07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, August 10, 2009

கவிதையும் கவிதை சார்ந்த இடங்களும்.

லைலாவிடம் கேட்டார்கள்:
மஜ்னூன் பைத்தியமாகி
பரிதாபமாக அலைந்து திரிந்து
கொண்டிருக்கிறானே,அதற்குக்
காரணம் நீ தானா?

அப்படியொன்றும் நீ
அழகி இல்லையே!
லைலா கூறினாள்:
என் அழகை
நீ அறிய மாட்டாய்
ஏனென்றால் நீ என்
மஜ்னூன் இல்லையே.

உன்னிடம் மஜ்னூனின்
கண்களிருந்தால் என்னைத் தவிர
உனக்கு ஈருலகும் ஒரு
பொருட்டாகத் தோன்றாது.
நீ விழிப்பில் இருக்கிறாய்
மஜ்னூன் என் மயக்கத்தில்!
காதலெனும் பாதையில்
விழிப்பென்பது தவறு.


- மௌலானா ஜலாலுதீன் ரூமி.


ஆமாம்! அப்படித்தான் இருக்கிறது ,லைலாவின் அழகு மஜ்னுவுக்கு மட்டுமே தெரிந்த விஷயம், தனித்த ரசனை என்று கூட சொல்லிக் கொள்ளுங்கள்.காதலிகள் மட்டுமல்ல, கவிதைகளும் ரசனையின் பாற்பட்டதே.கவிதைகளை ரசிக்கவென்று ஒரு தனித்த மனோபாவம் தேவைப் படுகிறது.அழகை ரசிக்கும் கண்கள் கொண்டவர்களுக்கு மட்டுமே கவிதைகள் தென்படும்,மற்றவர்க்கு அவை வெறும் அபத்தங்கள்.


சுருங்கச் சொன்னால் கவிதைகள் என்பது குழந்தைகளின் விளையாட்டைப் போல அழகும் அபத்தமும் ஒருங்கிணைந்தது.நேசத்தின் பார்வையில் மட்டுமே அதன் அழகு தெரியும்.தர்க்கமாகப் பார்த்தால் அதன் அபத்தம்தான் தெரியும்.குழந்தைகள் சமைத்ததாகச் சொல்லி நீட்டும் வெற்றுப் பாத்திரத்தை வாங்கி உண்பதாக பாவனை செய்து விட்டு "நன்றாயிருக்கிறதே ,இன்னும் கொஞ்சம் கொடு" என்று உங்களால் சொல்ல முடியுமானால் உங்களால் கவிதையை ரசிக்க முடியும் என்று பொருள்.


காதலும், கவிதையும் போர்முனையைக் கூட விட்டு வைப்பதில்லை.வலையுலகம் மட்டும் விதிவிலக்கா என்ன?வலையுலகத்தில் கவிதைகளுக்குப் பஞ்சமே இல்லை.அநேகமாக எல்லோருமே கவிதை எழுதுபவர்கள்தான்.ஆரம்பத்தில் கொஞ்சம் வசன நடையில் மடித்துப் மடித்துப் போட்டு எழுத ஆரம்பித்தாலும் பிறகு தேறி விடுகிறார்கள் .எல்லோரையும் படிப்பது சாத்தியமில்லை ,என்னைக் கவர்ந்தவர்களில் சிலரை முதலில் குறிப்பிடுகிறேன்.

  1. நரன்
  2. யாத்ரா
  3. ஆதவா
  4. இசை
  5. நேசமித்ரன்
  6. ரவி ஆதித்யா
  7. அகநாழிகை
  8. ஷீ-நிசி
  9. முத்து வேல்
  10. பென்சில் (எ ) ஆ.முத்துராமலிங்கம்
இந்த வரிசையில் சிலரை உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கலாம்,இருப்பினும் நான் ரசிக்கும் எழுத்து இவர்களுடையது.இவர்களைத் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளட்டும் என்பதற்காகவே இந்த இடுகை.இவர்களின் எழுத்துக்களைப் பற்றி நான் ஏதும் சொல்லப் போவதில்லை. நான் விமர்சகன் அல்ல வாசகன் , அவ்வளவே, இவர்களை நீங்கள் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.நன்றி.





20 comments:

  1. கவிதை என்றால் காததூரம் ஓடுவேன். எப்பொழுதாவது ஆதவா, அகநாழிகை, சேரல், அமித்துவின் அம்மா, பாதசாரி போன்றவர்களுடைய எளிமையான கவிதைகளை வாசிப்பேன். நீங்கள் சுட்டியுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. படிச்சுருவோம்.
    அட்லீஸ்ட், எதிர் கவிதை எழுதவாச்சும் ஒதவும்ல.
    :)

    ReplyDelete
  3. அருமை நண்பா அருமை...

    ReplyDelete
  4. //குழந்தைகள் சமைத்ததாகச் சொல்லி நீட்டும் வெற்றுப் பாத்திரத்தை வாங்கி உண்பதாக பாவனை செய்து விட்டு "நன்றாயிருக்கிறதே ,இன்னும் கொஞ்சம் கொடு" என்று உங்களால் சொல்ல முடியுமானால் உங்களால் கவிதையை ரசிக்க முடியும் என்று பொருள்.//

    ஆகா.. அருமையான கற்பனையான பொருள்நிறைந்த வரிகள்.

    தொடருங்கள், வாழ்த்துக்கள் அன்பரே.

    ReplyDelete
  5. //குழந்தைகள் சமைத்ததாகச் சொல்லி நீட்டும் வெற்றுப் பாத்திரத்தை வாங்கி உண்பதாக பாவனை செய்து விட்டு "நன்றாயிருக்கிறதே ,இன்னும் கொஞ்சம் கொடு" என்று உங்களால் சொல்ல முடியுமானால் உங்களால் கவிதையை ரசிக்க முடியும் என்று பொருள்.//

    ரசித்தேன்... உங்கள் விளக்கத்தை. வாழ்த்துகள். எனது கவிதைக்குரல் பகுதிக்கும் வாய்ப்பிருந்தால் வருக...

    //இவர்களின் எழுத்துக்களைப் பற்றி நான் ஏதும் சொல்லப் போவதில்லை. நான் விமர்சகன் அல்ல வாசகன் , அவ்வளவே, இவர்களை நீங்கள் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.//

    உண்மையான வார்த்தை.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. கவிஞர்களுக்கு வாழ்த்துகள்

    ஸ்ரீ உங்கள் எழுத்து நடை நீங்கள் பேசுவது போலவே இயல்பாக உள்ளது...
    இதை படிக்கும் போது மனதிற்குள் உங்கள் குரல் கேட்கிறது

    ReplyDelete
  8. உனக்கும் அந்த வியாதி இருக்குதாய்யா!

    நாலு எடுத்துவிடேன்!

    ReplyDelete
  9. நீ எந்த அளவுக்கு என்னை காதலிக்கிறாய்?
    ஷாஜஹான் அளவுக்கு...
    எனக்காக தாஜ்மகால் கட்டுவாயா?
    நிச்சயமாக..இடம் கூட வாங்கிட்டேன்
    உன் சாவுக்காக காத்திருக்கிறேன்

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் ! கலக்குங்க ,படிக்குறோம் , எனக்கு தெரியாத கவிஞர்களை அறிமுகப்படுதியதற்கு நன்றி!

    ReplyDelete
  11. நன்றி கிருஷ்ணப்ரபு ,
    நன்றி பழமை,
    நன்றி டக்லஸ் ,
    நன்றி நைனா,
    நன்றி க.பாலாஜி,
    நன்றி அன்புமணி,கண்டிப்பாக படித்து விடுகிறேன்.
    நன்றி கதிர்,
    நன்றி வால், ப்ளாக்ல அடுத்த பதிவு அதுதான்.
    நன்றி மணிஜி,
    நன்றி சுந்தர்.

    ReplyDelete
  12. அறிமுகத்திற்கு மிக்க நன்றி ஸ்ரீ.

    ReplyDelete
  13. ஸ்ரீ

    மிக்க நன்றி உங்களின் வாசிப்பு பட்டியலின் மூலம் என்னைப் பரிந்துரைத்த்
    அன்பிற்கு

    ReplyDelete
  14. ஆகா - அன்பின் ஸ்ரீ

    கவிஞர்களை அறிமுகப்படுத்தியது சரி - அவர்களின் சிறந்த கவிதைகளையும் அறிமுகப்படுத்தலாமே

    நல்வாழ்த்துகள் ஸ்ரீ

    ReplyDelete
  15. ஸ்ரீ !!
    வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  16. நன்றி யாத்ரா
    நன்றி நேசமித்ரன்
    நன்றி தேவன் மாயம்

    ReplyDelete
  17. //கவிஞர்களை அறிமுகப்படுத்தியது சரி - அவர்களின் சிறந்த கவிதைகளையும் அறிமுகப்படுத்தலாமே//

    repeettu..:-))))

    ReplyDelete
  18. //
    "நன்றாயிருக்கிறதே ,இன்னும் கொஞ்சம் கொடு" என்று உங்களால் சொல்ல முடியுமானால் உங்களால் கவிதையை ரசிக்க முடியும் என்று பொருள்.
    //

    இனிமையாக.. நன்றாக இருக்கிறதே!

    ஆனால் இன்னும் கொஞ்சம் கொடுத்தால் திகட்டிவிடக் கூடும்!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது