லடா அது! ஆனாக் காலவட்டத்துல நீங்கெல்லாம் இப்படி மாத்திபுட்டீகடா... எதிர் அப்படீன்னா முன்னாடி நிக்கிறது. புதிர் அப்படீன்னா, சுலுவுல புரிஞ்சிக்கும் படியா இல்லாம இருக்கிறது. ஆக யாராவது முன்னாடி வந்து, சொல்லவந்ததை நேரிடையாச் சொல்லாமச் சொல்லுற பழமதாண்டா அந்த எதிரும்புதிருமாங்றது!”

”ஓ இதுல இத்தனை கதை இருக்கா? அப்ப எதிர்ப்பதம்னா என்ன பெருசு?”

“எதிர்ப்பதம்னா, முரணான பதம்ங்றதுதான். இப்ப கொஞ்சம் எதிர்ப்பதங்களை சொல்லுறேன் கேட்டுக்க,

சிறுமை X பெருமை
சேய்மை X அண்மை
தீமை X நன்மை
வெம்மை X தண்மை
புதுமை X பழமை
மென்மை X வன்மை
மேன்மை X கீழ்மை
திண்மை X நொய்மை
உண்மை X இன்மை
நுண்மை X பருமை"

"நல்லா இருங்க பெரியவரே, நான் கழண்டுக்குறேன் இப்போதைக்கு! இஃகி!!”

வாங்க மக்கா, நாம நம்ம சக பதிவர்களைச் சித்த பாக்கலாம். விட்டாப் பெருசு விடிய விடியத் தமிழ்ப் பாடம் எடுக்கும் போல இருக்கு?

பயணங்களின் காதலன், பகற்கனவுகளுடன் சாணி அள்ளுபவன்னு சொல்லிட்டு பதிவுலகத்துல காலடி எடுத்து வெச்சிருக்காரு, எலையமுத்தூர்த் தம்பி நாகா. துபாய்ல பொழப்பு நடத்திட்டு இருக்குற தம்பி இன்னும் நல்லபடியா நிறைய எழுத வாழ்த்துகள்.

இலண்டன் மாநகர்ல இருந்துட்டு, முதலீட்டு வங்கிகளுக்கு வழி சொல்லிப் பொழப்பு நடத்திட்டு இருக்காரு நம்ம முரண்தொடை அண்ணன் அது சரி அண்ணாச்சி. ஆகா, ஆகா, அவரோட நையாண்டி இருக்கே, அதுக்கு ஈடு இணை எதுவும் இல்ல போங்க!

சிங்கப்பூர்ல இருக்குற மேலாண்மைத் திலகம், உடுமலை முதங்கம் அண்ணன் துக்ளக் மகேசு, எதையும் எளிமையா எழுதிப் புரிய வைக்குறதுல பெரிய ஆள். அடிக்கொருக்கா மேல்நாட்டுப் புத்தகங்களைப் பத்தி எழுதுவார். ரொம்ப நல்லா இருக்கும்.

சரிங்க, நாளைக்கு அப்ப இன்னங் கொஞ்ச பேரோட பாக்கலாஞ் சரியா? இஃகிஃகி!!
பணிவுடன்,
பழமைபேசி.

கறக்குற பசுவையும், கைக்குழந்தையையும் கண்ணுல வெக்கணும்ன்னா,
தமிழை இரசிச்சு அனுபவிக்குறதுல வெக்கணும்யா!!

14 comments:

 1. இணைமொழியில் இதுவும்
  ஒரு வகை

  தங்களின் விளக்கம் அருமை

  ReplyDelete
 2. உங்களுக்கு எத்தனை பிள்ளை குட்டி என்றால்
  ( பிள்ளை -‍ ஆண் குழந்தை, குட்டி -பெண் குழந்தை )

  என்பது மாதிரி தான்
  இந்த ஏடாகூடாவும் ம‌ற்ற‌வையும்

  ReplyDelete
 3. பெருசு விடிய விடியத் தமிழ்ப் பாடம் எடுக்கும் போல இருக்கு?

  ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

  ReplyDelete
 4. //திகழ்மிளிர் said...
  பெருசு விடிய விடியத் தமிழ்ப் பாடம் எடுக்கும் போல இருக்கு?

  ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
  //

  ச்சும்மா ஒரு பகிடிக்குத்தானுங்க... நன்றிங்க!

  ReplyDelete
 5. பாவனா பாட்டு நல்லா பாடுமாண்ணே

  ReplyDelete
 6. // குடுகுடுப்பை said...
  பாவனா பாட்டு நல்லா பாடுமாண்ணே
  //

  ஆகா, வாங்க அண்ணே.... ஜெயஸ்ரீய விட்டுப்புட்டு இப்ப பாவனாவா? நடத்துங்க நடத்துங்க...

  ReplyDelete
 7. பழமைபேசும் இளைய தாத்தாக்கு
  பாராட்டுக‌ளும் வாழ்த்துக‌ளும்

  ReplyDelete
 8. என்ன வலைச்சரத்துல உங்க கட் அவுட் வெக்கிலியா?

  உங்க பதிவுல வெச்சிருக்கிற மாதிரி வெச்சிட வேண்டியது தானே...

  என் பதிவெல்லாம் அறிமுகம் செய்ய மாட்டீங்களா? இதெல்லாம் இப்படி வெளிப்படையா கேக்கற மாதிரியா வெச்சிக்கிறது?

  நம்ம பிரிய நடிகை சினேகா படமாவது போடக்கூடாதா? வலைச்சரம்னா படம் போடக்கூடாதுன்னு மரபு இருக்கா என்ன?

  ”பாவனா”தீதம் ந்னு என்ன பேரு வெக்கிறது? “சினேகா”தீதம், நமீதாதீதம் ந்னு வெச்சா குறஞ்சாப் போயிடும்

  ReplyDelete
 9. வலைச்சரத்தில் வலையுலகைத்தான் அறிமுகப்படுத்தனுமா என்ன?

  நல்ல தமிழ்ச் சொற்களையும் அதற்கான விளக்கங்ககளையும் அறிமுகப்படுத்தும் தங்களுக்கு மிக்க நன்றி. (இடம் மாறினாலும் தல மாறாது.)

  வாழ்த்துகள் தல...

  ReplyDelete
 10. //திகழ்மிளிர் said...
  பழமைபேசும் இளைய தாத்தாக்கு
  பாராட்டுக‌ளும் வாழ்த்துக‌ளும்
  //

  நன்றிங்க திகழ்மிளிர்!

  @@Seemachu

  வாங்க வாங்க! வணக்கம்!! கதிரவனுக்கும் முழுமதிக்கும் அறிமுகம் வேணுமா என்ன? நீங்க இங்க வந்து இப்படிக் கலாய்க்கறதுதான எங்களுக்குப் பெருமை?! நன்றிங்க ஐயா!

  ReplyDelete
 11. @@குடந்தை அன்புமணி

  நன்றிங்க குடந்தையார்!

  ReplyDelete
 12. @@Seemachu
  ஐயா கலக்கரிங்க

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது